April 29, 2009

கமல்ஹாசன் கலக்கிய 1982

கமல்ஹாசன் கலக்கிய 1982

கமலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஆண்டு என்றால் அது 1982 தான். ஒரு நடிகருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி என்றால் அது தேசிய விருதைப் பெறுவது. ஒரு நட்சத்திரத்துக்கு சொல்லிக் கொள்ளும் படியான வெற்றி என்றால் படம் மூலை முடுக்கெல்லாம் வெற்றிகரமாக ஓடி வசூலித்துக் கொடுப்பது. இரண்டையும் கமல் சாதித்தது இந்த ஆண்டில்தான். மூன்றாம்பிறையில் ஏற்று நடித்த ஸ்ரீனிவாசன் வேடம் மூலம் தேசிய விருதும், சகல கலா வல்லவன் வேலு மூலம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியும் கமலுக்கு கிடைத்தது. இந்த இரு துருவங்களுக்கு மத்தியில் ராஜா என்னும் துருதுரு காதலன் வேடம் வாழ்வே மாயம் திரைப்படத்தில். இந்தப்படம் இப்போது தொலைக்காட்சியில் போடப்பட்டாலும் குறிப்பிடத்தக்க பார்வையாளர்களை கவர்கிறது.

தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் இந்த ஆண்டில் கமல் வெற்றி பெற்றார். சனம் தேரி கஸம் கமலுக்கு வெள்ளிவிழா படமாக அமைந்தது.

ரஜினிக்கு முக்கிய படமாக அமைந்த மூன்று முகம் இந்த ஆண்டு தான் வெளியானது. டி எஸ் பி அலெக்ஸ்பாண்டியன் இன்றும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை. இதைத் தவிர போக்கிரிராஜா,தனிகாட்டுராஜா, ரங்கா என ரஜினி இந்த ஆண்டில் மிகப்பெறும் கமர்ஷியல் சக்தியாக மாறினார். இந்தப்படங்கள் மூலம் சேர்ந்த ரசிகர்கள்தான் இன்று நாம்காணும் ரஜினி என்னும் பிரமாண்டத்தின் அஸ்திவாரக் கற்கள்.

சங்கிலி படத்தின் மூலம் பிரபு அறிமுகமானது இந்த ஆண்டில்தான். ஆர் சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை மூலமும், மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை மூலமும், விசு மணல்கயிறு மூலமும், பின் பல மசாலா படங்களை இயக்கிய ராஜசேகர் அம்மா என்னும் படம் மூலமும் இந்த ஆண்டு இயக்குனர்களாக அறிமுகமானார்கள்.

கோழிகூவுது படத்தின் மூலம் கங்கை அமரன் இயக்குனராகவும், விஜி நாயகியாகவும் அறிமுகமானார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் இருந்து வந்து சொந்தமாக படமெடுத்து நாயகனாக நடிக்கும் பிரேம் தன் கன்னி முயற்சியை குரோதம் என்னும் படம் மூலம் இந்த ஆண்டில்தான் ஆரம்பித்தார்.

சகலகலா வல்லவன்

இந்தப் படம் எங்கள் ஊருக்கு வெளியாகி 200 நாட்கள் கழித்தே வந்தது. 20 பேர் நிற்கும் வசதி கொண்ட டிக்கட் கவுண்டரை 70 பேர் நிற்கும் அளவுக்கு சவுக்கு கட்டைகளைகளால் முதல் நாளே நீளப்படுத்தியிருந்தார்கள். 25 நாட்களுக்கு மேல் ஓடி தியேட்டர் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் அளவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது இந்தப் படம். இருபத்தேழு ஆண்டு ஆகியும் இளமை இதோ இதோ பாடல் இன்னும் புத்தாண்டுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது. இந்தப் படம் வெளியான சமயத்தில் நேத்து ராத்திரி யம்மா பாடலை வைத்து மட்டும் பத்திரிக்கைகளில் பல நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்தன. எம்ஜியார் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பின் வெளியான ஏராளமான கமஷியல் படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது.

