கிரிக் இன்போ இணையதளம் முதலில் ஆஸ்திரேலியா ஆல் டைம் லெவென் கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் விவாதத்தை துவக்கிய போது, அடுத்த அணி இந்திய அணியாகத்தான் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் அடுத்து இங்கிலாந்து,நியுசிலாந்து என தேர்வு செய்து இப்போது தென் ஆப்பிரிக்க அணியில் வந்து நிற்கிறார்கள்.
அதையெல்லாம் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தால் எப்படி. நாமே தேர்வு செய்துவிடுவோம், காசா பணமா என்று இறங்கிவிட்டேன்.
கிரிகின்போ படா படா ஆட்களிடம் இருந்து தேர்வுப் பட்டியலைப் பெறும். ஓட்டெடுப்பும் நடக்கும். அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்று ஆட்களுக்காக ஏங்குபவர்களா நாம்?. திரிஷா இல்லைன்னா திவ்யா என சமாதானம் அடைந்து கொள்பவர்கள் தானே நாம்.
அதனால் நாமே ஒரு அணியை தேர்வு செய்து விடுவோம்.
முதல் குழப்பம் எந்த வருடத்தில் இருந்து துவங்குவது என்று. ரஞ்சித்சிங்ஜி,துலிப்சிங்ஜி ஆகியோர் எப்படி விளையாடுவார்கள் என்று பார்த்ததில்லை. சாதனைகளை கேள்விப்பட்டதோடு சரி.
சி கெ நாயுடு வின் அதிரடி ஆட்டம், ரஙகாச்சாரியின் ஸ்டம்புகளை உடைத்தெறியும் பந்து வீசு என பழைய இதழ்களில் படித்ததும் கேள்விப்பட்டதும் உண்டு.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக லாலா அமர்நாத் செஞ்சுரி அடித்தார். சரி எதும் புட்டேஜ் இருக்கா? இல்லையே.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாம் ஒன்றாக இருந்ததால் நாம் சுதந்திரத்திற்க்குப் பின்னால் தொடங்குவோம்.
சுதந்திரத்துக்குப் பின்னால் பல ஆண்டுகள் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு என்னும் அளவுக்கு அடி வாங்கியதால் அந்த காலகட்டத்தை சாய்ஸில் விட்டு விடுவோம்.
முதன் முதலில் வெளிநாட்டு மண்ணில் (இங்கிலாந்து மற்றும் மே இந்திய தீவுகள்) டெஸ்ட் தொடர் வெற்றிக்கனியைப் பறித்த 1971ல் இருந்து தொடங்குவோம். அப்பொதைய கேப்டன் அஜித் வடேகர் மற்றும் அவரது அணியில் இருந்து தற்போதைய அணி வீரர்கள் வரை மட்டுமே நமது இலக்கு.
நம் அணியில் ஒரு வசதி என்னவென்றால் சில பொசிஷன்களுக்கு பெரிய போட்டியே இருக்காது. எடுத்துக்காட்டு வேகப்பந்து வீச்சு. இரண்டே இரண்டு ஏரியா தான் கடுமையான போட்டி நடைபெறும் இடம். மிடில் ஆர்டர் மற்றும் சுழல்பந்து வீச்சு.
முதலில் விக்கெட் கீப்பிங்கில் துவங்குவோம்.
1.பரூக் எஞ்சினியர்
2.கிர்மானி
3.சதானந்த் விஸ்நனாத்
4. சந்திரகாந்த் பண்டிட்
5.கிரன் மோர்
6.நயன் மோங்கியா
7.மகேந்திர சிங் டோனி
8.திணேஷ் கார்த்திக்
அடுத்தது துவக்க ஆட்டக்காரர்கள்
2.சுனில் கவாஸ்கர்
3.சேட்டன் சௌகான்
4.எம் எல் ஜெய்சிம்மா (மேக் ஷிப்ட்)
5.கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
6. விரேந்திர சேவாக் (மேக் ஷிப்ட்)
7.கௌதம் காம்பிர்
நவ்ஜோத் சித்து
கொடுமை ரெண்டு பிளேசுக்கு ஏழு பேருக்கு மேல தேறலை.
