August 29, 2008

பாரதிராஜாவின் மறக்க முடியாத பெண்பாத்திரங்கள்

கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த படம் எதுவும் தராவிட்டாலும் மறக்க முடியாத, மறக்க கூடாத இயக்குநர் பாரதிராஜா.

ராதிகா
ராதா
ரேவதி
ரேகா
ரஞ்சனி
ரமா
ரஞ்சிதா
ராஜஸ்ரீ
ரியா சென் போன்ற R வரிசை கதாநாயகிகளையும்

சுகன்யா,பிரியாமணி போன்றவர்களையும் தமிழுக்கு தந்தவர்.

கமலா காமேஷ், வடிவுக்கரசி மற்றும் காந்திமதி போன்றவர்களுக்கு புது பரிமானம் தந்தவர்.

இவர் படங்களில் பெரும்பாலும் பெண்கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை நகரும். இவர் உருவாக்கியதில் மறக்க முடியாதவை எனில்

1) வடிவுக்கரசி – முதல் மரியாதை
2) ராதிகா - பசும்பொன்
3) ராதா - டிக் டிக் டிக்


பாரதிராஜாவின் படைப்புகளிலேயே சிறந்த பாத்திரம் முதல்மரியாதை வடிவுக்கரசி தான் என்பது என் கருத்து. அதற்கு முன்னால் அத்தகைய குணங்களுடன் தமிழ்திரையில் எந்த பெண் பாத்திரமும் படைக்கப்படவில்லை. ஒருவனுடன் காதல்/உறவு கொண்டபின் குடும்ப கவுரவத்திற்காக இன்னொருவனை (அந்தஸ்து குறைந்தவனை) மணந்து அவனை மன சித்திரவதை செய்யும் பாத்திரம். அருமையாக நடித்திருப்பார் அவர். இப்பொழுதும் கூட பல பெண்கள் தங்கள் குடும்ப கவுரவத்திற்காக பிடித்தமில்லா ஆண்களை மணந்து தாங்களும் கஷ்டப்பட்டு துணையையும் பாடுபடுத்துவதுண்டு. அவர்களின் மொத்த பிரதிபலிப்பாக அந்த பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும். நாம் இப்பொழுதும் பூங்காக்களிலும் நூலகங்களிலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நேரத்தை கொன்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவர்களில் பலர் மனைவியின் சொல் பொறுக்க மாட்டாமல் சுற்றுபவர்களே. எல்லா பெண்களும் ராஜகுமாரனை எதிர்பார்க்கிறார்கள். பலருக்கு குமாஸ்தாக்களே கிடைக்கிறார்கள். எதிர்பார்ப்பின் ஏமாற்றம் ஆண் தளர்ந்தபின் வெடிக்கிறது. சமூகத்தின் அருமையான பிரதிபலிப்பு அந்த பாத்திரம்.

பசும்பொன்னில் ராதிகாவின் பாத்திரம் யதார்த்தத்தில் (இந்தியாவில்) இல்லாதது. ஆனால் சமூகத்திற்கு அவசியமானது. கணவனை இழந்த பெண் இன்னொருவனை மணக்கிறாள். அதனால் முதல் கணவன் மூலம் பெற்ற மகன் அடையும் வருத்தமும் இரண்டாவது கணவன் மகன்களுடன் அவனது மோதலும் அவளை வருந்த வைக்கிறது. முதல் பையனின் பாசத்துக்கு ஏங்குகிறாள். இந்தப்படத்தில் பெண்ணின் இரண்டாம் திருமணத்தை ஆதரிப்பது போல் இருந்தாலும் அதனால் நிறைய பிரச்சினைகள் வரும் என எச்சரிப்பதுபோலவே காட்சிகள் இருந்தன. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்களை மறைமுகமாக எச்சரிப்பது போலவே இப்படத்தின் தொனி இருந்தது. இப்படத்தின் கதாநாயகிக்கு பின்னாளில் நிஜ வாழ்க்கையிலும் இதே சூழல் நேரிட்டது.

வெளியில் கவர்ச்சி மாடலாகவும் வீட்டில் ஆச்சாரமான பெண்ணாகவும் இருக்கும் பாத்திரம் டிக் டிக் டிக் ல் ராதாவுக்கு. அம்மாதிரி இருக்க நேரிடும் பெண்ணின் உணர்வுகளை ராதா நன்கு பிரதிபலித்திரிப்பார்.

