சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிக்கையில் கார்ல் மார்க்ஸ்ஸின் மூலதனம் பற்றி ஒரு நகைச்சுவை வெளிவந்திருந்தது. "மூலதனத்தை தமிழ்நாட்டில் படித்தவர்கள் நான்கு பேர் தான். இருவர் அதை மொழிபெயர்த்தவர்கள், இருவர் அதை ப்ரூப் ரீடிங் செய்தவர்கள் என்று. அதைப் போலத்தான் தமிழ்நாட்டில் பெண்ணியமும். அதை முழுதாக அறிந்தவர்கள் எத்த்னை பேர் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும். "கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு. அது கார்ல் மார்க்ஸ் சொல்லும் முன்னரேயும் பலருக்கு இருந்திருக்கிறது". ஆம் கார்ல் மர்க்ஸ்ஸை தெரியாதவர்களுக்கும் கூட கம்யூனிஸ சிந்தனை வந்து கொண்டுதான் இருக்கும். அது ஒரு உணர்வு. அதுபோலத்தான் பெண்ணியமும். ஷபனா ஆஸ்மி, தீபா மேத்தா, பெமினா போல பெண்ணியத்தைக் குறிக்கும் எந்த குறியீடுகளும் தெரியாமலேயே பெண்ணிய உணர்வுடன் வாழும் ப்லர் இருக்கிறார்கள். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், கஞ்சி போட்ட காட்டன் சாரி, ஆபரணங்கள் அணியாமை தான் பெண்ணியம் என்று ஒரு கருதுகோள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. இன்று அதில் இருந்து சில அடி தூரம் பெண்ணிய கருத்துக்கள் முன்னேறி வந்துள்ளன.
தமிழ்நாட்டிலிருக்கும் பெண்ணியவாதிகளுக்கு முழு முதல் எதிரி யாரென்று பார்த்தோமானால் அது எழுத்தாளர் ரமணி சந்திரன் தான். (கவுண்டமணி : அப்படீன்னா ஆதவன், நாஞ்சில் நாடனையெல்லாம் என்னன்னு சொல்லுவீங்க)
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்பதுதான் இவரது எல்லா நாவல்களின் யு எஸ் பி யும். பாத்திரப் பெயரும், களமும் தான் மாறும். இந்த லட்சணத்தில் இவை சிடிக்களாக வேறு வெளிவருகிறதாம். வாசகியர் சமைக்கும் போது, துணி துவைக்கும் போது கேட்டுக் கொண்டே வேலை செய்யலாமாம். வெளங்கிடும் அடுத்த தலைமுறை. இதில் இன்னொரு காமெடி இதில் வரும் பகுதிகளை யாரும் மற்றவற்றில் பயன் படுத்தக் கூடாதாம். நீங்களே முதல் கதையை வச்சுத்தானே மத்த எல்லாத்தையும் எழுதிட்டு வர்றீங்க? உங்களுக்கு இது அப்பிளிகபில் இல்லையா?
சரி நம்ம தமிழ் சினிமாவுக்கு வருவோம். பெரிய நடிகர்கள் நடிச்ச படங்களை விட்டுடுவோம். அதில பொண்ணுன்னா இப்படி இருக்கணும் அப்பிடி இருக்கணும்னு பல டெபனிஷன்லாம் வரும். அதில பெண்ணியக் கருத்துக்கள தேடுறது டைம் வேஸ்ட். நாம பெண்ணியத்தை மையமா வச்சு எடுத்த படங்களை மட்டும் பார்ப்போம்.
இயக்குநர் கே சுப்ரமணியத்தின் தியாக பூமி, வீணை பாலச்சந்தரின் அந்தநாள், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், சேதுமாதவனின் மறு பக்கம், பாலு மகேந்திராவின் மறுபடியும், சிங்கீதம் சீனிவாசராவின் மகளிர் மட்டும் என பல படங்களில் பெண்ணியம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.
ஆர் சி சக்தியின் சிறை (அனுராதா ரமணன் கதை) , கே பாலசந்தரின் கல்கி (இவர் பட பெண்ணிய கொடுமைகளை தனியா பார்ப்போம்), மதுமிதாவின் வல்லமை தாராயோ போன்ற பல படங்கள் பெண்ணியத்தின் அபத்தச் சித்தரிப்புக்களுக்கு உதாரணம்.
தற்போதைய இயக்குநர்களில் பெண்ணியத்தைப் புரிந்து படம் எடுப்பவர்கள் என்று பார்த்தால் ராதா மோகனை சொல்லலாம். அவரின் அழகிய தீயே, மொழி,அபியும் நானும் என எல்லாமே பெண்ணிய கருத்துக்களை அழகாக சொன்ன படங்கள்.
அழகிய தீயே
தன் கொள்கைகளுக்காக வசதியான வாழ்வைத் துறந்து வரும் நாயகி, சூழ்நிலை காரணமாக இன்னொரு ஆணுடன் தங்க நேரிடுகிறது. அவனை வெறுக்கிறாள். ஆனால் நட்பாகிறாள். எப்போது? அவன் நாம் இருவரும் சம உரிமையுடன் நட்பாக இருப்போம். உன்னிடமிருந்து நான் சிலவற்றைக் கற்றுக்கொள்கிறேன் என கரம் நீட்டும் போது. படத்தின் இறுதிவரை அவள் நிமிர்ந்தே நிற்கிறாள். நீ யில்லாமல் நானில்லை என மீன்டும் அவன் கரம் நீளும் போது அவனை ஏற்றுக்கொள்கிறாள். தமிழ்சினிமா சித்தரித்த ஆளுமை உடைய பெண்பாத்திரங்களில் இது நிச்சயம் அடக்கம்.
