தமிழ்சினிமாவில் காதல் இல்லாத படங்கள் குறைவு. காதல் மட்டுமே கொண்ட படங்கள் நிறைய உள்ளன. அதில் முக்கிய படங்களைப் பற்றிய ஒரு பார்வை
கிளிஞ்சல்கள் (1981)
காதலன் இந்து, கட்டுப்பாடான தந்தை. காதலி கிறிஸ்டியன். தந்தை சோஷியல் ஆனால் மதத்தை விட்டுக் கொடுக்காதவர். முடிவில் காதல் நிறைவேறாமல் இறக்கிறார்கள் காதலர்கள். இந்த படமும் அதிக சினிமாத்தனம் இல்லாமல், சிறுநகர பிண்ணனியில் எடுக்கப்பட்ட படம். இயக்கம் துரை. பாடல் இசை டி ஆர். மோகன், பூர்னிமா ஜெயராம், திலீப் நடித்தது.
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது
சின்ன சின்ன கண்ணா
கிளையில்லா மரங்களில்
போன்ற பாடல்கள் ஹிட்.
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பாடல் அரசு தொலைக்காட்சி மட்டும் இருந்த போது சித்ரமாலா வில் அடுக்கடி ஒளிபரப்ப பட்டது. சின்ன சின்ன கண்ணா பாடலில் காதலனை கவர்வதற்காக பெண்கள் பக்கத்து வீட்டு சிறுவனை கொஞ்சுவதை காடசிப்படுத்தியிருப்பார்கள்.
வாழ்வே மாயம் (1982)
பல முயற்சிகளுக்குப்பின் காதலில் வெற்றி பெறுகிறான் காதலன். ஆனால் தனக்கு கேன்சர் என அறிந்ததும் மற்றொரு பெண்ணிடம் சேர்வது போல நடித்து காதலியின் நல்வாழ்க்கைக்கு உதவுகிறான்
பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கங்கைஅமரன் இசையில் வெளிவந்த படம். கமல்ஹாசன்,ஸ்ரீதேவி,ஸ்ரீப்ரியா, அம்பிகா, ஜெய்சங்கர், மனோரமா,பிரதாப் நடித்தது.
தேவி ஸ்ரீதேவி
மழைக்கால மேகம் ஒன்று
ஏ ராசாவே
மழைக்கால மேகம் ஒன்று
நீலவான ஒடையில்
வந்தனம் என் வந்தனம்
வாழ்வே மாயம்
போன்ற பாடல்கள். ஸ்ரீதேவியை கவர்வதற்காக கமல் படும் பாடுகள், கமல் ஸ்ரீதேவி நடனம் என இளமை துள்ளலாக செல்லும் படம் பின் கண்ணீரை வரவழைத்துவிடும்.
இதயம் (1991)
மருத்துவ கல்லூரி பின்புலத்தில் எடுக்கப்பட்ட காதல் கதை. தொடாத காதல் சிறப்பு. கிராமத்தில் இருந்து வரும் மாணவன் நகர பெண்ணை காதலிக்கிறான். தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஒருவழியாக காதலி அதை அறிந்து கொள்ளும் நேரத்தில் இதயநோய் வாய்ப்படுகிறான் காதலன்.
கதிர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வந்த படம். முரளி,ஹீரா,சின்னி ஜெயந்த் நடித்த படம். முதல் ஒருவாரம் சுமாராக ஓடி வாய்மொழி தகவலால் பிக்கப் ஆகி பெருவெற்றி அடைந்த படம். தாழ்வு மனப்பான்மையால் காதலை சொல்லாத ஒருவனை நன்கு காட்சிப்படுத்தியிருப்பார் கதிர். முரளியும் உணர்ந்து நடித்திருப்பார். 90 களில் அப்படிப்பட்டோர் பலர் இருந்தனர். இப்பொது அப்படியிருக்கிறார்களா என தெரிய வில்லை. அந்த கூட்டத்தை பிரதிபலித்தது பட வெற்றிக்கு காரணமாயிற்று.
ஏப்ரல் மேயிலே பசுமையே யில்லை
ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
இதயமே இதயமே
பூங்கொடிதான் பூத்ததம்மா
போன்ற கலக்கலான பாடல்கள் நிறைந்த படம்.
கமலிடமிருந்து மோகனுக்கு வந்து பின்னர் யாரிடம் அடைக்கலம் புகலாம் என விழித்துக்கொண்டிருந்த திருவாளர் மைக்கார் இப்படத்துக்குப்பின் முரளியிடம் தங்கிவிட்டார். இப்படம் வந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு கல்லூரி சோலா சிங்கர் போட்டியில் பலரும் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ வையே பாடினார்கள். குரூப் டான்சுக்கு ‘ஏப்ரல் மேயிலே பசுமையே யில்லை’. என்னைக்கூட என் சீனியர்கள் ராக்கிங்கின் போது பாடச்சொல்ல ‘பொட்டு வைத்த’ என ஆரம்பித்து பாடினேன். தர்மஅடி விழுந்தது. ஏண்டா எப்பிடி பீல் பண்ணி கேப்போம் இந்த பாட்டை, கெடுத்திட்டேயேடா என்று துவைத்து விட்டார்கள்.
