July 14, 2009

நாகராஜன் சந்து

எங்கள் ஊர்ப்பகுதிகளில் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. வேறொன்றுமில்லை.ஊரின் பெயரைச் சுருக்கி வாடகை சைக்கிள் செயின் கார்ட்,கடை விளம்பரப் பலகை மற்றும் திருவிழா போஸ்டர்களில் எழுதுவது. வத்தலக்குண்டு என்னும் பெயரை வதிலை என்றும், கெங்குவார்பட்டியை கெங்கை, தும்மலப் பட்டியை துமிலை என்றும் சுருக்குவார்கள். அதில் தப்பொன்றும் இல்லை. சுருக்கத்துக்குப் பின்னால் மாநகர் என்னும் அடை மொழியைச் சேர்ப்பார்கள். அதைப் பார்க்கும் போதுதான் வயிறெறியும். 200 வீடுகள் இருக்கும் தும்மலப்பட்டியை துமிலை மாநகர் என்று சொன்னால் வேறு எப்படி இருக்கும்?

அப்படியொரு பெயரைப் பெற்ற வதிலை மாநகரில் எதற்கு குறைவிருக்கிறதோ இல்லையோ ருசியான சாப்பாட்டுக்கு மட்டும் குறைவிருக்காது. ஆறு, ஏரி ஏன் கடலே வத்தினாலும் வத்தாதது வதிலை மாநகர மாந்தரின் வயிறு.

காலை ஐந்துமணிக்கு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கும் பனியார,ஆப்பக்கடைகள் ஏழு மணியளவில் இட்லி தோசைக் கடையாக பரிணாம வளர்ச்சி அடையும். காலை பத்துமணிக்கு அங்கே இனிப்பு சிய்யம்,வெங்காய போண்டா போட ஆரம்பிப்பார்கள். 12 மணியளவில் மசால் வடையும், உளுந்த வடையும்.

ரன் ரேட் எப்படியிருந்தாலும் நாலைந்து ஓவரில் மேக்கப் செய்துவிடும் அதிரடி பேட்ஸ்மெனைப் போன்றவை இந்த வடைகள். ஆம் எவ்வளவு மட்டமான சாம்பார்,ரசத்தையும் ருசியாக்கி விடும் வல்லமை இவைகளுக்கு உண்டு. மாலை மூன்று மணிக்கு அவல் கேசரியும், தவளை வடையும் தங்கள் இன்னிங்சை ஆரம்பிக்கும்.

நடைபாதைக் கடைகளே இப்படியென்றால் நளனே வந்து ரெசிப்பி கேட்கும்படி சுவையாக இருக்கும் வதிலை மாநகர ஹோட்டல் அயிட்டங்கள். கறி வாங்கி சமைப்பது அவர்களுக்கு ஆகாது. தங்கள் டேஸ்டுக்கேற்ப ஆடுகளை வளர்த்து வெட்டிச் சமைப்பார்கள் அங்கே. ஒருவர் அகத்திக்கீரையை மட்டுமே போட்டு ஆட்டை வளர்ப்பார். இன்னொருத்தவர் ஆட்டுத்தீவனமே வீட்டில் தயார் செய்வார்.

காலை ஐந்து மணிக்கு ஆட்டை வெட்டியதும் ஸ்பெசலாக ரத்தப் பொறியலும், வெங்காய குடல் கறியும் தயாராகும். அதை வாங்க வரிசையில் நிற்பவர்கள் வீட்டிற்கு பெரும்பாலும் மாப்பிள்ளை வந்திருப்பார். இரவு ஏழு மணிக்கு தயாராகும் புரோட்டாக்கள். விண்டவர் கண்டிலர் என்னும் கம்பராமாயணப் பாட்டிற்கு அர்த்தம் வேண்டுபவர்கள் சாப்பிடுவோரின் இலைகளைப் பார்க்கலாம். இந்தக் கடைகளில் மாவு இரவு மூன்று மணி வரை இருக்கும்.

