November 24, 2009

இந்தியா ஆல் டைம் லெவென் பகுதி 2 துவக்க ஆட்டக்காரர்கள்

முதல் பகுதி இங்கே

இந்திய ஆல் டைம் டெஸ்ட் அணிக்கு யார் துவக்க ஆட்டக்காரர்கள்?

துவக்க ஆட்டக்காரர்களுக்கும் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்? முதல்
பந்தில் ஓப்பனர் அவுட் ஆகிவிட்டால் உடனே நம்பர் த்ரி உள்ளே வந்து விடுகிறாரே?

நிச்சயம் இருக்கிறது.

துவக்க ஆட்டக்காரர் உள்ளே நுழையும் போது (அது எந்த இன்னிங்ஸாக இருந்தாலும்) வேகப்பந்து வீச்சாளர்கள் தன் முழு ஆற்றலுடன் இருப்பார்கள். அனலைக் கக்குவார்கள். அவர்களை சமாளிக்க வேண்டும். பந்தும் புதிதாக இருக்கும். அருமையாக ஸ்விங்கும் ஆகும். எனவே நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்க வேண்டும்.

பிட்ச் எந்த கண்டிஷனில் இருக்கிறது என்று தெரியாது. எவ்வளவு எம்பும்? இல்லை தாழும் எனத் தெரியாது.விக்கெட் விழாமல் ஆட வேண்டும்.

முதல் இன்னிங்ஸில் எதிர் அணி இரண்டு நாட்கள் ஆடி கடைசி நாலு ஓவர் மட்டும் கொடுக்கும் போது, பேடைக் கட்டிக்கொண்டு போய் நிற்க ஸ்டாமினா வேண்டும். விக்கெட் கொடுக்காமல் ஆட கான்சண்ட்ரேஷன் வேண்டும். ஆனால் பவுலர் பிரெஷாக இருப்பார்.

இதுமாதிரியான சிக்கல்களினால் தான் அது ஸ்பெஷலிஸ்ட் பொசிஷனாக கருதப்படுகிறது.

71ல் இருந்து நம் அணியில் ஆடிய துவக்க ஆட்டக்காரகளில் யாரை தேர்ந்தெடுக்கலாம்?

1. சுனில் கவாஸ்கர்

பேட்டிங் ஆவரேஜ் 50க்கு மேல். 10000ஐ முதன் முதலில் பார்த்தவர். 34 சதத்தையும்
முதலில் பார்த்தவர். வேகப் பந்து பிசாசுகளான ஆண்டி ராபர்ட்ஸ்,மைக்கேல் ஹோல்டிங்,கார்னர் மற்றும் மார்ஷல் போன்றோரை அனாசியமாக ஆடியவர். ஸ்விங்கில் வல்லவர்களான லில்லி,ஹேட்லி, போத்தம் ஆகியோரையும் இம்ரான்,அக்ரம் போன்ற வல்லவர்களையும் எளிதாக எதிர் கொண்டவர்.

நீ வேகமாப் போடு. அப்பதான் எனக்கு ஈஸி. தட்டி விட்டாலே போர் போயிடும் என்று அவர்களைப் பார்த்து சிரித்தவர்.

கவாஸ்கர் ஸ்டம்புக்கும், மிட் ஆனுக்கும் இடையே உள்ள 'வி' யில் பந்துகளை அருமையாக ட்ரைவ் செய்வார். பவுலரும் தொட முடியாது, மிட் ஆன் பீல்டருக்கும் வாய்ப்பிருக்காது. இது எப்படி எனக் கேட்ட போது அவர் சொன்னது

“ நான் தெருவில் விளையாடும் போது மிட் ஆனில் இரண்டு கார்கள் நிற்கும். அந்த கண்னாடியில் அடிக்கக் கூடாது என்பதற்காக அந்த வி யில் அடித்தே பழகினேன்”. என்றார்.

