February 04, 2009

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள்- 3 (சத்யராஜ்)

இரண்டாம் பகுதியை படிக்க இங்கே செல்லவும்

84 ஆம் ஆண்டு. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டர். மதிய காட்சி இடைவேளை முடிந்ததும் கேண்டின் காரர் நான்கைந்து சோடா பாட்டில்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த சீனுக்கு சைட் ஸ்பீக்கர் சவுண்டை குறைடான்னா ஆப்பரேட்டர் கேட்க மாட்டேங்கிறான், ஷோவுக்கு ஒன்னு ரெண்டு பொம்பளையாளுங்க மயக்கம் போட்டு விழுந்துறாங்க என்று சலித்தபடியே கடையை மூடுகிறார். எந்த படம் என்று ஞாபகம் வருகிறதா? ரங்கராஜ் என்பவர் சத்யராஜ் என்று தமிழர் வாழுமிடமெல்லாம் பின்னாளில் அறியப் பட காரனமாய் இருந்த நூறாவது நாள் என்னும் திரில்லர் படம் தான் அது.

சினிமா ஆசையால் கோவை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து சிறு சிறு வேடங்களிலும், சர்வைவலுக்காக அலுவலக நிர்வாகியாகவும் பணியாற்றிய சத்யராஜ் தன் கல்லூரி நண்பர் மணிவண்ணனிடம் நல்ல பிரேக் கிடைக்க மாட்டேங்குதே என்று புலம்பிய போது, அவர் கொடுத்த வாய்ப்புதான் அந்த மொட்டைத்தலை வில்லன் வேடம். ஒரு பேட்டியில் சத்யராஜ் இப்படி சொல்லியிருந்தார் " மொட்டையை அடிச்சு, மீசையை எடுத்திட்டு அந்த வட்ட கண்ணாடியை போட்டுட்டு கண்ணாடில பார்க்கிறேன், எனக்கே பிடிக்கல. ஆனா மணிதான் கட்டாயப்படுத்தி அத செய்ய வச்சான்". அந்த கேரக்டர் என்ட்ரி, சாவது போல் நடித்து எழுவது, அதற்க்கேற்ப பிண்ணனி இசை, நளினியின் பெரிய கன்களில் தெரியும் பயம் என அந்த பட காட்சிகள் பெண்களை பயப்படுத்தின. சத்யராஜ் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்று முழு திரையுலகத்திற்க்கும் தெரியவந்தது.

அதே ஆண்டு, அதன்பின் மணிவண்னனின் இயக்கத்தில் வெளியான 24 மணி நேரம் படத்தில் மெயின் வில்லன் கேரக்டர் கிடைத்தது. அதில் சத்யராஜ் பேசும் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்கிறங்களே" என்ற வசனமும், டயலாக் டெலிவரி மற்றும் மாடுலேஷனும் அவரை முன்வரிசை வில்லன்களில் ஒருவராக மாற்றியது. அதனால் முன்வரிசை கதாநாயகர்கள் அனைவரின் படங்களிலும் வில்லன் வேடம் தேடிவந்தது. அந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் சுலக்ஷனாவுக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளையாக சிறு வேடத்திலும், ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில் விஜயகாந்த்,நளினி நடித்த நாளை உனது நாள் என்ற திரில்லர் படத்தில் சிறு வேடத்திலும் தலையைக் காட்டிய சத்யராஜுக்கு மணிவண்ணனின் இரண்டு படங்களும் மிகப் பெரிய ஏற்றத்தை தந்தன.

1985

இந்த ஆண்டில் சத்யராஜ் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன், ராகவேந்திரர் படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். கமல் ரசிகர்கள் மறந்து விட நினைக்கும் மங்கம்மா சபதம் என்னும் படத்தில் கமலின் வில்ல தாத்தாவாக நடித்தார். ஜப்பானில் கல்யானராமன் படத்தில் மெயின் வில்லன் வேடம். ஆனால் இதே ஆண்டு வெளியான காக்கி சட்டை படம் சத்யராஜை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

"பொழைக்கத் தெரியாத நாட்டில பொழைக்க தெரிஞ்சவங்க .... ஸ்மக்கேர்ல்ஸ்" இந்த சாதாரண வசனத்தை தன் வாய்ஸ் மாடுலேஷன் மூலமும், வார்த்தைகளுக்கு இடையே விடப்படும் இடைவெளி மூலமாகவும் அசாதாரணமாக்கியிருப்பார்.