இரவு மூன்று மணிக்கும் காலை ஐந்து மணிக்கும் இடையே  பசியெடுத்தால் என்ன செய்வது? இருக்கவே இருக்கின்றன. காளியம்மன் கோயில் பகுதி டீக்கடைகள். பால் பன்,அச்சு பன்,தேங்காய் பன்னில் இருந்து செவ்வாழை,பச்சை,புள்ளி,கற்பூர,நாட்டு வாழை வரை சூடான டீயுடன் கிடைக்கும்.

இவ்வளவு சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் ஊரில் ஒரு டாய்லெட் கூட இல்லை என்றால் எப்படியிருக்கும்? ஆம். அதிர்ஷ்டவசமாக பெண்களுக்கு மட்டும் சில பொதுக்கழிவறைகள் இருந்தன. பாதாள சாக்கடைத் திட்டம் போன்ற எதுவுமில்லாத ஊரில் ஆண்கள் எங்கே தங்கள் கடன்களை கழிப்பது?

மூன்று வயதுவரை அந்த வைபவம் வீட்டிலேயே நடந்துவிடும். பக்குவமாக பார்சல் செய்யப்பட்டு வீதியில் டிஸ்போஸ் செய்யப்படும். அதனால் நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் அங்கே வேலைக்காகாது. மூன்று வயதுக்கு மேல் தெரு ஓரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகில் அந்த சடங்கு நிறைவேற்றப்படும். அந்தப் பையனுக்கு வெட்கம் வரும் வரையிலோ அல்லது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் வரும் வரையிலோ அந்த இடம்தான்.

அடுத்தகட்ட பிர மோசன் நாகராஜன் சந்து என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட நரகல் சந்து. நூறு நூற்றி இருபது மீட்டர் நீளத்தில் வளைந்து நெளிந்து இருக்கும் அந்த சந்தில் காலைக் கடன்களை கழிக்க பஞ்சாயத்து அனுமதி இருந்தது. நாம் போகும்போது யாராவது உட்கார்ந்திருந்தால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து விடக்கூடாது. எவ்வளவு தூரம் தள்ளிப் போக முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளிப் போய்விட வேண்டும். அடுத்து வருபவன் இருவருக்கும் இடைப்பட்ட இடத்தில் உட்கார வேண்டும். இது அங்கே
உள்ள ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்.

பின் சுத்தம் செய்வதற்கு சந்தின் கடைசியில் இருக்கும் மழை நீர் தேங்கும் பள்ளத்துக்கு செல்ல வேண்டும். அங்கே தேங்காய் மூடி, பாதி உடைந்த பிளாஸ்டிக் மக், ஓட்டையிருக்கும் தகர ஆயில் டின் ஆகியவை இருக்கும். அவற்றில் நீர் வாரி வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். நேரடியாக பள்ளத்தில் இறங்கி விடக்கூடாது என்பது அக்ரிமெண்டின் உப சரத்து.

இதற்கடுத்த புர மோசனும் உண்டு. மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சுடுகாடு. பத்துவயதில் என்னுடைய கனவே, சைக்கிள் எடுத்துச் சென்று சுடுகாட்டில் காலைக் கடன் முடிக்க வேண்டும் என்பதே. கழுவுவதற்கு வசதியாக பம்ப்செட் தண்ணீர் அங்கே இருப்பது கூடுதல் வசதி.அந்தக் கனவு கைகூடும் முன்னரே நாங்கள் வேறு ஊருக்கு இடம்பெயர நேரிட்டது.

அங்கே துயரத்தின் உச்சமாக வீடுகள் எடுப்பு கக்கூஸுடன் இருந்தன. அதனாலேயே அந்த வீடு எனக்கு அன்னியமாகவே இருந்தது. இரண்டு மூன்று நாட்களில் நண்பர்கள் கிடைக்க, அந்த ஊர் நாகராஜன் சந்து அறிமுகமானது. அன்னியமான கூட்டுக்குடும்ப வீட்டில் கட்டிக்கொடுக்கப் பட்ட பெண், அங்கே வளைய வர எவ்வளவு கூச்சப்படுவாளோ, அதற்கு நிகரானது இந்த மாதிரி புது இடங்களில் புழங்குவதும். நான்கு நாட்களில் அந்த சந்திற்கான ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் பிடிபட்டுவிட ரிலாக்ஸானது காலைகள்.

