ஐபிஎல், டீம்களின் எண்ணிக்கையை உயர்த்தப் போவதாக வந்த செய்திகளை அடுத்து, மோகன்லாலும் பிரியதர்ஷனும் இணைந்து கேரளா டீமை ஏலத்தில் எடுக்கப் போவதாக செய்திகள்.
அவர்கள் தங்கள் மானேஜர்களுடனும் கிரிக்கெட் வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்த படகு வீட்டில் கூடுகிறார்கள்.
லால் : டீம் பேரு நம்ம பாரம்பரியத்தைக் காட்டுறமாதிரி இருக்கணும்
தர்ஷன் : சித்திரைத் திருநாள், சுவாதித் திருநாள் மகராஜாக்களை நினைவு படுத்துற மாதிரி கேரளா மகராஜ்ஸ்ன்னு பேர் வைக்கலாமா?
வல்லுநர் : சார், ஏற்கனவே ராயல்ஸ்,கிங்ஸ்ன்னு நாலு டீம் இருக்கு
லால் : அப்போ கேரளா சிப்ஸ் லெவன், கேரளா நேந்திரம்ஸ், கேரளா புட்டூஸ்னு ...
வல்லுநர் : சார், நாம என்ன ஹோட்டலா ஆரம்பிக்கப் போறோம்?
மானே 1 : சேட்டா, நம்ம டீமுக்கு கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு பேர் வைப்போம். நாம தோத்தாலும் பத்திரிக்கை, டிவி எல்லாம் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு சொல்லுவாங்க.
லால் : எந்தா, ஈ ஆளுக்கு ரெண்டு இன்கிரிமெண்ட் சேர்த்துப்போடு
மானே 2 : சென்னை டீமுக்கு சிவமணின்னு ஒருத்தர் எங்க போனாலும் டிரம்ஸ் வாசிச்சு சப்போர்ட் பண்ணுறாரு.
தர்ஷன் : நாம பதினெட்டு பேரை பட்டு வேட்டி, துண்டு, கொண்டையோட செண்டை மேளம் வாசிக்க வச்சுருவோம். ஸ்டேடியமே அதிர்ந்துடும்.
மானே 1 : சியர்ஸ் லீடர்னு எல்லா டீமிலயும் டான்ஸர்ஸ் வச்சுருக்காங்க
லால் : ஆழப்புழா போட் ரேசில, ஓட்டுட்டி வர்றவங்கள துண்டைச் சுத்தி சியர்ஸ் பண்ணுவாங்களே, அந்த ஆளுங்கள நாம இறக்கிடுவோம்.
மானே 2 : அப்படியே கடலினக்கப் போறேரே கரையினக்கப் போறோரே பாட்டை ரீமிக்ஸ் பண்ணி
பேட் பிடிக்கப் போறோரே
பந்து வீசப் போறோரே
போய் வரும் போது என்ன கொண்டு வரும்?
போர் சிக்ஸ் அடிச்சு வரும்
விக்கட் எல்லாம் கொண்டு வரும்னு
தீம் சாங்கும் ரெடி பண்ணீருவோம்.
மானே 1 : பெங்களூருக்கு கத்ரினா மாதிரி நமக்கு ஒரு பிராண்ட் அம்பாசட்டர் வேணுமே
லால் : மத்த ஸ்டேட்டெல்லாம் அம்பாசடர் கடன் வாங்கணும். நம்ம ஸ்டேட்ல தடுக்கி விழுந்தா தேவதைகள். மீரா ஜாஸ்மின்ல ஆரம்பிச்சு நயன்,அசின், பாவனான்னு. யாரை செலக்ட் பண்ணுறதுகிறதுதான் கஷ்டம்.
வல்லுநர் : சார், நாம என்ன படமா எடுக்கப் போறோம்? டைட்டில், மியூசிக், ஹீரோயின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க. எந்த எந்த பிளேயர எடுக்கிறது? அவங்களுக்கு என்ன பட்ஜெட்? அப்படிங்கிறத சொல்லுங்க சார்.
லால் : இங்க எப்பவுமே லோ பட்ஜெட்தான்.
வல்லுநர் : பாரின் பிளேயர்ஸ்ஸ எடுக்கணும்னா கோடிக் கணக்குல செலவாகுமே?
தர்ஷன் : நாங்க, மத்த இடங்கள்ள கோடிக் கணக்குல வாங்குறவங்களுக்கு லட்சத்துலதான் சம்பளம் கொடுக்குறது வழக்கம்.
லால் : ஏன் பாரின் பிளேயர்ஸ்க்கு போறீங்க. இந்தியன் பிளேயர்ஸ்?
வல்லுநர் : ஏழுபேர் டீமில வேணும் அது இதுன்னு பல ரூல்ஸ் இருக்கிறதால இந்தியன் பிளேயர்ஸ்க்கு தான் ரேட் இன்னும் அதிகம். வாசிம் ஜாஃபர்னு ஒருத்தர், அவரு ஒன் டேக்கே லாயக்கிலேன்னாங்க. அவரவே எவ்வளவு காசு கொடுத்து எடுத்திருக்காங்கன்னு தெரியுமா?
