முதல் பகுதி
இரண்டாம் பகுதி
நேற்றுதான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர் ஆனாலும் சரி நாற்பது ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பவர்களாய் இருந்தாலும் சரி, மைதானத்தில் நடக்கும் இரண்டே விஷயங்களுக்குத்தான் அவர்களை மீறிய ஆஹாகாரம் வெளிப்படும். ஒன்று பேட்ஸ்மென் அடிக்கும் அடியில் பந்து மைதானத்தை தாண்டி பறக்கும் போது மற்றொன்று பேட்ஸ்மென்னின் மிடில் ஸ்டெம்ப் விக்கெட் கீப்பரைத் தாண்டி பறக்கும் போது.
நம் நாட்டில் முதல் சாகஸத்தை செய்ய ஒரு கூட்டமே இருக்கிறது. ஆனால் இரண்டாவதைச் செய்ய?. தேர்வாளர்கள் கூட நம் நாட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையை 30 ஆண்டுகளுக்கு முன்னால் வைத்திருந்தார்கள். அதனல் தான் கோச்சிங் கேம்பில் கபில்தேவ் என்ற இளைஞன் எனக்கு நான்கு சப்பாத்தி போதாது, நான் வேகப்பந்து வீச்சாளன், எனக்கு அதிக சக்தி தேவை, அதற்கேற்ற உணாவு கொடுங்கள் என்று கேட்டதற்கு சிரித்து அவமானப்படுத்தினார்கள். இன்னும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் 150 கிமீ வேகத்தில் ஒருவர் பந்து வீசுகிறார் என்ற செய்தி வருகிறது. அதைவிட வேகமாய் அவரது வேகம் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்று விடுகிறது.
1.கபில்தேவ்
தன்னுடைய வேகத்தால் முதல் சில ஆண்டுகளும், நேர்த்தியான அவுட்சுவிங்கர்களால் பல ஆண்டுகளும் பேட்ஸ்மென்களை மிரட்டியவர். தன்னுடைய உச்சக்கட்ட பார்மில் இருந்த முதல் பத்தாண்டுகளில் இணையாக பந்து வீச ஆளில்லாமல் அவதிப்பட்டவர்.
டென்னிஸ் லில்லி-தாம்சன், அக்ரம்-யூணுஸ், அம்புரோஸ்- வால்ஷ், டொனால்ட்-போலக் என இணையான வீரர்கள் பந்து வீசும்போது எதிர் அணிக்கு மிகுந்த நெருக்கடி கிடைக்கும். கபில்தேவுக்கு அப்படி யாரும் கிடைக்கவேயில்லை.
ரோஜர் பின்னி ரேஷன் கடை துவரம் பருப்பு போல. நல்ல தண்ணி, காப்பர் பாட்டம், கேஸ் ஸ்டவ் என எல்லாம் சாதகமாக இருந்தால் தான் அவர் பருப்பு வேகும். அதனால்தான் வெளிநாட்டு ஆடுகளங்களில் பிரகாசித்த அளவுக்கு உள்ளூரில் அவர் பிரகாசிக்கவில்லை.
இன்னொரு துணையாக இருந்த மதன்லாலைப் பற்றி ரிச்சர்ட்ஸின் கமெண்ட்
"ஆப் ஸ்பின் போடுபவர்களிலேயே அதிக தூரத்தில் இருந்து ஓடி வந்து போடுபவர்"
85 ஆம் ஆண்டு வாக்கில் வந்த சேட்டன் சர்மா வேகமாக இருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சார்ஜாவில் போட்ட புல்டாஸில் மனம் உடைந்து போனார்.
இந்தியாவில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் பிறந்து அவர் 434 டெஸ்ட் விக்கெட் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
2.மனோஜ் பிரபாகர்
86 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி நம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, அக்ரம் ஸ்ரீகாந்தின் நெற்றியைப் பிளந்து விட, அந்த இடத்தில் துவக்க ஆட்டக்காரராக இறங்கியவர் இவர். பின்னர்தான் தெரிந்தது இவர் வேகப்பந்து வீச்சாளர் என்று. 89ஆம் ஆண்டு நம் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் இவரது பொடென்சியல் வெளியே தெரிந்தது. ஒரு பந்து வீச்சாளர் எதிரணி ஆட்டக்காரர்களுக்கு டெரராய் இருக்கிறார் என்பதை உணர்த்த பல அளவுகோல்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று இருக்கிறது. அது பந்தை எறிகிரார் என எழும்பும் குற்றச்சாட்டு.
