ரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.
தில்லுமுல்லு (கோல்மால்)
பில்லா (டான்)
குப்பத்து ராஜா (தோ யார்)
நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
தீ (தீவார்)
விடுதலை (குர்பானி)
அடுத்தவாரிசு ( ராஜாராணி)
நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)
தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
வேலைக்காரன் (நமக் ஹலால்)
மாவீரன் (மர்த்,இந்தி)
மிஸ்டர் பாரத் (திரிசுல்)
படிக்காதவன் (குத்தார்)
பணக்காரன் (லாவரிஸ்)
சிவா (கூன் பசினா)
அண்ணாமலை (குத் கர்ஸ்)
பாட்ஷா (ஹம்)
ஆகியவை இந்தியிலிருந்தும்,
போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
வீரா (அல்லரி மொகுடு)
ஆகியவை தெலுங்கில் இருந்தும்
பொல்லதவன் (பிரமதே கனிகெ)
புதுகவிதை (நா நினா மரியலரே)
கை கொடுக்கும் கை (கத சஙகமா)
மன்னன் (அனூரகா அரலித்)
பாண்டியன் (பாம்பே தாதா)
தர்மதுரை (தேவா)
ஆகியவை கன்னடத்தில் இருந்தும்
முத்து (தேன்மாவின் கொம்பத்)
சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
குசேலன் (கதபறயும் போல்)
ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவை.
வெற்றி சதவிகிதம் என்று பார்த்தால் இவற்றில் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவை. வெகு சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தவை. ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற பல படங்கள் ரீமேக் படங்களே.இந்த அபார வெற்றி சதவிகிதத்துக்கு காரணம் என்று பார்த்தால்
1. பெரும்பாலும் வெற்றி அடைந்த படங்களே ரீமேக் செய்யப்படும். அவற்றிலும் தனக்கு சூட் ஆகும் படங்க்ளை மட்டுமே ரஜினி கவனமாக தேர்ந்தெடுத்தார். பெரும்பாலான அமிதாப்பின் வெற்றி படங்களை ரீமேக் செய்த ரஜினி அக்காலத்தில் வெளியான கபி கபி போன்ற படங்களை தவிர்த்திருப்பார். பைரவி,முள்ளும் மலரும் போன்ற படங்களின் மூலம் கிடைத்த ஆக்ஷன் இமேஜை கெடுத்துவிடாத படங்களை மட்டும் தெரிவு செய்தார். இப்போது கூட பிளாக்,சர்க்கார்,சீனிகம்,ஏகலைவா போன்ற அமிதாப்பின் படங்களை கண்டும் காணாதது போல் தவிர்த்துவிட்டார்.
2. இந்த படங்களை கவனித்தால், ரஜினிக்கு முழுவதும் சூட்டாகாத படமெனில் எஸ்ஸென்ஸை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள். தேன்மாவின் கொம்பத் படத்தையும் முத்து படத்தையும் இதைப்பற்றி அறியாத ஒருவர் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத படங்கள் என்றே சொல்லுவார். நல்லவனுக்கு நல்லவன் படமும் பல மாற்றம் செய்யப்பட்டதே.