வேகப்பந்து வீச்சு
1.கபில்தேவ்
2.கர்சன் காவ்ரி
3.ரோஜர் பின்னி
4.சேட்டன் ஷர்மா
5.மனோஜ் பிரபாகர்
6.ஜவகல் ஸ்ரீனாத்
7.வெங்கடேச பிரசாத்
8.ஜாகிர் கான்
9.இஷாந்த் சர்மா
இனி வர்றது ஸ்பின்னர்ஸ்
1.சந்திரசேகர்
2.பிஷன் சிங் பேடி
3.பிரசன்னா
4.வெஙகட்ராகவன்
5.சிவலால் யாதவ்
6.எல் சிவராமகிருஷ்ணன்
7.மனீந்தர் சிங்
8.ரவி சாஸ்த்ரி
9. நரேந்திர ஹிர்வாணி
10.அர்ஷாத் அயூப்
11.அனில் கும்ப்ளே
12.வெங்கடபதி ராஜு
13.ஹர்பஜன் சிங்
வி வி குமார்
சுபாஷ் குப்தே
அடுத்தது தான் கோர் ஏரியா, செலக்டர்ஸ் டரியல் ஆகுற இடம். மிடில் ஆர்டர்
1. அஜீத் வடேகர்
2.குண்டப்பா விஸ்வனாத்
3.மன்சூர் அலிகான் பட்டோடி
4.மொஹிந்தர் அமர்னாத்
5.திலிப் வெங்சர்க்கார்
6. முகமது அசாருதீன்
7. சஞ்சய் மஞ்சிரேக்கர்
8. சச்சின் தெண்டுல்கர்
9. ராகுல் திராவிட்
10.சௌரவ் கங்குலி
11.வி வி எஸ் லட்சுமண்
சந்தீப் பாட்டில்
யுவராஜ் சிங்
திலீப் சர்தேசாய்
சரி வரும் பகுதிகள்ல இவங்களை எடை போடுவோம். பின்னூட்டத்தில் விட்டுப் போனவர்களையும் (நல்ல ஆட்டக்கார்கள்), நீங்கள் இதில் இருந்து தேர்வு செய்யும் அணியையும் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.
ஆகுறோம்டா நாங்களும் ஒரு செலக்டர்.
39 comments:
ஆல் ஏரியா அண்ணன் கலக்கறீங்களே !!!
நன்றி மகேஷ். நீங்க யாரையெல்லாம் செலெக்ட் பண்ணுவீங்கண்ணு பின்னூட்டலாமே?
பாலி உம்ரிகர் - 1971 க்கு முற்பட்டவர்
விடுபட்ட பெயர்கள் - திலீப் சர்தேசாய், பட்டோவ்டி, மதன் லால்
- Ravi
நன்றி ரவி. பாலி உம்ரிகர் பெயரை நீக்கி விடுகிறேன். மதன்லால் மித வேகம், சுவிங்கும் இல்லை. ஓரளவே பேட்டிங். எனவேதான் சேர்க்கவில்லை. மற்ற இருவரையும் சேர்க்கிறேன்.
முரளி,
நீங்க சொன்னதில இருந்து எனக்கு புடிச்ச பதினொன்னு....
விரேந்திர சேவாக் (மேக் ஷிப்ட்)
சுனில் கவாஸ்கர்
சச்சின் தெண்டுல்கர்
ராகுல் திராவிட்
மொஹிந்தர் அமர்னாத்
கிர்மானி
கபில்தேவ்
ஜவகல் ஸ்ரீனாத்
அனில் கும்ப்ளே
ஹர்பஜன் சிங்
பிஷன் சிங் பேடி
வர வர எல்லா ஏரியாவிலயும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க!
பிரபாகர்.
மதன்லால் - மீடியம் பேசர்ல சேக்குறதா, ஆஃப் ஸ்பின்னர்ல சேக்குறாதான்ற சந்தேகத்தில் விட்டுப் போயிருக்கும்னு நெனைக்கிறேன்..
