December 06, 2008

பரிசல், நர்சிம் மன்னிக்கவும்- ஒரு சிறுகதை முயற்சி

அம்மா, வெள்ளக்கோட்டை பசங்களோட மேட்ச் இருக்கு, மதியம் ரெண்டு ஆயிடும்மா என்று சொன்னவாறே பேட்டை எடுத்து சைக்கிள் கேரியரில் வைத்தேன். தெருவில் சைக்கிளை உருட்டத் தொடங்கினேன். நான்கு வீடு தள்ளி ரகுவின் வீடு. க்வின் ஆப் தி ஸ்டிரீட் ரம்யா எங்காவது தென் படுகிறாளா என்று நோட்டம் விட்டேன். காணோம். நாம என்ன காதலிக்கவா தேடுறோம், ஒரு ரெப்ரெஸ்சுக்கு கூட கண்ல சிக்க மாட்டேங்கிறாளே என்று சலித்துக்கொண்டென். சின்ன வயதில் இருந்தே பார்த்ததால் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. சுடிதார், நைட்டி எல்லாம் பெண்களுக்கு மிக பாதுகாப்பான உடை என்பது பங்குனி திருவிழாவில் அவளை தாவணியில் பார்த்தபோது தான் தெரிந்தது. பேசுவதற்க்கு தயக்கம். அந்த தெரு வழக்கப்படி அண்ணா என்று சொல்லிவிட்டால் ராத்திரி என் கனவு அரண்மனை அந்தப்புற அழகிகளில் ஒன்று குறைந்துவிடுமே.

ரகுவின் அக்கா, பிரசவத்திற்க்கு வந்தவள் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். வாயை கிண்டி மேட்டரை பிடுங்குவதில் கெட்டி. ரகூ என குரல் கொடுத்தேன். என்னடா இட்லி ஈரல் குழம்பு ஆச்சா மதியத்துக்கு கோலாவா என்றாள்? ஒரு அசட்டு சிரிப்பை சிந்தியவாறே நின்றேன். விடாமல் அவள் ராத்திருக்கு என்ன? என, ஆறு மணிக்கெல்லாம் காலேஜிக்கு கிளம்புறோம், அஸைன்மெண்ட் எழுதனும் என்றேன். அவள் என்னை விடுவதாய் இல்லை. ஏன் இங்க வச்சே எழுதலாமே? எழுதுன ஆளுகிட்ட இருந்து காப்பி அடிக்கப் போறிங்களா என்றாள்?. அதற்குள் ரகு வர தப்பிச்சண்டா சாமி என பெருமூச்சு விட்டேன்.

தெருமுனை தாண்டியதும், என்னடா புதுசா ஆறு மணிக்கு போலாங்கிற என்றான் ரகு. டேய் ஊருக்கு வரும்போது போஸ்டர் பாத்தமேடா, மதுல புது படம் போட்டிருக்காண்டா. பாத்துட்டு ஆஸ்டல் போவோம் என்றேன். ஏண்டா இப்பவேற போறோம், சாயங்காலம் ஒண்ணா என்று புலம்பினான் ரகு. காலைல சாப்பிட்ட, மதியம் பசிக்காதா? சும்மா வாடா என்றேன். அதுக்கில்லை அதை உப்புமாதிரி வச்சுக்கிடலாம், சோறு மாதிரின்னா எப்படி? என அங்கலாய்த்தான். ஒருவழியாய் அவனை சமாதானப்படுத்தி, பேட்டை தெரிந்த டீ கடையில் வைத்துவிட்டு லட்சுமி தியேட்டரை நோக்கி சைக்கிளை மிதிக்கலானேன்.

