பிப்ரவரி 18, 2012 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்கி தீப்பொறி ஆறுமுகம் உரையாற்றினார். அந்த பொதுக்கூட்டம் குறித்த ஒரு பார்வை.
கூட்டம் நடந்த இடத்தில் சென்ற மாதம் தான் எம்ஜியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எண்ணி பத்து பேர்தான் பார்வையாளர்கள்.
ஆனால் நேற்று இரவு 7.30 மணிக்கு மேல் கூட்டம் சிறுக சிறுக வர ஆரம்பித்தது. கிடைக்கும் கேப்பில் எல்லாம் தங்கள் டூ வீலர்களை பார்க் செய்துவிட்டு ஆங்காங்கே பொதுமக்கள் நின்று கொண்டிருந்தார்கள். மேடைக்கு எதிரே உள்ள சேர்களில் கட்சியினர் அமர்ந்திருந்தனர். கட்சியினரைவிட பொதுமக்கள் கூட்டம் 10 மடங்கு இருக்கும்.
முதலில் பேசிய ஒருவர் சொன்னது.
விஜயகாந்த் மாதிரியே நாங்களும் கேட்குறோம். இன்னைக்கு நிலமைக்கு கவர்னர் ஆட்சியை கொண்டு வந்திட்டு திருமங்கலம் நகராட்சி தேர்தல நடத்து, நாங்க அசால்டா ஜெயிப்போம் என்று.
மாவட்ட துணை செயலாளர் எம் எல் ராஜ் பேசும் போது,
கப்பலூர் தொழில் பேட்டை மின்வெட்டால் கடுமையாய் பாதிக்கப்பட்டு இருப்பதையும், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருப்பதையும் குறிப்பிட்டு, இன்னும் ஆறு மாதங்களில் விலைவாசி உயர்வு எங்கோ போய்விடும் என்று புளியை கரைத்தார்.
சரியாக ஒன்பது மணி அளவில் தீப்பொறியார் பேச்சைத் தொடங்கினார்.
தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார், குரேஷி, தற்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முதற்கொண்டு தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சட்டங்கள், தீர்ப்புகள் என ஏகப்பட்ட தகவல்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.
பேச்சில் இருந்து
ஜெ, சங்கரன்கோவிலுக்கு 26 மந்திரிகளை அனுப்புகிறார். ஆனால் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு எத்தனை பேரை அனுப்பினார்?
இப்ப சங்கரன் கோவிலுக்கு வந்திருக்கிற 26 பேர் கிட்டயும் கேளுங்க, யாராவது தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா மாவட்டத்தையும் சொல்லிட்டா நான் அரசியல் இருந்தே விலகிக்கிறேன்.
இந்த ஊர் நகரச்செயலாளர் கிட்ட இரவு 9.50க்கு மேல பேசக்கூடாதுன்னு எழுதி வாங்குனாங்களாம். முந்தா நாள் கரூரில் பத்தரை வரைக்கும் பேசினேன்.
கரூருக்கு ஒரு சிஎம், திருமங்கலத்துக்கு ஒரு சி எம்மா? ஒரே சட்டம்தானே?
பை எலெக்ஷன் நடக்குற தொகுதியில கட்டுப்பாடு வை. இல்ல அந்தத் தொகுதி இருக்குற நெல்லை மாவட்டத்துக்கு வை. அத்வும் இல்லையா முந்தி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில இருந்ததால தூத்துக்குடி மாவட்டத்துக்கும் கட்டுப்பாடு வை. திருமங்கலத்துல ஏன் கட்டுப்பாடு?
அண்ணா கிட்ட என்விஎன் வந்து சொல்லுறாரு, 67ல, அண்ணா ”நாம தனி மெஜாரிட்டியில ஜெயிச்சுட்டோம்”னு. உடனே அண்ணா அழுதார். ஆட்சி வந்திருச்சு. கட்சி போயிருச்சுன்னு.
எப்பல்லாம் நாம ஆட்சிக்கு வர்றோமோ அப்ப எல்லாம் கட்சி போயிறுது.
விஜயகாந்தை மிகவும் புகழ்ந்தார். (கூட்டணி வரும் போலிருக்கே?]
பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு பற்றியும் பேசினார்.
நாலு மணி நேரம் இருந்த மின்வெட்டு, அப்புறம் கஷ்டப்பட்டு மூணு மணி நேரமா குறைச்சோம், அப்புறம் இரண்டு மணி நேரம். அதுக்கே பொறுக்காம மாத்தீட்டிங்க. இப்ப அனுபவீங்க. (அவருக்கு முன் பேசிய அனைத்து உள்ளூர் பேச்சாளர்களும் இதையேதான் பேசினார்கள்]
மின்வெட்டு பற்றிய அவரின் பஞ்ச்
ராத்திரியில ஒரு மணி நேரம் அணைக்கிறான், ஒரு மணி நேரம் போடுறான் (இதையே பலமுறை சொல்லிக்காட்டி]
7 கோடியா இருக்குற தமிழ்நாட்டு ஜனத்தொகை 12 கோடியா ஆயிடும் போலிருக்கே.