ஓப்பனிங்
நவ்ஜோத் சித்து
அன்ஷுமன் கெய்க்வாட்
மிடில் ஆர்டர்
சந்தீப் பாட்டில்
யுவராஜ் சிங்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
11 ல் கலக்குறீஙகளே
நல்ல தகவல்கள்
\\மதன்லால் - மீடியம் பேசர்ல சேக்குறதா, ஆஃப் ஸ்பின்னர்ல சேக்குறாதான்ற சந்தேகத்தில் விட்டுப் போயிருக்கும்னு நெனைக்கிறேன்\\
விவியன் ரிச்சர்ட்ஸ் உடைய பேமஸ் கமெண்ட ஞாபகப் படுத்தீட்டிங்க.
யுவராஜ் டெஸ்டில? சரி சேர்த்துக்கிடுவோம். சித்து கூட ஓகே. கெயிக்வாட் வேண்டாமே.
உங்க டீமுக்கு நன்றி பிரபாகர்
நன்றி ஸ்ரீராம்
நன்றி ஸ்டார்ஜான்
சுழல் பந்து வீச்சாளர்களில் வி.வி.குமாரை விட்டு விட்டீர்களே!
என்னோட 11 பேர் டீம்
சேவாக்
சச்சின்
ஜடேஜா
கங்குலி
அசாரூதீன்
நயன் மோங்கியா
கபில்தேவ்
கும்ளே
ஹர்பஜன் சிங்
ஜாகீர் கான்
ஸ்ரி நாத்
1.யுவராஜ் - இனி வரும் காலங்களில் He is going to be a mainstay in Indian criket - in any form..
கம்பீரை கன்ஸிடர் பண்ணும் போது, யுவராஜை கன்ஸிடர் பண்ணுவது (நல்லா கவனிங்க நான் சொன்னது Consider, automatic selection இல்லை)
2. அன்ஷுமன் : இவர் அதிகம் சாதிக்கவில்லை என்றாலும், இரட்டை சதமடித்த சில இந்திய துவக்க ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர்..
3. Sandeep Patil : The most stylish batsman from India in my opinion. Graceful batsmen in my opinion are David Gower, Sandeep Patil, Carl Hooper...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஸ்பின்னர்களில் சுபாஷ் குப்தே எங்கே?
நன்றி ஸ்ரீராம். கெயிக்வாட் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 207 ரன்னுக்காகவே அவரை மீண்டும் 88ல் மே இந்திய தீவுக்கு எதிரான அணியில் சேர்த்தார்கள். அதில் தடவு தடவு என்று தடவினார். அந்த 207 கூட ஏழு கேச் மிஸ் என்று குறிப்பிடுவார்கள். சந்தீப் பாட்டில் கருத்தில் ஒத்துப் போகிறேன். மெல்போனில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் அசந்து போனது ஒன்றே போதும். (அவுட் ஆப் த கிரவுண்ட் சிக்சர், ஒரே ஓவரில் ஆறு பவுண்டரி (ஏழு பந்தில்- நோ பால் சேர்த்து))
யுவி விஷயத்தில் அவர் குவாலிட்டி ஸ்பின்னர்களிடம் தடுமாறுவதுதான் ஒரே குறை (டெஸ்ட் மாட்சில் அது மிக முக்கியம் அல்லவா?). மைக்கேல் பெவனை (ரைசிங் டெலிவரியில் தடுமாறுவது) ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளுக்கு நிராகரித்தது போலவே தான் நானும் இந்த விஷயத்தில் யுவியை முதலில் சேர்க்கவில்லை.
தல கலக்குங்க,
என் ரொம்ப நாள் ஆசையை உங்க பதிவு மூலமா நிறைவேத்திக்கிட்டேன்.
பிடிங்க என்னோட 11 ஐ.
