October 20, 2010

கமலின் அடுத்த மூவ்

கமல்ஹாசன் கலந்து கொள்ளும் விழாக்களைக் கவனித்தாலே அவரின் அடுத்த மூவ் புலப்பட்டுவிடும்.


அவர் கலந்து கொள்ளும், அவர் சம்பந்தப்படாத படங்களின் விழாக்களை இப்படி தரம் பிரிக்கலாம்.

1. கருணாநிதி/ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் போது அவர்களுக்காக அல்லது அவர்களால் நடத்தப்படும் விழாக்கள். இதில் வேறு வழியில்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.

2. நடிகர் சங்கம், பெப்ஸியின் கீழ் வரும் அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்படும் கலை/காசு தேற்றும் விழாக்கள். இதுவும் கட்டாயமே.

3. குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஏவிஎம், இளம்வயதில் தொடர் வாய்ப்புக் கொடுத்த பாலசந்தர் மற்றும் பெரிதும் மதிக்கும் சிவாஜி குடும்பம் ஆகியவை தொடர்பாக நடக்கும் விழாக்கள். இதில் கலந்து கொள்ளாவிட்டால் தர்மசங்கடம் நேரும்.

4. கமலுக்கு ஒவ்வொரு சீசனிலும் சில கொள்கை பரப்பு செயலாளார்கள் இருப்பார்கள். அவர்கள் தொடர்பான விழாக்களிலும் கமல் கலந்து கொள்வார். உதாரணத்துக்கு கரணைச் சொல்லலாம். கரணின் கொக்கி, கனகவேல் காக்க ஆகிய படங்களில் விழாக்களில் கலந்து கொண்டதைச் சொல்லலாம்.

இவை தவிர அவர் மேலும் சில விழாக்களில் கலந்து கொள்வார். அவைகளை நன்கு கவனித்தோமானால் அந்த விழாக்கள் எல்லாம் அவர் அப்போது நடிக்கும் படத்தின் அல்லது நடிக்கப்போகும் படத்தின் தயாரிப்பாளர்/இயக்குநர்/முண்ணனி தொழில்நுட்பக்கலைஞர் ஆகியோர் தொடர்புடைய விழாவாக இருக்கும்.

ஷங்கர் இயக்கி, தயாரித்த முதல்வன் படத்தின் வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அப்போது ஷங்கர், ரோபோ படத்தை கமலின் நடிப்பில் இயக்குவதாக இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது.

படையப்பா பட வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அதன் இயக்குநர் கே எஸ் ரவிகுமார் அடுத்து கமலின் தெனாலி படத்தை எடுப்பதாக இருந்தது. அதை மேடையிலும் கமல் வெளிப்படுத்தினார்.

“ரஜினிக்கு யாரை வைத்து வேலை வாங்க வேண்டும் என்ற புத்திசாலித்தனம் இருக்கிறது. எனக்கும் அந்த புத்திசாலித்தனம் இருக்கிறது. என் அடுத்த படம் இந்த இயக்குநருடன் தான்”

என்று மேடையில் பேசினார்.

பின்னர் தாணு தயாரிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தின் ஆடியோ வெளியீடு தேவி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் பட்டாடை கொடுத்திருந்தார்கள். கமல் அதில் சிறப்பு விருந்தினர். காரணம் அப்போது ஆளவந்தான் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.

தற்போது கூட மைனா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். காரணம் உதயநிதி ஸ்டாலின் அந்தப் படத்தை வெளியிடுவது. உதயநிதி, கமலின் தற்போதைய ப்ரொட்யூசர்.

இது மாதிரி கமல் கலந்து கொள்ளும் விழாக்களில் கூட ஒரு காரணம் இருக்கும். காரணம் அவர் நேர மேலாண்மையையும், ஆற்றல் மேலாண்மையையும் இரு கண்களைப் போல கருதுபவர்.

காதலா காதலா பட ஷீட்டிங் சமயத்தில் அவர் குங்குமம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்தார். அதில்

“எனக்கு கார் ஓட்டத் தெரியும். அதற்காக நானே கார் ஒட்டிக் கொண்டு போனால் என்னுடைய நேரம் எவ்வளவு வீணாகும். அந்த நேரத்தில் நான் அடுத்து செய்யப் போவதை சிந்தித்தால் எனது ப்ரொடக்டிவிட்டி கூடும். அதனால் தான் நான் ஓட்டுநர் வைத்துக் கொள்கிறேன்”

என்று சொல்லியிருந்தார். அவர் தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குவதேயில்லை. அவர் சம்பந்தமில்லாமல் ஒரு விழாவில் கலந்து கொண்டால் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கும்.

