November 11, 2009

சட்டை

அரவிந்த் என் அறை நண்பன்.சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். அவனுக்கு, அவன் கம்பெனிகளின் கிளைகள் எங்கெங்கே இருக்கின்றன, எந்த பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதெல்லாம் கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம். ஆனால் அலன் சாலி, லூயி பிலிப், குரொக்கடைல், பேசிக் ஷோ ரூம்கள் எல்லாம் எங்கெங்கு இருக்கின்றன, அங்கே எவ்வளவு ஆபர், செகண்ட் சேல்ஸ் எப்போது என்ற தகவல்கள் எல்லாம்
விரல் நுனியில் இருக்கும். நண்பர்களுக்கு மெசேஜாக அனுப்பித் தள்ளுவான்.

அவன் முதன் முதலில் அறை நண்பனாக உள்ளே நுழைந்த உடனேயே என் செல்போனைத் தான் கவனித்தான்.என்ன பாஸு போயும் போயும் டபுள் ஒன் டபுள் ஜீரோவா, என அதை எடுத்துப் பார்த்தவன், சிம் கார்ட் பி எஸ் என் எல் என்றதும் தலையில் அடித்துக் கொண்டான். நீங்க எங்கெங்கே பேசுவீங்க, அந்த நம்பர்லாம் என்ன, ஒரு நாளைக்கு எவ்வளவு மெசேஜ் அனுப்புவீங்க? என்று கேள்விகளாய் கேட்டு கடைசியில்
இந்த சிம் வாங்குங்க, செல்ல நாளைக்கு மாத்திடுங்க என்று முடித்தான்.

ஆம் அரவிந்த் அப்படித்தான். தகவல் களஞ்சியம். தேர்ந்தெடுப்பு ரசனை அதிகம்.மேலும் நாட்டாமை மாதிரி பாரபட்சம் இல்லாமல் யாருடனும் ஒரே அளவிலான நட்பு பாராட்டுவான். அவனைத்தேடி வாரம் இரண்டு பேராவது வருவார்கள்.

“மாப்பிள்ளை, அண்ணன் கல்யாணம், துணி எடுக்கணும்”,
“இவன் என் பிரண்டு, அடுத்த மாசம் கல்யாணம், துணி எடுக்கணும்”

கூட வாடா

என கோரிக்கைகளோடு வருவார்கள். இவனும் சலிக்காமல் நிறைவேற்றுவான்.

ஆனால் அவன் துணி எடுக்க கூட வராத நண்பன் நான் மட்டும்தான்.

”போதும்டா, நான் கிழிக்கிற கிழிக்கு” என்று மறுத்து விடுவேன்.

அவன் யுனிகார்னை சர்வீஸுக்கு விட்டிருந்த நாளில் என்னுடைய ஸ்பிளெண்டரை எடுத்துக் கொண்டு போனவன், திரும்பி வந்து காய்ச்சினான்.

என்னடா இது, வண்டி இப்படி வச்சிருக்க என்றவன்,அவனின் ஆஸ்தான மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றான். அவர் கொடுத்த லிஸ்டுடன் கிளம்பினோம். ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒரு மார்வாரிக்கு சொந்தமானது. அவர் கட்டமும் இல்லாமல் கோடும் இல்லாமல் ஒரு டிசைனில் சாயம் போன கலரில் சட்டை போடிருந்தார். இவனுக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.

இந்த மாதிரி ஒரு டிசைன்ல தாண்டா சட்டை போடணும். எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ்ல இந்த டிசைன் ரேர்டா என்றான். அவரிடமே, ”எங்கே எடுத்தது” எனக் கேட்க

”ரொம்ப நாளாச்சு மறந்துட்டேன்” என்றார்.

எனக்கென்னவோ அது மரண மொக்கை டிசைனாக தெரிந்தது.

ஆனால் அவனோ,

“ அந்த கலர் தாண்டா சரியில்லை. சிகப்புக்கும் மெஜண்டா வுக்கும் இடையில ஒரு கலர் இருக்குமே, அந்த கலர்ல இந்த டிசைன்ல சட்டை போட்டா, அப்படியே அள்ளும்” என்றான்.

