July 06, 2009

நண்பன் சார்லி

ஒரு வீடு இரு வாசல் என்னும் படத்தில் சார்லிக்கு துணை நடிகர் வேடம். அவர் நடிக்க வந்திருக்கும் காட்சி ஒரு துக்க வீட்டுக் காட்சி. இறந்தவர் கிடத்தப்பட்டிருக்க சுற்றி நின்று அழ வேண்டும்.

இயக்குநர் அழுங்கள் என்று சொல்லிவிடுவார்.

சார்லி உடனே கேட்பார்.

சார், இறந்தவர் எந்த மொழிக்காரரு?, நாங்கள்ளாம் அவருக்கு என்ன உறவு முறை வேணும்?, இறந்தவன் நல்லவனா? கெட்டவனா? இதெல்லாம் தெரிஞ்சாத்தானே நாங்க கரெக்டா பீல் பண்ணி அழ முடியும்?

கேமராவ டாப் ஆங்கிள்ல வச்சாத்தானே எங்க பீலிங்லாம் ஆடியண்சுக்கு கன்வே ஆகும்?

எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைப்பார்.

உண்மையிலேயே சார்லி தான் நடிக்க வந்த இந்த 26 வருடங்களில் நடித்த 550க்கும் அதிகமான படங்களில் சில படங்களைத்தவிர பெரும்பாலான படங்களில் இதே மாதிரிதான் இயக்குநர்களிடம் கதறியிருப்பார் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எந்த விதமான கேரக்டரைசேஷனும் இல்லாமல் நாயகனின் நண்பன், நாயகனின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் , நாயகனின் உருப்படாத அண்ணன், மச்சினன் என பொதுப்படையான கேரக்டர்களைக் கொடுத்தே அவரை நோகடித்தது தமிழ்த்திரையுலகம்.

இதனால்தான் 40 வயதிலும் கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டிய கட்டாயம் சார்லிக்கு ஏற்பட்டது. 40 வயதுக்குமேற்பட்ட நாயகன் திருமணம் ஆகாதவனாக நடிக்கும் போது, அவனை இளமையாகக் காட்ட அவனை விட வயது கூடியவர்களை துணைக்கு வைக்க வேண்டிய கட்டாயம். ரஜினியின் படையப்பாவில் அவரை வயது குறைந்தவராகக் காட்ட நண்பர் குழாமில் நாலைந்து பெரியப்பாக்களை இறக்கி விட்டிருப்பார்கள்.
அதுபோல கார்த்திக்,முரளி,சரத்குமார்களின் இளமைக்காக இவர் நண்பனாகவே நடிக்க வேண்டி வந்தது.

சார்லி நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். தகவல் ஒலிபரப்புத் துறையின் நாடகப் பிரிவில் நடிகராக பணியாற்றிக் கொண்டிருந்த சார்லி, ரஷ்யன் கல்சுரல் சென்டரின் நூலகத்தில் உறுப்பினர். தான் எடுத்துப் படித்த புத்தகத்தை திரும்பக் கொடுக்கச் சென்ற சார்லி, அங்கு நடந்து கொண்டிருந்த ஹுயுமர் கிளப்பின் கூட்டத்தை வேடிக்கை பார்த்தார். இங்கே தன் திறமையையும் காண்பிக்கலாமே என் நினைத்து அமைப்பாளர்களை அணுகிணார். வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மோனோ ஆக்டிங்கையும் மிமிக்ரியையும் அங்கே பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜன் பாலசந்தரிடம் சிபாரிசு செய்ய பொய்க்கால்
குதிரை பட வாய்ப்பு சார்லிக்கு கிடைத்தது. அதன்பின் பாலசந்தர்,பாசில்,விக்ரமன் ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார்.

சத்யராஜ் அடிக்கடி சொல்லுவார், ”நமது திறமை என்ன என்பதை மற்றவர்களுக்கு காட்டும் வரையில் தான் தமிழ் சினிமாவில் கஷ்டப்படவேண்டும். ஒருமுறை நமது திறமை வெளியே தெரிந்துவிட்டால் பின் நமக்கேற்ற கேரக்டர்களை அவர்களே உருவாக்கித் தந்துவிடுவார்கள்” என்று.

