எதிர்பார்த்தபடியே இடைத்தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. தொண்டாமுத்தூர் தவிர மற்ற தொகுதிகளில் திமுகவிற்கும், தே தி மு கவிற்கும் முன்பை விட அதிகமான ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. 67% தானே ஒட்டுப் பதிவு, ஓட்டுப் போடதவர்கள் எல்லாம் அதிமுக வினர் என்று ஜெயா டிவி கூட சொல்லாது.
எப்போதும் ஓட்டுப் போடுபவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்திருக்கிறார்கள். எப்போதும் வராதவார்கள் வரவில்லை.
சரி. ஜெயலலிதாதான் அதிமுகவினர் ஓட்டுப் போட வேண்டாமென்று மறைமுக உத்தரவு எல்லாம் கொடுத்தாரே? அவர்கள் அதை மதிக்க வில்லையா? இல்லை அதிமுக என்னும் ஓட்டு வங்கியே திவாலாகி விட்டதா? என்று கேள்விகள் வரலாம்.
ஒரு கட்சியின் ஓட்டு வங்கி என்பது, முழுக்க முழுக்க அக்கட்சிக்காரர்களை மட்டும் சேர்ந்ததல்ல. இந்தக்கட்சி மற்றவர்களை விட பரவாயில்லை (எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி பெஸ்ட்?) என்ற அடிப்படையில் அதை முதல் சாய்ஸாக வைத்திருப்பவர்களைச் சேர்த்தும்தான்.
அதிமுகவில் கட்சிக்காரர்கள் அதன் ஓட்டு வங்கியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு என்றால், அதிமுகவை பர்ஸ்ட் ஆப்ஷனாக வைத்திருக்கும் பொதுமக்கள் மீதப் பங்கு. இதேதான் திமுக விற்கும், தேதிமுகவிற்கும்.
இந்தப் பொதுமக்கள் அதிமுக போடியிடவில்லை என்பதற்காக வீட்டில் இருந்துவிடவில்லை. தங்கள் அடுத்த ஆப்ஷனுக்கு வாக்களிக்கச் சென்று விட்டார்கள்.
எம்ஜியார் கட்சியை ஆரம்பித்தபோது, அவர் கொள்கை கருணாநிதி எதிர்ப்பு என்பதே. அதனால் தான் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டால் அண்ணாயிஸம் என்று மழுப்புவார். அப்போதைய அதிமுக ஓட்டு வங்கியில் இருந்தவர்கள் எல்லாம் கருணாநிதிக்கு வாக்களிக்க கனவிலும் நினைக்காதவர்கள்.
ஆனால் இப்பொதைய அதிமுக ஓட்டு வங்கி அப்படி இல்லை. திமுக விற்கு அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார்கள். சென்ற தேர்தலைவிட திமுக இப்போது அதிகம் பெற்றுள்ள வாக்குகளே சாட்சி.
சரி. என்ன செய்து திமுக, அதிமுகவின் ஓட்டு வங்கியை கரைத்துள்ளது?.
இதற்கு முன் பழைய சம்பவம் ஒன்றை பார்ப்போம்.
எம்ஜியார் ஆட்சிக்கு வரும்முன், அவரது ராமாவரம் தோட்டம் சார்பாக ஒரு ஆவணம் தேவைப்பட்டது. அதை வாங்கிவர அவரது உதவியாளார், அந்த பஞ்சாயத்து நாட்டாமையிடம் சென்றார். அவர் இவர்களை மதிக்கவேயில்லை. அதை அறிந்த எம்ஜியாரின் சூப்பர் ஈகோ விழித்துக் கொண்டது. நாட்டாமையைப் பற்றி விசாரித்தார்.
”இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக இந்த பதவிக்கு வருபவர்கள். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. என்று பதில் வந்தது”
எம்ஜியார் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக போட்ட உத்தரவே, இந்த பரம்பரை பதிவுகள் ஒழிக்கப்படுகின்றன என்பதுதான். அதற்குப் பின் அரசுத் தேர்வு மூலம், கிராம் நிர்வாக அலுவலர்கள் (வி ஏ ஓ) என்ற பதவியில் யார் வேண்டுமானலும் தேர்வு பெறலாம் என சட்டமியற்றினார்.
அப்போது பதவிக்கு வந்த வி ஏ ஓ அவர்தம் குடும்பத்தினர் எல்லாம் அதிமுகவிற்கு விசுவாமாக இருந்தார்கள். ஏனெனில் வாழ்க்கை கிடைத்ததல்லவா?.
அதே போலத்தான் இப்போது திமுகவின் இந்த ஆட்சியிலும் சரி, 1996-2001 ஆட்சியிலும் சரி ஆசிரியர் பணிகளுக்கு எந்த வித பணப் பரிமாற்றமும் இல்லாமல் (குறிப்பாக அன்பழகன் அமைச்சராக இருந்த போது) ஏராளமானோர் நியமிக்கப் பட்டார்கள். அதில் சிலர் 27 வயது கடந்தும் மணமாகாத பெண்கள். அவர்களுக்கெல்லாம் உததரவு கிடைத்த ஆறு மாதத்தில் கல்யாணம் நடந்தது. அவர்களின் ஓட்டு என்றென்றைக்கும் திமுக விற்குத்தான்.
மற்ற அரசுத்துறைகளிலும் நியமனம் திமுக ஆட்சியிலேயே அதிகம் நடைபெறுகிறது. அந்த ஊழியர்களையும் திமுக திருப்திப் படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆறாவது ஊதியக் கமிஷன் அமலாக்காத்திற்கு முன்னேயே இடைக்கால நிவாரணத்தை வழங்குகிறது. அதிமுகவின் ஆட்சிக்காலத்திலோ ஜெயலலிதா எஸ்மா டெஸ்மா என அவர்களை பகைத்துக் கொண்டார்.
சிறுபான்மையினரின் ஓட்டு என்ற வங்கியை குறிவைத்தே திமுக காய்களை நகர்த்துகிறது. எந்த மேடையாய் இருந்தாலும் எஸ்றா சற்குணம் அங்கே இருப்பார். இயேசு அழைக்கிறார் (காருண்யா) அமைப்புக்கு அதிக விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதால், கிரீன் வேஸ் ரோட்டின் ஒரு பகுதியை டி ஜி எஸ் தினகரன் சாலை என மாற்றுகிறார்கள். இனி அவர்களின் ஓட்டு யாருக்கு விழும்? அதிமுகவோ மத மாற்ற தடைச்சட்டம், கன்னிமேரி விவகாரம் என எதிர்ப்பாளர்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
பாஜகவுடன் மறைமுக அண்டெர்ஸ்டாண்டிங், நரேந்திர மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்வது, அவர் சென்னை வந்தால் விருந்து கொடுப்பது என தனக்கு ஆதரவாக இருக்கும் ஓரளவு முஸ்லிம் ஓட்டுக்களையும் ஜெயலலிதா இழந்து வருகிறார்.
அதிமுகவின் பலமாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டு வங்கியும், மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர் ஓட்டு வங்கியும் கருதப்படுகிறது. ஜெயலலிதாவும் தன் அருகில் அச்சமூகங்களைச் சேர்ந்தவர்களையே வைத்துக் கொண்டிருக்கிறார். அம்மாவட்டங்களில் இருக்கும் பிற வகுப்பினர்களுக்கு (நாயுடு, பிள்ளைமார் போன்ற வகுப்பினர்கள்) இப்போது முக்கிய பதவிகள் எதுவும் கொடுப்பதில்லை. ஆனால் திமுக அமைச்சரவையிலும் சரி, கட்சியில் மாவட்ட, ஒன்றிய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளிலும் சரி ஒரு பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனால் அவர்களுடைய வாக்குகள் முதல் சாய்ஸாக திமுகவிற்கு மாறி வருகின்றன.
