83ஆம் வருடம் இந்தியர்களுக்கு இன்னும் மறக்க முடியாததாய் இருப்பதற்க்கு காரணம் புருடென்சியல் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது எனலாம். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தத்துவத்திற்கேற்ப்ப மாநில எல்லைகளைக் கடந்து வீரர்களை மக்கள் ஆராதித்தார்கள். அதே தத்துவத்தில்தான் தமிழ்சினிமாவும் வேற்று மொழி நடிகைகளை தொடர்ந்து ஆராதித்து வருகிறது. இந்த ஆண்டில் திறமைவாய்ந்த ரேவதி, ஊர்வசி போன்ற திறமைவாய்ந்த அயல் மாநில நடிகைகள் தமிழில் அறிமுகமானார்கள். நளினி, சசிகலா போன்ற நடிகைகளும் அறிமுகமானது இந்த ஆண்டில்தான்.
ஆனால் இந்த ஆண்டின் சிறப்பு என்பது கிட்டத்தட்ட 20 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியதேயாகும். மசாலா படம், கதையுள்ள படம், சதையுள்ள படம் என் எல்லாவகைப் படங்களும் ஓடின. கோமல் சுவாமினாதனின் ஒரு இந்திய கனவு படமும் வந்தது, சில்க் நாயகியாய் நடித்து சில்க் சில்க் சில்க், என்னைப் பார் என் அழகைப் பார், போலிஸ் போலிஸ் ஆகிய படங்களும் வந்தன. இனி இந்த ஆண்டின் சில முக்கிய படங்களைப் பார்ப்போம்.
முந்தானை முடிச்சு
கே பாக்யராஜ் இயக்கம். ஏவிஎம் தயாரிப்பு. கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற கற்பகம் என்னும் படத்தின் நாட்டில் இருந்து டெவலப் செய்யப்பட்ட படம். பாக்யராஜ் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் நன்கு மெருகேற்றியிருந்தார். ஊர்வசி அறிமுகம். வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் என்றாலே மற்றவர்கள் வில்லங்கமாய் பார்க்கும் அளவுக்கு ஒரு காட்சியை அமைத்திருந்தார். முதியோர் கல்விக்கு கவர்ச்சி டீச்சர், சிறுபையன்களின் குறும்புகள் என பாக்யராஜ் டச்சுடன் அமைந்த படம். தவக்களை இந்த படத்தில் அறிமுகம். இந்தப் படத்தின் வெற்றியினால் பாக்யராஜின் அடுத்த படமான தாவணிக் கனவுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டது அப்போதைய தலைப்புச் செய்தி.
மலையூர் மம்பட்டியான்
இதற்க்கு முன் சரிதா நடிக்க அம்மா என்னும் சராசரி குடும்பப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜசேகர். அதற்க்கு எதிர்ப்பதமாக இந்த ராபின் ஹூட் டைப் கதையை அடுத்ததாக எடுத்தார், படம் பெரு வெற்றி. பெற்றோரைக் கொன்றவர்களை பழிவாங்கி, பின் காட்டில் மறைந்து வசதியானவர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் வேடத்தில் தியாகராஜன். அவரால் கடத்தப் பட்டு பின் அவரையே காதலிக்கும் வேடத்தில் சரிதா. இந்தப் படம் பின் ரஜினி நடிக்க கங்குவா என்னும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடிக்க தமிழிலும் ரீமேக் செய்யப் படுகிறது. காட்டு வழி போற பொண்ணே, சின்னப் பொண்ணு சேலை, வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு போன்ற இளையராஜாவின் இனிமையான பாடல்கள் நிரம்பியது. எப்படி நாட்டாமை வெற்றிக்குப் பின் கே எஸ் ரவிகுமாருக்கு ரஜினி,கமல் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததோ அதுபோல ராஜசேகருக்கு இப்பட வெற்றிக்குப் பின் அந்த வாய்ப்பு கிடைத்தது.
