July 01, 2009

நீங்க எங்கேயோ போயீட்டீங்க சார் - ஜனகராஜ் - பகுதி 2

80களில் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காமெடி நடிகர்களை அவர்கள் நடித்த படங்களின்
வழியாக இப்படியும் பிரிக்கலாம்.

கவுண்டமணி

ஆர் சுந்தர்ராஜன், ரங்கராஜன், பாலு ஆனந்த்,ராமராஜன் போன்று பெரிய நடிகர்களை நம்பாமல் ஓரளவு கதை
மற்றும் இளையராஜாவின் இசையை நம்பி படம் எடுத்தவர்கள். இவர்களது படங்களின் மூன்றாவது
தூணாக கவுண்டமணியின் நகைச்சுவை டிராக் இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பின்னரே
இவர் கதாநாயகனின் நண்பன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.


எஸ் எஸ் சந்திரன்


திராவிட முன்னேற்ற கழகத்தின் அறிவிக்கப்படாத திரையுல கொ ப செ வாக அக்காலத்தில் இருந்தவர்.
அதனால் திமுக சார்புள்ள இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் தவறாமல் இடம்பிடித்து வந்தார்.
ராம நாராயணன் மற்றும் அவர் இணை,துணை இயக்குநர்களின் படங்களிலும், டி ராஜேந்தர்,
கலைப்புலி தாணு,விஜயகாந்த் ஆகியோரின் படங்களிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.

ஜனகராஜ்

ஜினி,கமல் ஆகிய முண்ணனி நடிகர்கள், முண்ணனி இயக்குநர்களின் தேர்வாக இருந்தவர் ஜனகராஜ்தான்.
கவுண்டமணி 89க்குப் பின் பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பிடித்ததும் ஜனகராஜின் இடம் ஆட்டம்
கண்டது. ஆனாலும் ரஜினிகாந்த் அவரை விட்டுக்கொடுக்கவில்லை. அதனால்தான் 80களிலும் பின் 90
களின் மத்தி வரையிலும் வந்த பல பிளாக் பஸ்டர்களில் ஜனகராஜ் இடம்பிடித்திருந்தார்.

இந்தப் பகுதியில் ஜனகராஜ் இடம்பெற்றிருந்த சில பிளாக் பஸ்டர்களைப் பார்ப்போம்.

நாயகன்

ஒரு காட்பாதர் உருவாவதில் இருந்து அவரின் இறப்புவரை உடனிருக்கும் பாத்திரம். கமலுக்கு கெட்டப்
மாற்றுவது போலவே ஜனகராஜுக்கும் கெட்டப், பாடி லாங்குவேஜ் எல்லாம் மாற்றி மெனக்கெட்டுருப்பார்கள்.
ஒரு பிரச்சினையில் கமலின் மகள் கன்னத்தில் அறைந்ததும் நீயா அடித்தாய் என்பது போல ஒரு
கேள்வியுடன் தன் இயலாமையையும், குற்ற உணர்ச்சியையும் சேர்த்து ஒரே ரியாக்‌ஷனாக காட்டியிருப்பார்.

அபூர்வ சகோதரர்கள்

இடைவேளைக்குப் பின்னால்தான் படத்தில் எண்ட்ரி. இப்போது படத்தைப் பார்த்தால் இடைவேளைக்குப்
பின்னால் உள்ள சுவராசியமே ஜனகராஜ்தான். இவரும் ஆர் எஸ் சிவாஜியும் சேர்ந்து அடிக்கும் லூட்டி
மறக்க முடியாதது. ஆர் எஸ் சிவாஜி சொல்லும் நீங்க எங்கியோ போயிட்டீங்க சார் இருபதாண்டு
கழித்தும் எங்கேயாவது யாராலாவது உச்சரிக்கப் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. வெற்றி விழா, விக்ரம்
ஆகிய படங்களிலும் பெயர்சொல்லும் படியான வேடமே. குணாவில் அபிராமியைப் பற்றி ஏற்றி
விடுவதே ஜனகராஜ்தான்.

