முதல் பகுதி
இரண்டாம் பகுதி
கார்த்திக்கின் மூன்றாம் பிறவி
நாயகிகளை அழகாக காட்டுவது கேமராமேனின் திறமை என்றாலும் அதில் இயக்குனர்களின் பங்கையும் மறுக்க முடியாது. சில இயக்குனர்கள் அந்த அழகியலில் கரை கண்டவர்கள். அதுவரை ஹோம்லி பிகராக பார்க்கப்பட்ட அமலாவுக்கு நீச்சல் உடையை மாட்டி ஜீவா திரைப்படத்தில் கவர்ச்சியாக காட்டியவர் பிரதாப் போத்தன். இன்னொரு பாத்திரத்தில் நடித்த சில்க் ஸ்மிதாவுக்கு குறைந்த அளவு உடைகளை கொடுத்து அதிக அளவு கோணங்களில் அவரது அழகை காட்டினார். தர்மத்தின் தலைவன், வருஷம்16, வெற்றிவிழா ஆகிய படங்களில் கவர்ச்சியானவர் என்ற எண்ணமே தோன்றாமலிருக்கும் வண்ணம் வலம் வந்த குஷ்புவை மைடியர் மார்த்தாண்டன் என்னும் படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக மாற்றியவரும் பிரதாப் போத்தனே. தற்போது கூட ஐயா,சந்திரமுகி ஆகிய படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்த நயந்தாராவை சிம்பு வல்லவனில் கவர்ச்சியாக காட்டினார். பின் விஷ்ணுவர்த்தன் பில்லாவில் மெருகேற்றினார்.
இயக்குனர் சுந்தர் சியும் இந்த வகையறாவை சேர்ந்தவரே. அகால மரணமடைந்த நடிகை திவ்யபாரதி பாதியில் விட்டுச் சென்ற படங்களை முடிக்க தெலுங்கு தேசத்தவர்கள் உபயோகப்படுத்திய ரம்பாவை கதிர் தான் இயக்கிய உழவன் படத்தில் இரண்டாம் கதானாயகியாக நடிக்க அழைத்துவந்தார். அப்படத்தில் சாதாரணமாக தோற்றமளித்த ரம்பாவை அந்த தேவலோக ரம்பையே இவள்தானோ என்னும் அளவுக்கு அழகாக காட்டினார் சுந்தர் சி தன் உள்ளத்தை அள்ளித் தா படத்தில்.
ஆம் கார்த்திக்குக்கு மூன்றாம் பிறவியாக அமைந்த அதே உள்ளத்தை அள்ளித் தாவில் தான். இந்தப்படம் தயாரிப்பில் இருந்தபோது இதில் பணியாற்றிய அனைவருமே இது சராசரி படம்தான் என்ற மனதோடுதான் இருந்தார்கள். சுந்தர் சி யின் முதல் படமான முறை மாமன் ஒரு சராசரி வெற்றிப் படம். இரண்டாவது படமான இதை அவர் இயக்கும் போது சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு இவ்வாறு பேட்டியளித்திருந்தார் "இதுவும் முறைமாமன் போல காமெடி படம். எப்படியாவது 50 நாள் ஓடிவிடும். தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது". படம் வெளிவந்து தமிழ் சினிமா வரலாற்றின் சிறந்த 10 காமெடி படங்களுல் ஒன்றாக இடம் பிடித்தது.
உள்ளத்தை அள்ளித்தாவின் வெற்றியை அடுத்து கார்த்திக் நடித்த அடுத்த படம் கோகுலத்தில் சீதை. காதல் கோட்டை அகத்தியனின் அடுத்த படமான இது கார்த்திக் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது. இதைத் தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பிஸ்தாவும் வெற்றிப்படமே. தொடர் வெற்றிகளோடு இருந்த விக்ரமனுடன் கார்த்திக் இணைந்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படமும் கார்த்திக்கிக்கு பெரிய வெற்றிப் படமானது.
உள்ளத்தை அள்ளித் தாவுக்கு பின் சுந்தர் சி யுடன் இணைந்த மேட்டுக்குடியும் ஓரளவு வெற்றிப்படமே. இன்னும் கூட சன் குழும தொலைக்காட்சிகளில் சனி, ஞாயிறுகளில் மதிய நேரத்தில் இப்படம் போடப் படுகிறது.