வெள்ளக்காரன் நம்ம நாட்டில இருந்து எடுத்திட்டுப் போன தங்கத்தை திருப்பி எடுத்திட்டு வர்றோம். எங்களப் போயி கடத்தல்காரன்னு சொன்னா எப்படி? , தகடு தகடு, பட்ஷி பட்ஷி போன்ற வசனங்களிலும் கமலை இன்னும் குட்டையாக்கி இருப்பார்.

ஈட்டி,கீதாஞ்சலி படங்களில் வழக்கமான வில்லன். சாவி படத்தில் எதிர் நாயகன், மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான பகல் நிலவில் பெரியவர் என்ற நாசூக்கான வில்லன் வேடம், முதல் மரியாதையில் ஒரு கிராமத்து மன்மத சண்டியரின் வயதான பிம்பம் என பலவித வேடங்களில் கலக்கினார் சத்யராஜ்.

1986

முதல் வசந்தம்

குங்குமப் பொட்டு கவுண்டராக வந்து அதகளம் பண்ணியிருப்பார். வெள்ளையுடை அணிந்த பணிப்பெண்னை இரவில் கரெக்ட் பண்ணிவிட்டு பேயை கரெக்ட் பண்ணிவிட்டோமோ என்று காலையில் புலம்புவதாகட்டும், எதிரி என்றாலும் நம்ம ஆள் என்ரு சொல்லி வேலைக்காரன் திட்டக் கூடாது என்று கண்டிப்பதாகட்டும், பின் கடைசியில் நல்லதை எடுத்து சொல்வதாகட்டும் தனி ஸ்டைலில் பண்ணியிருப்பார்.

பாலைவன ரோஜாக்கள்

கருணாநிதி வசனத்தில் முதல் படம். பத்திரிக்கை ஆசிரியராக கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். லட்சுமியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும், பின் கொள்கைக்காக உயிரை விடும்போதும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.

மிஸ்டர் பாரத்

சத்யராஜின் இன்னொரு புகழ் பெற்ற வசனமான என்னம்மா கண்ணு பேசப்பட்ட படம். ரஜினிக்கு இணையாக பாடல் காட்சி அமைத்திருப்பார்கள். ஒரு பணக்காரரின் பாடி லாங்குவேஜை எளிதாக கொண்டு வந்திருப்பார்.

முரட்டு கரங்கள்

ஷோலே பட பாதிப்பில் வந்த படம். கப்பர் சிங் மாதிரியான கொள்ளை கூட்ட தலைவனாக சத்யராஜ். கூன் விழுந்த முதுகோடு, கண்களில் கொடூரத்துடன் கொள்ளை அடிப்பதுமாய், ஈவு இரக்கமில்லாமல் மக்களை கொல்வதுமாய் மிரட்டியிருப்பார்.

விடிஞ்சா கல்யாணம்

ஆப்பாயில் ஆறுமுகம் என்ற சிறையில் இருந்து தப்பிய கைதி, மகளை கற்பழிக்க வந்தவனை கொலை செய்த தாய், மகள், மகளை திருமணம் செய்யப் போகும் இன்ஸ்பெக்டர் இந்த பாத்திரங்களை வைத்து மணிவண்ணன் இயக்கிய திரில்லர். சத்யராஜ் ஆப்பாயில் ஆறுமுகமாய் வந்து தாயையும்,மகளையும் மிரட்டுவார், மாப்பிள்ளையிடம் சவால் விடுவார். சுருக்கமாக சொன்னால் லொள்ளு பண்ணியிருப்பார்.