படம் ஆரம்பித்து சிறுது நேரம் கழித்து, பொறுத்து டிக்கெட் வாங்கி உள்ளே போனோம். தலையை குனிந்தவாறே நடந்து சென்று ஒரு மூலையில் அமர்ந்தோம். இடைவேளையில் தலையை குனிந்து உட்கார்ந்திருந்த ரகுவிடம், இந்தப் படத்துக்கெல்லாம் ஏண்டா இடைவேளை? கேண்டின் காரனுக்காக நம்மளை வெறுப்பேத்துரானுங்க என்றேன். அவன் சிரித்தவாறே, இவ்வளோ பேரு தைரியம்மா எப்படி வெளிய நிக்குராய்ங்க என்றான். விடு நாம மது தியெட்டரில நிக்குரோம்ல அதுமாதிரிதான் என்றேன்.

படம் முடிந்து எல்லோரும் வெளியேறியதும், குனிந்தவாறே வந்த போதுஒரு சீட்டில் பார்த்தேன், ஜானகிராமனின் நளபாகம் புத்தகம். எடுத்துப்பார்த்தால் அது லைப்ரேரி புக். இதப்படிக்கிற ஆளு இங்க ஏண்டா வர்றான் என்றேன் ரகுவிடம். ஏன் நாம வல்லையா என்றான் பதிலுக்கு. விட்டுட்டுப் போன ஆளு கேக்க சங்கடப்படுவான் அதனால் இங்க கொடுத்தா சுட்டுருவாய்ங்க, போயி லைப்ரேரில கொடுப்போம் என்றேன். உனக்கேண்டா இவ்வளோ அக்கறை என்றவனிடம், நம்ம ஜாதிடா, நமளே ஹெல்ப் பண்ணைலைன்னா எப்படி? சிகரெட் குடிக்கிறவன் எவ்வளோ பெரிய லார்டா இருந்தாலும் பிச்சக்காரன் நெருப்பு கேட்டா கண்டிப்பா குடுப்பான். அது மாதிரிதான் இதுவும் என்றேன்

--------------------------------------------------------------------------------------------

சே இன்னைக்கு நாளே நல்லால்ல. பார்த்த படம் வேஸ்ட், அங்க போயி லைப்ரரி புக் வேற மிஸ் பண்ணிட்டோம். சாப்பிடும் போது தேவையே இல்லாம இவகிட்ட ஒரு சண்டை. பையனை வேற அடிச்சிட்டோம். மணி அஞ்சாக போகுது, இவளை எழுப்பி டீ போட சொல்லலாமா, வேணாம் அசந்து தூங்குறா பாவம், இன்னைக்கு நாமளே டீ போட்டு சமாதானப் படுத்துவோம். அட கொடுமையே பால் இல்லையா. டேய் குட்டி, எந்திருடா, அப்பா கடைக்கு போயிட்டு வர்றேன். வீட்டப் பார்த்துக்கோ. ஐயையோ என்ன இது இந்த பசங்க எதுக்கு இங்க? விசாரிக்கிறாய்ங்க? போச்சுடா.

டேய் குட்டி, இந்தா பாரு இப்போ யாராச்சும் வந்து பெல் அடிச்சா என்னானு கேளு சரியா? போடா போ. அப்பா ஏதோ புக்க வச்சுட்டு வந்துட்டீங்களாம். அதோட லைப்ரேரி கார்டாம். போடா போய் ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லி கதவை பூட்டிட்டு வா. சரிப்பா என்று கேள்வியாய் பார்த்தவனிடம் சொல்ல முடியுமா " அவன் என் மானேஜர் பையன், இவன் சரியில்லை கிரிக்கெட்,சினிமான்னு சுத்தி அரியரா வச்சுருக்கான், நீங்க தான் நிறைய படிக்கிறவராச்சே, ஒரு நாள் அனுப்புறேன் அட்வைஸ் பண்ணுங்கன்னு மானேஜர் சொன்னதை".

கரு கொடுத்த பரிசல்

புது கோணம் கொடுத்த நர்சிம்

திட்டுறவங்க இவங்களை திட்டுங்க.

34 comments:

அதிரை ஜமால் said...

நான் தான் 1ஸ்ட்டு...