அக்தார்,முரளிதரன்,ஹர்பஜன் என முண்ணனி வீரர்களை குறித்துத்தான் இந்த குற்றச்சாட்டு கிளம்பும்.
அந்த அளவுகோலின் படி பார்த்தால் மனோஜ் இம்ரான்,மியான்டாட் வாயால் எறிகிறார் என குற்றம் சாட்டப்பட்டவர். எனவே அவரும் ரவுடிதான். பழைய பந்தை ஸ்விங் செய்வது எப்படி என எனக்கு கற்றுக் கொடுத்தவர் மனோஜ்தான் என கபில்தேவே ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.
அந்த தொடர் சம்பந்தமான கட்டுரை ஒன்றில் இந்தியா டுடே இதழ் இப்படி சொல்லியிருந்தது "மனோஜ் : தாமதமாக மலர்ந்த தாமரை". அசாருடன் மோதல், புக்கி விவகாரம், ஜெயசூர்யாவால் ஸ்பின்னராக மாற்றப்பட்டது என பல சர்ச்சைகளால் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.
இருந்தாலும் நல்ல் இன்ஸ்விங்கர் என்ற முறையில் போட்டியில் இருக்கிறார்.
3. ஜவகல் ஸ்ரீநாத்
பேட்ஸ்மென்கள் குட்டையாய் இருந்தாலும் பரவாயில்லை, பவுலர்களும் குட்டையாய் இருக்கும் அணி நம் அணிதான் என்று ஒரு கேலிப் பேச்சு இருக்கும். ஆறடிக்கு மேல் உயரத்துடன், ஒல்லியான உடல் வாகுடன் வந்த ஸ்ரீநாத் அந்தக் குறையைப் போக்கினார். அவர் உள்ளே நுழையும் போது கபில் தன் இறுதிக்கட்டத்தில் இருந்தார். மனோஜ் மட்டும் துணையாக இருந்தார். இவர்கள் சென்ற உடன் முழுச்சுமையும் இவர் தோளில் விழுந்தது. வெங்கடேஷ் பிரசாத் ஓரளவுக்கே துணை நின்றார். இவர் பந்து வீச்சின் மூலம் சில டெஸ்ட் வெற்றிகளை இந்தியா பெற்றது.
தெண்டுல்கர் கேப்டன் ஆனது இவருக்கு வினையானது. அவர் ஸ்ரீநாத்தை அதிகம் உபயோகப்படுத்தி படுத்தி விட்டார். ஷோல்டர் இஞ்சுரியால் விரைவாகவே ஓய்வு பெற்றுவிட்டார்.
4. ஜாகிர்கான்
எனக்கு பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர்களைக் கண்டாலே பொறாமையாய் இருக்கும். சர்பராஷ் நவாஸ் காலத்தில் இருந்தே அவர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்து வருகிறார்கள். கல்லூரியில் என் ஆதர்சம் வாசிம் அக்ரம் தான். ஹம் ஆப்கே
ஹெயின் கோன் படம் பாகிஸ்தானில் ஹிட் ஆன போது அவர்கள் பாடிய மாதுரி தீக்ஸித்தைக் கொடுத்து விட்டு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் (மாதுரி லேலோ காஷ்மிர் ... என என்னவோ இந்தியில் வரும்.மறந்து விட்டது) என்ற வரிகளை மாற்றி நாங்கள் வாசிமை கொடுங்கள் காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் என பாடுவோம்.
வாகர் யூணிஸ் இங்கிலாந்தில் தன் பந்து வீச்சால் கலக்கிக் கொண்டிருக்கும் போது ஹென்றி புளோபீல்ட் அடித்த கமெண்ட் " த லைட் கெட்டிங் டார்க்கர் அண்ட் டார்க்கர், வக்கார் கெட்டிங் பாஸ்டர் அண்ட் பாஸ்டர்" . அதைக் கேட்டுவிட்டு இங்கே ஒரு ஆள் இப்படி வரமாட்டானா என ஏங்கியதுண்டு.
ஜாகிர் அந்தக்குறையை ஓரளவுக்கு தீர்த்தவர் என்று சொல்லலாம். இந்தியார்களும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்கள் என்று அழுத்தம் திருத்தமாக காட்டியவர். பிட்னஸ்ஸில் மட்டும் நிறைய கவனம் எடுத்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரகாசித்திருக்கக் கூடியவர்.