மண்வாசனை
பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன், ரேவதி அறிமுகமான படம். தென் மாவட்டங்களில் குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் ஈகோ சிக்கல்களை வைத்து எடுக்கப்பட்ட படம். மாடு பிடித்தல், பந்தயம், முறை மாப்பிள்ளை என பலமுறை பார்த்த விஷயங்கள்தான் என்றாலும் இளையராஜாவின் இசை, யதார்த்தமான காட்சி அமைப்புகள் போன்றவற்றால் வெற்றியடைந்த படம்.
உயிருள்ள வரை உஷா
தற்போது சீரியல்களில் நடித்து வரும் கங்கா, நளினி ஆகியோர் அறிமுகமான படம். அதைவிட முந்தைய படங்களில் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டிய டி ராஜேந்தர் குறிப்பிடத்தக்க செயின் ஜெயபால் என்னும் வேடத்தில் நடித்து அடுக்கு மொழி பேசிய படம். காதலியின் அண்ணன் வசதியான முரடன். காதலுக்கு உதவும் காதல் தோல்வி அடைந்த் ஒருவன் என்னும் சாதாரணமான கதை. ஆனால் பாடல்களால் பெரிய வெற்றியைப் பெற்றது. வாடா என் மச்சி வாழக்காய் பச்சி போன்ற பன்ச் டயலாக்குகள் நிறைந்த படம். டீ ஆரின் தங்கைக்கோர் கீதமும் இதே ஆண்டு வெளியானது.
உருவங்கள் மாறலாம்
சிவாஜி,ரஜினி,கமல் இணைந்து நடித்த படம். ஒய் ஜி மகேந்திரா தீவிர கடவுள் பக்தர். கடவுளான சிவாஜி அவருக்கு பின் நடக்கப் போவதை யெல்லாம் சொல்லி அருள் பாலிக்கிறார். பின்னர் ஒய் ஜி மகன் இறந்து விடுவான் என அருள் வாக்கு சொன்னதும் கடவுளுக்கு எதிராக மாறுகிறார் ஒய் ஜி. கடவுள் ரஜினி, கமல் வேடங்களிலும் காட்சி தந்தார் இந்தப் படத்தில். ஆழ்வார்பேட்டை ஆண்டவாக்கு முதல்படி இதுதானோ என்னவோ?
பொய்க்கால் குதிரை
கவிஞர் வாலி முக்கிய வேடத்தில் நடித்த படம். கமல்ஹாசனுக்கு போட்டோ பிரேமுக்குள் இருந்து பேசும் பாத்திரம். வாலி கதாநாயகியின் தந்தை. நாயகனுக்கும் வாலிக்கும் ஒரு பந்தயம். என்ன தகிடுதத்தம் செய்தாவது உன் மகளை காதலித்து காட்டுகிறேன், ஆனால் உன் மகளிடம் அதை சொல்லக்கூடாது என சவால் விடுகிறான் நாயகன். வாலியும் சம்மதிக்கிறார். தொடரும் சம்பவங்கள் பாலசந்தரின் கைவண்ணத்தில் நம்மை கவலை மறந்து சிரிக்க வைக்கக் கூடியவை. கதைக் களம் பெரும்பாலும் நாயகனின் நண்பனான ரவீந்திரனின் சிகை அலங்கார நிலையத்திலேயே இயங்கும். ரவீந்திரன் கமல் ரசிகன் ஆனதால் அங்கே கமலின் போட்டோ மாட்டப்பட்டிருக்கும். சிச்சுவேஷனுக்கு ஏற்ப கமல் உயிர்பெற்று கமெண்டுகளை அள்ளி வீசுவார். வழக்கப் போல் கடைசியில் சுபம்.
ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது
மௌலி இயக்கிய படம். இதன் பின்னர் சில படங்களை இங்கே இயக்கினாலும் பின்னர் தெலுங்கு பட உலகத்திற்க்கு சென்று வெற்றி பெற்றார். அங்கே அஸ்வினி நாச்சப்பாவை வைத்தும் சில படங்கள் இயக்கினார். விட்ட குறை தொட்ட குறையாக இங்கே அவ்வப்போது தலைகாட்டி நள தமயந்தி, பம்மல் கே சம்பந்தம் என தன் பணியை தொடருகிறார்.
இளமை காலங்கள்
மோகன், சசிகலா நடிக்க மணிவண்ணன் இயக்கிய படம். தண்ணீரில் மூள்காது காற்றுள்ள பந்து என கே ஜே யேசுதாஸ் பாட அவரை பலமுறை திருத்தினாராம் வைரமுத்து. ஜேசுதாஸ் கோபப்பட தமிழ் மூழ்கி விடக்கூடாது என விளக்கமளித்தாராம் கவிஞர். ஆனால் உதித் நாராயணன் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் பெரியம்மா (பிரியமான) பெண்ணை ரசிக்கலாம் என பாடிய போது தலைக்கு மேலே போயாச்சு இனி ஜான் போனா என்ன முழம் போனா என்ன என்று விட்டு விட்டார்.
தோடிராகம்
மியுசிக்கல் சூப்பர் மார்க்கட் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த படம். ஜனரஞ்சகமாக தனக்கு இசையமைக்கத் தெரியும் என காட்ட அவர் போட்ட பாடல் கொட்டாம் பட்டி ரோட்டிலே ஹே ஹே குட்டி போற ஷோக்கிலே ஹே ஹே. படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறந்து போனாலும் பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது.
டௌரி கல்யாணம்
ஒரு பெண்ணின் திருமணத்துக்கு என்னென்ன செலவுகள் ஆகும் என கேண்டிட் கேமெரா போல் பெரும்பகுதி எடுக்கப்பட்ட படம். கல்யாண மண்டபத்தில் சாப்பிடுவதற்க்காக உறவினர் என பொய் சொல்லி இருக்கிற எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டு செய்வார் டெல்லி கணேஷ். பின் உண்மை தெரிந்த உடன் அவரை சாப்பிட விடாமல் வெளியேற்றுவார்கள், எவ்வளவோ செலவு பண்ணி கல்யாணம் செய்பவர்கள். இந்தப் படத்தில் டெல்லி கணேஷின் நடிப்பு மிக அருமையாக இருக்கும். விசுவின் கம்பெனி நடிகர்கள் தங்கள் பங்கிற்க்கு வழக்கம் போல் நடித்த படம்.
சிவாஜி கணேசன்
சந்திப்பு, வெள்ளை ரோஜா ஆகிய படங்கள் நல்ல வெற்றியும், மிருதங்க சக்கரவர்த்தி ஓரளவு வெற்றியும், நீதிபதி முதலுக்கு மோசமில்லாமலும் போனது
ரஜினிகாந்த்
அடுத்த வாரிசு, தங்கமகன், பாயும்புலி,தாய் வீடு,துடிக்கும் கரங்கள் போன்ற டிரேட் மார்க் மசாலா படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.
கமல்ஹாசன்
சட்டம், தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய படங்கள் வெற்றி
விஜயகாந்த்
பி எஸ் வீரப்பா தயாரித்த சாட்சி படத்தின் மூலம் சரிந்து கிடந்த விஜயகாந்தின் மார்க்கட் நிமிர்ந்தது.
பிரபு
முந்தைய ஆண்டில் அறிமுகமான பிரபு தன் தந்தையுடன் இணைந்து சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்க சக்கரவர்த்தி,நீதிபதி போன்ற படங்களிலும், சூரக்கோட்டை சிங்கக் குட்டி, முத்து எங்கள் சொத்து, ராகங்கள் மாறுவதில்லை ஆகிய படங்களில் தனி ஹீரோவாகவும் நடித்தார்.
சிவகுமார்
அப்பாவி பணக்கார வாலிபனாக சாட்டை இல்லாத பம்பரம் படத்திலும், போலிஸ் இன்ஸ்பெக்டராக தங்கைக்கோர் கீதம் படத்திலும், இன்று நீ நாளை நான் படத்திலும் நடித்தார்.
