August 12, 2009

தேங்காய் சீனிவாசன் - சில நினைவுகள்

நாற்பது வயதானாலே நாய்க்குணம் ஆண்களுக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள்.
இந்த நாய்க்குணம் என்பது வீட்டைக் காவல்காக்கும் என்ற அர்த்தத்தில்.
படியவாரிய தலைமுடி,கைவைத்த பனியன்,நறுக்கிய மீசை,கலரில்லாத உடை
என தங்கள் கேரக்டரையே பெரும்பாலான ஆண்கள் இந்த வயதில் மாற்றிக்கொள்வார்கள்.

இந்த வளர்சிதை மாற்றம் சிலருக்கு, தன் பெண்ணை ஒருவன் சைட்டடிக்கத்
தொடங்கிய பின்னரோ அல்லது தன் மகன் செகண்ட் ஷோ தனியாகப் போக
ஆரம்பித்தவுடனோவும் வரப்பெறும்.

ஆனால் சிலர் மட்டும் இந்த மாற்றம் வாய்க்கப்பெறாமல் காலம் முழுவதும் மைனராகவே
திரிவார்கள். மகள் கல்யாணத்திற்க்கு முதல் நாள் கூட மேட்னி ஷோ சினிமா போவார்கள்.
பளபள ஷேவ், மடிப்பு கலையாத ஆடை, பெண்களைக் கண்டால் அலைபாயும் கண்கள் என
தங்கள் சுயத்தை விடாமல் இருப்பார்கள். தெருவிற்கு ஒன்றிரண்டு பேர் இப்படி நிச்சயம் இருப்பார்கள்.

இம்மாதிரி ஆட்களை வெள்ளித்திரையில் அட்டகாசமாக பிரதிபலித்த நடிகர், 70களிலும் 80களிலும் தமிழ் சினிமாவைக் கலக்கிய மறைந்த தேங்காய் சீனிவாசன்.

சித்தூர் சீனிவாசன் என்ற இயற்பெயருடன் சினிமாவுக்கு வந்தவர்,
தான் ஏற்று நடித்த தேங்காய் என்னும் கேரக்டரின் மூலம் தேங்காய் சீனிவாசனானார்.நடிக்க வரும் பெரும்பாலானோர் நாயகன் ஆகும் கனவுடனேயே திரையுலகுக்கு வருவார்கள். ஆனால் காமெடியன் ஆகும் எண்ணத்துடனே சீனிவாசன் சென்னை வந்தார் என நாம் கொள்ளலாம். ஏனென்றால் அவர் சென்னைக்கு வந்து முதலில் சந்தித்ததே காலத்தை வென்ற காமெடியன் சந்திரபாபுவைத்தான். ஒரு தெய்வத்தைப் பார்க்கும் மனநிலையுடன் சந்திரபாபுவை சீனிவாசன் பார்த்தாரென ஒரு கட்டுரையில் அருள்
எழிலன் குறிப்பிட்டுள்ளார்.

காமெடியன், கேரக்டர் ஆர்டிஸ்ட், வில்லன், கதாநாயகன், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை திரையில் அவர் எடுத்து இருந்தாலும் அவரின் பிம்பமாக நம்மிடம் எஞ்சியிருப்பது காமெடியன் வேடமும், நாற்பதுகளின் மைனர் வேடமும்தான்.

இந்த மைனர் வேடத்தை இவருக்கு முன்னாலும் பின்னாலும் காட்சிப்படுத்தியவர்கள் மிகக் குறைவு. டிக் டிக் டிக் படத்தில் போட்டோ ஸ்டுடியோ ஓனராக வந்து, தன் தொழிலாளி கமலுக்கு கால் கேர்ள்கள் அட்ரஸைக் கொடுத்து டென்சனை குறைத்துக் கொள்ளச் சொல்வார். அப்போது அந்த சுகத்தை அவர் வர்ணிப்பது இப்போதைய டெலிபோன் செக்ஸ் அழைப்புகளுக்கு முன்னோடி எனச் சொல்லலாம்.

