July 03, 2009

டெல்லி கணேஷின் வித்தியாச வேடங்கள்

93ஆம் ஆண்டு, தனியார் தொலைக்காட்சிகள் தமிழ் வானில் தடம் பதித்திராத நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்வாசிகளுக்கு பொழுதுபோக்குக்கு துணையாய் விளங்கியது தூர்தர்ஷனின் டிடி 2 மெட்ரோ அலைவரிசையே. அதில் ஒரு மணி நேரம் நல்ல சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அதில் புகழ் பெற்றவர்தான் மெட்ரோ பிரியா. இவர்தான் தமிழ் சின்னத்திரையின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி. நடிகர் ராதாரவி அவர்களும் ஒரு 13 வார ஸ்லாட் வாங்கி வாராந்திர நிகழ்ச்சி ஒன்றை அளித்தார். அதில் கதாநாயக, நாயகியர் தவிர்த்த திரைஉலக புள்ளிகளின் பேட்டியை ஒளிபரப்பினார். இதன் விசேஷம் பேட்டி அந்த பிரபலங்களின் வீட்டில்தான். கலைப்புலி தாணு, டிஸ்கோ சாந்தி ஆகியோரது பேட்டிகள் மிக சுவராசியமாய் அமைந்திருந்தன. டிஸ்கோ சாந்தி தன் வீட்டு வேலைகளை செய்த படியே கொடுத்த பேட்டி மிகப் பிரபலம்.

அதில் ஒருவாரத்தில் இடம் பெற்றது, டெல்லி கணேஷின் பேட்டி. அவர் வீட்டில் காய்கறி நறுக்கிக் கொண்டே பேட்டியளித்தார், அவரது திரை இமேஜுக்கு ஏற்றபடியே.


பாலசந்தர் மற்றும் அவர் சிஷ்யர் விசு ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டெல்லி கணேஷ் என்றாலே நமக்கு தோன்றும் பிம்பம் ஒரு மிடில் கிளாஸ் சாதுவின் பிம்பம். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஸ்டீரியோ டைப்பாக இந்த வேடத்தைக் கொடுத்து மக்கள் மனதில் அப்படி பதியவைத்து விட்டார்கள். நாடக பின்புலம் கொண்ட டெல்லி கணேஷால் எந்த வேடத்தையும் சிறப்பாக செய்ய முடியுமென நம்பி வித்தியாச வேடங்களை அவருக்கு கொடுத்த சிலரில் கமல்ஹாசனும் ஒருவர்.

அருமையான காமெடி டைமிங் உடைய டெல்லிகணேஷுக்கு தமிழ் சினிமா கொடுத்த ட்ரேட்மார்க் வேடங்களை முதலில் பார்ப்போம்.


சமையல்காரர் வேடங்கள்

இந்த வேடம் இவருக்கு அல்வா போல. புன்னகை மன்னன் படத்தில் கமலின் தந்தை. ஆனால் வேலைக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் வேலையைக் காட்டி சித்திகளை அதிகப்படுத்துவார். மைக்கேல் மதன காமராஜனில் பாலக்காட்டு சமையல் காரராக அசத்தியிருப்பார். ஆஹா படத்திலும் நிஜ சமையல்காரராகவே மாறியிருப்பார்.

குருக்கள் வேடம்

இந்த வேடமும் இவருக்கு பொருத்தமாக அமையும் ஒன்று. ராகவேந்திரர் படத்தில் இயல்பாக நடித்திருப்பார். அரசு படத்தில் வரும் வேணு சாஸ்திரிகள் வேடமும் இவரைத் தவிர யாருக்கும் பொருந்தாது.

கணக்குப் பிள்ளை/ நியாயமான பிஏ

இதுவும் இவரது கோட்டை. நாயகனில் இந்தி மொழிபெயர்ப்பாளராக கமலிடம் சேர்ந்து அவருடனே காலம் கழிப்பவர். கமலைக் காட்டிக் கொடுக்காமல் போலிஸிடம் அடி வாங்கி விட்டு, எவ்வளவோ அடிச்சாங்க நாயக்கரே, ஆனா நான் சொல்லலை என குழறியபடி இவர் பேசும் வசனம் அபாரம்.