பின்னர் வழக்கம் போல் சரிவு ஆரம்பமானது. சின்ன ராஜா, நிலவே முகம் காட்டு, குபேரன், கண்ணன் வருவான், அழகான நாட்கள், லவ்லி என பல தோல்விப் படங்கள். உனக்காக எல்லாம் உனக்காக மட்டும் நஷ்டம் இல்லாமல் தப்பித்தது.
இந்த சமயத்தில் கார்த்திக் சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். ராஜ்கபூர் இயக்கத்தில் அஜீத் நாயகனாக நடித்த ஆனந்தப் பூங்காற்றே, சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே, பிரபுவுடன் தை பொறந்தாச்சு, அருண் பாண்டியனின் தேவன் ஆகிய படங்களில் சிறிது நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நடித்திருப்பார்.
கடைசி மூன்று ஆண்டுகளில் அவர் நடித்து வந்த படங்கள் என்றால் குஸ்தி, கலக்குறே சந்துரு ஆகியவை.
இந்த மூன்றாம் சரிவுக்கும் முந்தைய காரணங்களே பொருந்தும். தொப்பி, ஊட்டி, பிளேசர் ஆகியவை கார்த்திக்கின் டிரேட் மார்க் ஆகின. சுந்தர் சி மட்டும் இவரை தாக்குப் பிடித்து ஆறு படங்களை இயக்கினார். ராஜ்கபூரும் இவரை நன்கு சமாளிக்க கூடியவர்.
மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு அடிபட்ட பின்னும், மூன்றாவது ரவுண்டிலும் கூட சில விஷயங்களை கார்த்திக் மாற்றிக் கொள்ளாததே. ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த உடன் சுதாரிக்காமல் குப்பையான கதையில் நடிப்பது கார்த்திக்குக்கு மிகப் பிடித்த விஷயம். ஒரு எடுத்துக் காட்டை பார்ப்போம்.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் வெளிவந்து பெரிய வெற்றி. அடுத்து என்ன படத்தில் நடிப்பார் இவர் என எல்லோரும் எதிர்பார்த்த போது விழுந்தது இடி. உப்புமா கூட, இவர் எடுக்கும் படங்களுக்கு என் பெயரை உபயோகப் படுத்துகிறீர்களே என கோபப்படும் அளவுக்கு படமெடுக்கும் ராம நாராயனன் இயக்கத்தில் குபேரன் என்னும் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் என்ற செய்திதான் அது.
சிவலிங்கம் என்னும் படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இப்பொழுது மணிரத்னத்தின் அசோக வனத்தில் வில்லனாக நடிக்கிறார், ஜெயம் ரவிக்கு ஒரு படத்தில் தந்தையாக நடிக்கிறார் என செய்திகள் வருகின்றன. கார்த்திக்கின் மகன் ராதாவின் மகளுடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன.
பிரகாஷ்ராஜ் நடித்த மொழி,வெள்ளித்திரை கதாபாத்திரங்களை கார்த்திக் செய்திருக்கலாமோ என எனக்கு சில சமயம் தோன்றும். சுஜாதாவின் கணேஷ் பாத்திரத்துக்கு பல முறை கார்த்திக்கை பொருத்திப் பார்த்திருக்க்கிறேன்.
கார்த்திக் உங்களுக்கு திறமை இன்னும் குறையவில்லை. மோகன்லாலின் தன்மந்திரா, அமீர்கானின் தாரே ஜமின் பர் போன்ற பாத்திரங்களில் நடித்தால் இன்னும் கூட ஒரு பிறவியை நீங்கள் காண முடியும். அதை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். நான்கு பிறவி கண்ட நவரச நாயகன் என்னும் பதிவை எழுத எனக்கு வாய்ப்பளிப்பீர்கள் என நம்புகிறேன்.
கார்த்திக் தொடங்கிய சரணாலய அமைப்பு, பார்வர்ட் பிளாக், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை பிறிதொரு சந்தர்ப்பத்தில்
கார்த்திக் பற்றி சக பதிவர் அருண்மொழிவர்மன் எழுதிய அட்டகாச பதிவு
பதிவு எழுத ஐடியா கொடுத்த ச்சின்னப்பையன் அவர்களுக்கு நன்றிகள்

36 comments:
//நான்கு பிறவி கண்ட நவரச நாயகன் என்னும் பதிவை எழுத எனக்கு வாய்ப்பளிப்பீர்கள் என நம்புகிறேன். ///
செம டச் முரளி
மூன்று பாகங்களும் அருமை முரளி
அக்னிபார்வை, நசரேயன் மிக்க நன்றி
தல.. என்னா கம்பைளிங்க்.. சும்மா பின்னிட்டீங்க.. இன்றளவில் பல இளம் இயக்குனர்கள் கார்திக் போல ஒரு நடிகர் மாற்றுக்கு வரவில்லை என்பதை பற்றி வருந்துகிறார்கள்.