1.விரேந்திர சேவாக் (மேக் ஷிப்ட்)
2.கௌதம் காம்பிர்
3.சச்சின் தெண்டுல்கர்
4.ராகுல் திராவிட்
5.சௌரவ் கங்குலி
6.மகேந்திர சிங் டோனி
7.கபில்தேவ்
8.அனில் கும்ப்ளே
9.ஜவகல் ஸ்ரீனாத்
10.ஜாகிர் கான்
11.ஹர்பஜன் சிங்
12வது ஆளா என்னை சேர்த்துகிடுங்க.
மதுரை சொக்கன் தங்கள் வருகைக்கு நன்றி. ஸ்பின் மேதை குமார் அவர்கள் இரண்டு மேட்ச் தானே ஆடினார் என்று விட்டு விட்டேன். இணைத்து விடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
நன்றி சென்னைப் பித்தன். மிகப்பெரும் லெக் ஸ்பின்னரான குப்தே 70 களுக்கு முன்னால் ஓய்வு பெற்று விட்டதால் லிஸ்டில் சேர்க்கவில்லை. ஆனானப்பட்ட சோபர்ஸே அவருடைய விசிறி அல்லவா?
தங்களுடைய அணிக்கு நன்றி அக்பர்
டெஸ்ட் 11
01. கவாஸ்கர்
02. சேவாக்
03. டிராவிட்
04. சச்சின்
05. அசார்
06. வி.வி.எஸ்.லக்ஷ்மண்
07. கபில் (c)
08. இஞ்சினீயர் (wk)
09. ஸ்ரீநாத்
10. சந்திரசேகர்
11. பிரசன்னா
ஒரு நாள் 11
01. கங்குலி (c)
02. சச்சின்
03. சேவாக்
04. அசார்
05. மொகிந்தர்
06. யுவராஜ்
07. தோனி (wk)
08. சாஸ்திரி
09. கபில்
10. கும்ப்ளே
11. ஸ்ரீநாத்
Thankyou Doctor. your test team super.
எங்களைப் பொறுத்தவரை கும்ளே ஒரு வேக வீச்சாளர்.
பிரசாத் ஒரு மெது (மித அல்ல) வீச்சாளர்
சச்சின், கங்கூலி ஒரு வெற்றிகரமான துவக்க ஜோடி 50-50யில்
ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் ரவி சாஸ்திரி நல்ல துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்ததை மனதில் கொள்ளுங்கள்.
அஜய் ஜடேஜா!?
நன்றி டாக்டர். இது டெஸ்ட் போட்டிக்கான அணி மட்டுமே.
நன்றி வால் பையன், ஜடேஜா அவர் காலத்திய டெஸ்ட் அணியிலேயே இடம் பிடிக்க போராட வேண்டியிருந்தது. கிடைத்த இடத்தையும் தக்க வைக்க முடியவில்லையே? அவரை எப்படி ஆட்டத்தில் சேர்க்க முடியும்?
டெஸ்ட் அணி
சச்சின்
கவாஸ்கர்
அசார்
ராவிட்
அமர்நாத்
சதானந்த் விஸ்நனாத்
கபில்தேவ்
ரவி சாஸ்திரி
ஸ்ரீநாத்
சிவராமகிருஷ்ணன்
கும்ளே
ஒருநாள் அணி
சேவக்
சித்து
சச்சின்
அசார்
கங்குலி
டோணி
கபில்
ரவி சாஸ்திரி
ஹர்பஜன்
மனோஜ் பிரபாகர்
ஸ்ரீநாத்
நன்றி வந்தி
My Test Team:
விரேந்திர சேவாக்
சுனில் கவாஸ்கர்
ராகுல் திராவிட்
சச்சின்
அமர்நாத்
திலிப் வெங்சர்க்கார்
கிர்மானி
கபில்தேவ்
ஜாகீர்கான்
அனில் கும்ப்ளே
ஹர்பஜன் சிங்
ஒரு நாள் அணி:
1.சேவாக்
2.சச்சின்
3.கங்குலி
4.அசாருதீன்
5.யுவராஜ் சிங்
6.ராபின் சிங்(பேட்டிங்,பீல்டிங்,மிதவேகபந்துவீச்சு,Always 100% மறந்துட்டீங்களே :)
7.தோனி
8.கபில் தேவ்
9.ஜாகீர்கான்
10.ஹர்பஜன் சிங்
11.ஜவகல் ஸ்ரீநாத்
நல்ல பகிர்வுக்கு நன்றி தோழரே :)
அன்பு நண்பர் முரளியிடம் ஒரு வேண்டுகோள்.