நடுத்தர குடும்ப அப்பா

இதுதான் அவரது ஆஸ்தான வேடம். எண்ணற்ற படங்களில் இந்த கேரக்டரில் நடித்திருந்தாலும், எதிரி படத்தில், தன் மகளை யாரும் காதலித்து விடக்கூடாது என்ற நடுத்தர வர்க்க மனபாவத்தை அருமையாக திரையில் கொண்டு வந்திருப்பார்.மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் இவருக்கு அமைந்த அப்பா வேடமும் நல்ல ஒன்று.


இவற்றில் இருந்து விலகி அவர் ஏற்று நடித்த சில வித்தியாச வேடங்கள்

சிதம்பர ரகசியம்

இதில் வில்லன் வேடம். ஒரே நாள் இரவில் ஒரு கொலை, கற்பழிப்பு, சிலை திருட்டு ஆகியவை நடை பெறுகின்றன. இந்த மூன்றிலும் சம்பந்தப்பட்டவர் என ஒரு அப்பாவியை (எஸ் வி சேகர்)போலிஸ் கைது செய்கிறது. அதை துப்பு துலக்க வருகிறார் விசு. அவருக்கு துணையாக இருக்கிறார் அருண்பாண்டியன். இவர் டெல்லி கணேசின் மகன். விசு போடும் திட்டங்களையெல்லாம் முறியடிக்கிறார் டெல்லி. இறுதியில் மாட்டிக் கொள்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்

இதிலும் வில்லன் வேடம். நேர்மையான போலிஸ் அதிகாரியைக் கொன்று, பின் அவரது மகனால் பழி வாங்கப்படும் வேடம். முதல் பலி இவர்தான். சத்யா திரைப்படத்திலும் வில்லனுக்கு துணை போகும் அரசாங்க வக்கீல் வேடம்.

பட்டத்து ராணி

கவுண்டமணியின் குடியிருப்பில் யாரும் அவருக்கு வாடகை தருவதில்லை. செந்தில் கொடுக்கும் ஐடியாவின் படி வயதான விஜயகுமாரைத் திருமணம் செய்திருக்கும் கௌதமி தம்பதியனரை குடிவைக்கிறார். முதல் தேதிக்கு முன்னதாகவே அலறியடித்து அனைத்து ஆண்களும் வாடகை தருகிறார்கள், இமேஜ் பில்டப் செய்ய. கவுண்டரும் விதிவிலக்கல்ல. டெல்லியும் இந்த லிஸ்டில் அடக்கம். கௌதமிக்காக உருகுவதையும், காதல் வசனம் பேசுவதையும் சிறப்பாக செய்திருப்பார். ஜனகராஜ்,கவுண்டமணி, இயக்குநர் மணிவாசகம் ஆகியோர் கௌதமியைக் கவிழ்க்க கொடைக்கானல் டூர் போவதும், அங்கே
மனைவிகளிடம் சிக்கிக் கொள்வதும் நான் ஸ்டாப் காமெடி.

அவ்வை சண்முகி

சபல புத்தியுடைய பி ஏ. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆனபோது இந்த கேரக்டரை செய்தவர் ஓம்பூரி என்ற ஒன்றே போதும், இந்தக் கேரக்டரின் அருமை தெரிய. அனாயாசமாக செய்திருப்பார். ஒரு காதில் பூவும், கையில் செல்போனுமாக அவர் செய்யும் சேட்டைகள் அழகு.

டௌரி கல்யாணம்

ஏழ்மையின் காரணமாக, ஏதாவது திருமண மண்டபத்துக்கு சென்று, ஏதாவது உறவு முறை சொல்லி புகுந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து ஒரு வேளை சாப்பிடும் பாத்திரம். இந்த கௌரியின் திருமணத்திலும் மாடாக உழைக்கிறார். ஆனால் டௌரி பிரச்சினையால் பெண் வீட்டார் பிரச்சினையில் இருக்கும் போது குட்டு வெளிப்பட அந்த ஒரு வேளையும் சாப்பிடாமல் வெளியேறுகிறார். முடிவில் திருமணம் சுபமாக முடிகிறது. இவர் நிலை தான் கண்ணீரில்.

