மாப்ளே, உங்க ஏரியாவுல ஏதாச்சும் ரூம் பாரேண்டா
அந்த ரூமுக்கு என்னடா?, நல்ல தண்ணி, மானேஜரும் உனக்கு குளோஸ்ஸு, மெஸ்ஸுலயும் உன்னையை சிறப்பா கவனிப்பாங்களே?
கூட தங்கியிருந்த எல்லோருக்கும் கல்யாணம் ஆயிருச்சு. இப்ப எல்லாம் புது பசங்களா இருக்காங்க, லோன்லியா பீல் பண்றண்டா
அதுக்குத்தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கிறது.
வீட்டிலயும் தொல்லை பண்றாங்க. இப்பக்கூட ஒரு பொண்ணு போட்டோ அனுப்பியிருக்காங்க, நல்லா செட்டில் ஆனப்புறம் பண்னலாம்னு பார்க்கிறேன்.
பாத்துடா, பஸ்ல போறப்ப பக்கத்து சீட்டில பிளஸ் டூ சங்கோஜமில்லாம வந்து உக்காற வரைக்கும் தள்ளிப்போட்டுறாத.
நல்லா செட்டில் ஆகாட்டி நம்ம தோழர் வழிதான், சரிடா நான் வச்சுர்றேன்.
............................
தோழரே, வர்ற ஞாயிறு எங்க களப்பணி? சாரதா முதியோர் இல்லத்துக்கு போகணும்னு சொன்னீங்களே
இந்த வாரம் வேணாம் சிவா, காய்ச்சலா இருக்கு.
நான் வந்து ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போகட்டுமா?
வேணாம்பா, நான் பார்த்துக்கிறேன். ஆமாம் போன வாரம் ஒரு பொண்ணு போட்டோ வந்துருக்குன்னு சொன்னியே, ஏதும் பிராகிரஸ் இருக்கா?
கல்யாணம் வேணாம்னு பார்க்குறேங்க
இப்படி நினைச்சுதான்யா நான் கல்யாணம் பண்ணாம விட்டுட்டேன். இப்ப பாரு எனக்கு கல்யாணம் ஆயிருந்தா மொணங்கிக்கிட்டேயாவது பொண்டாட்டி கஞ்சி வச்சு தருவா, பையன் இருந்தா, திட்டிக்கிட்டேயாவது மெடிக்கல் ஷாப் போயி குரோசின் வாங்கிட்டு வருவான். பிரண்ட்ஸ் எவ்வளோ பேர் இருந்தாலும் கல்யாணம் பண்னாட்டி அனாதைதான்யா.
அந்த பொண்ணு எவ்வளோ கற்பனையோட இருக்கோ? அதுக்கு ஏத்த மாதிரி நாம சம்பாதிக்கணும், பிள்ளை குட்டிய நல்ல படியா வளர்க்கணும். நான் வாங்குற சம்பளத்துல?
இங்க பாருய்யா, வரப்போறவ ஒன்னையா பர்ஸ்ட் சாய்ஸ்லயா சம்மதிச்சுருப்பா?, வேற வழி இல்லாமத்தான், அதனால தைரியமா இருய்யா. பிள்ளைய நல்லவனா வளரு. நல்லவங்க ரேசியோ அதிகமாகுறது வர்ற தலைமுறைக்கு நல்லதுதான.
சரிங்க தோழர், உடம்ப பார்த்துக்கங்க.
.....................................
ஏம்பா போட்டோ அனுப்பிச்சு ஒரு வாரம் ஆச்சு. பதிலயே காணோம். உங்க வீட்டிலயும் அவங்க வீட்டிலயும் ஜாதகம் பார்த்துட்டாங்க. உங்க அப்பா நீ சொன்னா முடிச்சிரலாம்கிறாரு. அவுங்க வீட்டிலயும் ஓக்கே மாதிரிதான் தெரியுது. பொண்ணு சம்மதம்தான் அங்கயும் வெயிட்டிங். ரெண்டு பேரும் பார்த்து பேசிறீங்களா? பொண்ணு பார்க்கிறதுன்னா எல்லாரையும் கட்டி இழுக்கணுமே?
ஆமாங்க, குடும்பத்தோட போய் பார்த்து சரி வரல்லைன்னா மனக் கஷ்டம். நான் தனியாவே பார்த்துற்றேன்.
எழுதிக்க, இது அந்த பொண்ணு செல்லு நம்பரு........, இது ஆபிஸ் நம்பரு....... நேர்ல போய் பார்த்து பேசு.
ரொம்ப சந்தோஷம், பார்த்துட்டு நான் கூப்பிடுறேங்க
..............................