ஏப்ரல் மேயிலே பசுமையே யில்லை பாடல் பிரபு தேவாவுக்கும், ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் பாடல் ராஜீசுந்தரத்துக்கும் நல்ல ரீச்சை கொடுத்தது.
தொடரும்

29 comments:
கலக்குறீங்க முரளி.. தமிழில் வரும் படங்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது படங்களில் காதல் இருந்தாலும் இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றியடைகின்றன.
நல்ல interesting-ஆன தொகுப்பு. :-)
வருகைக்கு நன்றி வெண்பூ
//தாழ்வு மனப்பான்மையால் காதலை சொல்லாத ஒருவனை நன்கு காட்சிப்படுத்தியிருப்பார் கதிர். //
//90 களில் அப்படிப்பட்டோர் பலர் இருந்தனர். //
தாழ்வு மனப்பாண்மை இன்றும் இருக்கிறது. ஆனால் காதலை சொல்ல அல்ல
காதல் கொண்டேன் வெற்றி பெற்றது அத்னால் தான் என்று நினைக்கிறேன்.
கோகுலத்தில் சீதையில் கூட தாழ்வு மனப்பாண்மையை நன்றாக சித்தரித்திருப்பார்கள்
நல்ல தெரிவுகள், இதயம் என் எப்போதும் பிடித்த படங்களில் ஒன்று
//இயக்கத்தில் கங்கைஅமரன் இசையில் வெளிவந்த படம். //
பலருக்கு இன்று வரை இந்தப்படம் கங்கை அமரன் இசை என்று தெரியாது
//மருத்துவ கல்லூரி பின்புலத்தில் எடுக்கப்பட்ட காதல் கதை//
மருத்துவக்கல்லூரி பின்புலத்தில் கதைகள் எடுக்கப்படுவது 90களில் தான் (
அதன் பிறகு காதல் தேசம், அலைபாயுதே வந்தது)
இதற்கு காரணம்
மத்திய தர குடும்பத்திலிருந்து மருத்துவக்கல்லூரிக்கு மாணவர்கள் / மாணவிகள் செல்ல துவங்கியது 80களில் தான் (குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நேர்காணல் நிறுத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க ஆரம்பித்த பின் தான்)
--
40 வருடங்களாக அதே இடத்திலிருந்த தமிழக மருத்துவத்துறை இன்று இந்தியாவில் முதலிடத்தை அடைந்தற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம்
--
வருகைக்கு நன்றி மைபிரண்ட்
//கமலிடமிருந்து மோகனுக்கு வந்து பின்னர் யாரிடம் அடைக்கலம் புகலாம் என விழித்துக்கொண்டிருந்த திருவாளர் மைக்கார் இப்படத்துக்குப்பின் முரளியிடம் தங்கிவிட்டார்.//
:) :)
வருகைக்கு நன்றி கானாபிரபா மற்றும் புருனோ
மௌனராகம் காதல் படம் இல்லையா :) :)
நீங்கள் சொன்ன 4 படத்தில் 3 என் அப்பா காலத்துப் படம்.........
//வாழ்வே மாயம்// இதை தவிர மற்ற மூன்றும் நான் மிகவு இரசித்த படங்கள்....
எப்படி இப்படி..கலக்குறீங்க....
எல்லா திரைத்துறை பதிவுகளுமே நல்ல கலக்கலான பதிவுகள்..
ஒவ்வொன்றிலும், சிறப்பானவைகளை நீங்கள் சொல்லும் போது, ஆமாம்ல...என்று தான் சொல்ல முடிகிறது...
அட தமிழ் திரை ரொம்பவும் மோசமான திரைத்துறை இல்லை போலிருக்கே என்று சொல்ல வைக்கிறீங்க...
தொடருங்கள் உங்கள் ஆவணப்பணியயை.....
வருகைக்கு நன்றி Dr.சின்டோக்
வருகைக்கு நன்றி டிபிசிடி
நல்ல தொகுப்பு...
அலைகள் ஓய்வதில்லை நல்லா இல்லையா?
ஹை, எனக்கு ரொம்பப் பிடிச்ச வகைகள வரிசைப்படுத்தி இருக்கீங்க. எங்கம்மா அப்பா இந்த ஒரு தலை ராகம் படத்தை சூப்பர் படம்னு ஏத்திவிட்டு, நானும் எங்கக்காவும் பாடல்களால் வசியப்படுத்தப்பட்டு, ரொம்ப எதிர்பார்ப்போட ஒருதரம் ஜெயா டிவில போட்டப்போ பார்த்து, வெறுத்த படம். செம டபுள் மீனிங் டயலாக்ஸ், அது இதுன்னு. ஆனா அந்த சமயங்களில் அப்படி இருந்திருக்கலாம்னு சமாதானமாகிட்டோம்.
