February 01, 2009

தமிழ்சினிமா எதிர் நாயகர்கள் - 2 (அசோகன்)

முதல் பகுதியை படிக்க இங்கே செல்லவும்
70களின் பிற்பகுதி வரை வந்த பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு கொடுமை செய்யும் வேலையை மட்டுமே இயக்குனர்கள் கொடுத்தார்கள். மக்கள் வில்லனைப் பார்த்து பயப்படும் போல் காட்சி அமைப்பு இருக்குமே தவிர, ரசிக்கும் படியான வில்லனிசம் குறைவாகவே இருந்தது. ரஜினிகாந்த் 16 வயதினிலே,மூன்றுமுடிச்சு படங்களில் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை கொண்டுவந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கிடைத்த இணை நாயகன், கதாநாயகன் வேடங்களால் அவர் வில்லத்தனத்திற்க்கு வேலையில்லாமல் போய்விட்டது. பின் வந்த சத்யராஜ் எல்லோராலும் ரசிக்கப்படும் வில்லத்தனத்தை கொண்டுவந்தார். 24 மணி நேரத்தில் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறங்களே, காக்கி சட்டையில் தகடு தகடு என வில்லத்தனத்தில் ஒரு நாவல்டியை கொண்டு வந்தார். தற்போது கனா கண்டேன் பிரித்விராஜ் வரை இது தொடர்கிறது.

ஆனால் இம்மாதிரி இல்லாத 60,70 களில் கிடைத்த வேடங்களில் மாறுபட்ட பாடி லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மூலம் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை காட்டியவர் எஸ் ஏ அசோகன். 50 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 80கள் வரை பல வேடங்களில் நடித்தார். இவர் ஏற்ற சில முக்கிய வேடங்களைப் பார்க்கலாம்.

அன்பே வா

எம் ஜி யார்க்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான ஈகோ மோதலில், தனக்கு பிடிக்காத அத்தானான விமானி அசோகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். ஆனால் உண்மை தெரிந்ததும் இவர் விட்டுக்கொடுத்து விட்டு, கிறுக்கத்தான் கிறுக்கத்தான் என்று சொல்வாயே என்று ஆரம்பித்து அமர்த்தலாக வசனம் பேசி விட்டு செல்வார். இந்த காட்சியில் இவரது ஸ்டைல் மிக ரசிக்கும்படியாக இருக்கும்.

மூன்றெழுத்து

புதையல் ரகசியத்தை வைத்திருக்கும் மூன்றெழுத்தில் ஒரு எழுத்து இவரிடம் இருக்கும். மிகப்பெரிய குடுமியுடன், வேட்டிமீது பெல்ட் அணிந்து இழுத்து இழுத்து பேசும் மாடுலேஷனில் பின்னியிருப்பார். இந்த வாய்ஸ்தான் எல்லா மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் தற்போது பயன்படுகிறது.

ரகசிய போலிஸ் 115

இதில் செல்வந்தரின் மகனாக இருந்து கொண்டு, சமூக விரோதியாக இருக்கும் வேடம். நடனக் காரியுடன் காதலும் உண்டு. இம்மாதிரி வேடங்களுக்கு இவர் உடல் வாகு எளிதில் பொருந்திப் போகும். அதற்கு ஏற்றார் போல குரலிலும் ஒரு கண்ணியத்தைக் கொண்டுவந்து விடுவார்.

உலகம் சுற்றும் வாலிபன்

விஞ்ஞானி பைரவனாக அசத்தியிருப்பார் இந்தப் படத்தில். எம்ஜியார் (விஞ்ஞானி முருகன்) மின்னலை துப்பாக்கி தோட்டாவில் அடைக்கும் ரகசியத்தை கண்டு பிடித்துவிட்டு, ரிலாக்ஸுக்காக காதலி மஞ்சுளா உடன் உலகம் சுற்ற கிளம்புவார். அப்போது அசோகன் " முருகன் காதலியோட உலகத்த சுத்தப் போறான், நான் காரணத்தோட அவன சுத்தப் போறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அப்போதுதான் படம் களை கட்டும்.

துணிவே துணை

இந்தப் பட ஹீரோ ஜெய்ஷங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் " இரந்தவனும் சொமந்தவனும்" என்ற பாடலை பாடியிருப்பார் எஸ் ஏ அசோகன். எம்ஜியார் படங்களுக்குப் பின் அதிகமாக ஜெய்ஷங்கர் படங்களிலேயே அசோகன் வில்லனாக நடித்தார். எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்திலும் வழக்கமான வில்லன் வேடமே. ஆனால் இந்தப் படத்தின் கதை,பாடல்கள் மற்றும் காட்சியமைப்பு காரணமாக எல்லா வேடங்களும் மனதில் நிற்கின்றன.