லால் : கேரளா பிளேயர் யாரு இருக்குறாங்க?
வல்லுநர் : ஸ்ரீசாந்த்துன்னு ஒருத்தர் இருக்காரு. அவரயும் பஞ்சாப் டீமில பிரீத்தி எடுத்திருக்காங்க.
தர்ஷன் : பிரீத்தி கிட்ட நான் பேசுறேன். எவ்வளவுக்கு அவர எடுத்தாங்களோ அத கொடுத்து அவர வாங்கிடுவோம். மானேஜர் ஒரு பேக்ஸ் அனுப்பிடுங்க.
வல்லுநர் : அப்போ மீத ஆட்களெல்லாம்?
லால் : இந்த ஸ்டேட்ல கிரிக்கெட் தெரிங்சவங்களே இல்லையா?
மானே 1 : சேட்டா, ஸ்டார் கிரிக்கெட் நடக்கும்போது கூட தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் தான் நடக்கும். அந்த அளவுக்கு நம்ம ஸ்டேட் கிரிக்கெட்ல வீக்.
தர்ஷன் : கவலைய விடுங்க. கலாபவன்னு ஆரம்பிச்சு நடிக்க கத்துக் கொடுக்குறமாதிரி கிரிக்கெட் பவன்னு ஒன்னு ஆரம்பிச்சுக்கிடலாம்.
வல்லுநர் : அப்படி புது ஆளுகளா சேர்த்துக்கிட்டா நல்ல கோச் இருந்தாத்தான் வின் பண்ண முடியும்.
லால் : அது எப்படி?
வல்லுநர் : உங்க பாணிலயே சொல்லுறேன். ஸ்டார் இல்லாம, செலவு பண்ணாம ஸ்க்ரிப்ட வச்சு ஜெயிக்கிறீங்கள்ளயா? அதுமாதிரி யாரு எப்போ இறங்கணும், யாருக்கு யாரு பவுல் பண்ணனும், எங்கே பீல்டிங் நிக்கணும்னு ஸ்கிரிப்ட் எழுதுறவங்க தான் கோச். அதுமாதிரி நல்ல பாரின் கோச் வேணும்.
தர்ஷன் : ஓகே. கொஞ்சம் விலை மலிவான கோச்சா பாருங்க.
வல்லுநர் : ஏற்கனவே நல்ல கோச்சை எல்லாம் மத்தவங்க வளைச்சுப் போட்டுட்டாங்க. ஜான் புக்கானன், கிரேக் சேப்பல்னு ரெண்டு பேர் இருக்காங்க. ஆனா அவங்க எல்லாம் பயங்கரமா பாலிடிக்ஸ் பண்ணுறவங்க.
லால் : சார், ஒண்ணு தெரியுமா, எல்லா நாட்டுக்கான தூதர்களும் எங்க ஆளுங்க தான். ஏன் ஐநா சபை பிரதிநிதி வரைக்கும் எங்க ஆளுங்கதான்.
மானே 2 : துபாய்ல ஆரம்பிச்சு தமிழ்நாடு வரைக்கும் எங்க ஆளுக பண்ற அரசியல்ல அங்க இருக்குறவங்களே ஆடிப்போயிருக்காங்க.
லால் : அதனால தான் சொல்லுறோம். ஜான் புக்கானன் என்ன, அவங்க அப்பா முழம் புக்கானன் வந்தாலும் எங்க கிட்ட புட்டு வேகாது.
வல்லுநர் : சரி, அவரவே போட்டுடுவோம்.
மானே 2 : சார், பிரீத்திகிட்ட இருந்து பதில் பேக்ஸ் வந்திருக்கு.
நம்ம கண்டிஷனுக்கு அவங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.
தர்ஷன் : ஏன் இன்னும் அதிகம் பணம் எதிர்பார்க்குறாங்களா?
மானே 2 : அதில்லை சார். எவ்வளவுக்கு வாங்கினாங்களோ, அதவிட பத்து மடங்கு அதிகம் பணம் அவங்க தர்றாங்களாம். உடனே அவர எடுத்துக்கங்கண்ணு சொல்றாங்க சார்.
அனைவரும் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
32 comments:
super murali
//
ஜான் புக்கானன் என்ன, அவங்க அப்பா முழம் புக்கானன் வந்தாலும் எங்க கிட்ட புட்டு வேகாது.
//
இது சிக்ஸர் :0))
Kalakkal......................Cricket Kerala IPL......................!!!!!!!!!!!!!!!!!!!!!!
வருகைக்கு நன்றி
டி வி ஆர் சார்
அதுசரி
பிஸி
அவர்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................
/பேட் பிடிக்கப் போறோரே
பந்து வீசப் போறோரே
போய் வரும் போது என்ன கொண்டு வரும்?