ஆனால் இது சார்லி விஷயத்தில் மட்டும் பொய்த்துப் போனது. தன்னால் என்னவெல்லாம் முடியும் என்று முடிந்தவரை அவரும் திறமையைக் காட்டிப்பார்த்தார். ஆனால் அவருக்காக என்றுமே கேரக்டர்களை தமிழ்சினிமா உருவாக்கவில்லை. அவரை ஒரு ஆயத்த ஆடையாகவே தமிழ்சினிமா இன்றுவரை உபயோகித்து வருகிறது. அறிமுகமோ, முடிவோ தேவையில்லாத நண்பன் வேடமா, வயது 30 சமீபமா?
சார்லியை போட்டுக்கிருவமா? சரியா இருப்பாருல்ல? அவர் நம்பர் என்னா? இதுதான் பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது.

புதுப் புது அர்த்தங்களில் தோண்டித் துருவும் நிருபன் வேடம். கேள்வியைக் கேட்கும் விதம், பதிலில் இருந்து இன்னொரு கேள்வியைக் கேட்கும் விதம், வேடத்துக்குப் பொருத்தமாக நாலு நாள் தாடி, சோடா புட்டிக் கண்ணாடி என இரண்டு சீனில் வரும் கேரக்டருக்கு அவ்வளவு மெனக்கெட்டிருப்பார்.

வண்ணக் கனவுகள் வேடம்,ஜெயபாரதி இயக்கி சந்திரசேகருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த நண்பா நண்பா திரைப்படத்தில் படுக்கையில் இருக்கும் நண்பனுக்க ஆறுதல் காட்டுபவன், வெற்றிக் கொடி கட்டில் துபாய் செல்ல பணம் கட்டி ஏமாந்த கிராமத்தான்,என்னவளே திரைப்படத்தில் தன் உடல் ஊனத்தை மறைத்து நடிக்கும் இசைக் கலைஞன்,ஜெமினியில் பாலியல் தொழில் ஏற்பாட்டாளான், அமர்க்களத்தில் குருடன்,
கோபாலா கோபாலா செட்டியார் என அவ்வப்போது வித்தியாச வேடங்களில் தன் திறமையை நிரூபித்து வந்தாலும் நாயகனின் நண்பன் கூட்டம் என்னும் வட்டத்தை தாண்டுவது அவருக்கு பெரும்பாடாகவே இருக்கிறது. அன்னியன் போன்ற திரைப்படங்களில் அவருக்கு வேறு வகை வேடம் கொடுத்தலும் அரை ரீலுக்கு மேல் அவர் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

சார்லி, தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு : 1937 முதல் 1967 வரை என்ற தலைப்பில் எம் பில் ஆய்வு செய்துள்ளார். வருங்காலத்தில் அவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளாமல் இருக்கும் வரையில் அவருக்கு ஏற்ற வேடங்களை தமிழ்சினிமா கொடுக்கட்டும்.

புதுவசந்தம் திரைப்படத்தில் அவர் பேசும் பிரபல வசனம்

“எனக்கு நிலாச் சோறு சாப்பிடமும்னு ஆசை. வாழ்க்கை பூராம் நிலா இருந்துச்சு, ஆனா சோறுதான் இல்லை”

அதுபோல நல்ல ரோல்ல நடிக்க ஆசை. நடிப்பு மட்டும்தான் இருந்துச்சு, ஆனா வாய்ப்புதான் கிடைக்கலை என்று மாற்றி அவர் புலம்பிவிடாமல் இருக்க தமிழ்சினிமா ஏதாவது செய்யட்டும்.

49 comments:

Raju said...

என்னாது அடிக்கடி டெம்ப்ளேட் மாத்திக்கிட்டே இருக்கீங்க..?

முரளிகண்ணன் said...

மேட்டரத்தான் மாத்த முடியல, டெம்பிளெட்டையாச்சும் மாத்துவோமேன்னுதான்.

சகாதேவன் said...

பாவம் சார்லி
சகாதேவன்

Raju said...

வெற்றிக்கொடிகட்டுல தான் சார்லி சூப்பர்...!

அமர்க்களத்துல கூட குருடனா நடிச்சுருப்பாப்ல....!
அத விட்டுட்டீங்களே தல‌.

முரளிகண்ணன் said...

நன்றி சகாதாவன்

சேர்த்துடறேன் டக்ளஸ்

முரளிகண்ணன் said...

தவறாக பெயரை அடித்து விட்டேன் சகாதேவன் சார். மன்னிக்க.