சமீபத்தில் பரபரப்பாக திரையுலக வட்டாரங்களில் அடிபடும் செய்தி
“ தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. கமல் முதல் ஆளாக சென்று வாழ்த்தியுள்ளார்” என்பது.

காரணமில்லாமல் கமல் அங்கு செல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தற்போது மன்மதன் அம்பு படம் ஷீட்டிங் முடிந்து அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த படத்துக்கு அவர் தயாராகி விட்டது போலவே தெரிகிறது.

ஆஸ்கார் ரவிசந்திரனும் தசாவதாரத்தில் ரவிவர்மனின் உழைப்பைப் பார்த்து மாஸ்கோவின் காவிரி என்னும் படத்தை இயக்கக் கொடுத்து, அவுட்புட்டை பார்த்து நொந்து போய், அந்தப் படம் தன் பேனரில் வெளியானால் ஆஸ்கார் பிலிம்ஸின் குட்வில் போய்விடும் என்று ஒரு டம்மி கம்பெனியைத் தொடங்கி, அதன் மூலம் வெளியிட்டு தோள் பட்டை வரை சுட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களுக்கு படங்களை தொடர்ந்து பீட் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எனவே ஆஸ்கார் தயாரிப்பில் கமல் படம் என்னும் அமைப்பு ஒன்று தெரிகிறது.

அது மருதநாயகமாய் இருக்குமோ என்னும் வதந்தியும் மீடியாவில் உலவுகிறது.

கமல் தேவர் மகன் படம் தொடர்பான ஒரு பத்திரிக்கைப் பேட்டியில்

“இந்தப் படத்தில் வரும் சிலம்ப சண்டைக்காட்சி (சுண்ணாம்பு மூலம் பொட்டு வைப்பது) மருதநாயகத்துக்காக நான் கன்ஸீவ் பண்ணியது”

என்று சொல்லியிருந்தார். எனவே கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக கமலுக்கு கனவாக இருப்பது மருதநாயகம்.

மதராச பட்டிணம் படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பும் ஆஸ்கார் பிலிம்ஸையும், கமலையும் மருதநாயகத்தை நோக்கி மனம் திருப்ப வைத்திருக்கலாம்.

எப்படியோ இம்முறையாவது அவர் கனவு நிறைவேறட்டும். இல்லையெனில் ஒரு நல்ல பொழுது போக்குப் படம் இவர்கள் கூட்டணியில் உருவாகட்டும்.


நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது. அதுபோலவே கமலுக்கு மருதநாயகம் நிறைவேறாத காதலாகவே இருக்கட்டும் என்பதே என் ஆசை. இவ்வளவு நாள் எதிர்பார்த்து விட்டு கடைசியில் இதைத்தானா? என்று மனம் வெதும்பும் படி ஆகிவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.

34 comments:

Sukumar Swaminathan said...

நைஸ் பாஸ்.. கலக்குங்க..

முரளிகண்ணன் said...

நன்றி சுகுமார்

வித்யா said...

ரொம்ப நாள் கழித்து கமல் பற்றி உங்கள் பதிவு.

\\கமலுக்கு மருதநாயகம் நிறைவேறாத காதலாகவே இருக்கட்டும் என்பதே என் ஆசை. இவ்வளவு நாள் எதிர்பார்த்து விட்டு கடைசியில் இதைத்தானா? என்று மனம் வெதும்பும் படி ஆகிவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.\\

அதே அதே.

முரளிகண்ணன் said...

நன்றி வித்யா.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சரியான கெஸ்தான் என்று நினைக்கிறேன்.

அப்படியே மீண்டும் எழுத வந்தமைக்கு வாழ்த்துகள் முரளி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

(இப்ப எங்க இருக்கீங்க பாஸ்? பாத்து ரொம்ப நாளாகுது)

முரளிகண்ணன் said...

நன்றி ஆதி.

இப்போது மதுரையில்.

சென்னை வரும் பொழுது அவசியம் சந்திக்கிறேன். எனக்கும் அதே.

கோபிநாத் said...

