தமிழ்நாட்டில்
நடிகர் ஒருவர் ஆக்ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான்
போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள்ளி செல்லும் காலத்தில், ஏதாவது ஒரு கட்டத்தில்
பெரும்பாலான பையன்களின் கனவாக போலிஸ் வேலை இருக்கும். சினிமாக்களாலோ அல்லது குடும்பம்,
நட்பு, உறவுகளாலோ அந்த பிம்பம் அவன் மனதில் உருவாக்கப்பட்டு இருக்கும். அந்தக் கனவுடன்
இருக்கும் போது, யாராவது ஒரு நடிகர் போலிஸ் வேடத்தில் கலக்கினால் அந்த நடிகரின் ரசிகராக
அவன் மாறவும் வாய்ப்பு அதிகம்.
அதிகாரியாகத்தான்
அவன் விரும்புவானே அன்றி, எந்தப் பையனும் கான்ஸ்டபிளாக விரும்ப மாட்டான். திரைப்படங்களில்
கூட நாயகன் பெரும்பாலும் மினிமம் சப் இன்ஸ்பெக்டர் ரோலில் தான் இருப்பார். மருதமலை
போன்ற படங்களில் ஹீரோ கான்ஸ்டபிளாக வந்தாலும், அவர் சப் இன்ஸ்பெக்டர் எக்ஸாம் எழுதியிருப்பார்.
மலைக்கள்ளன் காலம்
தொடங்கி தங்கப்பதக்கம், வாழ்க்கைச்சக்கரம், உள்ளே வெளியே, சிங்கம் வரை ஆண்டுகள் பல
கடந்தாலும் தமிழ்சினிமாவில் ஏட்டுகளுக்கும், கான்ஸ்டபிளுக்கும் காமெடி, குணச்சித்திர
வேடங்களே வழங்கப்படுகின்றன. அதிலும் நேர்மையாக இருந்தால் அவரை காலி செய்து விடுவதாகவே
காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனால் எந்த
பையனும் கனவிலும் கூட கான்ஸ்டபிள் வேலைக்கு ஆசைப்படுவதில்லை.
தற்போது தமிழ்நாட்டில்
கான்ஸ்டபிள் வேலை என்பது நிச்சயம் மரியாதைக்குரியது அல்ல, நாம் ஏதாவது சிக்கலில் மாட்டாத
வரை. நாம் சிக்கலில் இருக்கும் போது கான்ஸ்டபிளும் கமிஷனராகத்தான் நம் கண்ணுக்கு தெரிவார்.
வாழ்க்கைச் சக்கரம்
படத்தில் கவுண்டமணி சொல்வார், “ அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் மட்டும் வாங்கினால் லத்தியைக்
கூட தூக்க முடியாது” என்று. அது இன்றளவும் உண்மை. கான்ஸ்டபிளுக்கு 10ஆம் வகுப்பு தகுதியாக
இருப்பதால், அவர்களுக்கு கிரேட் பே மிகவும் குறைவு. ரேஷனில் சிறப்பு ஒதுக்கீடு, போலிஸ்
கேண்டின் ஆகியவை இருந்தாலும் அரசு சம்பளத்தில் ஒருவர் மட்டும் வேலை பார்த்து குடும்பத்தை
மரியாதையாக நடத்த முடியாது.
திரைப்படங்களில்
எல்லாம் காட்டுவது போல செலக்ஷன் முடிந்த உடன் நேரடியாக போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து
விட முடியாது. அதெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்னர். அப்பொதெல்லாம் ட்ரைனிங் முடிந்த
உடன் போலிஸ் வாகனத்தில் அழைத்து வந்து ஸ்டேஷனில் விட்டுச் செல்வார்கள். இப்போது முதலில்
ஒரு ஆண்டு ட்ரைனிங். பின்னர் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஏதாவது ஒரு பட்டாலியனில் பணியாற்ற
வேண்டும். தமிழ்நாட்டில் 23 இடங்களில் இது போன்ற பட்டாலியன்கள் உள்ளன. பின்னர் மூன்று ஆண்டுகள் ஆயுதப் படை பிரிவு. சில பிரைட்டான
கேண்டிடேட்களை ட்ரைனிங் முடிந்ததும் நேரடியாக ஆயுதப் படை பிரிவுக்கு ரெக்ரூட் செய்வதும்
உண்டு. அதன்பின் காவல் நிலையங்களில் உண்டாகும் காலியிடங்களுக்கு ஏற்ப கான்ஸ்டபிளாக போஸ்டிங் போடப்படுவார்கள்.