தென்றலே என்னைத் தொடு வில் மோகனின் மேனேஜராக, சனிக்கிழமையானால் கால்கேர்ள்களிடம் கட்டாயம் செல்ல வேண்டுமென துடிக்கும் நடுத்தர வயது வேடம். தேங்காய்க்குத்தான் அது அல்வாவாயிற்றே. மாட்டிக்கொள்ளாமல் அதைச் செய்வதும், தன் மனைவி காந்திமதியை ஏமாற்றுவதுமாய் மனுஷன் பின்னியிருப்பார்.

தங்கமகனில் ரஜினிக்கு தந்தையாக ஆனால், வில்லன் வேடம். வில்லனாக இருந்தாலும் சாண்ட்விச் மசாஜை பற்றி ஒரு வசனமும் உண்டு. வீரப்பா,நம்பியார் காலம் முதல் இப்போதைய கிஷோர், சம்பத் காலம் வரை எல்லோருக்கும் வில்லனைப் பார்த்தாலே பயம் வரும்படியாகத்தான் காட்சிகள் அமைப்பார்கள். ஆனால் இதில் தேங்காய் மட்டும் விதிவிலக்கு. வில்லனாக இருந்தாலும் அவருக்கு வசனங்களிலும்
நடவடிக்கைகளிலும் ஒரு கிளுகிளுப்பு சாயத்தைப் பூசிவிடுவார்கள்.

இதனால் காக்கிச்சட்டை படத்தில் கூட சைடு வில்லனாக இருந்தாலும், கஞ்சா கடத்துதலும், விபச்சாரமுமே இவரது தொழிலாக சித்தரித்திருப்பார்கள்.

இவர் நாயகனாக நடித்த நான் குடித்துக் கொண்டேயிருப்பேனில் (தலைப்பிலேயே) கூட குடியால் கெடும் வேடமே.

ஆனால் தேங்காயின் லேண்ட் மார்க் படங்களாக கருதப்படும் காசேதான் கடவுளடா படத்திலும், தில்லு முல்லு படத்திலும் ஒன்றுக்கொன்று முரணான கேரக்டர்கள், முக்கியமாக அவரது டிரேட் மார்க் இல்லாத கேரக்டர்கள். காசேதான் கடவுளடா படத்தில் சென்னை பாஷை பேசும் டீக்கடை உரிமையாளர் நண்பர்களுக்காக போலி சாமியார் வேடத்தில் நடித்து ஏமாற்றும் கேரக்டர். தில்லுமுல்லில் கம்பெனி உரிமையாளர் தன் பணியாளரிடம் ஏமாறும் கேரக்டர்.

வானவில்லின் இரண்டு எதிரெதிர் முனைகளின் நிறங்களைப் போன்ற வேறுபாடான கேரக்டர்கள். இரண்டிலும் மிளிர்ந்தவர் தேங்காய்.


தேங்காய் சீனிவாசனின் இன்னொரு தனித்தன்மை அவரது வேறுபாடான வசன உச்சரிப்புகள். மாடுலேஷன் எல்லோரும் செய்வதுதான் என்றாலும் பச்சக், கிச்சக்,ஜலாபத்ரி என ஏராளமான தமிழில் நாம் கேட்டறியாத சொற்களைத் திரையில் ஒலிக்கச் செய்தவர் தேங்காய்தான். இவரது மறைவும், சின்னி ஜெயந்தின் வருகையும் சமகாலத்தில் நிகழ்ந்தது. இவர் விட்டுச் சென்ற ஜில்பான்ஸி, கில்போத்ரி பாணி சொற்களை சின்னி தத்தெடுத்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் சிவாஜியுடன் மிக நெருக்கமாக இருந்தாலும், பின்னர் எம்ஜியாருடன் நெருக்கமானார். ஆனால் அதன் பின் சிவாஜியை நாயகனாக வைத்து கண்ணன் வந்தான் படத்தை தயாரித்தார். கமல்ஹாசனுடன் பல படங்கள் செய்திருந்தாலும், ஒப்பீட்டளவில் இவர் ரஜினிகாந்துடந்தான் அதிக படங்கள் செய்துள்ளார்.