அன்றிலிருந்து அவன் தேடல் ஆரம்பித்தது. மார்வாடி என்பதால் சௌகார்பேட்டை பக்கம் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு என்று அந்த ஏரியாவை அலசினான். எனக்கு மாலை வேளைகளில் கொறிப்பதற்கு பல குஜராத்திய இனிப்பு வகைகள் கிடைத்தன. தமன்னாவின் உறவுப் பெண்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைதத்து. ஜெயின் கோவிலில், என் திருமணத்திற்காக ஒரு பிரார்த்தனை செய்ய முடிந்தது.

ஆனால் சட்டை தான் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன் நண்பன் திருமணத்திற்கு துணி எடுக்க துணைக்குப் போனவன் ஆலா பிளீச் போட்ட அங்க வஸ்திரம் போல பளிச் புன்னகையுடன் வந்தான்.

வேறொன்றுமில்லை. தன் தந்தையின் பிறந்த நாளுக்கு துணி எடுத்துக் கொடுத்து அவரை அசத்த நினைத்த ஆரணங்கு ஒன்று ஆடை செலக்ட் செய்யத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது அந்த ஷோ ரூமில். இவன் உடைகளுக்கு அடித்துக் கொண்டிருந்த கமெண்டுகளைக் கேட்டு இவனிடம் அபயம் புகுந்தது. இவனும் அவளிடம் அவர் நிறம்,உயரம்,குண்டா,ஒல்லியா, தொப்பையா, வழுக்கையா,
சுருள் முடியா, கண்ணாடி போட்டிருப்பாரா என மச்சத்தை தவிர எல்லா விபரத்தையும் கேட்டு ஒரு செட் எடுத்துக் கொடுத்திருக்கிறான். இலவச இணைப்பாக தன் நம்பரையும் கொடுத்திருக்கிறான்.

இரண்டு நாளில் அவளிடமிருந்து போன். அவள் தந்தை உடையைப் போட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். அதுவும் ஆனந்தக் கண்ணீரில்.தப்பில்லை.

துணைவி சிக்கியும் துணி சிக்கவில்லை அவனுக்கு. ஒரு முறை மும்பை போன போது கூட அந்த சட்டையை தேடி சலித்து வந்தான்.

இரண்டு வாரம் கழித்து அவள் பிறந்த நாள் வருகிறது, என பரிசுப் பொருள் தேடி சேகரிக்க ஆரம்பித்தான். எங்கள் அறையே கிப்ட் ஷாப்பாக மாறிக் கொண்டிருந்தது.

பிறந்த நாளுக்கு இரு நாள் முன்னால் அதே ஆலா பிளீச் சிரிப்புடன் வந்தான். என்னடா புரமோஷனா? என்றேன். இல்லடா சட்ட சிக்கிடுச்சு என்றான். அவ பிறந்த நாளுக்குத்தான் போடனும்னு இருந்திருக்கு என்றான்.

நாளைக்கு செங்கல்பட்டு ஏரியா. முடிஞ்சு சாயங்காலம் வந்ததும் பேசியல், அப்படியே தூங்கிட்டு பிரெஷா இந்த சட்டையைப் போட்டுக்கிட்டு போனா ”என் ராஜகுமாரனே” அப்படீம்பா என்று லயித்தான்.

மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். அந்த சட்டை கசக்கி வீசப்பட்டிருந்தது.

என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான்.

இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா என்று.

49 comments:

Beski said...

அவனவன் என்னல்லாமோ யோசிச்சிட்டு இருக்கான். எளிமையான நச்.

வாழ்த்துக்கள்.

மணிஜி said...

/தமன்னாவின் உறவுப் பெண்களை//

முரளி..படிச்சவுடனே தமன்னாவைம்,நீங்க சொல்லாம விட்ட கிரனையும் யூனிபார்ம்ல நினைச்சு பார்த்தேன்..

அத்திரி said...