உங்களின் இந்த் மூன்று அத்தியாய தொடர் உங்களின் உழைப்பு ஆச்சர்யபடவைக்கிறது தலைவரே.. வாழ்த்துக்கள்.
சூப்பரா இருந்துச்சு மூன்று பகுதிகளும்... எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் கார்த்திக்....
பிஸ்தாவில் மிகமிக அனாயாசமாக நடித்திருப்பார். நாகர்கோயிலில் வேலையாக இருந்தபோது தொடர்ந்து ஒரு வாரம் நைட் ஷோ இதே படத்துக்கு போனேன்!!!!
//பிரகாஷ்ராஜ் நடித்த மொழி,வெள்ளித்திரை கதாபாத்திரங்களை கார்த்திக் செய்திருக்கலாமோ என எனக்கு சில சமயம் தோன்றும். சுஜாதாவின் கணேஷ் பாத்திரத்துக்கு பல முறை கார்த்திக்கை பொருத்திப் பார்த்திருக்க்கிறேன்.
கார்த்திக் உங்களுக்கு திறமை இன்னும் குறையவில்லை. மோகன்லாலின் தன்மந்திரா, அமீர்கானின் தாரே ஜமின் பர் போன்ற பாத்திரங்களில் நடித்தால் இன்னும் கூட ஒரு பிறவியை நீங்கள் காண முடியும்//
அருமையா யோசித்திருக்கிறீர்கள்...
ஆஹா... கடைசி வரிகளை இப்பத்தான் பாத்தேன்.. இப்படி உள்குத்தா குத்திட்டீங்களே!!!!!!!!!!!!!!!!!!!!
கேபிள் சங்கர் சார் தாங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்க்கு மிக மிக நன்றிகள்
ச்சின்னப்பையன், மிக மகிழ்ச்சி
ச்சின்னப்பையன், இதில் எங்கே உள்குத்து இருக்கிறது? கார்த்திக் பற்றி எழுதலாம் என யோசித்திருந்தேன். காலகட்டம், அந்த படங்கள் என்று பொறியை கொடுத்தது நீங்கள் தானே.
மூன்று பகுதிகளும் ரொம்ப அருமை. பத்திரிக்கையில் கவர் ஸ்டோரி படித்த திருப்தி.
முரளிகண்ணன்.
எனது பதிவுக்கு தொடுப்பு கொடுத்ததிற்கும், அதற்கு அட்டகாசம் என்ற சொல்லை பாவித்ததிற்கும் ஆயிரம் நன்றிகள்.
85ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களை பார்த்து வருபவன் என்ற முறையிலும், திரை உலகை பற்றி தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையிலும் தமிழ் சினிமாவில் எனக்கு மிகப்பிடித்த இரண்டு நடிகர்கள் கார்த்திக், ரகுவரன் தான்ன். எந்த விதமான அலட்டலும் இன்றி அனாயசமாக நடித்து விட்டுப்போவார்கள்.
இதில் கார்த்திக் தனது தவறுகளால் தானே வீழ்ந்துபோன ஒரு நடிகர். இன்றும் கூட அவரது இடம் காலியாகத்தான் இருக்கின்றது. தொட்டாசிணுங்கியில் இவரும் ரகுவரனும் ரேவதி- ரகுவரன் பிரிவுக்கு பின்னர் நடிக்கும் காட்சியாகட்டும், பூவேலியில் கௌசல்யாவுடன் காதலை உணரும் காட்சிகளில் ஆகட்டும் பின்னியிருப்பார்.
உள்ளாத்தை அள்ளித்தா படத்திற்கு பின்னர் அதே கூட்டணியுடன் சேர்ந்து தொடர்ந்து நகைச்சுவை படங்களாக நடிக்க தொடங்கியது கூட கொஞ்சம் “போரடிக்க” தொடங்கியது.
