முதல் பாகத்தை படிக்க இங்கே கிளிக்கவும்
குணா
விலைமாது மகன் என்ற ஏச்சை யாராலும் தாங்கமுடியாது. வாழ்க்கையே ஒருவனுக்கு அப்படித்தான் என்றால் எவ்வளவு மனச்சிதைவு ஏற்படும்?. வாழ்க்கையை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பெண்ணையே விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள் ஆண்கள். தாங்க முடியா சோகத்தில் இருப்பவனை மீட்டெடுக்கப் போகும் பெண்ணை, வாழ்வை சொர்க்கமாக்கப் போகும் பெண்ணை எவ்வளவு காதலிக்கலாம்? அப்படியான காதல்தான் குணாவின் காதல். விலைமாதுவின் மகனாகப் பிறந்த கமல் தன்னை மீட்டெடுக்கப் போகும் அபிராமியாக ரோஷினியை சந்திக்கிறார். அவளை கடத்திக்கொண்டு மலைப்பிரதேசத்துக்கு செல்கிறார். புனிதமான காதலை மனிதர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? துரத்துகிறார்கள். காதலி இறக்க காதலனும் தற்கொலை செய்து கொள்கிறான்.
சேது
அழகான பெண்கள் தான் காதலிக்கப்படுவார்கள் என்றால் ஐஸ்வர்யா ராயும்,மாதுரி தீட்சித்தும் தான் காதலிக்கப் படுவார்கள். அழகான் ஆண் என்றால் அர்விந்த் சாமியும், அக்ஷய்குமாரும் தான் காதலிக்கப் படுவார்கள். பணக்கார ஆண்கள் தான் காதலிக்கப் படுவார்கள் என்றால் டாட்டா பிர்லா தான் காதலிக்கப்படுவார்கள். ஆனால் எங்கும் காதல் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஒரு பெண், இவனை மணந்து கொண்டால் நாம் நல்லாயிருக்கலாம் என்று நினைக்கும் போதும், ஒரு ஆண், இவளை நான் மணந்து கொண்டால் மற்றவர்களைவிட சிறப்பாக வைத்துக் கொள்ளலாமெ என்று நினைக்கும் போது வருவது தான் காதல். -- இது நான் கல்லூரி ஆண்டு (1995) மலருக்காக எழுதி நிராகரிக்கப்பட்ட கதையில் வரும் ஒரு பகுதி.
சேதுவில் விக்ரம் காதலுக்கு சொல்லும் காரணம் "அவளை ராணி மாதிரி பார்த்துக்கிடனும்டா" , பின்னர் அவளிடம் சொல்லும் போது " என்னய கட்டுனா நல்லா இருப்ப, இல்லாட்டி உன் மாமனுக்கு பேன் தான் பார்க்கணும். தான் நன்றாக வைக்க ஆசைப்பட்ட பெண் பின்னர் இறந்ததும் பாண்டி மடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறான்.
காதல் கோட்டை
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு - ஆணும் பெண்ணுமாய் இருந்து சுபமாய் முடிந்தால் எப்படி இருக்கும்?. இப்படித்தான் இருக்கும். 1996 ல் வெளிவந்த இந்த டிரெண்ட் செட்டரால் பல காதல் படங்கள் வெளியாகின. பார்க்காமலே காதலை தொடர்ந்து, பல வகை காதல்கள் படையெடுத்தன. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது முதன் முறையாக தமிழுக்கு இப்படத்தின் மூலம் கிடைத்தது. அகத்தியன் அந்த பெருமைக்கு சொந்தக்காரர். வாய்ப்பில்லாமல் கவர்ச்சி ஆட்டம் (சிவசக்தி) போட்ட தேவயானிக்கு மறுவாழ்வு. தமிழகத்தின் செல்லப்பெண் ஆனார். ஆசை வான்மதிக்குப் பின்னர் வந்து அஜீத்தை தமிழில் நிலைநிறுத்தியது இந்தப்படம்.
மௌன ராகம்
திருமண்த்திற்க்கு முன் காதல். காதலன் இறந்துவிட்டாலும் மறக்க முடியவில்லை. கணவனின் அன்பை முடிவில் புரிந்து சுபம். இந்தப்படத்தில் 20 நிமிடம் வரும் கார்த்திக் 25 ஆண்டுகள் கழித்தும் ஞாபகத்தில் இருப்பார். புனேயில் உள்ள பிலிம்இன்ஸ்டிட்யூட்ன் ரோல் ஆப் ஹானரில் சிறந்த துணை கதாபாத்திர நடிப்புக்காக கார்த்திக் பெயர் இப்பாத்திரத்துக்காக இடம்பெற்றுள்ளது. இதற்க்குமுன் பகல்நிலவு, இதயகோவில் ஆகிய படங்களை இயக்கி இருந்தாலும் இப்படமே மணிரத்னத்திற்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. இளையராஜாவின் பிண்ணனி இசையை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம். சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம். மிடில் கிளாஸ் பெண்களின் பிம்பமாக ரேவதி மக்கள் மனதில் பதிந்த படம்.