ஸ்பின்னர்களையும் தெளிவாக ஆடுவார்.நல்ல ஸ்லிப் பீல்டரும் கூட.


2. எம் எல் ஜெயசிம்மா


அசாருதீனுக்கும் லட்சுமணனுக்கும் உள்ள ஒற்றுமை ஹைதராபாத் அணி மற்றும் ரிஸ்டி பிளே. அந்த மணிக்கட்டு திருப்பு ஆட்டத்துக்கும்,லெக் ஸ்டம்பில் போடும் பந்தை நோகாமல் தட்டி பவுண்டரிக்கு அனுப்பும் ஸ்டைலுக்கும் குரு இவர்தான். இவரும் ஹைதராபாத் தான். இவரது லெகஸிதான் அசாருக்கும் பின் லட்சுமணனுக்கும் வந்தது. இவர் முதலில் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்தான். ஆனால் நமது அணியில் மிடில் ஆர்டருக்கு எப்போதும் இருக்கும் அடிதடியால் மேக்‌ஷிஃப்ட் ஓப்பனர் ஆகி பின் அதையே நிரந்தரமாக்கிக் கொண்டவர். அப்பொதைய அணியில் பிரசன்னா,வெங்கட்ராகவன்,பேடி,சந்திர சேகர் போன்ற ஸ்பின் ஜாம்பவான்கள் இருந்ததால் மித வேகப் பந்து வீசும் இவரையே துவக்க பந்து
வீச்சாளாராக உபயோகப் படுத்தினார்கள். ஓப்பனிங் பேட்டிங், ஓப்பனிங் பவுலிங் என வாழ்ந்தவர்.

அதன்பின் இலங்கையின் ரவிரத்னாயகே வும்,நம் மனோஜ் பிரபாகரும் அந்த வாழ்வை அனுபவித்தவர்கள்.

3. சேட்டன் சௌகான்

செஞ்சுரியே அடிக்காமல் 40 டெஸ்ட் ஆடியவர். ஆனால் கவாஸ்கருக்கு நல்ல துணையாக விளங்கியவர். கவாஸ்கர் ஒருமுறை இந்திய கனவு அணியை தேர்வு செய்த போது இவரைத்தான் துவக்க ஆட்டக்காரராக தேர்வு செய்தார். (இன்னொருவர் கவாஸ்கரேதான்). இவர் எப்படி ஆடுவார் என பார்க்க வேண்டுமென்றால் ஸ்டார் டிவியில் கிளாசிக் தொகுப்பில் பார்க்கலாம். ஆனால் அகால வேளையில் போடுகிறார்கள்.

நான் விளக்குமாற்றை கிரிக்கெட் பேட்டாக கற்பனை செய்து ஆடி அம்மாவிடம் திட்டு வாங்கினேன். கல்யாணத்தன்று கிப்ட் கொடுத்த நண்பனிடம் ஸ்கோர் என்னாச்சு என்று மணமேடையில் கேட்டு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போது கிரிக்கெட் பார்க்க கார்ட்டூனை மாத்தாதே என மகனிடமும் திட்டு வாங்குகிறேன். மூன்று தலைமுறையும் என்னை கிரிக்கெட் பார்க்க விடாமல் சதி செய்கிறது.
சௌகான் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

4. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

ஒரு முறை அரசு பதிலில் எஸ் ஏ பி (ஐராசு,ராகிரா வாகவும் இருக்கலாம்) சொன்னது, “ ஸ்ரீகாந்த் அடிச்சா நாமே அடிச்சமாதிரி இருக்கும்”. அது உண்மைதான். சராசரியை விட அதிக அகலத்துக்கு காலை அகட்டி நிற்பதும், மூக்கை உறிஞ்சிக்கொள்வதும்,சூரியனை பார்ப்பதும், ரெஸ்ட்லெஸாக லெக் அம்பயரை நோக்கி நடப்பதும் சிரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்டி ராபர்ட்ஸை அவர் அடித்த ஸ்கொயர் ட்ரைவ் இன்னும் கண்ணுக்குள் தான் இருக்கிறது.