போர் சிக்ஸ் அடிச்சு வரும்
விக்கட் எல்லாம் கொண்டு வரும்னு
தீம் சாங்கும் ரெடி பண்ணீருவோம்.
//
murali.. முடியல்ல..
நன்றி செந்தழல் ரவி.
நன்றி கேபிள்.
//மானே 2 : அதில்லை சார். எவ்வளவுக்கு வாங்கினாங்களோ, அதவிட பத்து மடங்கு அதிகம் பணம் அவங்க தர்றாங்களாம். உடனே அவர எடுத்துக்கங்கண்ணு சொல்றாங்க சார்.
//
லாலேட்டன் டீம் ஆரம்பிச்சு ஸ்ரீசாந்தை கொண்டு வரணும்ன்னு நினைச்சா நெஜமாவே இப்படி நடக்கும் :-)
பக்கா பக்கா...
இந்த மாதிரி பதிவுகள் தான் இப்ப நமக்கு தேவைப்படுது :)
அட்டகாசமான பதிவு :)
:-)))
K(eral)akkal !!!!!
கலக்கல் காமெடி.
மலையாளத்தில் பின்னுறீங்க..
கலக்கல் முரளி.. அதிலயும் அந்த பாட்டு சூப்பரு..
கலக்கல் காமெடி கலாட்டா
வருகைக்கு நன்றி கே வீ ஆர்
நன்றி வெட்டிப்பயல்
நன்றி கோபிநாத்
நன்றி மகேஸ்
நன்றி அக்பர்
நன்றி வெண்பூ
நன்றி ஸ்டார்ஜான்
ஓட்டுக்கள் போட்டாச்சு
வல்லிய இடுகையானு சாரே
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி அறிவிலி
நன்றி சின்ன அம்மிணி
:-)))))))))
//லால் : சார், ஒண்ணு தெரியுமா, எல்லா நாட்டுக்கான தூதர்களும் எங்க ஆளுங்க தான். ஏன் ஐநா சபை பிரதிநிதி வரைக்கும் எங்க ஆளுங்கதான்.
மானே 2 : துபாய்ல ஆரம்பிச்சு தமிழ்நாடு வரைக்கும் எங்க ஆளுக பண்ற அரசியல்ல அங்க இருக்குறவங்களே ஆடிப்போயிருக்காங்க.
லால் : அதனால தான் சொல்லுறோம். ஜான் புக்கானன் என்ன, அவங்க அப்பா முழம் புக்கானன் வந்தாலும் எங்க கிட்ட புட்டு வேகாது.
//
என் சார் தமிழ் நாட்டோட நிறுத்திட்டீங்க? ஈழம் வரை னு இல்ல வரணும்? பதிவு கலக்கல் !!
எனக்கு என்னவோ இது சரியா படல.. நாளைக்கு என் பதிவின் தலைப்பு..
1975 தமிழ் சினிமா - ஒரு அலசல்.
சேட்டா அடிபொழி பதிவு
நன்றி கிரி
நன்றி புவனேஷ்
நன்றி கார்க்கி.
நன்றி நாஞ்சில் நாதம் சாரே
எப்படியிய் !!! இதை அல்லாம் ரூம் போட்டு யோசிபியோ ! ! !
கொங்குதமிழ் தங்களின் வருகைக்கு நன்றி
//... ஜான் புக்கானன் என்ன, அவங்க அப்பா முழம் புக்கானன் வந்தாலும் எங்க கிட்ட புட்டு வேகாது. //
சூப்பரு
//எவ்வளவுக்கு வாங்கினாங்களோ, அதவிட பத்து மடங்கு அதிகம் பணம் அவங்க தர்றாங்களாம். உடனே அவர எடுத்துக்கங்கண்ணு சொல்றாங்க சார்.//
ROTFL :))))
முழம் புக்கானன், புட்டு வேகாது... கலக்கல் முரளி.
நன்றி பாசகி
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
தலைவரே,
உங்க சந்திப்புகள் அனைத்தும் சூப்பர்,
அடுத்ததா யார் யாரை சந்திக்க வைக்க போகிறீர்கள்?/
//கடலினக்கப் போறேரே கரையினக்கப் போறோரே பாட்டை ரீமிக்ஸ் பண்ணி//
அவர்களுக்கே உரித்தான சாங். முதல்ல கேரளாவில்ல லேடீஸ் கிரிக்கெட் ஆரம்பிக்க சொல்லுங்க. அப்பதான் அவங்களுக்கு பிரைட் ஃபூச்சர் இருக்கு :-)
நன்றி தராசு மற்றும் உழவன்
super sir, தீவிர கிரிக்கெட் ரசிகர் போல, உங்க கற்பனைக்கு தீனி போடுற மாதிரி இப்ப இந்தியா, ஆஸ்திரேலியா தொடர் நடந்துட்டு இருக்கு....
Post a Comment