பதினெட்டு வயதில் இந்தப் பிரச்சினை ஓய்ந்தது. கல்லூரி விடுதிக் கழிவறைகள் ஓரளவு வசதியாகவே இருந்தன. அந்தக் கதவில் கிறுக்கப்படும் கிசுகிசுக்கள், ஒன்லைனர்கள் கூடுதல் சுவராசியம்.

மூன்று ஆண்டுதான் நீடித்தது அந்த சுகம். பின் வேலைக்காக சென்னை மேன்ஷன். அப்பா எவ்வளவு சொல்லியும் ஐந்து மணிக்கு எந்திரிக்காத என்னை திருத்தியவை மேன்சன் கழிவறைகளே. பந்திக்கு கூட முந்தக்கூடாது, இதற்கு முந்துவது தான் அவசியம் என உணர்த்தியது அதன் சுத்தம். குடிக்கக் கூட மினரல் வாட்டர் உபயோக்கிக்காத நான், ஒரு முறை தண்ணீர் தீர்ந்ததால், கழுவ அதை வாங்கியது வாழ்க்கையின் நகைமுரண்.

இப்போது பரவாயில்லை, புறநகரில் தனி வீட்டில் வாடகைக்கு இருக்கிறேன். அதை விட முக்கியம் தனிக் கழிவறை.

சென்ற வாரம் அப்பா வந்திருந்தார். கிளம்பும் போது, பெண் பார்க்கப் போகிறோம். ஏதாவது அபிப்ராயம் இருந்தால் சொல் என்றார்.

”பொண்ணு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அந்த வீட்டில கக்கூஸ் கொஞ்சம் தனியா இருக்கணும் அவ்வளவு தான்” என்ற என்னை வித்தியாசமாகப் பார்த்தபடியே கிளம்பினார் என் அப்பா.

53 comments:

வந்தியத்தேவன் said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

முரளி,
அருமை. ஓர் எழுத்து மிகைப்படுத்தப்படவில்லை. கடைசியாக அப்பாவின் ரியாக்ஷனில் மெலோ டிராமா சேர்க்கும் சபலத்தை அபாரமாகத் தவிர்த்திருக்கிறீர்கள்.

தேனியின் சேமியா கேசரியும் பெரியகுளம் தென்கரை ஜெயலட்சுமி ரைஸ்மில் சந்தும் வாசமும் நாற்றமுமாக நினைவில் வந்து போயிற்று.

இது போன்ற சமூக ஆய்வுக் கட்டுரைகளை வைரஸ் தாக்கிவிடாத ஏதேனும் இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த மக்களை எண்ணிப் பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் என்று தெரிய‌வில்லை.

ரமேஷ் வைத்யா,
அல்லிமாநகர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல சுவையான அனுபவங்கள்

எங்க ஊர்லயும் மூத்திர முடுக்கு என்று ஒண்ணு உண்டு

அந்த பக்கம் போகும்போது அந்த வாசனையை கடந்து தான் போக வேண்டும்

நர்சிம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை முரளி. அப்படி இருக்கிறது ஃப்ளோ.

அருமை.ரமேஸ் வைத்யாவின் கமெண்ட் சொல்லிவிடுகிறது மொத்தத்தையும்.

தராசு said...

தலைவரே,

தின்பண்டங்களின் பெருமையில் ஆரம்பித்து, சுகாதாரத்தின் அவசியம் வரை, ஒரே பிசிறு தட்டாத நடை.

வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் said...

Super...

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி ரமேஷண்னா, ஸ்டார்ஜான்

jegan said...

