August 27, 2009

திட்டு

எங்கள் குழுவின் நிகழ்ச்சிகள் முடிந்து வாத்தியக் கருவிகளை வேனில் ஏற்றும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. கீ போர்ட் ஹரி பார்த்து பார்த்து என்று ஏற்றுபவரை பயமுறுத்திக் கொண்டே இருந்தான். குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கட் முகம் கொள்ளாத சிரிப்புடன் வந்து வேனை நோக்கி வந்து கொண்டிருந்தார். பக்கா செட்டில்மெண்டாயிருக்கும்.

செட்டில்மெண்டில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் பண்பு தெரிந்தது என்றால் நிகழ்ச்சியை நடத்திய விதத்தில் அவர்களின் ரசனை தெரிந்தது. சாப்பிட இடம் கிடைக்காத
வர்களும்,சாப்பிட்ட அசதியில் ஐந்து நிமிடம் உட்கார்ந்து போவோமே என நினைப்பவர்களும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் ரிசப்ஷன் கச்சேரிகளுக்கே வாசித்தே
நொந்து போயிருந்த எங்களுக்கு இந்தக் கச்சேரி புது அனுபவமாய் இருந்தது. ஆம். கல்யாணம் முடிந்து, மதிய சாப்பாடு இரண்டு மணி வரை. கச்சேரி இரண்டு முதல் ஐந்து வரை. ஞாயிற்றுக் கிழமையாததால் அனைவரும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

வேனில் அனைவரும் ஏறிவிட நான் மட்டும் இங்கே தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்கார், பார்த்து நாளாச்சு,பார்த்துட்டு வந்துடுறேன் என கழண்டு கொண்டேன். இதைக் கவனித்துவிட்ட உதித்தும் வேனில் இருந்து இறங்கி என்னுடன் சேர்ந்து கொண்டான். உதித் நாராயணன் குரலில் அமைந்த பாடல்களைப் பாடும் ஸ்பெசலிஸ்ட் என்பதால் முருகேசனுக்கு அந்தப் பெயர். ஆறு மாதம் முன்பு குழுவில் இணைந்தவன்.சாரில் தொடங்கி இப்போது அண்ணே வரை வந்திருப்பவன்.

என்னாப்பா, இன்னைக்கு எங்கேயோ பார்த்த மயக்கத்தை ரொம்ப பீல் பண்ணி பாடீட்டயே என ஆரம்பித்தேன்.

ஆமண்ணே, ஆடியன்ஸில நாலஞ்சு நயன்தாரா அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சுக்கிட்டு இருந்ததில்ல அதான் பீல் பண்ணிட்டேன். ஆமா நீங்களும் தாலாட்ட வருவாளா, கவிதைகள் சொல்லவான்னு பிழிஞ்சுட்டீங்களே? என்றான்.

தொடர்ந்து, எண்ணன்னே ஏன் வேன்ல போகல என ஆரம்பித்தான்.

ஆமடா, பி பி ஸ்ரீனிவாஸ் வாய்ஸ் ஆள்ல இருந்து பாங்கோஸ் வாசிக்கிறவன் வரைக்கும் இருக்கிற மூணு லேடி சிங்கர்ஸ்ஸ லுக் விடுறதும், கவன ஈர்ப்பு பண்றேன்னு கோமாளித்தனம் பண்ணுறதும், எரிச்சலா இருக்குடா. அதான் பஸ்ல போயிறலாம்னு.

அண்ணே வாழ்க்கைங்கிறது சின்ன சின்ன சந்தோஷத்துல தானன்னே அடங்கியிருக்கு

தம்பி, இப்படி சின்ன சின்ன சந்தோஷத்திலேயே கவனம் செலுத்திக்கிட்டு இருந்தா பத்து வருஷம் கழிச்சு நாம பெரிய பெரிய கவலையோடயே இருக்க வேண்டி வரும். சொசைட்டியில இருந்து அவ்வளோ பின்தங்கிப் போயிருவோம். வயசு ஆகுறதுக்குள்ள சீக்கிரமா செட்டில் ஆகப் பாரு.

அண்ணே செட்டில்ங்குறது, நாம கடைசியா சுடுகாட்டில ஆகுறதுதானன்னே. வாழ்க்கையை அதன் போக்குல வாழ வேணாமா?

