November 22, 2009

மாற்றம்

எரிச்சலாக வந்தது. கணேஷிடம் புலம்பினேன்.

"நேத்து நான் ஏல சீட் எடுக்கணும், யாராச்சும் அல்டெர்னேட் பாருங்கடான்னு கெஞ்சினேன். ஒருத்தனும் தலையாட்டலை. இன்னைக்கு சிவா பாண்டிச்சேரிக்கு தண்ணியடிக்க செட்டு சேர்த்துட்டு போறான். அவனுக்கு அல்டெர்னேட் ஈசியா கிடைக்குது"

என்னடா உலகம் இது? என்று.

கணேஷ் பதிலளித்தான். "இது நம்ம நாட்டு சைகாலஜிடா. தியேட்டர்ல பார்த்திருப்பியே பில்லியனர் மாதிரி ஒருத்தன் நின்னுக்கிட்டு இருப்பான். அவன்கிட்ட பக்கிரி மாதிரி இருக்கிற ஒருத்தன் போய் பீடிக்கு நெருப்புக் கேட்பான். இவனும் அவன் அடிச்சுக்கிட்டு இருக்குற பாரின் சிகரெட்டையே பத்தவைக்க கொடுப்பான்".

அவன் என்ன சோஷலிச சிற்பியா? இல்லை ஒருத்தன் கெட்டுப் போறான்னா அதுக்கு ஹெல்ப் பண்ணுறதில்ல ஒரு அல்ப சந்தோஷம். அதுதான்.

என் மனம் திருப்தியடையவில்லை. இந்த சிவா இருக்கிறானே, அவனும் நானும் ஒண்ணாத்தான் சேர்ந்தோம், இந்த கம்பெனியில. சின்சியரா வேலை பார்த்த என்னை விட்டுட்டு அவனுக்கு பிரமோஷன் கொடுத்ததால அவன் மீது எனக்கு கொஞ்சம் கடுப்பு.

"தேர் இஸ் மோர் பிளட் இன் மை ஆல்கஹால் சிஸ்டம் " என்று அடிக்கடி உதார் விட்டுக் கொள்வான். ஒருமுறை மானேஜர் வீட்டு விசேஷத்துக்கு போயிருந்தபோது அங்கிருந்த தாஜ்மஹால் போர்ட்ராயிட்டைப் பார்த்து அவன் அடித்த கமெண்ட் " தெ கிரேட்டஸ்ட் எரெக்சன் ஆப் எ மேன் பார் எ வுமன்"

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவன் வைத்திருக்கும் மூன்று கேட்டகிரி ஸ்கேலில் தான் அளப்பான். கட்டில்,கூபே மற்றும் காட்டேஜ் தான் அது.

ஒருமுறை கணேஷ் தான் அதைப் பற்ரி விசாரித்தான். அதென்னடா கட்டில்,கூபெ,காட்டேஜ் என்று?

சிவா பொறுமையாக விளக்கினான்.

"இப்ப ஒரு பிளாட்பாரக் கடையில பஜ்ஜி போட்டுக்கிட்டு இருக்கான். பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு என்ன பண்ணுவ?

அதற்கு கணேஷ் " ரெண்டு வாங்கி சாப்பிட்டு கையை கழுவிட்டு போயிக்கிட்டே இருப்பேன்"

அதுமாதிரிதான் கிடைக்கிற கேப்பில ரூமிலயோ,லாட்ஜிலயோ முடிக்குற அளவுக்கு அழகா இருக்குற பொண்ணுங்க கட்டில் கேட்டகிரி.

சரி. கூபே?

மதுரைல இருந்து ட்ரைன்ல வந்துக்கிட்டு இருக்க, மணப்பாறை முறுக்கு விக்குது. செம டேஸ்டா இருக்கு. என்ன பண்ணுவ?

நாலு பாக்கெட் வாங்கி மெட்ராஸ் வர்ற வரைக்கும் சாப்பிட்டுக்கிட்டே வருவேன்.

ஆமா. அதுமாதிரி ஒரு நாள் பூராம் ரசிச்சுக்கிட்டே இருக்குற மாதிரி அழகான பொண்ணுங்க கூபே கேட்டகிரி. அதுங்களையெல்லாம் ட்ரெயின்ல கூபே புக் பண்ணி கூட்டிட்டுப் போயி சந்தோஷமா இருக்கணும்.


போன மாசம் தீபாவளிக்குப் போயிட்டு வந்தியே, என்ன கொண்டு வந்த?

வீட்டில செஞ்ச அதிரசமும் முறுக்கும்.

என்ன பண்ணின?

பத்து நாள் வச்சு சாப்பிட்டேன்.