26 comments:
சேது நான் சென்னையில் பார்த்த முதல் திரைப்படம்.இடைவேளை வரைக்கும் தியேட்டரில் ஓவர் அலம்பு பண்ணியவர்கள் படம் முடியும் போது ஒரு சின்ன சத்தம் கூட கிடையாது. அவ்வளவு அமைதி. விகரமுக்கு சேது என்றால் அஜித்துக்கு காதல் கோட்டை. மவுன \ராகம் யதார்த்த திருமன வாழ்க்கையை சொல்லி வெற்றியடைந்த படம். கார்த்திக் நடிப்பு- ஹைலைட். குணாவை தொலைக்காட்சியில் அதிகம் பார்த்தது.
பூவே உனக்காக வை சேர்த்து இருக்கலாம்.
1993 ஆம் திரைப்படங்கள் பதிவை எப்போது எழுதப்போகிறீர்கள்? ஆவலுடன் எதிபார்க்கிறேன்.
குணாவிற்கு நீங்கள் எழுதிய கருத்து அருமை... பாட்டுப்புத்தகத்தில் போடும் கதைச்சுருக்கத்தைப் போல் அருமையாக இருந்தது...(பாட்டுப்புத்தகங்களைப் பற்றியும் ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்)
மவுன ராகம் அருமையான படம்,,,ஆனால் கதையின் அடிநாதம், ம்கேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தை ஒட்டியது...இருந்தாலும் இருவேறு சிறந்த இயக்குனர்களின் கைகளில் பட்டு அழகாகப் பரிமளித்தது...
'காதல் கோட்டை' கதை தன்னுடையது என பாலு சண்டை இட்டார்,, அவருக்கு சிவசக்தி பாண்டியன் வாய்ப்பளித்து ,'காலமெல்லாம் காதல் வாழ்க' வாய்ப்பளித்தார்.இரண்டிற்கும் ஒளிப்பதிவு தங்கர் பச்சன்..அதற்கப்புறம் பாலு பிரகாசிக்கவில்லை....
அழகான தொகுப்புகள்.. இன்னமும் தொடருமில்லையா?
//சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம்.//
உண்மை முரளிகண்ணன்..
மிக நல்ல பகுப்பாய்வு..
வழக்கம் போல் கலக்கல். அத்தனை விபரங்களும் மீண்டும் அந்த படங்களைப்பார்த்த தியேட்டர்களுக்கும் தருணத்திற்கும் அழைத்துச்செல்கிறது..
தொடருங்கள்.. பின் தொடர்வேன்..
நர்சிம்
வேறு ஒருவர் சொல்லியிருப்பதுபோல நீங்கள் பாட்டுப்புத்தகங்கள் பற்றி எழுதினால் நன்றாக வரும் என்று தோன்றுகிறது.
போலித்தனம் இல்லாத நேர்மையான எழுத்து தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. எழுதுங்கள்.
நல்லாயிருக்கு பாஸ்... வரிகள் சும்மா புகுந்து விளையாடுது.
//நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம். சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம். மிடில் //
இன்று வரை அந்த படத்தில் பாடல்கள் மேடையில் பாடப்படுகின்றன.
மத்திய (அல்லது மேல் மத்திய ) வர்க்கத்தில் 1980களின் வாழ்க்கையின் ஆவணமாக அந்த படம் இருந்தது.
அரசு அலுவலக வேலை செய்யும் த்நதை மகளுக்கு பொறியாளர் மாப்பிள்ளையை தேடிய காலகட்டம் அது.
--
அந்த கால கார், அந்த கால தொலைபேசி, அந்த கால பயணச்சீட்டு (டிரவல் ஏஜென்சியிலிருந்து வருவது), அந்த கால வீடு (ப்ளாட் அல்ல) என்று அதை ஒரு “பீரியட் படம்” என்று கூட சொல்லலாம்
//பூவே உனக்காக //
அப்படியே காதல் கோட்டைக்கு பின் வந்த நாக்கை வெட்டும் காதல், கண் தான காதல் போன்ற படங்களையும் சேர்த்து ஒரு இடுகை எழுதுங்கள்
http://www.ularal.com/tag/புழங்கும்-சொல்/
குணா படத்தைப் பற்றிய என்னோட பார்வை என்னன்னா, கமல் ரொம்ப அழகா, தெளிவா, விலைமாதுவோட மகனா பிறப்பது கொடுமை என்பதைவிட, அப்படியான கூற்றை அவளை உருவாக்கிய சமூகமே அந்தக் குழந்தையின் மனதில் விதைத்து தீவிரப்படுத்துகிறது, என்பதை அவ்ளோ சூப்பரா சொல்லிருப்பார். உண்மையும் அதுதானே.