அண்ணாமலை

ரஜினியின் ஒன்றுவிட்ட அண்ணன் பாத்திரம். அரைகுறை ஆங்கில டீகடை ஓணர். ஒரு காட்சியில்
வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் “நவ் ஐயாம் கோயிங் டு எக்ஸ்பிளைன் வாட் ஆர் த ஐட்டம்ஸ் வீ ஆர்
ஹேவின் இன் அவர் .....” எனத் தொடங்கி ஒரு சொற்பொழிவே ஆற்றி முடிக்க, வெளிநாட்டுக் காரரோ
ஒரு மசால் வடை என தூய தமிழில் ஆர்டர் கொடுக்க, ஜனகராஜ் கொடுக்கும் ரியாக்‌ஷன் இருக்கிறதே?

பாட்ஷா

தாதா ரஜினியின் முக்கிய கை வேடம்.படத்தி ஆரம்ப காட்சிகளில் மட்டும் நகைச்சுவையை காட்டி விட்டு
பின்னர் சீரியஸ் ஆக மாறும் பாத்திரம். இதுதவிர வீரா,அருணாசலத்திலும் ஜனகராஜின் பங்கு உண்டு.

ராஜாதிராஜா

ரஜினியின் தோழன். பணக்கார ரஜினிக்கு மாற்றாக நடிக்கப் போனாலும் தன் சென்னைத் தமிழை மறக்க
முடியாமல் சிக்கலில் மாட்டும் வேடம். சைனா டீ மசால் வடையை மறக்க முடியுமா?. இதே
ஆண்டு வெளிவந்த சிவாவிலும் ஜனகராஜ்தான் காமெடி. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தபின்
அவரது படங்களில் மற்றவர்களுக்கு தனிப்பாடல் வைப்பது இல்லை.

நல்லவனுக்கு நல்லவனில் கார்த்திக், இணை வேடத்தில் நடித்ததால் சில படங்களில் பிரபுவுக்கு,
தயாரிப்பாளர் மட்டும் இணை நடிகர் என்பதால் ரவிசந்திரன் (கன்னடம்) ஆகியோருக்கு மட்டும் ரஜினி
படங்களில் தனிப்பாடல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிவாவில் ஜனகராஜுக்கு டிஸ்கோ சாந்தியுடன்
ஒரு டூயட்டே கொடுத்தார்கள் என்றால் அண்றைய நிலையில் ஜனகராஜின் மார்க்கெட்டை நாம்
கணக்கிட்டுக் கொள்ளலாம்.

வருஷம் 16

ஒரு பெரிய குடும்பம். ஈகோ பிரச்சினைகளால் சிதறுண்டு போகிறது. அதைக் கட்டி காக்கத் துடிக்கும்
நாயகனுக்கு உதவியாய் வேலைக்காரர் ஜனகராஜ். வி கே ராமசாமியுடன் சேர்ந்து அடிக்கும் கூத்தாகட்டும், உணர்ச்சிகர
காட்சிகளில் வெளிப்படுத்தும் பாவனைகளாகட்டும் கிளாஸ்.

சிந்து பைரவி

கர்நாடக இசை வித்வானுக்கு பக்க வாத்தியம். ஆனால் மெயின் வேலை பொய் சொல்வது. ஒரு கட்டத்தில்
பொய் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்கிறார். அதனால் உண்மையையும் மறைக்கக்கூடாது. விதி
துரத்துகிறது. சொல்லும் உண்மை திருப்பு முனையாகிறது. பக்க வாத்தியக்காரரின் பாவங்கள் பாடகரையே
தூக்கிச் சாப்பிட்டுவிட்டன இந்தப் படத்தில்.

படிக்காதவன்

துப்புரவுத் தொழிலாளி கபாலி கள்ளக்கடத்தல் செய்து கே பாலி யாக மாறுகிறார். நண்பனான கார் ட்ரைவர்
ரஜினிக்கு டிப்பு கொடுக்கிறார். பின்னர் பேக் டு பெவிலியன். இப்படத்தில் ஜனகராஜ் பேசும் என்
தங்கச்சிய நாய் கடிச்சிடுப்பா வசனம் மிமிக்ரி ஆட்களின் பேவரைட். பணக்காரன் திரைப்படத்திலும்
ரஜினிக்கு நண்பன் வேடம்.

