2009ன் முதல் ஆறு மாதங்களில் கமர்சியல் படங்களில் அயன் மட்டுமே ஹிட். மற்றபடி கதை,நடிப்பு உள்ள படங்களே வெற்றி என்ற ரிப்போர்ட்டைக் கண்டு குமுறும் பார்முலா நாயகர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள்.
அஜீத் : அயன்ல சூர்யா தப்பிச்சுட்டாரு. எங்கப்பா இந்த தனுஷ், ஜெயம் ரவி எல்லாம்?
சிம்பு : அவங்களுக்கு அவங்க அண்ணங்க இருக்காங்க. எப்படியாச்சும் தேத்தி விட்டுடுவாங்க.
விஷால் : எனக்கும் ஒரு அண்ணன் இருக்கானே?.
அஜீத் : சிம்புக்கும் விஜய்க்கும் அவங்க அப்பா காமெடி பீஸு, உனக்கு அண்ணன்.
விஷால் : என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க.
சிம்பு : தலை சொல்லுறது சரிதான். இவ்வளோ செலவழிச்சு உன்னைய வச்சு படமெடுக்குறதும் இல்லாம நீ டைரக்டர ஆட்டி வைக்கிறத பொறுத்துப் போறான்ல.
விஜய் : அட அத விடுங்கப்பா. படம்தான் ஓடமாட்டெங்குதுன்னா நமக்கு பப்ளிசிட்டியும் கிடைக்க மாட்டேங்குதே. ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கிறாரு விக்ரம், அவர் பாடுறாரு, கெட்டப் போடுறாருன்னு ஒரு கவர் ஸ்டோரி. பிரபுதேவா கூட நயன வச்சு பிலிம் காட்டுறாரு.
இங்க ஒருத்தன் கட்சி ஆரம்பிக்கிறேன்னு கத்திக்கிட்டு இருக்கேன்.
எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான்.
சிம்பு : எந்திரன் பட லொக்கேஷனுக்கு அஸிஸ்டென்ட் டைரெக்டர் போறதுக்குள்ள மீடியா ஆளுங்க போயி உட்கார்ந்த்துக்கிறாங்க. சன் டிவி, எந்திரன் ரிலீஸாகும் போது விளம்பரம் போட ஒரு தனி சானலே ஓப்பன் பண்ணப் போறதா பேசிக்கிறாங்க.
விஷால் : கமல் கூட ஏதோ திரைக்கதை பட்டறை அது இதுன்னு லைம்லைட்லயே இருக்காரு.
அஜீத் : அது என்னப்பா திரைக்கதை?
விஜய் : உனக்கு கதைன்னா என்னன்னே தெரியாது. திரைக்கதை பத்தியெல்லாம் நீ ஏம்பா கவலைப் படுறே?
சிம்பு : இந்த பாருங்க, எங்க தலைக்கு கதை கேட்கத் தெரியாதுதான். ஆனா நடிப்புல நடந்து, திரும்பி எப்படியாவது சமாளிச்சுருவாரு. ஆனா உங்களுக்கு நடிப்பே சுத்தமா வரல்லியே.
விஜய் : நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்.
விஷால் : ஏற்கனவே நெலமை சரியில்ல. நல்ல கதை, நடிப்பு இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதப்பத்தி பேசுங்க.
விஜய் : ஆமா ஆமா. டிரெண்ட் இப்படியே இருந்துச்சுன்னா நாம பேக் அப் ஆயிடுவோம்.
சிம்பு : போட்டிக்கு சசிகுமார் வேற வந்துட்டாரு. ஹேட்ரிக் அடிச்சிட்டாரு. அவரை எப்படியாவது மட்டயாக்கணுமே.
விஷால் : அது விஜயோட அப்பாவாலதான் முடியும்.
சிம்பு : எப்படி?
விஷால் : நரேன், நிதின் சத்யா ஹிட் ஆனவுடனே அவங்களை புக் பண்ணி மொக்கையாக்குனாரே? அதுமாதிரி சசியையும் வச்சு ஒரு படம் எஸ் ஏ சி எடுத்தா, அந்தாளு காலி.
அஜீத் : சசி மதுரைக்காரரு. சும்ரமணியபுரம் ஆட்டோ சீன் ஞாபகம் இருக்கில்ல?
விஜய் : நமக்குள்ள ஏன்? மக்கள் நல்ல படம் பார்க்குறத நிறுத்தணும், அதுக்கு என்ன வழின்னு பாருங்க
சிம்பு : நல்ல படமா வரும்போது ஏவிஎம் ஒரு மசாலா படத்தக் குடுத்து கெடுக்குமே, அது மாதிரி நாமளும் செய்ய வேண்டியதுதான்.
விஷால் : நாம எடுத்த வில்லு,ஏகன்,தோரணை எல்லாம் மசாலா தானே?
சிம்பு : அதெல்லாம் சாதா மசாலா. ஸ்பெசல் மசாலாவுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.
விஜய் : என்ன?