மூன்று முகம்

காக்கிச் சட்டை அணிந்து ஒரு வெற்றி கொடுத்தால் தான் அவர் முழுமையான கமர்சியல் ஹீரோ என்பது தமிழ்சினிமாவின் கருத்தியல். தங்கப்பதக்கம் எஸ் பி சவுத்ரி, வால்டேர் வெற்றிவேல், ஆறுச்சாமி, அன்புச்செல்வன், ராகவன் என்னும் பலரக அதிகாரிகளை நாம் பார்த்திருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் தனிரகம். தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும் ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும் போன்ற பன்ச் டயலாக்குகளும், அசத்தல் பாடி லாங்குவேஜும் தமிழ்சினிமாவின் முக்கிய போலீஸ் கதாபாத்திரமாக அலெக்ஸ் பாண்டியனை மாற்றின.

ஆனால் இதற்க்குப் பின் ரஜினி போலிஸ் வேடமணிந்த உன் கண்ணில் நீர் வழிந்தால், கொடி பறக்குது, நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன் போன்ற படங்கள் சரியாகப் போகாததால் கடந்த 17 வருடமாக அவர் போலிஸ் வேடம் எதுவும் அணியவில்லை. எந்திரனுக்குப் பின் அந்த விரதத்தை முடித்து நமக்கு விருந்து படைப்பாரா என்று பார்க்கலாம்.

நான் குடித்துக்கொண்டே இருப்பேன்

குடியின் தீமைகளை விளக்குவதற்க்காகவே எடுக்கப்பட்ட படம் இது. தேங்காய் சீனிவாசன் கதாநாயகன், கே ஆர் விஜயா நாயகி. தொழிற்சாலை மேற்பார்வையாளராய், ஊரில் நல்ல பெயருடன் இருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு நண்பர்களின் வற்புறுத்தலால் குடிப் பழக்கம் ஏற்படுகிறது. பின் குடிகாரனாய் மாறும் அவர் ஊரில் தன் மரியாதையை இழக்கிறார். வீட்டில் அடுத்த வேளை சமையலுக்கு மட்டுமே இருக்கும் அரிசியைக் கூட விற்றுக் குடிக்கிறார். பின் அந்தக் குடும்பம் என்னவாகிறது என்பதே கதை. இந்தப் படத்தில் தான் முதன் முதலாக ஊருக்கு ஒதுக்குப் புறமாய் அமைந்திருக்கும் சாராயக் கடைகளை யதார்த்தமாக காட்டியிருந்தார்கள். அங்கே உபயோகிக்கப்படும் பல வண்ண பிளாஸ்டிக் டம்ளர் முதல் பேச்சு வழக்கு வரை நன்கு சித்தரித்திருந்தார்கள்.

எங்கேயோ கேட்ட குரல்
ரஜினி கடைசி கடைசியாக ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதரண கேரக்டரில் நடிதத படம் என்று இதனைச் சொல்லலாம். இதன் பின் நடித்த எந்தப் படத்திலும் தன் ஹீரோ இமேஜுக்கு பங்கம் வரும்படி அவர் நடிக்கவில்லை. முதல் மனைவி அம்பிகா அவரை வெறுத்து இன்னொருவனுடன் ஓடிவிடுகிறார். பின் அம்பிகாவின் தங்கை ராதாவைத் திருமணம் செய்து கொள்ளுகிறார். பின் என்னவாகிறது?. இந்த ஆண்டில் ஏவிஎம் பலரகப் படங்களை தயாரித்தது. சகலகலா வல்லவன், போக்கிரிராஜா போன்ற மசாலா படங்களையும், ஏழாவது மனிதன், அம்மா,எங்கேயோ கேட்ட குரல் என கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் தயாரித்து சில உண்மைகளை உணர்ந்து கொண்டது.

பயணங்கள் முடிவதில்லை

வாழ்வே மாயம் படத்தின் கதையும், இந்தப் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று. ஆனால் ட்ரீட்மெண்ட் வேறு. இந்தப் படம் பாடல்கள், கவுண்டமணியின் நகைச்சுவை என கூடுதல் விசேஷங்களால் பெரிய வெற்றியைப் பெற்றது. கமலும் தன்னிடம் இருந்த மைக்கை மோகனிடம் ஒப்படைத்தார். முரளி வந்து அதைப் பிடுங்கும் வரை மோகனும் அதைப் பத்திரமாக பாதுகாத்தார். பாக்யராஜும், சுந்தர்ராஜனும் ஒன்றாக இருந்தவர்கள். ஆனால் பாக்யராஜ் பிரபலமானதும் சுந்தர்ராஜனை கண்டுகொள்ளவில்லையாம். அவன் எடுத்த படத்த விட அதிக நாள் ஓடுற படம் ஒன்னு எடுக்கணும் என்ற வெறியில் சுந்தர்ராஜன் இயக்கிய படம் இது. 526 நாட்கள் (ஒரு திரையரங்கில் மட்டும்) ஓடி அவர் சபதத்தை நிறைவேற்றியது இந்தப் படம்.