நீ நெறையா புத்தகம் படிக்கிறேன்னு நெனைக்கிறேன். ஆமா இப்ப வேலைக்கு ட்ரை பண்ணுறியா இல்ல சினிமாக்கு ட்ரை பண்ணுறியா?

பார்ட் டைமா ஒரு ஜாப் கிடைச்சுருக்குண்ணே. மத்த நேரங்கள்ல பிராக்டிஸ், சான்ஸ் தேடன்னு இருக்கலாம்னு பார்க்குறேன்.

ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும். ஒரு பர்டிகுலர் டைம் பிக்ஸ் பண்ணிக்கோ. அதுவரைக்கும் சின்சியரா ட்ரை பண்ணு.முடியலையா புல் டைம் வேலைக்குப் போயிடு. என்ன மாதிரி அல்லாடாத.

ஆமண்ணே நானும் கேட்கணும்னே இருந்தேன். உங்களுக்கு அப்போ சான்ஸ் கிடைக்கலியாண்ணே?

கிடைச்சுருக்கும். முழு மூச்சா ட்ரை பண்ணியிருந்தா. ஆத்தில ஒரு கால் சேத்தில ஒரு கால். இப்போ சோத்துக்கு, சுண்ணாம்பா வேக வேண்டியிருக்கு.

ஏழெட்டு வருஷம் சும்மா திரிஞ்சதால சொல்லிக்கிற மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு சுமாரான வேலை தான் கிடைச்சது. அப்புறம் கல்யாணம். கைக்கும் வாய்க்குமே பத்தாத சம்பளம்.

ராணி மாதிரி வாழணும்னு கனவு கண்டேன். சாணி மாதிரி என்னைய ஆக்கிட்டியேன்னு வீட்டுக்காரி தெனமும் வார்த்தையாலே கொல்லுறா. அவளச் சொல்லியும் குத்தமில்ல. அவ செட்டு ஆளுங்க இருக்கிற நெலமையோட கம்பேர் பண்ணி மாஞ்சு மாஞ்சு போறா. அஞ்சு வயசுல பொம்பளப்பிள்ள. ஸ்கூல் யூனிபார்ம தவிர ரெண்டே டிரஸ்தான் அவளுக்கு இருக்கு.ஆத்திரத்த எங்கதான் போயி காட்டுவா? அதான் இப்போக் கூட ரெண்டுமணி நேரம் டைம் பாஸ் பண்ணிட்டு ராத்திரிக்கு போகலாம்னு இருக்கேன்.

கேட்கவே சங்கடமா இருக்குண்ணே.என்ன தான் பண்ணலாம்னு இருக்கீங்க?

காலேஜில வோக்கல் சோலோ ஜெயிக்கும் போதெல்லாம் கிடச்ச கைதட்டல் போதை இன்னும் கேட்குது. ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா புரோகிராம குறைச்சுக்கிட்டு வர்றேன். மத்த ஆளுங்கள்ளாம் கூப்பிட்டா போறது இல்ல. வெங்கட்டுக்காக மட்டும்தான் பாடவர்றது.சில்லறை செலவுக்கு ஆகுது. இனி காலையில இல்லாட்டி, சாயங்காலம் எதுவும் பார்ட் டைம் ஜாம் கிடைச்சா பார்க்கலாமுன்னு இருக்கேன்.

இப்படியே போயிக்கிட்டு இருந்தா எப்படிண்ணே?

கஷ்டம்தான். ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள கொஞ்சம் காசு சேர்த்து சைடு பிஸினஸ் பண்ணலாம்னு இருக்கேன். எப்படியும் அஞ்சாறு வருஷத்துல மேடேறிரணும்.

பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பேருந்து வர ஏறிக்கொண்டோம். கூட்டம் அதிகமானதால் பேச்சு தடைப்பட்டது.இறங்க வேண்டிய இடம் வர கண்களாலேயே விடை பெற்றுக் கொண்டு இறங்கினேன்.