மொக்கை மோகன் said...

//மேட்டரத்தான் மாத்த முடியல, டெம்பிளெட்டையாச்சும் மாத்துவோமேன்னுதான்//

உங்க டெம்ளேட்டை விட மேட்டர்ஸ் ரொம்ப அழகு. நீங்க சினிமாத்துறையில் இருக்கிறீர்களா?

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி மொக்கை மோகன்.

\\நீங்க சினிமாத்துறையில் இருக்கிறீர்களா?
\\

நான் சினிமா ரசிகன் மட்டுமே.

நர்சிம் said...

//முரளிகண்ணன் said...
மேட்டரத்தான் மாத்த முடியல, டெம்பிளெட்டையாச்சும் மாத்துவோமேன்னுதான்.
//

செம டைமிங் முரளி.

பதிவு கலக்.

மணிஜி said...

முரளி..சார்லி ஒரு தீவிர வாசிப்பாளரும் கூட..அரவிந்த அன்னையின் டிவோட்டியும் கூட....அவர் நடித்த ஒரு படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன்..நல்ல பதிவு(உங்களுக்கே டாக்டர் பட்டம் கொடுக்கலாம்..சரி..என் மேல கோபமா இருக்கிங்களா?)

Karthikeyan G said...

Sir, சார்லி ஓவர்-ஆக்டிங்கை ஓவராக செய்பவர். அவரது திறமைக்கு மீறிய அங்கீகாரத்தை தமிழ் திரையுலகம் அவருக்கு தந்துள்ளதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்க என்ன இப்படி சொல்றீங்களே.

பரிசல்காரன் said...

சார்லி அதி அற்புதக் கலைஞர். யூகிசேது நைஅயாண்டி தர்பார் நடத்தும்போது சார்லி கலந்து கொண்டபோது ஒரு மோனோ ஆக்டிங் செய்தார் பாருஙக்ள்... ச்சான்ஸே இல்லை!

வடபழனி முருகன் கோயிலில் ஆவ்ரைச் சந்தித்தபோது ‘பூவே உனக்காக’ல நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லி வழிந்தது இன்னும் நினைவிலிருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தென்காசிபட்டிணத்தில்..விவேக்,சார்லி பசுமாடு காமெடியை விட்டுவிட்டீர்களே

சரவணகுமரன் said...

//ரஜினியின் படையப்பாவில் அவரை வயது குறைந்தவராகக் காட்ட நண்பர் குழாமில் நாலைந்து பெரியப்பாக்களை இறக்கி விட்டிருப்பார்கள்.
//

:-))

சரவணகுமரன் said...

வழக்கம் போல் நிறைய தகவல்கள் கலந்த பதிவு...

ஒரு கட்டுரையாக இன்னும் சிறப்பாக இருந்தது...

சரவணகுமரன் said...

//மேட்டரத்தான் மாத்த முடியல, டெம்பிளெட்டையாச்சும் மாத்துவோமேன்னுதான்.//

குபீர் சிரிப்பை வரவழைத்தது... :-))

சிநேகிதன் அக்பர் said...

//மேட்டரத்தான் மாத்த முடியல, டெம்பிளெட்டையாச்சும் மாத்துவோமேன்னுதான்//

ரிப்பீட்டேய்....

போன பதிவு படிக்கும் போது சார்லி பற்றி பதிவு வருமா என்று நினைத்தேன்.
ஒரு வேலை கொடுத்த ரோலில் எல்லாம் நடிக்காமல் கேரக்டர் தேர்வு செய்து நடித்திருக்கலாமோ என்று தோன்றும்.
தகவலுக்கு நன்றி.

அன்பரசு said...

பிரண்ட்ஸ் படத்தில் சார்லி கிட்டத்தட்ட படம் நெடுக வருவார். (அதிலும் கூட நாயகனின் நண்பன் தான்) அதை விட்டு விட்டீர்களே? காதலுக்கு மரியாதையிலும் சற்று அதிக நேரம் வந்து போவார். வெற்றிக்கொடிகட்டு படத்தில் அவர் பார்த்திபனை கிராமத்தில் பார்க்கும் காட்சி பார்ப்பவரை நெகிழ வைக்கும்.

சென்ஷி said...

இயக்குனர் ஃபாசிலின் அனைத்து திரைப்படங்களிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சார்லி வருவார்.