பில்லா,கழுகு,தங்கமகன்,தாய்வீடு, நான் சிகப்பு மனிதன் என ஏராளமான படங்களில் ரஜினியுடன் வித விதமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

அவர் மறைந்து 20 வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு அவர் அகலப் போவது எப்போதுமில்லை

59 comments:

ஆயில்யன் said...

எனக்கு டைட்டில் பார்த்ததுமே தில்லுமுல்லு படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு :)))

மணிஜி said...

//எனக்கு டைட்டில் பார்த்ததுமே தில்லுமுல்லு படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு :)))//

முரளி..தில்லுமுல்லு..எப்படி மறந்தீங்க..

சரவணன் said...

கலியுக கண்ணனை விட்டுவிட்டீர்களே! இன்னொரு படத்தில் சிவாஜி பணமெல்லாம் ஏமாற்றிப் பறிக்கப்பட்டு, மகளுக்குக் கல்யாணம் செய்ய முடியாமல் சித்தம் கலங்கியவராக வருவார். அதில் தே. சீ. வில்லன். ஒரு கல்யாணப் பத்திரிகை அடிப்பது பற்றி, "நமக்குத்தான் மலேசியாவிலே ரப்பர் தோட்டம் இருக்கே, ரப்பர்லயே அடியேன்.. படிக்கிறவன் இழுத்து இழுத்துப் படிக்கட்டுமே.. நமக்கென்ன போச்சு?" என்பார் தன் பிரத்யேக பானியில். அந்தப் படத்தில் தே.சீ. கலக்குவார். பெயர் நினைவில்லை.

உண்மைத்தமிழன் said...

முரளி..

என்னாச்சு இத்தனை நாள் லீவு..?

நேற்று இன்று நாளை திரைப்படத்தின் தயாரிப்பாளர் தேங்காய் சீனிவாசன்தானே..!?

ஜொள்ளு விடுற பெரிசுகளுக்கு அக்மார்க் உதாரணமாக இருந்தவர் தேங்காய்..

பலத் திரைப்படங்களில் இதே போன்று கேரக்டர் வைத்து அதுதான் அவர் என்று சொல்லிவிட்டார்கள் இயக்குநர்கள்.

உண்மைத்தமிழன் said...

சந்திரபாபுவின் கடைசிக் காலத்தில் அவருக்கு மதியச் சாப்பாடு தேங்காய் சீனிவாசனின் வீட்டில் இருந்துதான் சென்றதாம்.

அதோடு சந்திரபாபுவின் கைச்செலவுக்கு வேண்டிய பணத்தையும் தேங்காய்தான் கொடுத்து வந்திருக்கிறார்.

காரணம் தேங்காய் சீனிவாசனை திரையுலகில் அறிமுகப்படுத்தி வைத்தது சந்திரபாபுதான்.. அது அசோகனிடம்..!

சரவணகுமரன் said...

Welcome back :-)

Raju said...

ஏ..அண்ணே வந்துட்டாப்ல.
:)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ஆயில்யன்

நன்றி தண்டோரா. தில்லுமுல்லு பற்றி எழுதியிருக்கிறேனே.

சரவணன், வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி உண்மைத்தமிழன்.

இணைய இணைப்பு கிடைக்காததால் வரமுடியவில்லை.

தங்கள் அன்புக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

நன்றி சரவணகுமரன்

வாங்க டக்ளஸ்ஸண்ணே

கே.என்.சிவராமன் said...

முரளி,

அழுத்தமான வெல்கம் பேக்.

தேர்வுகளை எப்படி எழுதியிருக்கிறீர்கள்? உங்களை எப்போது முதல் 'டாக்டர் முரளிகண்ணன்' என்று ரிக்கார்ட் படி அழைக்கலாம்?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கோவி.கண்ணன் said...

எனக்கு 'தேங்காய்' என்றால் போலி சாமியார் வேடம் தான் நினைவுக்கு வருது.