மொழி
இதை உடல் ஊனம் இருந்தாலும் கம்பீரமாக இருக்கும் மனித ஆளுமை என்றும் கொள்ளலாம். ஆளுமையுடைய பெண் கதாபாத்திரம் என்றும் கருதிக்கொள்ளலாம். இதில் வரும் முகம் தெரியாத பிரகாஷ் ராஜின் அம்மா கூட பெண்ணியத்தை உணர்ந்தவராக சித்தரிப்பு இருக்கும். தன் மகன் ஒரு விதவையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னவுடன் இன்னைக்குதான் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அந்தப் பாத்திரம் சொல்லும்.
அபியும் நானும்
15 வய்துப் பெண் சொல்லும் "டாடி ஐ நோ வாட் ஐ யாம் டூயிங்" வசனமும் சரி, அம்மா வாக வரும் ஐஸ்வரியா எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதாகட்டும் பார்க்கும் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கடத்துகிறது.
மற்ற இயக்குநர்களைப் போல் இல்லாமல் நோ நான்சென்ஸ் பெண்ணிய கேரக்டர்களை அதிகம் உலவ விட்டவர் ராதாமோகன் தான் (இந்த குறுகிய காலத்தில்). இனி விசு டைப், வி சேகர் டைப், பாலசந்தர் டைப் பெண்ணியங்கள் எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
44 comments:
தல வழக்கம் போல் அருமை
முரளி ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவா ..
நல்ல பதிவு கலக்குங்க முரளி ...
நாந்தான் ரெண்டாவது மூணாவது ...
நீங்கள் குறிப்பிட்ட படங்கள் ரொம்ப சூப்பர் ..
அண்ணா அருமையான அலசல்.
இது தான் முரளிக்கண்ணன் என்பது எனது புரிதல்.
:)
அடுத்த பதிவு எப்போ.
நன்றி அத்திரி
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி அப்பாவி முரு
நன்றி அக்பர். விரைவில் அடுத்த பதிவு
கே பாலசந்தரின் கல்கி (இவர் பட பெண்ணிய கொடுமைகளை தனியா பார்ப்போம்), மதுமிதாவின் வல்லமை தாராயோ போன்ற பல படங்கள் பெண்ணியத்தின் அபத்தச் சித்தரிப்புக்களுக்கு உதாரணம் - Murali
-----------
ஒத்த சிந்தனை என்பதால், ஆர்வமாகப் புரட்டினேன். ட்ரெய்லரோட நிறுத்திட்டீங்க... :-)
நல்ல தலைப்பு!
-விகடகவி
//"கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு. அது கார்ல் மார்க்ஸ் சொல்லும் முன்னரேயும் பலருக்கு இருந்திருக்கிறது". //
:) :)
அன்பே சிவம் படம் பற்றி நான் எழுதியபோது இது குறித்து சொன்னவை “தன்னைப்போல் பிறரையும் நேசி” என்று கூறி ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தவர் தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட்
//இதில் இன்னொரு காமெடி இதில் வரும் பகுதிகளை யாரும் மற்றவற்றில் பயன் படுத்தக் கூடாதாம். நீங்களே முதல் கதையை வச்சுத்தானே மத்த எல்லாத்தையும் எழுதிட்டு வர்றீங்க? உங்களுக்கு இது அப்பிளிகபில் இல்லையா?//
:) :)
பாலசந்தரின் கல்கி - > பெண்ணியம் குறித்த அபத்தம் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையது
//மற்ற இயக்குநர்களைப் போல் இல்லாமல் நோ நான்சென்ஸ் பெண்ணிய கேரக்டர்களை அதிகம் உலவ விட்டவர் ராதாமோகன் தான் (இந்த குறுகிய காலத்தில்). இனி விசு டைப், வி சேகர் டைப், பாலசந்தர் டைப் பெண்ணியங்கள் எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.//
பைவ் ஸ்டார் படம் பார்த்திருக்கிறீர்களா
வேதாள உலகம் பெண்ணிய சிந்தனை:-
நாயகன் குழந்தையாக இருக்கும்போது நாயகனின் தந்தை போட்டியில் வென்று மணமுடிக்கச் செப்வார். போட்டியில் தோற்று கல்லாக மாறுவார்.
நாயகன் வளர்ந்து வாலிபம் அடைந்து போட்டியில் வென்று அதே நாயகி யை மணந்து கற்களை மனிதர்களாக்கி மீட்டுவருவார்.
என்றும் பெண்மை இளமை.
பாசமலர்கள் எல்லாம் பெண்ணீய படத்தில் வருமா? தல..,
வைஜயந்தி IPS?
நல்லாருக்குங்க முரளி.
பிரபாகர்.
தமிழ் சினிமா, கதைகள் ஒருபக்கம் இருக்கட்டும்! நிஜ வாழ்க்கையிலேயே பெண்ணியம் பற்றிப் பெண்களுக்கு இருக்கும் புரிதல், கருத்துக்களே மாறிக்கொண்டே இருக்கின்றனவே!மனித உறவுகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவதில் எந்த அளவுக்குப் பண்பட்டிருக்கிறோம் என்பதை பொறுத்தது மட்டுமே!
