October 19, 2010

ஜெயலலிதா மதுரை கூட்டம் – நேரடி கவரேஜ்

காலை ஐந்து ஆறு மணி அளவில் இருந்தே திருமங்கலம் ஏரியா டீக்கடைகளில் திருவிழா கூட்டம். டீயும் சிகரெட் விற்பனையும் கொடிகட்டிப் பறந்தது. கன்னியாகுமரி,திருநெல்வேலி உட்பட பல ஊர்களில் இருந்தும் கட்சியினர் வேன்களில் வந்திருந்தனர்.

மகிந்திரா போன்ற வேன்களே அதிகம் இருந்தன. சொகுசு வாகனங்கள் குறைவு. ஸ்கார்பியோக்களும் அதிகம்.

நான் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்றது கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பாக வந்த வேனில்( லிஃப்ட் கேட்டு). அந்த வேன் பொறுப்பாளரிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள்.

முதல் நாள் இரவு புரோட்டா ஆம்லேட், காலை டீ, சிகரெட் பின்னர் டிபன், மதியம் மற்றும் இரவு சாப்பாடு வரை அவர் பொறுப்பு. ஆனால் ஒரு ஆளுக்கு என்று தனியாக பணமோ, மதுபானமோ தர தேவையில்லை.

மாவட்டத்துக்கு இத்தனை வேன்கள் என்று டார்கெட். அதை ஒன்றியம் வாரியாக பிரித்து, பின் கிளைகழகம் வரை பிரித்து டார்கெட் அச்சீவ் பண்ணியுள்ளார்கள்.

வந்தவர்கள் அனைவருமே கட்சிக்காரர்கள் தான்.

தற்போது மாணவரணி செயலாளராக இருக்கும் ஆர் பி உதயகுமாருக்கு நல்ல மவுசு என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் எததனை நாளைக்கு அது இருக்கும் என்ற கேள்வியும் அவர்களிடம் இருந்தது.

கூட்டம் நடந்த இடத்துக்குச் சென்ற போது பெண்களையே காண முடியவில்லை. தீப்பொறி ஆறுமுகம் மீட்டிங்கிலும், சபரி மலையிலும் தான் திரும்பிய பக்கமெல்லாம் ஆண்கள் இருப்பார்கள். நேற்றும் அதுபோலத்தான் கூட்டம் இருந்தது.
83,84 ஆம் ஆண்டு வாக்கில் ஜெயலலிதா எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் சரி பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். இப்போது அது மிஸ்ஸிங். ஒருவேளை கூட்டம் நடைபெற்ற நேரம், இடம் ஆகியவை காரணியா இல்லை டிவியில் மூழ்கி விட்டார்களா இல்லை போயி என்ன ஆகப் போகுது என்ற மனநிலையா இல்லை அரசியல் ஆர்வம் குறைந்து விட்டதா என பல கேள்விகள்.

மேலும் பொது மக்கள் என்ற ஜாதியினரையும் அங்கே நான் பார்க்கவில்லை. பார்த்த எல்லோருமே கட்சியினர் தான். இதில் பெண்களை எதிர்பார்ப்பது என்பது ப்ளெக்ஸ் இல்லாத மதுரை வீதிகளை எதிர்பார்ப்பதற்குச் சமம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தற்போது பிளக்ஸ் வைத்துத் தானே தமிழை வளர்க்கிறது. இந்தக் கூட்டத்திலும் பல அட்டகாச பிளக்ஸ் வசனங்கள். அன்னை மீனாட்சியே தொடங்கி அம்மா வந்தாச்சு பூமி குளிர்ந்தாச்சு வரை வித வித வசனங்கள். ஆனால் மேன் ஆப் தி மேட்ச் கிரம்மர் சுரேஷ் என்பவர்தான். (முன்னர் பி டி ஆர் பழனிவேல்ராஜனின் தொண்டராக இருந்து அழகிரியால் அதிமுகவிற்க்கு வந்தவர்). இவர் வைத்த உலக செயலாளர்களுக்கெல்லாம் செயலாளரே மிகப்பெரிய ஹிட்.