தொடர்ந்து பாரதிராஜா தமிழ்சினிமாவுக்கு நல்ல நடிகைகளையும், பாத்திரங்களையும் அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்

39 comments:

Nilofer Anbarasu said...

எனக்கு கிழக்கு சீமையிலே படத்தில் வரும் ராதிகா கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்தது.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜா.

துளசி கோபால் said...

பசும்பொன் படத்தில் வருவது போல
அறுத்துக் கட்டும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட பிரிவில் இருக்குங்க.

அதேபோல விவாகரத்து ( இதுக்கு தீர்த்து விட்டுட்டாங்கன்னு சொல்வாங்க)
முறைகளும் இருக்கு. அதுக்காக ரத்து செஞ்ச மனைவியை, பின்னாலேயே வேவு பார்த்து அவளுக்கு ஏதாவது புது சிநேகம் வந்துருமோன்னு ( இவனுக்குப் புதுப்பெண்டாட்டி வரலாமாம்) அவள்மேல் சேற்றை வாரி இறைக்கும் நல்ல புருஷன்களும் இருக்காங்க. இதை வச்சு பாரதிராஜா ஏதும் படம் எடுத்துருக்காரா?

முரளிகண்ணன் said...

வாங்க மேடம்,

ஆணாதிக்கச் சிந்தனையுள்ள சமூகத்தில், ஒரு ஆணுக்கு தாயின் இரண்டாம் திருமணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கருத்தில் எடுக்கப்பட்ட படம் பசும்பொன். ஆனால் முழுக்க எதிர்மறை கருத்துக்களே இடம்பெற்றன இப்படத்தில்.

குட்டிபிசாசு said...

எனக்குப் பிடிச்சது! கடலோரக்கவிதைகள் படத்தில் வரும் டீச்சர்...சாரி! டீச்சர் கேரக்டர்.

சரவணகுமரன் said...

// எல்லா பெண்களும் ராஜகுமாரனை எதிர்பார்க்கிறார்கள். பலருக்கு குமாஸ்தாக்களே கிடைக்கிறார்கள். எதிர்பார்ப்பின் ஏமாற்றம் ஆண் தளர்ந்தபின் வெடிக்கிறது//

நல்ல வரிகள்...

கடலோர கவிதைகள் ரஞ்சனி கதாபாத்திரமும் என்னை கவர்ந்தது.

ஒரு காட்சியில் ரவுடிகள் சிலர் ரேகாவை தவறாக பேச, ரஞ்சனி தன்னை தான் அவர்கள் அப்படி பேசியதாக சத்யராஜிடன் சொல்லுவார். அதற்க்கு சத்யராஜ், "உன்னை தப்பா பேசினா நான் கோபப்பட மாட்டேனா? என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டீயா?" என்று சொல்வது நினைவில் நிற்கும் காட்சி.

narsim said...

நல்ல பதிவு!

பாரதிராஜாவின் களம் அப்படியே உள்ளது..அவர் நினைத்தால் இன்னும் பல பாத்திர படைப்புகளை பேச வைக்கலாம்.

நர்சிம்

முரளிகண்ணன் said...

குட்டி பிசாசு

\\கடலோரக்கவிதைகள் படத்தில் வரும் டீச்சர்...சாரி! டீச்சர் கேரக்டர்\

அந்தமாதிரி டீச்சரை யாருக்குத்தான் பிடிக்காது?

முரளிகண்ணன் said...

சரவண குமரன்

\\கடலோர கவிதைகள் ரஞ்சனி கதாபாத்திரமும் என்னை கவர்ந்தது.\\


அதுவும் ஒரு மறக்க முடியாத பாத்திரம்

முரளிகண்ணன் said...

நரசிம்

பொம்மலாட்டம் படம் நன்றாக வந்திருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். வியாபார பிரச்சினையால் அதன் வெளியீடு தடைப்பட்டுள்ளது.

பார்க்கலாம்

Udayam said...

Are you watching the Kalaingar tv Therkathy ponnu serial?