கிளிஞ்சல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், கடைசி அரைமணி நேரம் தவிர படம் முழுக்க கலகலன்னு இருக்கும். ரொம்ப யதார்த்தமா, மலையாளப்படங்கள்(பாசில், பிரியதர்ஷன் டைப்) மாதிரி எடுத்திருப்பாங்க. பாடல்கள் சூப்பர்.
வாழ்வே மாயம் எனக்கு பயங்கர பேவரிட் படம். ஆனா அதோட ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனப் பார்த்து வெறுத்துட்டேன். நம்ம நாகேஷ்வர ராவ், கமல் வேஷத்துல சும்மா கும்தலக்கடி கும்மான்னு கலாய்ச்சிருப்பார்.இப்போக்கூட இதை யு ட்யூப்ல பாத்து ரிலாக்ஸ் பண்ணிப்பேன்:):):)
இதயம் படத்துக்கு நீங்க பண்ணி இருக்கிற மாதிரி யாருமே கலக்கல் விமர்சனம் பண்ணி பார்த்ததில்லை. அப்போல்லாம் பிரபு தேவாவுக்கு எக்கச்சக்க ரசிகைகள் உண்டு. எனக்குத்தெரிஞ்சு ஒரு பாட்டுக்கு ஆடியே, இவ்வளவு பெண் ரசிகைகள் பெற்ற ஒரே நடன இயக்குனர் பிரபுதேவாதான்னு நினைக்கறேன். அப்பவே கதிர் இந்தப் படத்தை வெச்சி எச்சரிச்சிருக்கார், மக்கள் புரிஞ்சு நடந்துக்கிட்டு இருந்தா வெறும் அந்த ஒரு கதைய வெச்சே இன்னி வரைக்கும் ஓட்டி நம்மள கொடுமைப்படுத்தி இருக்கமாட்டார்:):):)
இதுல குறிப்பிட்டிருக்க முக்கியமான ரெண்டு படங்களோட பாடல் மற்றும் இசை டி.ஆர் அவர்களோடது. அவர் ஏன் இப்போ இப்படி ஆகிட்டார் :(:(:(
காதல் தேசம் படம் மருத்துவக்கல்லூரி பின்னணியில் எடுக்கப்படவில்லை என்று நினைக்கிறேன் டாக்டர். அது லயோலா மற்றும் பச்சையப்பாஸ் கல்லூரி, அதாவது கலைக்கல்லூரி பின்னணியில் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்
தமிழன் தங்கள் வருகைக்கு நன்றி
வருகைக்கும் சுவையான தகவல்களுக்கும் நன்றி ராப்.
//காதல் தேசம் படம் மருத்துவக்கல்லூரி பின்னணியில் எடுக்கப்படவில்லை என்று நினைக்கிறேன் டாக்டர். அது லயோலா மற்றும் பச்சையப்பாஸ் கல்லூரி, அதாவது கலைக்கல்லூரி பின்னணியில் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்//
அப்படியா. யாராவது சரி பார்க்க முடியுமா.
டாக்டர், ராப் சொல்வது சரியே.
வினித் - பச்சையப்பா
அப்பாஸ் - லயோலா
சென்னை தேவி திரையரங்கில் ஒரு சண்டை கூட நடந்தது.
தபு ஒருவேளை மெடிக்கலோ?
//வினித் - பச்சையப்பா, பேரூந்து, வாடகை செலுத்த முடியாத நிலை
அப்பாஸ் - லயோலா, கார்//
இப்பொழுது யோசித்து பார்த்தால் இந்த பாத்திர கட்டமைப்பில் ஒரு உள்குத்து இருக்கிறதே :(
கவனித்தீர்களா ;)
//ஸ்ரீதேவியை கவர்வதற்காக கமல் படும் பாடுகள், கமல் ஸ்ரீதேவி நடனம் என இளமை துள்ளலாக செல்லும் படம் //
இன்றும் வாழ்வே மாயம் படத்தை ஏதாவது சேனலில் போட்டால் முழுவதும் பார்க்கும்படியான படம்..
கலக்கல் பதிவு முரளி.. கலக்குங்கள்
நர்சிம்
Hi,
BGM if Idhayam remains unmatched for years. Even if Ilayaraja wants or tries, he can't match the BGM of Idhayam.. Poongodi than Poothathama song has got some world-class violin, just hear it on ur headphone.
You have reminded me, those golden-olden days of IR.. There are many music directors now, still IR remains untouched & unmatched in BGM.
வருகைக்கு நன்றி நர்சிம்,சுதர்சன்.
ராப் சொல்வது சரி,
பச்சையப்பா Vs லயோலா என்று படத்தில் சண்டையே நடக்கும்,நம்ம K.T. kunjumon வந்து சமாதானம் செய்வார் (police I.G )
அருமை அருமை அருமை. :))))
முரளிகண்ணன் சார், நீங்க எங்கயோ போய்ட்டீங்க :)))
Post a Comment