படிச்சிட்டு வர்ரேன்.

அதிரை ஜமால் said...

\\க்வின் ஆப் தி ஸ்டிரீட் ரம்யா எங்காவது தென் படுகிறாளா என்று நோட்டம் விட்டேன். காணோம். நாம என்ன காதலிக்கவா தேடுறோம், ஒரு ரெப்ரெஸ்சுக்கு கூட கண்ல சிக்க மாட்டேங்கிறாளே\\

அண்ணா கலக்கிட்டேள்

அதிரை ஜமால் said...

\\டிதார், நைட்டி எல்லாம் பெண்களுக்கு மிக பாதுகாப்பான உடை என்பது பங்குனி திருவிழாவில் அவளை தாவணியில் பார்த்தபோது தான் தெரிந்தது.\\

உண்மை உண்மை

அதிரை ஜமால் said...

\\அந்த தெரு வழக்கப்படி அண்ணா என்று சொல்லிவிட்டால் ராத்திரி என் கனவு அரண்மனை அந்தப்புற அழகிகளில் ஒன்று குறைந்துவிடுமே.\\

பின்றிய போங்க.

அதிரை ஜமால் said...

\\அஸைன்மெண்ட் எழுதனும் என்றேன். அவள் என்னை விடுவதாய் இல்லை. ஏன் இங்க வச்சே எழுதலாமே? எழுதுன ஆளுகிட்ட இருந்து காப்பி அடிக்கப் போறிங்களா என்றாள்?\\

திறமையான அக்காதான போல

அனுபவமா இருக்குமோ மோ மோ ...

K.Ravishankar said...

அன்புள்ள முரளி கண்ணன்,


கதை நல்ல இருக்கு. சிறுகதைக்கு உண்டான கடைசி "நச்".

பெரும் குறைகள்: பேச்சு, வருணனைகள் இவைகளை பிரிக்காமல் புளி அடைத்த மாதிரி
அல்லது பஞ்சாங்கம் போல் இருக்கிறது. ஓலைசுவடிப் படிப்பது போல் உள்ளது.


"என்னடா இட்லி ஈரல் குழம்பு ஆச்சா. மதியத்துக்கு கோலாவா என்றாள்?"
ஒரு அசட்டு சிரிப்பை சிந்தியவாறே நின்றேன்.

தெருமுனை தாண்டியதும், "என்னடா புதுசா ஆறு மணிக்கு போலாங்கிற "என்றான் ரகு.

"டேய் ஊருக்கு வரும்போது போஸ்டர் பாத்தமேடா, மதுல புது படம் போட்டிருக்காண்டா. பாத்துட்டு ஆஸ்டல் போவோம் " என்றேன்.

என் வலைக்கு வாருங்கள்.கிழ் உள்ள கதைகளை படித்து சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.

1.வாரணம் ஆயிரம் 2. எல்லோரும் ஜோரா 3.சுடுகாட்டில் ஒலிம்பிக்ஸ்
4.மீண்டும் ஒரு காதல் கதை5. உங்கள நம்ப முடியாது சார்6.அநாதை

முரளிகண்ணன் said...

அதிரை ஜமால், ரவிஷங்கர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


ரவிஷங்கர் சார்
வரும் பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன்

அத்திரி said...

//க்வின் ஆப் தி ஸ்டிரீட் ரம்யா எங்காவது தென் படுகிறாளா என்று நோட்டம் விட்டேன். காணோம். நாம என்ன காதலிக்கவா தேடுறோம், ஒரு ரெப்ரெஸ்சுக்கு கூட கண்ல சிக்க மாட்டேங்கிறாளே//

அனுபவம் பேசுகிறது

அத்திரி said...

//டேய் குட்டி, இந்தா பாரு இப்போ யாராச்சும் வந்து பெல் அடிச்சா என்னானு கேளு சரியா? போடா போ. அப்பா ஏதோ புக்க வச்சுட்டு வந்துட்டீங்களாம். அதோட லைப்ரேரி கார்டாம். போடா போய் ரொம்ப தேங்க்ஸ்னு //

வஞ்சப்புகழ்ச்சி

அத்திரி said...