ஐந்து வருடத்தில் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடுமா? யோசிக்கத் தொடங்கியது மனம்.சரி தீரவில்லை யென்றால்? இப்போ வயசு முப்பத்தாறு. அறுபது வரைக்கும் இருப்போம்னா இன்னும் 24 வருஷம். எட்டு மணி நேரத் தூக்கத்திலேயே எட்டு வருஷம் போயிடும். எட்டு மணி நேரம் ஆபிஸ் வேலையில்ல எட்டு வருஷம். ஞாயிறு, லீவெல்லாம் கழிச்சாலும் ஆறரை வருஷம் வரும். அப்புரம் குளிக்கிறது, கடைக்குப் போறது, பாப்பாவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க்ண்ணு ஒரு நாலரை வருஷம் வச்சோமின்னா ஒரு 19 வருஷம் ஓடிடும், பார்ட்டைமோ சைடு பிஸினஸோ மூணு மணி நேரம் பார்த்தா அது ஒரு மூணு
வருஷம் ஓடிடும்.

வீட்டுக்காரி திட்டுனா எவ்வளவுதான் திட்ட முடியும்? ரெண்டு வருஷம்தான் அவளுக்கு டைம் கிடைக்கும்.

என ஏதேதோ எண்ணங்கள் ஓட வீட்டுக் கதவைத் தட்டினேன். நல்ல தூக்கக் கலக்கத்தில் மனைவி கதவைத் திறந்தாள். சாப்பிட்டுட்டேன் என்றதும், குழந்தையின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.

இரண்டு வருஷத்தில் இப்போது எவ்வளவு நேரம் கழிந்திருக்கும்? என எண்ணிக்கொண்டே படுக்கையை விரித்தேன்.

43 comments:

துளசி கோபால் said...

இயல்பான நடை.

நிறையப் பேரோட வாழ்க்கை இப்படித்தான்........(-:

புருனோ Bruno said...

//செட்டில்மெண்டில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் பண்பு தெரிந்தது என்றால் நிகழ்ச்சியை நடத்திய விதத்தில் அவர்களின் ரசனை தெரிந்தது. //

சூப்பர் !!

புருனோ Bruno said...

// இப்படி சின்ன சின்ன சந்தோஷத்திலேயே கவனம் செலுத்திக்கிட்டு இருந்தா பத்து வருஷம் கழிச்சு நாம பெரிய பெரிய கவலையோடயே இருக்க வேண்டி வரும். சொசைட்டியில இருந்து அவ்வளோ பின்தங்கிப் போயிருவோம். வயசு ஆகுறதுக்குள்ள சீக்கிரமா செட்டில் ஆகப் பாரு.//

சூப்பர் !!!

ilavanji said...

// ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும். //

அருமை!

புருனோ Bruno said...

//ராணி மாதிரி வாழணும்னு கனவு கண்டேன். சாணி மாதிரி என்னைய ஆக்கிட்டியேன்னு வீட்டுக்காரி தெனமும் வார்த்தையாலே கொல்லுறா. //

சூப்பர் !!

Unknown said...

தல,

அட்டகாசம்.உங்கள் கதையில் பாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக
உலவ விடுகிறீர்கள்.கதையின் மூடும் அழகாக செட் ஆகி வருகிறது.இது ஒரு பிளஸ் பாயிண்ட்.


எந்த கருவானலும் அதன் சுற்றியுள்ள
relevant சம்பங்களை வைத்து லாஜிகலாக பின்னுகிறீர்கள்.

மிகைப் படுத்துதல் இல்லை.

உதாரணம்:
//சாப்பிட்ட அசதியில் ஐந்து நிமிடம் உட்கார்ந்து போவோமே என நினைப்பவர்களும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் ரிசப்ஷன் கச்சேரிகளுக்கே வாசித்தே
நொந்து போயிருந்த எங்களுக்கு இந்தக் கச்சேரி புது அனுபவமாய் இருந்தது.//

கதையில் ஒரு இனம் புரியாத சோகம்
படர்ந்து இருக்கிறது.


போனக் கதையும்(டபீர் தெரு?)கதை மாந்தர்களுடன் பிரயாணிக்கிறோம்.

Hats off Murali!

Raju said...

\\நீ நெறையா புத்தகம் படிக்கிறேன்னு நெனைக்கிறேன். ஆமா இப்ப வேலைக்கு ட்ரை பண்ணுறியா இல்ல சினிமாக்கு ட்ரை பண்ணுறியா?\\

நச்...!

சூப்பர்ப்ண்ணே, எல்லா ஃபீல்டலயும் உள்ள நுணுக்கங்களை நல்லா கவனிக்கிறீங்க.
நல்லாருக்கு தலைவா.