முதல் மரியாதை

இங்கும் கயிறு திரிக்கும் வேடம். மனைவியை யாரும் சீண்டாமல் பாதுகாக்கும் வெள்ளந்தித்தனம் வேறு.
சொல்லியா கொடுக்க வேண்டும் ஜனகராஜுக்கு?. அடுத்து வந்த பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகளில்
நாயகியின் அப்பா வேடம். எங்கே சம்பாதிக்கும் தன் மகளை ரவுடி திருமணம் செய்து கொள்வானோ என
அஞ்சுவதும் அதற்க்கு இறைஞ்சும் காட்சியிலும் சொல்லும் படி நடித்திருப்பார்.

ஆண்பாவம்

அண்ணனைக் கண்டு பொறாமைப்பட்டு தொழில் தொடங்கும் தம்பி. செய்யும் தொழிலெல்லாம்
ஊற்றிக் கொள்ள அல்லல்படுகிறார். பந்த் அன்று கடை திறப்பதும் அதைத் தொடரும் நகைச்சுவைக்
காட்சிகளும் பாதாம் அல்வா.


நான் புடிச்ச மாப்பிள்ளை


முதல் படம் ஓடாத வி.சேகருக்கு கை கொடுத்த படம். பின்னர் இம்மாதிரி படங்களே அவர் அடையாளம்
ஆகியது. தரகரின் நேர்மைக்காகவே அவர் மகளை மணமுடிக்கிறார் பண்னையார். முறைப் பெண்
வைத்திருக்கும் அக்கா வீட்டுக்காரர் முறைக்கிறார். தரகரின் மகள் இறந்துவிட குழப்பம். ஆனால் இவரின்
அருமையை உணர்ந்த முறைப்பெண் இவரையே தந்தையாக தத்தெடுக்கிறார். இந்தப் படத்தின்
கதாநாயகன் தரகர் வேடத்தில் நடித்த ஜனகராஜே.

வாய்க்கொழுப்பு

இளைய சகலைகள் இருவர் மூதத சகலையால் சொல்லொண்ணா துன்பம் அடைகிறார்கள். அவனை கொலை
செய்துவிட வேண்டும் என வாய்க்கொழுப்பாக பேச, அவர் உணமையிலேயே கொல்லப் படுகிறார்.
இளைய சகலைகளான ஜனகராஜும், பாண்டியராஜனும் பதறி ஓடுகிறார்கள் வாழக்கையின் எல்லைக்கே.
நான் ஸ்டாப் காமெடி படம்.

மற்றவை நிறைவுப் பகுதியில்

40 comments:

நையாண்டி நைனா said...

mee firste...

நையாண்டி நைனா said...

mee seconde...

நையாண்டி நைனா said...

mee thirde...

முரளிகண்ணன் said...

நைனா

என்ன இது?

கார்க்கிபவா said...

சார் நீங்க எங்கேயோ போயிட்டிங்க..... :))

Anonymous said...

பகிர்தலுக்கு நன்றி

Anonymous said...

வோட்டு போட்டாச்சு சார்...

நையாண்டி நைனா said...

/*நைனா

என்ன இது?*/
உங்க பதிவை பஸ்ட்டு வந்து படிக்கணும் என்று நானும் இவ்ளோ நாளும் முயற்சி செஞ்சேன்... இன்னிக்கு அடைந்து விட்டேனா..!!! அதனால் வந்த ஆனந்த கும்மி.

முரளிகண்ணன் said...

நன்றி கார்க்கி

நன்றி இங்கிலிஸ்காரன்

ஓகே நைனா.

நாடோடி இலக்கியன் said...

வி.கே.ஆரும், ஜனகராஜும் இணைந்து நடித்த படங்களைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம் முரளி.அசத்தலான காம்பினேஷன்.
அடுத்தப் பதிவிற்கு வெயிட்டிங்.
கலக்குங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்க எங்கேயோ போயீட்டீங்க

நர்சிம் said...