தெனாலி

மனநோய்க்கு மருத்துவம் பார்க்கும் வைத்தியர் பஞ்சபூதம் வேடம். தன் சக மருத்துவர் ஜெயராமுக்கு கிடைக்கும் புகழைப் பார்த்து கொதிப்படைந்து அவரை கவிழ்க்க சிக்கலான நோயாளியான தெனாலியை அங்கே அனுப்பும் வேடம். படாத் பாடு பட்டு கோர்த்து விடுகிறார். எதிர்பார்த்தது நடந்ததா?


அழகான நாட்கள்


மிக அரிதாகக் கிடைத்த பணக்கார அப்பா வேடம். மகளாக மும்தாஜ். கேட்ட போதெல்லாம்
மணிவண்ணனுக்கு பணம் கொடுத்து விட்டு அவர் மகன் கார்த்திக் தன் மகளை திருமணம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார். மிரட்டுகிறார். முடிவில் விட்டுக் கொடுக்கிறார்.

சிந்து பைரவி

குடிப்பழக்கம் உடைய மிருதங்க வித்வான் வேடம். கச்சேரிக்கும் குடித்து விட்டு வந்து ஜாதிக்காயை வைத்து சமாளிக்கும் வேடம். வித்வான் கோபப் பட்டு வெளியேற்றிவிட, வித்வான் வீட்டு முன்னால் உட்கார்ந்து அவர் அனுமதிக்கும் வரை மிருதங்கம் வாசிக்கும் காட்சியில் பின்னியிருப்பார்.


மூன்று முகம்


ரஜினி டி எஸ் பி. இவர் எஸ் ஐ. ரஜினிக்கு துணையாக நேர்மையான போலிஸ் வேடம்.

தமிழன்

விஜயின் சீனியர் வக்கீல் வேடம்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா

தன் மகன் பிறந்ததில் இருந்து ஆன செலவை கணக்கு வைத்து கேட்கும் தந்தை வேடம்.

தற்போது பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வருங்கால இயக்குநர்களாவது ஸ்டீரியோ டைப் வேடங்களை இவருக்கு கொடுக்காமல் வித்தியாசமான வேடங்களைக் கொடுத்தால் நன்றாயிருக்கும்.

49 comments:

கே.என்.சிவராமன் said...

கைய கொடுங்க முரளி.

அறியப்படாத, ஆனால், அறிய வேண்டிய துணை நடிகர்களைக் குறித்து நிறையவே, நிறைவாக எழுதிவருகிறீர்கள். அதுவும், மற்றவர்களுக்கு செய்தது போல் படங்களின் பெயராக பட்டியலிடாமல், வேடங்கள் சார்ந்த படங்கள், வித்தியாசமான படங்கள் என பார்வையை முன் வைத்திருப்பது கச்சிதம்.

விரைவில் ஏதேனும் இதழில் உங்களுக்கு தொடர் எழுதும் வாய்ப்பு வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

93ல் வெளிவந்த தொலைக்காட்சி சீரியல்களையும் நினைவில் வைத்து எழுதும் உங்கள் ஞாபகச் சக்திக்கு ஒரு சபாஷ்!

நர்சிம் said...

அற்புதம் முரளி..சிந்து பைரவியில் கலக்கி இருப்பார்.ஆஹாவிலும் ஆஹா..

நர்சிம் said...

//விரைவில் ஏதேனும் இதழில் உங்களுக்கு தொடர் எழுதும் வாய்ப்பு வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.//

கஞலல்.

முரளிகண்ணன் said...

நன்றி பைத்தியக்காரன்.

தங்களைப் போன்றாரின் ஊக்கமே என்னை தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறது.