5. இஷாந்த் ஷர்மா
இவர் வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கவனமாகக் கையாளப்பட்டால் பெரிய உயரங்களுக்கு செல்லும் திறமை வாய்ந்தவர். சமகால வேகப்பந்து வீச்சாளர்களில் பிளிண்டாபுக்கு அடுத்து ரிக்கி பாண்டிங்கை திணற வைத்தவர் இவரே. மூன்று பார்மட் தவிர ஐபிஎல் என சகட்டுமேனிக்கு விளையாடியதில் டயர்ட் ஆகிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அதுவும் கல்கத்தா ஐபிஎல் டீம் இவரை டீமாரலைஸ் செய்து விட்டதைப்போலவே எனக்குத் தோன்றும். உயரமும், பத்து ஓவர் வீசினாலும் டயர்ட் ஆகாத உடல்திறனும் அமையப்பெற்ற பந்து வீச்சாளர்.
ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் இன்சுவிங் யார்க்கர் வீசுவது கூடுதல் பலம்.
பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த இரு வேகப் பந்து வீச்சாளர்களைத் தெரிவிக்கலாம்.
சென்ற பதிவின் பின்னூட்டங்களின் படி துவக்க ஆட்டக்காரர்களாக தேர்வு பெற்றவர்கள்
1.சுனில் கவாஸ்கர்
2.விரேந்திரா சேவாக்
பின்னூட்டத்தில் தங்கள் தெரிவைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
29 comments:
கபில் பற்றிய உங்கள் கருத்துக்கள் சரியானவையே. அவரின் சாதனையை ஸ்ரீநாத் முறியடிப்பார் என நினைத்தால் ஸ்ரீநாத்தோ இரண்டு பால்கள் போட்டபின்னர் களைத்துச் சோர்ந்துவிடுகின்றார். கபிலின் ஆக்ரோசம் மனோஜ் பிரபாகரிடம் கொஞ்சம் இருந்தது.
இஷாந்த் இப்போதுதான் வந்திருக்கின்றார் பொறுத்திருந்துபார்ப்போம்.
என் தெரிவு கபிலும் மனோஜ் பிரபாகரும் தான்.
ஸ்ரீநாத் பற்றி நீங்கள் எழுதியது அவர் ஏதோ பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவும் ஒன்று என்கிற ரேஞ்சில் இருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்தியாவின் genuine fast bowler அவர் ஒருவர்தான். இப்போது இஷாந்த். Home test series களில் ஸ்ரீநாத் ஆடுவதற்கு தலை கீழாக நிற்க வேண்டியிருந்தது. போதாக் குறைக்கு நமது புகழ் பெற்ற ஸ்லிப் கேட்ச்சிங். இந்தியா அநியாயமாக தவற விட்ட வாய்ப்பு இவர். இவருடைய பந்துவீச்சில் லாராவுக்கு மட்டுமே நம்மவர்கள் 20-30 கேட்ச் விட்டிருப்பார்கள்.
வந்தி, உங்க கமெண்ட் பார்த்தேன். ஆரம்பத்தில் ஸ்ரீநாத் ஒடிசலான தேகத்தில் அவர் அப்படித் தோற்றம் அளித்தது உண்மைதான். பிறகு, Expert Advice படி, மாமிச உணவு உண்ணத் துவங்கி, long spells போடத் துவங்கினார். நீங்கள் கூறிய மற்றொரு விஷயம் முற்றிலும் உண்மை. ஸ்ரீநாத்துக்கு ஆக்ரோசம் போதாது. பௌன்சர் போட்டுவிட்டு நக்கலாக முறைப்பதை விட்டுவிட்டு, 'சாரிபா, மன்ச்சுக்கோ' என்ற முகபாவம் காட்டுவார் :)
ஆயினும் என்னுடைய சாய்ஸ் : கபில் & ஸ்ரீநாத்
அனுஜன்யா
ஸ்ரீநாத் மற்றும் ஜாகிர்..
கபில், செல்க்ட் செய்யலாம். ஆனல் இவர்கள் இருவர் காம்பினேஷன் நன்றாக எடுபடும் என்று நினைக்கிறேன்
ஸ்ரீநாத்தின் வேகம் 130-135 என்றுதான் காட்டும். அவரின் லென்த் தான் காரணம். கொஞ்சம் ஃபுல் லென்த் போட்டால் 145 ஆக காட்டும்
என்னைப் பொறுத்தவரை ஸ்ரீநாத்தான் பெஸ்ட்..