சில்க்
முன்னர் குறிப்பிட்ட படங்கள் தவிர, சூரக் கோட்டை சிங்கக் குட்டியில் பிரபுவுக்கு ஜோடியாகவும், அடுத்த வாரிசு, பாயும் புலி படங்களில் கிட்டத்தட்ட ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார்.
43 comments:
Mee the first.. NHM not
working..sorry..!1
Thanks murali..
In 1983 both Vellai Roja&thanga magan directed by Mr A.jagannathan.
Two films Released Same day
1983 Diwali. both super hit.
Hassan Raja
நன்றி ஹசன்ராஜா.
அந்த தீபாவளி மறக்க முடியாதது ஏனென்றால் அதனுடன் தங்கைக்கோர் கீதம், மனைவி சொல்லே மந்திரம் மற்றும் சில படங்களும் வந்தன. (10 அல்லது 11 படங்கள் என நினைக்கிறேன்). ரஜினியின் தங்க மகனுக்கு திண்டுக்கலில் தியேட்டர் கிடைக்காமல் சற்று தாமதமாய் வெளியானது.
வழக்கம் போல் கலக்கல் பதிவு முரளி.
எப்படிதான் சேகரிக்கறீங்களோ இவ்வளோ தகவல்களையும்.
நன்றி நாடோடி இலக்கியன். சென்ற வெள்ளிக்கிழமை திருப்பூருக்கு வருவதாய் இருந்தது. உங்களையும் பரிசல்,வெயிலான், ஈரவெங்காயம் அனைவரையும் சந்திக்கலாமென்று இருந்தேன்.
எதிர்பாராத சிக்கலால் வர முடியவில்லை.
தூய வெள்ளையுடையில் டி.ஆர்ன் அறிமுகம். அதைப்பற்றி தனி இடுகை கொடுங்க தல..
//தங்கைக்கோர் கீதம் //
சூப்பர் ஹிட் படம் தல...,
சுரேஷ் டீ ஆருக்கே தனி இடுகை எழுதனும். தங்கைகோர் கீதத்தின் பாடல்களை மறக்க முடியுமா?
தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி, இது ராத்திரி நேரம்
பின்னர் ஒருமுறை பார்ப்போம்
தல, சலங்கை ஒலிய எப்படி விட்டீங்க???????
//மியுசிக்கல் சூப்பர் மார்க்கட் குன்னக்குடி வைத்தியநாதன் //
பின்ன?
கார்க்கி, சலங்கை ஒலி டப்பிங் படம்.
இதில் நான் சேர்த்துள்ள சில்க் சில்க் சில்க், போலிஸ் போலிஸ் ஆகியவையும் டப்பிங் படமென்றும் இருமொழி படமென்றும் கருத்து உள்ளது. பெரும்பாலானோர் இருமொழி படமென்றே (தமிழ்,டெலுகு) கூறியதால் சேர்த்தேன்.
ஆனால் சலங்கை ஒலி முழுக்க முழுக்க டப்பிங் படம்
வருகைக்கு நன்றி மகேஷ்
கங்காவோட "செயின் ஜெயபால்" கேரக்டர்ல் நடிச்சதால்தான் "காதல் அழிவதில்லை" படத்தில் " செயினு..செயினு.."
அப்டினு வசனம் பேசுவாரா டி.ஆரு..?
வழக்கம் போல Muralikannan is Rocking..!
படிக்க படிக்க புதுமையாக இருக்கிறது..
எல்லாமே அருமை..
வாங்க டக்ளஸ்ஸண்ணா,
அப்ப பார்க்கும் போது செயின் ஜெயபால் ஒரு பிரமிப்பு. இப்போ பார்த்தா பெரும் சிரிப்பு
படிக்க படிக்க புதுமையாக இருக்கிறது..
எல்லாமே அருமை..