மிக்க நன்றி

முரளிகண்ணன் said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர் சார்.

நன்றி நர்சிம்.

Unknown said...

//பாலசந்தரைப் போலவே சென்னை ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் டெல்லி கணேஷ். //

இல்லை அவர் விமானப்படையில் இருந்ததாக காபி வித் அனுவில் சொன்னார். சரிபார்க்கவும்.

வெங்கடேஷ்

நாடோடி இலக்கியன் said...

நல்ல நடிகரைப் பற்றி அருமையான பதிவு.

இவரைப் பற்றி சில நாட்களுக்கு முன் நானும் கூட ஒரு பதிவு எழுதியிருந்தேன் முரளி.உங்க பதிவைப் படித்ததும் அந்த எனது பதிவை தேடிப் பார்த்தால் காணவில்லை.பேக் அப் எடுத்து வைத்திருந்ததிலிருந்து காப்பி செய்து இபோ மறுபடியும் போஸ்ட் செய்திருக்கிறேன்.பழைய பின்னூட்டங்களெல்லாம் போச்சு.

RVRPhoto said...

நல்ல விடயம். நன்றாக உள்ளது.

Mahesh said...

நல்ல அலசல் முரளி.... எனக்குத் தெரிந்து அவர் டெல்லியில் ஏர் ஃபோர்ஸில் இருந்ததாக ஞாபகம்.

முரளிகண்ணன் said...

அன்பு வெங்கட்

எனக்கும் அதே சந்தேகம் தான். அந்தப் பேட்டியில் அவர் டெல்லியில் நாடகம் என்றாரா இல்லை டெல்லி குழு என்று சொன்னாரா என குழப்பம்.

இப்போது இணையத்தில் தேடினால் இருமாதிரியும் தகவல்கள் வருகின்றன.

நண்பர் மகேஷும் அவர் டெல்லி ஏர்போர்ஸ் என்றே தனது பின்னூட்டத்தில் கூறியிருக்கிறார்.

சரிபார்த்து திருத்தி விடுகிறேன்.

பொறுத்தருள்க.

நன்றி நாடோடி இலக்கியன்.

நன்றி பிரதீபன்.

ஆர்வா said...

ஒரு அருமையான நடிகரைப் பற்றிய அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்

Jey said...

ஒரு படத்தில் (குங்குமச் சிமிழ்?) "என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறியா" ந்னு போறவன் வர்றவன் கிட்டேலாம் கேட்டு, பைத்தியமாக நடிச்சு தூள் கிளப்பினாரே... அதை எப்படி முரளி விட்டுட்டீங்க?!

-விகடகவி

கோபிநாத் said...

\\பைத்தியக்காரன் said...
கைய கொடுங்க முரளி.

அறியப்படாத, ஆனால், அறிய வேண்டிய துணை நடிகர்களைக் குறித்து நிறையவே, நிறைவாக எழுதிவருகிறீர்கள். அதுவும், மற்றவர்களுக்கு செய்தது போல் படங்களின் பெயராக பட்டியலிடாமல், வேடங்கள் சார்ந்த படங்கள், வித்தியாசமான படங்கள் என பார்வையை முன் வைத்திருப்பது கச்சிதம்.

விரைவில் ஏதேனும் இதழில் உங்களுக்கு தொடர் எழுதும் வாய்ப்பு வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்
\\

ரீப்பிட்டே ;))

உங்க ஞாபகச் சக்திக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்துண்ணே ;)

ஆயில்யன் said...

//புகழ் பெற்றவர்தான் மெட்ரோ பிரியா. இவர்தான் தமிழ் சின்னத்திரையின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி//

மறக்க முடியுமா? அந்த ஸ்டைலான வணக்கத்தை :)

ஆயில்யன் said...

//விரைவில் ஏதேனும் இதழில் உங்களுக்கு தொடர் எழுதும் வாய்ப்பு வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
//

ரிப்பிடேய்ய்ய்ய்ய்ய்!:))))

முரளிகண்ணன் said...

நன்றி கவிதை காதலன்.

நன்றி விகடகவி.