ஹலோ, வசந்தி
ஆமா, நீங்க
நான் சிவா, தரகர் சொல்லியிருப்பாரே
ஆமா ஆமா, நல்லாயிருக்கீங்களா?
பைன். நீங்க?
நல்லாயிருக்கேன்.
உங்களை பார்த்து பேசலாம்னு
ஸாரிங்க, இந்த வாரம் ஆடிட் நடக்குது. தினமும் எட்டு ஆயிடும்,
வீக் எண்ட் பார்க்கலாமா?
ஒகே.
.......................
ஹலோ ..................... ஆபிசா?
ஆமங்க
வசந்தின்னு இருப்பாங்களே?
அவங்க மீட்டிங்ல இருக்காங்க, நீங்க யாருங்க?
அவங்க சொந்தக்காரர். என்னா லஞ்ச் டைம்ல கூட மீட்டிங்?
ஆடிட் தம்பி. எல்லோரும் போயிருக்காங்க. நான் சுவீப்பரு.
உங்க பேரச் சொல்லுங்க, வந்ததும் சொல்லிர்ரேன்.
நான் அவங்க தூரத்துச் சொந்தம். பரவாயில்லமா நானே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப பேசறேன். கஷ்டப்பட்டு வேலை பார்க்கும் போது எதுக்கு தொல்லை பண்ணிக்கிட்டு?
ஆமா தம்பி, தங்கமான பொண்ணு, நல்லா வேலை பார்க்கும். என்னா கல்யாணம்தான் தள்ளிப் போயிட்டே இருக்கு.
நம்ம கைல என்னமா இருக்கு?
ஆமா தம்பி, அது கூட சொல்லும். நான் என்ன இளவரசியா? குதிரைல வந்து ராஜா தூக்கிட்டுப் போக, எனக்கு வர்றவன் பஸ்ஸுலயோ, பைக்கிலயோ வந்துக்கிட்டிருப்பான். சிக்னல்ல மாட்டிக்கிட்டிருப்பான். ஆனா எப்படியும் வந்துருவான்னு.
சரிம்மா, நான் வச்சுர்றேன்.
........................
ஹலோ, ஆடிட் முடிஞ்சிருச்சா?
நாலு மணிக்கு முடிஞ்சதுங்க. இப்பதான் வீட்டுக்கு போக பஸ் ஸ்டாப் வந்துருக்கேன்.
எங்க ஆபிஸ்ல திடீர்னு ஹைதராபாத் போகச் சொல்லிட்டாங்க. இன்னைக்கு கிளம்புறேன். அடுத்த வாரம்தான் வரமுடியும்.
சரிங்க, அப்போ பார்த்துக்கலாம்.
நான் நேர்ல பார்த்தா என்ன பேசுவனோ, அதை இப்பவே சொல்லிர்றேனே. பரவாயில்லையா?
அதனால என்னங்க? சொல்லுங்க
என் சம்பளம்........ இவ்வளோதான். சொத்தும் ஏதும் இல்ல. சிகரெட்,தண்ணி பழக்கம் கிடையாது. புக் நிறைய படிப்பேன். கொஞ்சம் சோம்பேறி, பெரிய ஆளா வரணும்னு இதுவரைக்கும் நினைப்பு வந்ததில்ல. இதுக்கு மேல உங்க விருப்பம். யோசிச்சு பதில் சொல்லுங்க
...................
சரிங்க நான் வச்சுர்றேன்.
.......................
ஹலோ, கிளம்பீட்டிங்களா
ஆமா, இப்போ ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன்.
உங்க செல்லுல எஃப் எம் இருக்குங்களா?
ம்
பிக் எஃப் எம் இப்போ கேளுங்களேன்
!!!!!!!!!!!!!!! சரி
ஹேப்பி ஜர்னீ
...................................
பிக் எஃப் எம்மா? என்ன புரோகிராமா இருக்கும்!
இந்தா இருக்கு, ஏதோ பாட்டு பாடுது, என்ன பாட்டு
என் கல்யான வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில்
பூமாலை நான் சூடுவேன்.
46 comments:
புனைவுன்னு லேபிள் குடுத்திங்களோ அதனால தப்பிச்சீங்க.. :)))
நல்ல கதை(?).. அருமையான நடை,முக்கியமா அற்புதமான கருத்து முரளி.. நீங்கள் சொல்வதை 100% ரிப்பிட்டூகிறேன்..
நல்ல கருத்துள்ள அருமையான கதை, கட்ட பிரமச்சாரிகள் கட்டாயம் படிக்கவேண்டிய பாடம்.
:-)))...
சூப்பர்!!!