:)

நல்ல தொகுப்பு முரளி !

சின்னப் பையன் said...

சூப்பர் கம்பேக்!!!

மணிஜி said...

//நேற்று இன்று நாளை திரைப்படத்தின் தயாரிப்பாளர் தேங்காய் சீனிவாசன்தானே..!? //

அண்ணே.அது அசோகன்னு நினக்கேன்

நாஞ்சில் நாதம் said...

நல்ல தொகுப்பு

கானா பிரபா said...

அருமையான பதிவு முரளி, தேங்காய் சீனிவாசன் தயாரித்து அவரை பெரும் கடனாளியாக்கியது "மாப்பிளை சார்", சிவாஜி, மோகன், விசு நடித்தது.

சின்னப்புறா ஒன்று, எனக்கொரு காதலி இருக்கின்றாள் போன்ற பாடல்களில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தொகுப்பு

முரளிகண்ணன் said...

நன்றி பைத்தியக்காரன் அண்ணா.

சில மாதங்களில் அந்த செய்தியை இனிப்புடன் வந்து சொல்கிறேன்

நன்றி கோவிகண்ணன்

நன்றி சின்னப்பையன்

ஆம் தண்டோரா, அந்தப் பட தயாரிப்பாளர் அ ”சோகன்” தான்.

முரளிகண்ணன் said...

நன்றி நாஞ்சில் நாதம்

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி கானாபிரபா

நன்றி டிவிஆர் சார்

துபாய் ராஜா said...

'தேங்காய் சீனிவாசன்' நல்லதொரு குணச்சித்திர நடிகர்.

'ஊருக்கு உழைப்பவன்' என்ற எம்.ஜி.ஆர் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் போன்ற துப்பறியும் நிபுணர் வேடத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.

அவரது கணீர் குரலில் ஏற்ற இறக்கமான உச்சரிப்பு அழகாக இருக்கும்.'நரசுஸ் காபி' விளம்பரத்தில்
கூட நன்றாக செய்திருப்பார்.

பெண் வேடங்களும் அவருக்கு பொருத்தமாகவே இருக்கும்.

அவரது திறமைக்கு எத்தனையோ படங்களை சான்றாக கூறலாம்.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி துபாய் ராஜா

அக்னி பார்வை said...

முரளி வாங்க,

வேலை பளு குறைந்துவிட்டதா..உங்கள் பார்த்ததில் மிக்க சந்தோஷம்

முரளிகண்ணன் said...

நன்றி அக்னிப்பார்வை

கார்க்கிபவா said...

சகா, நலமா?

இவரு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவராவே இருப்பாரு. அது எனக்கு பிடிக்காது

அறிவிலி said...

எனக்கு மட்டும்தான் ப்ளாகர் அப்டேட் ஆவலையோன்னு ரெண்டு நாள் முன்னாடிதான் வந்து எட்டி பாத்தேன்.

வெல்கம் பேக்.

தில்லு முல்லு தேங்காய் மறக்க முடியாதது.

அவர் ஹீரோவா நடிச்சு அடுக்குமல்லின்னு கூட ஒரு படம் வந்ததா ஞாபகம்.

முரளிகண்ணன் said...

நலம் சகா.

நல்ல நடிப்பாற்றல் உடையவர்தான். ஆனால் இயக்குநர்கள் விரும்பியதை செய்ய வேண்டிய கட்டாயம் என்று ஒன்றிருக்கிறதே.

கவுண்டமணி கவுண்டமணியாகவே வேண்டும் என சில இயக்குநர்கள் நினைத்ததைப் போல இவருக்கும் சில முத்திரைகள் இருந்தன.


வாங்க அறிவிலி. எப்படி இருக்கீங்க?

Unknown said...

i think you left our his beautiful acting in Annakkili, he comes as theature-owner-minor and kalakkuvar, avarukkakavum isaikkakavum parkalam antha padam.

Unknown said...

நல்ல பதிவு.கலியுக கண்ணன் என்ற படத்தில் “கண்ணா நீ ஜெயிச்சுட்டே”
என்ற பாடலை பாடி சிவாஜி கணேசனை கிண்டல் செய்கிற மாதிரி நடிப்பார்.

