எண்ணிக்கையளவில் நடுத்தர குடும்பத்து பெண்களின் பிரச்சினைகளை தமிழ்சினிமாவில் அதிகம் பேசியவர் பாலசந்தர் தான்.
நடுத்தர வர்க்க பொருளாதார பிரச்சினைகள் (நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ),
சமூகப் பிரச்சினைகள் (வறுமையின் நிறம் சிகப்பு, தப்புத் தாளங்கள்,தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை
அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, வானமே எல்லை)
காதல் (மரோ சரித்ரா, சொலத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும்,புன்னகை மன்னன்,அழகன், டூயட்..),
நகைச்சுவை (பாமா விஜயம்,அனுபவி ராஜா அனுபவி, தில்லு முல்லு,பொய்க்கால் குதிரை),
ரொமாண்டிக் வகையில் நான் அவன் இல்லை, மன்மத லீலை, மனித உறவுகளின் தீவிர குழப்பத்தில் அபூரவ ராகங்கள், மூன்று முடிச்சு என அவர் கை வைக்காத துறைகள் இல்லை.
நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போவது அவர் பெண்ணியத்தை கையாண்ட விதம் மட்டுமே. அதற்கு நாம் எடுத்துக் கொள்ளப்போவது அவர் பெண்ணியத்தை அடிப்படையாக வைத்து எடுத்த படங்களை மட்டுமே.
1. இரு கோடுகள்
2.தாமரை நெஞ்சம்
3.அரங்கேற்றம்
4.அவள் ஒரு தொடர்கதை
5. அவர்கள்
6. நிழல் நிஜமாகிறது
7. 47 நாட்கள்
8.கல்யாண அகதிகள்
9. அக்னி சாட்சி
10. சிந்து பைரவி
11. மனதில் உறுதி வேண்டும்
12. புதுப் புது அர்த்தங்கள்
13. ஒரு வீடு இரு வாசல்
14. கல்கி
15. பார்த்தாலே பரவசம்.
இரு கோடுகள் படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி காதலிக்கிறார்கள். காசியில்
திருமணம் செய்கிறார்கள்.ஜெமினி வீட்டார் நிர்ப்பந்தம் காரணமாக அவர் சென்னை வருகிறார். அங்கே ஜெயந்தியை திருமணம் செய்கிறார். கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். சௌகார் ஐ ஏ எஸ் தேர்வு பெற்று அந்த அலுவலகத்திற்கே கலெக்டராக வருகிறார். வந்து ஜெமினியுடன் வாழ வேண்டுமென பிரயத்தனப் படுகிறார், புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் எனக்கே என்று கொலுவில் பாடு மளவுக்கு. இது அப்பட்டமான ஆணாதிக்கப் பிரதி. கலெக்டரே ஆனாலும் அவள் தாலிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது மாதிரியான செய்தியே பெண்களைச் சென்றடைந்தது.
சிந்து பைரவியில் பாடகர் சிவகுமாருக்கு தன் மனைவி சுலக்ஷனாவுக்கு இசை பற்றி தெரியவில்லை என வருத்தம். இசையைப் பற்றி பகிர சுஹாசினி வருகிறார்.படுக்கையையும் பகிர்கிறார். சுலக்ஷனாவுக்கு இது பற்றி தெரிய வந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்ய வைக்க முனைகிறார். சுஹாசினியோ தனக்குப் பிறந்த குழந்தையை பரிசாக கொடுத்து விட்டுப் போகிறார். இதில் ஒரு கிளைக்கதை, சுஹாசினியின் ஒரிஜினல் பெற்றோர், சிவகுமாருக்கு நண்பர்கள். திருமணத்துக்கு முன் உறவின் காரணமாகப் பிறந்தவர்
சுஹாசினி. அதனால் அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுகிறார் சுஹாசினியின் தாய். உண்மை தெரிந்தும் குடும்ப அமைதி கெடும் என குடும்பத்தில் சேர்க்க மறுக்கிறார் சுஹாசினியின் தாய்.
இந்தப் படம் சொல்ல வருவது என்ன? ஒரு ஆண் தனக்கு தேவையென்றால் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்ளலாம். அதை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.சரி பெண் இப்படிச் செய்யலாமா? தன் ரசனைக்கு ஏற்ப?
கணவருக்கே குழந்தையைப் பெற்றிருந்தாலும் குடும்ப அமைதி கெடாமல் இருக்க அவளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இந்த செய்திகள் தான் மக்களைச் சென்றடைந்தன இந்தப் படத்தில்.