கபிலும் ஸ்ரீநாத்தும்
மனோஜ் பிரபாகர் என்றவுடன் எனக்கு வேறெதையும் விட அந்த இரண்டு ஓவர்களுக்கு முப்பத்திரண்டுதான் ஞாபகம் வருகிறது, அவரை ஆல் ரௌன்டர் ஆக இணைக்கலாம்
//ஸ்ரீநாத்துக்கு ஆக்ரோசம் போதாது. பௌன்சர் போட்டுவிட்டு நக்கலாக முறைப்பதை விட்டுவிட்டு, 'சாரிபா, மன்ச்சுக்கோ' என்ற முகபாவம் காட்டுவார்//
என்னய்யா ஆக்ரோஷம் பத்தாது
ஒருமுறை லங்கா தே சில்வாவின் பல்லைப் பதம் பார்த்த பின் அவர் அணிக்கே திரும்பவில்லை. சனத் மண்டையில் ஒருமுறை போட்டாரே போடு
நன்றி வந்தியதேவன்.
நன்றி அனுஜன்யா. ஸ்ரீநாத்தை என்றுமே குறைத்து நான் மதிப்பிட்டதில்லை. அவருக்கும் சரியான இணை அமையவில்லை என்ற தொனியில்தான் எழுதியிருந்தேன். சச்சின் அவரை எக்ஸ்பிளாய்ட் செய்ய காரணமே ஸ்ரீநாத்தின் திறமைதானே?
நன்றி கார்க்கி
நன்றி தர்ஷன்
Srinath and Zaheer. Imran should be the bowling coach. Imran always rated Srinath very high. He compared Srinath with Akram and Waqar. He felt that Kapil should have coached him to the best bowler.
கிரிக்கெட் வீரர்களின் நல்ல அறிமுத்தோடு கூடிய விமர்சனம்
நல்ல அருமையான தகவல்கள்
நன்றி மோகன்
manoj prapakar and zaheer
சில புகைப்படங்களையும் இடலாம் முரளி.
புதிதாக வாசிப்பவருக்கு உதவியாக இருக்கும்.
தொடருங்கள். அருமை.
கும்ளேவை இந்த வரிசையில் சேர்க்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.
//. போதாக் குறைக்கு நமது புகழ் பெற்ற ஸ்லிப் கேட்ச்சிங். //
இது மட்டும் ஒழுங்காக இருந்திருந்தாலே நமது பந்துவீச்சாளர்கள் இன்னும் அதிக விக்கெட்டுகளை களட்டி இருப்பார்கள்..,
//அதுவும் கல்கத்தா ஐபிஎல் டீம் இவரை டீமாரலைஸ் செய்து விட்டதைப்போலவே எனக்குத் தோன்றும். //
போல் அல்ல தல.. அதுதான் உண்மை
டெண்டுல்கர் தலைமையில் இடம்பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர்களையும் அவர்களது வேகத்த்தையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுங்கள் தல..,
அண்ணே பேரெல்லாம் ஒகே தான் அப்படியே அவங்க பதிவுகளுக்கும் லிங்கு கொடுத்தா புண்ணியமா போகும்...
கிரிக்கெட் தெரியும். ஆனா இந்த அளவுக்கு புள்ளி விபரமெல்லாம் தெரியாது. பகிர்வுக்கு நன்றி
இங்க இருக்குறவங்கள்லயே ஸ்ரீநாத்தான் நமக்குப் பிடிக்கும்.
அப்றம் எங்க தலயப் பத்தி ஏன் எழுதல?
http://citycricketers.files.wordpress.com/2009/11/sreesanth.jpg
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி தன்ஸ்
நன்றி வணத்துப்பூச்சியாரே
நன்றி சுரேஷ்
நன்றி நையாண்டி நைனா
நன்றி உழவன்
நன்றி அதிபிரதாபன். ஸ்ரீசாந்த் எஸ் எம் எஸ் எல்லாம் படிச்சிருக்கீங்களா?. அதவிட பேக் ஐபிஎல் பிளேயர் பிளக்குல கலாய்ச்சிருப்பான் பாருங்க. அல்டிமேட்
ஜாகிர்கான் மற்றும் கபில்
அண்ணே,
sms பாத்துருக்கேன்... அந்த பிலாக் பாத்ததில்ல, லிங்க் குடுங்க.
என்னுடைய சாய்ஸ்
கபில் தேவ்
ஜாகிர் கான்
கபில் தேவ்
ஜாகிர் கான்
ஸ்ரீநாத்--ஜாகிர் கான்
anna... kapil dev all rounder list la vandhuramaatar...???
enoda team-la avar all-rounder... bowlers-ah zaheer-um, Srinath-um irupaanga... :)
கபில் தேவ்
ஜாகீர் கான்
My Choice is,
Ajith Agarkar.
Abhay Guruvilla
தமிழகத்தைச் சேர்ந்த டி.ஏ சேகர் சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ஏனோ தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறவில்லை.
Post a Comment