மௌனராகம் படத்தைப் பற்றிய உங்களின் விமர்சனம் சூப்பர். அதேப்போல புருனோ சார் பின்னூட்டத்தையும் வழிமொழிகிறேன்.
சேது படம் ரொம்ப நாள் கழிச்சு, சென்னை திருநெல்வேலி, மதுரையை தாண்டியும் தமிழகம் இருக்கிறது. அங்குள்ள இளைஞர்களுக்கும் கல்லூரி வாழ்க்கை, காதல் இருக்கிறது, என்ற வாழ்வியலை பல வருடங்கள் கழித்து(ராபர்ட் ராஜசேகர் படங்களில் இதனை பார்க்கலாம்) காட்டிய படம். நான் இன்று வரை இதனோட இரண்டாம் பாதி பார்த்ததில்லை:(:(:(
காதல் கோட்டை பத்தி நீங்க சொல்லியிருக்க அவ்வளவும் உண்மை. ஆனா அந்தப் படத்தில் க்ளைமேக்ஸ் ஏன் அவ்ளோ சொதப்பல்னு புரியல. அந்தப்படத்தோட ரியல் ஹீரோயின் ஹீராவை மறந்துட்டீங்களே:):):)
ஆனா இந்தப் படம்தான் புருனோ சார் சொல்லியிருக்க மாதிரி பல கொலைவெறிப்படங்களுக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது. அதே மாதிரி ட்ரை காமடி சீசன் ஆரம்பிச்சதும் இந்தப் படத்தில் இருந்துதான்னு நினைக்கறேன்
மொத்தத்தில் அனைத்து விமர்சனங்களும் கலக்கலோ கலக்கல்
//நீங்கள் பாட்டுப்புத்தகங்கள் பற்றி எழுதினால் நன்றாக வரும் என்று தோன்றுகிறது//
நீங்க இதைப்பத்தி ஏற்கனவே எழுதி இருக்கீங்க தானே?
அத்திரி வருகைக்கு நன்றி. என் அருமை நண்பர் புருனோ அவர்கள் 1993 ஆம் ஆண்டின் படங்கள் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார்.
சென்ஷி, ஆழியூரான், கடையம் ஆனந்த், நர்சிம்.
தங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை
ராப் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவை விட நன்றாக இருக்கின்றன
தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி
ராப் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவை விட நன்றாக இருக்கின்றன
தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி
புருனோ தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி
புருனோ தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி
http://www.ularal.com/tag/புழங்கும்-சொல்/
குறித்து உங்களிடம் இருந்து ஒரு இடுகை எதிர்பார்க்கிறோம் :) :)
காதலுக்கு மரியாதையை விட்டுவிட்டீர்களே..
நீ்ங்கள் பட்டியலிட்ட படங்கள் அனைத்துமே சிறப்பென்றாலும் 'மவுனராகமே' எனது எவர்கிரீன். காரணம் இளமைத்துள்ளல் என்பதின் நிஜமான அர்த்தமாக இருந்த கார்த்திக்கைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்.
அ.ஆ. என்றொரு படம் BF போர்வையில் வந்துவிட்டது. அது மட்டும் வேறுமாதிரி வந்திருந்தால் அதுதான் தலையாயிருக்கும்
எல்லாம் தரமான படங்கள்.. பட்டியல் தொடர வாழ்த்துக்கள்
//தான் நன்றாக வைக்க ஆசைப்பட்ட பெண் பின்னர் இறந்ததும் பாண்டி மடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறான். //
ரொம்ப பாவமா இருக்கும்
//காதல் கோட்டை//
ரொம்ப எளிமையான கதை. தேவையில்லாமல் ஒரு சண்டை காட்சியை புகுத்தி இருப்பார்கள்.
//இந்தப்படத்தில் 20 நிமிடம் வரும் கார்த்திக் 25 ஆண்டுகள் கழித்தும் ஞாபகத்தில் இருப்பார். //
கலக்கி எடுத்து இருப்பார்..பெண்களின் ஆதர்ச நாயகன்
//நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம்//
எப்போதும் மனதை வருடும் பாடல்கள்.
//சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம்//
ஹா ஹா ஹா ஹா
Post a Comment