பெரும்பாலான பதிவர்களைச் நான் முதன்முதலில் சந்தித்த மெரினா காந்தி சிலை அருகேதான் டாக்டர் புருனோவையும் சந்தித்தேன். அந்த சந்திப்பு வரை, அவர் ஒரு மருத்துவர், இட ஒதுக்கீடு பற்றி ஆழ்ந்த புரிதல் உள்ளவர், மருத்துவ உயர் கல்வி நுழைவுத்தேர்வு பற்றிய புத்தகங்கள் எழுதியவர் என்று மட்டுமே நினைத்திருந்தேன். அந்தச் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியது.
அவர் முகம் கொள்ளாத சிரிப்புடன் வந்து சேர்ந்த உடனேயே எல்லோருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. பேசிய போதுதான் தெரிந்தது அவர் சினிமா,விளையாட்டு,இசை,அரசியல், சமூகம் என எல்லாத்துறைகளிலும் ஆழ்ந்த புரிதல் உள்ளவர் என்பது.
அதற்கடுத்த மாதமே ஓப்பன் சோர்ஸ் பற்றி கருத்தரங்கில் விரிவுரையாற்றி தன் கணிணித்துறை அறிவை வெளிப்படுத்தினார். அறிவு ஜீவிகள் வேறு தலைமைப் பண்பு வேறு என்று பலரும் சொல்வார்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது கடினம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அது அப்படியில்லை என என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். புருனோவும் அப்படித்தான். அவர் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் நிர்வாகியாகவும் இருந்தவர்.
அப்பாடா, அவரைப் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என நினைத்திருந்த எனக்கு கிடைத்தது ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அவர் ஜோதிடத்திலும் விற்பன்னர் என்பது. சித்தர் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை மனிதர்.
கிழக்கு பதிப்பகத்தில் அவர் ஆற்றிய பன்றிக்காய்ச்சல் பற்றிய உரை இன்னும் மனதில் இருக்கிறது. விரைவில் பன்றிக்காய்ச்சல் பற்றிய அவரது புத்தகமும் வர இருக்கிறது.
இந்த வார ஆனந்த விகடனில் அவர் வைரஸ்களைப் பற்றி எழுதிய சிறு கட்டுரை 143ஆம் பக்கம் வெளியாகி உள்ளது. (இலவச இணைப்பில்).
இவை எல்லாவற்றையும் விட அவரது இன்னொரு முகம் எனக்குப் பிடித்தமானது. அதுதான் தான் சரி என்று நம்பியதற்காக கடைசி வரை போராடுவது.
சட்டக் கல்லூரி சம்பவம் பற்றிய பதிவர் சந்திப்பிற்காக மெரினாவில் 50 பேர் கூடியிருந்தோம். அப்போது காவல் துறை உதவி ஆய்வாளரும், காவலர்கள் இருவரும் வந்து இப்படி கூட்டமாக நிற்கக் கூடாது, கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், “நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை. நண்பர்கள் கூடி பேசுகிறோம், அதனால் அனுமதியுங்கள்” என்று மழுப்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது புருனோ, அவர்களிடம் ”எந்த சட்டத்தில் இருக்கிறது?, ஆர்டர் இருக்கிறதா? வாய் மொழி உத்தரவா?” என வாதம் செய்ய ஆரம்பித்தார். அவரின் கூரான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிச் சென்றார்கள்.
அவர்கள் போகும்போது டிசி கிட்ட பேசி வண்டி அனுப்பச் சொல்லணும் என்பது போல பேசிக் கொண்டே சென்றார்கள். அதற்குள் பாலபாரதி டிசி யிடம் அலைபேசியில் பேசி நிலைமையை விளக்கியதும், அவர் கூட்டம் நடத்த தடை இல்லை, நீங்கள் அந்த உதவி ஆய்வாளரிடம் போய் என்னிடம் வயர்லெஸ்ஸில் பேசச் சொல்லுங்கள் என்று கூறினார்.