ஹா ஹாஹாஹா

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா..கலக்கல்ஸ்!

முரளிகண்ணன் said...

நன்றி அதி பிரதாபன்

நன்றி தண்டோரா, நீங்க நினைக்காட்டித் தான் ஆச்சரியம்

நன்றி அத்திரி

நன்றி அன்புடன் அருணா

பரிசல்காரன் said...

உங்கள் பாணி வர்ணனைகளுடன் அமைந்த சபாஷ் கதை முரளி! அலட்டாமல் நடை போடுகிறது, உங்கள் எழுத்து நடை!

முரளிகண்ணன் said...

நன்றி பரிசல்

தினேஷ் said...

கடைசில அவ்வ்வ்வ்வ்...

சிவக்குமரன் said...

ம்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.ஹென்றி திருப்பத்துக்கா தல..,

ஓ.ஹென்றி தன்மை சிறப்பாக இருக்கிறது. இந்த நச் யாரும் யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா//

ராஜ குமாரிக்கு புடிச்சிருந்தா ஓ.கே தானே...,


இல்ல இவரப் பார்த்தா ஸ்கூல் பையன் மாதிரி இருக்கு அப்படிங்கறாங்கலா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தக் கதைக்கும் ரூம்மேட் அப்படின்னு பேர் வைக்கலாமே...,

முரளிகண்ணன் said...

நன்றி சூரியன்

நன்றி இரா. சிவகுமரன்

நன்றி டாக்டர்.

ரூம்மேட் இன்னும் நீங்க மறக்கலியா?

வெகு விரைவில் மீண்டும் வெளிவரும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கதை

நாம என்னதான் தேடுனாலும் கிடைக்காதது , தேடாதபோது தானா கிடைக்கும் .

thamizhparavai said...

நல்ல கதை.. கதையை விட அவனது குணாதிசயத்தைச் சொன்ன விதம் பிடித்திருந்தது...பத்து பேரு கூடினா அதுல ஒரு ஆளு இப்படித்தான் இருப்பான்...

சரவணகுமரன் said...

சூப்பரு...

ரெண்டு தீபாவளி முன்பு, நான் தேடி தேடி எடுத்த ஒரு சட்டையை ஊரில் போட்டால், பார்க்கிறவர்கள் அனைவரும் ஒரு கம்பெனி பெயரை சொல்லி, அந்த கம்பெனி யூனிபார்ம் மாதிரி இருக்கிறது என்றார்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காதது கிடைக்காது.

[ எனக்கே ஒன்னும் புரியல..வேற யாருக்கு புரியப்போகுது :)) ]

ராம்குமார் - அமுதன் said...

Nalla Kathai... vaazthukkal

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

Cable சங்கர் said...

//உங்கள் பாணி வர்ணனைகளுடன் அமைந்த சபாஷ் கதை முரளி! அலட்டாமல் நடை போடுகிறது, உங்கள் எழுத்து நடை!//

appaadi..ஆளு இருக்காருப்பா..

நல்லா எழுதியிருக்கீங்க முரளி..

சென்ஷி said...

அசத்தல் முரளி... போட்டிக்கான கதையா!?

தராசு said...

செம ஃபார்ம்ல இருக்கீங்க தலைவரே

ஷண்முகப்ரியன் said...

காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். //

உங்க ஸ்டைல் கதை.எளிமை.அருமை.
பாராட்டுக்கள்,முரளி.

அறிவிலி said...

நச்.

Sundararajan P said...

ஹா ஹாஹாஹா

நர்சிம் said...

//பரிசல்காரன் said...
உங்கள் பாணி வர்ணனைகளுடன் அமைந்த சபாஷ் கதை முரளி! அலட்டாமல் நடை போடுகிறது, உங்கள் எழுத்து நடை!
//


பரிசலின் கருத்தே.

சர்வேஸன் போட்டி வெற்றிக்கான நச் இது

Raju said...

