April 19, 2013

பிளேபாய் கமல்


குழந்தை நட்சத்திரமாய் இருந்த கமல் 73 ஆம் ஆண்டு ”சொல்லத்தான் நினைக்கிறேன்” மூலம் இளவயது நடிகராகி 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 43 ஆண்டுகளும் அவரை விடாமல் துரத்தி வருவது பிளேபாய் இமேஜ். இதற்கு முக்கிய அடித்தளமாய் இருப்பது, அவர் முதல் சில ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களே. அதுவும் குறிப்பாக முதல் ஐந்து ஆண்டுகளில், தன் 24 வயது வரையில் ஏற்று நடித்த கேரக்டர்களே.

சொல்லத்தான் நினைக்கிறேனில், நாயகன் சிவகுமார். அவரை மூன்று பெண்கள் காதலிக்கிறார்கள். கமலுக்கு மைனர் வேடம்.  கமலிடம் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற மூவரில் இன்னொரு பெண், கமலை மணக்கிறார்.

இதே ஆண்டு வெளியான குமாஸ்தாவின் மகள் திரைப்படத்திலும் மைனர் வேடம். தன்னிடம் பணியாற்றும் குமாஸ்தாவின் மகளை, அவள் விருப்பத்திற்கு மாறாக மணக்கும் கதாபாத்திரம்.

74ல் வெளியான விஷ்ணு விஜயம் படத்தில் தன்னை விட வயதான ஷீலாவை காதலிக்கும் பாத்திரம்.

75ல் வெளியான பட்டாம்பூச்சியில் தன் உயர்வுக்கு காரணமான பெண்ணை காதலித்து கழட்டி விடும் பாத்திரம். அபூர்வ ராகங்களில் தன்னை விட பலவயது மூத்த ஸ்ரீவித்யாவை காதலிக்கும் பாத்திரம். இதே ஆண்டில், தெலுங்கில் வெளியான மற்றொரு சீதாவில் (மூன்று முடிச்சின் அசல்) இங்கு ரஜினி ஏற்றிருந்த, நண்பனின் காதலியை காதலித்து, அதற்காக நண்பனையே நட்டாற்றில் விடும் பாத்திரம்.

கமலின் அன்னியோன்ய நண்பர் ஆர் சி சக்தி எடுத்த உணர்ச்சிகள் படம் இங்கே வர தாமதமானது. ஆனால் அது ராசலீலா வாக மலையாளத்தில் வெளியானது 75ல். கிராமத்து வாலிபன், தன் பண்ணையாரின் மகளால் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகிறான். பின் நகருக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் வேலை செய்கிறான். அங்கும் அவனுக்கு சில பெண்களால் பாலியல் தொந்தரவு. பின்னர் ஒரு விலைமாதுவை ரெய்டில் இருந்து காப்பாற்றி அவளுடன் நட்பாகிறான். இறுதியில் பாலியல் நோய்க்கு ஆளாகிறான்.

அடுத்து கமல் நடித்த படம், மோகம் முப்பது வருஷம். இதில் அவர் சுமித்ராவை காதலிக்கிறார். படாபட் ஜெயலட்சுமியின் கணவர் கிராமத்தான். அதனால் ஸ்டைலான கமல் மீது படாபட்டுக்கு ஆசை. நூல் விடுகிறார். இதற்கிடையில் ஸ்ரீபிரியா வேறு. அவருக்கு கமல் மூலம் குழந்தை பெற ஆசை. எப்படி இந்த இருவரையும் தவிர்த்து விட்டு சுமித்ராவை கைப்பிடிக்கிறார் என்பதே கதை.

மன்மதலீலை. படத்தலைப்பே போதும். வக்கீல் மனைவி, குமாஸ்தா மகள், குடிகாரனின் மனைவி என கண்ணில் படுவோரையெல்லாம் கவிழ்க்கும் பிளேபாய் பாத்திரம். கடுப்பாகி, விவாகாரத்து கொடுத்துச் சென்ற மனைவியையே, காத்திருப்புக் காலத்தில் கர்ப்பமாக்கி விடும் பாத்திரம்.
லலிதா என்னும் படத்தில் சுமித்ரா கமலின் காலேஜ் சீனியராக வருவார். இருவருக்குமான காதல், பிரச்சினைகள் என பயணிக்கும் படம்.
அவர்கள் படத்தில் கமல் ஒரு வெண்டிரிலோக்விஸ்ட். சைக்கோ கணவனிடம் இருந்து விவகாரத்துப் பெற்ற சுஜாதவை காதலிக்கும் பாத்திரம்.