எனக்கு மிகப்பிடித்த துணை நடிகர். நன்றி முரளி!

புதுவசந்தம், வெற்றிக்கொடி கட்டு இவரது நடிப்பில் பிரமித்துள்ளேன். எளிதாய் ரசிகனை நெகிழச்செய்பவர்.

நண்பா நண்பா - இன்னும் காணவில்லை :(

Starjan (ஸ்டார்ஜன்) said...

சார்லி ஐ பத்தி பதிவு எழுதிய உங்களுக்கு நன்றி நண்பா

தமிழ்திரைஉலகம் அவருக்கு சரியான பாதை கொடுக்காவிட்டாலும்

தமிழ்வலைஉலகம் சார்பா அவருக்கு ஒரு மரியாதை....

வினோத் கெளதம் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச சார்லி நடிச்ச படம் பார்த்தேன் ரசித்தேன்..அதில் அவரோடைய உடல் மொழியே ஒரு வித்தியாசமாக நகைச்சுவையாக இருக்கும்..

புருனோ Bruno said...

சூப்பர் :) :)

புருனோ Bruno said...

//உங்களுக்கே டாக்டர் பட்டம் கொடுக்கலாம்..ச//

டாக்டர் விஜய், டாக்டர் ஜெயலலிதா, டாக்டர் முரளி - நல்லாத்தான் இருக்கு

//ரஜினியின் படையப்பாவில் அவரை வயது குறைந்தவராகக் காட்ட நண்பர் குழாமில் நாலைந்து பெரியப்பாக்களை இறக்கி விட்டிருப்பார்கள்.//

ஹி ஹி ஹி

கார்க்கிபவா said...

எல்லோரும் சொன்ன மாதிரி வெற்றி கொடி கட்டு.. ஒரு காட்சியில் மனோரமா, பார்த்திபன் முன்னிலையில் அவரக்ள் ஏமாந்தத்தை சொல்லிவிட்டு உடனே சுதாரித்து பைத்தியம் போல் நடிப்பார். கடைசியில் கண்ணீர் விட்டு அழுவார். வாய்ப்புகளே இல்ல சகா.. இன்னமும் கண் முன்பு நிற்கிறது..

முரளி எனக்காக ஒருவரைப் பற்றி எழுதவும்..

து.மனமும் துளும் படத்தில் டவுசர் பாண்டியாக வருவாரே.. விபத்தில் இறந்து விட்டார்..

அறிவிலி said...

நல்ல நடிகர். ஆனால் உரிய ரெகக்னி ஷன் கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தை சரியாகவே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

நிஜாம் கான் said...

வெற்றிக்கொடி கட்டு படத்தில் பார்த்தீபன் கேட்டுக்கொண்டவுடன் பைத்தியமாக நடித்து மாட்டை ஒட்டகம் என்பார், பின்னர் என் பணத்த ஏமாத்திட்டாங்கய்யா என கதறி அழுவார். அது அங்கேயிருக்கும் மனோரமாவுக்கு அவர் பைத்தியம் போல தெரியும், பார்த்தீபனுக்கும் பார்க்கும் நமக்கும் அவரது அழுகையின் உள் அர்த்தம் புரியும். சார்லிக்கு ஈடு இன்றுவரை யாருமில்லை. அதே போல அவரது முன்னேற்றம் கிணற்றில் போட்ட கல்லாய் போனது கடைசிவரை பரிதாபம்.

Thamira said...

சார்லி எனக்கு மிகவும் பிடித்த ஒரு கலைஞர்.!

☼ வெயிலான் said...

மிகச்சிறந்த நடிகருக்கு இந்தப்பதிவு ஒரு பாராட்டுப் பத்திரம்!

சோமி said...

சார்லியை லயோலாவில் சந்திக்கும் வரை அவர் குறித்த எந்த அபிப்ராயமும் எனக்கிருந்ததில்லை. சும்மா ஒரு துணைக் காமேடியன் என்பதைத் தவிர. நடிப்பு குறித்து அவர் எங்களோடு பகிர்ந்து கொண்ட விசயங்களும் தகவல்களும் அவர் செய்து காட்டியவைகளும் அங்கிருந்த மாணவர்கள் அனைவருக்கும் சார்லி என்கிற கமேடியனை காணாமல் ஆக்கி ஒரு நல்ல நடிகனை திரனாய்வாளனை எமக்கு அறுமுகப் படுத்தியது. பின்னர் அவருடன் நெருங்கிப் பழகும் ஒரு காலம் வந்த போது அவர் பேசிய விடையங்களை வியந்து போய் பார்த்திருக்கிறேன்.