வருகைக்கு நன்றி லோகு
மௌலியின் ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என் ஆல் டைம் பேவரிட்...
நல்ல பதிவு முரளி.. சென்னையில் உள்ளீர்கள் உங்கள் செல்பேசி நீங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பார்பட்டுள்ளதாக சொல்லுகிறது ஒரு வாரமாக உங்களை அழைத்துக்கொண்டிருக்கிறேன்
அக்னிபார்வை, என்னுடைய அலைபேசி பழுதாக உள்ளது. மாலை சரியாகிவிடும் என நினைக்கிறேன்.
இன்று நீ நாளை நான் படத்தின் பாடல்கள் இளையராஜாவின் அற்புதம்..
அப்ப நான் பொறந்த வருஷம் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப லக்கின்னு சொல்லுங்க:)
வாங்க கேபிளாரே, நலமா?
வித்யா தமிழ்சினிமாவுக்கு லக்கி, இந்தியாவுக்கு உலக கோப்பை இப்போ பதிவுலகுக்கும்தான்.
வழக்கம் போல் கலக்கல் பதிவு முரளி.
எப்படிதான் சேகரிக்கறீங்களோ இவ்வளோ தகவல்களையும்
//தோடிராகம்
மியுசிக்கல் சூப்பர் மார்க்கட் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த படம். ஜனரஞ்சகமாக தனக்கு இசையமைக்கத் தெரியும் என காட்ட அவர் போட்ட பாடல் கொட்டாம் பட்டி ரோட்டிலே ஹே ஹே குட்டி போற ஷோக்கிலே ஹே ஹே. படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறந்து போனாலும் பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது.//
இசை மட்டுமல்ல. இயக்கம் தயாரிப்பும் குன்னக்குடியே. படத்தின் ஹீரோவாக நடித்த சேஷகோபாலன் ஒரு பிரபல சங்கீத வித்வான்.
ஒரு முறை டிடியில் பார்த்தேன். படா பேஜாராப் பூடிச்சி நைனா.
சின்னப்பையன் தங்கள் வருகைக்கு நன்றி.
ஆமாம் லக்கி அந்தப் படத்தை முழுதாகப் பார்ப்பது மகா கொடுமை. தோடிராகம் போட்டி என்று பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் சப்பென்று போய்விட்டது
///கொட்டாம் பட்டி ரோட்டிலே ஹே ஹே குட்டி போற ஷோக்கிலே///
இந்த பாடலுக்கு லின்க் இருக்குமா?
//அப்ப நான் பொறந்த வருஷம் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப லக்கின்னு சொல்லுங்க//
சைக்கிள் கேப்புல எப்படி லாரி ஓட்டறாங்க பாருங்க சகா.. கொ.ப.செ.. நடக்கட்டும் நடக்கட்டும்..
நீங்க பிறந்த வருஷம் தான் ரஜினி அறிமுகமானாரு. தெரியுமா?
நானும் சலங்கை ஒலி எப்படி மிஸ் பண்ணி விட்டீர்கள் என்று யோசித்தேன். விளக்கம் இருந்தாலும், திருப்தியாக இல்லை. கமலின் மயில்கல் படமல்லவா அது.
எத்தனை தகவல்கள். எப்படி சேகரிக்கிறீர்கள் முரளி? அட்டகாசம். தொலை பேசியதற்கு .... நன்றி.
அனுஜன்யா
ம்... பழைய நினவுகளோடு சஞ்சரிக்க வைத்து விட்டீர்கள். புருடென்ஷியல் கப் மேட்ச்சில் இருந்து பார்த்த படங்களெல்லாம் நினவுக்கு வந்தன.
சிவக்குமரன், முயற்சிக்கிறேன்.
கார்க்கி, அவங்க சைக்கிள் கேப்பில கப்பலயே ஓட்டக்கூடியவங்க. கொ ப செ ன்னா சும்மாவா?
அப்புறாம் எப்போ ராம்னாட் பயணம்?