ஷண்முகப்ரியன் said...

இனிமையான,சோகமான யதார்த்தம்.வாழ்த்துகள்.

புருனோ Bruno said...

மெல்லிசை குழுமங்களில் நடப்பதை மிக அழகாக படம்பிடித்துள்ளீர்கள்

--

சில வருடங்கள் மெல்லிசை குழுவினருடன் சுற்றிக்கொண்டிருந்தவன் என்ற முறையில் (டிரம்ஸ் போன்றவற்றை துடைக்கும் வேலை தான் செய்து வந்தது வேறு விஷயம் !!) நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று என்னால் கூறமுடியும்

கார்க்கிபவா said...

//எந்த கருவானலும் அதன் சுற்றியுள்ள
relevant சம்பங்களை வைத்து லாஜிகலாக பின்னுகிறீர்க//

அதே அதே.. கலக்கல் முரளி.. எப்படி கரு பிடிக்கறீங்க? கதையெழுத நேரம் எடுத்துகறீஙக்ளா? ஏன்னா சினிமா பதிவுகள் சீக்கிரம் எழுதுடுவிங்கன்னு தெரியும்.. இதுவும் ஒரு சிட்டிங்கில் எழுதுவதா?

முரளிகண்ணன் said...

நன்றி டீச்சர்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி டாக்டர்

நன்றி இளவஞ்சி

ரவிஷங்கர் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

நன்றி டக்ளஸண்ணே

நன்றி ஷண்முகப்பிரியன் சார்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கார்க்கி.

புனைவுகளுக்கு சினிமாப் பதிவுகளை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறேன் கார்க்கி.

ஒரே சிட்டிங்கில்தான் எழுதுவேன். ஆனால் அதற்கு முன் அசை போடுவது
உண்டு

Jerry Eshananda said...

"படகுகளை எரிச்சுடனும்"-பின்னிட்டீங்க.

Manikanda kumar said...

அருமைங்க...

//ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும்.//

பதிவு முழுவதும் இந்த மாதிரி நச்சுன்னு பல வரிகள்.

SK said...

நச் தலைவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்படி சின்ன சின்ன சந்தோஷத்திலேயே கவனம் செலுத்திக்கிட்டு இருந்தா பத்து வருஷம் கழிச்சு நாம பெரிய பெரிய கவலையோடயே இருக்க வேண்டி வரும். சொசைட்டியில இருந்து அவ்வளோ பின்தங்கிப் போயிருவோம். வயசு ஆகுறதுக்குள்ள சீக்கிரமா செட்டில் ஆகப் பாரு.//

அருமை முரளி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ஜெர்ரி ஈசானந்தா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டகுமார்

நன்றி எஸ் கே

நன்றி டிவிஆர் சார்

மணிஜி said...

முரளி கதையை ஒரு முறை கீழிருந்து படித்துப் பார்த்தேன்..நீங்களும் படித்து பாருங்கள்...

M.G.ரவிக்குமார்™..., said...

கடைசியில் மனைவி சாப்பிட்டுட்டீங்களா எனக் கேட்ப்பார் என நினைத்தேன் ஆனால் அவரே தன் வாயால் சாப்டுட்டேன் என சொல்ல வைத்து சோகமாகவே முடித்து விட்டீர்கள்............கதை படிக்க 5 நிமிஷம் பின்னூட்டம் 8நிமிஷம்.........போய்டுச்சே.........!

Cable சங்கர் said...

/ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும். ஒரு பர்டிகுலர் டைம் பிக்ஸ் பண்ணிக்கோ. அதுவரைக்கும் சின்சியரா ட்ரை பண்ணு.முடியலையா புல் டைம் வேலைக்குப் போயிடு. என்ன மாதிரி அல்லாடாத.
//

சூப்பர்..

அருமையான ஒரு நிதர்சன கதை.. முரளி

முரளிகண்ணன் said...

நன்றி தண்டோரா

நன்றி நேசன்

நன்றி கேபிள் சங்கர்

அறிவிலி said...

அருமை

முரளிகண்ணன் said...

நன்றி அறிவிலி. மிக்க மகிழ்ச்சி

Starjan (ஸ்டார்ஜன்) said...

இயல்பான வாழ்க்கையில கஷ்டம் தான் .