Horrible serial and I never seen even a single tamil movie with so much of violence and stupidity. There is no censor for serial. After seeing nearly 10-15 episodes, I feel we must have censor for tv serials also.

He is framing one of the south side community as if it is filled with thugs and stupid people.

உண்மைத்தமிழன் said...

முரளிகண்ணன்,

இந்தப் பதிவு எனக்கு மிகவும் ஏமாற்றத்தைத் தருகிறது..

அவருடைய படைப்புகள் அனைத்திலுமே தனது கதாபாத்திரங்கள் மூலமாக சமூகத்தின் நிலவரங்களைத்தான் காட்டினார். அது அத்தனையையும் பொத்தாம் பொதுவாக ஒரே பதிவின் மூலம் சொல்லிவிடவோ, காட்டிவிடவோ முடியாது.

வேண்டுமானால் ஒவ்வொரு திரைப்படத்தையும் தனித்தனியே அலசி, ஆராயுங்கள்.. அப்போதுதான் அந்தக் கதாபாத்திரங்களின் அமைப்பியல் நன்கு புரியும்..

நீங்கள் குறிப்பிட்ட 'முதல் மரியாதை' வடிவுக்கரசி கேரக்டரை போல் இன்றும் நிஜமான கதாபாத்திரங்கள் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக நீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பதைப் போல,

//நாம் இப்பொழுதும் பூங்காக்களிலும் நூலகங்களிலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நேரத்தை கொன்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவர்களில் பலர் மனைவியின் சொல் பொறுக்க மாட்டாமல் சுற்றுபவர்களே.//

நிச்சயமாக இருக்காது.. இது கொஞ்சம் 'அரசுகள் தரும் புள்ளிவிவரம்' போல் இருப்பதாக உணர்கிறேன்..

பசும்பொன் படத்தின் கதையும் ஆங்காங்கே நடப்பதுதான்.. 'அறுத்துக் கட்டுவது', 'அத்து விடுவது' என்கிற வழக்குச் சொற்களுக்குள் நமது கிராமப்புறங்களில் சில பெண்களின் வாழ்க்கை சூதாட்டக் களத்தில் ஆடப்படும் பகடைக் காய்களாக உருப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பிள்ளைகள் அதனை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் அது பிரச்சினையில்லை. ஏற்காதபோது அது அந்தக் குடும்பத்திற்குள் சர்ச்சைதான். இதைத்தான் திரைப்படம் உருக்கொள்ள முடியும். ஒன்றுமே இல்லாததை வைத்து என்ன செய்வது?

பசும்பொன்னில் இயக்குநர் இமயம் காட்டியிருந்தது இதைத்தான்.. தாயின் மறுமணத்தை ஏற்காத பிள்ளைகளின் அணுகுமுறைரயையும், அதனால் பாதிக்கப்பட்ட தாயின் கதையையும்தான்.. கரு சமூகத்துடையது.. சொல்லப்பட்டவிதம் யக்குநருடையது.. எதிர்மறை கருத்துக்கள் என்பது எதிர்ப்பைக் காட்டும்விதத்தில்தான் வைத்திருக்கிறார். அந்தக் கருத்துக்கள் சொல்லப்படாவிட்டால் அவர்களுடைய எதிர்ப்புக்கு என்ன காரணத்தைக் காட்டுவீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
நரசிம், 'பொம்மலாட்டம்' படம் நன்றாக வந்திருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். வியாபார பிரச்சினையால் அதன் வெளியீடு தடைப்பட்டுள்ளது. பார்க்கலாம்.//

அடிமாட்டு ரேட்டுக்கு கேட்டால் அவர் என்ன செய்வார்? படப்பிடிப்பு நாட்கள் அதிகம் என்பதால் பட்ஜெட் எகிறிவிட்டது.. அதிலும் நானாபடேகர்-பாரதிராஜா மோதலாலும் சிறிது காலம் படப்பிடிப்பு தடைபட்டு போய் நின்றது.. பின்பு என்னென்னமோ சமாதானமெல்லாம் ஆகி விடாக் கொண்டன், கொடாக் கொண்டனாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். படம் நன்கு வந்திருக்கிறது. பாரதிராஜாவுக்கு நிச்சயம் பெருமையளிக்கும்.