கூட்டத்தில் பெரும்பாலோனோர்கள் ஜெயலலிதா பேசியதை கவனித்ததாகவே தெரியவில்லை. காலையில் இருந்தே வெயிலிலும், புழுக்கத்திலும் இருந்ததால் உண்டான களைப்பு மற்றும் பேசுபொருள் தெரிந்திருந்ததால் ஏற்பட்ட அசுவராசியம் போன்ற காரணங்கள் என்று நினைக்கிறேன். கேமரா திரும்பும்போது மட்டும் உற்சாகமாக கையாட்டினார்கள்.

பெரும்பாலும் குழு குழுவாகவே அமர்ந்திருந்தார்கள் அல்லது நின்றிருந்தார்கள். உட்கட்சிப் பேச்சுக்கள் அவர்களிடையே பிரதானப் பங்கு வகித்தன. இளைஞர் பாசறை செயலாளர், தொகுதி செயலாளார் ஆகியோர் உற்சாகமாக இருப்பதாக அவர்கள் பேச்சில் இருந்து தெரியவந்தது.

கூட்டம் முடிந்து வீட்டிற்க்கு கோவை மாவட்டம் வேலுமணி எம் எல் ஏ அவர்கள் ஏற்பாட்டில் வந்திருந்த வேனில் லிஃப்ட் கேட்டு திரும்பினேன். அந்த வேனின் பொறுப்பாளர் வட மாவட்டங்களில் இருந்து குறைவான வாகனங்களே வந்திருந்ததாகவும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்துதான் அதிக வாகனங்கள் வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

ரிங் ரோடில் இருந்த பல கல்லூரிகளில் விடுமுறை அறிவித்திருந்தார்கள். பல பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வகுப்புகளை முடித்து விட்டிருந்தார்கள். சில தனியார் அலுவலகங்களும் வேலை நேரத்தை மாற்றி அமைத்திருந்தன. பொதுமக்களும் தங்கள் நடமாட்டத்தை குறைத்திருந்தனர்/மாற்றியமைத்திருந்தனர்.

பாபர் மசூதி/ராம ஜென்ம பூமி தீர்ப்பின் போதும் மக்களிடம் இதே அணுகுமுறை இருந்தது. மக்கள் புரோ ஆக்டிவ்வாக மாறத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது. மேலும் பல கல்வி/வியாபார நிறுவனங்கள் அரசியல்வாதிகளுடையதாக இருப்பதும் இதற்கு காரணாமாய் இருக்கலாம்.

இதனால் கூட்டம் நடைபெறும்போது அந்தப் பகுதி தவிர மதுரை மிக இயல்பாகவே இருந்தது. கூட்டம் முடிந்த பின்னர் எல்லா வாகனங்களும் ஒரு சேர கிளம்பியதால் மட்டுமே டிராஃபிக் ஜாம் ஆனது.

நான் கவனித்த வரையில் கூடிய கூட்டத்தை பார்த்தால் இது ஒரு கட்சி மாநாடு போலவே நடந்தது. வந்த கூட்டததை ஆட்சிக்கு எதிரான மக்களின் எழுச்சி என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

ஆனால் அதிமுக விற்கு இவ்வளவு நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பது திமுகவிற்கு கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். ஒவ்வொருவரும் ஐம்பது ஓட்டைக் கொண்டு வந்தாலே அதிமுகவிற்கு பெரிய பலமாகிவிடும். மேலும் இவர்களுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுகவிற்கு தலைவலிதான்.

25 comments:

காவேரி கணேஷ் said...

அருமை முரளி.

மாணவரணி செயலாளர் உதயகுமார் மிகவும் சிரத்தையாக கடமையாற்றக்கூடியவர்.

அவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு பலமே..

கவரேஜ்க்கு வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி காவேரி கணேஷ்

D.R.Ashok said...

சுவாரஸியாமா பகிர்ந்துயிருக்கீங்க முரளி :)

தராசு said...

அருமையான ரிப்போர்ட். ஆனால் அம்மாவின் பேச்சையும் கொஞ்சம் கவர் செய்திருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்

முரளிகண்ணன் said...

நன்றி அசோக்.

\\சுவாரஸியாமா \\

இன்னும் மறக்கலியா அஷோக்.

அடுத்து ரெண்டு பங்ஷன் வந்துடுச்சு.

நன்றி தராசு. நான் அங்கே ஜெயலலிதாவின் பேச்சை கவனிக்கவேயில்லை. காலை பேப்பரில்தான் படித்துத் தெரிந்து கொண்டேன். மக்களை கவனிப்பதில்தான் என் கவனமெல்லாம் இருந்தது.