சிம்பு : இந்தியாவிலேயே பெரிய மசாலா ஹிட்டுன்னா அது ஷோலே தான். அதை நாம ரீமேக் பண்ணுவோம்.
விஷால் : சூப்பர். நான் தான் இந்த குரூப்லயே ஹைட்டு. அமிதாப் கேரக்டர் எனக்கு.
சிம்பு : எனக்கு தர்மேந்திரா கேரக்டர். ஹேமமாலினியா நயன்தாரா.
அஜீத் : எனக்கு?
சிம்பு : உங்களுக்கு டான் கேரக்டர்தான் கிளிக்காகுது. அதனால கப்பர் சிங் நீங்கதான்.
விஜய் : அப்போ நான்?
சிம்பு : சஞ்சய் கபூர் கேரக்டர் நீங்க எடுத்துக்குங்க.
விஜய் : அய்யோ, அந்த கேரக்டருக்கு நடிப்பு தேவைப்படுமே. அதுபோக கையில்லாம நடிச்சா என் இமேஜ் என்னாகும்?
சிம்பு : கையில்லாட்டி என்ன? கால் இருக்குல்ல? வழக்கம் போல ரெண்டு குத்துப்பாட்டுக்கு ஆடி தப்பிச்சுக்குங்க.
விஜய் : ஏன் இவ்வளோ பேசுறயே நீ நடிக்க வேண்டியதுதான அந்த கேரக்டர்ல?
சிம்பு : எனக்கு தெரிஞ்சதே விரல் வித்தைதான். கையில்லாத கேரக்டர்ல நான் எப்படி நடிக்கிறது?
அஜீத் : வழக்கம் போல தப்பா கதை கேட்டு நான் மோசம் போக மாட்டேன். ஏன் நான் தர்மேந்திரா கேரக்டர் பண்ணுறனே. விஜய் வேணா கப்பர் சிங் கேரக்டர் பண்ணட்டும்
விஷால் : கப்பக் கிழங்கு சிப்ஸ் மாதிரி ஒல்லியா இருக்காரு. இவர எப்படி?
சிம்பு : சரிங்க சமாதானமாப் போவோம். கப்பர் சிங்கா பிரகாஷ் ராஜ், சஞ்சய் கபூர் கேரக்டருக்கு கிஷோர், ஹேமமாலினியா நயன்தாரா, ஜெயாபாதுரி கேரக்டர்க்கு அசின்.
விஷால் : அப்பக்கூட நயன விடமாட்டேங்கிறானே. பிரபுதேவாவுக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட
வேண்டியதுதான்.
விஜய் : அதெல்லாம் சரி. மெயின் கேரக்டர்ஸ்?
சிம்பு : அங்க தான் நிக்குறான் சிம்பு. ஒரே நேரத்துல ரெண்டு ஷோலே எடுக்குறோம். ஒன்னுல நானும் விஷாலும் மெயின் கேரக்டர்ஸ். இன்னொன்னுல நீங்களூம் அஜீத்தும்.
அஜீத் : ஓகே நான் தர்மேந்திரா, விஜய் அமிதாப். சரி எங்க ஷோலேக்கு எங்களுக்கு ஏத்த ஆளுகள செலெக்ட் பண்ணிக்கிறோம்.
விஜய் : அருமையான ஐடியா. ரெண்டு படம் வருதுன்னா தமிழ்நாடே பரபரப்பாகும். இது மட்டும் ஹிட் ஆச்சு. ரியாலிட்டி படம் எடுக்குறேன்னு எவனும் இனி வர மாட்டான்.
விஷால் : நம்மனால தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ கொடுமைகள அனுபவிச்சுட்டாங்க. அதுல இதுவும் சேரட்டும். ஷூட்டிங்க ஆரம்பிச்சுடுவோம்.
39 comments:
ADHU EPPADI THALA CONTINUEVA NALLA PADHIVUNGALA PODARINGA
ELLORUM ME THE 1ST NU PODARANGALE INNAIKKU NAANDHANA
NALLAA VANTHIRUKKU... BUT MURALI TOUCH MISSING. ( I FEEL SO )
இப்படியும் சேர்ந்து கதையலக்குறாங்களோ....
அருமையாக இருந்தது..... வாழ்த்துக்கள்......
அப்படியே என் வலைப் பக்கமும் வந்து போங்க.....
அண்ணாச்சி உங்க பதிவை தலைப்புல இருக்குற யாராச்சும் படிச்சாங்க..தமிழ் மக்கள் எல்லாம் காலி தான் ;))
அய்யய்யோ...... ஷோலேவா?
விஷால் அமிதாப்பா?
உங்களுக்கு மனசாட்சியே இல்லியா?
:))))))
அண்ணா கலாய்ச்சி பதிவு எழுதுறதுல நீங்க ஒரு பல்கலை கழகம்ணா.....
உங்க கிட்ட நெறைய கத்துக்க வேண்டி இருக்கு......
Kalakkal ................Kalakka !!!
தொடர் கலக்கல்..