(அடுத்த பகுதியில் தொடருகிறேன்)

54 comments:

Mahesh said...

நல்ல அலசல் !!

மூன்று முகம் ரஜினி class apart !!

"கோவைத்தம்பி" விடுபட்டுக்காரே:(

முரளிகண்ணன் said...

மகேஷ் நன்றி. அடுத்த பதிவில் (தொடர்ச்சியில்) குறிப்பிட்டு விடுகிறேன்.

Raju said...

\\ஆனால் இதற்க்குப் பின் ரஜினி போலிஸ் வேடமணிந்த உன் கண்ணில் நீர் வழிந்தால், கொடி பறக்குது, நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன் போன்ற படங்கள் சரியாகப் போகாததால் கடந்த 17 வருடமாக அவர் போலிஸ் வேடம் எதுவும் அணியவில்லை. எந்திரனுக்குப் பின் அந்த விரதத்தை முடித்து நமக்கு விருந்து படைப்பாரா என்று பார்க்கலாம்.\\

அடடா..இந்த ஆராய்ச்சி எப்போ பண்ணினீங்க..
கொடி பறக்குது, பாரதிராஜா படமா தல?

Raju said...

அடுத்த பதிவுக்குகாக வெயிட்டுறேன்..!

Nithi said...

நல்ல அலசல்,அடுத்த பதிவுக்குகாக காத்திருக்கிறேன்

MSK / Saravana said...

முரளி அண்ணா.. நீங்க ஒரு தகவல் குடோன்..
கலக்கல் பதிவு.

//தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும் ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும் //

இன்னா டயலாகுப்பா.. சான்ஸே இல்லை.

MSK / Saravana said...

அப்போ கமலுக்கு முதல் தேசிய விருது "நாயகன்" மூலமாக இல்லையா??

butterfly Surya said...

நல்ல அலசல் முரளி. கமல் ரசிகனாக / ரஜினி ரசிகனா அப்படின்னு பள்ளிகளில் கொஞ்சம் சண்டை பிடிக்க ஆரம்பித்தது இந்த ஆண்டுதான் அப்படின்னு நினைவு.

சரியா..??

முரளிகண்ணன் said...

டக்ளஸ்ஸண்ணே, கொடி பறக்குது பாரதிராஜா படம்தான். அடுத்த பகுதி விரைவில் போட்டு விடுகிறேன்.

நித்தியாணந்தன் வருகைக்கு நன்றி

சரவணகுமார், களத்தூர் கண்ணம்மா விற்க்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்க்கான தேசியவிருது, பின் மூன்றாம் பிறை, அதற்கடுத்துத்தான் நாயகன்.


வண்ணத்துப் பூச்சியார்,

78 ஆம் ஆண்டு இளமை ஊஞ்சலாடுகிறது சமயத்திலேயே மெதுவாக ஆரம்பித்தது. 82 வாக்கில் பள்ளி,கல்லூரி என எல்லா இடங்களிலும் இதே பேச்சுத்தான். 80களின் மத்தியில் நீ எந்த ஜாதி என்று கூட கேட்க மாட்டார்கள்? யார் ரசிகன் என்றுதான் விடுதிகளில் கேட்பார்கள்.

அது ஒரு கனாக் காலம் said...

நாங்க கொஞ்சம் வயசான பசங்க (????!!!!!), 1982 ல, உண்மையான கமல் ரசிகர்கள். ... அதுக்கு முன்பே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, மரோ சரித்ரா, ஏக துஜே கே லியே, அவள் அப்படித்தான், மற்றும் சில தேவர் பிலிம்ஸ் படங்கள், ...கமல் ஒரு ஏறுமுகமாய் தான் இருந்தார். ..

