January 22, 2010

டப்பிங் படங்களின் மாற்றம் (2000 - 2009)

முன்னாட்களில் தமிழ்நாட்டில் டப்பிங் படங்கள் என்றாலே அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்ததாகத்தான் இருக்கும்.

வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளும், நாயகிகளும் தமிழ் சாயம் பூசிக்கொண்ட போது அதை ஆதரித்த தமிழன் அவர்களது படங்கள் சாயம் பூசிக் கொண்ட போது அதை ஆதரிக்கவில்லை. நேரடி இந்திப்படங்கள் இங்கே அபார வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இந்தி டப்பிங் இங்கே சகிக்க முடியாததாகவே இருந்திருக்கிறது.
ரஜினியின் முகத்திற்காகக் கூட அதை இங்கே யாரும் பார்க்கத் தயாராயில்லை. லட்சத்தில் ஒருவன், ராஜகுரு போன்ற படங்களை ரஜினியின் ரசிகர்கள் கூட பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகமே.

அடுத்து கன்னட படங்கள். அதை பெங்களூர்காரர்களே பார்க்க மாட்டார்கள். அதையும் மீறி சில பாலியல் சார்புடைய கன்னட படங்கள் டப் ஆகி வந்தன. அது என்னவோ தெரியவில்லை சரோஜாதேவி, சௌந்தர்யா மற்றும் திவ்யா போன்ற ஏராளமான அழகிகளை உற்பத்தி செய்யும் கன்னட தேசம் ஆண்கள் விஷயத்தில் பாரபட்சமாகவே நடந்து கொள்கிறது. போஸ்டர்களில் ஹீரோக்களின் முகத்தைப் பார்த்தால் கழுதை கூட அதை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. உபேந்திரா போன்று ஓரளவு வித்தியாசமாக படமெடுப்பவர்களின் படங்கள் கூட இங்கே ஓடமாட்டேன் என்கிறது.


மலையாள தேசத்திலிருந்து கமர்சியல் வேல்யு உள்ள திரைப்படங்கள் 80களிலும் 90 களிலும் ஓரளவு இங்கே டப் ஆகி வந்துள்ளன. மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகியோரது போலிஸ் மற்றும் கடத்தல் கதைகள் இங்கே வந்து வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இந்தப் பத்தண்டுகளில் அப்படி வந்து வெற்றி பெற்ற படங்கள் மிகக் குறைவு.

அடுத்தது ஆந்திரா. கால காலமாகவே அங்கிருந்து படங்கள் இங்கே டப் ஆகி வந்துள்ளன. முதலில் புராணப் படங்கள் வந்தன. பின்னர் காந்தாராவ், சோபன் பாபு போன்றோரது அதிரடி ஆக்ஷன் படங்கள் டப் ஆகி வந்தன. பின்னர் விஜய நிர்மலா போன்றவர்கள் டாம் பாய் கேரக்டர்களில் நடித்த ரிவால்வர் ரீட்டா, கன்பைட் காஞ்சனா, டூபான் குயின் போன்ற படங்கள் வந்தன. விட்டலாச்சார்யா கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமலேயே மிரட்டிய மாயாஜாலப் படங்கள் தனி மார்க்கெட்டைக் கொண்டிருந்தன.

இந்தப் படங்கள் அனைத்தையும் பார்த்தால் அவை உள்ளடக்கம் சார்ந்ததாகவே இருக்கும். கதாநாயகனுக்காக டப்பிங் செய்யப்படாமல் உள்ளடக்கத்திற்க்காக டப்பிங் செய்யப்பட்டிருக்கும். இதை மாற்றியது சிரஞ்சீவி தான். கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, மாதவி நடித்து வெளியான கைதி திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சிரஞ்சீவிக்கு இங்கு ஒரு மார்க்கட்டை உருவாக்கியது. அதன்பின் சிரஞ்சீவி நடித்த பல படங்கள் நாயகனுக்காக டப் செய்யப்பட்டன. இதுதாண்டா போலிஸ் வெற்றிக்குப் பின் ராஜ சேகருக்கும், உதயம்,இதயத்தை திருடாதே வெற்றிக்குப் பின் நாகார்ஜுனாவுக்கும் ஒரு மர்க்கெட் உருவானது.

இதில் ஒரு குறிப்படத்தக்க அம்சம் என்னவென்றால் அப்போது தமிழில் உச்சத்தில் இருக்கும் நாயகியுடன் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஒரு முன்னுரிமை இருக்கும். ஸ்ரீதேவி,ராதா ஆகியோர் உச்சத்திலிருக்கும் போது அவர்கள் படங்கள் அதிகமாக டப் ஆகி வந்தன.
சில்க்ஸ்மிதாவக்காகவும் சில படங்கள் டப் செய்யப்பட்டு வந்தன.இது குஷ்பூ காலத்தில் இன்னும் அதிகமானது. (ஹீரோயின் சென்ட்ரிக்). ரோஜா போதை தமிழ்நாட்டு ரசிகர்களை பீடித்திருந்தபோது அவருக்காக வினோத்குமார், பாலகிருஷ்ணா ஆகியோரையெல்லாம் சகித்துக் கொள்ளும் நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டான். உள்ளத்தை அள்ளித்தந்த ரம்பா, காதலன்,பாட்ஷாவுக்குப் பின் நக்மா ஆகியோருக்காவும் இங்கே படங்கள் டப் செய்யப்பட்டன.