கதை எனக்குத் தெரியும்.. ஆனால் சொல்ல மாட்டனே..)))))))))))))))))

முரளிகண்ணன் said...

உண்மைத்தமிழன் அண்ணா
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அவரின் படங்கள் எல்லாமே அலசப்பட வேண்டியவையே. நான் எடுத்துக்கொண்டது அவர் படைத்த பெண் பாத்திரங்களை மட்டுமே. ஏனென்றால் மற்ற இயக்குனர்களைவிட வெரைட்டியான கேரக்டர்களை படைத்தவர் அவர். அதில் என்னை மிகக் கவர்ந்தவற்றை மட்டும் எழுதினேன்.

உண்மைத்தமிழன் said...

//ஏனென்றால் மற்ற இயக்குனர்களைவிட வெரைட்டியான கேரக்டர்களை படைத்தவர் அவர்.//

ல்லை. கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அதிகம் படைத்தவர் கே.பாலசந்தர் மட்டுமே..

காரணம், பாரதிராஜாவுக்கு முன்னமேயே திரையுலகில் நுழைந்தவர், படைத்துக் கொண்டிருந்தவர் என்பதால்..

படைப்பில் குறை சொல்லவில்லை. எண்ணிக்கையில் குறைவு என்று மட்டுமே சொல்கிறேன்..

முரளிகண்ணன் said...

பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட டெம்பிளேட்டுக்குள் அடங்கிவிடும். (அவள் ஒரு தொடர்கதை - சுஜாதா, அபூர்வ ராகங்கள் - படாபட், மூன்று முடிச்சு -ஸ்ரீதேவி, சிந்து பைரவி - சுஹாசினி எல்லாமே நடுத்தர வர்க்க மனப்பான்மையை முன் நிறுத்தி வைக்கப்பட்டவை. அந்த குணாதிசியங்கள் அவர் எல்லா படங்களிலும் எதிரொலிக்கும்) சரிதா, கீதா, கல்கி பட கதானாயகி, ரேணுகா என அனைத்து கதா பாத்திரங்களும் ஒரே கண்ணசைவு, பேச்சு தொனி. பாலச்சந்தரின் பங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை.

அவர் காட்டியது நடுத்தர வர்க்க வாழ்க்கை. தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை விதிவிலக்கு. இன்றையா மெகா சீரியல்களுக்கெல்லாம் அவள் ஒரு தொடர்கதை தான் ஆணிவேர்.

பாலசந்தர் போல அதிக பெண் கதாபாத்திரங்களை படைத்த பாரதிராஜா என திருத்திக்கொள்கிறேன்

பரிசல்காரன் said...

//வேண்டுமானால் ஒவ்வொரு திரைப்படத்தையும் தனித்தனியே அலசி, ஆராயுங்கள்.. //

அதுக்குதான் நீங்க இருக்கீன்ங்களே தமிழண்ணா!

பரிசல்காரன் said...

நீங்க குறிப்பிட்ட கதாநாயகிகள்ல எனக்குப் பிடிச்சது...

ராதா
ரேகா
ரஞ்சிதா!

ஏன்னு பொதுவுல சொல்லமாட்டேன்!

முரளிகண்ணன் said...

சௌகார் ஜானகி, சரிதா மூலம் பல வித்தியாசாமான கதாபாத்திரங்களை படைத்தாலும், அதில் அவரின் சாயல் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஆனால் பாரதிராஜாவோ

ஸ்ரீதேவி - 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்
ரேவதி - மண்வாசனை, ஒரு கைதியின் டைரி
ராதா - அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை
வடிவுக்கரசி - சிகப்பு ரோஜாக்கள் , முதல் மரியாதை
ராதிகா - கி.போ.ரயில், கி.சீமையிலே, பசும்பொன், தாஜ்மஹால்

ஒன்றுக்கொன்ரு சம்பந்தமில்லாத வேடங்கள்.

Athisha said...

மிக நல்ல பதிவு தலைவா ... கலக்கல்

முரளிகண்ணன் said...

பரிசல்காரரே

இந்த கதாநாயகியர் உங்கள் வயசுக்காலத்தில் நடித்தவர்களா? [86-91]

(அப்போது உங்கள் வயது 13- 19 ?)