எனக்குத் தெரிந்த ஒரு மாதர் சங்கத் தலைவி, அவருக்கு ஒரு பிரச்சினை கணவனுக்குக் கொஞ்சம் குடிப்பழக்கம் இருந்ததாகக் குற்றச்சாட்டு வந்தது. அந்தப்பெண் தன் கணவனுக்கு ஆதரவாகவே நின்றார், சேர்ந்து வாழவே விரும்பினார்.ஆனால்,
பெண்ணியத்துக்கு உலக மகா அத்தாரிட்டியான தன் தாயை மீற முடியவில்லை. விவாக ரத்து செய்தார். இரண்டாவது கல்யாணமும் செய்து கொண்டார்.
ரமணி சந்திரனுக்கு முன்னால், லக்ஷ்மி எழுதிய கதைகளிலும் மைய நீரோட்டம் அப்படித்தான் இருக்கும். என்ன, கதாநாயகி ரொம்பவுமே பொறுமையின், தியாகத்தின் சிகரமாக இருப்பாள், கணவன் தான் கொஞ்சம் அப்படி இப்படி என்று இருந்து விட்டு, கடைசி அத்தியாயத்தில் என்னை மன்னிப்பாயா கண்ணே என்று வசனம் பேசியவுடன், பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கணவன் தன்னிடம் சரண்டர் ஆனப்புறம் என்பதுபோல இருக்கும். இது மட்டும் உசத்தியா என்ன!
ஆணீயம், பெண்ணியம் என்பதெல்லாம் ஒரு குறுகிய பார்வைகளே!
நன்றி விகடகவி
டாக்டர். பைவ்ஸ்டார்,விரும்புகிறேனில் நன்கு பெண் பாத்திரங்களை படைத்திருந்த சுசி கணேசன் கந்தசாமியில் தான் சறுக்கி விட்டார்
டாக்டர், பாசமலரைப் பத்திக் கேட்டு பதற வைக்குறீங்களே?
நன்றி பிரபாகர்
விரிவான பகிர்தலுக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
வரும் இடுகைகளில் இது பற்றிய பதிலுடன் எழுதுகிறேன்
நல்ல பதிவு முரளி , ஆவலுடன் அடுத்த பதிப்பிர்க்கு வெயிட்டிங்.
நன்றி பிரகாஷ்
நல்லதொரு தொடர் முரளி. நிறைய உழைப்பு தேவைப்படும். வாழ்த்துகள்.
ராதாமோகன் தற்போதைய இயக்குனர்களில் முக்கியமானவர்.
ரமணிச்சந்திரன் தொடர்பில் கூறி இருப்பதென்றால் முற்றிலும் உண்மை
எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் என்று கேட்ட நண்பர்களிடம் நான் சொன்னது இரண்டே condition
ரமணிச்சந்திரன் நாவல் வாசிக்கக்கூடாது
mega serial பார்க்கக்கூடாது
வணக்கம் முரளி..வெல்கம்பேக்..அப்புறம் நாளைக்கு ஒரு பதிவரை பார்ல சந்திக்கப்போறேன்..எலைட்ல சொல்லி பாதுகாப்பு கொடுக்க முடியுமா?
நன்றி ஆதி
நன்றி தர்ஷன்
நன்றி தண்டோரா.
முதல்ல வெல்கம் பேக் சகா.
எனக்கு இந்த பெண்ணியத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. பெண்கள் மீது எந்த வித அடக்குமுறைகளும் இல்லாத நாடுகளில் பெண்கள் என்ன சாதித்து விட்டார்கள்? செஸ் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டிலாவாது அவர்கள் முதலில் இருக்கிறார்களா? ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் முதலில் அவர்களை ஐந்து செட் டென்னிஸ் ஆட சொல்வார்களா? நான் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. சிங்கத்தை விட மானே எனக்கு பிடிக்கும். அது போலதான் ஆணும் பெண்ணும். இயற்கையின் படைப்பில் இவரக்ள் இருவரும் வெவ்வேறு ஜீவன்கள். இவர்களை சமம் என்று சொல்வது எனக்கு சரியாப்படவில்லை. வேண்டுமென்றால் ஆண்கள் பெண்களை விட மதிப்பில் குறைவானவர்கள் என்று கூட நான் சொல்லுவேன். ஆனால் நிச்சயம் அவர்கள் சமமல்ல. யார் கை ஓங்குகிறது என்பது அந்தத்த சமுகத்தை சார்த்தது
நன்றி கார்க்கி
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வரும் பகுதிகளில் பதில் தெரிவிக்கிறேன்.
முரளி...... வழக்கம் போல அருமையான தலைப்பில் தமிழ் சினிமா பற்றிய அலசல். எனக்கும் ராதாமோகனை மிகவும் பிடிக்கும். அதிலும் மொழி ஒரு மாஸ்டர் பீஸ்.
நன்றி செல்வம்
//எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் என்று கேட்ட நண்பர்களிடம் நான் சொன்னது இரண்டே condition
ரமணிச்சந்திரன் நாவல் வாசிக்கக்கூடாது
mega serial பார்க்கக்கூடாது//
Condition? Are not you being dominating here Tharshan.