அருமை!!!
பாத்துடா, பஸ்ல போறப்ப பக்கத்து சீட்டில பிளஸ் டூ சங்கோஜமில்லாம வந்து உக்காற வரைக்கும் தள்ளிப்போட்டுறாத.//////////////
கவனிக்க வேண்டிய விஷயம்
கல்யாணம் ஆயிருந்தா மொணங்கிக்கிட்டேயாவது பொண்டாட்டி கஞ்சி வச்சு தருவா, //////
கவனிங்க தோழர்களே
வரப்போறவ ஒன்னையா பர்ஸ்ட் சாய்ஸ்லயா சம்மதிச்சுருப்பா?, வேற வழி இல்லாமத்தான், அதனால தைரியமா இருய்யா///////
ஹஹஹா
கொஞ்சம் சோம்பேறி, பெரிய ஆளா வரணும்னு இதுவரைக்கும் நினைப்பு வந்ததில்ல. ///////
எவ்ளோ நல்ல பையன்
நல்லா அழகான கதை...
நல்லா இருக்கு!
அந்த பெருசு வசனங்களை நானும் நிறைய பேர்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன். ’வாழ்க்கையில் செட்டில் ஆனாதான் கல்யாணம்’ என்பதெல்லாம் மாயை. கல்யாணம் ஆனா தான் மனிதனுக்கு செட்டில் எல்லாம்.25,26 வயசாச்சுன்னு சட்டுபுட்டுன்னு கல்யாணம் முடிச்சுப் போடனும்.
ஹைய்யா பெட்டி திறந்து இருக்கு..;))
மீ த டென்த்தாக்கும்..:))
//நான் என்ன இளவரசியா? குதிரைல வந்து ராஜா தூக்கிட்டுப் போக, எனக்கு வர்றவன் பஸ்ஸுலயோ, பைக்கிலயோ வந்துக்கிட்டிருப்பான். சிக்னல்ல மாட்டிக்கிட்டிருப்பான். ஆனா எப்படியும் வந்துருவான்னு.//
எவ்வளவு யதார்தமான வசனங்கள்.. வாழ்த்துக்கள் முரளி..
வெண்பூ,நசரேயன்,விஜய் ஆனந்த் தங்கள் வருகைக்கு நன்றி
சுரேஷ்,தமிழ்பறவை,தமிழ்ப்ரியன், சங்கர் சார்
தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள்
தாமிரா பதிவெல்லாம் படிச்சு நீங்க கெட்டுப்போகலை :)
நல்லா இருக்கு.
ஹா..ஹா.. அருமை, அருமை.. நல்லா எழுதியிருக்கீங்க..
ஹா ஹா ஹா சூப்பர் சார்:):):) இதுவே நிஜக்கதை மாதிரி இருக்கு:):):) கலக்கல்:):):)
//பாத்துடா, பஸ்ல போறப்ப பக்கத்து சீட்டில பிளஸ் டூ சங்கோஜமில்லாம வந்து உக்காற வரைக்கும் தள்ளிப்போட்டுறாத.//
:):):)
சின்ன அம்மிணி, ராகவன், ராப் தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
:-))))
ரொம்ப யதார்த்தமா இருக்கு. திரைத்துறை பற்றி மட்டுமல்லாமல், எல்லா விசயங்களிலும் உங்கள் எழுத்து அருமை.. :-)
ராதாகிருஷ்ணன், நிலாக்காலம் தங்கள் வருகைக்கு நன்றி
//தாமிரா பதிவெல்லாம் படிச்சு நீங்க கெட்டுப்போகலை :)//
தாமிரா பதிவை குறை சொன்ன சின்ன அம்மிணிக்கு என் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன்.
இப்ப்டிக்கு
தாமிரா-தங்கமணி நற்பணி மன்றம்.
சென்னை--100
//உங்க செல்லுல எஃப் எம் இருக்குங்களா?
ம்
பிக் எஃப் எம் இப்போ கேளுங்களேன்//
ம்ம்ம்ம்ம்.......
கதை நல்லாலாலாலா----------------இருக்கு
//பஸ்ல போறப்ப பக்கத்து சீட்டில பிளஸ் டூ சங்கோஜமில்லாம வந்து உக்காற வரைக்கும் தள்ளிப்போட்டுறாத//
அபாரம் தலைவரே.. இப்படி யோசிக்கவைகக்ற வரிகளை எழுதறதுக்கு நம்மளால முடியலியே....
சூப்பரோ..சூப்பர்...!
நல்ல எழுதிருக்கீங்க... தோழரே....!