நல்ல அலசல், முன்பு பர்ர்த்த படம், சினிமா தியேட்டர்கள் ...எல்லாம் நினைவுக்கு வருது. உலகத்லேயே, நம்ம ஊர்ல தான் டிக்கெட் வாங்க, ஒருவர் மட்டுமே நுழைய கூடிய, அகலம் குறைந்த, காற்று வசதி இல்லாத, எண்ணையை தேய்ச்சு தேய்ச்சு கருப்பான சுவர், அதுக்குள்ளார, பீடி வாசனையோட வெயிட் பண்ணி , டிக்கெட் வாங்கி ..... நினைச்சாலே , தலை வலி வருது, என்ன இன்பமான தலை வலி

அது ஒரு கனாக் காலம் said...

நாங்க கொஞ்சம் வயசான பசங்க (????!!!!!), 1982 ல, உண்மையான கமல் ரசிகர்கள். ... அதுக்கு முன்பே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, மரோ சரித்ரா, ஏக துஜே கே லியே, அவள் அப்படித்தான், மற்றும் சில தேவர் பிலிம்ஸ் படங்கள், ...கமல் ஒரு ஏறுமுகமாய் தான் இருந்தார். ..

நல்ல அலசல், முன்பு பர்ர்த்த படம், சினிமா தியேட்டர்கள் ...எல்லாம் நினைவுக்கு வருது. உலகத்லேயே, நம்ம ஊர்ல தான் டிக்கெட் வாங்க, ஒருவர் மட்டுமே நுழைய கூடிய, அகலம் குறைந்த, காற்று வசதி இல்லாத, எண்ணையை தேய்ச்சு தேய்ச்சு கருப்பான சுவர், அதுக்குள்ளார, பீடி வாசனையோட வெயிட் பண்ணி , டிக்கெட் வாங்கி ..... நினைச்சாலே , தலை வலி வருது, என்ன இன்பமான தலை வலி

எம்.எம்.அப்துல்லா said...

//25 நாட்களுக்கு மேல் ஓடி தியேட்டர் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் அளவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது //

அல்டிமேட் முரளிண்ணே.

முரளிகண்ணன் said...

அது ஒரு கனாக்காலம் தங்கள் வருகைக்கு நன்றி.

\\உலகத்லேயே, நம்ம ஊர்ல தான் டிக்கெட் வாங்க, ஒருவர் மட்டுமே நுழைய கூடிய, அகலம் குறைந்த, காற்று வசதி இல்லாத, எண்ணையை தேய்ச்சு தேய்ச்சு கருப்பான சுவர், அதுக்குள்ளார, பீடி வாசனையோட வெயிட் பண்ணி , டிக்கெட் வாங்கி ..... நினைச்சாலே , தலை வலி வருது, என்ன இன்பமான தலை வலி\\

உண்மையிலேயே அது ஒரு கனாக்காலம்தான்.


அப்துல்லாண்னே நன்றின்னே

Chezhian said...

MGR's movie is "Enga Veetu Pillai".

முரளிகண்ணன் said...

செழியன் தங்கள் வருகைக்கு நன்றி. பெரிய இடத்துப் பெண் படமே சகலகலா வல்லவனின் மூலக் கதையைக் கொண்டிருக்கும்.

அக்னி பார்வை said...

என்ன முரள் பதிவர் சந்திப்புகளில் கூட உங்களை காண முடியவில்லை

anujanya said...

வாழ்வே மாயம் 1982 வா? நான் 1980 என்று நினைத்தேன். [சுந்தர், 'உனக்கு எப்படி தெரியும்னு' கேக்காதீங்க. எங்க அப்பா சொன்னது :) ]

இந்த வருடம் தானே, 'காதல் ஓவியம்' வந்தது?

அனுஜன்யா

அக்னி பார்வை said...

என்ன முரளி பதிவர் சந்திப்புகளில் கூட உங்களை காண முடியவில்லை.

கடைக்குட்டி said...

ப்ரேம் இந்த ஆண்டுதான் வந்தாரா... செம மேட்டர்ணா அவரு.. அவர பத்தி ஒரு அல்சல் போடுங்கோ..

நான் படிக்கிறேன்..

butterfly Surya said...