Vathilai kirathu remba nala etho pakkathu orunu than ninachen. Appuram than namma orune therinchathu..Kuthirai mark, Peer mohamed, renga vilas and Kulli katai,appuram karpagam ithalem konjam famous ana hotel Vathilai-la ..When Karpagam hotel was opened,we didn't get a place to sit..Third or fourth day we went early to have food..Enaku therinja varaikkum Peer katai kuska with green chutney and renga vilas sambar and thayir vadai adichuka ethuvum illai..Sorry for English fonts...-Jeagn Mohan,BTL(Short form of Batlagundu)

முரளிகண்ணன் said...

நன்றி நர்சிம்,தராசு,சரவனகுமரன்

முரளிகண்ணன் said...

நன்றி ஜெகன்

ரெட்மகி said...

சுத்தம் சுகம் தரும்

பரிசல்காரன் said...

ம்!

என்ன ஒரு எழுத்து முரளி! மிக நன்றாக வந்திருக்கிறது.

முரளிகண்ணன் said...

நன்றி ரெட்மகி

நன்றி பரிசல்

குடந்தை அன்புமணி said...

எங்க ஊர்ப் பக்கமெல்லாம் தேங்காய்ப் பால் ஆப்பம், குழிப்பணியாரம், முறுக்கு,சேமியா ஐஸ் தான் பேமஸ்.

வயலும், வாய்க்கால், ஆறு வசதிகள் நிறைந்த பகுதியென்பதால் நாற்றத்திற்கு வேலையில்லை.

சிநேகிதன் அக்பர் said...

ஆமா தல...

வயித்துக்குள்ளே அனுப்புறதுக்கு நிறைய ஏற்பாடு பண்ணுறவங்க வயித்த விட்டு வெளியே அனுப்புறத பத்தி கவலையே படமாட்டாங்க..

எல்லா ஊரிலும் இதுதான் போல.,
ஒரு சிறுகதை படித்த உணர்வு.

Raju said...

தல,
லிப்கோ பாலாஜி..
வானம் பார்த்த செந்தில்.
மகேஸ் என உங்கள் சூப்பர்ஹிட் வரிசையில் இந்த "நாகராஜன் சந்து..:!


Hats Off தலைவரே...!

மணிஜி said...

தஞ்சையில் நீண்ட காலம் “எடுக்கிற”கக்கூஸ்தான் இருந்தது..அந்த நாற்றம் இப்போதும் நினைவில் இருக்கிறது..மண் ”மணம்” கவழும் பதிவு

நாஞ்சில் நாதம் said...

தல,

அசத்தலான எழுது நடை. கொஞ்சம் நீளமான பதிவாயிருந்தாலும் ஒவ்வொரு பாராவும் சங்கலி தொடர் போல் உள்ளன. அருமை

நையாண்டி நைனா said...

SUPER MACHI.

Unknown said...

நல்ல புனைவு.”சந்து” என்றால் சில ஊர் வட்டார வழக்கில் “புட்டம்” என்று அர்த்தம்.(”என்னத்தப் பண்ணா...சந்த
காட்டிட்டுப் போயிட்டான்ல”)

இது அமைந்தது நகைமுரண்.

சென்னையில் ஒரு தெருவில்
சாக்கடைத்தொல்லையால்
அந்த தெருவில் பெண்/மாப்பிள்ளை எடுக்கமாட்டர்கள்.

எப்பவோ ஆனந்த விகடனில் படித்தது.

anujanya said...

வழமையான, அருமையான நடை. இந்த மாதிரி சுவாரஸ்யமா எழுதிக் கிட்டே இருங்க முரளி.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

நன்றி குடந்தை அன்புமணி

நன்றி அக்பர்

நன்றி டக்ளஸ். இன்னும் பலாஜி,செந்தில்,மகேஸை எல்லாம் நீங்க மறக்கலியா?
சந்தோஷம்.

நன்றி தண்டோரா

நன்றி நாஞ்சில்நாதம்

நன்றி நையாண்டி நைனா

நன்றி ரவிஷங்கர்

முரளிகண்ணன் said...

நன்றி அனுஜன்யா

அது ஒரு கனாக் காலம் said...