3. பல இந்திப்படங்கள், முண்னனி நாயகர்கள் இணைந்து நடித்ததே. ஆனால் தமிழில் இதை கவனமாக தவிர்த்திருப்பார்கள். இரண்டாவது கதானாயகன் பெரும்பாலும் டம்மிதான்.வேலைக்காரன் - சரத்பாபு, படிக்காதவன்- தம்பி கேரக்டர்,பணக்காரன் - சரண்ராஜ், தீ - தம்பி சுமன் டம்மி. இவையெல்லாம் அங்கே நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர்கள். இதையெல்லாம் விட மிஸ்டர் பாரத் படத்தில் எஸ் வி சேகரை படு டம்மியாக்கி இருப்பார்கள். திரிசூல் என அப்பா, இரு மகன்களுக்கும் சம்மான ஸ்கோப் உள்ள படம் அது. படப்பிடிப்பில் சேகர் சத்யராஜிடம் சொன்னாராம் இது தோசூல் என. சில நாள் கழித்து சத்யராஜ் சொன்னாராம், படம் ஏக்சூல் என. ஆனால் படம் பெப் குறைவாக இருந்ததால் சத்யராஜின் சீன்களை அதிகப்படுத்தினார்கள். தமிழ்னாட்டில் இது சகஜம் தான். வணிக மதிப்புள்ள முண்ணனி நாயகர்கள் சேர்ந்து நடிப்பது இங்கு அரிதே. கடைசியாக அப்படி வந்த படமென்றால் பிதாமகனை சொல்லலாம். இவ்வாறு டம்மியாக்கப்படும் நடிகர்களின் நல்ல சீன்கள் ரஜினி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அவரது இமேஜ் உயர காரணமாய் அமைந்தது.
4. இவ்வாறு சில கேரக்டர்களை குறைத்தாலும், நடிக நடிகையர் தேர்வில் ரஜினி மிக கவனமாக இருப்பார். அப்போது உச்சத்தில் இருக்கும் வில்லன்,நாயகிகளை மட்டுமே தேர்வு செய்தார். ஆன்ஸ்ட் ராஜ் ல் தூள்கிளப்பிய தேவனை பாட்ஷா க்கு தேர்வு செய்ததை உதாரணமாக கொள்ளலாம். முத்து படத்திற்க்கு முதலில் அரவிந்த்சாமியை கேட்டனர். அவர் மறுக்கவே சரத்பாபு.
5. இப்படங்களின் பின்னால் இருந்த திரைக்கதை,இயக்குனர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது
6. தமிழ் மக்களின் ரசனை மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்டது. இதை ரஜினி நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் இந்தி படங்களின் நீளம்,மலையாள படங்களின் தளர்வேகம்,தெலுங்கின் எதிலும் அதிகப்படி போன்ற கூறுகள் தமிழில் தலைகாட்டாமல் பார்த்து கொண்டார்.
7. தனக்கு ஏற்ற பில்டப் காட்சிகளை கவனமாக அமைத்திருப்பார். ஹம் மில் அமிதாப் முதன்முறையாக கோபப்படும் காட்சியை விட இங்கே ரஜினிக்கு அமைக்கப்பட்ட காட்சி பலமடங்கு பவர்புல்லானது.
8. செண்டிமெண்ட் காட்சிகளிலும் கவனமாக இருப்பார். இந்தி படங்களில் இருக்கும் அண்ணியுடன் சகஜமாக பழகும் காட்சிகள்,தெலுங்கில் இருக்கும் மாமியாரை சைட் அடிக்கும் காட்சிகள் இவை இங்கு நடக்காது.
9. அந்த பாத்திரங்களை உள்வாங்கி தன் ஸ்டைலில் நடிப்பை வழங்குவதும் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டு மூன்று நாயகர்கள் சேர்ந்து கொண்டுவரும் ரிச்னெஸ்ஸை தன் பாடி லாங்குவேஜாலும்,புதுவகை மேனரிஸங்களாலும், ஸ்டைலான மேனரிசத்தாலும் ஒருவராகவே கொண்டுவரும் திறமை ரஜினிக்கே உண்டு.

36 comments:
முக, :)
தமிழ் திரை உலகைத்தான் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன், அதில் கரைக்க சேர்க்கத் தண்ணீராக இந்தி(ய) பட உலகையே தெரிந்து வைத்திருகிறீர்கள் !
அசத்தல் !