So, you guys have read RamaniChandran's books. Are not you guys?
Am not being defensive abt RC. Just asking.
//எனக்கு இந்த பெண்ணியத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. பெண்கள் மீது எந்த வித அடக்குமுறைகளும் இல்லாத நாடுகளில் பெண்கள் என்ன சாதித்து விட்டார்கள்?//
What you mean? are not those women standing on their on legs while our woman still depending on men...
//செஸ் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டிலாவாது அவர்கள் முதலில் இருக்கிறார்களா?//
At least there are handful of females in the list.
Check it out
http://en.wikipedia.org/wiki/List_of_female_chess_players
//ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் முதலில் அவர்களை ஐந்து செட் டென்னிஸ் ஆட சொல்வார்களா?//
Why NOT?
//நான் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. சிங்கத்தை விட மானே எனக்கு பிடிக்கும். அது போலதான் ஆணும் பெண்ணும். இயற்கையின் படைப்பில் இவரக்ள் இருவரும் வெவ்வேறு ஜீவன்கள். இவர்களை சமம் என்று சொல்வது எனக்கு சரியாப்படவில்லை. வேண்டுமென்றால் ஆண்கள் பெண்களை விட மதிப்பில் குறைவானவர்கள் என்று கூட நான் சொல்லுவேன். ஆனால் நிச்சயம் அவர்கள் சமமல்ல. //
ABSURD logic...
//யார் கை ஓங்குகிறது என்பது அந்தத்த சமுகத்தை சார்த்தது//
யார் கை ஓங்குகிறது என்று பார்ப்பதற்கு வாழ்க்கை இன்னும் விளையாட்டாகவில்லை. மனிதனை மனிதனாக மதிக்கப் பழகுங்கள். அது தான் முக்கியமே தவிர யார் கை ஓங்குகிறது என்பது முக்கியமல்ல... ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லா உரிமைகளும் சமனாக கிடைக்க வேண்டும் என்பதே சமம் என்பதற்கு பொருள்.
இதில் கருத்து சொன்ன பலரும் ஆணாதிக்கவாதிகளாகத் தான் தோன்றுகிறார்கள். எத்தனை பேருக்குத் தான், தில் இருக்கிறது மனைவியை ஒரு மனிசியாக நடாத்துவதற்கு. பார்க்கிறவன் என்னைப் பொன்னையன் (ஏமாளி) என கூப்பிடுவானே என்ற பயம் இல்லாது இருக்கும் கணவன்மார் எத்தனை..
தெரியாமல் தான் கேட்கிறேன்.
ச்சீ...
அர்த்தநாதீஸ்வர உருவம் சொல்வது ஆணும் பெண்ணும் சமன் என்று. எங்களை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம். காலில் போட்டு மிதிக்காவிட்டால் போதும்....
இதற்கும் கொஞ்சம் பதி கூறுங்களேன்.
http://the-nutty-s.blogspot.com/2009/01/boy-friend-real-boy-friend-male-friends.html
http://the-nutty-s.blogspot.com/2009/06/1.html
முகிலினிக்கு பதில் கூற முயலலாம் எனினும் அது பலவீனமாக இருக்க நேரிடும்.
சாரமாக ஒன்றைச்சொல்லலாம்..
ஆம். காலம் காலமாக இருந்து வந்த பழக்கமல்லவா? சில பத்தாண்டுகளில் மாறிவிடாதுதான்.
மகிழ்வு யாதெனின், புரிந்துகொள்ளத் துவங்கியிருக்கிறோம். மாற்றங்கள் நிகழத்துவங்கியுள்ளன. எத்தனை தலைமுறை வந்தாலும் தீராதா இந்தப்பிரச்சினை என பல விஷயங்களில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோமே, இந்தப்பிரச்சினையில் இன்னும் மிகச்சில தலைமுறைகளிலேயே முழுமையான தீர்வைக்காண்போம் என நம்புகிறோம். பெண்கள் இன்னும் பொறுப்போடு அதை எதிர்கொள்ளவேண்டும் என்பது நம் ஆசை.
உங்களின் கடைசிச்சொல்லான 'ச்சீ' என்பதை நூற்றாண்டுகளின் கோபமாக எடுத்துக்கொண்டு தவிர்த்துச்செல்கிறோம்.
நன்றி, வாழ்த்துகள்.!
முரளி கண்ணன். நல்ல களாம். அடிச்சு ஆடுங்க. இதன் தொடர்ச்சிகளை ஆவலாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
டாக்டர் சொன்னது போல ஃபைவ் ஸ்டார் ஒரு அருமையான பெண் ஆளுமையை சித்தரிக்கும் படம்தான்.
கார்க்கியின் பதில்களை பார்க்கையில் கோபமும், அவர் மீதான அனுதாபமும் ஏற்படுகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? அது எதனால் இப்போது இங்கே பரவலாக விவாதிக்கப்படுகின்றது? அதன் கூறுகள், என்று எதைப் பற்றியும் புரிதல் இல்லாமல் நான் சட்டை இல்லாமல் போவேன், பொண்ணால அதை செய்ய முடியுமா என்ற ரீதியில் எழுதி இருக்கிறார். வருத்தப்பட வேண்டிய விஷயம். நல்ல வேளை முகிலினி பதில் கூறி விட்டார்.
http://blog.nandhaonline.com
mk, sabash.
mukilini,
vanakkam.