கத சூப்பர். பரிசலை என் இப்படி கவுத்திட்டீங்க

கார்க்கி said...

தல கதைல எங்க குறைன்னு சொல்ற அளவுக்கு நாம கிடையாது.. கொடுத்த லீட பிடிச்சு நல்ல எழுதியிருக்கிங்க.. என்னை பொறுத்த வரைக்கும் படிச்சு முடிக்கற வரைக்கும் பாதில போதும்னு நினைக்கல.. நல்லாத்தான் இருக்கு.. சோ நீங்க டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் பண்ணிட்டிங்க..

தமிழ்ப்பறவை said...

நல்ல கரு மற்றும் கதை நடை.
//பேச்சு, வருணனைகள் இவைகளை பிரிக்காமல் புளி அடைத்த மாதிரி
அல்லது பஞ்சாங்கம் போல் இருக்கிறது. ஓலைசுவடிப் படிப்பது போல் உள்ளது.//
இதேதான் நானும் சொல்ல வருவது. முதல் வாசிப்பில் புரியாமல் போக, மூன்றாவது வாசிப்பில்தான் புலப்பட்டது.
முதல் பாராவில் இருந்த சுவாரஸ்யம், கிண்டல் கலந்த நடை போகப்போகக் குறைந்து விட்டது. இனி வரும் கதைகளில் டெம்போவை மெயின்டெயின் பண்ணினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் மட்டும்தான்...

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா

புருனோ Bruno said...

//சுடிதார், நைட்டி எல்லாம் பெண்களுக்கு மிக பாதுகாப்பான உடை என்பது பங்குனி திருவிழாவில் அவளை தாவணியில் பார்த்தபோது தான் தெரிந்தது.//

குனியும் போது தவிர

--

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மாணவிகள் கட்டாயம் சேலை + கோட் அணிய வேண்டும் (பிற உடைகளுக்கு தடா) என்று உத்தரவு போடப்பட்டபோது பேசப்பட்ட விவாதங்களில் முடிவை எடுக்க உதவியது நுண்ணுயிரியல் பேராசிரியர் கூறிய மேலே உள்ள கருத்து தான்

--

தமிழர் வாழ்க்கையில் அதிகாலை கோலம் போடுவதிலிருந்து, ஆற்றில் நீர் எடுப்பது, மாட்டுக்கொட்டைகை பராமரிப்பது, தரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பரிமாறுவது போன்ற பல கால கட்டங்களில் சுடிதாரை விட சேலைதான் “பாதுகாப்பான” உடை என்பதில் சந்தேகம் இல்லை

புருனோ Bruno said...

சராசரி தமிழ் பெண்ணின் உடல்வாகும் சராசரி பஞ்சாபி பெண்ணின் உடல்வாகும் வேறு என்பதையும் “சுடிதார், சேலை” விவாதத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்

--

முரளிகண்ணன் said...

அத்திரி

\\பரிசலை என் இப்படி கவுத்திட்டீங்க\\

தப்பு செய்ய தூண்டினவங்களுக்கு தானே அதிக தண்டனை

முரளிகண்ணன் said...

கார்க்கி வருகைக்கு நன்றி.

தமிழ் பறவை,

கல்லூரியில் படிக்கும் போது ஒரு கதை எழுதினேன். கிண்டல் தாங்க முடியவில்லை. பின் அதை தலைமுழுகி விட்டேன். இப்பொழுது தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கத்தால் எழுதுகிறேன். வரும் பதிவுகளில் தங்கள் கருத்தை கருத்தில் கொள்கிறேன்.

Anonymous said...

நல்லா இருக்கு. ரவி சொன்னது முக்கியமான கருத்து.

சுடிதாரோ சேலையோ ஆனியும் விதததைப் பொறுத்து.