மற்ரம்படி அவர் பல படங்களில் ஓவர் அக்டிங்க் செய்கிறார் என எனக்கும் தோன்றும். அவர்க்குள் திறமை அதிகம் ஆனால் வழங்கப் படும் இடம் குறைவு அதனால் கொஞ்சம் ஓவரா இருக்கோ...அவருக்குள் ஒரு நல்ல இயக்குனர் ஒளிந்திருக்கிறார்.ஒரு கதை குறித்து பேசிய பொழுது இதை உணர்ந்தேன்

மாதவராஜ் said...

சார்லி, ஆரவாரமில்லாத நல்ல நடிகர். அவரிடம் இருந்து இன்னும் நிறைய அற்புதங்களை தமிழ்ச்சினிமா பெற்றிருக்க வேண்டும். தவறவிட்டிருக்கிறது என்பதே என் கருத்து.
அவரைப் பற்றி ஒரு பதிவு எழுதியது, உங்களோடு நெருக்கமாக உணர வைக்கிறது.
சந்தோஷம் நண்பா!

உடன்பிறப்பு said...

//டக்ளஸ்....... said...

என்னாது அடிக்கடி டெம்ப்ளேட் மாத்திக்கிட்டே இருக்கீங்க..?
//

கமல் ரசிகர் அல்லவா அதான் அடிக்கடி கெட்டப்பை மாற்றிக் கொண்டே இருக்கிறார்

Anonymous said...

சார்லியை அவரது முதல் படத்திலிருந்து தொடர்கிறேன். வீனடிக்கப் பட்ட திறமை அவரது.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு அவரது மெனக்கெடலும் அதன் பின்னுள்ள அளவிட முடியாத உழைப்பும் பாராட்டப்பட வேண்டியது. ஃப்ரன்ட்ஸ் படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

இப்பதிவின் மூலம் அவருக்கு நேர்மையான நியாயம் செய்திருக்கிறீர்கள்,

Krish said...

///உண்மையிலேயே சார்லி தான் நடிக்க வந்த இந்த 26 வருடங்களில் நடித்த 550க்கும் அதிகமான படங்களில் ////

அடேயப்பா இவ்வளவு படங்களில் நடித்துள்ளரா? நல்ல நடிகர்!

Cable சங்கர் said...

சார்லியை பற்றிய இந்த பதிவு ஒரு நிதர்சன உண்மை.. ஒரு நல்ல நடிகனுக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை ஒத்து கொள்ள வேண்டும்.

ஆனால் எனக்கு தெரிந்து மற்றவர்கள் தங்களுடய ப்ள்ஸ், மைனஸை வைத்து தனக்கு, காமெடிதான், வில்லந்தான், ஹீரோதான் என்று முடிவு செய்து முயற்சி செய்ததை போல், இவர் வள்ரும் காலத்தில் செய்ய தவறிவிட்டார் என்றேதோன்றுகிறது.. சார்லியின் காமெடி நடிப்பை விட, குணச்சித்திர வேடங்களில் பின்னி பெடலெடுப்பார். நான் இவருடன் இரண்டு மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். ஸ்பாட்டில் அவர் செய்யும் மெனக்கெடல்கள் அருமையாய் இருக்கும். ஒரு வேளை அவர் குணச்சித்திர வேடங்களில் மட்டும் கான்செண்ட்ரேட் செய்திருந்தால் பெரிய் அளவில வந்திருப்பார் என்று தோன்றுகிறது.

நன்றாக யோசித்து பாருங்கள்.. இங்கு எழுதபட்ல படங்களில் சார்லியின் குணசித்திர வேடங்களை பற்றியே பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவரின்காமெடி படத்தில் இயல்பாய் அதன் ஓட்டத்திலேயே வரும் அதனால் தான் பல மளையாள இயக்குனர்கள் தொடர்ந்து இவரை பயன்படுத்தியிருப்பார்கள்

நாஞ்சில் நாதம் said...

சார்லி தமிழ் சினிமாவில் வீணடிக்கப்பட்ட ஒரு நல்ல நடிகர்

Raju said...