அதுவும் நாயகன் கடைசி சீனில் ஒரு போலிஸ் ஜனகராஜை தொட்டவுடன் கமல் கோபப் படுவது போல் காட்டும் சீனின் மூலம் ஜனகராஜின் கேரக்ட்டர் வெயிட்டை உணரலாம்

முரளிகண்ணன் said...

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி டிவிஆர் சார்

நன்றி நர்சிம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாட்ஷாவில் ரஜினி அளவிற்கு இவரும் பெரிய தாதா தான் தல..,

சில காட்சிகளில் விசாரணை கூட செய்வார்..,

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்குங்க.

துபாய் ராஜா said...

'அண்ணாமலை'யின் நாசமா நீ போனியா தெரு (நேசமணி பொன்னையா தெரு) காமெடியும் மறக்கமுடியாதது.

சங்கிமங்கி said...

முரளி அண்ணா,

உங்கள் பதிவு சூப்பர்

ஜனகராஜ் ஒரு மகத்தான கலைஞன்
அவரை தமிழ் சினிமா மறந்தது ஏனோ???
அவர் இப்போது என்ன செய்கிறார்
தெரிந்தால் அதையும் பதிவாக போடுங்களேன்

ஆயில்யன் said...

//ஆண்பாவம்

அண்ணனைக் கண்டு பொறாமைப்பட்டு தொழில் தொடங்கும் தம்பி. செய்யும் தொழிலெல்லாம்
ஊற்றிக் கொள்ள அல்லல்படுகிறார். பந்த் அன்று கடை திறப்பதும் அதைத் தொடரும் நகைச்சுவைக்
காட்சிகளும் பாதாம் அல்வா.//

லைட்டு போட்டுத்தான் படம் காட்டுவேனாகட்டும்


யார் முகத்துல முழிப்பீங்க
என் புள்ள முகத்துலதான் சீன் ஆகட்டும்

ஆஞ்சநேயர் கோவிலை சுத்தாத சுத்தாதன்னு படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டாளா அவ


கலக்கல்ஸ் :))))

ஆயில்யன் said...

வாயிலை வெடி வைச்சுக்கிட்டு சிகரெட் மாதிரி நினைச்சு பத்தவைக்கிறது

பொடலங்காய்ன்னு நினைச்சு பாம்பை தூக்கிட்டு வலம் வர்றது அப்புறம்

தற்கொலை பண்ணிக்க பெரிய கல்லு எடுத்து இன்னொருத்தனுக்கு மாட்டி விடறதுன்னு அட்டகாசம் செஞ்ச இதயத்தாமரை படம் :)))))))

Krish said...

Nice. Janagaraj is the unspoken comedian. People talk about C Babu, Nagesh and Goundamani &senthil. Vadivelu, Vivek....People forgot Ganagaraj...

Any one knows what he is going now?

வெட்டிப்பயல் said...

Thala,
How come you missed Vedham Puthithu?

சிநேகிதன் அக்பர் said...

// த‌ல‌ நீங்க எங்கேயோ போயிட்டிங்க....//

அதுதான் நாலு நாளா ஆளைக்காணோமா.

சென்ஷி said...

கலக்கல்ஸ் :)

ப்ரியமுடன் வசந்த் said...

ஞாபகமூட்டியமைக்கு நன்றி

எம்.பி.உதயசூரியன் said...

தெய்வமே..’நீங்க எங்கியோ போயிட்டீங்க!’ யதார்த்தமான ஒரு கலைஞனை கௌரவப்படுத்திய நண்பா..கங்க்ராட்ஸ்!

அருண்மொழிவர்மன் said...

எனக்கு எப்போதும் கவுண்டமணியைவிட இவரே அதிகம் பிடித்திருந்தார். “ஈரத் தாமரைப்பூவே...” என்ற அற்புதமான பாடலுக்கு கூட ஏதோ திரைப்படத்தில் (பாய்க் கப்பல்??) இவரே தோன்றி நடித்தார்.