தல எல்லாமே சூப்பரு...உங்களோட கடைசி பத்தி மட்டும் டலிங்க்கு சரிவரல ;))

இப்போ இருக்கிற சூழ்நிலை முன்னேற்றம் எல்லாம் சேர்த்து பார்த்தால் கண்டிப்பாக இதுக்கு தானா என்ற வார்த்தை வராதுன்னு தோணுது எனக்கு.

கலைஞானி கூட மைனா படத்துல மீசை எல்லாம் எடுத்து அடுத்த படத்து ரெடின்னு சீக்னல் கொடுத்துட்டார் ;))

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்

thamizhan said...

enthiranin releasukku pirahu niraiya per aadippoi irukkiraarkal.athil kamal muthanmaiyaanavar.maruthanayagam ithaivida sirappaaka edukkavendiya kattaayaththil irukkiraar avar.shankarin kanavukku oru kalaanithi pola kamalin nedunaal kanavaana marutha nayagaththirkum oru nidhi varuvaar.

பரிசல்காரன் said...

அற்புதமான பாராட்டப்பட வேண்டிய அவதானிப்பு முரளி..

நர்சிம் said...

அற்புதம் முரளி. மிக ரசித்துப் படித்தேன்.

முரளிகண்ணன் said...

நன்றி தமிழன்

நன்றி பரிசல்

நன்றி தலைவரே

ஆகாயமனிதன்.. said...

முரளி - நல்ல பதிவு...
ரஜினி மகள் சௌந்தர்யா திருமண விழாவில் (திருமணமோ, வரவேற்போ தெரியவில்லை) கமல் கருப்பு சட்டையில் வந்தார் கவனித்தீர்களா ?

முரளிகண்ணன் said...

நன்றி ஆகாய மனிதன்.

கமல் அடிக்கடி கறுப்பு சட்டை அணிவார். அதனால் எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.

பிரபாகர் said...

நன்றாக அலசி எழுதியிருக்கிறீர்கள், கண்டிப்பாய் சரியாய்த்தான் இருக்கும். எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள் முரளி...

பிரபாகர்...

முரளிகண்ணன் said...

நன்றி பிரபாகர்

ஸ்ரீ.... said...

நீ.....ண்ட காலத்துக்குப் பிறகு உங்கள் இடுகை. தொடர்ந்து எழுதுவீர்களா? மாட்டீர்களா? எழுதுங்கள்! :)

ஸ்ரீ....

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்ரீ

தொடர்ந்து எழுதவே முயற்சிக்கிறேன்.

உங்களைப் போன்றோரின் ஆதரவுதான் எனக்கு ஊக்கமருந்தாய் இருக்கிறது.

Tamilselvan said...

என்ன ஒரு கணிப்பு சூப்பர்

Anonymous said...

Projects from Kamal that was either never conceived or broke at half time

1) A Movie with Amithabh Bachchan which was dropped with the Amitabh fearing Kamal was stealing the show as the villain. That ego maniacal actor played the political game there. His envy was even there during Dasavathaarams release when he openly admitted it.

2) Ponniyin Selvan, The project was estimated at 5 crore way back in 1986. An epic novel from Kalki.

3) Maruthanayagam, Kamal told about the movie to the media during his elder daughters 5th birthday. He told it was Sarika who collected details about Khaan Sahib and encouraged him

4) Kanden Seethaiyai : Definitely not the film that Vikram acted

5) 19th Step: Kamal pulling himself out and the project shelved due to differences with Walt Disney

6) A Spanish film that Kamal bagged full remake rights, way back in 2006 or 2007. Suspected to be Manmadan Ambu

7)Marmayogi: Kamals 15 crore advance issue for this movie went to High court level ending in Kamals favour. Pyramid Samira still own the rights. They are unlikely to start the money and more unlikely to disown it even for a heavy fee.

8) Thalaivan irukiraan: Nobody knows what its all about, may be Kamals next movie with Aascar

Jayadeva said...

