September 02, 2008

நடிக்காதீங்க, இயக்குநர் மணிவண்ணன்

அன்புள்ள இயக்குநர் மணிவண்ணனுக்கு

நான் முன்னெல்லாம் வாரத்துக்கு ஒரு படம்னு வருஷம் 40-50 படம் பார்த்துருவேங்க. இப்ப மாசம் ஒண்ணுன்ணு 12 தான். அதிலயும் பாருங்க இந்த வருஷம் நாலுதான். நான் ஆசைப்பட்டாலும் உங்க சினிமாக்காரங்க எனக்கு அதிகம் செலவு வைக்கிறதில்லீங்க.

ஒரு காலத்துல ரசிக்கிற மாதிரி படமெல்லாம் எடுத்தீங்க

கோபுரங்கள் சாய்வதில்லை
இளமைக்காலங்கள
இங்கேயும் ஒரு கங்கை
நூறாவது நாள்
24 மணி நேரம்
விடிஞ்சா கல்யாணம்
முதல் வசந்தம்
இனி ஒரு சுதந்திரம்
அமைதிப்படை
மூன்றாம் கண்ணுன்னு.

அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, தோழர் பாண்டியன், வீரப்பதக்கம், ஆண்டான் அடிமைன்னு சொதப்ப ஆரம்பிச்சுட்டீங்க. அமைதிப்படைக்கப்புறம் நடிப்புல அதிக கவனம் செலுத்தறனால நல்ல படம் எடுக்க முடியலையா?

தமிழ்சினிமா ஆடியன்ஸ்ஸ ரெண்டு பிரிவா பிரிக்கலாங்னா. ஒண்ணு 18 ல இருந்து 25 வயசு வரைக்கும் இருக்கிற படிக்கிற,வேலைக்குப்போற, வேலை இல்லாத ஆளுங்க. இதுல என்னை மாதிரி சினிமா பைத்தியங்களையும் சேர்த்துக்கலாம். இன்னொண்ணு பேம்லி ஆடியன்ஸ்.


இரண்டு கூட்டமுமே இப்ப கடைசியா நீங்க எடுத்த படங்களுக்கு வரலைண்ணா.

நீங்க இப்ப இருக்கிற பசங்களுக்கு ஏத்த மாதிரி இளைய தலைமுறை ஆளுங்களை போட்டு படம் எடுக்கிறதில்ல, பாட்டுகளை படமாக்கிறதுலயும் வீக்கு. நாத்திக கருத்துகள் அதிகமா இருக்கிறதால தன்னை மாதிரியே கட்டுபெட்டுயா தன் பிள்ளைக இருக்கணும்னு நினைக்கிற பேமிலியும் வர்றதில்ல.

நீங்களும் என்னதான் செய்வீங்க?

பேசாம நடிப்ப கொறைங்கண்ணா. நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம் மாதிரி திரில்லர் படம் எடுங்கண்ணா. அதுக்கு இப்ப இங்க ஆளுங்க கம்மி.

இப்ப பாருங்க மாசத்துக்கு ஒண்ணாச்சும் பார்க்கணுமேன்னு மொக்க படமெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. நீங்க வந்தீங்கன்னா அதில ஒண்ணு எனக்கு கொறையும்.

இப்படிக்கு

நல்ல படம் பார்க்க ஆசைப்படும் சராசரி சினிமா ரசிகன்.

23 comments:

வெண்பூ said...

சரியா சொன்னீங்க முரளிகண்ணன். நடிகரா இருக்குறதை விட அவர் டைரக்டரா நல்லா பண்றார். அவரோட அமைதிப்படை மாதிரியான இன்னொரு படம் தரதுக்கு அவரைத் தவிர வேற யாரலயும் முடியாது. அதுல எனக்கு புடிச்ச வசனம் "கடவுளே இல்லைன்னு சொல்றவன் கூட கோயிலை இடிக்கறதில்லை. கடவுள் இருக்குன்னு சொல்றவந்தான் கோயிலையும் மசூதியையும் இடிக்கிறான்"

Athisha said...

பதிவையே ரீப்பீட்டுகிறேன்

;-)

Bleachingpowder said...

இனி ஒரு சுதந்திரத்தை வுட்டுட்டீங்களே

Bleachingpowder said...