ஆங்... நேத்து கேரக்டர் ஞாபகம் இருந்துச்சு தல...ஆனா ,படம் பேரு மறந்துருச்சு.
இன்னிக்கி ஞாபகம் வந்துருச்சு..
"ராஜா கைய வச்சா"ன்னு ஒரு பிரபு படம்னு நினைக்கிறேன். அதுல சார்லி ஒரு மாதிரி "சிரிச்சுக்கிட்ட்டே"
இருக்குற மாதிரி சூப்பரா பண்ணியிருப்பாரு..!

அப்பறம் தெனாலி கிளைமேக்ஸ், பம்மல்.கே.சம்பந்தம் கிளைமேக்ஸ்.....!

thamizhparavai said...

நல்ல பதிவு முரளி சார்....
‘புது வசந்தம்’-சார்லி பிடித்திருந்தது.
‘வருஷம்-16’ இன்னும் நிறைய..
‘கோபுர வாசலிலே’-பிரமாதம்...

கார்க்கி, டவுசர் பாண்டியின் பெயர் ‘பாரி வெங்கட்’...

வால்பையன் said...

அருமையான கட்டுரை!
சார்லி எனக்கு மிகவும் பிடித்த குணசித்தர நடிகர்!

ஒரே ஒரு சந்தேகம்!
அவரது இயற்பெயரே சார்லி தானா, இல்லை சாப்ளின் மீது உள்ள பற்றால் அந்த பெயரா?

வெட்டிப்பயல் said...

அட்டகாசமான பதிவு...

சார்லியோட பேட்டி ஒண்ணு சமீபத்துல பார்த்தேன். மனுஷன் ரொம்ப விரக்தியா பேசினாரு. பார்க்கவே கஷ்டமா இருந்தது.

நல்ல நடிகர். சரியா பயன்படுத்திக்காத விட்டுட்டோம் :(

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
மேட்டரத்தான் மாத்த முடியல, டெம்பிளெட்டையாச்சும் மாத்துவோமேன்னுதான்//

இப்ப தான் நிறைய வெரைட்டி கொடுக்கறீங்களே... ஆரம்பத்துல தான் வெறும் சினிமா பதிவா இருந்தது. இப்ப தான் அப்பப்ப கதைகள், நகைச்சுவைனு கதம்பமா கொடுக்கறீங்களே...

வெட்டிப்பயல் said...

வால்ஸ்,
அவர் பேரு மனோகர் :)

IKrishs said...

"Uthama purusan" padathula prabhu voda office la peon a varuvaar...Andha Car "comedy" ku vilundhu vilundhu siruchirukken..Krish

Prasanna Rajan said...

தமிழில் ‘வெள்ளித்திரை’ என்ற படம் வந்தது நினைவு இருக்கிறதா. (ஹிஹி.. வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை. அதில் ஒரு தயாரிப்பு மேற்பார்வையாளர், எப்படி செயல்படுவார் என்பதை மிக அழகாக வெளிப் படுத்தியிருப்பார், அவர் செய்த கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மிக அருமையான பதிவு முரளி அண்ணா...

கோபிநாத் said...

அண்ணே தேடி தேடி ஒவ்வொரு நடிகராக பதிவு போட்டு கலக்குறிங்க..;))

பதிவை படிச்சதும் பாவம் சார்லின்னு தான் தோணுது..;(

ராமகுமரன் said...

சார்லி மௌனம் சம்மதம் திரைப்படத்தில் வில்லனுக்கு துணைப்போகும் அப்பாவியாக நடித்திருப்பார். கோபுர வாசலிலேயிலும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம்

buginsoup said...

இவரு எங்க ஊர்க்காரர் சார், கோவில்பட்டி!
எவரோட அப்பா எங்க பள்ளி அஸிஸ்டண்ட் ஹெட்மாஸ்டர் (80களில்). சார்லி என் ஸ்கூல் சீனியர்.

butterfly Surya said...

முரளி, டெம்பிளேட்டை மாத்துங்க..பரவாயில்லை. மேட்டரை மாத்தாதீங்க..

அருமையான பதிவு.

கிரி said...

//உண்மையிலேயே சார்லி தான் நடிக்க வந்த இந்த 26 வருடங்களில் //

அடேங்கப்பா!

சுரேகா.. said...

ஓரு ஊர்ல ஒரு ராஜகுமாரி கேரக்டர் சூப்பரா இருக்கும்!