எனவே சாதாரணமாக
ஒருவர் கான்ஸ்டபிளாக ஏழாண்டுகள் பிடிக்கும். பின்னர் ஹெட் கான்ஸ்டபிள் ஆகி, சிறப்பு
எஸ் ஐ ஆக மாறி எஸ் ஐ ஆவதற்குள் ரிட்டயர்மெண்ட்டே ஆகிவிடும்.
இந்த காலகட்டத்தில்
எது கடினமான கால கட்டம் என்றால், மிளகாய் எந்த இடத்தில் உறைக்கும் என்று கேட்பதைப்போல.
ட்ரைனிங்கில் கலோக்கியலாகச்
சொல்வதென்றால் நுங்கைப் பிதுக்கி விடுவார்கள். போலிஸ் பயிற்சி கல்லூரி என்பதே தண்டணை
போஸ்டிங் என்பதால் உயர் அதிகாரியில் இருந்து கடைநிலை வரை கர்புர் என்றே இருப்பார்கள்.
முதலில் சிறப்பாக பெர்பார்ம் பண்ணி பின்னர் நொண்டியடித்தால் டார்ச்சர் செய்து விடுவார்கள்.
இங்கு ஆரம்பத்தில் மங்குனி போல் இருப்பதே சாலச் சிறந்தது.
அடுத்த கட்டம்,
பட்டாலியன். இவர்களின் வேலை எங்காவது ஜாதி, மதக் கலவரம் நடந்தால் பந்தோபஸ்துக்குப்
போவது, முதல் அமைச்சர், கவர்னர், பிரதமர் விசிட்டின் போது பந்தோபஸ்து, ஏதாவது சிலைகள்
தாக்கப்பட்டால் பல நாட்கள் அந்த ஏரியாவில் தேவுடு காப்பது, சித்திரை, வைகாசி கிராமத்
திருவிழா பந்தோபஸ்து, எலெக்சன் டியூட்டி போன்றவை.
இங்குதான் இவர்களின்
கெட்டகாலம் கொடிகட்டிப் பறக்கும். இயற்கை அழைப்புக்கு கூட ஒதுங்க முடியாது. அந்த நேரத்தில்
வரும் உயர் அதிகாரி சார்ஜ் மெமோ கொடுத்துவிட்டால் எஸ் ஐ ஆவது சிரமமாகி விடும். எனவே
ஐம்புலன்களையும் மட்டுமல்ல சில துவாரங்களையும் அடக்கியே வாழப் பழக வேண்டும்.
இன்னொரு பிரச்சினை, உள்ளாடை அணிந்து, இறுக்கமான பேண்ட் அணிந்து, இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கடுமையான வெயிலில் பணிபுரிவதால் இவர்களுக்கு
தொடை இடுக்கில்வேர்வை தங்கி படை வந்துவிடும். உடை மாற்ற நேரம் கிடைக்காது. உடையும் கொண்டு செல்ல முடியாது. படைப்பிரிவு என்று அந்தக் காலத்தில் அனுபவித்து தான்
பெயர் வைத்திருப்பார்கள் போலும். கேண்டிட்
பவுடர், லிச்சென்ஷா போன்றவை இல்லாமல் காலம் தள்ள முடியாது. மேலும் இவர்களுக்கு ஒதுக்கப்படும்
கழிவறைகளும் அவ்வளவு சுத்தமாய் இராது. எனவே இன்ஃபெக்ஷனும் எளிதில் வந்து விடும்.
ஆண்களுக்கே இப்படியென்றால்
பெண்களுக்கு எப்படி இருக்கும்?. அவர்களால் சிறுநீரை பல மணி நேரம் அடக்க முடியும். ஆனால்
அவர்களின் சிறுநீர்பாதை ஆணை விட சிறியது என்பதால் இன்பெக்ஷனுக்கான வாய்ப்புகள் மிக
அதிகம்.
பெரும்பாலான கான்ஸ்டபிள்கள்
காலைக் கடனை அடக்கி அடக்கி பழகுவதால் அவர்களுக்கு இயற்கை அழைப்பு செயற்கை அழைப்பாகவே
மாறிவிடும். இரவில் நான்கு வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும்.
பின்னர் காலை எழுந்ததும் பல் விளக்கி, நிறையத் தண்ணீர் குடித்து, சிலபல டம்ளர்கள் தேநீர்
குடித்தால்தான் அவர்களுக்கு சுமுகமாகப் போகும்.
