வீட்டோடு மாப்பிள்ளையாய் இருப்பவர்கள் அல்லது வீட்டில் மனைவியின்
அம்மா உடனிருப்போரைக் கண்டறியும் வழிகள்.
அலுவலகத்திற்கு பெரும்பாலும் எல்லா நாட்களும் மதிய சாப்பாடு
கொண்டுவந்து விடுவார்கள்.
மாலை அலுவலக வேலை எவ்வளவு நேரம் இழுத்தாலும் முகம் சுளிக்காமல்
இருப்பார்கள்.
அனாவசியமாக லீவ் எடுக்க மாட்டார்கள்.
தீபாவளி,பொங்கல்,சரஸ்வதி பூஜை, புத்தாண்டு என எந்த விழாக்காலங்களிலும்
பரபரப்பின்றி இயல்பாக இருப்பார்கள்.
அனாவசியமாக கடன் வாங்க மாட்டார்கள்.
வாசிங் மெசின், பிரிட்ஜ், டிவி இவற்றில் எது புது மாடல், விலை
விபரம் போன்றவையெல்லாம் தெரியாது. அது குறித்து அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.
கெட்-டு-கெதர்களில் பங்கெடுக்க தயங்குவார்கள்,
சக வயது திருமணமான ஆசாமிகளிடம் இருந்து விலகி இருப்பார்கள்.
திருமணமாகாத இளைஞர்களிடம் ஓரளவு பழகுவார்கள்.
வேலையில் நன்கு கவனம் செலுத்துவார்கள்.
ரகசியமாக பணம் கையிருப்பு எப்போதும் வைத்திருப்பார்கள்.
2 comments:
நிஜம்மாவா?
ஒரு அனுமானம்தான்.
Post a Comment