November 25, 2009

3500

குணா கமல் மன்ற
குருதிக்கொடையின் போதுதான்
தெரிந்தது அபூர்வ பிரிவென்று

அன்று நிமிர்ந்த நெஞ்சு
பலமுறை நிமிர்ந்திருக்கிறது

ராஜகுமாரனைப் போலத் தான்
நுழைவேன் ஒவ்வொருமுறையும்
இன்று நடைப்பிணமாய்

மூன்று மாதம் முன்
நின்ற சம்பளம்
தீரப்போகும் லாக்டோஜன்

35 comments:

kanagu said...

enna anna.. onnume puriyala... :(

முரளிகண்ணன் said...

ஆ புரியலையா?

ஜெட்லி... said...

அண்ணே..எனக்கு புரிஞ்சத சொல்றேன்...

அதாவது கமல் மன்ற ரசிகர் நல்ல செலவு செய்றார்... ஆனா வேலை போன பிறகு...

கரெக்ட் ஆ?? ஒரு வேளை நான் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்குங்க அண்ணே...

முரளிகண்ணன் said...

ஜெட்லி வருகைக்கு நன்றி.

ஒவ்வொருவருக்கு ஒரு புரிதல். இதில் தப்பென்ன? சரியென்ன?

கணேஷ் said...

வித்தியாசமான ப்ளட் க்ரூப் என்பதால் அனைவருக்கு நெஞ்சை நிமிர்த்தி ரத்த தானம் செய்து வந்த நான், இப்போது ஒரு நடை பிணம் போல வாழ்கிறேன்.

காரணம் ரெசசன்? வேலையிழப்பு? வீட்டில் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத அபாய சூழல் வரப் போகிறது.

ஆனால் டைட்டில் 3500???? ஙே :(

மு.சீனிவாசன் said...

தப்பு/சரி இல்லைன்னாலும், நீங்க என்ன நினைச்சு எழுதி இருக்கீங்களோ அதே அர்த்தத்தைத் தான் நாங்களும் புரிந்திருக்கிறோம்னு தெரிந்தால் தானே உங்களுக்கும் சந்தோசம்?

என் புரிதல் கீழே:

இரு வேறு சூழ்நிலைகளில் இரத்த தானம் செய்கிறார். அதுவும் அவருடைய குரூப் இரத்தம் ரொம்ப அபூர்வமான குரூப். இரண்டு விதமான மனநிலைகள்.

முதல் சூழ்நிலை: கமல் ரசிகரா, வேலையில் இருக்கும் போது, திருமணத்திற்கு முன்பு.

இரண்டாவது சூழ்நிலை: திருமணம் மற்றும் குழந்தைக்குப் பின், இப்போது வேலையில்லை, குழந்தையின் பசிக்காக இரத்ததானம்.

anujanya said...

ரொம்ப நல்லா வந்திருக்கு முரளி. ஜ்யோவ்/சிவா சொன்ன உடனே நெட் ப்ராக்டிஸ் செய்யத் துவங்கியாச்சா? வாழ்த்துகள்.

அனுஜன்யா

thamizhparavai said...

நல்ல முயற்சி முரளி சார்...
(கவிதைப் போட்டிக்கு ஒத்திகையா...?!)
அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கணேஷ்.

(3500 - கிடைத்த தொகை)


நன்றி மு சீனிவாசன். (அதே அதே)

முரளிகண்ணன் said...

நன்றி அனுஜன்யா

நன்றி தமிழ்பறவை

ஜெட்லி... said...

இப்ப தெளிவா புரியுது....

வினோத் கெளதம் said...

தல புரிஞ்ச மாதிரியும் இருக்கு..

Romeoboy said...

ஏதோ கொஞ்சம் புரிது.

Starjan (ஸ்டார்ஜன்) said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்று கொடுத்ததில் தெரிந்தார் கமல்

இன்று கொடுத்ததில் தெரிந்தான் என் மகன்

Rajalakshmi Pakkirisamy said...

ஒவ்வொருவருக்கு ஒரு புரிதல்

unmai thaan. Good one

சிநேகிதன் அக்பர் said...

கவிதை படிச்சா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது. :)

கான்சப்ட் நல்ல இருக்கு. கொஞ்சம் எளிமையா இருந்தா இன்னும் நல்லாருக்கும்.

வாழ்த்துக்கள் கவிஞரே.

Nat Sriram said...

புரியுதுங்களே...இதுவரைக்கும் ஒரு சேவை மாதிரி கம்பீரமா ரத்த தானம் பண்ணவரு இப்போ ரத்தத்தை குழந்தை லக்டோஜனுக்காக விக்கும் போது நடைப்பிணமா பீல் பண்றார்...அவ்ளோ தானே மேட்டர்..