முரளிகண்ணன் said...

தலைவர் புருனோ அவர்களே,

கல்லூரி வயதுப் பையனின் பார்வையில் தாவணி உணர்ச்சியைத் தூண்டக்கூடியது என்பதால்தான் அந்த வரி.

சேலை பற்றிய தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பெண்கள் அதிகமான பிளீட்ஸ் வைத்து சேலை கட்டும் போது ஓ எஸ் ஓ ஆகிவிடுவதால் பிரச்சினை தானே.

முரளிகண்ணன் said...

வடகரை வேலன்
தங்கள் வருகைக்கு நன்றி.

இப்பொழுதான் முயற்சி செய்வதால் எல்லோரும் கிழிக்கப் போகிறார்கள் என்று பயந்தேன்.

இனி நன்கு எழுத முயற்சிக்கிறேன்

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு முரளி கண்ணன்.

(அப்போ பரிசல் பார்த்தது தர்மதுரை இல்லையா?)

:)

சென்ஷி said...

கலக்கல் முரளி.. சூப்பராயிருக்குது. இதே ஷ்டைல்ல நாமளும் எழுதுனா என்னன்னு தோண வச்சுட்டீங்க.. :)))

சென்ஷி said...

// நாடோடி இலக்கியன் said...
நல்லாயிருக்கு முரளி கண்ணன்.

(அப்போ பரிசல் பார்த்தது தர்மதுரை இல்லையா?)

:)
//

ஆஹா.. இது வேறயா..!

முரளிகண்ணன் said...

நாடோடி இலக்கியன், ஷென்சி தங்கள் வருகைக்கு நன்றி


(அப்போ பரிசல் பார்த்தது தர்மதுரை இல்லையா?)

:)

அருமையான கமெண்டுங்க

புருனோ Bruno said...

மேல் உள்ள படத்தில் உள்ள பொட்டு புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது - யாரோ ஒரு கத்துக்குட்டியால் என்று நினைக்கிறேன்

--

Nithya A.C.Palayam said...

கதை நல்ல இருக்கு. சிறுகதைக்கு உண்டான கடைசி "நச்".

கோபிநாத் said...

கலக்கல் அண்ணாச்சி ;))

\\சிகரெட் குடிக்கிறவன் எவ்வளோ பெரிய லார்டா இருந்தாலும் பிச்சக்காரன் நெருப்பு கேட்டா கண்டிப்பா குடுப்பான். அது மாதிரிதான் இதுவும் என்றேன்\\

நடுவுல தத்துவ பீட் டா!!!! சூப்பரு ;))

நசரேயன் said...

/*தெரு வழக்கப்படி அண்ணா என்று சொல்லிவிட்டால் ராத்திரி என் கனவு அரண்மனை அந்தப்புற அழகிகளில் ஒன்று குறைந்துவிடுமே.
*/

கதை அருமை முரளி

மின்னல் said...

க‌தை ந‌ல்லா வ‌ந்திருக்கு முர‌ளி க‌ண்ண‌ன் வாழ்த்துகள்

rapp said...

ஹா ஹா ஹா சூப்பர்:):):)

ராம்சுரேஷ் said...

உங்களுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்காமே, வாழ்த்துக்கள் சார்.

PoornimaSaran said...

அழகா முடிச்சிருக்கீங்க:))

அனுஜன்யா said...

முரளி,

இப்போதான் பார்த்தேன். அதனால் தாமதமான பின்னூட்டம். நடை நல்லா இருக்கு. 'knot' பரிசல் கொடுத்தது. அதற்கு ஏற்ப நன்றாகவே இருக்கு. முதலில் ஆரம்பித்த துள்ளல் போகப் போக சற்று துவள்கிறது. ஆனால், மிக நல்ல முயற்சி. தொடருங்கள் முரளி. நீங்களும் சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.

அனுஜன்யா

பாசகி said...

நல்லாருக்குங்க!!!