அஜீத் : சிம்புக்கும் விஜய்க்கும் அவங்க அப்பா காமெடி பீஸு, உனக்கு அண்ணன்.
IDHU IDHUVARIKKUM YARUME YOSIKKADHADU
kalakkal
ஆத்தி... ரெண்டு ஷோலேவா? பூமி தாங்குமா?
அப்பறம் அது சஞ்சய் கபூர் இல்ல... சஞ்ஜீவ் கபூர்.
அஸ்ரானி யாரு?
//அஸ்ரானி யாரு?//
எஸ்.ஜே.சூர்யா..நல்லாயிருக்கு முரளி.
ஹைய்யோ.. செம்ம காமெடி தலைவா.. கலக்கிட்டீங்க. அதுவும் அந்த டபுள் ஷோலே நினைச்சுப்பார்க்கவே பகீருங்குது :))))
நல்லாயிருக்கு முரளி.(நேற்றைய பதிவிற்குப் பிறகு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு கூடிபோச்சு சோ இந்த பதிவில் இன்னும் கொஞ்சம் காமெடி தூக்கலாக இருந்திருக்கலாமோன்னும் ஒரு தாட்)
நரேன், நிதின் சத்யா ஹிட் ஆனவுடனே அவங்களை புக் பண்ணி மொக்கையாக்குனாரே?//
7ஜி ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணாவ மறந்துவிட்டீர்களே
தல,
விஜயோட ஸ்லாங்ல அண்ணா, வணக்கங்கண்ணா, சொல்லுங்கண்ணா இப்படி சேர்த்துக்கிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்.
அதே மாதிரி தல பேஸ்றதும் கொஞ்சம் இயல்பா வர மாதிரி மாத்திடுங்க...
சிம்பு கொஞ்சம் அழணும். எனக்கு நடிக்க தெரியாதுடாங்கற மாதிரி
கான்செப்ட் சூப்பர் :)
எம்புட்டோ பாத்துட்டோம்.. இதப் பாக்க மாட்டோமா?
சூப்பர்...
நன்றி உங்களோடு நான்.
நன்றி நையாண்டி நைனா
நன்றி சப்ராஸ் அபு பக்கர்
நன்றி கோபிநாத்
நன்றி அறிவிலி
நன்றி சுகுமார் சுவாமிநாதன்
நன்றி பிஸி
நன்றி கேபிள் சங்கர்
நன்றி அத்திரி
நன்றி மகேஷ்
நன்றி தண்டோரா
நன்றி சென்ஷி
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி உடன்பிறப்பு
நன்றி வெட்டிப்பயல்
நன்றி சோம்பேறி
நன்றி கோகுல்
கலக்கல் தலைவரே.
இனி யாரைத்தான் விட்டு வைக்கறதா உத்தேசம்.
அன்பு நண்பர்களுக்கு,
கொஞ்சம் வித்தியாசமாக செய்வோம் என நினைத்தேன்.
ஆனந்தவிகடனில் அஜீத் என்றால் பேஸ்மாட்டேன், விஜய் அண்ணா, தங்கர் என்றால் என்ன நடக்குது இங்க, என எப்போதும் ஒரே மாதிரி எழுதுகிறார்கள். அதனால் தான் அந்த வழக்கமான வாக்கியங்கள் உபயோக்கிக்காமல் கான்செப்ட் அடிப்படையில் முயற்சிக்கலாம் என நினைத்தேன்.
அரைவேக்காடாடாகி விட்டது என நினைக்கிறேன்.
நன்றி தராசு
நைஸ்.
//விஜய் : நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்.
//
Master piece.
//அப்பறம் அது சஞ்சய் கபூர் இல்ல... சஞ்ஜீவ் கபூர்.
//
No, he is சஞ்ஜீவ் குமார்.
//நரேன், நிதின் சத்யா ஹிட் ஆனவுடனே அவங்களை புக் பண்ணி மொக்கையாக்குனாரே? அதுமாதிரி சசியையும் வச்சு ஒரு படம் எஸ் ஏ சி எடுத்தா, அந்தாளு காலி\\
நீங்க வேற, கத்தாதீங்க. அவரு செஞ்சாலும் செய்வாரு.
கலக்குங்க முரளி.அசத்தல்.
இது சூப்பரப்பூ..!
பிரமாதம்... தயவு செஞ்சு யார் சொன்னாலும் அடங்காதீங்க.
சிம்புவோட விரல் வித்தை மேட்டர் சூப்பர்.........
நல்லா கலாய்ச்சிருக்கீங்க. :))
சூப்பர். ஸ்வீட் எடு கொண்டாடு.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நல்ல காமெடி.
நாசமா போச்சு, இந்த பதிவை படிச்சுட்டு யாரோ ஒரு புரொடியுஸர் விஜய்க்கும், அஜித்திற்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டாராம். இந்த பாவம் உங்களை சும்மா உடாது முரளி.
sema nakkal murali..seri comedy..
By Sambath
Excellent Murali ! I really enjoyed this post. Keep your imaginative blog posts alive.
Post a Comment