அதையெல்லாம் சமாளிச்சா தான் சுகமே !!!

Chithran Raghunath said...

லேசாய் தத்துவார்த்தம் இழைகிற நடையில் இயல்பான வசனங்களோடு நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் முடிவு ரொம்ப நச் என்றெல்லாம் சொல்ல முடியவில்லையென்றாலும் படிப்பதற்கு நிறைவாய் இருந்தது. இன்னும் கொஞ்ஞ்ஞ்ஞ்சூண்டு முயற்சித்திருந்தால் அற்புதமான கதையாகியிருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

///வீட்டுக்காரி திட்டுனா எவ்வளவுதான் திட்ட முடியும்? ரெண்டு வருஷம்தான் அவளுக்கு டைம் கிடைக்கும்.
///

காமெடி மாதிரியெலாம் தெரியல தல..,

படு சீரியஸ் மேட்டரா இருக்கு தல..,

சத்யராஜ்குமார் said...

கதை நன்றாக இருந்தது. வசனங்களுக்கு டபுள் கோட் காணோமே? ஏதாவது தொழில்நுட்ப பிரச்னையா இல்லை நவீனத்துவமா இல்லை இது உங்கள் பாணியா?

கோபிநாத் said...

\\ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும்\\

கலக்கல் அண்ணே...கதையும் உங்க நடையும் சூப்பரு ;)

சரவணகுமரன் said...

ரொம்ப நல்லா இருந்தது, அந்த உரையாடல்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜான்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சித்ரன் சார்.

வாங்க சுரேஷ், அத நான் காமெடின்னு சொல்லவேயில்லையே.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சத்யராஜ்குமார் சார்.

எங்கே சரியாக டபுள் கோட் பயன்படுத்துவது எப்படி என்ற குழப்பமே காரணம். இப்போது பத்திரிக்கை கதைகளை கவனமாக படித்து வருகிறேன். விரைவில் திருத்தி விடுகிறேன். நன்றி

நன்றி கோபிநாத் அண்ணாச்சி

நன்றி சரவணகுமரன்

Unknown said...

சத்யராஜ்குமார் said...

//வசனங்களுக்கு டபுள் கோட் காணோமே? //

நானும் சொல்ல மறந்துவிட்டேன்.இது உரையாடல்களுக்கு முக்கியம்.

”பதிவு செய்யப்பட்டதற்கும்” “நேரலை”
-க்கும் உள்ள வேற்றுமை எதுவோ அதுவேதான் இதற்கும்.

Vidhya Chandrasekaran said...

சூப்பர். அதுவும் அந்த கால்குலேஷன் பார்ட் நல்லாருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும்//

நல்ல கருத்துக்கள்...

முரளிகண்ணன் said...

நன்றி ரவிஷங்கர்

திருத்திக் கொள்கிறேன்

நன்றி வித்யா

நன்றி பிரியமுடன் வசந்த்

நையாண்டி நைனா said...

நல்ல கதை நண்பா...

Venkatesh Kumaravel said...

உங்களிடம் பேசினால் நிறைய கற்றுக்கொள்ளலாம் போலிருக்கிறது. கதையைப்பற்றி எனக்கு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. *உழைத்திருப்பது தெரிகிறது.*

"உழவன்" "Uzhavan" said...

அடடா.. அருமை நண்பரே..
படகை எரிக்க மறந்தவர்கள்தான் ஏராளம்.

முரளிகண்ணன் said...

நன்றி நையாண்டிநைனா

நன்றி வெங்கி ராஜா

நன்றி உழவன்

ஷங்கி said...

அருமை! இலக்கும், அதை அடையும் திட்டமும் இல்லாமல் இருந்தால் என்னாகும் என்பதை வழக்கம்போல சுவாரசியமா சொல்லியிருக்கீங்க!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கா

நாஞ்சில் நாதம் said...

//ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும்.//


சூப்பர் !!

வெட்டிப்பயல் said...

Excellent..

//அண்ணே செட்டில்ங்குறது, நாம கடைசியா சுடுகாட்டில ஆகுறதுதானன்னே. வாழ்க்கையை அதன் போக்குல வாழ வேணாமா?

நீ நெறையா புத்தகம் படிக்கிறேன்னு நெனைக்கிறேன்//

Super :)