ஒருவழியாய் கான்ஸ்டபிள்
ஆகி ஸ்டேஷனில் நுழைந்தவுடன் அல்லறை சில்லறை வேலைகளை ஒதுக்குவார்கள். இரவு பாரா, கோர்ட்
டூட்டி என பார்த்து, பழகவேண்டும். பின்னர் எஃப் ஐ ஆர் எழுதுவது. இது ஒரு கலை. சிலருக்கு
இதைப் போன்ற டாக்குமெண்டுகள் எழுதுவது நன்றாக வரும். அவர்கள் ஸ்டேசனின் செல்லப் பிள்ளையாக
இருப்பார்கள். இப்போது உள்ளவர்கள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது பொதுவான கருத்து. எனவே
சில இடங்களில் ரிட்டயரான எஸ் ஐக்கள் ஸ்டேஷன்
டாக்குமெண்டுகள் எழுதிக் கொடுத்து வருகிறார்கள். சிக்கலான கேஸ்களுக்கு கேஸ் டயரிகளை
ரிட்டயரான டி எஸ் பிக்கள் வந்து எழுதிக் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்தே இந்த துறையில்
நிலவும் திறமைப் பற்றாக்குறையை அறியலாம்.
இந்தக் கான்ஸ்டபிள்கள்
தங்கள் பணிக்காலத்தில் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை “நல்லதுங்க அய்யா”. தங்களை விட
ஒரு படி மேலான அதிகாரிகளிடம் இவர்கள் இந்த வார்த்தையைத்தான் உச்சரிக்க வேண்டும். சார்
என்று அழைத்தால் கூட அவ்வளவுதான். அதிகாரிகள் சவட்டி எடுத்து விடுவார்கள். நேரம் கெட்ட
நேரத்தில் சாப்பிடுவது, மன அழுத்தத்தின் காரணமாக மது அருந்துவது, இரவு நேரத்தில் நிறைய
சாப்பிடுவது போன்ற காரணங்களால் தொப்பை இவர்களுக்கு சீக்கிரம் வந்துவிடும். இலவச இணைப்பாக
சுகர், பிபி. எப்பொழுதாவது அப்பிராணிகள் சிக்கும்போது போலிஸ் வெளுத்து வாங்க ஒரு முக்கிய
காரணம் அவர்களின் மன அழுத்தமே.
நேர்மையாக இருந்தால்
பந்தாடப்பட்டு பைத்தியக்கார பட்டம் கிடைக்கும். லஞ்சம் வாங்க பழகிவிட்டால் ஒக்கே. சிலர்
இரண்டுக்கும் இடையில் இருப்பார்கள். அவர்கள் மங்குனி/மசையாக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்.
கொடுக்கும் வேலைகளை உடனே ஏற்றுக் கொண்டு சொதப்பிக் கொண்டேயிருந்தால் அவர்களின் ஸ்கீம்
ஆஃப் திங்ஸில் சொதப்பல் கேஸை சேர்க்க மாட்டார்கள். தப்பித்துக் கொள்ளலாம்.
போலிஸுக்கு ஜாக்பாட்
என்பது திருட்டு கேஸ் பிடிபடுவது, பெண்களின் அனாதைப்பிணங்கள் சிக்குவது போன்றவை. கள்ளக்
காதலில் ஓடி வரும் பெண்கள் நிறைய நகை போட்டிருப்பார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டு
கண்காணாத இடங்களில் கிடந்தால் கிடைக்கும் நகைகளை ஸ்டேஷனில் பங்கிட்டுக் கொள்வார்கள்.
தற்காலத்தில் இம்மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒரு கான்ஸ்டபிள் இப்படி
50 பவுனுக்கு மேற்பட்ட நகையுடன் பிணத்தைக் கண்டவர், அதை ஓப்பன் மைக்கில் சொல்லிவிட்டார்.
சரகத்தில் உள்ள அனைத்து ஸ்டேசனுக்கும் விஷயம் பரவிவிட்டது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எஸ்
ஐ கொதித்துப் போய்விட்டார். அவனே கூட வச்சிக்கிட்டு போயிருக்கலாமே. யாருக்கும் பிரயோஜனம்
இல்லாம பண்ணிட்டானே என பல நாள் புலம்பிக் கொண்டேயிருந்தார்.
போக்குவரத்து பிரிவு
இன்னும் மோசம். வெயிலில் காய வேண்டும். சிறைத்துறை தனி ரெக்ரூட்மெண்ட். கியூ பிராஞ்ச்,
புட் செல், மதுவிலக்கு பிரிவு, சிபிசிஐடி பிரிவு ஆகியவற்றில் மேலதிகாரியை அனுசரித்துக்
கொண்டால் எளிதில் காலம் தள்ளி விடலாம். சைபர் கிரைமில் தற்போது அதிகாரிகளாகத்தான் உள்ளார்கள்.
