December 21, 2009

பாரபட்சம் காட்டும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

25 வருடங்களுக்கு முன்னால் பெரிய நடிகர்களின் படமோ, பெரிய தயாரிப்பாளர்களின் படங்களோ வரும் போது நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது பூஜையில் இருந்தே ஆரம்பிக்கும். டீக்கடைகள், சலூன் ஆகியவற்றில், தங்கள் அபிமான நடிகர் நடித்த படமெனில் இந்தப் பக்கங்களை கிழித்து ஒட்டி வைத்திருப்பார்கள்.

கலைப்புலி தாணு, டி ராஜேந்தர் ஆகியோர் இப்படி விளம்பரம் பண்ணுவதில் சமர்த்தர்கள். அதுவும் டி ஆர் தினமும் ஒரு அடுக்கு மொழி வசனத்துடன் விளம்பரப்படுத்துவார்.

90களில் பல படங்கள் தோல்வியடைந்து தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்த போது திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டம் போட்டனர். அதன் நோக்கம், தயாரிப்புச் செலவைக் குறைப்பது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கக்கூடாது என்பது.

அதன்படி கால் பக்க அளவுக்கே நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 60 கோடியில் தயாரான தசாவதாரமாக இருந்தாலும் சரி. மூன்று கோடியில் உருவான சுப்பிரமணியபுரமாக இருந்தாலும் ஒரே அளவில் தான் விளம்பரம் செய்யவேண்டும் என்பது விதி. மீறுபவர்களுக்கு ரெட் கார்டு போடப்படும்.

ஆனால் இப்போது நடப்பது என்ன? நாளிதழ்கள் படிப்பவர்களை விட தொலைக்காட்சி பார்ப்போர் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் கால் மணி நேரத்துக்கு ஒருமுறை பட விளம்பரம் வெளியே வருகிறது. சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரிக்கும்/வினியோகிக்கும் படங்களுக்கு இவ்வாறு அதிக விளம்பரம் செய்கிறார்கள்.

இந்த விளம்பரத் தொகையை கணக்குப் பார்த்தால்?

பிரைம் டைம் மற்றும் சாதாரண நேரங்களில் சன் டிவி அந்தக் குறிப்பிட்ட வினாடிகளுக்கு வசூலிக்கும் தொகை எவ்வளவு? தினமும் எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது? எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்பாகிறது? என்று பார்த்தால் மொத்த விளம்பரத் தொகை கோடிகளை தாண்டும் என்பது சர்வ நிச்சயம்.

இது எந்தக் கணக்கில் வருகிறது? சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பவர்கள் இதைச் செய்ய முடியுமா? அரைப்பக்க அளவு தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்தால் ரெட் காடு போடுபவர்கள் இப்போது எங்கே போனார்கள்?

அய்யா உங்களுக்கு சன் டிவியை கண்டிக்க முடியவில்லையா? பரவாயில்லை. இந்த விளம்பர கட்டுப்பாட்டையாவது நீக்குங்கள். மல்டிப்லெக்ஸ் ஆடியன்ஸ்க்கு படமெடுப்பவர்கள் ஆங்கில தினசரிகளில் முழுப்பக்க விளம்பரம் செய்து தங்கள் படத்தைக் கொண்டு சேர்க்கட்டும். ஜனரஞ்சக படமெடுப்பவர்கள் முழுப் பக்கம் தினத்தந்தியில் விளம்பரம் செய்து கொள்வார்களே? எல்லோரும் வாழ வாய்ப்புக் கொடுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது

இரண்டு நண்பர்கள். திரையரங்குக்கு சென்றிருப்பார்கள். அரசியல்வாதியின் உறவினன் ஒருவன் சிகரெட் குடித்துக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். பின்னால் உட்கார்ந்திருக்கும் இவர்கள் சிகரெட் புகையாலும் சத்தத்தாலும் அவதிப்படுவார்கள். அடுத்த முறை செல்லும் போது அங்கே ஒரு ஏழை பீடி பிடித்துக் கொண்டிருப்பான். நண்பர்களில் ஒருவன் அவனை கண்டிக்க எந்தரிப்பான். அப்போது இன்னொருவன் சொல்லுவான், சென்ற முறை அவன் செய்த தப்பைத்தானே இவனும் செய்கிறான். அவனை தட்டிக்கேட்காத நமக்கு இவனை தட்டிக்கேட்க மட்டும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று.

இதே கதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பொருந்தும்தானே?