ம்ம். அதுமாதிரி பத்துநாள் பக்கத்திலேயே இருந்தாலும் சலிக்காத பிகர்னா மகாபலிபுரம்,கோவான்னு காட்டேஜ் புக் பண்ணிப் போயி சந்தோஷமா இருக்கணும்.

இதைக்கேட்டு கிறு கிறுத்து வந்தவனிடம் நான் கேட்டேன்

"சரிடா கல்யாணத்தப் பத்தி என்ன சொல்லுறான்?"

போடா அதப்பத்திக் கேட்டா இட்லி,கல்தோசைன்னு ஏதாச்சும் எக்சாம்பிள் கொடுத்து என்னைக் காய வைப்பான். வேற வேலை இல்லை என்று அலுத்துக் கொண்டான்.

நான் அதைக்கேட்க காரணம் இருந்தது. அப்போது எனக்கும் அவனுக்கும் அவரவர் வீடுகளில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிகரெட்,குடி மற்றும் பெண் சகவாசம் இல்லாததால் அவனை விட எனக்கு விரைவில் பெண் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். பிரமோஷனில் அவன் என்னை முந்தியதால் இதிலாவது நாம் முந்த வேண்டும் என்ற அல்ப வெறி.


அவனில்லாத நேரங்களில் நண்பர்கள் பேசிக்கொள்வார்கள். டேய் அவனுக்கெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு சிம் கார்டு மாத்துற பொண்ணுதாண்டா கிடைப்பா என்று.

எனக்கு அவர்கள் மேல் அளவு கடந்த எரிச்சல் வந்தது. அவன் கேரக்டர் சரியில்லையின்னா ஏண்டா வரப்போற பொண்ணப் பத்தி கேவலமா பேசுறீங்க என்று சண்டை கூட போட்டேன்

நினைத்ததற்க்கு மாறாக அவன் என்னை இதிலும் முந்தி விட்டான். எல்லோரும் பெண் போட்டோ கேட்ட போது அப்புறம் தருகிறேன் என மழுப்பி விட்டான்.

அட்டு பிகரா இருக்கும் போல, அதாண்டா காட்ட மாட்டேங்குறான் என்ற வதந்தியும் அதனால் பரவியது.

சில நாள் கழித்து பெண்ணின் பெற்றோர் போட்டா மட்டும் காட்டினான். குரங்க பாத்தா பத்தாதா? குட்டிய வேற பார்க்கணுமா என சலித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருந்தார்கள்.திருமணத்திற்க்கு போணோம். மணப்பெண் நாங்கள் போட்ட கணக்கை யெல்லாம் தவிடு பொடியாக்கும் அபார அழகுடன் இருந்தாள்.

முடிந்து திரும்புகையில் பாருக்குள் நுழைந்தது குழு, "நீதான் தயிர் சாதமாச்சேடா இங்க என்ன பண்ணப் போற? என்று கலாய்த்தார்கள்.ஒரு நிமிடம் யோசித்தேன்.

எனக்கும் ஒரு கிளாஸ் வைங்கடா என்ற குரல் என்னையும் மீறி வந்தது.

37 comments:

அது ஒரு கனாக் காலம் said...

:-) :-) :-)

அக்பர் said...

கலக்கல் முரளி. இது கதையா, முக்கால்வாசி இப்படித்தான் நடக்குது. உங்கள் பாணியில் கலக்கியிருக்கிறீர்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

முரளி ! நல்லாருக்கு கதை !

அனுபவம் பேசுதோ ....

முரளிகண்ணன் said...

Thank you

Athu oru kanaak kaalam

Akbar

and

Starjan.

சென்ஷி said...

சினிமாத்தனமான வசனங்கள்.. ஆனால் அதுதான் கதையை முழுமையாய் நகர்த்துகிறது..

நல்லாயிருக்குது முரளி கண்ணன்!

T.V.Radhakrishnan said...

:-)))

மதுவதனன் மௌ. / cowboymathu said...

வசனங்கள் கலக்குது..

முரளிகண்ணன் said...

Thank you senshi

Thank you TVR sir

மதுவதனன் மௌ. / cowboymathu said...

வசனங்கள் கலக்குது..

முரளிகண்ணன் said...

Thank you Maduvathanan

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்கு முரளி.... ஒரு சிறு வேண்டுகோள், அடிக்கடி இது போன்று எழுத்துங்கள்...

பிரபாகர்.

முரளிகண்ணன் said...

Thankyou Prabhakar.

I will try my best.

Thanks for your motivation.

Mahesh said...