அதிமுகவை முதல் சாய்ஸாக வைத்திருந்த இன்னொரு முக்கிய பிரிவினர் அடித்தட்டு மக்கள். ஓட்டுப்பதிவன்று சுனாமியே வந்தாலும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயங்காதவர்கள். அவர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி, கேஸ் அடுப்பு என அள்ளி விட்டு வருகிறார்கள். பொங்கல் சீர் வேறு. எனவே அவர்களும் மெல்ல மெல்ல திமுகவை முதல் சாய்ஸாக மனதில் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்னும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம், பிரசவ உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை என பல் திட்டங்களை சரியாக செயல்படுத்தி, பயணாளிகளின் முதல் சாய்ஸாக திமுக மாறி வருகிறது.
சென்ற ஆண்டு ரேஷன் கார்டு இருந்தால் தான் அடுத்த சிலிண்டர் பதிவே என்னும் அளவுக்கு கெடுபிடிகள் துவங்கின. வேறு ஆதாரங்கள் மூலம் இணைப்பு வாங்கியவர்கள் லீவு போட்டு வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு படையெடுத்தார்கள். அங்கேயோ இலவசத்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ரேஷன் கார்டுதானே அடிப்படை என்பதால் பல ஆதாரங்களைக் கேட்டு மக்களை திருப்பியனுப்பினார்கள். சில நாட்களில் உத்தரவு வந்தது. சிலிண்டருக்கு ரேஷன் கார்டு ஆதாரம் தேவையில்லை என. பெருமூச்சு விட்ட பலரில் சிலர் திமுகவை முதல் சாய்ஸாக எண்ண அது வழி வகுத்தது.
மேடையில் பேசி எல்லாம் யார் மனத்தையும் மாற்றி விட முடியாது என்பதை கருணாநிதி தெளிவாக உணர்ந்திருக்கிறார். அதனால் தான் குறிபார்த்து ஓட்டுக்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்.
அடுத்த கட்டமாக அதிமுகவின் நிர்வாகிகளையும் தூக்க ஆரம்பித்து விட்டார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் என்ன? அடுத்து ஓ பி எஸ்ஸையே தூக்கப் போகிறோம் என்கிறார்கள்.
ஜெயலலிதா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கட்சி நிர்வாகிகளையும் பாதுகாக்க வேண்டும். தன் முதல் சாய்ஸ் வாக்காளர்களையும் தக்க வைதுக் கொள்ள வேண்டும்.
என்ன செய்யப் போகிறார் பார்ப்போம்.
35 comments:
\\திமுகவிற்கும், தே தி மு கவிற்கும் முன்பை விட அதிகமான ஓட்டுகள்\\
முரளிண்ணே, விஜயகாந்த் கட்சி பேரு தே.மு.தி.க. தான..?
(தேசிய முற்போக்கு திராவிட கழகம்.)
\\அடுத்து ஓ பி எஸ்ஸையே தூக்கப் போகிறோம் என்கிறார்கள்.\\
அடப்பாவிகளா...?
பணம் "பன்னீர்" செயதாலும் செய்யும்.
aakaa... ananbaa... arasiyal alasalum nallaathaan irukku.
எம்ஜியார் ஆட்சிக்கு வரும்முன், அவரது ராமாவரம் தோட்டம் சார்பாக ஒரு ஆவணம் தேவைப்பட்டது. அதை வாங்கிவர அவரது உதவியாளார், அந்த பஞ்சாயத்து நாட்டாமையிடம் சென்றார். அவர் இவர்களை மதிக்கவேயில்லை. அதை அறிந்த எம்ஜியாரின் சூப்பர் ஈகோ விழித்துக் கொண்டது. நாட்டாமையைப் பற்றி விசாரித்தார்.
”இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக இந்த பதவிக்கு வருபவர்கள். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. என்று பதில் வந்தது”
எம்ஜியார் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக போட்ட உத்தரவே, இந்த பரம்பரை பதிவுகள் ஒழிக்கப்படுகின்றன என்பதுதான். அதற்குப் பின் அரசுத் தேர்வு மூலம், கிராம் நிர்வாக அலுவலர்கள் (வி ஏ ஓ) என்ற பதவியில் யார் வேண்டுமானலும் தேர்வு பெறலாம் என சட்டமியற்றினார்.
அப்போது பதவிக்கு வந்த வி ஏ ஓ அவர்தம் குடும்பத்தினர் எல்லாம் அதிமுகவிற்கு விசுவாமாக இருந்தார்கள். ஏனெனில் வாழ்க்கை கிடைத்ததல்லவா?.//
முடிந்தால் இந்தத் தொடுப்பில் போய் பார்க்கவும்.
http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_06.html
என்றென்றும் தலித் வாக்குகள் அ.தி.மு.க விற்கு கிடையாது என்பதை சேர்த்து கொள்ளவும்.
@ டக்ளஸ் அண்ணே , பணம் இல்லை எவ்வளவு நாள் தான் மரியாதை இழந்து வாழ்வது? அதற்க்கு ஈடாக டம்மி முதல்வர் பதவி கிடைத்தால் கூட பரவாயில்லை
தலைவரே,
அரசியலையும் விட்டு வைக்கறதில்லையா?
நல்ல அலசல்.
வாங்க டக்ளஸ்
நன்றி நையாண்டி நைனா
வருகைக்கு நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி.
உங்கள் எஸ் டி எஸ் பதிவைப் படித்தேன். மிக அருமையான பதிவு. சுட்டிக்கும் பதிவிற்கும் நன்றி
வாங்க பிரகாஷ்
கலக்கல் முரளி..பார்ப்போம் என்ன செய்யப் போகிறார் என்று?
நன்றி தராசு
நன்றி நர்சிம்
ரெஸ்ட் எடுக்கிறவங்களை ஏன் தான் இப்படி டிஸ்டர்ப் பண்றீங்களோ தெரியல
2011 எல்லாத் தொகுதியையும் புறகணிக்கப் போறாங்க
மன்னார்குடி மாபியா கும்பல் இருக்கும் வரை ஜெ வால் எதுவும் செய்ய முடியாது..
அதிமுக வேகமாக வீழ்ந்து வருகிறது. துணை முதல்வர் becoming Stronger and stronger..
சமூக ரீதியான இன்றைய அரசியல் நிலையை கூறும் நல்ல கட்டுரை...
//முடிந்தால் இந்தத் தொடுப்பில் போய் பார்க்கவும்.
http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_06.html//
கர்ணம் ஓ.பி.ராமனை மதிக்காமல் பேசியதற்கு காரணம், அவரது கர்ணம் பதவி மட்டும் தானா !!!
//புருனோ Bruno said...
//முடிந்தால் இந்தத் தொடுப்பில் போய் பார்க்கவும்.
http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_06.html//
கர்ணம் ஓ.பி.ராமனை மதிக்காமல் பேசியதற்கு காரணம், அவரது கர்ணம் பதவி மட்டும் தானா !!!//
புருனோ சார்,
வேறு காரணமும் இருக்கும் என்பது ஓரளவுக்கு புலப்படுகிறது. இருப்பினும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. கிடைக்குமாயின், அறியத் தருகிறேன்.
கர்ணம், மணியம் பதவிகளை கட்டுப் படுத்தும் அதிகாரம் அன்றய வருவாய்த் துறை அமைச்சருக்கு இல்லை என்பதும், பழங்காலத்து சட்டத்தைப் பின்பற்றியதும், ஜன நாயகநாட்டில் ஒர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அம்சமாகப் படுகிறது.