குங்குமச்சிமிழ் வேடத்தை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

நன்றி கோபிநாத்

நன்றி ஆயில்யன். பிரியாவை நீங்களும் மறக்கலியா?

"உழவன்" "Uzhavan" said...

மைக்கேல் மதன காமராஜனை ரொம்பவே ரசித்துள்ளேன். நல்ல தொகுப்பு

நையாண்டி நைனா said...

நான் கேள்வி பட்டதும், வேலை பார்த்து விமானப்படை என்றுதான். அது அவரே சொன்னது எதோ ஒரு பேட்டியில்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

காத்தாடி ராமமூர்த்தி நாடகக்குழுவில் நடித்துக் கொண்டிருந்தார்.விசு எழுதி அவர்கள் மேடையேற்றிய பட்டிணப்பிரவேசம்..நாடகம் பாலசந்தரால் திரைப்படமாக்கப்பட்டது.இது டெல்லி கணேசனின் முதல் படம்.

பித்தன் said...

delhi ganesh told in coffee with anu that he was then working in Airforce only his wife worked in AGS office. I'm i right?

கார்க்கிபவா said...

ஆஹாதான் அல்டிமேட்..

சகா, நம்ம ஊரில் குணச்சித்திர நடிகர்களில் பலர் பிண்ணி எடுப்பார்கள். டெல்லி கணேசு, நாச்ர், தலைவாசல் விஜய், பூவிலங்கு மோகன்,பீலிசிவம், பிரகாஷ்ராஜ், இன்னும் நிறைய...

வந்தியத்தேவன் said...

முரளி டெல்லிகணேஷின் டைமிங் காமடிகள் பார்க்கவேண்டும் என்றால் கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெறும் எல்லாமே சிரிப்புதான் பாருங்கள் மனிசன் வெளுத்துவாங்குகிறார். அவரது காமெண்ட்ஸ்களை வைத்துப்பார்க்கும்போது நிறைய வாசிப்பார் எனத் தோன்றுகிறது. 10 வருடங்கள் இந்தியன் எயார்போர்ஸ்சில் வேலை செய்தவர்.

நீங்கள் எழுதிய சகல படங்களிலும் இவரது பாத்திரம் மறக்கமுடியாது.

கார்க்கிபவா said...

//புகழ் பெற்றவர்தான் மெட்ரோ பிரியா. இவர்தான் தமிழ் சின்னத்திரையின் முதல் நட்சத்திர தொகுப்பாளி/

நான் கூட அவங்க புரோகிராம பார்த்துட்டு முதல்ல் 10வது அப்படியே 9,8, 7 படிப்பேன்னு அடம் பிடிச்சேனாம்.. அம்மா சொல்லுவாங்க

முரளிகண்ணன் said...

உழவன், நையாண்டி நைனா, டிவிஆர் சார், நியாஸ் தங்கள் வருகைக்கு நன்றி.

டெல்லிகணேஷ் ஏர்போர்ஸில் வேலை பார்த்தவர் எனத் திருத்தலாம் என்றால் பிளாக்கர் எடிட் சரியாக வேலை செய்யவில்லை. சரியானவுடன் நான் அளித்திருந்த தவறான தகவலை நீக்கி விடுகிறேன்.

நன்றிகள்.

முரளிகண்ணன் said...

வாங்க கார்க்கி.

நீங்க யூத்துனு எல்லோருக்கும் தெரியுமே. பின்ன ஏன் டாப் டென் விளையாட்டு?

சில சமயம் அவங்க டாப் 5யும் போடுவாங்க.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியதேவன்

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

காமெடியில கலக்கும் டெல்லி கணேஷ

ஜொலிப்பது கமலஹாசன் படங்கள் தான்

தலைநகரம் படத்தில் காமெடி கலந்த வில்லன் வேடம்

ஹிஹி ....ஹிஹி சிரிப்பே தனி தான் ..

IKrishs said...