விக்ரம்

கமலின் சொந்தப் படம். ஏவுகணையை கடத்தும் சர்வதேச வில்லனாக சத்யராஜ். இந்தப் பட இயக்குனர் ராஜசேகர் பாதியில் ரஜினியின் படத்தை இயக்க போய்விட்டதால் சந்தான பாரதியை வைத்து சமாளித்தார் கமல். அதனாலேயே அவருக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு பட இயக்க வாய்ப்பை அளித்தார். சத்யராஜின் திறமையைக் கண்டதால் அவருக்கு நாயகன் வாய்ப்பை வழங்கினார் கமல்.

மேலும் இந்த ஆண்டில் கரிமேடு கருவாயன் படத்தில் விஜயகாந்தை கைது செய்ய வரும் போலிஸ் ஆக ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். பின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரசிகன் ஒரு ரசிகை, மந்திரப் புன்னகை, கடலோர கவிதைகள் படங்களின் மூலம் முழு கதாநாயகனாக மாறினார்.

1994- அமைதிப்படை

மணிவண்ணனின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் நாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்கள். அதில் வில்ல அரசியல்வாதி அமாவாசை என்ற ராஜ ராஜ சோழன் எம் ஏ வை யாரால் மறக்க முடியும்?

மணியா வரலாறு தெரிஞ்சுக்கோனும் " சாமி இல்லன்னு சொன்னவன் கூட கோயிலை இடிச்சதில்லையப்பா, இருக்குன்னு சொன்னவன் தான் இடிச்சுருக்கான்"

நாலு ரவுண்டு அடிச்சும் ஏறாட்டி அந்த கருமத்தை எதுக்கு குடிக்கணும்?

ஒரு அரசியல்வாதி மகனா பெறந்துட்டு இது கூட பேசாட்டி எப்படி?
போன்ற காலத்தால் அழியாத வசனங்கள் மூலம் இன்னும் நினைவில் நிற்கிறார்.

வில்லனாக அறிமுகமாகி வெற்றிகரமான கதாநாயகனாக மாறிய முதல் நடிகர் ரஜினிகாந்த். இரண்டாவது சத்யராஜ். ரஜினி தன் திரையுலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தோடு துணை,இணை கதாநாயக வேடங்களையும் சேர்த்தே செய்து வந்தார். வில்லன் வேடம் எனினும் ஆடு புலி ஆட்டம் தவிர எதிலும் கொடூர வில்லனாக வந்ததில்லை. சிறந்த இயக்குனர்கள் அவருக்கு நாவல்டியான வேடங்களை கொடுத்தார்கள். அதை அவர் தன் திறமை மூலம் மெருகேற்றி நடித்தார். அதனால் அவரை கதாநாயகனாக மாறுவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை.

சத்யராஜின் முதல் படம் கோடுகள் இல்லாத கோலங்கள், பின் சட்டம் என் கையில், குருவிக்கூடு போன்ற படங்களில் சில்லரை வேடங்களில் நடித்து வந்தார். நூறாவது நாள் பிரேக்குக்குப் பின் அவருக்கு கிடைத்தவை ஹார்ட் கோர் வில்லன் வேடங்கள். அனாலும் பிரேக் கிடைத்து இரண்டே ஆண்டுகளில் கதாநாயக அந்தஸ்த்துக்கு உயர்ந்தார்.

இதற்க்கு சத்யராஜே ஒரு காரணத்தை சொல்வார் "அப்போது அதிக தயாரிப்பாளர்கள், குறைந்த நடிகர்கள், அதனால் எனக்கு எளிதான வாய்ப்பு கிடைத்தது என்று". அது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே?. திரையரங்குகளில் அவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்தான் வினியோகஸ்தர்கள் மூலம் எதிரொலித்து கதாநாயக வாய்ப்பை வழங்கியது. கொடூர வேடத்தில் நடித்தாலும் மக்களை கவரும் வசீகரம் சத்யராஜிடம் இருந்தது.

கால சக்கரம் சுழன்று இப்போது வில்லன் வேடத்துக்கு அழைப்புகள் வரும் நிலையில் இருக்கிறார் சத்யராஜ். சிவாஜி,தசாவதார வில்லன் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஆனால் இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

மணிவண்ணனுக்கு சத்யராஜின் வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. இவர்கள் இருவரும் கல்லூரி விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்றபோது நடந்த சம்பவம்

அதென்னப்பா பி ஏ அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்?