இதனால் சிவாஜி ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொண்டார்.

butterfly Surya said...

Welcome back my Dear...

சிவாஜியை நாயகனாக வைத்து கிருஷ்ணன் வந்தான் என்று திரைப்பட பெயர் நினைவு.

வாங்க ..இப்போதான் அமைதியா ஆனந்தமாக இருக்கு..

சிநேகிதன் அக்பர் said...

வருக! வருக!!


நேற்றுதான் கோவியாரிடம் பேசும் போது உங்களை பற்றி விசாரித்தேன். அவரும் அதிசாவிடம் கேட்டு சொல்வதாக சொன்னார். இன்று அது பற்றி அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

நலமா.

நண்பர் பைத்தியக்காரனின் பின்னூட்டம் மூலம் விபரம் அறிந்து கொண்டேன்.

நாளை நான் ஊர் வருகிறேன். (என்ன ஒற்றுமை பாருங்கள்)


வழக்கமான பாணியில் தேங்காயின் சுவை அருமை.

anujanya said...

அடேடே வாங்க முரளி! எவ்வளவு நாளாச்சு!

என்னது இனிமே மருத்துவர் அய்யான்னு உங்களைக் கூப்பிடணுமா? சூப்பர்.

தேங்காய். எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர். கார்க்கி சொல்ற மாதிரி அவர் அவராத் தான் இருப்பார். சோ வாட்? வ.நி.சிவப்பில் 'வெள்ளை நிறத்தில் ஒரு பூனை' என்று கமல் சொன்னதும் கதை கேட்கும் பாவனையில், சலூன் நாற்காலியில் 'சரி' என்பார். class.

காசேதான், தில்லு முல்லு இதெல்லாம் அதகள தேங்காய் படங்கள்.

சரி அதெல்லாம் விடுங்க. Fantastic comeback Murali.

அனுஜன்யா

kavi said...

//ஆனால் அதன் பின் சிவாஜியை நாயகனாக வைத்து கண்ணன் வந்தான் படத்தை தயாரித்தார்.//

கண்ணன் வந்தான் அல்ல, கிருஷ்ணன் வந்தான்.1987ல் வெளிவந்த இந்த படத்தில் சிவாஜிகணேசன், மோகன், கேஆர் விஜயா, ரேகா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இயக்கம் . கே.விஜயன், இசை இளையராஜா.

அத்திரி said...

அருமை தல

முரளிகண்ணன் said...

நன்றி கோப்ஸ்

நன்றி ரவிஷங்கர் சார்

நன்றி வண்ணத்துப்பூச்சியார்

நன்றி அக்பர். தங்களைப் போன்றோரின் அன்புக்கு மிகக் கடமைப் பட்டிருக்கிறேன்

முரளிகண்ணன் said...

வாங்க அனுஜன்யா.

தேங்காயின் சரி என்னும் டயலாக்
கலக்கலானது


வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கவி. திருத்தி விடுகிறேன்

நன்றி அத்திரி

IKrishs said...

Nalla kalangargalai padhivu seyvadhil ungalukku nigar neengale..Aaana "Thillu mullu" thengai "ultimate"...Adhai pathi niraya solli irukkalam...(pora pokkila sonna madhiri oru feeling..)
UM.Krish

Mahesh said...

"ருத்ரதாண்டவம்" (ஞாபகமிருக்கா?)படத்துல

"எப்பப் பாத்தாலும் குப்பு குப்புன்னு வேர்க்க வெக்கிறீங்களேடா... காயவே விட மாட்டேங்கறீங்களேடா...." ம்பாரு... செம காமெடியா இருக்கும்... :)

Anonymous said...

எங்க முரளி காணாமப் போயிட்டீங்க.

நல்ல பதிவு. அவரது மாடுலேசன் மிக முக்கியமாகப் பாராட்டபபடவேண்டியது.