//அந்த பாத்திரங்களை உள்வாங்கி தன் ஸ்டைலில் நடிப்பை வழங்குவதும் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டு மூன்று நாயகர்கள் சேர்ந்து கொண்டுவரும் ரிச்னெஸ்ஸை தன் பாடி லாங்குவேஜாலும்,புதுவகை மேனரிஸங்களாலும், ஸ்டைலான மேனரிசத்தாலும் ஒருவராகவே கொண்டுவரும் திறமை ரஜினிக்கே உண்டு.//
இது மிக முக்கிய காரணம்.
ரஜினிக்கு இருந்த மாஸ் அப்பீரியன்ஸ் என்ற தாரக மந்திரத்தை தனியாளாக பல சமயங்களில் சமாளித்தவர். அதனாலேயே சில படங்கள் தோல்வியுறும்போதும் எளிதாக அவரை குறை சொல்ல நம்மால் முடிகிறது :)
கலக்கலான பகுத்தாய்வு. எனக்கு தோன்றிய சில விடயங்கள், தோன்றாத பல விடயங்கள் இருந்தன.
நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல போன்ற படங்கள் சார்லஸ் ப்ரான்சன் நடித்த "Death wish" என்ற ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான தழுவல்.
வழக்கத்தைவிட நல்ல அலசல் முரளிகண்ணன்...
9 பாயிண்ட்களுமே அசத்தல்.ஆனா இதே வேலையை விஜயோ,ரவியோ பண்ணா ஏந்தான் இந்த ப்ளாக்கருங்களுக்குப் பிடிக்கலையோ தெரியலை.ஏதோ சென்னையில இருக்கிறவன் எல்லா மொழிப்படமும் பார்ப்பான். மத்த ஊர்க்காரங்களுக்கு அதெல்லாம் தெரியாது.
ராஜா எடுக்கலைன்னா 'சம்திங் சம்திங்','சந்தோஷ் சுப்ரமணியம்' போன்ற நல்ல படங்கள் கிடைக்காம இருந்துருக்குமே...ஜனங்களை டி.வியை விட்டுட்டு தியேட்டருக்கு இழுத்ததுக்காகவாவது ராஜாவுக்கு நன்றி சொல்லணும்.
//ஆன்ஸ்ட் ராஜ் ல் தூள்கிளப்பிய தேவனை பாட்ஷா க்கு தேர்வு செய்ததை உதாரணமாக கொள்ளலாம்//
அருமையான கவனிப்பு.எனக்குப் பிடிச்ச படத்துல அதுவும் ஒன்ணு.(விஜயகாந்த் சீருடை அணியாமல்,போலீஸாக நடித்த படம்).
//அதனால்தான் இந்தி படங்களின் நீளம்,மலையாள படங்களின் தளர்வேகம்,தெலுங்கின் எதிலும் அதிகப்படி போன்ற கூறுகள் //
வெரிகுட் ஒன்லைன்ஸ்....
//இந்தி படங்களில் இருக்கும் அண்ணியுடன் சகஜமாக பழகும் காட்சிகள்,தெலுங்கில் இருக்கும் மாமியாரை சைட் அடிக்கும் காட்சிகள் இவை இங்கு நடக்காது//
ஹி...ஹி...ஹி....
இன்னுமொரு முக்கியமான காரணம் விட்டுவிட்டீர்களென நினைக்கிறேன்..
அந்தப் படங்களின் தமிழ் நேட்டிவிட்டிக்கு பெரிதும் உதவியது 'பாடல்கள்' மற்றும் 'இசை'....
அருமையான தொகுப்பு
நீங்க ஒரு நடமாடும் சினிமா உலகம்
ஆஹா.. இவ்வளோ படங்களும் ரீமேக்கா? அப்போ ரஜினி முன்னாலேயே “ரீமேக்” ரஜினியா?????? :-)
//ஹம் மில் அமிதாப் முதன்முறையாக கோபப்படும் காட்சியை விட இங்கே ரஜினிக்கு அமைக்கப்பட்ட காட்சி பலமடங்கு பவர்புல்லானது.//
அந்த காலகட்டத்தில், படத்தை பத்தாவது இருபதாவது முறை பார்ப்பவர்களில் பலர் அந்த காட்சி முடிந்த பின் எழுந்து சென்று விடுவார்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவியார் மற்றும் சென்ஷி
வருகைக்கும் கூடுதல் தகவலுக்கும் நன்றி
குட்டி பிசாசு அவர்களே
தமிழ் பறவை தங்கள் வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி.