புதுப் புது அர்த்தங்கள்
பாடகன் (ரகுமான்)மீது ஆசைப் படுகிறாள் பணக்காரப் பெண்(கீதா). ஓவர் பொசஷிவ் காரணமாக சந்தேகப் படுகிறாள். அவன் ஓடி விடுகிறான். அங்கே கணவனால் பாதிக்கப் பட்ட பெண்ணுடன் (சித்தாரா)காதல். இங்கே பணக்காரப் பெண்ணுக்கு இன்னொரு கிரிக்கெட் வீரனுடன் மணம் முடிக்க ஏற்பாடு ஆகிறது. கிரிக்கெட் வீரனுக்கும், கீதா வீட்டு பணிப் பெண்ணுக்கும் காதல். திருமண செய்தி கேட்டு அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கீதாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது. கணவனை கொடுமைப் படுத்தியது தவறு என மனச் சிதைவு கொள்கிறாள். அங்கே சித்தாராவின் கணவன் விபத்தில் சிக்கி கலை இழக்கிறான். இயக்குநர் படத்தில் வரும் மற்ற பாத்திரங்களை பேச விட்டு ரகுமான் - சித்தாரா ஜோடிக்கான முடிவவைச் சொல்கிறார். கல்யாணம் புனிதமானது. அவங்க அவங்க வீட்டுக்கு சமத்தா திரும்பிப் போங்க என்று.
சரி. இதில் ரகுமான் கேசைக் கூட விட்டு விடலாம். தன்னை விபச்சார விடுதி அளவுக்கு தள்ளிய கணவனுக்கு ஏன் சித்தாரா சேவை செய்யப் போக வேண்டும்?
கல்கி
ஒரு சாடிஸ்ட் கணவனால் பாதிக்கப் படும் இரு மனைவிகள். அவனைத் திருத்த நினைக்கிறாள் பெண்ணிய புதுமைப் பெண் கல்கி.அவளை ஒருவன் காதலித்துக் கொண்டு இருக்கிறான். ஆனாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவனை பழைவாங்க வேண்டுமே? அவனுக்கு மூன்றாவது மனைவியாகி, கர்ப்பமாக இருக்கும் போது பல டார்ச்சர் செய்து அவனைப் பழிவாங்குகிறாள். எந்த லாஜிக்காலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. பெண்ணியம் என்றால் என்னவென்று ஒரு பெண்ணுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை.அரைகுறையாய் தெரிந்து வைத்திருப்பதுதான் அதிக ஆபத்து. என்ற கருத்தை மட்டும் நான் இதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
பார்த்தாலே பரவசம்
தன் கணவனுக்கு (மாதவன்) இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்து குழந்தை இருக்கிறது என்று தெரிய வந்தவுடன் பிரிகிறாள் மனைவி (சிம்ரன்). ஒரு நடனக் கலைஞனை சந்திக்கிறாள் (ராகவா லாரன்ஸ்)தன் கணவன் மற்றொரு பெண்ணை (சினேகா) திருமணம் செய்யப் போகிறான் என கேள்விப்பட்டு லாரன்ஸை திருமணம் செய்ய நினைக்கிறாள். ஆனால் பல திருப்பங்கள் ஏற்பட்டு சிம்ரன்,மாதவனுடனே இணைகிறாள்.
இந்தப் படத்தை பார்த்து யாரும் டென்சன் ஆகாமல் இருந்தால் அவருக்கு மிஸ்டர் கூல் பட்டத்தைக் கொடுக்கலாம். மாதவனுடன் உறவு கொண்ட பெண் (ராதிகா சௌத்ரி) எதற்கு மெனக்கெட்டு தன் மகனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அதை சொல்லுகிறாள்? பல வருடம் கழித்து? சரி கணவனைப் பழிவாங்க இன்னொரு திருமணம் தான் மாற்றா?.
இதெல்லாம் பரவாயில்லை. லாரன்ஸின் குடும்பத்தை கறுப்பு குடும்பம் என்று சித்தரித்திருப்பார்கள்.எல்லோருக்கும் கறுப்பு மை தடவி. வடிவுக்கரசிக்கு கறுப்பு மை தடவி, அவர் குடிப்பது போல் காட்டி,மற்ற ஜாதியினர் இப்படித்தான் என்பது போல் பாலசந்தர் தன் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருப்பார். யாருமே இந்த வக்கிரத்தை கண்டிக்கவில்லை.
47 நாட்கள், ஒரு வீடு இரு வாசல் ஆகியவை ஓகே.
அரங்கேற்றம்,அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும் மூன்றுமே குடும்பத்தில் உள்ள தம்பி,தங்கைகளுக்காக அக்கா பாடுபடுவது. மூன்றிலுமே அவர்கள் தங்கள் வாழ்க்கையை,காதலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாத்திரங்கள். (அரங்கேற்றத்தில் பாலியல் தொழிலாளி). இந்தப் படங்களையும் அவர்கள், நிழல் நிஜமாகிறது போன்றவற்றைப் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
22 comments:
me the first
மணிரத்னத்தின் பெண்ணியம் குறித்தும் கூறுங்கள்
தளபதி - நான்கு பெண் பாத்திரங்கள் உள்ளனவே !!
ரோஜா
கன்னத்தில் முத்தமிட்டால் - சிம்ரன், நந்திதா தாஸ்
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி டாக்டர். வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.
அருமை சார் ..
ஆட்டத்தில இறங்கிட்டீயளோ..?:)
என்னாச்சு.. ரூம்மேட்??