அக தானாக படித்தோ, உழைத்து முன்னேருபவர்களுக்கோ ஒன்றும் கிடையாது. அதற்க்கு ஆதரவோ, ஊக்கமோ கிடையாது. எந்நாளும் அடிவருடி களுக்கு கஞ்சி கிடைக்கும். தன்மானம் உள்ளவன் எல்லாம் என்ன செய்வது?
மாற்றம் வர என்ன வழி நண்பர்களே?
//வேறு காரணமும் இருக்கும் என்பது ஓரளவுக்கு புலப்படுகிறது. இருப்பினும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. கிடைக்குமாயின், அறியத் தருகிறேன்.//
என்னிடமும் ஆதாரம் இல்லை. ஆனால் எனக்கும் ஓரளவிற்கு அதிகமாகவே புலப்படுகிறது :) :) :)
காரணம் இன்று கூட சில இடங்களில் “அந்த” காரணத்தை காணமுடிகிறதென்றால் 1960ல் நிலைமை எப்படி இருந்திருக்கும் !!!
சார்பு அரசியலை நியாயப்படுத்தி அதையே செய்யச்சொல்கிறீர்கள்? ;)
நுட்பமான அரசியல் விமர்சனம்.
//எரிகிற கொள்ளியில்//
//ஆறு மாதத்தில் கல்யாணம் நடந்தது. அவர்களின் ஓட்டு //
// மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்வது, அவர் சென்னை வந்தால் விருந்து கொடுப்பது //
//பலமாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டு வங்கியும், மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர்//
//ரேஷன் கார்டு இருந்தால் தான் அடுத்த சிலிண்டர் பதிவே //
//மேடையில் பேசி எல்லாம் யார் மனத்தையும் //
wat வண்ணத்துபூ’யார் said is 100% rite.
//அதிமுக வேகமாக வீழ்ந்து வருகிறது. துணை முதல்வர் becoming Stronger and stronger..//
யார் மனதையும் புண்படாமல் எழுதியிருக்குறீர்கள். நன்று
முரளி அண்ணே இப்படி ஓரு கட்டுரை எழுதப்போறேன்னு எனக்கு ஒரு ஃபோன் அடிச்சுருக்கலாமே :(
//கர்ணம் ஓ.பி.ராமனை மதிக்காமல் பேசியதற்கு காரணம், அவரது கர்ணம் பதவி மட்டும் தானா !!! //
டாக்டர் அண்ணே சந்தேகமே வேண்டாம். நீங்கள் நினைக்கும் காரணம்தான் முதல் காரணம்.அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை.
வாங்க இரும்புத்திரை அரவிந்த்.
வாங்க வண்ணத்துப்பூச்சியார்
நன்றி சரவணகுமரன்
வாங்க டாக்டர்
அத்திவெட்டி ஜோதிபாரதி & டாக்டர் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
வாங்க குகி
நாம இறங்கிதான் மாத்தணும்.
வாங்க பீர்,
சார்பு அரசியலை நியாயப்படுத்தவில்லை. நடந்து கொண்டிருப்பதை எழுதினேன். எதிர்க்கட்சி பலமாக இருப்பது ஜனநாயகத்துக்கு மிக அவசியமான ஒன்றாயிற்றே.
வருகைக்கு நன்றி அசோக்.
வாங்க அப்துல்லா அண்ணே.
எதிர் கட்சிகள் பலம் ஜனநாயகத்திற்கு அவசியம் என்றாலும், சார்பு அரசியல் ஜனநாயகத்தையே குழியில் தள்ளிவிடும் அபாயகரமானது. சரியாகச் சொல்வதென்றால், இலவசங்களுக்கும், இட ஒதுக்கீடுகளுக்கும் கைமாறாக பெறப்படும் இந்த வாக்கு அரசியலை ஜனநாயகம் என்று சொல்வதே கேள்விக்குறி.