33 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வேட்டைக்காரன் முழுப்பக்க விளம்பரம் வந்திருந்தால் குறைந்த பட்சம் அனுஷ்கா படம் கால்பக்கமாவது வந்திருக்கும் தல..,

முரளிகண்ணன் said...

Thanks doctor

Raju said...

ஆமா தல, நான் நிறைய தடவை யோசிச்சுருக்கேன்.
மார்க்கெட்டிங்காலதான் ஆதவன், நினைத்தாலே இனிக்கும்..படங்கள் எல்லாமே ஹிட்டாச்சு.
ஆனா, சில நல்ல படங்கள் மார்க்கெட்டிங் இல்லாத்தால படுத்துருக்கு.

மணிஜி said...

உடம்பு எப்படி இருக்கு?

முரளிகண்ணன் said...

ஆமாம் ராஜு. ரேணிகுண்டா வுக்கு இதே அளவு விளம்பரம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் பத்திரிக்கை விளம்பர கட்டுப்பாடு இல்லையென்றால் அவர்களும் பலரை ரீச் செய்திருப்பார்கள். தயாரிப்பாளர் சங்கம் ஏதாவது செய்தால் நலம்.

தண்டோரா, சீரியல் சிலாட் கேட்டு கியூவில் நிற்பவர்கள் தான் பயப்பட வேண்டும். கன்ஸ்யுமர் பயப்படத் தேவையில்லை

கார்க்கிபவா said...

ம்ம்.. கந்த கோட்டை சின்ன பட்ஜெட்டா பெரிய பட்ஜெட்டா தல? இரண்டு டிவியில் படம் காட்றாங்க..

நர்சிம் said...

வாங்க வாங்க.வழக்கம் போல அருமை.

முரளிகண்ணன் said...

கார்க்கி, படம் சின்ன பட்ஜெட். ஆனா தயாரிப்பாளர் பெரிய ஆள். இதே தயாரிப்பாளர் சாதாரண ஆளா இருந்தா இதப் பண்ண முடியுமா?

ஒரு பேச்சுக்கு விஜய்,அஜீத் படம் வெளியாகும் போது, அஜீத் படத்தை வாங்கி வினியோகிக்கும் சன் டிவி அசுரத்தனமாக மார்க்கெட் செய்து, விஜய் படம் பற்றி எதுவும் பேசாமல் இருந்தால் எப்படியிருக்கும்? (பழைய உதாரணம் : சச்சின்).

விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். எனவே தப்பித்துக் கொள்வார். ஒரு புதுமுக நடிகரையோ, நல்ல படம் எடுப்போம் என சொத்தை வித்து வந்த தயாரிப்பாளருக்கோ இந்தக் கதி என்றால்?

அம்மாதிரி வந்த தயாரிப்பாளார்களால் தான் தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. (16 வயதினிலே - ராஜ்கண்ணு, சேது - கந்தசாமி, அழகி - உதயதாரா, சுப்பிரமணியபுரம் - சசிகுமார்)

இம்மாதிரி செய்வதால் அவர்கள் வரப் பயப்படுவார்களே?

முரளிகண்ணன் said...

ராஜா, பதிவு எழுதுபவர்களின் பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடலாம் என்ற கொள்கையுடையவன் நான். அது பல சிக்கல்களை தவிர்க்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. பின்னூட்டத்தை நீக்கியதற்க்கு மன்னிக்கவும்.


நன்றி தலைவரே

மணிஜி said...

/தண்டோரா, சீரியல் சிலாட் கேட்டு கியூவில் நிற்பவர்கள் தான் பயப்பட வேண்டும். கன்ஸ்யுமர் பயப்படத் தேவையில்லை//

போனவாரம் பார்த்தப்ப வைரல் பீவர்.அதான் கேட்டேன் தலைவரே!!

ramalingam said...

புதிதாக யாரும் வந்து விடக் கூடாது என்பதுதானே இவர்கள் எண்ணம். தயாரிப்பாளர் சங்க, இயக்குனர் சங்க பாலிடிக்ஸ் நிஜ அரசியலை விட பயங்கரமானது.

butterfly Surya said...

ஒன்று நாம பெரிய ஆளா இருக்கணும். இல்லையென்றால் சின்ன ஆட்களை ஒழிக்கணும். அதானே நோக்கம்.

கே.என்.சிவராமன் said...

அன்பின் முரளி,

இந்த இடுகை குறித்து பல விஷயங்களில் முரண்படுகிறேன்.