இனி ஒரு சுதந்திரத்தை வுட்டுட்டீங்களே

முரளிகண்ணன் said...

வெண்பூ

\\"கடவுளே இல்லைன்னு சொல்றவன் கூட கோயிலை இடிக்கறதில்லை. கடவுள் இருக்குன்னு சொல்றவந்தான் கோயிலையும் மசூதியையும் இடிக்கிறான்"\\

அது என்னுடைய பேவரிட் வசனமும் கூட

முரளிகண்ணன் said...

வாங்க அதிஷா, ஒரு ஆதங்கத்தில எழுதுறதுதான்

முரளிகண்ணன் said...

பிளீச்சிங் பவுடர் , நன்றி

\\இனி ஒரு சுதந்திரத்தை வுட்டுட்டீங்களே\\

அதை சேர்த்து விடுகிறேன்,

பரிசல்காரன் said...

அட!

தம்பி படத்துல அவரை திரையில பர்த்தப்போ மனைவிகிட்ட சொன்னேன், “இந்த ஆளு இப்பல்லாம் என்ன் படம் எடுக்கறதில்லன்னு தெரியல” ந்னு. பதிவாவே போட்டுட்டீங்க! சூப்பர்.

பாரதிராஜா சமீபத்துல குமுதம் கேள்வி பதில்ல புதுசா வர டைரக்டர்ஸ் நடிக்கப் போயிடாதீங்கப்பா.. நல்ல படமா குடுங்கன்னு (அமீருக்கும், சசிகுமாருக்கும்) கோரிக்கை வெச்சிருந்தாரே.. படிச்சீங்களா?

முரளிகண்ணன் said...

பரிசல்
மணிவண்ணனின் தோல்விப்படங்கள் கூட ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். அவர் திரும்பி வருவார் என எதிர்பார்ப்போம்

வெண்பூ said...

//முரளிகண்ணன் said...
பரிசல்
மணிவண்ணனின் தோல்விப்படங்கள் கூட ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். அவர் திரும்பி வருவார் என எதிர்பார்ப்போம்
//

அதுக்கு காரணம் அவரும் நம்மள மாதிரி மொக்கை (பதிவர்) டைரக்டர்தான். தவறாக சொல்லவில்லை, அவருடைய படங்களில் பெரிய கலை நுணுக்கம், சமுதாய சேவை, லெமன் சேவை இதெல்லாம் இருக்காது. கார சாரமா, கிளாமரா, காமெடியான்னு நல்ல பொழுதுபோக்கா இருக்கும்.

rapp said...

//இப்ப பாருங்க மாசத்துக்கு ஒண்ணாச்சும் பார்க்கணுமேன்னு மொக்க படமெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. நீங்க வந்தீங்கன்னா அதில ஒண்ணு எனக்கு கொறையும்.
//

எங்க அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தின் சார்பில், மன்றத் தலைவியாகிய நான் இதை கன்னாபின்னாவென்று கண்டிக்கறேன். எங்க தலயின் படத்தை பூடகமாக விமர்சித்து, பத்துக்கு பத்து மற்றும் சுட்டப்பழம் ஆகிய படங்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் இந்தப் போக்கு கருணாநிதியின் சதியே, இதற்காக அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென நான் உத்தரவிடுகிறேன். எங்க தல திமுககாரர் என்பதனை இங்கு சுட்ட வேண்டாமென ஆணையிடுகிறேன் :):):)

rapp said...

என்னடா இது மணிவண்ணனப் பத்தி எழுதினா சம்பந்தம் இல்லாம பின்னூட்டம் வருதேன்னு பாக்கறீங்களா? யார் யாரையோ ஆஸ்பத்திரியில் சேர சொல்லுங்க நானும் போய் சேர்கிறேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................

முரளிகண்ணன் said...

வெண்பூ

இப்ப வர்ற படங்களுக்கு மணி படம் பரவாயில்லையேன்னு தோனுது (எனக்கு வயசாயிடுச்சோ?)

முரளிகண்ணன் said...

ராப்
கவலைப் படாதீங்க, நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி படம் வரும் போது விஜய்யையும் இப்படித்தான் கிண்டல் பன்னினாங்க.
குமுதம், ரசிகன் பட விமர்சனத்தில தயாரிப்பாளரோட மகன்கிறதால இந்த மூஞ்சியயெல்லாம் பார்க்க வேண்டியிருக்குன்னு எழுதுனாங்க. இப்ப பாருங்க பேரகூட எழுதாம இளைய தளபதின்னு எழுதுராங்க.