@முகிலினி&நந்தா,
என் புரிதல் தான் சரியென்று நான் வாதம் செய்ய வரவில்லை. ஆனால் சில சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைத்தால் நானும் உங்கள் பக்கம் வரக்கூடும்.
ஆணும், பெண்ணும் மட்டுமல்ல இயற்கையின் படைப்பில் அனைத்து ஜீவன்களுக்கு இந்த பூமியில் சரிசமமான உரிமை உண்டு என்று சொல்பவன் நான். மனிதன் த தேவைகளுக்காக மரத்தையும், மிருகங்களையும் சாய்ப்பதே தவறு என்று சொலபவன். அதனால் பெண்ணுக்கும் ஆணுக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
பெண்கள் ஐந்து செட் ஆடுவார்களா என்று கேட்டதற்கு why not என்கிறார் முகிலினி. பின் ஏன் ஆடுவதில்லை என்று அவர் யோசித்தாரா? இங்கே நான் பெண்களை தாழ்த்தி சொல்லவில்லை. புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உடலமைப்பு அப்படி. என்னால் ஆட முடியும் என்று திமிராக சொல்லவில்லை. இயற்கையின் படைப்பு அப்படி என்றுதான் சொல்கிறேன்.
முகிலினி சொன்ன அதே தொனியில் பதிலளிக்க முடியும். வேண்டாம்.
நான் சொல்வது இதுதான். ஆணும் பெண்ணும் சம உரிமை பெற வேண்டியவர்கள்தான். ஆனால் அதற்காக ஆணும் பெண்ணும் சமமென்று பொருளில்லை
கார்க்கி முதலில் இந்த வாதம் இந்த பதிவுக்கு வந்திருக்கவே தேவையில்லை என்பது என் கருத்து.
தமிழ் சினிமாவில் பெண்ணியம் என்ற கட்டுரையில் ஆண் - பெண் யார் வலிமையானவர்கள் என்ற ரீதியில் பேசியதே தவறான ஆரம்பம் என்று நினைக்கிறேன். பெண்ணியம் என்பது யார் பெரியவர்கள் என்பதோ, சமமா, சமமில்லையா என்பதோ அல்ல நண்பரே.
//பெண்கள் ஐந்து செட் ஆடுவார்களா என்று கேட்டதற்கு why not என்கிறார் முகிலினி. பின் ஏன் ஆடுவதில்லை என்று அவர் யோசித்தாரா?//
ஆடச்சொல்லி கேட்டு அவர்கள் ஆடவில்லையா? நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு பெண்களிடம் கேட்காமல் விட்டால் அதற்கு நாங்களா பொறுப்பு. முதலில் கேட்டுப்பாருங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள். பெண்கள் நன்றாகவே ஆடுவார்கள். அவர்களுக்கும் ஆம்பிசன், டெடிகேசன், லொட்டு லொசுக்கு எல்லாம் இருக்கு.
பெண்கள் உடலமைப்பு பற்றி இப்பவும் பேசுகிறீர்களா... அடக் கடவுளே... நாங்கள் இருப்பது 21ம் நூற்றாண்டில். நூற்றுக்கணக்கான கடல் மைல்களை நீருக்கடியே நீந்தி (ஆண்களுக்குச் சளைக்காது) எதிரியின் கப்பல்களை அழித்த பெண்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். ஆம், நான் வாழ்ந்த பூமியில் நடந்தது. ஆண்களுக்கு சளைக்காது 25 கிலோ மீற்றர் ஓடிவிட்டு ஒரு நாள் முழுவதும் கடலில் பாலன்சில் நிற்கும் அசாத்திய திறமை வாய்ந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆம், புலிகளின் பெண் போராளிகளே அவர்கள்...
ஏன் உங்கள் நாட்டில் கூட பெண் கொமான்டர்கள் சாதிக்கவில்லையா.
இப்படி எல்லாம் செய்வதற்கு உடல் அமைப்பு மட்டுமே காரணமாகாது. அசாத்திய மனவுறுதியும் வேண்டும்.
ஓரளவுக்கு பெண் ஓட்டக்காரர்களையும், பாரம் தூக்கிகளையும் தந்த நாடு அல்லவா இந்தியா. அங்கு இருந்து கொண்டு பெண்களின் உடல் அமைப்பைப் பற்றி பேசுபவரை "வடிகட்டின முட்டாள்" என்றும் கூறலாம். இன்டைரக்டாக "ஆணாதிக்கப் பேய்" என்றும் கூறலாம். பிடித்ததை நீங்களே தெரிவு செய்யுங்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு.. பெண்களை இழிவுபடுத்துவதற்கு. பெற்றவளை மதித்திருந்தால் அல்லவா தெரிந்திருக்கும் பெண்களின் மதிப்பைப் பற்றி. உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் எல்லா வளமும் இருக்கும் இந்தியா முன்னேறாமல் இருக்கு.
ஆதிமூலகிருஷ்ணன் அவர்களின் பக்குவமான பதில் ஆறுதலளிக்கிறது. கொஞ்சம் விரைவாக மாறினால் நல்லது. 21 நூற்றாண்டுகளாக மிதிக்கப்பட்டது போதுமே... இன்னுமா மிதிபட வேண்டும்.