இதிலுள்ள ஒரே ஜனநாயக அம்சம், வாக்காளன் தான் விரும்பிய வேட்பாளனுக்கு வாக்களிப்பது மட்டுமே. ;)
உங்களுடைய இந்த சமகால அரசியல் அலசல் அருமை.
ஆழ்ந்த கருத்துக்கள்
அருமையான அலசல். எனக்கென்னவோ அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கிற கப்பல் எனத் தோன்றுகிறது. கேப்டன் (விஜயகாந்த் இல்ல) என்ன செய்கிறார் என்று பார்ப்போம்
நன்றி பீர்
நன்றி Earn staying home
நன்றி மகேஷ்
ஜெயலலிதாவும் அரசியல் செய்ய வேண்டும் ( ஒரு சற்குணம் இல்லாட்டி, வேற ஒரு நற்குணம் ... நிச்சயம் கிடைப்பார், அது போல் தலையில் முக்காடு, ஒரு ரம்சான் விருந்து... பாட்டியுடன் கொஞ்சம் போட்டோ, தமிழ் நாடு முழுக்க சுற்று பயணம், வயல் வெளியில் விவசாயியுடன் சாப்பாடு, கட்டிபிடித்து போட்டோ ... ) இதுக்கு நடுவுல, காங்கிரஸ் கூட கூட்டு, ... இப்படி எல்லாம் நடந்தா... உடனே காட்ச்சிகள் மாறும், ஸ்டாலினின் பாங்காக் பயணம் ஏன் என்று தெரிய வரும், ஏன் இங்கிலாந்து போனார், ஏன் ஜப்பான் போனார், ... சுவிஸ் நம்பர்களும் வெளியே வரலாம்.
ஜெயலலிதாவும் அரசியல் செய்ய வேண்டும் ( ஒரு சற்குணம் இல்லாட்டி, வேற ஒரு நற்குணம் ... நிச்சயம் கிடைப்பார், அது போல் தலையில் முக்காடு, ஒரு ரம்சான் விருந்து... பாட்டியுடன் கொஞ்சம் போட்டோ, தமிழ் நாடு முழுக்க சுற்று பயணம், வயல் வெளியில் விவசாயியுடன் சாப்பாடு, கட்டிபிடித்து போட்டோ ... ) இதுக்கு நடுவுல, காங்கிரஸ் கூட கூட்டு, ... இப்படி எல்லாம் நடந்தா... உடனே காட்ச்சிகள் மாறும், ஸ்டாலினின் பாங்காக் பயணம் ஏன் என்று தெரிய வரும், ஏன் இங்கிலாந்து போனார், ஏன் ஜப்பான் போனார், ... சுவிஸ் நம்பர்களும் வெளியே வரலாம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அது ஒரு கனாக் காலம்
கர்ணம் ஒ.பி.ராமன் மட்டுமல்ல எல்லோரும் அடிக்கிறவங்க தான் குட்டி கர்ணம் .
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தான் .
நல்ல அலசல்.:)))))
நட்புமிகு முரளி,சௌராஷ்ட்ர சமூக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சந்தனக் கலர் சபாரி பதிவை நீக்கியமைக்கு என் தனிப்பட்ட நன்றிகள்!..உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும் வழக்கம் போல்!........
நல்ல விமர்சனம் தலை..நான் எப்பவுமே.. யோசிக்கறது இதுதான்.. பிளாக் எழுதற நாமே இந்தளவுக்கு சாதக பாதகம் யோசிச்சா? அவுங்க எப்படி யோசிக்கனும் ஏன் யோசிக்க மாட்டேங்கறான்னு தெரியலை???
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி நேசன்
நன்றி ஜாக்கி சேகர்
என்ன செய்யப்போறார்னு தெரியலயே.. அம்மா தாயே எதாவது பண்ணும்மா. ஏன்னா நாங்கெல்லாம் இலைக்கு ஓட்டு போடுற கூட்டம்மா கூட்டம் :-)
நன்றி உழவன்
Post a Comment