அது போல தயா படத்திலும் நல்ல ஒரு வேடத்தில் கலக்கினார்...


நல்ல பதிவு முரளி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரியாத வரம் வேண்டும்: சுக்ரியா காமெடி மறக்கமுடியுமா?
ஆயுதம் படத்தில் வில்லனாக்கி அவரை waste பண்ணிட்டாங்க.

chennaivaasi said...

hmmm...great piece of analysis and tribute to Janakaraj. Originally in aboorva Sagodharargal, Janakaraj acted as a friend of Kamal & Gandhimathi was the Mom. There is a song in the slum with both Kamal & Janakaraj dancing. Later it was changed for better :-))...

In Padikkathavan, when janakaraj says that his sister was bit by a Dog, Rajini will be laughing actually (totally unrelated to acting)

Suresh said...

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பதிவு. மறந்து போயிருந்த நிறைய சினிமா காட்சிகளை நினைவுபடுத்திவிட்டீர்கள்.. நகைச்சுவை என்ற கருத்து தமிழ் சினிமாவில் வெவ்வேறு முறையாக சொல்லப்பட்டதின் கால சாட்சி இவர்கள் எல்லாம்.!

ராமகுமரன் said...

விக்ரம் படத்தில் பெண்மை கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.

முரளிகண்ணன் said...

நன்றி சுரேஷ்

நன்றி வித்யா

நன்றி துபாய் ராஜா

நன்றி சங்கி மங்கி, அடுத்த பதிவில்
அந்த விபரங்கள்.

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ஆயில்யன்

முரளிகண்ணன் said...

நன்றி கிருஷ்

வெட்டிப்பயல், அதை அடுத்த பகுதியில் எழுதலாம் என நினைத்தேன். கோபுர வாசலிலே,ஒரு கைதியின் டைரி போன்ற வற்றுடன் இணைத்து.

வாங்க அக்பர்

நன்றி சென்ஷி

நன்றி பிரியமுடன் வசந்த்

முரளிகண்ணன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி எம் பி உதயசூரியன்.


நன்றி அருண்மொழிவர்மன். ஒரு தொட்டில் சபதம் படத்தில் கூட பூஞ்சிட்டு குருவிகளா என்னும் பாடலில் கலக்கியிருப்பார்.

நன்றி ரமேஷ்

நன்றி சென்னைவாசி

நன்றி சுரேஷ்

நன்றி முத்துக்குமார் கோபாலகிருஷ்ணன்

நன்றி ராம்குமர்

IKrishs said...

Janakarajoda comedy polave ungha padhivum aarumai..
Guna padathla "abirami" pathi yethi vidurathu Mana nala kaapagathula irukkuravara varra "Anandhu" nu ninaikiren..
Apparam andha Nesha Mani ponnaiya Comedy palaya jaishankar padam(Nawab Naarkaali nu ninaikiren) thila irundhu "copy" adichu irundhalum ,janakaraj avaroda style alagave panni iruppar..UM.Krish

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜனகராஜ் அந்தரங்கத்தை புட்டுபுட்டு வைத்த

முரளி

நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்

கோபிநாத் said...

முரளிண்ணே நீங்க எங்கேயோ போயீட்டிங்க :)))

கலக்கிட்டிங்க...;)

முதல் மரியாதையில் பஞ்சாயத்துல சிவாஜி ஒரு கோவமாக பார்வை பார்த்தவுடன் ம்க்கு...ஒரு சவுண்டு விட்டு முகத்தை மற்றுவாரு பாருங்க..மனுஷன் கலக்கியிருப்பாரு ;)

கலக்கல் தொகுப்புண்ணே ;)

SELVA THE GHILLI said...

"In Padikkathavan, when janakaraj says that his sister was bit by a Dog, Rajini will be laughing actually (totally unrelated to acting)"

it is totally unrelated to topic.

iniyavan said...

கலக்கல் பதிவு நண்பரே

கோவி.கண்ணன் said...

திரைக் களஞ்சியமே, எங்கிருந்து இம்புட்டு தகவல்கள் ?

நீங்க எங்கேயோ போய்டிங்க