May 20, 2008

சிலந்தி இன்னொரு கற்றது தமிழ்?


சமுதாயத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று திரைத்துறையினர் அடிக்கடி பேட்டி கொடுப்பார்கள். மசாலா படங்களைத் தவிர்த்தால் தமிழில் மீதம் இருக்கும் சில படங்களைப் பார்த்தால் இந்த எண்ணம் நமக்கும் வரும். எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்த நாட்களில் வந்த படங்களில் (வறுமையின் நிறம் சிகப்பு .... ) அப்பிரச்சினை பேசப்பட்டிருக்கும். மேலும் நான் B.A , M.A ஆனால் வேலை கிடைக்கலை போன்ற வசனங்கள் இருக்கும். அதுபோல ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால் வங்கி பணி அல்லது தனியார் நிறுவன கிளார்க் என்று இருக்கும். 90களின் மத்தி வரை வந்த படங்களில் கல்லூரி என்றாலே கலை மற்றும் அறிவியல் கல்லூரி தான். ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. படித்து வேலை வாய்ப்பில்லை என்றால் இப்போது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இப்போது அம்மாதிரி படம் எடுக்க முடியாமல் ரவுடி கதைகளாக எடுக்கறார்கள்.
இப்பொழுது மென்பொருள் துறை ஆட்சி செலுத்துவதால் திரைத்துறையும் அதை எதிரொலிக்கிறது. ( கற்றது தமிழ், யாரடி நீ மோகினி.......). அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் தான் சிலந்தி. அழகி புகழ் மோனிகாவும் அவர் நண்பிகளும் மென்பொருள் துறையினர். அவர்கள் செய்யும் sexual harassment ஆல் பாதிக்கப்பட்ட ஒருவன் பழி வாங்குவதாக கதை. நல்ல suspense உடன் சொல்லப்பட்டுள்ளது. கற்றது தமிழ் போலவே இதிலும் மென்பொருள் துறையினர் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். படத்துக்கு மைய இழையே இந்த பிரச்சினைதான். மோனிகாவின் கவர்ச்சி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.

23 comments:

முரளிகண்ணன் said...

வெயில் காலத்துக்கு ஏற்ற படம்

மதன் சிந்தாமணி said...

\\மோனிகாவின் கவர்ச்சி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.\\

என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!!

FunScribbler said...

//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

haahaahaa...விழுந்து விழுந்து சிரித்தேன்!!! அழகாய் சுருக்கமாய் சொல்லியிருக்கீங்க விமர்சனத்தை. பாராட்டுகள்!

முரளிகண்ணன் said...

\\என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!! \\

எனக்கு எதுவும் நடக்க வேண்டாம்
மற்றவர்களுக்கு நல்லது நடந்தால் சரி

முரளிகண்ணன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழ்மாங்கனி

புருனோ Bruno said...

//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, //
சரி

//பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

????
புரியல

து. சாரங்கன் / Saru said...

//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

haahaahaa...விழுந்து விழுந்து சிரித்தேன்!!! அழகாய் சுருக்கமாய் சொல்லியிருக்கீங்க விமர்சனத்தை. பாராட்டுகள்!


உண்மையைத்தானே சொல்லி இருக்கார். தென்கோரியா திரைப்படமான My Sassy Girl ஒரு பதிவரின் பதிவகளில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆனால் என்ன தமிழில் தொழில்நுட்பம் தழுவி படம் எடுத்தா, "யாரடி நீ மோகினி"ல வருவது போல, ஒரு வருசத்தில் உருவாக்கும் மென்பொருளை ஒரே நாளில் உருவாக்குவது போல எல்லா சீன் போட்டு காதில பூ சுத்துவாங்க.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி புருனோ சார்.
\\//பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

????
புரியல\\

காதல் கோட்டை மாதிரி ஒருவரின் வலைப்பதிவை படித்து அவர் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு எதிர்பாலினருக்கு காதல் ஏற்பட்டு....
அல்லது புரொஃபைல் புகைப்படத்தை பார்த்து,கவிதையைப் படித்து இப்படி

முரளிகண்ணன் said...