நந்தாவின் பார்வையைப் பார்க்கும் போதும் மனது ஆறுதலாக இருக்கிறது. வணக்கம் ரமேஷ் வைத்யா.
///கார்க்கி முதலில் இந்த வாதம் இந்த பதிவுக்கு வந்திருக்கவே தேவையில்லை என்பது என் கருத்து.
தமிழ் சினிமாவில் பெண்ணியம் என்ற கட்டுரையில் ஆண் - பெண் யார் வலிமையானவர்கள் என்ற ரீதியில் பேசியதே தவறான ஆரம்பம் என்று நினைக்கிறேன். பெண்ணியம் என்பது யார் பெரியவர்கள் என்பதோ, சமமா, சமமில்லையா என்பதோ அல்ல//
பலே... கை தட்டுகிறேன். உங்கள் கடைசி வரிகளுக்கு....
முகிலினி
அங்கு இருந்து கொண்டு பெண்களின் உடல் அமைப்பைப் பற்றி பேசுபவரை "வடிகட்டின முட்டாள்" என்றும் கூறலாம். இன்டைரக்டாக "ஆணாதிக்கப் பேய்" என்றும் கூறலாம். பிடித்ததை நீங்களே தெரிவு செய்யுங்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு.. பெண்களை இழிவுபடுத்துவதற்கு. பெற்றவளை மதித்திருந்தால் அல்லவா தெரிந்திருக்கும் பெண்களின் மதிப்பைப் பற்றி. உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் எல்லா வளமும் இருக்கும் இந்தியா முன்னேறாமல் இருக்கு.
//
முகிலினி,
அதிரடியாய் எழுதி யார் மனதையும் புண்படுத்துவதை விட பொறுமையாக விவாதித்தால் உருப்படியான கருத்துகளைப் பகிரலாம். இது போன்ற சொற்கள் வீண் தனிமனித தாக்குதலில் போய்க்கொண்டுவிடும். மேலும் நீங்கள் கார்க்கி சொல்லவரும் செய்திகளை முன்முடிவோடு எதிர்ப்பது என்றே முடிவு செய்துவிட்டதைப்போல தெரிகிறது. முழுமையாக அவரது கருத்துகளை ஏற்காவிட்டாலும், அவர் சொல்லாமல் விட்ட விஷயங்களை சிந்திக்கலாம். அதைவிடுத்து வார்த்தைப்போர் நிகழ்த்துவட்தில் பிரயோஜனம் இல்லை.
விஷயத்ததோடு எழுதும் தமி்ழ் சினிமாவின் வரலாற்று பதிவே நீவிர் வாழ்க...
Check this out. A Sample: http://eelavarkural.blogspot.com/2008/08/blog-post_7457.html
//ஓரளவுக்கு பெண் ஓட்டக்காரர்களையும், பாரம் தூக்கிகளையும் தந்த நாடு அல்லவா இந்தியா. அங்கு இருந்து கொண்டு பெண்களின் உடல் அமைப்பைப் பற்றி பேசுபவரை "வடிகட்டின முட்டாள்" என்றும் கூறலாம். இன்டைரக்டாக "ஆணாதிக்கப் பேய்" என்றும் கூறலாம். பிடித்ததை நீங்களே தெரிவு செய்யுங்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு.. பெண்களை இழிவுபடுத்துவதற்கு.//
யாருக்கு நெஞ்சழுத்தம் என்பது உங்கள் பதிலில் தெரிகிறது. விதிவிலக்குகளுக்கும், பொதுவான குணத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் மேலும் பேசுவதற்கு பதில் ஆதித்யா சேனலைப் பார்த்து சிரிக்கலாம். நான் பழகும் பெண்களிடம் எந்த அளவிற்கு அவர்களை மதிக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியும்.
//பெற்றவளை மதித்திருந்தால் அல்லவா தெரிந்திருக்கும் பெண்களின் மதிப்பைப் பற்றி.//
பாவம் உங்களுக்கு பிறக்க போகும் மகன்..நான் தான் உனக்கு எல்லா செய்யனுமா? போய் உங்கப்பா கிட்ட கேளு. கொடுக்க முடியுதான்னு பார்ப்போம் என்று சொல்லாமல் இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
முரளி மன்னிச்சுக்கோங்க. தவறா இருந்தா டெலீட் செஞ்சிடுங்க.
பெண்கள் விதிவிலக்கு என்றால், ஆண்கள் என்னவாம்... எல்லோருமா சாதிக்கிறார்கள். ஏதோ எல்லா ஆண்களும் சாதிப்பது மாதிரியும் பெண்கள் விதி விலக்கு மாதிரியும் அல்லவா பேசுகிறீர்கள். ஏன் கார்க்கி நல்ல உடல் வளம் உள்ள ஆணான நீங்கள் என்னத்தை சாதித்தீர்கள்.
உங்கள் வார்த்தைகளைப் பார்க்கும் போது, நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
எந்த விதத்திலும் பெண்களை மனிதனாக நடாத்தாத ஆணை திருமணம் செய்ய வேண்டிய விதி எனக்கில்லை. வேணுமானால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீஙகள் உயிருடன் இருந்தால் என் மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.
Btw, அவனுக்காக கடவுளை வேண்டுவதா? கடவுள் என்று ஒருவன் இருந்தால் தானே அவனிடம் வேண்டுவதற்கு. அப்படி யாரும் இருந்தால் அவருக்குத் தான் எங்கள் உதவி தேவையே தவிர எங்களுக்கில்லை.