இவர் மீண்டும் வருவார் என்றூ பலமாக நம்புகிறேன், அதிலும் ஆளுக்கு ஆள் அரிவாளை தூக்கி கொண்டு அறீக்கை விடுகிற இன்றைய தமிழ் திரைப்பட நிலையில் இவர் போல ஒரு நடிகர் கட்டாயம் தேவை
நல்ல நடிகரொருவர்...
மொத்தமாய் நல்ல அலசல்...
மிக்க நன்றி நிலோபர்,அருண் மொழி வர்மன், கிங்
பிரமாதம்.. தொப்பிய கழட்டறேங்க உங்க உழைப்புக்கு.. அதாங்க hats off
பிரமாதம் முரளி. அசத்தி விட்டீர்கள். ஒரு தேர்ந்த கட்டுரையாளருக்கு இருக்கவேண்டிய குணாதிசயங்கள் - துறை சார்ந்த அறிவு, நடுநிலைமை, சுவாரஸ்யம் என்று எல்லா விஷயங்களும் உங்களுக்கு எளிதில் வருகிறது. நிச்சயம் உங்களுக்கு சினிமா தவிர்த்தும் இன்னும் சில துறைகளாவது பரிச்சயம் இருக்கும். அதிலும் உங்கள் 'கைவரிசையைக்' காட்டுங்கள்.
உங்களிடம் பிடித்த இன்னொரு அம்சம் குப்பன் யாஹூ மற்றும் tbcd பின்னூட்டங்களுக்கு நீங்கள் தந்த மரியாதை. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் 'கண்ணியம்' - அதற்கு ஒரு hats off.
அனுஜன்யா
நன்றி கார்கி
மிகுந்த நன்றிகள் அனுஜன்யா. தங்களைப் போன்றோரின் உற்சாக வார்த்தைகளே எனக்கு உரமாக அமைகின்றன.
நல்ல அருமையான தொடர். கார்த்திக்கை பற்றி மூன்று பதிவுகளும் அட்டகாசம்.
மறந்துவிட்ட பல தகவல்களோடு, கார்த்திக் பதிவு சுவாரசியமாக இருந்தது....
மூன்று பாகத்திலும் அசர வைத்து விட்டீர்கள்...
ஊக்கத்திற்க்கு நன்றி வினோத் கௌதம் மற்றும் நவநீதன்
திரு முரளி கண்ணன் அவர்களே எனக்கு கவுண்டமணி என்றால் உயிர் அவர் ஆரம்ப காலதில் இருந்து இன்று வரை நடித்த படங்கள் குறித்த விவரங்களை தர முடியுமா?அல்லது தனி பதிவு போட்டால் மிக சந்தோசம்
எனது பள்ளி நாட்களில் கார்த்திக் படம் அச்சிடப்பட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகளைத்தான் நண்பர்கள் எனக்கு அனுப்புவார்கள் அந்த அளவிற்கு கார்த்திக் ரசிகன் நான்.அவரை பற்றி நானும் ஒரு பதிவு எழுத நினைத்தபோது வேறு யாரேனும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என நெட்டில் தேடியபோது நண்பர் அருண்மொழி வர்மனின் பதிவை கண்டு அதைவிட சிறப்பாக எழுத முடியாது என நினைத்து உங்களை போன்றே நானும் பின்வாங்கிவிட்டேன்.
இப்போது உங்களிடமிருந்து முத்தாய் மூன்று பதிவுகள்,அத்தனையும் அசத்தல்.(பூவேலி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே).
சுந்தர்.சி யின் இரண்டாவது படம் அருண் குமார் அறிமுகமான "முறை மாப்பிள்ளை" என்று நினைவு.
மிக நிறைவான பதிவு முரளிகண்ணன்.. கோகுலத்தில் சீதையில் மிகவும் டேஞ்சரான கேரக்ட்டரில் மிக இயல்பான நடிப்பின் மூலம் கலக்கியிருப்பார்.. நல்ல பதிவு
http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/01/27-karthick-to-don-jayam-ravi-father-role.html
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=6680&cls=row4&ncat=TN
இந்த இரண்டு லிங்க் பாருங்க.
கொடுமை சார். "ஜெயம் ரவிக்கு" கார்த்திக் அப்பாவாக நடிக்க இருக்கிறார்.
இன்னைக்கும் நம்ம "அமரன்" கார்த்திக் களத்தில் இறங்கினார் என்றால், விஜய், அஜீத் எல்லாம் "அமரன்களாகி" விடுவாய்ங்க.