ரித்தீஷ் க்கும் காலம் வரும்.

rapp said...

ஆஹா முரளிக்கண்ணன் அவர்களே, இதென்ன எங்க தலய டைரெக்டா திட்டாம, இவரோட எல்லாம் கம்பேர் பண்ணி பழிதீர்த்துக்கறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
:):):)

கானா பிரபா said...

முன்பு ஒரு பேட்டியில் மணிவண்ணனே வேடிக்கையாக சொன்னது, ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்கள் பண்ணுமளவுக்கு பிசியாக இருந்தேன் என்று. அமைதிப்படை படம் தான் அவர் சார்ந்த கொள்கைக்கு ஒத்துவரும் மாதிரி எடுத்தார் என்பேன். அதை வெண்பூவே தகுந்த உதாரணத்துடன் சொல்லியிருக்கார். ஆனால் நீங்கள் பட்டியல் போட்ட அனைத்தும் அருமையான படங்கள். மணிவண்ணன் இயக்காத கதை எழுதிய நிழல்கள், அலைகள் ஓய்வதில்லையும் அடக்கம்.

முரளிகண்ணன் said...

ஆஹா ராப், ரித்தீஷ் ஐ கலாய்க்க விடமாட்டீங்க போலிருக்கே

முரளிகண்ணன் said...

வாங்க கானாபிரபா.

கானா பிரபா said...

//தங்கப்பதக்கம்//

அந்தப் படம் வீரப்பதக்கம், சத்யராஜின் மனேஜர் ராமநாதன் தயாரிப்பில் நடிகன், பிரம்மா போன்றவை தீபாவளி ரிலீசில் வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் வந்தவை. வீரப்பதக்கம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக்கணும் என்ற அவசர கதியில் மணிவண்ணனை வைத்து பண்ணப்பட்ட படம்.

முரளிகண்ணன் said...

கானா பிரபா
தகவலுக்கு மிக்க நன்றி
திருத்திக்கொள்கிறேன்

புருனோ Bruno said...

//பாரதிராஜா சமீபத்துல குமுதம் கேள்வி பதில்ல புதுசா வர டைரக்டர்ஸ் நடிக்கப் போயிடாதீங்கப்பா.. நல்ல படமா குடுங்கன்னு (அமீருக்கும், சசிகுமாருக்கும்) கோரிக்கை //

மணிவண்ணனை முதலில் நடிகராக்கியதே பாரதிராஜாதானே.

முரளிகண்ணன் said...

\\மணிவண்ணனை முதலில் நடிகராக்கியதே பாரதிராஜாதானே\\

மணிவண்ணனை மட்டுமா? பாக்யராஜ் (ஆனால் அவர் இயக்குநராகும் முன்).

புருனோ, கொடி பறக்குது வில் பாரதி ராஜா தான் மணிவண்ணனுக்கு டப்பிங். ரஜினியோடு அவர் வாக்குவாதம் செய்யும் காட்சி அருமையாக இருக்கும்.

ஆமாம் ஏன் அந்தப்படத்தை எந்த டிவி யிலும் போடமாட்டேன்கிறார்கள்?

புருனோ Bruno said...

//ஆமாம் ஏன் அந்தப்படத்தை எந்த டிவி யிலும் போடமாட்டேன்கிறார்கள்?//

நான் அதை தொலைக்காட்சியில் 2002ல் பார்த்தது ஜெயா டிவியில்.

எனக்கு தெரிந்து ஜெயா டிவியில் நான் பார்த்த முதல் ரஜினி படம் அது தான் :) :)

அன்று இரவு படம் பார்த்து விட்டு கோட்டயம் செல்லும் வழியில் “ஜெயா டிவியில் ரஜினி படமா” என்று நாங்கள் விவாதித்து சென்றது நினைவிருக்கிறது. நெய்வேலி ஊர்வல சமயம் அது என்பதால் (அப்பொழுது பாரதிராஜா ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருந்ததால்) ஒரு வேளை உரிமை பாரதிராஜாவின் படங்களின் உரிமையை ஜெயா டிவி வாங்கியிருக்கலாம் என்று கூட நாங்கள் விவாதித்தோம்.