19 வயதில் மேடை ஏறி தற்போது 72 வயது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசியும் தீப்பொறிக்கு இன்னும் கரிஸ்மா குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. ஏகப்பட்ட விசயங்களை அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறார். எத்தனை பேரூராட்சி, இப்போது மாநகராட்சியில் இணைந்தது, அவை என்ன என்றெல்லாம் லிஸ்ட் போடுகிறார்.
பேப்பரே படிக்காத ஆட்களுக்கு மட்டுமல்ல, என்னேரமும் இணைய செய்திகளை மேய்ந்து கொண்டிருப்பவர்களுக்குக் கூட அவரிடம் தகவல்கள் இருக்கிறது.
கூட்டத்துக்கு வந்தவர்களின் குறைந்த வயது 35. பெரும்பாலும் 45+ தான் கண்ணில் பட்டார்கள். திமுக விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. 25 வயது ஆட்கள் யாருகே இல்லை. அழகிரி பிறந்த நாளான ஜனவரி 30க்கு அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர்களில் நகரபொறுப்பில் உள்ள பலரது மகன்களின் படம் பட்டத்தோடு இருந்தது. ஆனால் அவர்கள் யாரையும் கூட்டத்தில் காணவில்லை. தீப்பொறியின் 90 நிமிட பேச்சில் அவர்கள் பல தகவல்களை உள் வாங்கியிருக்கலாம்.
நான் சிறுவனாக இருந்தபோது, பார்த்த கூட்டங்களில் எல்லாம் இளவயதினர் தான் அதிகம் இருப்பார்கள். அவர்கள் தான் இன்னும் வருகிறார்களோ என்ற எண்ணமே ஏற்பட்டது.
ஆசைத்தம்பி, மதியழகன், என்விஎன் பற்றி எல்லாம் சொன்னார். ராஜாஜி, மவுண்ட் பேட்டன், மோதிலால், ஜவஹர்லால் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இவர்களின் பெயர்கள் எல்லாம் பேனரில் சிரித்துக் கொண்டிருக்கும் பி ஏ, பி எஸ்ஸி, பி ஈ க்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.
பொதுஜனத்தின் ஆதரவு அமோகமாக இருந்தது. மின் வெட்டு அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. (மின் வெட்டினால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்கலாம்].
இன்றைய நிலையில் நியாயமாக ஒரு இடைத்தேர்தல் நடந்தால் அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கு கசப்பான முடிவையே தரும் என்பது மட்டும் நிதர்சனம்.
10 comments:
மேடைப் பேச்சுக் கலையில் மன்னன் - தீப்பொறியார்
19 வயதில் மேடை ஏறி தற்போது 72 வயது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசியும் தீப்பொறிக்கு இன்னும் கரிஸ்மா குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. ஏகப்பட்ட விசயங்களை அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறார்.
என்னேரமும் இணைய செய்திகளை மேய்ந்து கொண்டிருப்பவர்களுக்குக் கூட அவரிடம் தகவல்கள் இருக்கிறது.-200% correct
வருகைக்கு நன்றி ராம்ஜி
மின் வெட்டு மக்களை ரோட்டுக்கு வந்து போரடவைக்கும்
வருகைக்கு நன்றி கோவிந்தராஜ்
முரளி,
50 ஆண்டுகளா அப்டேட்டட் ஆக இருக்கார் அவர்கிட்டே இளைஞர்கள் கத்துக்க விஷயம் எல்லாம் இருக்கு ஆனால் அவர் கழக அரசியலை கத்துக்கலையே?
கழகத்துல நல்லாப்பேசுற ஆளுங்களுக்கு ஏன் எம்.எல்.ஏ சீட் கொடுத்து சட்டசபைல பேச வைக்க மாட்டேன்கிறார் அய்யா? மறைந்த வெற்றிக்கொண்டான், தீப்பொறி எல்லாம் வீதிக்கு மட்டும் தானா?
அப்போ பதவி எல்லாம் பணத்துக்கு தான் ஆகிடுச்சு தானே இதில என்ன கொள்கை வெங்காயம் எல்லாம்.
மின்வெட்டு பள்ளத்தையே திமுக தானே தோண்டிச்சு, இப்போ அதிமுக உள்ள விழுந்து போச்சு, இதில என்ன நல்லா அனுபவிக்கட்டும்னு தீப்பொறி சொல்றது. கடந்த 5 ஆண்டுகளில் ஏதாவது மிந்திட்டம் செயல்ப்பாட்டுக்கு கொண்டு வந்தார்களா? கடைசி ஆண்டுல அடிக்கல்ல மட்டும் நாட்டிட்டு போயிட்டாங்க. ரெண்டு கழகமும் ஒழிந்தால் தான் தமிழ் நாடே உருப்படும்.