அது ஒன்னுமில்ல இப்ப ஒரு வீட்ட வாங்குறோம்னு வச்சுக்க, பெரிய தொகை கொடுக்கணும். ஆனா அதுக்கு அட்வான்ஸ் கம்மியா இருக்கும்ல. அதுமாதிரி இங்கிலீஷ் பெரிசு அதில கொஞ்சமா படிக்கிறது அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்.

அப்ப அதயே நான் எடுக்கிறேன்.

எடுத்து டரியலானவர் யாரென்று சொல்ல வேண்டுமா?

என்னா ஒரு வில்லத்தனம்?
iit

36 comments:

மதன் said...

”கமலை இன்னும் குட்டையாக்கியிருப்பார்..” - இந்த வரியை நான் மிகவும் ரசித்தேன் முரளிகண்ணன்!

Cable Sankar said...

மீண்டும் ஒரு சிறந்த கம்பைளிங்.. முரளி.. எனக்கு இதை தவிர எதை சொல்லி பாராட்டுவது.. என்றே தெரியவில்லை. வர வர நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் மிக அருமையாய் இருக்கிறது.வாழ்த்துக்கள் முரளி.. அது சரி அந்த மகாபலிபுரம் புரோக்ராம் நிஜமா..?

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

ச்சின்னப் பையன் said...

வழக்கம் போல் ஏகப்பட்ட நல்ல தகவல்களின் தொகுப்பு...

வேதம் புதிது - இதிலும் நன்றாக செய்திருப்பார் சத்யராஜ்...

முரளிகண்ணன் said...

நன்றி மதன்.

கேபிளாரே நன்றிகள்

\\அது சரி அந்த மகாபலிபுரம் புரோக்ராம் நிஜமா..?
\\
தலைவரே அது ஒரு புனைவுக்காக எழுதினது. வேணும்னா சொல்லுங்க ஏதாவது ஒரு வீக் எண்ட் பிளான் பண்ணி அசத்தீருவோம்

நசரேயன் said...

கலக்கல் முரளி, எழுத்தும் நடையும் ரெம்ப நல்லா இருக்கு

Anonymous said...

தசாவதார வில்லன் ?

I think it is Marmayogi

அக்னி பார்வை said...

கலக்குங்க தல.... ஆமா கமலும் ரகுவரனும் ஏதாவது படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?

RAMASUBRAMANIA SHARMA said...

"Sathyaraj" has really formed a separate style for his films from the beginning, with his body language and dialogue delivary timings...Oflate..He started doing Political Satires in his films, alsong with imitating all the leading stars, in a sarcastic way...But no body has taken it seriously..."Sathyaraj"...in this case has become like "cho"...who is known for his sarcasm and political satire...Probly, this suits Actor Sathyaraj only, is my opinion....

அருண்மொழிவர்மன் said...

இவை தவிர மக்கள் என் பக்கம் படம்.... ஆஹா என்ன அட்டகாசம், அமர்க்களம்

அதில் அவர் கயில் கத்தியை வைத்தபடி “சுத்தமான இரும்பினால செய்யப்பட்ட ஒரிஜினல் கத்தி” என்பதாகட்டும், ரகுவரனையும் நிழல்கள் ரவியையும் “லெஃப்ட் அண்ட் ரைட்” என்று அறிமுகம் செய்வதாகட்டும்.....

அதுபோல பகைவன் படம்....

Nilofer Anbarasu said...

எக்சலெண்ட்.
ஏதோ ஒரு படத்தில் கொலையை பார்த்த அதிர்ச்சியில் ஊமையான ஒரு சிறுவனை தன்னுடன் வைத்துக்கொண்டு அமைதியாக அதே சமயம் அழுத்தமாக நடித்திருப்பார். என்ன படம் என்று நினைவில் இல்லை, தெரிந்தால் சொல்லுங்கள்.

கோபிநாத் said...