தனியார் தொலைக்காட்சிகள் புழக்கத்தில் இல்லாத காலத்தில் நாளிதழ்களில் முழுபக்க விளம்பரம் என்பது ஓகே. இடுகையில் நீங்களே குறிப்பிட்டுள்ளபடி 90களில் தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. அப்போதும் தனியார் தொலைக்காட்சிகள் வெகுஜனத்தில் பரவலாக இல்லை. துளிராக மட்டுமே இருந்தன.

இப்போது அப்படியா?

இப்போது ஒவ்வொரு நாளிதழின் சர்க்குலேஷனையும் கணக்கிட்டு பாருங்கள். 90க்குப் பின் எத்தனை நாளிதழ்கள் புதிதாக தொடங்கப்பட்டன என்பதை கணக்கில் கொள்ளுங்கள். எந்தெந்த நாளிதழை எந்தெந்த தரப்பு மக்கள் வாங்குகிறார்கள் என்பதை சேகரியுங்கள். உண்மை உங்களுக்கே புரியும்.

அதனால்தான் இப்போது விளம்பரமாக தருவதற்கு பதில், செய்தியாக வெளியிடும் யுக்தியை கையாள ஆரம்பித்திருக்கிறார்கள். சில நூறு அல்லது சில ஆயிரங்களில் முடிந்துவிடக் கூடிய சங்கதி இது.

ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியும், சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குகின்றன. அல்லது ஹாலிவுட் பாணியில் மொத்தமாக பட விநியோகத்தில் ஈடுபடுகின்றன.

தாங்கள் வாங்கும் படத்தை தங்கள் சேனலில் ஒளிபரப்பும்போது விளம்பரங்கள் வழியே அந்தப் பணத்தை வசூலித்துவிடுவார்கள். பின்னால் வரப்போகும் லாபத்துக்காக முன்னால் சில சலுகைகள்.

'பாட்ஷா' திரைப்படம் சேனலிலேயே வெள்ளிவிழாவை தாண்டியிருக்கும். படத்துக்கான முதலீடாக சத்யா மூவிஸ் செலவழித்த தொகையை விட, அதிக லாபத்தை சேனலில் ஒளிப்பரப்பியே நிச்சயம் சம்பாதித்திருப்பார்கள் இல்லையா?

இது நுகர்வுப் பொருட்களின் காலம். இங்கே வியாபாரிகளும், விநியோகஸ்தர்களும் மட்டுமே கோலோச்சுவார்கள். இது சினிமாவுக்கு மட்டுமல்ல, அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.

ஒரு பற்பசையின் நியாயமான விலை 2 அல்லது 3 ரூபாய் மட்டுமே. ஆனால், 10 ரூபாய் வரை செலவழித்தே வாங்குகிறோம். இது உதாரணத்துக்கு மட்டுமே.

நாளிதழில் முழுபக்க விளம்பரத்துக்கான கணக்கை இன்றைய சூழலில் போட்டுப் பாருங்கள். அவ்வளவு பெரிய தொகையை எந்த தயாரிப்பாளரும் இப்போது பேப்பர் விளம்பரத்தில் முடக்க மாட்டார். பணம் இருப்பவர்கள் தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யவே விரும்புவார்கள். காரணம் நுகர்வோர்கள் அங்குதான் அதிகம்.

இது நுகர்வோர்களின் ரத்தத்தை உறிஞ்சும் காலம்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கே.என்.சிவராமன் said...

49வது படத்தின் விளம்பரங்களைப் பார்த்து இப்படியொரு இடுகை எழுத உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால்...

50வது படத்தையும் அவர்களே வாங்கிவிட்டார்கள். எத்தனை 'சி' என்று காற்றுவாக்கில் உலவுவதை கேட்டால்....

ஏப்ரல் கொண்டாட்டம் மார்ச் முதலே ஆரம்பமாகும் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சிநேகிதன் அக்பர் said...

நியாயமான கோரிக்கைதான்.
செவிசாய்ப்பவர் யார்.

Cable சங்கர் said...