சார்ஜாவில் மார்ஷலை முதல் பந்தில் மிட்விக்கெட்டில் சிக்சரும், அடுத்த பந்தில் ஸ்கொயர்கட்டில் போரும் அடித்தவுடன், ஸ்லிப்பில் நின்ற ரிச்சர்ட்ஸ் காலில் வென்னீரைக் கொட்டியதுபோல் மார்ஷலிடம் ஓடினார். மார்ஷல் வாழ்க்கையிலேயே கேப்டனிடம் சுடு சொல் வாங்கியது அந்த ஒரு சந்தர்ப்பத்திலாகத்தான் இருக்கும்.

சிட்னியில் ஸ்ரீகாந்த் அடித்த 123ம், சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த் 123ம் தான் அவர் செஞ்சுரிகள். ஆனால் இரண்டும் பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டவை.

5. நவ்ஜோத் சிங் சித்து


மே இந்திய தீவுக்கு எதிராக அங்கே போய் 201 அடித்தாலும், இந்தியாவில் சில செஞ்சுரிகள்
அடித்திருந்தாலும் இவருக்கு ஒரு வீக்னெஸ் இருக்கிறது.

நல்ல லெங்த்தில் போடப்பட்டு வேகமாக இன்கட் ஆகி உள்ளே வரும் பாலை ஆட மிகவும்
சிரமப்படுவார். பெரும்பாலான முறை இம்மாதிரி பந்துகளில் அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஸ்பின்னர்களை ஆடுவதில் கிங்.

6. விரேந்திர சேவாக்


ஜெஃப்ரி பாய்காட் துவக்க ஆட்டக்காரர் என்றாலே வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போய் விடுவார்கள்.அப்படி ஒரு கட்டை பார்ட்டி. ரன் அடிப்பதில் அவருக்கு சந்தோஷமில்லை. நங்கூரம் பாய்ச்சி நிற்பதில் தான் ஆசை. காமம் இல்லாத காதல்தான் பாய்காட்டின் சாய்ஸ். நம்மாள் இவருக்கு ஆப்போசிட் பார்ட்டி. இவரைக் கண்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போவார்கள். அடிக்கும் அடி அப்படி. நிற்பதில் ஆசை இல்லை.

சேப்பாக்கத்தில் இவர் அடித்த 300ன் போது தென் ஆப்பிரிக்க கோச் சொன்னது “எங்களிடம் இருந்த எல்லா அஸ்திரத்தையும் ஏவி விட்டோம், எங்களுக்கு தெரிந்த எல்லா வியூகத்தையும் அமைத்து விட்டோம், முடியவில்லை”.

ஆனால் இவர் யாரும் எதிர் பார்க்காத பந்தில் அவுட் ஆகி அவர்கள் நெஞ்சில் பாலை வார்ப்பார்.

இவரது ஆவரேஜும் 50க்கு மேல். இன்று (24-11-09) அடித்த சதத்துக்கு முன்னால் அடித்த
கடைசி 15 சதமும் 150 க்கு மேல்தான்.

இவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் ஆக இருந்து மேக் ஷிஃப்ட் ஓப்பனாராக மாறியவர் (உபயம் :கங்குலி)

7. கவுதம் காம்பீர்

கணவனின் சம்பாத்தியத்தில் திருப்தி அடையாத சராசரி இந்திய மனைவியின் மனநிலையில்
இருப்பவர் இவர். எவ்வளவு ரன் அடித்தாலும் திருப்தி இருக்காது. ரன் வெறி கொண்டவர்.
செஞ்சுரி அடித்து விட்டு வந்தாலும் கமாண்ட்ரேட்டரிடம் சிரிக்க மாட்டார். கடைசி ஒன்பது மேட்சுகளில் ஏழு சென்சுரி. இந்த மேட்சோடு சேர்த்து (24-11-09) தொடர்ந்து நாலு மேட்ச் சென்சுரி. நல்ல டெம்பெர்மெண்ட். ஸ்பின்னர்களையும் அனாயாசமாக ஆடக்கூடியவர்.