வி.பாலகுமார் said...

உங்கள் அணுகுமுறை வித்தியாசமாய் இருக்கிறது.

உங்களைப் பிடிக்கிறது, முரளி.

முரளிகண்ணன் said...

நன்றி பாலகுமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான ரிப்போர்ட்

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல கவனிப்பு ... இனி வரும் நாட்களில் , சில நிஜமான நல்ல நடவடிக்கைகள், கூட்டணியை பல படுத்துதல் , நிறைய மக்கள் கூட கலந்து அடிக்கடி தொலை காட்சியிலும் , பத்திரிக்கையிலும் இடம் பிடிக்குதல், கட்சி காரர்க்களுக்கு நிறைய ஊக்கம் கொடுத்தல்... இதெல்லாம் நடந்தால் நிச்சயம் அ.தி.மு கா ஆட்சி தான்

நிலாந்தன் said...

மிகவும் சரியான் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை.காலையில் டெக்கான் கிரானிகல் ௩ லட்சம் பேர் திரனதாக் எழுதி இருந்தது.தினமணிலட்சம் என்றது.உங்கள் கருத்தே சரியாகஇருக்கும்.

நிலாந்தன் said...

தினமணி ஐந்து லட்சம் என்றும் கிரானிக்கல் மூன்று என்றும் எழுதியிருந்தன.

முரளிகண்ணன் said...

நன்றி டிவிஆர் சார்

நன்றி சுந்தர ராமன் சார்

நன்றி நிலாந்தன்

ராஜ நடராஜன் said...

//ஜெயலலிதா எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் சரி பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். இப்போது அது மிஸ்ஸிங். ஒருவேளை கூட்டம் நடைபெற்ற நேரம், இடம் ஆகியவை காரணியா இல்லை டிவியில் மூழ்கி விட்டார்களா இல்லை போயி என்ன ஆகப் போகுது என்ற மனநிலையா இல்லை அரசியல் ஆர்வம் குறைந்து விட்டதா என பல கேள்விகள்.//

இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு!

முரளிகண்ணன் said...

நன்றி ராஜநடராஜன்

நர்சிம் said...

தலைவா-வா..

முரளிகண்ணன் said...

வணக்கம் தலைவரே.

இனியா said...

"வந்த கூட்டததை ஆட்சிக்கு எதிரான மக்களின் எழுச்சி என்று சொல்ல வாய்ப்பே இல்லை"


ithu oru magizhchiyaana seithi murali

புருனோ Bruno said...

வழக்கம் போல் கலக்கல்

வழிப்போக்கன் - யோகேஷ் said...

Nice Live report....

பீர் | Peer said...

கிரம்பர் சுரேஷை வாரத்திற்கொரு முறை மதுரை சுவர்களில் பார்க்க முடிகிறது. முதலீடு?

முரளிகண்ணன் said...

நன்றி இனியா

நன்றி டாக்டர்

நன்றி வழிப்போக்கன்

நன்றி பீர். முதலீடுதான். ஆனால் அதிமுக பினான்ஸ் கம்பெனி போல. சிலர் திவாலாவதும் உண்டு.

அபி அப்பா said...

மு.கவின் அதிமுக கவரேஜ் நல்லா இருந்துச்சு. நன்றி மு.க!

முரளிகண்ணன் said...

நன்றி அபிஅப்பா

மறத்தமிழன் said...

முரளி,

எப்படி இருக்கிங்க...
நீண்டஇடைவேளைக்கு பின் வந்திருக்கிங்க‌.
நல்ல கவரேஜ்.
அப்படியெ கூட்டணி கட்சிகளான ம்திமுக,மூவேந்தர் முன்னனி கழகம்,புதிய தமிழகம் மற்றும் கம்ராடுகளின் தொண்டர்கள் வந்திருந்தனரா என்பதையும் சொல்லி இருக்கலாம்..


அன்புடன்,
மறத்தமிழன்.

முரளிகண்ணன் said...

நன்றி மறத்தமிழன்.

கூட்டணி கட்சியினர் அதிக எண்ணிக்கையில் தென்படவில்லை. மதுரை சுற்றுப்புறங்களைச் சார்ந்த புதிய தமிழகம் கட்சியினர் சிறிது தென்பட்டனர்.