முரளி.. நான் பைத்தியக்காரனின் பின்னூட்டத்துக்கு கொஞ்சம் மாறுபடுகிறேன். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கம் என்பது இவர்கள் எல்லாம் கட்சி ரீதியாக சேனல் ஆரம்பிகும் முன்னால் நன்றாகவே நடந்தது. அதன் பிறகு கட்சியில் உள்ள சினிமாககாரர்களுக்கு ஏற்ற கூடாரமாய் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. வேண்டுமானல் பாருங்க. அடுத்த் ஆட்சியில் மாற்றம் இருந்தால் ராம்.நாராயணன். இருக்க முடியாது. அது மட்டுமலலாமல். இவர்கள் இப்போது சன் டிவிக்கு சப்போர்ட் செய்யாவிட்டாலும். கலைஞர் டிவி இவர்களீன் வச்ம் இருப்பதால் நிச்சயமாய் டிவியில் விளம்பரம் மூலம் வரும் புதிய வருவாயை அவர்க்ள் இழக்க விரும்பவில்லை.. இவர்களை பொறுத்தவரை.. ஒன் சைட் மணிதான். ஒன்லி ரிசீவிங்.. நோ கிவிங்.

தயாரிப்பாளர் சங்கத்தினால் இவர்களூக்கு எதிராக நிச்சயமொரு ரூல்ஸை போட முடியும் ஆனால் போட மாட்டார்கள்.

நான் எழுதனுமினு நினைச்சிட்டு இருந்தேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

முரளி , காலம் மாறிப் போச்சு

உலகம் ரொம்ப வேகமா முன்னேறுது !!

தலைவர் படம் போடாம விட்டுட்டீங்களே !

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே பேப்பரில் முழுப் பக்கம் விளம்பரம் குடுக்கக்கூடாது என்ற கொள்கையை 14 வருஷமா எல்லாரும் கடைபிடித்தார்கள். இப்ப வந்துட்டுபோச்சே தாணு தயாரிப்பில் விக்ரம் நடிச்ச ஒரு அட்டுப் படம்??? அதுக்கு தாணு முழுப் பக்கம் விளம்பரம் குடுத்து சங்கத்தை மீறினார். என்ன பண்ணுச்சு சங்கம்??? இவனுங்க பெரிய டுபாக்கூர். ஆடுற கோயிலுக்கு விளக்குப் பிடிப்பவர்கள்.

இராகவன் நைஜிரியா said...

ஐயா இவங்க இதையெல்லாம் செய்வாங்கன்னு எதிர் பார்க்கின்றீர்களா?

வலியவனுக்கு சிறியவனைப் பற்றிக் கவலையில்லை.

அவன் செத்தாலும், புழைச்சாலும் இவங்களுக்கு என்னாச்சு..

கண் துடைப்புச் சங்கம்... எதாவது செய்வாங்கன்னு எதிர் பார்க்க முடியாதுங்க.

கார்க்கிபவா said...

முரளி, நீங்க கொடுத்த உதாரணங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். அந்த படங்களெல்லாம் விளம்பரத்திலா ஓடியது? படம் நல்லா இருந்தா ஓடும் சகா. மவுத் டாக்தான் பெரிய விளம்பரம். கந்தக் கோட்டை தயாரிப்பாளர் பெரிய ஆளா இல்லையா என கேட்கவில்லை. அந்த படம் சின்ன பட்ஜெட்தானே? அதுக்கு இவ்வளவு செலவு செய்ய எப்படி முடிகிறது?

நான் சன்னுக்கு சப்போர்ட் செய்யவில்லை. சன்னிலே ஒரே காட்சி கூட காட்டாமல் மின்னலேவும்,காக்க காக்கவும் பிளாக்பஸ்டர் ஆகவில்லையா?

Anonymous said...

மிகவும் சாட்டையடியான கட்டுரை இது சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா..?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நியாயமான கோரிக்கை

உண்மைத்தமிழன் said...

சினிமா சங்கங்கள் அரசியல் கட்சிகளின் துணை சங்கங்களாக எழவெடுத்து ரொம்ப நாளாச்சு முரளி..!

இப்போதுகூட பணமுள்ளவர்களுக்குத்தான் சங்கமே தவிர.. பணமில்லாத பலமிழந்தவர்களுக்கு அல்ல..!

டிவிகளுக்குக் கட்டுப்பாடு என்று சொல்லிவிட்டால் தற்போதைய சங்க நிர்வாகிகள் திரையுலகில் இருந்துவிட முடியுமா..? ஏ.எம்.ரத்தினத்தின் தற்போதைய நிலைமை என்ன..?

இதுவும் ஒரு வகையில் ரவுடி அரசியல்தான்..!

பிரபாகர் said...

//இது நுகர்வோர்களின் ரத்தத்தை உறிஞ்சும் காலம்.//

முரளி,

அண்ணன் சொல்வது அப்படியே சரி.