கவிதை crisp-ஆ இருக்கனும்கறதுக்காக கொஞ்சம் ஓவரா வார்த்தைகளை சுருக்கிடீங்களோ... அதான் சிலர்க்கு புரியலயோனு நெனைக்கறேன்.

புருனோ Bruno said...

கவிதை நன்றாக இருக்கிறது. சில பொருட்குற்றங்கள் உள்ளன

(வடை போச்சே !!!)

--

ஒரு யூனிட் குருதி 3500 எல்லாம் கிடையாது :) :) :)

குழந்தைகளுக்கு லாக்டோஜன் என்பது தேவையே இல்லாத பொருள்.

தாய்ப்பால் மட்டுமே போதும்.

6 மாதங்கள் வரை தாய்ப்பாலை தவிர ஒரு சொட்டு தண்ணீர் கூட குழந்தைக்கு தேவையில்லை

ம்ம்ம்ம்ம்ம் ஒரு இடுகை எழுத வேண்டும் போலிருக்கிறதே :) :)

கோபிநாத் said...

\\(3500 - கிடைத்த தொகை)\\

இப்போ புரியுதுண்ணா ;)

Bee'morgan said...

நல்லா வந்திருக்கு :) உங்ககிட்டருந்து இப்படி ஒரு படைப்பு புதுமை .. மென் மேலும் தொடர வாழ்த்துகள் :)

butterfly Surya said...

நல்லாயிருக்கு முரளி.


அடிக்கடி சைதை (நம்ம) தலைமைச்செயலகம் போன எபெக்டா..??

மணிஜி said...

/நல்லாயிருக்கு முரளி.


அடிக்கடி சைதை (நம்ம) தலைமைச்செயலகம் போன எபெக்டா..?//

அடப்பாவிகளா? அது நானில்லை..

முரளி...நடத்துங்க..

Cable சங்கர் said...

கமல ரசிகனாய் ரேர் ரத்த தானம் கொடுத்த போது நெஞ்சு நிமிர்த்தி இருந்தவர் இன்று தன் ரத்தமான பிள்ளைக்கு லாக்டோஜன் இல்லாமல் கஷ்டபடுகிறது என்பதை சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கி றேன் சரியா முரளீ

Athisha said...

//
ராஜகுமாரனைப் போலத் தான்
நுழைவேன் ஒவ்வொருமுறையும்
இன்று நடைப்பிணமாய் //

வாவ்!!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!

Beski said...

என்ன இது? உடனே புரிந்துவிட்டது?

அடிக்கடி சைதை தலைமைச்செயலகம் போன எபெக்டா இருக்கலாம்...

Beski said...

// தண்டோரா ...... said...
அடப்பாவிகளா? அது நானில்லை..//

ஏதோ ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது...

யுவகிருஷ்ணா said...

அருமை முரளி.

கவிதையின் பல்வேறு பரிமாணங்களையும் அநாயசமாக தொட்டு சென்றிருக்கிறீர்கள்.

வடிவம் நேர்த்தி!

Mahesh said...

அனுஜன்யா, தண்டோரா கூடவெல்லாம் ரொம்ப சகவாசம் வெச்ச்க்காதீங்கன்னு சொன்னா கேக்கணும்... இப்ப பாருங்க சூப்பரா கவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள் !!

என்ன ஒண்ணு... எண்டர் கீ ஒரு டஜன் ஸ்பேர் வாங்கி வெச்சுக்கோங்க.

Thamira said...

கவிதை புரியவுமில்லை. நல்லாவுமில்லை.

இந்த அழகில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல்னு பெரிய கவிஞர் மாதிரி டயலாக் வேறயா.? :-((

எனக்கென்னவோ லக்கி கிண்டல் பண்ணியிருக்கார்னுதான் நினைக்கிறேன்.

புருனோ Bruno said...

இல்லை ஆதி சார்

கவிதை நன்றாக இருக்கிறது
\

நர்சிம் said...

எனக்குப் பிடித்திருந்தது முரளி.

Beski said...

”தேவை 1500” ன்னு தலைப்பை மாத்தி போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்...

அறிவிலி said...

கவிதை அருமை. 3500??? ரேர் க்ரூப்பாக இருக்கலாம்.

Unknown said...

கவிதையை ரசிக்கணும், இப்படியா பின்னூட்டத்திலே பிரேதப் பரிசோதனை செய்யிறது??

கவிதையின் சொற்சிக்கனம், சொல்ல வரும் விஷயங்கள் - சூப்பர் சார்