சூப்பரு ;)

எனக்கு சத்யராஜ் படங்களில் மிகவும் பிடித்த படம் அமைதிப்படை மனுஷன் ஒவ்வொரு சினிலும் கொன்னுயிருப்பான் ;))

அந்த படத்துல அவரு தம்மை இழுத்து விடுற அழகே அழகு ;)

SUREஷ் said...

தசாவதாரத்தில் இவர் நடித்திருந்தால் கமலுக்கு ஒன்பது தானே கிடைத்திருக்கும்.

SUREஷ் said...

//

கால சக்கரம் சுழன்று இப்போது வில்லன் வேடத்துக்கு அழைப்புகள் வரும் நிலையில் இருக்கிறார் சத்யராஜ். சிவாஜி,தசாவதார வில்லன் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஆனால் இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.//
சிவாஜி வில்லன் ஒரு சொத்தைப் பாத்திரம். அதில் நடித்திருந்தால் அப்படியே ஓய்வு பெற்றிருக்கலாம்.

சத்திய ராஜுக்கான மினி பட்ஜெட் படங்கள் குறையவே குறையாது. இவரும் நாயகனாக நடித்துக் கொண்டே இருப்பார்.

கானா பிரபா said...

இவரின் வில்லத்தனங்கள் தவிர்த்த பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, இரவுப்பூக்கள் மறக்க முடியாதவை. வில்லத்தனத்தில் விடுபட்டது சாவி.

Cable Sankar said...

//ஏதோ ஒரு படத்தில் கொலையை பார்த்த அதிர்ச்சியில் ஊமையான ஒரு சிறுவனை தன்னுடன் வைத்துக்கொண்டு அமைதியாக அதே சமயம் அழுத்தமாக நடித்திருப்பார். என்ன படம் என்று நினைவில் இல்லை, தெரிந்தால் சொல்லுங்கள்.//

பூவிழி வாசலிலே..

T.V.Radhakrishnan said...

நல்ல தொகுப்பு...

observer said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

Senthil Kumar said...

தல.. "வேதம் புதிது" வ விட்டுடீங்களே??

முரளிகண்ணன் said...

சின்னப் பையன், நசரேயன்,அக்னிப்பார்வை, ராமசுப்பிரமணியராஜா, அருண்மொழிவர்மன்,நிலோபர் அன்பரசு, கோபிநாத்,சுரேஷ்,கானா பிரபா, டிவி ராதாகிருஷ்ணன் தங்கள் வருகைக்கு நன்றி.

கேபிளாரே நன்றி.

வலைப்பூக்கள், அப்சர்வர் எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு.

முரளிகண்ணன் said...

செந்தில்குமார், தங்கள் வருகைக்கு நன்றி.

இது வில்லன் வேடங்களைப் பற்றிய பதிவு என்பதால், அதைத் தவிர்த்துவிட்டேன். வித்தியாச வேடங்கள் என்று எழுதும்போது சேர்த்து விடுகிறேன். (இன்னொரு பதிவுக்கு ஐடியா கொடுத்து விட்டீர்கள்).

பாலைவன ரோஜாக்கள் ட்ரான்சிஷன் (வில்லன் டு ஹீரோ) பீரியடில் அவருக்கு முக்கியமான படம் என்பதால் சேர்த்தேன்.

அருண் மொழிவர்மன் கூறியபடி மக்கள் என் பக்கம், பகைவன் ஆகியவற்றை அதில் சேர்க்கிறேன்.

வித்யா said...

சூப்பர் முரளி. அமைதிப்படைல வோட்டு எண்ணும்போது சீனுக்கு சீன் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நல்ல தகவல்கள்.

பூவிழிவாசலிலே படத்தில் நடித்த அந்த குட்டிப் பையன் நிஜத்தில் பொண்ணு.

narsim said...

முரளிகண்ணன்..பதிவு அள்ளுது.. மிக அருமையான இன்ட்ரோ..ஆம்.. 100வது நாளை மறக்க முடியாது..

விக்ரமில் ஒரு வசனம் சிம்ப்பிளாக சொல்லுவார்.."சொக்கலால் பீடி குடிச்சிட்டு இருந்த நிய்யி இப்ப மதகுரு.." இன்னொன்று.. "மொட்ட மொற"

கலக்கல் கலக்கல்(தகடு தகடு)

முரளிகண்ணன் said...