இருந்தாலும், ஒன்றுமே இல்லாத படத்தைக் கூட திரும்ப திரும்ப காண்பித்து கடுப்பேற்றுவது நமது பொறுமையை மிக சோதிக்கிறது. எதற்கும் ஒரு விடிவு உண்டு என வழக்கம்போல் நம்புவோம்...

பிரபாகர்.

Cable சங்கர் said...

/ஆடுற கோயிலுக்கு விளக்குப் பிடிப்பவர்கள்//

அடடா.. இவ்வளவு சுருக்கமா சொல்லாம பெரிசா பின்னூட்டம் போட்டுட்டேன்

வெங்கட்ராமன் said...

இந்த விளம்பரத் தொகையை கணக்குப் பார்த்தால்?

பிரைம் டைம் மற்றும் சாதாரண நேரங்களில் சன் டிவி அந்தக் குறிப்பிட்ட வினாடிகளுக்கு வசூலிக்கும் தொகை எவ்வளவு? தினமும் எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது? எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்பாகிறது? என்று பார்த்தால் மொத்த விளம்பரத் தொகை கோடிகளை தாண்டும் என்பது சர்வ நிச்சயம்.


நானும் இதை யோசித்திருக்கிறேன். இதைப் போல் வேறு ஒரு தயாரிப்பாளர் செய்தால், தலையில் போட துண்டு கூட கிடைக்காது.

பணம் மற்றும் அதிகாரம் இருக்க்கும் இடத்தில் நியாயத்தை தேடி பிரயோஜனம் இல்லை.

நல்ல பதிவு

"உழவன்" "Uzhavan" said...

இதே கதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பொருந்தும்தானே? //
 
கண்டிப்பாக.. நல்ல கேள்வி.. இருக்கிறவன் பேச்சுதான் அம்பலத்தில் ஏறுமாம்..

மறத்தமிழன் said...

முரளி,

நல்ல அவதானிப்பு...

இப்பொழுதும் கிராமப்புரங்களில் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரங்கள் நல்ல ரீச்...அதை ரூல்ஸ் போட்டு தடுத்தாயிற்று..

டிவியில் விளம்பரம் கொடுக்க பணம் பத்தாது..சிறிய தயாரிப்பாளர்கள் பாடு திண்டாட்டம்தான் !

பை.அண்னன் சொன்னமாதிரி சினிமாவை நுகர்வு பொருளா பாக்க முடியல..
ஆனா மகனும்,ஆர்ட்டிஸ்டும் சீக்கிரம் ஆக்கிவிடுவார்கள்..

அந்த இரண்டையும் பகைத்துக்கொண்டு மீடியாவில் இருப்பது மிகக்கடினம்.

உ.தா‍‍...சித்தி & சித்தப்பா...

கார்க்கி,

மின்னலே, கா.கா...பாடல்கள்/பிரபல ஹீரோ/டைரக்டர்..தவிர நல்ல பொழுது போக்கு படம்...அதனால் ஓடியது..
டிவில விளம்பரம் கொடுத்து இருந்தால் வசூல் நிச்சயம் முன்பைவிட நிச்சயம்அதிகமாகி இருக்கும்...!

மாசிலாமணி எப்படி ஹிட் ஆனது...எல்லா ஒரு வெளம்பரந்தான்...வேரென்ன..

முரளி...ஆட்டோமொபைலோடு சினிமாவிலும் ஒரு ஆராய்ச்சி பண்ண வாழ்த்துக்கள் !

அன்புடன்,
மறத்தமிழன்.

Ashok D said...

இரண்டு நாளா என்னடா பின்னோட்டம்(nice & nice onnu) பறக்குதேன்னு நினைச்சேன்.. எழுத ஆரம்பிச்சுட்டீங்களா... வாழ்த்துகள். முக்கியமான விஷயம் பதிவ படிச்சுட்டு வர்றேன். (சின்னதா எழுதியிருக்கலாம். மனசுல உ.த. அண்ணன்னு நெனப்பு..ம்ம்ம்ம்)

கார்க்கிபவா said...

//முரளி...ஆட்டோமொபைலோடு சினிமாவிலும் ஒரு ஆராய்ச்சி பண்ண வாழ்த்துக்கள் //

இவரு என்னங்க? புட்டிகதைகள் ஏழுவை தெரியலன்னு போடராரு. இங்க வந்து இப்படி போடறாரு. பாஸூ, வரலாறு தெரியாதா உஙக்ளுக்கு? :)))

அன்பரசன் said...

உண்மைதாங்க..
நிறைய நல்ல படங்கள் இந்த காரணத்தாலேயே ஓடாம போயிருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்