”ஊர்மகள் மரிக்குமோ” என்ற மலையாளப்படம் இதில் ஷோபாவை திருமணம் செய்து அவரை கொன்று விடும் பாத்திரம். பின் விதுபாலாவை திருமணம் செய்து கொள்வார். ஷோபாதான் விதுபாலா ரூபத்தில் வந்து பழிதீர்ப்பார்.

78ல் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது. கமலின் காதலியின் தோழி விதவை. திருவிழா பார்க்க தோழியின் கிராமத்திற்கு சென்றிருப்பார் காதலி. காதலியை பார்க்கப் போகும் கமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் விதவையின் விரகத்தை தீர்த்து வைப்பார்.

இதே ஆண்டு மலையாளத்தில் வெளியான “வயநாடான் தம்பன்” என்னும் படத்தில் இளம் பெண்களின் ரத்தத்தை குடித்து, நூறாண்டுகளுக்கு மேல் இளமையுடன் வாழும் பாத்திரம். பெண்களை மயக்கி சரசமாடி கொல்லும் வேடம்.  பின் பழிவாங்கப்படுவார்.

இதே ஆண்டு வெளியான “சிகப்பு ரோஜாக்கள்”. தன்னைவிட மூத்த பெண்ணால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி, அவள் தப்புவதற்காக பழியை கமல் மேல் போட்டு விட, நகருக்கு விரட்டப்படுகிறார். அங்கு வேலைக்குச் சேரும் இடத்தில், முதலாளி அவருடைய மனைவியின் தவறான நடத்தையால் கொலைகாரர் ஆகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கிறார்கள், பின்னர் என்ன ஆனது என்பதே கதை.

இந்த காலகட்டத்தில் மலையாளத்தில் வெளியான ஈட்டாவில் ஷீலாவுடன் பெரும்காதல் புரியும் பாத்திரம்.

மீண்டும் கோகிலா படத்தில்  மனைவி ஸ்ரீதேவி. நடிகையான தீபாவுக்கு வழக்கறிஞராகப் போய் அவரையும் கரெக்ட் செய்யும் பாத்திரம்.

இதன்பின் சகலகலா வல்லவனின் வெற்றி, மூன்றாம் பிறையில் கிடைத்த தேசிய விருது என கமலின் மன்மத அவதாரங்கள் குறைந்தன.

 சகலகலா வல்லவனிலும், மச்சினனை திருத்த, அவனுடன் தொடர்பில் இருக்கும் பெண்ணிடம் பழகும் வேடம். மூன்றாம் பிறையில் வயதான கணவனிடம் சுகம் கிடைக்காத சில்க் இடம் புரபோசல் வாங்கும் பாத்திரம்.

நம் ஆட்கள், இப்போது கூட திரை நடிப்பை அப்படியே நம்பும் அளவுக்கு நல்லவர்கள். 40 வருடத்துக்கு முன்னால். அப்போது ஆட்சியையே கொடுத்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் பிளேபாயாக நடித்ததால் அப்படி ஒரு இமேஜ் கமலுக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. அவரும் அதற்கேற்ப இரண்டு திருமணம், ஒரு விவாக முறிவு, பெரும்பாலான படங்களில் முத்தக் காட்சி என மக்களுக்கு தீனி போட்டுக்கொண்டேயிருந்தார்.
இந்த கால கட்டத்துக்கு மேல் வெளியான படங்களில் பெரும்பாலும் நல்ல காதலனாகவே நடிக்க ஆரம்பித்தார்.

இந்திரன் சந்திரனில் பெண் பி ஏ வுடன் தொடர்பு கொள்ளும் மேயர் வேடம், பஞ்ச தந்திரத்தில் பல நாட்டுப் பெண்களையும் மடக்கும் பைலட் வேடம் என அவ்வப்போது மட்டும் மன்மத அவதாரம் எடுக்கிறார் கமல்.