இதை திமிருடன் சொல்லுவதாக நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு கவலையில்லை. கடவுள் இருந்தால் எனது தேசத்தில் 2 லட்சம் பேர் அநியாயமாகச் செத்தா இருப்பார்கள்.
கடவுளாம் கடவுள்.. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மடக்கூட்டம் நாங்களில்லை. தயவு செய்து கடவுளைப்பற்றி மட்டும் பேசாதீர்கள். மேல் படிப்புக்கு வந்த இடத்தில் சொந்தத்தை இழந்து நாடு அற்று நடுத்தெருவில் நிற்பவர்கள் கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவனை சுட்டெரிப்பார்களே தவிர வேண்ட மாட்டார்கள்.
மேலும், தனியாக பிள்ளைகளை வளர்க்கும் திறன் எங்கள் இனப் பெண்களிடம் நிறையவே இருக்கிறது. கவலைப்படாதீர்கள்... அந்த நேரத்துக்கு போய் வேலையைப் பாருங்கள்.
கிருஷ்ணன் சார்,
நான் பிறந்த பூமியில், ஆணும் பெண்ணும் சரிக்கு சமனாக எல்லா வேலைகளையும் செய்தார்கள். பிள்ளை வளர்ப்பில் தந்தை பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வதில்லை. சில வேலைகளில் தந்தையே தாயுமாவார். இத்தனைக்கும் உலகத்தோடு எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்த தேசம் அது. டீவி இருக்கவில்லை, தொலை பேசி இருக்கவில்லை இன்ரநெட் இருக்கவில்லை. ஏன் கரண்டே இருக்கவில்லை. அப்படிப் பட்ட இடத்தில் இருந்த எங்களையே மனிதனாக ஆண்கள் நடாத்திய போது, எல்லா மண்ணாங்கட்டியும் இருந்தும் பெண்களை மதிக்காது திமிருடன் கதைப்பவர்களைப் பார்க்க எரிச்சல் தான் வருகிறது. சாபப்பட்ட பூமியில் வாழ்ந்து தான் தொலைக்கவேண்டும்... எங்களுக்கென்று ஒரு தேசம் இருந்தால், இப்படிப்பட்ட பிறவிகளைச் சகித்துக்கொண்டு வாழத் தேவையும் இருந்திருக்காது...
என்னுடன் படிக்கும் மாணவிகளுக்கு ஒரு போய் பிரண்ட் கிடைத்தால் போது. அந்த ஆண்கள் நடாத்தும் ஆட்டுழியங்களைப் பார்க்கும் போது எரிச்சலின் உச்ச கட்டத்துக்கே போய்விடுகிறேன். அம்மா அப்பாவே எடுத்துக் கொடுத்த டிரஸ்சிலேயே அது தெரியுது இது தெரியுது என போட விடமாட்டார்கள். அந்தப் பெண்கள் தங்கள் பெண் நண்பர்களுடன் ஒரு தியட்டருக்கு கூடப் போக முடியாது. 3வது வீல் மாதிரி அவர்களும் ஒட்டிக் கொள்வார்கள். விரும்பியதைக் கூட அந்த பெண்கள் சாப்பிட முடியாது. குண்டாகி விடுவாய் என தடுப்பார்கள்.
இவ்வளவு நாளும் தனியே / பெண் நண்பிகளுடன் கடை தண்ணிக்குப் போய் வந்த பெண், போய் பிரண்ட் கிடைத்தால் அவனுடன் மட்டும் தான் வெளியே போகவேணும். இத்தனைக்கும் அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று உத்தரவாதம் தராத ஆண்கள்.
இப்படிப் பட்ட ஆண் நண்பன் தேவையா எனக் கேட்டால், என்ன செய்வது முகில் என்கிறார்கள். ஒரு நாள்.. ஒரு நாள் கூட அந்தப் பெண்கள் சந்தோசமாக இருந்ததில்லை. மொட்டையில் மயிர் பிடுங்குவது போல் ஏதாவது ஒரு பிரச்சனையை எடுத்து சண்டை போடுவார்கள்.
இதை எல்லாம் பார்க்கும் போது சீ ஏன்டா இந்த பாழாய்ப்போன நாட்டிற்குப் படிக்க வந்தோம். இதற்கு நாட்டிலேயே இருந்து மற்றவர்களுடன் நாமும் செத்து தொலைத்திருக்கலாமே என்று இருக்கும்.
உண்மையில் வெளி உலகத்தில் நடப்பவை அச்சமூட்டுபவையாகவே இருக்கின்றன. நான் பிறந்த மண்ணில் நடு சாமம் ஒரு பெண் உடல் நிறைய நகையைப் போட்டுக் கொண்டு போக முடிந்தது.
தந்தை வீட்டிற்கு வரும் நாட்களில் தாயிற்கு உதவுவதைத் தான் பார்த்திருக்கிறேன். இங்கு என்னடா என்றால் போய் பிரண்ட் சாப்பிடும் தட்டைக் கூட கேள் பிரண்ட் தான் கழுவவேண்டும். அந்த கேள் பிரண்ட் கிடைக்க முதல் நீ தானே கழுவினாய். பிறகு என்னத்திற்கு கேள் பிரண்ட் கழுவ வேண்டும் ..