\\உண்மையைத்தானே சொல்லி இருக்கார். தென்கோரியா திரைப்படமான My Sassy Girl ஒரு பதிவரின் பதிவகளில் இருந்து எடுக்கப்பட்டது.
\\
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சாரங்கன்.
\\ஆனால் என்ன தமிழில் தொழில்நுட்பம் தழுவி படம் எடுத்தா, "யாரடி நீ மோகினி"ல வருவது போல, ஒரு வருசத்தில் உருவாக்கும் மென்பொருளை ஒரே நாளில் உருவாக்குவது போல எல்லா சீன் போட்டு காதில பூ சுத்துவாங்க.
\\
மசாலா படத்தில் வரும் அபத்த காட்சிகளை தூக்கி சாப்பிட்ட காட்சி அது
ஹா ஹா ஹா ஹா

புருனோ Bruno said...

//காதல் கோட்டை மாதிரி ஒருவரின் வலைப்பதிவை படித்து அவர் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு எதிர்பாலினருக்கு காதல் ஏற்பட்டு....
அல்லது புரொஃபைல் புகைப்படத்தை பார்த்து,கவிதையைப் படித்து இப்பட//

அதுதான் பிரச்சனை எதுக்குன்னு விபரமாக குழந்தை புகைப்படத்தை புரொபைலில் வைத்து விட்டீர்களா

கிரி said...

//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்//

செம காமெடி ....சொல்ல முடியாதுங்க கதை பஞ்சம் இருப்பதால் கிடைக்காமல் பழைய பட கதைகளை பயன்படுத்துவது போல இது மாதிரியான படங்களும் வரலாம்.

மதன் சிந்தாமணி said...

\\என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!! \\

எனக்கு எதுவும் நடக்க வேண்டாம்
மற்றவர்களுக்கு நல்லது நடந்தால் சரி

புரியல?

முரளிகண்ணன் said...

\\அதுதான் பிரச்சனை எதுக்குன்னு விபரமாக குழந்தை புகைப்படத்தை புரொபைலில் வைத்து விட்டீர்களா\\

அப்படியே போட்டிருந்தாலும் என் படத்தைப் பார்த்து யாருக்காவது காதல் வந்து ? ஏன் சார் உங்க நகைச்சுவை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?

முரளிகண்ணன் said...

\\செம காமெடி ....சொல்ல முடியாதுங்க கதை பஞ்சம் இருப்பதால் கிடைக்காமல் பழைய பட கதைகளை பயன்படுத்துவது போல இது மாதிரியான படங்களும் வரலாம்.
\\

வரட்டும் வரட்டும் அதானே நம்ம ஆசை

முரளிகண்ணன் said...

\\எனக்கு எதுவும் நடக்க வேண்டாம்
மற்றவர்களுக்கு நல்லது நடந்தால் சரி

புரியல?\\
வேண்டவே வேண்டாம்

வால்பையன் said...

//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.///

இத தவிர படத்த பத்தின விமர்சினத்த பத்தி யாரும் ஒண்ணும் சொல்லல போலிருக்கு

வால்பையன்

முரளிகண்ணன் said...

\\//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.///

இத தவிர படத்த பத்தின விமர்சினத்த பத்தி யாரும் ஒண்ணும் சொல்லல போலிருக்கு
\\
நீங்க தான் அதப்பத்தி ஏதாவது சொல்லுங்களேன்

லக்கிலுக் said...

//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

சூப்பர்!!! :-)))

ரசித்தேன்!!!

Athisha said...

மோனிகாவுக்காக 2 தரம் பாக்கலாம், மத்தபடி படம் மோக்கதான்

புருனோ Bruno said...

//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்//

ஆகா :) :)

ILA (a) இளா said...

//பதிவர்களுக்குள் காதல் வருவது//
ரெண்டு ஆச்சு, இன்னும் ரெண்டு வரிசையில இருக்கு.. :)

முரளிகண்ணன் said...

புருனோ அவர்களே, இந்தப்பதிவு எழுதும் போது இப்படி ஒன்று நடக்கும், அதுவும் நம்ம தலையே என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
TRUTH IS STRANGER THAN FICTION

முரளிகண்ணன் said...

\\ரெண்டு ஆச்சு, இன்னும் ரெண்டு வரிசையில இருக்கு.. :)
\\
இளா தலை வெடிச்சுடும் போல இருக்கு. எங்க்கிட்ட மட்டும் சொல்லுங்க. ரகசியம் காப்பதில் நாங்கள் ரஷ்யர்கள்