நன்றி வித்யா.

நன்றி நர்சிம். சொக்கலால் பீடிய கப்புன்னு பிடிச்சுட்டீங்களே தலைவரே.

SKY said...

சத்யராஜ்-கமல் ஈடு இணையற்ற ஜோடி !
இன்னும் நிறைய படங்கள் உள்ளன.....
ஒவ்வொரு சீன் அவர்களது ஒவ்வொரு மைல் கல்...

அனுஜன்யா said...

எவ்வளவு தகவல்கள். பிரமிக்க வைக்கும் இதன் பின் ஏராளாமான உழைப்பும் இருக்கும். கலக்குங்க.

//இங்கிலீஷ் பெரிசு அதில கொஞ்சமா படிக்கிறது அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்.// ஹா ஹா.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

ஸ்கை, அனுஜன்யா வருகைக்கு நன்றி

மாதவராஜ் said...

உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு. நிறைய தகவல்களுடன் கூடிய தொகுப்பு... அதுவும் நல்ல சுவராஸ்யமான நடையில்!!!

வாழ்த்துக்கள்.

அமாவாசை said...

//அதில் வில்ல அரசியல்வாதி அமாவாசை என்ற ராஜ ராஜ சோழன் எம் ஏ வை யாரால் மறக்க முடியும்?//

அது நாக ராஜ சோழன் இல்ல?

முரளிகண்ணன் said...

நன்றி மாதவராஜ் சார் & அமாவாசை

Mahesh said...

பதிவு !! பதிவு !! (தகடு.. தகடு..)
ஏனுங்... அவுரு எங்கூர்காருங்... லொள்ளுக்குன்னே பொறந்தவருங்...

"இந்த தேர்தல்ல நாம ஜெயிக்க மாட்டமுங்..."

"ஏன் மணியா... நாமதான் ஒண்ணுமே பண்ணலியே"

"அதாங்... எதாச்சும் பண்ணோணுமல்லொ.."

:))))

முரளிகண்ணன் said...

ஆமங்க மகேஷ்னாங். அவரு லொல்லு லோக பிரசித்தம்ங்னா

வெட்டிப்பயல் said...

//பாலைவன ரோஜாக்கள்

கருணாநிதி வசனத்தில் முதல் படம். பத்திரிக்கை ஆசிரியராக கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். லட்சுமியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும், பின் கொள்கைக்காக உயிரை விடும்போதும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.
//

இதுல இவர் வில்லன் இல்லையே...

வில்லன் இல்லாம கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னா வேதம் புதிதை மிஸ் பண்ணிட்டீங்க போல...

என்ன இருந்தாலும் சத்யராஜ் அருமையான நடிகர்...

கேப்டன் பிரபாகரன்ல நடிச்சிட்டு மன்சூர் அலிகான், இது தான் வில்லத்தனம். இந்த மாதிரி இங்க யாராவது நடிக்க முடியுமானு பில்ட் அப் பண்ணதாகவும், அதனால சத்யராஜ் வில்லனா இந்த படத்துல நடிச்சதாவும் எங்கயோ படிச்சிருக்கேன் :)

முரளிகண்ணன் said...

\\இதுல இவர் வில்லன் இல்லையே...

வில்லன் இல்லாம கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னா வேதம் புதிதை மிஸ் பண்ணிட்டீங்க போல\\

பாலைவன ரோஜாக்கள் ட்ரான்சிஷன் (வில்லன் டு ஹீரோ) பீரியடில் அவருக்கு முக்கியமான படம் என்பதால் சேர்த்தேன்.

கிரி said...

//ஒரே மாதிரி உறும வைத்து புலியையும் பூனையாக்கி விடுவார்கள்.//

:-)))

நாசர் தேவர் மகனில் அந்த பஞ்சாயத்து காட்சியில் செமையா வெறுப்பேத்துவார்..சிறப்பான நடிப்பு

Anonymous said...

Vetham Puthithu padathai vittuteengale!! Ram