\\விட்டுவிட்டீர்களென நினைக்கிறேன்..
அந்தப் படங்களின் தமிழ் நேட்டிவிட்டிக்கு பெரிதும் உதவியது 'பாடல்கள்' மற்றும் 'இசை'....
\\
ஆமாம். இசை,பாடல்களும் முக்கிய காரணமே.
விஜயைப் பற்றி நான் எழுதிய பதிவில் உங்கள் பதிவின் சாராம்சத்தை சொல்லியிருந்தேன். ஏதோ விஜய் மட்டும்தான் ரீமேக் கிங் என்பது போல் எங்க்ள் தலைமுறையில் பால்ர் சொல்வதுண்டு. அது மட்டுமில்லாமல் காப்பி கிங் என்று விஜயை சொல்லிய அஜித் ரசிகர்களும் இப்போது பில்லா, ஏகன், கீரிடம் பிரகு வாயை மூடிக் கொண்டனர். இதற்கெல்லாம் முன்னோடி ரஜினிதான் என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். ரீமேக் பட்னக்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. அதற்கும் உழைப்பு தேவை
நசரேயன், மைபிரண்ட், புருனோ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ
உங்களை என்ன சொல்றதுன்னே புரியல் முரளிகண்ணன்.
ஒரு சப்ஜெக்ட் எடுத்துட்டா அதை அக்குவேறா, ஆணிவேறா அலசிட்டுதான் பதிவெழுதறீங்கன்னு தெரியுது!
சூப்பர்!!
நீங்கள் ஒரு ’சினிமா என்சைக்ளோபீடியா’ தல..ஹம் இந்தியில் ஒரு தோல்வி படம்..நீங்கள் சொல்வதிலே ஒன்று புலப்படுகிறது,ரஜினி அந்தந்த படங்களின் கருவை மற்றும் எடுத்து,தனக்கு தகுந்த திரைக்கதை அமைத்துக்கொண்டார்.
ரஜினியின் வெற்றிக்கு காரணங்களை அழகாக அலசியிருக்கிறீர்கள் முரளி. அருமை.
சந்திரமுகி மட்டும் மலையாளம் மூலம் என்றாலும், ரஜினி ரீமேக் செய்தது கன்னடத்தில் இருந்துதான். பெரும்பாலும் ஃப்ரேம் பை ஃப்ரேம் ரீமேக்காக இருக்கும். அதனால் அது மலையாள ரீமேக் லிஸ்டை விட கன்னட லிஸ்டில் இருப்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
நான் ஒரு பின்னூட்டம் எழுதினென். போட்டானேனு தெரியல? வந்துச்சா சகா? பெருசா எழுதினென்.. மறுபடியும் டைப் செய்யனுமா?
nalla oru pathioo
வருகைக்கு நன்றி கார்க்கி, பரிசலார், அக்னிபார்வை மற்றும் வெண்பூ
வருகைக்கு நன்றி நானும் ஒருவன் மற்றும் பிஸி.
@நானும் ஒருவன்
தங்கள் முதல் பின்னூட்டம் வரவில்லையே. தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். சிரமம் பாராமல் மீண்டும் போடவும்.
\\விட்டுவிட்டீர்களென நினைக்கிறேன்..
அந்தப் படங்களின் தமிழ் நேட்டிவிட்டிக்கு பெரிதும் உதவியது 'பாடல்கள்' மற்றும் 'இசை'....