கடைசி காலங்களில் அவர் சிவாஜியைக் கிண்டல் செய்யும் விதமாக நடித்ததுதான் வருத்தமாக இருந்தது.

Toto said...

Muali.. Good to see you back in blogging. Pls do continue writing more.

-Toto
Film4thwall.blogspot.com

Starjan (ஸ்டார்ஜன்) said...

வருக வருக முரளி

எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே .....
.......

சாதா முரளி இப்போ டாக்டர் முரளியா ...

அசத்துங்க .

Gokul said...

க்ஷபா ........ கண்ணா.. கப்புனு ஒரு பதிவை கபால்னு எழுதிட்டிப்பா எழுதிட்ட.. உன்னை எப்படி பாராட்டருதுன்னே தெரியலையே ..ஆண்டவா இந்த பதிவு எழுதின முரளிகன்ணனை நல்ல படியா காப்பத்துப்பா ...

தேங்கா குரலிலேயே படிங்க :-)

Gokul said...

-

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் முரளி கண்ணன்

நீண்ட நாட்காளுக்குப் பின்னர் ஒரு அருமையான் பதிவு. நன்றாக இருந்தத்.
பின்னூட்டத்தில் பலர் டாக்டர் என்று குறிப்பிட்டு வாழ்த்தி இருந்தனர் ஏதாவது ஆராய்ச்சிகள் செய்தீர்களா? வீபரம் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், வாத்துக்கள்

முரளிகண்ணன் said...

வாங்க யுஎம் க்ரிஷ்.

நன்றிகள். தில்லுமுல்லு பற்றி அதிகம் எழுதியிருக்க வேண்டும். மற்றொரு பதிவில் அதைச் செய்து விடுகிறேன்.

வாங்க மகேஷ். அவர் அப்பா என்பதை உச்சரிப்பதே கலக்கலாக இருகும்.

நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி

நன்றி டோடோ. தங்களாஇப் போன்றோரின் ஆதரவுடன் தொடருகிறேன்

முரளிகண்ணன் said...

வாங்க ஸ்டார்ஜான். எப்படியிருக்கீங்க?

அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது ஸ்டார்ஜான்.

கோகுல் கலக்கீட்டிங்க.

வாங்க அருண்மொழிவர்மன்.

இறுதிகட்ட பணியில் இருக்கிறேன். விரைவில் முடித்து விடுவேன். வாழ்த்துக்களுக்கு நன்றி

தராசு said...

வந்துட்டார்யா, வந்துட்டார்யா,

எங்க அண்ணே போனீங்க இத்தனை நாள் லீவா

வெட்டிப்பயல் said...

Welcome Back Dr.Mu.Ka :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி தராசு.

தங்களின் அன்புக்கு நன்றி

வாங்க வெட்டி.

அதற்கு இன்னும் சில மாதம் இருக்கிறது.

மாதவராஜ் said...

என்ன முரளிக்கண்ணன், ரொம்ப நாளாய் காணோம். பைத்தியக்காரன் அவர்களின் பின்னூட்டத்திலிருந்து தாங்கள் எதோ தேர்வு எழுதச் சென்றிருப்பதை அறிய முடிகிறது. நல்ல முடிவு வர வாழ்த்துக்கள்.

தேங்காய் சீனிவாசன் அவர்கள் பற்றிய நினைவுகளை, அவரது படக்காட்சிகளை ஓட வைத்திருக்கிறீர்கள். தனித்திறமைகள் கொண்ட அவர், பின்னாட்களில் ஒவராக அலட்டிக்கொண்டதும், ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியதும் சோகம்.

NO said...

அன்பான நண்பர் திரு முரளி கண்ணன்,

முதலில் hats off!

திரு தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு unsung ஹீரோ! அவரைப்பற்றி, அவரின் சினமாக்களைப்பற்றி யாராவது விபரமாக எழுதியிருப்பார்களா என்று பல முறை தேடிப்பார்த்திருக்கிறேன், ஒன்றும் அதிகமாக கிடைக்கவில்லை! உங்களின் இந்தப்பதிவு ஒரு exception! மிகசிறிய analysis என்றாலும் அருமை!