கான்ஸ்டபிள் ஆகி இணையதள கண்காணிப்பு பணி என்றால் குஜாலாக இருக்கும்.
ஆனால் லா அண்ட்
ஆர்டரில் நேர்மையாக இருக்கும் அதிகாரி அல்லது கான்ஸ்டபிள் என்பது கனவுதான். நானும்
பள்ளியில் படிக்கும் போது, என்பீல்ட் புல்லட்டில் போய் சமூக விரோதிகளை அடித்து உதைப்பது
போல் கனவு கண்டேன். பொதுவாக கனவு நிறைவேறாமல் போனால் துக்கமாய் இருக்கும். ஆனால் இந்த
கனவு நிறைவேறாததில் ஆனந்தமே.
25 comments:
அப்படியே ஒரு முறை கான்ஸ்டபிள் வாழ்க்கை வாழ்ந்த மாதிரி இருக்கு சார் உங்க எழுத்து
மிக்க நன்றி நண்பர் நடிநாராயணன் மணி.
நமக்கு இப்பவும் காக்கி சட்டை போட்ட எல்லாருமே போலீஸ்தான்.. தோள் பட்டைல நட்சத்திரம் இருக்கான்னு எல்லாம் யாருங்க பாக்குறா? லத்தியோட இருக்கும்போது வாட்ச் மேனுக்கும், போலிசுக்குமே வித்தியாசம் தெரியாத ஆளுங்கதான் இங்க அதிகம்.
இன்னும் இந்த உயரதிகாரி வீட்டுக்கு வேலை செய்யறது எல்லா இருக்குமே? ஆரம்பிச்சா ஒரு தொடராவே எழுதலாமே நீங்க?
நன்றி அரவிந்த்.
மேலதிகாரி வீட்டு வேலை, வட்டம் மாவட்டம் போன்றோரின் ஏவல், அரசியல் நிர்பந்தம் காரணமாக குற்றவாளியை விடுவித்தல் & நிரபராதியை தண்டித்தல் இதையெல்லாம் கவர் பண்ணி இன்னொரு பகுதி எழுதுங்க மு க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி ஸ்ரீராம்.
As usual so much of research! Kudos, sir!
நன்றி சேது.
நல்லதுங்க ஐயா, பலமுறை கேட்டிருக்கிறேன். ஆமாம் நண்பர்கள் சொல்வது போல இன்னும் கொஞ்சம் டிடெய்லா எழுதுங்க சைண்டிஸ்.
Excellent Scientist. So much of info ! Feel sad for them
அண்ணே... ஒவ்வொரு விசயத்திலும் எவ்ளோ டீடெய்லிங் வச்சுருக்கீங்க. சும்மா பதிவா எழுதுனா மட்டும் போதாது, கொஞ்சம் சிரமமேற்று நாவலாக்குங்க.
நன்றி ஷங்கர்
நன்றி மோகன்குமார்
நன்றி பாலகுமார்
நல்ல கட்டுரை.
அத்திப்பூ!!
நன்றி வினோத் கௌதம்
நன்றி இந்தியன்
good work.. can be more elaborative with psychological, social, economical approach as well
நன்றி அணு. முயற்சிக்கிறேன்.
நல்ல இடுகை முரளி..தொடருங்க..
அய்யா அருமைங்கய்யா.
ஒரு காக்கி சட்டைக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதையா
வில்லன் இனி என் சக தமிழன்
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி வாசு சார்
நன்றி கார்த்திகேயன்
இவ்வளவு சிரமம் மேற்கொண்டு பதிவை எழுதியதிற்கே உங்களுக்கு என் பாராட்டுகள்.பதிவு அவ்வளவு சுவரசியமாக இருந்தது.
அப்படியே பதிவை இலவசமாக ஈமெயில்.மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தினால் பயன் உள்ளதாக இருக்கும்.வைத்தபின் எப்போது இருந்தாலும் தெரிய படுத்தவும்
star9688@gmail.com
செம டீட்டெயிலிங் சார்.....!
I Came to know about your blogspot through Writer Jeyamohan's Website. I read this post about 'Tamil Nadu Constables', My father is a retired head constable and i have heard everything you have written here from my father. Now my friends are in the field and i have seen them using 'Nallanthunga Ayya' while speaking to their officers through phone. An excellent post.
Sema writing sir
Post a Comment