என் பள்ளி நாட்கள், கல்லூரி, வேலை, என பல காலங்களிலும் யாராவது ஒருவர், கமல் சரியான பொம்பளப் பொறுக்கிங்க எனறு கூறுவதை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் அந்த வேடத்தை அழகாய்ச் செய்து மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டார் என்றும் சொல்லலாம் அல்லவா?. ஒரு நடிகனாய் அது வெற்றிதானே?
 இப்படி குறை சொல்லும் பலர் ஒன்றை மட்டும் வசதியாய் மறந்து விடுகிறார்கள். பெண்களுக்கு இரண்டாம் திருமணத்துக்கு உரிமையுண்டு என பல படங்களின் மூலம் தொடர்ந்து நிறுவிவருபவர் கமல்ஹாசன் தான்.

சிப்பிக்குள் முத்துவில் குழந்தைகளுடன் இருக்கும் ராதிகா உடன் திருமணம், நாயகனில் விபச்சார விடுதியில் இருந்த சரண்யா உடன் திருமணம், வேட்டையாடு விளையாடுவில் குழந்தையுடன் இருக்கும் ஜோதிகா உடன் திருமணம், மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போலிஸ் அதிகாரியின் கீப்பாய் இருந்தவருடன் வாழ்க்கை என மற்ற ஹீரோக்கள் ஏற்கத்தயங்கும் வேடங்களை ஏற்று ஒரு நம்பிக்கையூட்டுபவராக தொடருகிறார் இந்த பிளேபாய்.

16 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Haa Haa

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் பிளேபாய்...

N. Shekar said...

kamal says that he can make you believe that he loves even a set property like a chair - most of his heroines believed he loved them in love scenes but he was just being a very good actor who made us believe in his characters :)

முரளிகண்ணன் said...

நன்றி ரமேஷ்

நன்றி தனபாலன்

நன்றி சேகர்

புதுகை.அப்துல்லா said...

வழக்கம் போல் கலக்கல்.

s suresh said...

நல்ல அலசல்! வித்தியாசமான நடிகர்தான் கமல்!

Anonymous said...

விதவையின் விரகத்தை தீர்த்து வைப்பார்.// நல்ல கட்டுரையில் இந்த இடம் இன்னும் நல்லா இருக்கு ;)

Riyaz Ahamed said...

சரியான கமல் ரசிகர் போல் தெரிகிறதே நிறைய தெரிந்திருப்பதிலிருந்து. இந்த ப்ளேபாய், இனியும் ப்ளேபாயாகவே தான் தொடர்வரோ

முரளிகண்ணன் said...

நன்றி அண்ணே.

நன்றி சுரேஷ்

நன்றி ஆசிப் மீரான்

நன்றி ரியாஸ் அஹமது

சாம்ராஜ்ய ப்ரியன் said...

அட்டகாசம்!! :D

BHARATHIDHASAN VELLAICHAMY said...

நன்றி நண்பரே.... இந்த article ல் என்னுடைய
பழைய விமர்சனத்தின் (கான்ஷ்டபிள்)பாதிப்புகள் தெரிகின்றன இதை தான் எதிரபார்தேன்...
l love your postive approch. .

ravikumar said...

Not only in movies life also he is a flirt

BHARATHIDHASAN VELLAICHAMY said...

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் ..
இதில் உங்கள் உழைப்பு, இதற்காக பட்ட சிரமங்கள் , கல்லூரி பணிகளுக்கு இடையே இப்படி எழுதுவதற்கு கண்டிப்பாக எழுத்தின் மேல்
கொண்ட காதல்,என் தமிழை வளர்க்கும் உங்களை வாழ்த்தி வணங்குகின்றேன்..

BHARATHIDHASAN VELLAICHAMY said...

தவறு நண்பரே...
நடிகனை நடிகனாக தான் பார்க்க வேண்டும்.ஒவ்வொரு மனிதனின்
அந்தரங்கம் அசிங்கமானது தான். ஆனால் யாருக்கும் உண்மையை ஒத்துக்கொள்ள தைரியம் கிடையாது...
கமல் தன் அந்தரங்கததை ஒத்துகொண்டது அவரின் அதிமேதாவிதனம்....

முரளிகண்ணன் said...

நன்றி சாம்ராஜ்யபிரியன்

நன்றி ரவிகுமார்

நன்றி பாரதி அண்ணன்.

சுரேகா.. said...காலக் கடிகை வரிசையில்...எவ்வளவு தகவல்கள்...?

அருமை அண்ணே!