தனது பார்மை அப்படியே டீமுக்கு உபயோகமாக திருப்பக் கூடியவர்.

இந்த ஏழில் இருந்து இருவரை தேர்ந்தெடுங்கள் கண்மணிகளே.

28 comments:

Karthikeyan G said...

mY cHOICE IS..
6. விரேந்திர சேவாக்
1. சுனில் கவாஸ்கர்

முரளிகண்ணன் said...

நன்றி கார்த்திகேயன்

Ravi said...

சேடன் சௌஹான் - off டிரைவ் நன்றாக ஆடுவார். நிறைய 50 கள்.
Boycott பற்றி - இவருக்கு ஹோல்டிங் போட்ட ஒரு ஓவர் ரொம்ப பிரசித்தம். (Youtube ல் கிடைக்கும்). முதல் 5 பால் தடவோ தடவு (edge , lbw appeal என்று). 6 வது பாலில் அவுட். அந்த ஓவரை பற்றி Boycott பின்னர் சொன்னது -
I played terrribly. Any other good player would have lasted just one ball.
என் சாய்ஸ் - கவாஸ்கர், சேவாக்

- ரவி

பாலா said...

இன்னாங்க இது..? நர்சிம்மும் நீங்களும் சொல்லி வச்சா மாதிரி.. க்ரிக்கட்டா எழுதித் தள்ளுறீங்க?

எப்ப... சினிமா ஏரியா பக்கம் வரப் போறீங்க?

sriram said...

டெஸ்டுக்கு என்னோட சாய்ஸ் - காவஸ்கர் மற்றும் சேவாக் (செம Contrast)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

என் சாய்ஸ் - சேவாக், ஸ்ரீகாந்த். அப்பர் கட் அடிப்பதில் ஸ்ரீகாந்த் சேவாக்குக்கு தாத்தா. ஒருவர் நின்ற் ஆடுபவர் இன்னொருவர் அடித்து ஆடுபவர் என்ற காம்பினேஷன் சரி என்று பலருக்குத் தோன்றினாலும், ஃபர்ஸ்ட் டவுன் ட்ராவிடை விட்டால் வேறு யாருக்கும் போகாது என்பதால் இந்த அதிரடி ஜோடிக்கே என் வோட்டு. இருவருக்கும் ஒரே நேரத்தில் ப்ரஷர் குடுக்க பவுலர்கள் திணறித்தான் போவார்கள். பவுலர்களின் கான்ஃபிடென்ஸைக் குலைக்க இவர்கள் இருவரை விட்டால் ஆளில்லை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னுடைய விருப்பம்

சேவாக் , சித்து , கவுதம் காம்பீர்

க ரா said...

என்னோட சாய்ஸ்

விரேந்திர ச்சேவாக்

கௌதம் கம்பீர்

கார்க்கிபவா said...

stats படி பார்த்தால் கவாஸ்கரும், சேவாக்கும்தான். ஆனா எனக்கு ஏனோ ஷேவாகும் கம்பீருமே பெஸ்ட் என்று தோன்றுகிறது. ஏனோ தெரியவில்லை கவாஸ்கரை கண்டாலே எரியும் எனக்கு

கார்க்கிபவா said...

காதல் இல்லா காமம், சராசி இந்திய மனைவியின் மனநிலை என முரளி ஆங்காங்கே தெளிவாக தெரிகிறார்

Anonymous said...