He is definitely some one that who made people to laugh! No doubts and was a one who can just about perform any role!

Added to that, Black comedy என்ற genere ஒன்று இருக்கிறது!
இது கோமாளித்தனமான comedy என்று அர்த்தமாகாது! கொடுரமான மற்றும் sadistic ஆன ஒரு விடயத்தை comedy ஆக சொல்வதுதான் அது! இந்திய திரைப்படங்களில் இது மிகக்குறைவு!

ஆங்கிலத்தில், Joe Pesci, Danny Devito, Robert DeNiro போன்றவர்களெல்லாம் இதை மிக அட்டகாசமாக செய்வார்கள்!

அதற்க்கு சவால் விடும் அளவிற்கு தமிழில் செய்யக்கூடியவர்கள் (எனக்கு தெரிந்த அளவில்) மிக சிலரே!

1. M R ராதா - The King of black comedy, simply unbeatable!!!
2. சத்யராஜ் - Awesome if he does only such roles and not dancing around with girls half his age!
3. V K ராமசாமி - Another awesome actor who can do black comedy effortlessly
4. தேங்காய் ஸ்ரீனிவாசன் -

உங்கள் பதிவில் வந்து என் எண்ணங்களை சொல்வதற்கு மனிக்கவும்! நீங்கள் எழுதிய இந்த சிறு பதிவு அருமையாக இருந்ததால் எனக்கு இந்த எண்ணங்கள் வந்தது!

M R R, Sathyaraj, VKR போன்றவர்களைப்பற்றி தெரிந்த அளவு, தேங்காய் அவர்களைப்பற்றி பலருக்கு தெரியாது என்று நான் நினைக்கிறேன் (அதாவது அவர்களின் ஆரம்ப நாட்கள், background etc)!

உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து எழுதுங்கள்! Could be interesting!

Keep it up!

நன்றி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி மாதவராஜ் சார்.


\\தனித்திறமைகள் கொண்ட அவர், பின்னாட்களில் ஒவராக அலட்டிக்கொண்டதும், ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியதும் சோகம்.
\\

மிக்க சரி

நையாண்டி நைனா said...

welcome nanbaa. welcome back.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நோ.

அவரின் இளமைக்காலம், மற்றும் வித்தியாசமான வேடங்கள் பற்றிய தகவல்களூடன் விரைவில் இன்னொரு பதிவு எழுதுகிறேன்.

\\உங்கள் பதிவில் வந்து என் எண்ணங்களை சொல்வதற்கு மனிக்கவும்! \\

அருமையான விஷயங்களைச் சொல்லுகிறீர்கள். தங்கள் வருகை நான் எதிர்பார்ப்பது.

முரளிகண்ணன் said...

நன்றி நைநை

NO said...

அன்பான நண்பர் திரு முரளிகண்ணன்,

அழைப்பிற்கு நன்றி! தேங்காய் பற்றிய பதிவை எதிர்ப்பார்க்கிறேன்!

எனக்கு சிறிது நேரம் பிரேக் கிடைத்ததால் நீங்கள் எழுதிய பதிவுகளை கொஞ்சம் படித்தேன்! நன்றாக உள்ளது, சினிமா மட்டுமே என்றாலும்! சினிமா பற்றி எழுதுபவர்களை போட்டு தாக்குவதுதான் என் வழக்கம். ஆனால் சினிமாவைப்பறறியான உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது, எனென்றால் அவை மொக்கையான சினிமா விமர்சனகள் மட்டுமே என்று இல்லாததால்!

You have sort of mixed cinema with a dose of contemporary street history which is in a way interesting to read. Especially the one about the movie சகலகலாவல்லவன் whereinwhich you have added what happened in your town when the movie was released! When I say street history, I mean a sort of common man's record of happenings connected to a particular event, which in your case is cinema. Since everybody could connect to cinema, the interest gets compounded and with some easy writing style, it becomes readable! Keep it up!