சாப்பிட தொடங்கும் போது , படிக்க தொடங்கினேன் ..... தாங்க முடியலடா சாமி !!!!!.
நான் நியூஸ் பேப்பர் கூட இன்னும் பல வஸ்துகளையும் கொண்டு போக கூடிய ஆள் ... ஆதலால் ரசித்து படித்தேன்

கார்க்கிபவா said...

அட்டகாசம்..னிரையா நாளெடுத்து கரெக்ட் செஞ்சதா, இல்ல ஃப்ளோல அப்படியே வந்ததா சகா?

மாசற்ற கொடி said...

பலர் சொல்லியது போல நல்ல flow.

இப்படியுமா இருக்கும் என்று ஒரு பக்கம் ஆச்சரியம் !

இதை எதிர்பார்த்துதான் எங்கள் பூர்விக கிராமத்திற்கு செல்ல பல முறை தயங்கியுள்ளோம். I believe now it is much better !

"இது போன்ற சமூக ஆய்வுக் கட்டுரைகளை வைரஸ் தாக்கிவிடாத ஏதேனும் இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். "

Big repeat

அன்புடன்
மாசற்ற கொடி

Unknown said...

எதாவது சில வரிகளை மேற்கோள் காட்டி பாராட்டலாமென்றால் எல்லா வரியிலும் அசத்தியிருக்கீங்க முரளி.
நல்லதொரு வாசிப்பனுபவம் உங்களின் இந்தப் பதிவை படித்து முடிக்கையில்.

தொடர்ந்து கலக்குங்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி அது ஒரு கனாக்காலம்

நன்றி கார்க்கி

நன்றி மாசற்ற கொடி

நன்றி நாடோடி இலக்கியன்

ஸ்ரீ.... said...

பதிவிடுதலுக்கான பயிற்சிப் பள்ளியைத் துவக்கும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் சிறந்த இடுகைகளில் ஒன்று.

ஸ்ரீ....

Mahesh said...

முரளி... அபாரம் !! இந்த மாதிரி விஷயத்தைக் கூட இவ்வளவு சுவாரசியமா எழுத முடியுமா?

எல்லாம் எழுதிட்டு நான் இன்னும் 'யூத்'னு ஒரு பிட்டையும் சொருகிட்டீங்களே :))))))))))

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்ரீ. இதெல்லாம் உங்களுக்கே
கொஞ்சம் ஓவரா இல்ல.

நன்றி மகேஷ்.

கோபிநாத் said...

இது..இது தான் எங்க முரளிண்ணே ஸ்பெசல் ;)))

அட்டகாசமான நடை ;))

புனைவு சொல்லும் போது வார்த்தைகளின் மேல் உள்ள உங்க கவனத்துக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்து ;))

ஆமா ஏன் எல்லா புனைவிலும் நீங்க கல்யாணம் ஆகாத மாதிரியே இருக்கீங்க?? ;)))

Unknown said...

சார் நீங்க தும்மலப்பட்டியா?

என்னோட நண்பர்களும் இருக்கின்றனர்

சைக்கிள் கடை ஓனர் மகன் அவன்

என்னுடய ஆசிரியரும் அந்த ஊர்தான்

நான் லட்சுமிபுரம் வழி தேனி டூ பெரியகுளம்

Sanjai Gandhi said...

This post has been removed by the author.

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்.

சில புனைவுகள்ல எனக்கு கல்யாணம் ஆகியிருக்குமே.

நன்றி பிரியமுடன் வசந்த். எனக்கு வதிலை மாநகர்.

சஞ்சய் என்னாச்சு?

Cable சங்கர் said...

சூப்பர் முரளி.. மிக அருமையான நடை.. அதான் ரமேஷ் வைத்யா சொல்லியிருக்காரே.. அடிய பின்னி விடுங்க.. ரைட்

முரளிகண்ணன் said...

நன்றி கேபிளாரே

"உழவன்" "Uzhavan" said...