78 ஆம் ஆண்டு இளமை ஊஞ்சலாடுகிறது சமயத்திலேயே மெதுவாக ஆரம்பித்தது. 82 வாக்கில் பள்ளி,கல்லூரி என எல்லா இடங்களிலும் இதே பேச்சுத்தான்.///

Yes you are right. இதுக்காக என் அருமை நண்பர்களிடம் சண்டை போட்டதெல்லாம் நினைவிற்கு வருது.

வாழ்வே மாயத்தில் கமல் இற்ப்பதை பார்த்து ஒரு நாள் இரவு முழுவதும் அழுது ஜீரம் வந்து நண்பன் ஒருவன் பள்ளிக்கே ஒரு வாரம் வரவில்லை. பேரு ரமேஷ்.

அவன் இப்போது தற்போது டெல்லியில் மத்திய அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியில் இப்போது இருப்பதாக கேள்வி பட்டேன்.

இப்ப நினைச்சா சிரிப்பா வருது.

அது ஒரு அருமையான கனவு காலம்.

தூள் முரளி.

முரளிகண்ணன் said...

அக்னிபார்வை, குடும்ப சூழல் காரணமாக சென்ற சந்திப்புக்கு வர இயலவில்லை. இன்னும் 10 நாட்களில் சரியாகி வழக்கம் போல தொடருவேன்.

ஆம் அனுஜன்யா, காதல் ஓவியம் இந்த ஆண்டுதான். அந்தப் பட பாடல்களை மறக்க முடியுமா? அடுத்த பகுதியில் அதை குறிப்பிடலாம் என்று இருந்தேன்.

Vidhya Chandrasekaran said...

வழக்கம்போலவே விரிவான அலசல் பாஸ்:)

முரளிகண்ணன் said...

கடைக்குட்டி தங்கள் வருகைக்கு நன்றி. பிரேம் பற்றி நிச்சயம் ஒரு பதிவு உண்டு.

வண்ணத்துப்பூச்சியார், அப்போது விடுதிகளில் நடந்த சண்டைகளை நினைத்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது.

அதுவும் தளபதியும்,குணாவும் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் தொடங்கிய சண்டை இருக்கிறதே! அப்பப்பா.

முரளிகண்ணன் said...

நன்றி வித்யா.

கார்க்கிபவா said...

அதே குழந்தைகிட்டே போய் அலெக்ஸ் பாண்டியன்ன்னு சொல்லு.. இன்னொரு கையால் அம்மா வாயையும் மூடும்..

ச்சே.. என்ன படம்? தலைவர் தலைவர்தான்..

இவையெல்லாம் விட தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லப் போகும் விஷயமும் இந்த வருடம் தான் நடந்தது..அது என்னன்ன்னு தெரியுமா தல?

முரளிகண்ணன் said...

கார்க்கி நீ பிறந்த வருசம். அதுதானே?

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு பாஸ்..

//கமலும் தன்னிடம் இருந்த மைக்கை மோகனிடம் ஒப்படைத்தார். முரளி வந்து அதைப் பிடுங்கும் வரை மோகனும் அதைப் பத்திரமாக பாதுகாத்தார். //

இப்பொ அந்த மைக் யார்கிட்ட இருக்கு தெரியுமா?

ஷண்முகப்ரியன் said...

ஆராய்ச்சி பூர்வமான பதிவு.நன்றி முரளிகண்ணன்.

Cable சங்கர் said...

////25 நாட்களுக்கு மேல் ஓடி தியேட்டர் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் அளவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது //
//

சூப்பர்.. முரளி..

முரளிகண்ணன் said...

தீப்பெட்டி தங்கள் வருகைக்கு நன்றி.

ஷண்முகப்பிரியன் சார், தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

கேபிள் சங்கர் நன்றிகள்

Prabu M said...

விவரங்களோடு மட்டுமன்றி உங்கள் ஊரின் தியேட்டர் அனுபவங்களோடு இணைத்து வழங்கியிருப்பது ருசிகரம்...
1982க்கு ஒரு ரவுண்ட் அப் அடித்த உண்ர்வு... நன்றி... வாழ்த்துக்கள்!!

லோகு said...

1987 இல் பிறந்த எனக்கு இவை அனைத்துமே புதிய தகவல்கள்..
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்..

சின்னப் பையன் said...

வழக்கம்போலவே விரிவான அலசல் பாஸ்:)

பரிசல்காரன் said...