ஒரு முறை ஆனந்த விகடனில் நானே கேள்வி நானே பதில் பகுதியில் படித்தது.
" இந்த இசை கலைஞர்கள் , மேதாவிகள் எல்லாம் தங்கள் மனைவியை விட இண்டேலேக்சுவல் ஆன பெண்களை விரும்புவது ஏன்?
பதில் : பிரபஞ்சனின் ( சரியாக நினைவில்லை எனக்கு ) ஒரு கதையில் நாயகன் ஒரு எழுத்தாளன் . அவனுக்கு மனைவியை தவிர ஒத்த ரசனையுடைய ஒரு பெண்ணுடன் தொடர்புண்டு , உடல் முறை உட்பட. ஒரு நாள் அந்த பெண் திடீரென்று வேறொருவனுடன் சென்றுவிட , அவளை பற்றி அவதூறாக அவன் மனைவியடம் பேசுகிறான். எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , அவ ஒரு வேசி என்று வசனம் பேசுகிறான் , எழுதுகிறான்.
அவன் மனைவி கேட்டது ஒரே ஒரு கேள்வி தான் , நீங்க கூட உன்னமாதிரி தோச சுட ஆளே இல்ல , எப்படி காம்பசில் வட்டம் போட்ட மாதிரி சுடர என்று கேட்பீர்கள் , அதுக்காக நான் என்ன சமையல் காரன் கூடையா ஓடி போயிட்டேன் ?
அடிச்சு ஆடுங்க தல.
நன்றி ஸ்ரீகிருஷ்ணா
நன்றி கேபிள்ஜி. ரூம்மேட் கதை கூகுள் ரீடரில் இருப்பதாகச் சொன்னார்கள். நண்பர்களிடம் கேட்டிருக்கேன். அவர்கள் அனுப்பியஉடன் பதிவில் ஏற்றிவிடுகிறேன்.
பகிர்தலுக்கு நன்றி பிரகாஷ்
நன்றி ராஜு
நல்ல அலசல் பலசந்தர் மீது நிறைய பேருக்கு இதே கருத்து உண்டு.
வருகைக்கு நன்றி அக்பர்
முரளிகண்ணன் உங்களை நான் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .
வருக கருத்துக்களை தருக
தொடருங்க தல
rendu paartum padichen anna... nalla irundhudu... :) :)
nalla alasalgal.. naan aana neenga kurippitta padangal ellam paathathe illa... :(
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி தலைவரே
நன்றி கனகு
முரளி, சிந்து பைரவியின் கிளைக்கதை பற்றிய என் டென்ஷனைக் கொட்டிடறேன்.
நடத்தை கெட்டவளின் மகள் நடத்தை கெட்டவள். என்ன வெங்காயம்! சே!
Anyway, "படம் சொல்ல வருவது என்ன?" என்பதை விட பாத்திரங்களின் உணர்வுகளை படம் எவ்வளவு சிறப்பாக சித்தரிக்கிறது என்பது தான் எனக்கு முக்கியம். பார்ப்பவர்களை ஆழமாகத் தொட்டு விட்டால் அதுவே போதும் என்று நினைக்கிறேன். எனக்கும் உங்களைப் (பலரைப்) போல ஏமாற்றம் தான் அதிகம்.
-விகடகவி
பெண்ணியம் என்று பார்த்தால் சிந்துபைரவி, கல்கி, பார்த்தாலே பரவசம்.. மூன்றுமே குப்பைகள்.
சிந்துபைரவியை எடுத்துக்கொண்டால்... இசையறிவு இல்லையென்று சிவகுமார் பாத்திரம் செய்ததை.. சமையலறிவு இல்லையென்று சுலக்ஷணா பாத்திரம் செய்தால் சரியாகுமா? என்ன... சுஹாசினி பாத்திரம் செய்த ஒரே சரியான வேலை... தன்னுடைய பிள்ளையை சுலக்ஷணாவிடம் விட்டுச் செல்வதுதான். இல்லையென்றால் அதுவும் சுஹாசினி அல்லது சுஹாசனன் ஆகியிருக்கும்.
கல்கி பேசத்தேவையில்லாத குப்பை. பார்த்தாலே பரவசம் கிடையாது. பார்த்தாலே பிறர் சவம்.
ஆனால் பாலச்சந்தரின் வேறு சில படங்களில் பெண்ணியம் குறித்து நல்லவவகளும் உண்டு. உங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
நன்றி விகடகவி
நன்றி ஜிரா
நன்றி விகடகவி
நன்றி ஜிரா
நல்ல அலசல் முரளி கண்ணன். அடுத்த பகுதிகள் என்ன ஆச்சு.
(பின்னூட்டங்கள் திசை மாறுதுன்னு நினைச்சா அவைகளை அடுத்த பகுதி போடும்வரை மட்டுறுத்திவையுங்க. அதுக்காக இந்த நல்ல அலசலை அப்படியே விட்டுடாதீங்க)
நல்ல ஆய்வு.. தொடரட்டும்...
Post a Comment