Delhi Ganeshin Thriramai yai thiraiyulagam Romba veenadathu vithadhu...Avvai shanmugi yil sema kalakku kalaki iruppar..Avarakkaghave "manaivi" yengira Mega thodarai paarthen...Delhi Ganesh "Chellamma" yengira thodaraiyum iyakki irukkirar...Nalla Kalaigargalai ghabaga paduthum thangal Padhivugalukku nanrigal pala....UM.Krish

Gokul said...

எந்த சானல் என்று நினைவில்லை, டெல்லி கணேஷும் , எஸ்,எஸ்,சந்திரனும் இணைந்துஒரு நகைச்சுவை நிகழ்ச்சி கொடுத்தார்கள் , அப்போது செல் போன் வந்த புதுசு, ஒரு நிகழ்ச்சியில் டெல்லி கணேஷ் செல் போனை எடுத்து வெகு நேரம் பேசுவது போலவும் (அப்போது நிமிடத்திற்கு 8 ருபாய் காலம்), அதை கண்டு டெல்லி கணேஷ் பதறுவதும் காட்சியமைப்பு, பின்னி இருப்பார்.

Sukumar said...

டெல்லி கணேஷை திரையின் ஓரத்திலே பார்த்து பழகிவிட்டது...
முதல் முறையாய் அவரது கதா பாத்திரங்களை... என் மனத்திரையில் மத்தியில் பெரிதாய் ஒளிபரப்பிவிட்டீர்கள்....
இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்.....

ஷங்கி said...

டெல்லி கணேஷ், நல்ல டைமிங் ஸென்ஸ் உள்ள நடிகர். காமெடில பின்னிப் பெடலெடுப்பார். நீங்க சொன்ன மாதிரி நல்லா உபயோகிச்சிருந்தா பெரிய அளவுல வந்திருப்பார்.
மெட்ரோ ப்ரியா அப்ப செஞ்ச விரல் வித்தையத்தான் இன்னும் எல்லாத் தொகுப்பாளிகளும் பண்ணிட்டிருக்காங்க, அதுவே அவருக்கு வெற்றி! சின்னத்திரையின் ஸ்டைல் மன்னி, சூப்பர் ஸ்டார்!!

Cable சங்கர் said...

நான் அவருடன் நடித்திருக்கிறேன். மனுஷன் டைமிங்கில் பின்னியெடுப்பார்.. மிக இயல்பான காமெடி அவரின் மிகப்பெரிய அசெட்.. அவ்வை ஷண்முகியில் அவர் கலக்கி எடுத்திருபார்.. இன்னும் நிறைய படஙக்ள் முரளீ..

ராபின் ஹூட் said...

அண்ணே, அப்படியே, பக்கோடா காதர், காஜா ஷெரீப் போன்றவர்களைப் பற்றியும் எழுதுங்க.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தகவல்.

ஸ்ரீ.... said...

அற்புதமான இடுகை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். (அடுத்த சந்திப்புக்கு வரலேன்னா பின்னூட்டம் கிடையாது என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.)

ஸ்ரீ....

சென்ஷி said...

நாகேஷிற்கு பிறகு வந்த குணச்சித்திர நகைச்சுவை வேடங்களில் நன்கு பொருந்திய இருவர் என்னைப்பொறுத்தவரை டெல்லி கணேஷ், சார்லி..

அவரது நடிப்பில் கௌரி கல்யாணம், புன்னகை மன்னன், ஆஹா, மைக்கேல் மதன காமராஜன் ஆகிய நான்குமே திருமண வீட்டை சுற்றிலும் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் அல்லது சமையல் காரர். ஆனால் ஒரே மாதிரியான கிளிசேத்தனத்திலிருந்து பிரித்து மேய்ந்திருப்பார். அதிலும் ஆஹாவில் அவர் வரும் இடங்களில் ஆஹாஸ்யம்!

டெல்லி கணேஷிற்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தவர்களுள் கமலும் முக்கியமானவர் :)

சென்ஷி said...