அனுஜன்யா, சலங்கை ஒலியில் தவறி விட்டேன் என நினைக்கிறேன். கூடிய விரைவில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப் ஆகி வந்த கமல் திரைப்படங்கள் ஒரு பார்வையில அதை சேர்த்துடுறேன். (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, சிப்பிக்குள் முத்து, பாசவலை எல்லாத்தையும் சேர்த்துடுறேன்)
மாதவராஜ் தங்கள் வருகைக்கு நன்றி.
செம்ம.. பதிவு.!
மாதவராஜ் said...
ம்... பழைய நினவுகளோடு சஞ்சரிக்க வைத்து விட்டீர்கள்
//
எல்லாரும் பாத்துக்கங்க.. பெர்சுன்னு நான் சொல்லலை..
அப்படியே எங்க ஊருக்கும் வாங்க!
http://www.ensaaral.blogspot.com/
நன்றி ஆதி.
வருகிறேன் ஸ்டார்ஜான்
எப்படித்தான் உங்களால மட்டும் முடியுதோ....
சலங்கை ஒலி டப்பிங் படமென்றாலும் மறக்க முடியாத படம்..
குறிப்பாக இளையராஜாவுக்காக பதிவு செய்திருக்கலாம். காலத்தால் மறையாத பாடல்கள்..
நன்றிகள் பல...
//ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது//
ஆறிலிருந்து அறுபது வரை, பௌர்ணமி அலைகள், பொய்க்கால் குதிரை,
போன்ற கவித்துவமான தலைப்புகளை தற்காலத்தில் இழந்து விட்டோமே என்று தோன்றுகிறது (பார்த்திபன் தான் அவ்வப்பொழுது தலைப்பில் கவனம் செலுத்துகிறார்)
மற்றப்படி அயன், படையப்பா போன்ற தலைப்புகளை எந்த படத்திற்கு வேண்டுமானாலும் வைக்கலாம்
வருகைக்கு நன்றி தீப்பெட்டி
ஆமாம் புருனோ, மௌன ராகம், முள்ளும் மலரும், ஒரு தலை ராகம் ஆகியவை பெயரிலேயே கதையைச் சொல்லும் அளவுக்கு அமரத்துவம் பெற்ற தலைப்புகள்
தலே.. கொஞ்ச நாளா நம்மை படுத்தி எடுத்துட்டாங்க. அதனாலே கொஞ்சம் உங்களை எல்லாம் கவனிக்க முடியாமே போயிட்டு, அதாவது பின்னூட்டம் மூலமா. மற்றபடி பதிவை படிச்சிருவேன்.
I am back.
நன்றி நையாண்டி நைனா.
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்
As usual, an excellent post...kalakitteenga...a couple of tidbits...
Comedian Charlie was introduced in the movie Poi Kaal Kuthirai...also, I believe K.B. acted in this movie..this was his first appearance in a movie directed by himself...Ganga was called as Chinna Kamal :-)). Remember reading an article that whoever was called as Chinna[Kamal, Kalaivaanar etc.,] were routed. Kuladeivam Rajagopal, Suruli Rajan, Ganga were examples for that.
//காட்டு வழி போற பொண்ணே//
செம பாட்டு
arumai arumai
சென்னைவாசி, தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி.
கிரி,கானாபிரபா தங்கள் வருகைக்கு நன்றி
//சந்திப்பு, வெள்ளை ரோஜா ஆகிய படங்கள் நல்ல வெற்றியும், மிருதங்க சக்கரவர்த்தி ஓரளவு வெற்றியும், நீதிபதி முதலுக்கு மோசமில்லாமலும் போனது //
FYI - Vellai Roja was 100 days movie ,whereas Neethipathi was a silver jublee movie (you said it is just no loss)
Murali sir, Mohan's movie Payanangal mudivathillai also realeased in the same year right. Its a good movie. Also, you have missed Sivappu suriyan movie of Thalaivar. Was that a flop movie?
Post a Comment