இதுதவிர அம்மன், அருந்ததீ போல மிஸ்டிக் கதையமைப்பு உள்ள படங்களும், கமல் மற்றும் ரஜினி தெலுங்கில் பிரத்யேகமாக நடித்த படங்களும் இங்கே டப் ஆகி வந்துள்ளன.

ஆனால் இந்தப் பத்தாண்டுகளில் தெலுங்கு டப்பிங் படங்கள் பெருமளவு குறைந்து விட்டன. அருந்ததீ போல மிகச் சில படங்கள் மட்டுமே (ஏறக்குறைய இல்லை என்றும் சொல்லலாம்) அந்த அளவுக்கு எந்தப் படமும் இங்கே வெற்றி பெற வில்லை.

இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்ன?

1. தெலுங்கு மசாலா படங்களை ரசிக்கக் கூடியவர்களுக்கு இங்கேயே தீனி கிடைக்கிறது. அதீத உணர்ச்சிகர வசனங்கள், சண்டை, பாடல்கள் என கலந்து கட்டி படமெடுக்கும் ஷங்கர், பேரரசு போன்றோர் இங்கேயே வந்துவிட்டார்கள்.

2. கொஞ்சம் வித்தியாசமான படமாக இருந்தால் அதை கவ்விக் கொண்டு வந்துவிட விஜய், ஜெயம் ரவி ஆகியோரது உளவுப்படைகள் அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

3.ஆங்கில டப்பிங் படங்களின் வரவு இந்தப் பத்தாண்டுகளில் முக்கியமான மாற்றம். ஜாக்கிசான் முதல் டேனியல் கிரெக் வரை இங்கே சென்னை தமிழில் பேசுகிறார்கள்.அர்னால்டு சிவனேசன் என்று கூட டைட்டில் போடுவார்கள் போலிருக்கிறது கலிபோர்னிய கவர்னருக்கு. 2012ன் வசூல் அயன் வசூலை சில தியேட்டர்களில் மிஞ்சி விட்டது என்கிறார்கள். அவதாரை ஹாலிவுட் பாலா பார்ப்பதற்குள் கோலிவுட் சங்கர் பார்த்துவிடுகிறார். இதனால் தெலுங்கு டப்பிங் படங்கள் தங்கள் மார்க்கெட்டை படிப்படியாக இழந்து வருகின்றன.

4. முன்னர் ஹீரோயின்களின் ஆயுள் காலம் அதிகமாக இருந்தது. இப்போது இரண்டு ஆண்டுகள் கூட யாரும் தாக்குப் பிடிப்பதில்லை. ஒரு கிரேஸ் ஏற்பட்டு இந்த ஹீரோயினின் படத்தை டப் செய்யலாம என்று யோசிப்பதற்க்குள் அவரது மார்க்கெட் போய்விடுகிறது.

5. வணிக மதிப்புக் கொண்ட நம் நடிகர்கள் யாரும் இப்போது அங்கே பிரத்யேக தெலுங்குப் படங்களில் நடிப்பதில்லை.

மலையாள படங்களின் பட்ஜெட் மிகக் குறைவு என்பதால் அங்கே இப்போது மசாலாப் படங்கள் நம்மவர்களை ஈர்க்கும் அளவுக்கு தயாராவதில்லை. வித்தியாசப் படங்களை இங்கே விக்ரம் (காசி, மஜா), சூர்யா (பேரழகன்) போன்றோரை வைத்து ரீமேக் செய்து விடுகிறார்கள். பழசிராஜா போரில் மட்டுமில்லாமல் வசூலிலும் இங்கே தோல்வியடைந்து விட்டார்.

இந்தப் பத்தண்டுகளில் டப்பிங் படங்களைக் குறித்த வரையில் ஏற்பட்ட மாற்றம் டோலிவுட்டுக்குப் பதில் ஹாலிவுட் என்பதே.

24 comments:

Raju said...

யாருமே நினைச்சுப் பார்க்க முடியாத தலைப்பு தலைவரே..!

பேரரசு கூட ஷங்கரைச் சேர்த்த தங்கள் நுண்ணரசியல் க.க.போ..!

லட்சத்தில் ஒருவன், ராஜகுரு இந்த படங்கள்ல தலைவர் நடிச்சுருக்காரா..?

முரளிகண்ணன் said...

இதுபோக இன்னும் ஆறேழு ரஜினி இந்தி டப்பிங் படம் இருக்கு ராஜு. திராவிட மொழிகளுக்குள்ள லிப் சிங்கிங் கொஞ்சம் மெனக்கெட்டா பண்ணிடலாம். ஆனா இந்தி வசனத்துக்கு லிப் சிங் பண்றது கஷ்டம். அதனால படம் பார்க்கும்பொதே எரிச்சல் வரும்.

Ashok D said...