Dear Murali,just came to ur blog and whats fashes in my mind is: please have a look at the below set of players, i am just giving some examples :

SET 1:

1. Tendulkar
2. Dravid
3. Laxman
4. Ganguly
5. Gavaskar
6. Visawanath
7. Vengsarkar
8. Ravi Shastri...
9. Manjerekar
10. Wadekar

Set 2:

1. Azhar
2. Sehwag
3. Dhoni
4. Yuvraj
5. Gambli
6. Kapil Dev
7. Sandeep Patel
8. Kaif
9. Kirmani
10.F. Engineer

Set 1 is very good batsmen or even the best batsmen india has ever produced : BUT THEY HAVE AVERAGE OR BELOW AVERAGE STRIKE RATES IN ANY FORM OF CRICKET. Also they are good or average fielders.


Set 2 is : very good and average batsmen but very high strike rate compared to set 1 and even can be termed as explosive batsmen of Indian cricket and VERY VERY GOOD FIELDERS compared to set 1.

Could u see the difference between these two sets and the major thing which seperates them is very curious: hope u know what it is..

Ilangovan.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னுடைய சாய்ஸ் : காவஸ்கர் + சௌஹான் அல்லது காவஸ்கர் + ஷேவாக்.

Unknown said...

கவாஸ்கர், ஹம்பீர்..................

சிநேகிதன் அக்பர் said...

//நான் விளக்குமாற்றை கிரிக்கெட் பேட்டாக கற்பனை செய்து ஆடி அம்மாவிடம் திட்டு வாங்கினேன். கல்யாணத்தன்று கிப்ட் கொடுத்த நண்பனிடம் ஸ்கோர் என்னாச்சு என்று மணமேடையில் கேட்டு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போது கிரிக்கெட் பார்க்க கார்ட்டூனை மாத்தாதே என மகனிடமும் திட்டு வாங்குகிறேன். மூன்று தலைமுறையும் என்னை கிரிக்கெட் பார்க்க விடாமல் சதி செய்கிறது. //

இது சேட்டன் சொன்னதா அல்லது உங்கள் சொந்த அனுபவமா.

என்னுடைய தேர்வு சேவாக், கம்பீர்.

//கணவனின் சம்பாத்தியத்தில் திருப்தி அடையாத சராசரி இந்திய மனைவியின் மனநிலையில்//

உண்மையிலேயே சொல்றேன் காலையில் தூக்க கலக்கத்தில் படிக்கும் போது 'சம்பாத்தியத்தில் ' வார்த்தையில் 'ச' க்கு பதிலா 'த'ன்னு தவறா படிச்சி அதிர்ச்சியாயிட்டேன். எப்போ முரளி அண்ணா இந்த ஆரய்ச்சி எல்லாம் செஞ்சாருன்னு.

முரளிகண்ணன் said...

நன்றி ரவி

நன்றி பாலா. சினிமா அடுத்த வாரம்.

நன்றி ஸ்ரீராம்

நன்றி முகிலன்

நன்றி ஸ்டார்ஜான்

நன்றி ராமசாமி கண்ணன்

நன்றி கார்க்கி

நன்றி ..ஆனந்தம். முழுப்பெயர என்னால படிக்க முடியலை. உங்க கேள்விக்கு விரிவான பின்னூட்டம் பிறகு இடுகிறேன்

நன்றி ஜ்யோவ்ராம்ஜி

நன்றி கனககோபி.

நன்றி அக்பர். அது என்னோட சொந்த அனுபவம்தான். தூக்கக் கலக்கத்தில படிச்சீங்க. நல்ல வேளை பின்னூட்டம் போடும் போது முழிச்சிட்டீங்க

நர்சிம் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க முரளி.

சேவாக் & சேவாக் ஆ இருக்க சான்ஸ் இல்லியே..ஹும்

முரளிகண்ணன் said...

வாங்க தலைவரே

Mahesh said...

என் சாய்ஸ் ஸ்ரீகாந்த், கம்பீர்....