இவரு எந்த மேடையில பேசினாலும் என்ன சொல்ல வர்றார்ன்னு சாமானியமா புரியவே புரியாது. தமிழே இந்தக் கொடுமை என்றால் இவர் ஆங்கிலம் பேசினா எப்படி இருக்கும்? அந்தக் கண்றாவியையும் ஒரு தடவைப் பார்த்தேன். யாருமே பயன்படுத்தாத வார்த்தைகள், மேலும் பேட்டியின் நடுவே மூக்கை நசுக்கிக் கொண்டு கையால் இரண்டு துளைகளையும் அடைக்குமாறு அழுத்திக் கொண்டு பேசுவார், [என்ன மேனரிசமோ?] அப்போ இன்னும் கொடுமை வார்த்தைகளும் புரியாது. சாதாரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று யூகித்துவிட முடியும், ஆனால் இவர் எங்கிருந்து தான் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு வந்தாரோ, பேட்டி எடுப்பவன் மட்டும் ஆமாம் ஆமாம் என்று ஏதோ புரிந்து மாதிரி காட்டிக் கொண்டான், அவ்வப்போது சிரித்தான், என்ன எழவு அவனுக்குப் புரிந்ததோ, நமக்கு ஒன்னும் புரியவில்லை. இந்த தத்துவ மேதை அப்பப்போ கருத்து கந்தசாமியாகி பொன்மொழிகளை உதிர்ப்பார். கல்யாணத்துல நம்பிக்கை இல்லை என்பார், [இதைக் கேட்டு நிகழ்ச்சியைப் பார்கிறவன் குடும்பம் சின்னாபின்னமாக, நாசமாகப் போக அவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் விதைக்கப் படும்], கடவுள் இல்லை, இருந்தால் பரவாயில்லை என்பார், இது போன்ற கருத்துக்களை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம், பொது இடங்களில் பரப்பி மக்கள் மனதில் விஷத்தை கலந்து, கலாச்சார சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்க வேண்டாமே?

ராம்ஜி_யாஹூ said...

oh ok

வருண் said...

***நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது. அதுபோலவே கமலுக்கு மருதநாயகம் நிறைவேறாத காதலாகவே இருக்கட்டும் என்பதே என் ஆசை.***

அப்படிப்பார்த்தால் "ரோபோ" கதையை வைத்துக்கொண்டு ஷங்கரும் பல ஆண்டுகள் காத்துத்தான் இருந்தான். அவர் காதல் நிறைவேறியதும் நல்லாத்தானே இருக்கு. நிறைவேறிய காதல் எந்திரனும் காவியமாகத்தான் ஆகியிருக்கு!

***இவ்வளவு நாள் எதிர்பார்த்து விட்டு கடைசியில் இதைத்தானா? என்று மனம் வெதும்பும் படி ஆகிவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.***

உண்மைதான், The expectations are very high for MN today. People believed in shankar's ability and invested a huge sum for endhiran and he did not let them down! So, it became a win-win situation for the dreamer and for the producer and of course for Rajni as well.

SUN network is the best choice for MN as well as they have the media with themselves. Somehow they can find a way to get the money they spend in two weeks (b4 it hits or flops).

I am not sure sun network will work with Kh and make kh dream true. You never know!

Gangaram said...

Hello பாஸ் எப்படி இருக்கேங்க... ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு.... மிக அருமை தலைவா.. என்னை நியபகமிருக்கும்னு நினைக்குறேன்... (திருமங்கலம் )

அன்பரசன் said...

//நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது.//


:)

sweatha said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Cable Sankar said...

raightu..

இனியா said...

good one!

D.R.Ashok said...

நீரோடை போலதான் இருக்கிறது பதிவும் அதில் பொதிந்தோடும் அர்த்தபின்னல்களும் :)

ravikumar said...

Nice Posting. As you said let it be a dream because he need not produce one more Aalavandhan using other's money. Let him produce Magalir Mattum with his own money. Dasavatharam finally created rubbed relationship with Oscar films. I heard Mr.Kamal's credibility in Field especially in money issue is not that good hence he could not source producers for his dream project.

புருனோ Bruno said...

ரசித்தேன்

--

மருதநாயகம் படத்தில் வில்லனாக ரஜினி நடித்தால் எப்படியிருக்கும் :) :)

மரா said...

I can see a lot of hardwork behind your article.Good one.Thanks.

முரளிகண்ணன் said...

நன்றி தமிழ்செல்வன்

நன்றி பீர்கிட்

நன்றி ஜெயதேவா

நன்றி ராம்ஜியாஹூ

நன்றி வருண்

நன்றி கங்காராம். உங்களை மறப்பேனா?

நன்றி அன்பரசன்

நன்றி ஸ்வேதா

நன்றி கேபிள்ஜி

நன்றி இனியா

நன்றி அசோக்

நன்றி ரவிகுமார்

நன்றி டாக்டர்

நன்றி மரா