ஒல்லியான தேக அமைப்பு?

மாமா அத்தா மகள்கள், எதிர்வீட்டு தாவணி, டைப்ரைட்டிங் சைட் இந்த நடிகைகளின் சாயலா?

கானா பிரபா said...

கடலோரக்கவிதைகள் ரேகா, ரஞ்சனி இரண்டு அறிமுகங்களையும் இரண்டு வித குணாம்சத்தில் காட்டியதில் மின்னுகிறார்கள்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

உண்மை தான், முதல் மரியதையில் வடிவுகரசியின் நடிப்பு அபாரம்.

nagoreismail said...

முதல் மரியாதை படத்தில் வரும் ராதாவின் பாத்திரமும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல, அருமையான பாத்திர படைப்பு. ஆனாலும் பாரதிராஜாவின் படங்களிலேயே எனக்கு பிடித்தது 'வாலிபமே வா வா' என்ற படம் தான். ஒரு அழகான பெண் (ராதா) ஒரு ஆடவனை திரும்ப திரும்ப நீ ஒரு ஆம்பளையே அல்ல என்பது போல் கூறி அவனை சாமியாராக்கி விடுவாள். அதாவது அந்த பெண்ணின் வார்த்தையை அவனது மனம் நம்ப ஆரம்பித்து விடும். இதே போல அந்த பெண் நீ ஒரு பெரிய ஆள் என்றாலும் அவன் பெரிய ஆளாகி இருப்பான், அதாவது அவனது மனம் நம்ப ஆரம்பித்து விட்டால் அப்படி ஆக்கி விடும். அருமையான படம். அவசியம் பாருங்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்ல பதிவு!
எனக்கு பிடித்தது ..


ரேவதி - மண்வாசனை, புதுமை பெண்

முரளிகண்ணன் said...

நாகூர் இஸ்மாயில்
அந்த படம் பார்த்திருக்கிரேன். அதில் கராத்தே மணி கார்த்திக்கை திருத்துபவராக வருவார். நல்ல படம். வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

கானா பிரபா
ரஞ்சனி அதற்க்குமுன் முதல் மரியாதையிலேயெ அறிமுகப்படுத்தப்பட்டார் என நினைக்கிறேன். (அந்த நிலாவத்தானே கையிலே புடிச்சேன்)

முரளிகண்ணன் said...

வாங்க சுடர்மணி
நீங்க ரொம்ப நல்லவர்

முரளிகண்ணன் said...

உருப்புடாதது_அணிமா
வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

அதிஷா வாங்க, கலக்கல் எல்லாம் இல்லை

முரளிகண்ணன் said...

பாஸ்கர்

அந்த தொடரை நான் அதிகம் பார்த்ததில்லை. பார்த்த வரையில் சில காட்சிகள் exaggrate ஆக தெரிந்தது. கொஞ்சம் இழுவையாகவும் இருந்தது.

லக்கிலுக் said...

அருமையான பதிவு. சமீபகாலமாக ஆராய்ந்து போதிக்கும் ரீதியில் கலக்கல் பதிவுகள் பதிப்பவர்கள் இருவர். ஒருவர் புரூனோ. இன்னொருவர் முரளிகண்ணன்!!!

லக்கிலுக் said...

//அது அத்தனையையும் பொத்தாம் பொதுவாக ஒரே பதிவின் மூலம் சொல்லிவிடவோ, காட்டிவிடவோ முடியாது.
//

முரளிகண்ணன்!

அண்ணன் உண்மையாரின் ஆலோசனைப்படி பதிவு செய்ய ஆரம்பித்தால் நீங்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் ரேஞ்சுக்கு தான் பதிவெழுத வேண்டியிருக்கும் :-(

இப்போது நீங்கள் நறுக்கென்று சுருக்கமாக நாசூக்காக அழகாக எழுதி வருகிறீர்கள். இந்த திறமை எல்லோருக்குமே அவ்வளவு சுலபமாக கைவந்துவிடாது. எழுதுவது கடினமல்ல, நறுக்கென்று எழுதுவது தான் மிகக் கடினம். நீங்கள் அதை அனாயசமாக செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!

முரளிகண்ணன் said...