அப்புறம், குமுதம் இதழில் " ஒரு நடிகனின் கதை" படிச்சு பாருங்க. மறைமுகமாக "நவரச நாயகன்" கார்த்திக் குறித்துதான் எழுதி இருக்கிறார்கள்.
மணிரதனம் அவர்களின் புதிய படம் "இராவணன்" or " அசோக வனம் " (தலைப்பு என்னங்க ?) வரட்டும், கார்த்திக் பின்னியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அவர் சம்பந்தப்பட்டு வரும் அரசியல் செய்திகளைப் பாருங்க. ஒரே கோமாளித்தனமாக உள்ளது.
ஒரு "மஹா கலைஞனின் வீழ்ச்சி" !!! என்னத்த சொல்ல, கார்த்திக்கின் ரசிகனாக எனது கண்ணில் ரத்தம் வருகிறது.
ஒண்ணும் தெரியாத " பச்சாக்கள்" எல்லாம், தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கதறுவதைப் பார்த்தால் வெறுப்பாக உள்ளது. கடலளவு திறமையை வைத்திருக்கும் "நவரச நாயகன்" கார்த்திக் திரும்பி வருவது " காலத்தின் கைகளில்தான் " உள்ளது.
தங்கள் பதிவுகள் 3 ம் அருமை.
அருண்மொழி வர்மன் & மற்றும் நீங்கள் போன்ற பதிவர்கள் கார்த்திக்கை மறக்காமல் பதிவுகள் போடுவது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
//உப்புமா கூட, இவர் எடுக்கும் படங்களுக்கு என் பெயரை உபயோகப் படுத்துகிறீர்களே என கோபப்படும் அளவுக்கு படமெடுக்கும் ராம நாராயனன் இயக்கத்தில் குபேரன் என்னும் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் என்ற செய்திதான் அது.//
:-))))
நாடோடி இலக்கியன், நர்சிம், கிரி மிக்க நன்றி
கவுண்டமணி பிரியரே, முயற்சிக்கிரேன்
கார்த்த்கிக் ரசிகரே, நன்றிகள்.
மூன்று பதிவுகளுமே அருமைங்க. நீங்க தகவல் களஞ்சியம்... கார்த்திக் எனக்கு பிடித்த நடிகர், மிஸ்டர்.சந்தரமெளலி இன்னும் கூட காதுல கேட்டுக்கிட்டே இருக்கு :)
நன்றி பாசகி
முரளி - கார்த்திக் பற்றிய சிறப்பான பதிவை எழுத முரளி கண்ணனால் தான் முடியும்.
உங்களது உழைப்பு அசர வைக்கிறது.
ஓ. சாரி.. சாரி... உள்குத்து சரியான வார்த்தையில்லை..... :-((
வெயிலான் தங்கள் வருகைக்கு நன்றி. முரளி - கார்த்திக் மிக ரசித்தேன்.
சின்னப்பையன் நமக்குள்ளே எதுக்கு சாரியெல்லாம்?. நாம அப்படியா பழகுறோம்?
மூன்று பாகங்களும் ரொம்ப அருமை முரளி...
நல்ல கலைஞனை பற்றி அருமையான பதிவு.. He is charming hero... Still..
கார்த்திக் ஒரு காலகட்டத்தில் வசன உச்சரிப்பை "உவ்உள்உள்" என்று குதறி பேச ஆரம்பித்ததை பற்றி எதுவுமே கூற வில்லையே?
என்னை பொறுத்தவரை அதுவும் அவருடைய வீழ்ச்சிக்கு ஒரு காரணம்
கார்த்திக் பற்றி போனவாரம் தான் பேசிக்கொண்டிருந்தோம்.தமிழ்சினிமா ஹீரோக்களில் ஸ்மார்ட்டான,மிகத்திறமை வாய்ந்த ஒரு நடிகர்.
We miss him really.
எங்கள் தலை கவுண்டமணி பற்றி இப்படி ஒரு விலாவரியான பதிவு போடுங்கள் முரளி.ஆவலாக உள்ளது
I am a big fan of actor Karthik. I have read through all the three parts. very nice of you to provide so many important details about one of my favorite actors. I think you missed to mention another good movie of Karthik from late90s which was also a good hit. It is Harichandra(1998) with Meena.
Post a Comment