Comming to M R ராதா, எங்கோ ஒரு இடத்தில் ஒரு இருபது நிமிடம் அவர் நடித்த படம் ஒன்றை பார்க்க நேர்ந்தது! பெயர் ஞாபகம் இல்லை. மாமனாராக S V ரங்கராவ், மருமகனாக M R R , மற்றும் அவரின் மனைவியாக தேவிகா (என்று நினைக்கிறேன்)!

M R R இன் charecter, அவர் எப்பொழுதும் கலக்கும் Sadistic பேர்வழி கதாப்பாத்திரம்! மாமனாரை (அதாவது S V R ஐ) அவர் ஓட்டும் விதம் அப்பப்பா, அட்டகாசம்! காமெடியும் சாடிசமும் கலந்து அவர்கொட்டும் காட்சிகள், நினைவில் நிற்பவை!

தேங்காய் ஸ்ரீனிவாசன் can also do this role, but the comedy quotient will be a bit high than the sadistic one, which of course was the strenght of M R R who can create a feeling of hatred in the viewers mind more than the other three!

இதே Charecter ஐ திறமையாக செய்யக்கூடிய மற்றுமொரு நடிகர், ரஜினிகாந்த்! அதாவது ஆரம்பகால ரஜினி! இப்பொழுது Super ஸ்டாராக மாறிவிட்டதால், இந்த லிஸ்டில் அவரை சேர்க்கமுடியாது! But he is also quite capable, once! Its just that he had to dilute to such an extent, people will not wish to see him donning such roles!

நம்மிடத்தில்லும் திறமைகள் பல இருக்கிறது, அனால் அதை பயமில்லாமல் எடுக்க, மனமார்ந்து பார்த்து ரசிக்க போதுமான ஆட்கள்தான் இல்லை!

கேவலமான குத்து பாடல்கள், ஒருவர் நூறு பேர்களை அடிப்பது, மடத்தனமான punch dailogue பேசுவது போன்ற அபத்தங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள், என்ன செய்ய!

நன்றி

ஷங்கி said...

கலக்கல் தலைவரே!
தில்லு முல்லு எனக்குப் பிடித்த படம்! அப்புறம் எனக்கென்னவோ தேங்காயை நினைத்தால் சுருளி ஞாபகம் வந்து விடுவார். அன்னக்கிளில வில்லனா வருவாருல்ல?!

முரளிகண்ணன் said...

\\இதே Charecter ஐ திறமையாக செய்யக்கூடிய மற்றுமொரு நடிகர், ரஜினிகாந்த்! அதாவது ஆரம்பகால ரஜினி! \\

100% சரி. நோ அவர்களே.

அதுவும் அவர்கள் ராமனாதன், மூன்று முடிச்சு எல்லாம் எனக்கு பேவரைட்.


\\கேவலமான குத்து பாடல்கள், ஒருவர் நூறு பேர்களை அடிப்பது, மடத்தனமான punch dailogue பேசுவது போன்ற அபத்தங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள், என்ன செய்ய!\\

நிதர்சனம்.

வருகைக்கு நன்றி சங்கா. அன்னக்கிளியில் தியேட்டர் உரிமையாளராக இருக்கும் மைனர் கேரக்டர்.

முரளிகண்ணன் said...

மாசற்ற கொடி, அறிவிலி

தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

சக பதிவரைப் பற்றிய விமர்சனங்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையின் படி உங்கள் பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன்.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நேரும் சங்கடத்திற்க்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

முரளிகண்ணன் said...

அன்பு நண்பர் நோ அவர்களே,

பதிவர்களைப் பற்றிய விமர்சனங்களை அவர்களது வலைப் பூவிலேயே இடுவது நல்லது என்பது என் கருத்து. அதனால் தங்கள் பின்னூட்டத்தை நீக்கியிருக்கிறேன்.

ராமகுமரன் said...

முருகா நல்லவங்கள ஏம்பா சோதிக்கற இனியும் நல்லவங்களை சோதிச்சா உன்னை திருத்தணிக்கே வந்து திட்டுவேன். தில்லுமுல்லு சூப்பர் டயலாக்