வர வர ரூம்மேட், நண்பர்கள்... கதை ஸ்பெஷலிஸ்ட் ஆயிடுவீங்க போல...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அச்சச்சோ.. முரளி அந்த சின்ன விஷயத்துக்காக வாழ்க்கையை பணயம் வைக்கக் கூடாது..!

முரளிகண்ணன் said...

Thankyou Mahesh

Thankyou Unmaiththamizan

\\அந்த சின்ன விஷயத்துக்காக வாழ்க்கையை பணயம் வைக்கக் கூடாது..!
\\

I cant understand your comment

வினோத்கெளதம் said...

விதி வலியது...

சுவாரஸ்யமாக இருந்தது தல..:)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//டேய் அவனுக்கெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு சிம் கார்டு மாத்துற பொண்ணுதாண்டா கிடைப்பா என்று.//


சரித்திர பதிவு தல..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

///கட்டில்,கூபெ,காட்டேஜ் ///

நிறைய விஷயம் சொல்லித்தர்ரீங்க தல..,

இப்படித்தான் ஒருநாள் ரிஜக்ட்டெட் பீஸ் பத்தி சொன்னீங்க.., அத உல்டா பண்ணி ஒரிஜினல் பீஸ் டயலாக் எழுதிட்டாங்க...,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இட்லி,கல்தோசை//

இதப் பத்தி பின்னூட்டத்திலாவது சொல்லுங்க தல..,

முரளிகண்ணன் said...

Thank you Vinoth Gowtham

Thank you Doctor.

\\//இட்லி,கல்தோசை//

இதப் பத்தி பின்னூட்டத்திலாவது சொல்லுங்க தல..,\\

:-))))

கணேஷ் said...

அய்யோ.. அப்ப கணேஷுக்கு பொண்ணே கெடைக்காதா?

சீக்கிரமா பொண்ணு தேட சொல்லணும் :(

சரவணகுமரன் said...

நல்லாயிருந்தது, முரளிகண்ணன்

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன்...உங்களுக்கென்று ஒர் டெம்ம்ப்ளேட் நடையை உருவாக்கி விட்டீர்கள்...characterisation is ur plus point. keep it up murali sir..

தர்ஷன் said...

ம்ம்......(பெரு மூச்சு)
நடப்பதை எழுதி இருக்கீங்க

செ.சரவணக்குமார் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் தலைவரே..

kanagu said...

ஒரு நிஜமான கதைப்போல இருந்தது அண்ணா.... நல்லா சுருக்கமா இருந்தது :) :)

கோபிநாத் said...

நல்லாயிருக்குண்ணே...முடிவு சப்புன்னு இருக்கு.!

புருனோ Bruno said...

:) :) :)

எம்.எம்.அப்துல்லா said...

:) :) :) :)

(டாக்டர் மூணு ஸ்மைலிதான் போட்டுறுக்காரு. நான் நாலு)

முரளிகண்ணன் said...

நன்றி கணேஷ்

நன்றி சரவணகுமரன்

நன்றி தமிழ்பறவை

நன்றி தர்ஷன்

நன்றி சரவணகுமார்

நன்றி கனகு

நன்றி கோபிநாத்

நன்றி டாக்டர்

நன்றி அப்துல்லாண்ணே

KaveriGanesh said...

"சரிடா கல்யாணத்தப் பத்தி என்ன சொல்லுறான்?"

போடா அதப்பத்திக் கேட்டா இட்லி,கல்தோசைன்னு ஏதாச்சும் எக்சாம்பிள் கொடுத்து என்னைக் காய வைப்பான்


க‌தையோட‌ ஃப்ளோவில் என்னைம‌ற‌ந்து சிரித்த‌ப்ப‌குதி.

தண்டோரா ...... said...

/அச்சச்சோ.. முரளி அந்த சின்ன விஷயத்துக்காக வாழ்க்கையை பணயம் வைக்கக் கூடாது..//

அண்ணெ..நீங்களும் படுக்க மாட்டீங்க.தள்ளியும் படுக்க மாட்டீங்க..முரளி நல்லாயிருக்கு கதை..நீங்க பேசறாப்லயே இருந்துச்சு

முரளிகண்ணன் said...

நன்றி காவேரி கணேஷ்

முரளிகண்ணன் said...

நன்றி தண்டோரா

KVR said...

இதைப் புனைவுன்னு சொன்னா நாங்க நம்பமாட்டோம் ;-)

புருனோ Bruno said...

//..உங்களுக்கென்று ஒர் டெம்ம்ப்ளேட் நடையை உருவாக்கி விட்டீர்கள்...///

இதை பாராட்டாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்

(எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்)

முரளிகண்ணன் said...

நன்றி கேவிஆர்

நன்றி டாக்டர். எனக்கும் எச்சரிக்கை மணி அடித்துவிட்டது.