நாத்தமெடுத்த விஷயத்தக்கூட ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. அப்படி எதாவது ஒரு சந்துல நம்ம கடமையை ஆற்றிக்கொண்டு இருக்கும்போது, நம்ம சுத்தி ரெண்டு மூனு பன்றி ரெடியா இருக்கும். அந்த பன்றியை சூ சூ னு விரட்டிக்கிட்டேதான் இருக்கனும்.. இல்லை.... :-)
கலக்கிட்டீங்க பாஸ்.

கதிரவன் said...

நல்ல பதிவு முரளி.

இப்போ கிராமங்கள்ல நிலமை கொஞ்சம் பரவாயில்லைன்னு நினைக்கிறேன்

Thamira said...

ரமேஷ், கார்க்கி, மகேஷ் பின்னூட்டங்களுக்கு ரிப்பீட்டு..

உணவு பழக்கங்களை (கொஞ்சம் சொதப்பினாலும் படித்துபடித்து பழக்கமான போர் சப்ஜெக்ட்.. அட்டகாசம் பண்ணியிருக்கீங்க) இயல்பாக சொல்லிவருகையில் இது போன்ற பிற்பகுதியை எதிர்பார்க்கவில்லை. முரண். மிக இயல்பு.

எனக்கு இந்த எடுப்பு கக்கூஸைத்தவிர பிற அனுபவங்கள் உண்டு.

புருனோ Bruno said...

//இரவு மூன்று மணிக்கும் காலை இரண்டு மணிக்கும் இடையே யாருக்காவது பசியெடுத்தால் என்ன செய்வது//

???

புருனோ Bruno said...

//ஆமா ஏன் எல்லா புனைவிலும் நீங்க கல்யாணம் ஆகாத மாதிரியே இருக்கீங்க?? ;)))//

அதிலென்ன தவறு

Unknown said...

நான் தாரை, அரிக்கை, கன்னி போன்ற மாநகர்களின் திறந்த வெளி கழிவு கழகத்தில் சிலகாலம் சிறப்பான முறையில் இருந்திருக்கிறேன்.. இந்த நாகராஜன் சந்து என்னை ஊக்கப்படுத்தி, ​மேற்கண்ட கழகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த தூண்டோ தூண்டென்று தூண்டுகிறது. நன்றி முரளி!! வரப்பபோகிற அல்லது ​போடப்​போகிற இடுகைக்கான ஒரு சின்ன சாம்பிள்: இருந்துவிட்டு பக்கத்து ஓடையில் போய் கழுவறப்போ பாடும் பாட்டு: "ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை.."

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கே பேசப் பட்டிருக்கிறது

Mahesh said...

உங்களுக்கு ஒரு விருது. நம்ம திண்ணைக்கு வந்து வாங்கிக்கறீங்களா?

Namma Illam said...

நல்லா எழுதி இருக்கீங்க அண்ணே!
வத்தலகுண்டு மார்க்கெட்டில் கீழே இறங்கி கடைசியில் இடது புறம் திரும்பி கொஞ்ச தூரத்தில் ஒரு பொது கழிப்பறை இருக்கும்... அங்கு தான் சின்ன வயதில் செல்வோம்... கொஞ்சம் பெரிதானதும் வீட்டில் அல்லது பள்ளிவாசலில் செல்வோம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

kalapria said...

சபாஷ், உங்களுக்கும் ரமேஷுக்கும்

ஷங்கி said...

அருமையா எழுதியிருக்கீங்க, இது ஒரு நீண்ட கவிதை! என்னுடைய பால்ய வயதில் சில வருஷங்கள், தெருவிலேயே, வீட்டை ஒட்டி ஓடும் ஓடையில்.. வெக்கம் பிடுங்கித் திங்கும்!

Boston Bala said...

:)) இதற்கு 'புனைவு' குறிச்சொல் தவிர எல்லாமே தூள் :P

srikanth said...

எப்போதும் போல் நன்றாக இருந்தது. நிறைய எழுதுங்கள்

அது ஒரு கனாக் காலம் said...

Today also I enjoyed reading this