\\
ஆமாம்.. கொஞ்ச நாட்களுக்கு முன், 'குத்தார்' படம் பார்க்க நேர்ந்தது. அதில், கல்லூரியில் தம்பியை பார்த்து விட்டு, அவருடன் பேருந்து நிலையம் செல்லும்போது அவருக்கு பணம் கொடுக்கும்போதும், நடிப்பில் ரஜினி அப்படியே இமிட்டேட் பண்ணியிருப்பார். ஹிந்தியில் பின்னணி இசை காமெடியாக இருந்தது. தமிழில், ராஜா பின்னியிருப்பார்.
வலையில் வீடியோ கிடைக்கவில்லை. இரண்டும். கிடைத்தவர்கள், முடிந்தால் இடவும். இது நல்ல உதாரணம்.
உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.. தொடரவும்..
அன்ணே எனைக்கு ஓரு சந்தேகம்ணே!!!
நீங்க பி.எச்.டி எதுல பண்ணுறீங்க???
:)))))))))))))))))))))
வருகைக்கு நன்றி அரவிந்த்
அப்துல்லா சந்தேகமே வேண்டாம். நான் உங்களிடம் சொன்ன துறையில் தான்.
முரளி கண்ணன்,
தாமதத்திற்கு மன்னிக்கவும்..
எத்தனை விபரங்கள்..வியக்க வைக்கிறது.. இனி முனைவர் முரளிகண்ணன் என்றே தங்களை அழைக்க வேண்டும்....
மு,மு,க.
(எந்த எழுத்தப்போட்டாலும் அந்த ஏரியாலயே போறாரே கோவியாரே..!!!)
மிக நல்ல பதிவு..
நர்சிம்
//
படப்பிடிப்பில் சேகர் சத்யராஜிடம் சொன்னாராம் இது தோசூல் என. சில நாள் கழித்து சத்யராஜ் சொன்னாராம், படம் ஏக்சூல் என.
//
டபுள் நச்.
தொடருங்கள்.
வருகைக்கு நன்றி இளையபல்லவன்
அற்புதமான் பதிவு!.இவ்வளவு விஷயங்களை எங்கே பிடிக்கின்றீர்கள்!
வருகைக்கு நன்றி நல்லதந்தி
பில்லா, மாவீரன் போன்ற படங்களில் உடைகள்,(நிறம், டிசைன்)கூட அதே போல் இருக்கும்.தமிழ் பாடத்தில் மனப்பாடம் செய்து அடிபிறளாமல் எழுதுவோமே அது போல் தமிழ் படத்தில் செய்தவர் நமது தலைவர்
//நான் வாழ வைப்பேன் (மஜ்போர்//
இது சிவாஜி படம். அமிதாப் வேடத்தில் சிவாஜி. பிரா(ண)ன் போகும் வேடத்தில் ரஜினி. அவருக்கு வாய்ப்பு கிடைத்தே பெரிய விசயம் என்று நினைக்கிறேன்.
அதில் டைட்ஸ் போடும் இளம்நாயகியாக புன்னகை அரசி நடித்திருப்பார்.
சுரேஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அடடா, இதை நான் மிஸ் பண்ணிட்டேனே:(:(:( சூப்பர் சார்.
//தமிழ் திரை உலகைத்தான் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன், அதில் கரைக்க சேர்க்கத் தண்ணீராக இந்தி(ய) பட உலகையே தெரிந்து வைத்திருகிறீர்கள் !
//
வழிமொழிகிறேன்:):):)
வருகைக்கு நன்றி ராப்
//பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது//
மிகை அல்ல
இதனால என்ன சொல்ல வாரீங்க? காப்பி அடிப்பதை ஒழுங்கா அடிங்கடா என்றா இல்லை ....ப்ரேசில் , அர்ஜெண்டினா,போர்ச்சுகீசிய படங்களை காப்பியடிச்சாலும் டப்பா படங்களை கொடுக்காதீங்க....அப்படின்னா?
Post a Comment