ஆனாலும்.... ஆரம்பத்துலயே தீபக் படேலை ஸ்பின் போட விட்டு, லாங்-ஆன்ல ராட் லாதம் கரெக்டா கேட்ச் புடிச்சு.... அங்க தல ஸ்ரீகாந்த் கொஞ்சம் சொதப்பிடுச்சு.

முரளிகண்ணன் said...

வாங்க மகேஷ். வித்தியாசமான காம்பினேஷன் சொல்லியிருக்கீங்க

kanagu said...

en choice Sehwag and Gambhir... :)

Gavaskar than modhal la podalam nu nenachen but... Gavaskar Sehwag kooda epdi aaduvar-nu theriyathu..

GAmbhir-kum Sehwag-kum nalla understanding irukku... apram Gambhir thanoda thiramaya nirubichite varaar..

/*உண்மையிலேயே சொல்றேன் காலையில் தூக்க கலக்கத்தில் படிக்கும் போது 'சம்பாத்தியத்தில் ' வார்த்தையில் 'ச' க்கு பதிலா 'த'ன்னு தவறா படிச்சி அதிர்ச்சியாயிட்டேன். எப்போ முரளி அண்ணா இந்த ஆரய்ச்சி எல்லாம் செஞ்சாருன்னு.*/

Roommate kadhai la irundhu ivar innum veliya varala pola :) :)

முரளிகண்ணன் said...

நன்றி கனகு

anujanya said...

எனக்கு சந்தேகமே இல்லாமல் கவாஸ்கர் மற்றும் சேவாக்.

முரளி, ஒவ்வொரு ஆட்ட நிலையிலும் சிறந்தவர், நிச்சயம் பதினொன்றில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கிர்மானி சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் டீம் பேலன்ஸ் நிமித்தம் தோனி பெட்டர் சாய்ஸ் என்று தோன்றும்.

ஆமாம், சேடன் ஷர்மா எல்லாம் போட்டிருக்கிறீர்கள். அகர்கர் இல்லையா? பாலாஜி? அபிட் அலி கூட நிறைய நாட்கள் ஒபெனிங் போலிங் செய்தார்.

அனுஜன்யா

தினேஷ் said...

1. சுனில் கவாஸ்கர்
6. விரேந்திர சேவாக்

புருனோ Bruno said...

// “ ஸ்ரீகாந்த் அடிச்சா நாமே அடிச்சமாதிரி இருக்கும்”. அது உண்மைதான்.//

ஹி ஹி ஹி

புருனோ Bruno said...

//5. நவ்ஜோத் சிங் சித்து//

இவரது மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான http://www.cricinfo.com/ci/engine/match/64480.html ஆட்டம் மிக நேர்த்தியானது.

ஒரு நாள் போட்டிகளில் அப்படி ஒரு சீரான ஆட்டத்தை நான் அரிதாகவே பார்த்துள்ளேன்.

நுழைந்ததில் இருந்து ஒரு பந்து கூட தடுமாறாமல் 4 அடித்து 50ம் 6 அடித்து 100ம் அடைந்தார்.

--

அதே அளவு நேர்த்தியான மற்றொரு ஆட்டம் பிளெமிங் 2003ல் தென் ஆப்பிரிக்காவிற்கு சங்கு ஊதியது http://www.cricinfo.com/ci/engine/match/65248.html

புருனோ Bruno said...

கவாஸ்கர்
சேவாக்

-

ரமேஷ் கார்த்திகேயன் said...

காவஸ்கர் + ஷேவாக்.

Bharath said...

கவாஸ்கர் & கம்பீர் (சேவாக் என்று சொல்ல நினைத்தாலும்..)
இருவரும் முழுமையான ஓபனர்ஸ் என்பதால்.. மற்றும் ரைட்-லெப்ட் காம்பிநேஷன் என்பதாலும்..

உங்கள் லிஸ்டில் பருக் எஞ்சினியர் பெயர் இல்லயே? I feel he should atleast be in the shortlist.