லக்கி, உங்கள் பாராட்டு எனக்கு உற்சாகத்தையும், தூண்டுதலையும் தருகிறது.

துளசி கோபால் said...

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி.

வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

முரளிகண்ணன் said...

\\வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி.

வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்\\

நன்றி மேடம்

புருனோ Bruno said...

சிண்ட்ரெல்லாவை (ப்ரியாமணி) யாரும் ஏன் நினைவு கூறவில்லை :) :)
-
சில படங்கள் (அவை எடுக்கப்படும் கதைக்கருமூலம்) அனைவரையும் தொடும். உதாரணம் - கல்விக்கு நன்கொடை (ஜெண்டில்மேன்) பதின்ம காதல் (ஆட்டோகிராப்)

வேறு சில படங்களோ (அதில் கூறப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு சிலர் என்பதால்) வெகு சிலரை மட்டுமே தொடும் - சிறைச்சாலை, லேசா லேசா, கண்களால் கைது செய் - அது போன்ற படங்கள் தோல்வி அடைவதும் நடைமுறைதான்.
--
”கிடைக்காத அங்கீகாரமும்”, ”நிராகரிப்பும்” ஒருவனை அலைக்கழிப்பது போல் அதிக அங்கிகாரமும், அதிக கவனிப்பும் ஒருவனை தனி உலகிற்கும் அழைத்து சென்று விடும் (ivory tower என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு).

அது போன்ற பிரச்சனைகளை விளக்கிய படம் கண்களால் கைது செய். அந்த கதாநாயகி (fantasy and fact) உருவகம் தமிழ் திரையில் வேறு பட்ட ஒன்று.

நிராகரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலினால் மனதிற்குள் ஒரு நாயகியை உருவாக்கி அவள் மேல் தனுஷ் காதல் கொண்டால் அந்த படம் வெற்றி அடைவதற்கு காரணம், மக்களில் பலர் நிராகரிக்கப்படுகிறார்கள். அல்லது தான் நிராகரிக்கப்படுவதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

(குணா அபிராமி கூட இந்த வகை கதைதான். ஆனால் அதில் நிராகரிப்பின் காரணம் பிறப்பு. காதல் கொண்டேனில் நிராகரிப்பின் காரணம் படிப்பு / நட்பு / நடை / உடை)

ஆனால் அதே பிரச்சனையை மூற்றிலும் அடுத்த கோனத்திலிருந்து அனுகிய படம் கண்களால் கைது செய்
--
பாரதிராஜாவின் மறக்க முடியாத பெண்பாத்திரங்களின் வரிசையில் இந்த படத்தின் கதாநாயகிக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து
--

முரளிகண்ணன் said...

புருனோ அவர்களே புதிய தகவலையும், கோணத்தையும் சொல்லியுள்ளீர்கள். அந்த படத்தில் கதாநாயனின் பாத்திரத்தை மட்டுமே ரசித்தேன். அதனால் முத்தழகி விடுபட்டுவிட்டார். தங்கள் பின்னூட்டங்கள் எனக்கு புதிய பதிவிற்கான மூலப்பொருள்களை தருகின்றன. (அதனால் பின்னூட்டம் போடாமல் இருந்து விடாதீர்கள்)

Nari said...

Well Sorry for typing in English as I am not used to touch type in Tamil.

What Bharathiraaja and Blachander depicted in their films and characters are those which a normal person would consider to be obscene, vulgar and would feel below standard to portray in films.

Well Balachander's apporva rakankal is nothing but a depiction of vulgerims in the mind of the so called iyakkunar sikaram. A father/son and husband /wife relationships were shown in the extreme.

Well Dik Dik dik is nothing but (blue film) well excuse my language but this was something which the other directors except Bharathiraaja will alone show to the world.

Well, I did enjoy sivappu rojakkal a psycho thriller but my perosnal opinion is that these directors to make their both ends meet, to make money are showing inappropriate scenes and stories.

However,Muthalmarityathai and manvasanai are good films but with boudle worded contexts which are obscene than a yellow monthly.

Your comments are awaited. this is not to be harsh on those people who may admire these so called great directors but my peronsal opinion

Please excuse if this is of a punch to your noses.

Once again I request your pardons