படிச்சு முடிச்சவுடனேயே நீங்க எழுதுன "பெண் வாசனை" ஞாபகம் வந்துச்சு தலைவரே..!அசத்தல் நடை. வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜான்

நன்றி தமிழ்பறவை

நன்றி சரவணகுமரன்

நன்றி அப்துல்லா அண்ணே

நன்றி ராம்குமார் அமுதன்

நன்றி டிவிஆர் சார்

ஜோ/Joe said...

முரளி கண்ணன்,
பொதுவா நான் கதையெல்லாம் படிக்கிறதில்ல ..உண்மை சம்பவம் என நினைத்து வாசிக்க ஆரம்பித்து ,பாதியில் கதையென்று தெரிந்தாலும் ஆர்வத்தோடு படித்து முடித்தேன் .

கலக்கலா இருக்கு.

☼ வெயிலான் said...

நானும் ரூம்மேட்டின் திருத்திய வடிவமோ என்று தான் படிக்க ஆரம்பித்தேன் ;)

பின்னோக்கி said...

சரி காமெடி... நல்ல டிவிஸ்ட்..சூப்பர்... ஜெயிக்க வாழ்த்துக்கள்.

பாலா said...

கலக்கல் தல!

சர்வேசன் நச்’சு பண்ணிட்டே இருக்காரே. அவருக்கு அனுப்பிவிடுங்க தல!

அருமையான.. ட்விஸ்ட்

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள் சங்கர்

நன்றி சென்ஷி, போட்டிக்கான கதையேதான்.

நன்றி தராசண்ணே

நன்றி ஷண்முகப்பிரியன் சார்

நன்றி அறிவிலி

நன்றி சுந்தர்ராஜன்

முரளிகண்ணன் said...

நன்றி தலைவரே

நன்றி ராஜு

நன்றி ஜோ

நன்றி வெயிலான். ரூம்மேட் அதே வடிவத்திலேயே மீண்டும் களமிறங்கும்.

நன்றி பின்னோக்கி

நன்றி பாலா. போட்டிக்காக எழுதியது தான் இது.

தமிழினியன் said...

//காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். அதுவும் ஆனந்தக் கண்ணீரில்.தப்பில்லை.
//

நச் வரிகள்

அதே போல எதிர்பாராத நச் திருப்பம்

முரளிகண்ணன் said...

நன்றி சுப தமிழினியன்

சிநேகிதன் அக்பர் said...

முரளி , பெரிய எழுத்தளர்களின் எழுத்தை படித்த உணர்வை கொடுத்து விட்டீர்கள்.

படிச்ச உடனே மனசு லேசாகிப்போனது.

kanagu said...

nalla irundhudunga anna...

adhuvum kadaisi 'nach' super :)

முரளிகண்ணன் said...

thank you akbar

thank you kanagu

Anonymous said...

நல்ல எழுத்து நடை... பாராட்டுக்கள்

ஆக்சுவலி நான் என்னை அந்த கரக்டரில் பாத்தேன்... செலக்ஷ்னுக்கு என் நண்பர்கள் நாடுவது சாட்தாட் முகிலைத் தான்... Btw, நான் தேடி வாங்கியத ஒரு சுவட் பாண்ட் செட் ஒரு ஸ்கூலின் யுனிபோம். Argh.

முரளிகண்ணன் said...

நன்றி முகிலினி

CS. Mohan Kumar said...

நடை நன்று. முடிவும் நச்.

வாழ்த்துக்கள்
*******
இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

முரளிகண்ணன் said...

நன்றி மோகன்குமார்.

கோபிநாத் said...

கலக்கல் அண்ணாச்சி ;))

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்

ஸ்வர்ணரேக்கா said...

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு உங்க கதை...

Ashwin said...

அசத்தலான முடிவு !!

முரளிகண்ணன் said...

Thank you Swarnarekha

Thank you Antbrain

CS. Mohan Kumar said...

சர்வேசன் டாப் 20 லிஸ்ட் போட்டுருக்கார். அதில் உங்க கதை, Cable Shankar, அதி பிரதாபன், ஆதி
மற்றும் என் கதையும் செலெக்ட் ஆகியிருக்கு.