எத்தனை விவரங்கள் சேகரிக்கிறீர்கள் முரளி.. ஒரு பதிவு எழுத... பொறாமையா இருக்கு!

Thamira said...

செம.. செம..

Starjan (ஸ்டார்ஜன்) said...

"20 பேர் நிற்கும் வசதி கொண்ட டிக்கட் கவுண்டரை 70 பேர் நிற்கும் அளவுக்கு சவுக்கு கட்டைகளைகளால் முதல் நாளே நீளப்படுத்தியிருந்தார்கள்"

அப்போது எங்க வீட்டில் என்னை கவுண்டர்க்குள் கூட்டி செல்ல மாட்டார்கள் . மூச்சு முட்டும் என்று பயம் . அந்த நாள் ஞாபகம் வந்ததே !!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்தப் படம் பாடல்கள், கவுண்டமணியின் நகைச்சுவை என கூடுதல் விசேஷங்களால் பெரிய வெற்றியைப் பெற்றது.//


சென்னைமாநகரத்திலே.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

LION சுத்திக் கொண்டே வரும்பாட்டு இந்த வருடத்தின் சிறப்புகளில் ஒன்று.

பின்னால் ஷாம்லியால் காப்பியடிக்கப் பட்டது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பெரிய இடத்து பெண்ணுக்கும் சகலகலாவல்லவனுக்கும் உள்ள தொடர்பு இங்கே இருக்கு தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் இருந்து வந்து சொந்தமாக படமெடுத்து நாயகனாக நடிக்கும் பிரேம் தன் கன்னி முயற்சியை குரோதம் என்னும் படம் மூலம் இந்த ஆண்டில்தான் ஆரம்பித்தார்.//

அவருக்காக எங்கள் ஊரில் ஒரு ரசிகர் மன்றம் இருந்தது

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப நாளா வலை பக்கமே வரவில்லை,அதற்குள் நிறைய எழுதிட்டீங்க முரளி.பொறுமையா எல்லாத்தையும் இனிதான் படிக்கனும்.தொடர்ந்து கலக்குங்க.

வருண் said...

***எங்கேயோ கேட்ட குரல் என கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் தயாரித்து சில உண்மைகளை உணர்ந்து கொண்டது.***

முரளி: எங்கேயோ கேட்ட குரல் பி எ ஆர்ட் ப்ரடக்ஷன்ஸ் படம். பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பு :-)

கோபிநாத் said...

தூள் அண்ணாச்சி :)

கலைஞானியில் துடங்கி சர சரன்னு கொண்டு போயிட்டிங்க.

\\இருபத்தேழு ஆண்டு ஆகியும் இளமை இதோ இதோ பாடல் இன்னும் புத்தாண்டுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது.\\

எங்க வீட்டு புடுவிங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்...போட்டுபுட்டிங்க ;)

Joe said...

நல்ல அலசல்.
கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்.

புருனோ Bruno said...

//கொடி பறக்குது, நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன் //

நாட்டுக்கொரு நல்லவன் இன்னமும் பார்க்க வில்லை

கொடி பறக்குது எனக்கு பிடித்த படம். பாடல்களும் பின்னனி இசையும் நன்றாக இருக்கும்

அந்த படம் ஓடாடது வருத்தம் தான்

--

பாண்டியன் : கூட நல்ல பொழுது போக்கு படம் தானே. பாபா அளவு கிடையாது என்று நினைக்கிறேன்

புருனோ Bruno said...

//கமலும் தன்னிடம் இருந்த மைக்கை மோகனிடம் ஒப்படைத்தார். முரளி வந்து அதைப் பிடுங்கும் வரை மோகனும் அதைப் பத்திரமாக பாதுகாத்தார். //

சூப்பர்

லக்கிலுக் said...

சகலகலா வல்லவன் எவர்க்ரீன் ஹிட் :-)

இதே வரிசை படங்கள் என்று ஜெமினியையும், அயனையும் சேர்க்க முடிகிறது!

Alex Pandian said...