A fluent, friendly way of narration. This makes the story quite readable. But it lacks the basic grammar of a short story i.e., a twist or unforeseen developments. Writer Sujata used to emphasise on this particular aspect. But still, the final ending sentence of the story is appealing, a lateral way of ending the story.
அத்திரி, பரிசல் காரன், நவனீதன், சுட்டிஅருண், விஸ்வனாதன் தங்கள் வருகைக்கு நன்றி
நல்ல எழுதிருக்கீங்க... தோழரே....!
கதை அருமையா இருக்கு..
//இப்ப பாரு எனக்கு கல்யாணம் ஆயிருந்தா மொணங்கிக்கிட்டேயாவது பொண்டாட்டி கஞ்சி வச்சு தருவா//
வார்த்தைகளை ரொம்ப எதார்த்தமா சொல்லி இருக்கீங்க..
:-)))
முரளிகண்ணன் ஒரு வழியா டெம்ப்ளேட் மாத்திட்டீங்க :--)..நான் உங்க கிட்ட சொல்லனும்னு ரொம்ப நாளா நினைத்துட்டு இருந்தேன். டெம்ப்ளேட் பக்காவா இருக்கு :-)
வருகைக்கு நன்றி பிஸி, பூர்ணிமா சரண்
\\முரளிகண்ணன் ஒரு வழியா டெம்ப்ளேட் மாத்திட்டீங்க :--)..\
ஆமாம் கிரி, பலரும் சரியாவே லோட் ஆக மாட்டேங்குது என்று சொன்னதால் தான் மாற்றிவிட்டேன்.
எல்லோரும் சொல்வது போல யதார்த்தமா .. நல்லா இருக்கு..
பேனரில் செமயான பாட்டுக்களை போட்டு இருக்கீங்க..:)
ரொம்ப யதார்த்தமான நடை.. அழகான கதை..:))))))இதே மாதிரி எல்லா இளைஞர்களும் வரதட்சனை வாங்காம பண்ணிகிட்டா நல்லா தான் இருக்கும்... ம்ம் பார்க்கலாம்... எந்த படம்ன்னு ஞாபகம் இல்ல வரதட்சனை வாங்கின அம்மா சொல்லுவா "நீ எதுவும் பேசலியேன்னு தாண்டா நான் கேட்டேன்"-ன்னு அதுக்கு பையன் சொல்லுவான் "நீ கேட்டுட்டன்னு தானம்மா நான் எதுவும் பேசலை"-ன்னு... என்னக் கொடுமை?? :((
கதையெல்லாம் இருகட்டும்,
மேல படத்தில் உள்ள பெண் யார்?
வருகைக்கு நன்றி முத்துலட்சுமிகயல்விழி, ஸ்ரீமதி
தமிழ்ப்ரியன் உங்க பேனர் கோடு சூப்பர். பாட்டை வச்சே ஒரு குட்டிகதை போட்டாச்சு
அக்னிப்பார்வை,
\\மேல படத்தில் உள்ள பெண் யார்?\\
சாபத்தால் பூமிக்கு வந்த தேவதை
இது மாதிரி நல்ல கதை ஒன்னு சினிமாவுக்கு எழுதுங்களேன் :)
தலைவா.. ஒரு இரண்டு நாள் ஊருக்குப் போய்ட்டு வந்து பார்த்தா.. இப்படி மொத்தத்தையும் மாத்திட்டீங்களே.. நல்லா இருக்கு புது வீடு.. பதிவு படிச்சுட்டு வர்றேன்..
புதுகை அப்துல்லா, நர்சிம் பெருந்தலைகள் வருகைக்கு நன்றி
எனக்கு இது புனைவுதானானு சந்தேகமா இருக்குங்க:-) சிலதாவது நிஜமா இருக்கும்னு நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் பிரமாதமான எழுத்தாக்கியிருக்கீங்க.
பாசகி,
இது முழுக்க முழுக்க புனைவே. ஆனால் இதில் வரும் உரையாடல்கள் வெவ்வேறு சம்பவங்களில் நான் பேசியது/கேட்டது
வருகைக்கு நன்றி
முரளி,
அழகான கதை சொல்லும் உத்தி. ஆர்பாட்டமில்லாமல் சாதிப்பார்கள் சிலர். சினிமா மற்றும் இப்போது 'சிக்' என்ற சிறுகதைகளிலும் கலக்குறீங்க முரளி. மேலும் தொடருங்கள். சற்று தாமதமான பின்னூட்டம். Better late than never.
அனுஜன்யா
பதிலுக்கு நன்றிங்கண்ணா :-)
ஊக்குவிப்புக்கு நன்றி அனுஜன்யா
Post a Comment