மெட்ரோ பிரியா... ம்ம்ம்ம்.. அந்த தெத்துப்பல் சிரிப்பு புகைப்படங்கள் ரொம்ப வருசம் பத்திரப்படுத்தி வச்சிருந்தேன். பெப்சி உமா வந்த பிறகுதான் பிரியா பேரவையை கலைக்க வேண்டியதாகிடுச்சு..

ராமகுமரன் said...

நல்ல பதிவு முரளி. யார் படத்திலும் வில்லன் குழுவில் டெல்லி கணேஷ் இடம்பெற்றிருப்பார். மர்மதேசம் முதல் தொடரில் மிக அறிவுஜீவி, தலைக்கனம் பொருந்திய மருத்துவராக , பைத்தியமாக கலக்கியிருப்பார்

சகாதேவன் said...

டெல்லி கணேஷ் பேர்வந்தது ஏன் அன்று தெரியாது. அவர் முறப்பநாடு கணேஷ். நான் திருநெல்வேலி டிவிஎஸ்ஸில் இருந்தபோது கோபாலகிருஷ்ணனைப் பார்க்க கணேஷ் வந்தார். கோபால் அவரை எங்க ஊர்க்காரர் என்று எனக்கு அறிமுகம் செய்தார். முறப்பநாடு தூத்துக்குடி சாலையில் வல்லநாட்டுக்கு முன் இருக்கிறது.
சகாதேவன்

Thamira said...

கலக்ஸ் முரளி. என்னைப் பொருத்தவரை இவர் ஒரு மொக்கையே.. ஆனால் கமல் படங்களில் எங்கிருந்துதான் வருமோ அப்படி ஒரு பர்ஃபார்மென்ஸ்.. அப்படியே கலக்கிவிடுவார்.!! கமல்படங்களில் மட்டும் நான் டெல்லியின் ரசிகன். அதுவும் அவ்வை சண்முகி உச்சம்.!

selventhiran said...

ரொம்ப யூனிக்கான குரல்வளமும் கூட...

சீமாச்சு.. said...

நல்ல தொகுப்பு. எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு நடிகர். “டௌரி கல்யாணம்” திரைப்படத்தில் அருமையான் நடிப்பு.

அவர் ஹீரோவாக நடிச்சு ஒரு படம் வந்திச்சி தெரியுமா? ”தணியாத தாகம் “ என்பது பெயர். ஒருதலைராகம் தயாரிச்ச் EM இப்ராஹீம் டைரக்ட் பண்ணிய படம். அதில் டெல்லி கணேஷ் தான் ஹீரோ. கொஞ்சம் காதல் தோல்வி படம். படப்பிடிப்பு மயிலாடுதுறை பக்கம் கொஞ்சம் நடந்தது. அப்போ அவர் மயிலாடுதுறை வந்திருந்தார். “இவர் தான் ஹீரோ” என்று சொன்னார்கள். ரஜினிகாந்த் லெவல்ல எதிர்பார்த்தோ என்னமோ எனக்கு அப்ப (மாணவப்பருவம்) கொஞ்சம் ஏமாற்றமாயிருந்திச்சி. 1984 என்று நினைக்கிறேன்.

Anonymous said...

http://youthful.vikatan.com/youth/bcorner.asp..

This article got published in youth vikatan.

Anonymous said...

பகிர்ந்தமைக்கு நன்றி...

சிநேகிதன் அக்பர் said...

நேரமிருந்தால் நம்ம பக்கம் வாங்க.

கோவி.கண்ணன் said...

'ஆனந்தம்' கூட அவருக்கு குறிப்பிடத் தகுந்த படம் தான்.

கிரி said...

டெல்லி கணேஷ் மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை

அவ்வை சண்முகி ல் கலக்கி இருப்பார் ..அ.ச ல் என் அண்ணன் இவரோட காமெடிய கூறி சிரித்துக்கொண்டே இருப்பார்.. :-)))

RATHNESH said...

ஒரு ரவுண்டில் முன்பு பார்த்த பல படங்களை மனத்திரையில் ஓட வைத்து விடுகிறீர்கள்! அழகான தொகுப்பு. வாழ்த்துக்கள்.