யூனிவேசிட்டியில் நடக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமில்லை.
எனக்கிரு சந்தேகங்கள் என நானும் ஒரு ஆக்கம் எழுதினேன். என் கோவத்தை எல்லாம் கொட்டி எழுதினேன். நியாயமான கேள்விகளை கொட்டி எழுதினேன்.
இப்பவே பெண் வேலைக்குப் போகக்கூடாது என இந்த ஆண் நண்பர்கள் அலம்புகிறார்கள்.
எனது தந்தை, தம்பி மற்றும் மாமாமார், அண்ணாக்கள் எல்லோருமே பெண்களை மனிசியாக நடாத்துபவர்கள். ஆனால் இங்கு நடக்கும் கூத்தைப் பார்த்தால் எனக்கு ஆண்கள் மேலேயே வெருப்பேற்படுமோ என அஞ்சுகிறேன்.
எங்களை சரிக்கு சமமாக நடாத்தும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் மிகச் சிலரே... டெவலப் ஆன நாட்டிலேயே இவ்வளவு குறுகிய மனப்பான்மை உடைய ஆண்கள் இருக்கிறார்கள் என்றால், Developing country ஆன இந்தியாவில் கார்க்கி போன்றவர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லையே..
Being a girl is really superb thing.I am happy that i am a girl But i felt mukilini comments are equally bad as guys. When you try to say girls are better then it is what guys were doing for thousands of years. Both have distinct qualities. Comparing girl and a boy is foolish. karki is trying to say the same, but his words are making to understand it in different way.
இங்கே பெண்களுக்கு கிடைப்பவை சம உரிமை இல்லை. சலுகைகள் மட்டுமே. சலுகைகள் பெண்களை நிச்சயம் மேலெடுத்து செல்லாது என்று நான் நம்புகிறேன். நன் முன்னோர்கள் உருவாக்கி வைத்த சட்டங்களை உடைத்து பெண்கள் இன்று பெற்றிருக்கும் வெற்றிகளுக்கு நிச்சயம் இந்தக் கால ஆண்களின் பங்கு இருக்கிறது. அதை புரிந்துக் கொள்ளாமல் இந்தக் கால ஆண்களையும் சகட்டுமேனிக்கு இழித்து பேசுவது நியாயமா?
//உங்களின் கடைசிச்சொல்லான 'ச்சீ' என்பதை நூற்றாண்டுகளின் கோபமாக எடுத்துக்கொண்டு தவிர்த்துச்செல்கிறோம்.//
இந்த நாகரீகம் கூட உங்களுக்கு தெரியாமல் போனது ஏன் முகிலினி? கார்க்கி போன்ற ஒரு சிலரால் எல்லா ஆண்களையும் குறை சொல்கிறீர்கள் என்றால் உங்களைப் போன்ற சில பெண்களால் அவர்கள் எல்லோரையும் அடக்கி ஆள நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
//கார்க்கியின் பதில்களை பார்க்கையில் கோபமும், அவர் மீதான அனுதாபமும் ஏற்படுகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? அது எதனால் இப்போது இங்கே பரவலாக விவாதிக்கப்படுகின்றது? அதன் கூறுகள், என்று எதைப் பற்றியும் புரிதல் இல்லாமல் நான் சட்டை இல்லாமல் போவேன், பொண்ணால அதை செய்ய முடியுமா என்ற ரீதியில் எழுதி இருக்கிறார்//
அவர் அப்படி சொன்னது போல் தெரியவில்லை. இருவரும் அடிப்படையில் வெவ்வேறு ஜீவன்கள். அவர்கள் சமமென்று சொல்வது சரியல்ல என்பதே. அதிலும் பெண்கள் ஆண்களை விட சிறந்த பிறவிகள் என்று கூட சொல்லலாம்.ஆனால் சமமா என்பதே அவர் சொன்னது. மிக சாதரானமாக உங்க பின்னூட்டம் விவாத போக்கையே மாற்றிவிட்டதாக தோன்றுகிறது எனக்கு
//அங்கு இருந்து கொண்டு பெண்களின் உடல் அமைப்பைப் பற்றி பேசுபவரை "வடிகட்டின முட்டாள்" என்றும் கூறலாம். இன்டைரக்டாக "ஆணாதிக்கப் பேய்" என்றும் கூறலாம். பிடித்ததை நீங்களே தெரிவு செய்யுங்கள்//
இதற்கு பிறகும் இவருக்கு பதில் அளித்து எனக்கொரு பட்டத்தை நான் வாங்க வேண்டுமா என யோசிக்கிறேன்
//பெற்றவளை மதித்திருந்தால் அல்லவா தெரிந்திருக்கும் பெண்களின் மதிப்பைப் பற்றி.//
நீங்கள் யாரையுமே மதிப்பதில்லை என்பது தெளிவாக புரிகிறது. நமக்கு இருக்கும் குறை எல்லோருக்கும் இருக்கும் என்று நினைப்பதை பார்க்கும் போது வசூல்ராஜ படத்தில் வரும் ஹெல்த் மினிஸ்டர் ஜோக் நினைவுக்கு வருகிறது
முரளி பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் இப்போ போயிட்டிருக்கிற விவாதத்தை முடிஞ்சா மட்டுறுத்தல் செய்திடுங்களேன். :)
Post a Comment