//அவதாரை ஹாலிவுட் பாலா பார்ப்பதற்குள் கோலிவுட் சங்கர் பார்த்துவிடுகிறார்//
சொல்லாடலும் பொருளாடலும் :)))

முரளிகண்ணன் said...

நன்றி அசோக்

நர்சிம் said...

தலைவரே..அருமை

முரளிகண்ணன் said...

நன்றி தலைவரே

saravanan said...

கலக்குரிஙக சார்

முரளிகண்ணன் said...

Thankyou Saravanan.

கோவி.கண்ணன் said...

//அதீத உணர்ச்சிகர வசனங்கள், சண்டை, பாடல்கள் என கலந்து கட்டி படமெடுக்கும் ஷங்கர், பேரரசு போன்றோர் இங்கேயே வந்துவிட்டார்கள்.//

பொங்கல் பட்டாசு !
:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//போஸ்டர்களில் ஹீரோக்களின் முகத்தைப் பார்த்தால் கழுதை கூட அதை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது//

அங்கிருக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கும் வாக்கியம் தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ரோஜா போதை தமிழ்நாட்டு ரசிகர்களை பீடித்திருந்தபோது அவருக்காக வினோத்குமார், பாலகிருஷ்ணா ஆகியோரையெல்லாம் சகித்துக் கொள்ளும் நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டான்.//

தமிழனின் சகிப்புத் தன்மைக்கு ஒரு அற்புத உதாரணம்,

போக்கிரிக்காதலன் என்றொரு படம், ரோஜா, ரம்பா, நக்மா மற்றும் சில முண்ணனி நாயகிகள் சிலர். இவர்களோடு ஒரு ஹீரோ


பார்த்து மகிழ்ந்தோம். இதையெல்லாம் பார்க்க வாய்ப்பு வழங்கிய மணீஸ் தியேட்டரில் இப்போது உன்னைப் போல் ஒருவன், அவதார் போன்ற படங்கள் எல்லாம் ஓடுகிறது தல..,

kanagu said...

kalakkal padhivu anna...

athuvum hollywood bala, kollywood sankar oppeedu abaaram :) :)

Sukumar said...

கலக்கல் ஆராய்ச்சி கட்டுரை பாஸ்....

எம்.எம்.அப்துல்லா said...

அலசல் அருமையாயிருக்கு அண்ணே.

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழ் படங்களிலே எல்லாமே இருக்கும் போது பிறமொழி படங்கள் எதுக்கு ..

ஓட்டல் சாப்பாடு தேவையே இல்லை . என்ன சரியா முரளி .

சிநேகிதன் அக்பர் said...

அருமை முரளி,

கன்னடப்படங்களைப்பற்றி நீங்கள் கூற்று சரியே.

ஜெட்லி... said...

//பழசிராஜா போரில் மட்டுமில்லாமல் வசூலிலும் இங்கே தோல்வியடைந்து விட்டார்.//


பாவம்....

மதன் சிந்தாமணி said...

murali essay is very nice..inbelievable..lot of improvement...u almost become a professional wrtter like charu.
i have some suggestion..

lot of information u r using like a technical script..
make it as a story

Gokul R said...

Murali,

I need an info (trivia) from you.

Dr.Rajasekhar (Telugu hero) has remade the Malayalam movie Kireedam (Mohanlal starrer) in the 90s (Even before Ajith did). I wanted to know the telugu title and the tamil dubbed title of this movie. It is said that this was the movie Dr.Rajasekhar acted just before "Idhu dhan da Police". Do you know about this or Can you find the answer for me ?

And, Can I have your email id ?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Sambath said...

Fantastic one Murali..
Very nice analysis..nice article with lot of info!

Vincent said...

எல்லாமே கரெக்டுதான். ஆனா விஜயசாந்திய எப்புடி தல மறந்தீங்க. "பூ ஒன்று புயலானது" ல ஆரம்பிச்சு ஒரு புயலாவே ரொம்ப நாள் தமிழ்நாட்ட சுத்தியடிச்சத மறந்துட்டீங்களே தல. "வைஜயந்தி IPS" லாம் கட்டுன கல்லா சில நேரடி தமிழ் படங்களே கட்டுனது இல்லையே.

கோவி.கண்ணன் said...

//ஆனால் இந்தப் பத்தாண்டுகளில் தெலுங்கு டப்பிங் படங்கள் பெருமளவு குறைந்து விட்டன. அருந்ததீ போல மிகச் சில படங்கள் மட்டுமே (ஏறக்குறைய இல்லை என்றும் சொல்லலாம்) அந்த அளவுக்கு எந்தப் படமும் இங்கே வெற்றி பெற வில்லை.//

இராமநாரயணன் டைப் படங்கள் குறிப்பாக அம்மன் படம் நன்றாக ஓடியது, அதைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் நடித்த அனைத்து பக்தி படங்களும் ஓரளவு ஓடியது

அன்புடன் மலிக்கா said...

நல்ல அலசல்.

இங்கும் ஓர் நீரோடை இப்போதுதான் வருகிறேன் பார்க்கிறேன். அருமை..
http://niroodai.blogspot.com