நாங்கள் இருவரும் கிளம்பிப் போய் இதை சொன்னவுடன், அவர் டிசியிடம் பேசிவிட்டு அனுமதியளித்தார்.
அப்போது என்னிடம் அவர் கேட்டது, “உங்க கூட நின்னு பேசிக்கிட்டிருந்தாரே, யாருங்க அவரு? லாயரா?”
பின்குறிப்பு
இதே கூட்டத்துக்கு அகநாழிகை வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார். அவர் உடை, ஹேர்ஸ்டைல், மீசை, அளந்து வார்த்தைகளைப் பேசிய விதம், விவரங்களைக் கேட்ட பாங்கு ஆகியவற்றை வைத்து, அவர் உளவுத்துறை என பதிவர்களிடம் ஒரு வதந்தி பரவியது. உடன் வந்த அவர் நண்பரும் அதே கெட்டப்பில் இருந்தார். சில பதிவர்கள் அவரிடம் பேசவே பயந்தார்கள் (ஹி ஹி நானும்தான்).

31 comments:
நன்றி தல
டாக்டரை கண்டு பிரமிப்பு அடைபவர்களில் நானும் ஒருவன்..
அவருக்கு இயற்கை சற்று அதிகமாக சுறுசுறுப்பைக் கொடுத்திருக்கு.
சிறந்த பதிவாளரை அடையாளப்படுத்தியிருக்கும் சிறந்த பதிவு..
எனக்கும் ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக தெரிந்தது அவருடைய கோல்கேட் சிரிப்புதான்..
பின்பு அவருடன் பேசிப் பழகிய பின்புதான் எனக்குத் தெளிந்தது அவருடைய மெத்த அறிவு..
இப்போதெல்லாம் அடியேன் அவரிடம் அடக்கமாகவே இருக்கிறேன்..
டாக்டர் புருனோ - எனக்கு நன்றாக ஞாபகம் இருப்பது பல மாதங்களுக்கு முன்பு டாக்டர்கள் உதவித்தொகை கேட்டு போராடியபோது அது பற்றிய செய்திகளையும் விளக்கங்களையும் பதிவுகளில் தினமும் தந்த நேரத்தில் நான் அறிந்துக்கொண்ட விபரங்களும் செய்திகளும் முழுமையாக புரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது!
வாழ்த்துக்கள் டாக்டர் தொடருங்கள்! :)
Super nanba.
//சில பதிவர்கள் அவரிடம் பேசவே பயந்தார்கள் (ஹி ஹி நானும்தான்)//]]
ஹிஹிஹி..நானும் தான்...........பிரபலம் ஆனாலே பிரச்சினைதான் தல
நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை, ஆனாலும் சொல்லுவேன்...
சிறந்த மனிதர் என்று.
அவர் பின்னூட்ட பகுதியில் ஒரு வாக்கியம், //மருத்துவம் / கல்வி (அல்லது வேறு ஏதேனும்) சம்பந்தமாக தனிப்பட்ட, பொதுவில் கூற விருப்பமில்லாத சந்தேகம் இருப்பவர்கள் செல்லிடப்பேசியிலோ (98421 11725 - காலை 6 முதல் 7 வரை, மாலை 8 முதல் 9 வரை) மின்னஞ்சலிலோ (bruno at targetpg dot com) தொடர்பு கொள்ளலாம்.//
எனக்கு மருத்துவ இடுகை தொடர்பாக ஒரு சந்தேகம் இருந்தது, மின்னஞ்சல் செய்தேன், உடன் ஆதாரத்துடன் பதில் அனுப்பினார்.
இப்போ ஜோதிடத்திலும் புகுந்து விளையாடுகிறார் :)))
நகைச்சுவை உணர்வும்...
அவரது சமீபத்திய ஜோதிட இடுகையில் ஒரு கேள்வி, 'இவ்வளவு தெரிஞ்ச நீங்க, சித்த மருத்துவத்த விட்டுட்டு ஏன் அலோபதில இருக்கீங்க?' என்று.
அவர் பதில், 'அலோபதில இருக்கேன் சரி. சித்த மருத்துவத்த விட்டுட்டேன்னு யார் சொன்னா?'