>>>>>>>

எங்கேயோ கேட்ட குரல்ரஜினி கடைசி கடைசியாக ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதரண கேரக்டரில் நடிதத படம் என்று இதனைச் சொல்லலாம். இதன் பின் நடித்த எந்தப் படத்திலும் தன் ஹீரோ இமேஜுக்கு பங்கம் வரும்படி அவர் நடிக்கவில்லை. முதல் மனைவி அம்பிகா அவரை வெறுத்து இன்னொருவனுடன் ஓடிவிடுகிறார். >>>>>>>>>>>>>>>>>>>

அம்பிகா ஓடிப்போன அந்த இன்னொருவர் - படத்தில் செகண்ட் ஹீரோ - ' சின்னைய்யா' - ஒரு http://losangelesram.blogspot.com?

ஐஸ்வர்யா ராயையே கைய பிடிச்சு இழுத்த அக்குறும்புக்காரர் தெரியுமா ?

தற்போது 'ஜக்குபாய்'க்காக ஸ்ரேயாவுடனும் சரத்துடனும் பாங்காக் எல்லாம் சுற்றிவிட்டு சென்னை வந்துள்ள உலகம் சுற்றும் வாலிபர் தெரியுமா ?

Alex Pandian said...

>>>>>>>

எங்கேயோ கேட்ட குரல்ரஜினி கடைசி கடைசியாக ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதரண கேரக்டரில் நடிதத படம் என்று இதனைச் சொல்லலாம். இதன் பின் நடித்த எந்தப் படத்திலும் தன் ஹீரோ இமேஜுக்கு பங்கம் வரும்படி அவர் நடிக்கவில்லை. முதல் மனைவி அம்பிகா அவரை வெறுத்து இன்னொருவனுடன் ஓடிவிடுகிறார். >>>>>>>>>>>>>>>>>>>

அம்பிகா ஓடிப்போன அந்த இன்னொருவர் - படத்தில் செகண்ட் ஹீரோ - ' சின்னைய்யா' - ஒரு மிகப் பிரபல மூத்த இணைய எழுத்தாளர் மற்றும் வலைப்பதிவர் தெரியுமா ? http://losangelesram.blogspot.com

ஐஸ்வர்யா ராயையே கைய பிடிச்சு இழுத்த அக்குறும்புக்காரர் தெரியுமா ?

தற்போது 'ஜக்குபாய்'க்காக ஸ்ரேயாவுடனும் சரத்துடனும் பாங்காக் எல்லாம் சுற்றிவிட்டு சென்னை வந்துள்ள உலகம் சுற்றும் வாலிபர் தெரியுமா ?

:-)))

ராமகுமரன் said...

நன்றி முரளி. ஏழாவது மனிதன் பல பாரதியார் பாடல்களை திரையில் இசைக்க செய்த படம். பயணங்கள் முடிவதில்லை , காதல் ஓவியம் என்று இளையராஜாவும் ஒரு கலக்கு கலக்கியிருப்பார்

பிராட்வே பையன் said...

எங்கேயோ கேட்ட குரல்-P.A arts
ஏழாவது மனிதன் -பாளை சண்முகம்
தயாரித்தது..

கண்சிவந்தால் மண் சிவக்கும் - இந்த ஆண்டில்தான் வெளியானது..

நல்ல இடுகை.

ஹஸன் ராஜா.

அத்திரி said...

நீண்ட இடைவெளிக்கு பின் வருக சகா.........................

சகலகலா வல்லவன் பாடல்கள் இன்றைக்கும் தாளம் போட வைக்கும்.................

கிரி said...

//இருபத்தேழு ஆண்டு ஆகியும் இளமை இதோ இதோ பாடல் இன்னும் புத்தாண்டுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது//

எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களில் ஒன்றும் (குறிப்பாக அறிமுக இசை)

//போன்ற படங்கள் சரியாகப் போகாததால் கடந்த 17 வருடமாக அவர் போலிஸ் வேடம் எதுவும் அணியவில்லை//

அதற்க்கு காரணம் மூன்று முகம் படத்தில் மட்டுமே போலீஸ் அதிகாரியாக நடித்தார் (தலைவர் ரசிகர்கள் மன்னிக்க)

//நான் குடித்துக்கொண்டே இருப்பேன்//

டிவி இல கூட வந்த மாதிரியே தெரியலையே

//பயணங்கள் முடிவதில்லை//

இந்த சென்னை மாநகரிலே ... :-))))

enRenRum-anbudan.BALA said...

Very good review & analysis, thanks..