உங்களால் முடிந்தால் சச்சரவில்லாத பாகிஸ்தான் ஆல் டைம் லெவன் அணி தெரிவுசெய்யுங்கள் பார்ப்போம்.
"ஆகுறோம்டா நாங்களும் ஒரு செலக்டர்"
உங்கள் வரிசை சூப்பர் அத விட இந்த கடைசி பஞ்ச் சூப்பரோ சூப்பர் ..
தல ஒரு நாள் போட்டிக்கா டெஸ்டுக்கா? சச்சின் மிடில் ஆர்டர், மற்றும் திராவிட்டின் பெயர்களை வைத்து டெஸ்ட் என்று அறிகிறோம்...
ஆனால் அதில் தினேஷ் கார்த்திக் எல்லாம் இந்த லெவலுக்கு வருவதே வேஸ்ட்..
தல, முக்கியமான ஸ்பின்னர் திலீப் தோஷியையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க - கடைசில செலக்ட் ஆகாவிட்டாலும் பரவாயில்லை.
என்னுடைய ஆல் டைம் 11 :
சுனில் காவஸ்கர்
சேத்தன் சௌஹான்
ராகுல் டிராவிட்
திலீப் வெங்சார்கர்
சச்சின் டெண்டுல்கர்
கிர்மானி
கபில்தேவ் (கேப்டன்)
ஜவஹல் ஸ்ரீநாத்
பிஷன் சிங் பேடி
சந்திரசேகர்
நன்றி நிலாரசிகன்
நன்றி வந்தி. பாகிஸ்தான் அணி என்னுடைய மனம் கவர்ந்த அணி. வாசிம் அக்ரமும் வக்கார் யூனிஸும் என் விடுதி அறையை அலங்கரித்தவர்கள். அடுத்து அவர்கள்தான்.
நன்றி ரோமியோபாய்
நன்றி கார்க்கி. சாய்ஸ் கொடுக்க வேண்டுமென்பதால் சேர்க்கப்பட்டவர்தான் திணேஷ் கார்த்திக்
நன்றி குருஜி. தோஷியையும் சேர்த்து விடுகிறேன்.
இதுதான் உண்மையான கிரிகெட் கட்டுரை தல.
கொஞ்சம் யோசித்து அணியைச் சொல்கிறேன்.
எழுதிய விதமும் சட்டையர் வசனங்களும் அருமை முரளி. சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு கலக்கல்!
நன்றி தலைவரே
வணக்கம் !!!
எனது அணி !!
1.சச்சின்
2.கங்குலி
3.சேவாக்
4.யுவராஜ்
5.அசாருதீன்
6.கபில்தேவ்
7.தோணி
8.ஹர்பஜன்
9.கும்ப்ளே
10.ஸ்ரீநாத்
11.ஜாகிர் கான்
ப்ரவீன் ஆம்ரே கூட மிடில் ஆர்டருக்கு வெச்சுக்கலாம்.
நல்ல பௌலர் எல்.சிவா.... தேவையில்லாத காரணங்களால வீணாப்போனவர்....
வெங்கட் ராகவன் ("கிவ் மி வெங்கட், ஐ'ல் பீட் தி வர்ல்ட்..." யார் சொன்னது?)
நன்றி குறை ஒன்றும் இல்லை.
நன்றி மகேஷ்.
\\("கிவ் மி வெங்கட், ஐ'ல் பீட் தி வர்ல்ட்..." யார் சொன்னது?)
\\
சோபர்ஸ் ஆர் லாயிட்?
ஓபனிங் அருமை முரளி...நர்சிம் அடிச்சு ஆடிட்டு போயிட்டாரு..நீங்க டெஸ்ட் மாட்ச் ஆரம்பிச்சிருக்கீங்க...
நன்றி தண்டோரா
Post a Comment