மல்டிபில் பெர்சனாலிட்டி (டிஸ்ஆடர் ஆகாத) மனிதர்.
தி கிரேட் பெர்ஸனாலிட்டி...
என் மனம் கவர்ந்த அண்ணன்களில் அவரும் ஓருவர்.
சென்னையில் நான் சந்தித்த (முதல்)பதிவர்.
நீங்கள் கூறியவைகள் அவரை பற்றிய விஷயத்தில் ஒரு துளி....
நானும் அவரும் சந்தித்த சில மணிநேரங்களில் அவர் பேசியதை எழுத ஆரம்பித்தால் நீண்டு கொண்டே செல்லும்.
அவரிடம் நான் கண்டது...
பல பதிவுகளை படித்தாலும் எந்த பதிவில் பின்னூட்டம் போட வேண்டும் என சரியாக தெரிந்தவர். கேள்விகளும் சரியான அலைவரிசையில் அதில் கேட்பவர்.
அவரை பற்றி கூற எனக்கு சந்தர்ப்பம் அளித்த உங்களுக்கு என் நன்றிகள்.
//என் மனம் கவர்ந்த அண்ணன்களில் அவரும் ஓருவர்.//
Same here!
His deep analysis on any topic he takes, patience & simplicity in explaining anything whether be it complex/simple.. i just admire him for that :-) keep rocking dr :-)
அவரது பதிவுகளில் இருக்கும் ஆழ்ந்த ஆராய்ச்சி ரொம்ப பிடிக்கும். அதோடு தன் வாதத்திற்க்காக கடுமையான சண்டை பிடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ;-)
என்னைப் பதிவுலகத்திற்கு அழைத்துவந்தவர்.
அவரது புத்தகங்கள் எளிமையாக புரியும்வண்ணம் அமைந்திருக்கும்.
அவரோடு அதே வருடம், ஓரிருவருடங்கள் முன் மற்றும் பின் மருத்துவம் சேர்ந்த பல நூறு மாணவர்கள், (இப்போது மருத்துவர்கள்) அரசுப் பணியில் சேரவும் மேல்படிப்பில் சேரவும் , அவரது புத்தகங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் சேர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு அவரது புத்தகங்களே மிக முக்கியக் காரணம். மற்றவர்களும் அவரது புத்தகத்தைப் படித்து இருப்பார்கள்.
எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் இந்தியாவின் கொடிபறக்க அவர் மிகவும் முக்கிய பங்காற்றுவார் என்று நாங்கள் நம்புகிறோம்
இந்த இடத்தை வாசித்துவிட்டீர்களா
மிகச்சிறந்த மருத்துவர் புரூனோ பற்றி பெருமை அடைகிறேன்!!
புருனோ உங்களைப் பாராட்டிப்பேசுவது எனக்குப்பெருமையாக உள்ளது!
புருனோ பேசும் ச்ப்ஜெக்டுக்ளின் வீச்சு மிகவும் ஆச்சர்யபடுத்தும்
பல நபர்கள் தாங்களை அறிவு ஜீவிகளாக காட்டிக்க படாத பாடு படுவார்கள் ஆனால் நம்ம ஆளு பல விசயங்களை தெரிஞ்சுக்கிட்டு அதுபற்றிய அலட்டல் ஏதும் இன்றி இருக்கும் இயல்பான ஆள்! இதுதான் அவரிடம் எனக்கு பிடிச்சது!
நன்றி முரளிகண்ணன்..ஆம் மிகச்சிறந்த ‘அலசல்மன்னன்.’ புருனோ பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.
நிறைய தகவல்கள் நிறைந்த பதிவுகள் கொடுப்பவர்... நன்றி முரளிக்கண்ணன்...
புரூனோ என்ற ஆளுமையை தெரிய வைத்தற்கு நன்றி முரளிக்கண்ணன்...
"மண்டை" புருனோவிற்கு வாழ்த்துக்கள்
:)
புரூனோ சாரிடம் ட்விட்டரில் மட்டும் பேசியிருக்கிறேன்... இண்டலெக்சுவல். நான் மிகுந்த மரியாதை கொண்டவர். அவரைப்பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி.