//நியாயமாக ஒரு இடைத்தேர்தல் நடந்தால் அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கு கசப்பான முடிவையே தரும் //
அப்டியா ...!?
so optimistic!!
நல்ல பகிர்வுக்கு நன்றிகள் முக. உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு. இருபது வருடத்துக்கு முன்பு இளைஞராயிருந்து இந்த மாதிரி கூட்டத்திற்கு போனவர்கள் தான் இப்பொழுதும் இதேப்போன்ற கட்சி கூட்டங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் அன்றைக்கு அப்படிச் சென்ற இளைஞர்களால் தான் 13 வருட இடைவெளிக்குப் பிறகும் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இடையில் ஏற்பட்ட கவனக்குறைவை இப்பொழுது தளபதி ஸ்டாலின் அவர்கள் முற்றிலும் உள்வாங்கி உணர்ந்து முப்பது வயதிற்குட்பட்ட இளைஞர்களை நேர்காணல் நடத்தி, எந்தவித சிபாரிசுகளுக்கும் இடம் தராமல், மாவட்டவாரியாக நாள் தவறாமல் சென்று பொருப்பாளர்களை நியமித்து வருகின்றார்.
அடுத்ததாக அவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளும் நடக்கவிருக்கிறது. இனி பழைய எழுச்சியை திமுகவில் நிச்சயம் காணலாம்.!!
மிகவும் அருமையான பகிர்வு முக. என் நன்றிகள்.
வவ்வால் said...
மின்வெட்டு பள்ளத்தையே அதிமுக 2003-04)தானே தோண்டிச்சு, 2011அப்போ திமுக உள்ள விழுந்து போச்சு, என்னேரமும் இணைய செய்திகளை மேய்ந்து கொண்டிருப்பவர்கள் நல்லா அனுபவிக்கட்டும். கடந்த 8 months களில் ஏதாவது மிந்திட்டம் செயல்ப்பாட்டுக்கு கொண்டு வந்தார்களா? Atleast அடிக்கல்ல நாட்டிட்டுகளா????
Ippadi santhadi Sakkile DMK-vaiyum thootrum ungalai pondra,
BLOG puligal, MAATRAM venuminnu SUPER MAATRAM kondu vantha ungalukku peasave thaguthiyillai.
கோமதி ஜாப்ஸ்,
விளம்பரம் போட்டே இணையத்தில் காலம் தள்ளுபவர்களை விடவா மத்தவங்க அவஸ்தைப்பட போறாங்க :-)) உங்களைப்போன்ற அல்லக்கைகளுக்கு மட்டும் பேச தகுதி இருக்கா :-))
//The gross generation was 52,345 million units (MU) and a total of 41,200 MU
was consumed in Tamil Nadu during the year 2004-2005. As per the TNEB’s
data, the gross generation is 55489 MU and the total consumption is 43710 MU
for the year 2005-06//
மின்கட்டுப்பாடு வாரிய அறிக்கை
2006 இல் தேவையான மின்சாரம் இருக்கிறது என்றும் ஆனால் 2007 இல் மின் தட்டுப்பாடு வரும் என்பதையும் சொல்லி இருக்கிறது.
2005,2006 இல் எல்லாம் மொத்த மின் உற்பத்தியை விட மின் நுகர்வு குறைவாக இருப்பதைக்காணலாம், எனவே மின் வெட்டு பள்ளம் எப்போது தோண்டப்பட்டது என்பதை விளக்க வேண்டிய அவசியமே இல்லை. கட்சி அபிமானம் என்றப்பெயரில் காவடி தூக்குபவர்களுக்கு இதெல்லாம் புரிவதில்லை. மின் தட்டுப்பாடே இல்லாத நிலையில் ஆட்சிக்கு வந்தவர் , தொடர்ந்து சரியாக நிர்வாகம் செய்யாமல் விட்டதே இன்றைய இருளுக்கு மூல காரணம். தொடர்ந்து உற்பத்தியில் கவனம் செலுத்தி இருந்தால் இப்படி ஆகி இருக்காது.
சந்தடி சாக்கில் எல்லாம் திட்ட வேண்டியதில்லை சரியாக ஆட்சி செய்யாமல்ல் ஊழல் செய்தால் எப்போதும் திட்டலாம். இரண்டு கழங்களும் மாறி மாறி தவறு செய்கின்றன, 5 ஆண்டுகளில் மறக்கப்படும் என்பதால் கவலைப்படுவதில்லை. இப்போதைய மின்வெட்டுக்கு காரணமே கடந்த 5 ஆண்டுகால ஆட்சியே. இந்த ஆட்சியிலும் எதுவும் செய்யவில்லை எனில் இன்னும் அதிகம் ஆகும் மின்வெட்டு.
Post a Comment