எனது பதிவுலக குருவுக்கு இவ்வளவு ரசிகர்களா.. வாழ்த்துகிறேன் ..
அவருக்கு இருக்கும் தேடல் ஆர்வம் ஆச்சரியாமானது.
போன வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த சந்திப்பின் போது அவரை சந்திக்க முடியாம போயிருச்சு. ரொம்ப வருத்தம இருந்துச்சு.
மிக நல்ல பண்பாளர், பன்முகத் திறமை கொண்டவர்.
புருனோ பற்றி இன்னும் நிறைய எழுதலாம். Lucky am.. He is my school mate. He was same popular in school as well. NTSE All india Tooper. He is Genius. Simple and approachable. Thanks for giving my this chance. I'm also his FAN. I usedto talk about Bruno to whole of my company people.
சென்னையில் மெரினாவில் ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற இருந்தபோது நான் சொந்த காரணங்களுக்காக சென்னையில் இருக்க வேண்டியிருந்தது.எனக்கு புருனோவை தவிர வே யாரையும் தெரியாது. அவரையும் அலைபேசி,வலையுலகம் மூலமாக மட்டுமே தெரியும். நேரில் பார்த்ததில்லை.இரவு 7.50 க்கு ரயில் அதற்குள் கூட்டம் முடிந்து செல்ல வேண்டும்.மூன்று பைகளில் மூட்டை முடிச்சுகள்.இவைகளுடன் போக வேண்டுமா காட்டான் மாதி இருக்குமே என யோசித்தேன். இருந்தாலும் வலையில் மட்டுமே பார்த்த வர்களை நேரிலும் பார்க்க இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால்.சுண்டல் விற்பவன் மாதிரி பைகளுடன் மெரினாவிற்கு ஆட்டோவில் வந்து இறங்கினேன்.சிலைக்கு பின்னால் யாரும் இல்லை.கூட்டம் கூட்டமாக இருந்தவர்களில் யார் பதிவர்கள் என தெரியவில்லை.புருனோவிற்கு போன் செய்தேன்.வந்து கொண்டிருப்பதாக சொன்னார்.காத்திருந்தேன்.6.40 க்கு வந்தார்.தூரத்திலிருந்தே கையசைத்தார்.நீண்ட நாள் நண்பரைப் போல வாஞ்சையுடன் பேசினார்.யாரிடமோ போன் செய்து கூட்டம் மணல் வெளியில் நடப்பதாக கூறி, வாருங்கள் போகலாம் என என்னுடைய 2 பைகளை தூக்கிக்கொண்டார். வேண்டாம் சார் என்றேன். விடவில்லை.நான் ஒரு பையை தூக்கி இருந்தேன், அவர் எனது இரண்டு பைகளை தூக்கிவந்தார்.பதிவுலக நண்பர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.இந்த பண்பு என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இப்படி இருக்க வேண்டும் என நான் கற்றுக் கொண்டது.அந்த பெரிய வட்டததில் என்னால் ஒரே நாளில் ஒன்றினைய முடியவில்லை.அகநாழிகை தன்னை தானே அறிமுகம் செய்துகொண்டு சகஜமானதும் மறக்கமுடியாதது.முரளி கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக வரவில்லை.நீண்ட நாள் எனது மனதில் இருந்த பதிய காரணமாக உங்கள் பதிவு இருந்தது.நன்றி.வெளிப்படுத்தலில் தான் அன்பை காட்ட முடியும்.புருனோ த கிரேட்.
அதுதான் தான் சரி என்று நம்பியதற்காக கடைசி வரை போராடுவது // அதிலும் ஆணித்தரமாக புள்ளிவிபரங்களுடன் போராடுவது!
சிறந்த பதிவாளரை அடையாளப்படுத்தியிருக்கும் சிறந்த பதிவு :))
நான் மிகவும் மதிக்கும் பதிவர் மருத்துவர் புருனோ
Post a Comment