அலாவுதீனும் அற்புத விளக்கும்

இந்தப் படத்தில் ஜாடியில் அடைக்கப் பட்டிருக்கும் பூதமாக கலக்கியிருப்பார். இவர் உருவத்துக்கு அந்த வேடம் மிகப் பொருத்தமாக இருக்கும். அப்பாவித்தனமான முகத்துடன், அசட்டு சிரிப்புடன், கொஞ்சும் குரலில் பூதமாக வித்தியாசத்தை காட்டியிருப்பார்.

கங்கா, ஜம்பு டைப் கௌபாய் உடை படங்கள்

காமிரா மேன், இயக்குனர் கர்ணன் ஜெய்ஷங்கரை வைத்து இயக்கிய பல கௌபாய் படங்களில் இவர் தான் பெரும்பாலும் வில்லனாக நடித்தார். இவரது ஆகிருதி அதற்க்கு உதவியாக இருந்தது. இப்படங்களில் பல வித்தியாச மானெரிசங்களை இவர் பயன்படுத்தி இருந்தாலும் அவை அவ்வளவாக மக்களை கவரவில்லை என்றே சொல்ல்லாம்

இவர் நடித்த சில படங்கள்
1958 - மாயமனிதன்
1961- மனப்பந்தல், தாய் சொல்லை தட்டாதே
1962 - கண்னாடி மாளிகை, பாத காணிக்கை
1963 - இது சத்தியம், காஞ்சித் தலைவன்
1964 - என் கடமை, வாழ்க்கை வாழ்வதற்க்கே
1965 - காட்டு ராணி, தாழம்பூ
1966 - அன்பே வா
1968 - ரகசிய போலிஸ் 115, மூன்றெழுத்து
1973 - உலகம் சுற்றும் வாலிபன், பூக்காரி
1976 - துணிவே துணை
1980 - பில்லா

இவரைப் போலவே வில்லனாக தன் வாழ்வை தொடங்கிய இவரது மகன் வின்சென்ட் அசோகன் (ஏய், நீ வேனுன்டா செல்லம்) தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் (சில நேரங்களில்) நடித்து வருகிறார்.
(தொடரும்)

27 comments:

Cable சங்கர் said...

மீண்டும் ஒரு சூப்பர் கம்பைலிங் முரளி.. ஆனாலும் உங்க் டேட்டா பேஸ் ரொம்பத்தான் ஸ்டாராங்..

முரளிகண்ணன் said...

நன்றி தலைவரே.

G.Ragavan said...

அசோகன் எனக்கும் மிகவும் பிடித்த நடிகர். உயர்ந்த மனிதன் டாக்டராக வந்து ரகசியத்தைச் சொல்ல வரும் காட்சியில் மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த நடிப்பை மறைக்காமல் இருக்க அந்தக் காட்சியில் நடிகர்திலகம் எந்த நடிப்பையும் வெளிக்காட்டாமல் இருப்பார்.

அன்பே வா படமும் அருமை. இன்னும் நிறைய படங்களும் உண்டு. காயத்ரி படத்திலும் நன்றாக நடித்திருப்பார்.

நல்லதொரு தொகுப்பு. மிக அருமை.

Sambath said...

அன்புள்ள நண்பர் முரளிகண்ணன் அவர்களே,
உங்களுடைய அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன்.
மிக மிக யதார்த்தமான,தெளிவான நடையில் எழுதும் உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு தகவல்களை அள்ளி தரும் உங்களுக்கு என்னை போன்றோர் எந்தவித நன்றிகளையும் செய்திட இயலாது.
சினிமாவை பற்றி நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் என்னை மிகவும் கவர்தந்து
"ரெண்கவிலசும் என் காதல் தோல்விகளும்" நான் மிகவும் நேசித்த பதிவு. நீங்கள் அனுபவித்து எழுதும் இது போன்ற பதிவுகள் படிப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது.

வாழ்துக்கள்.தொடர்ந்து எழுந்துங்கள். என்னை போன்ற வாசகர்களை மகிழ்வியுங்கள்

நன்றி
சம்பத்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆலம்பனா...

நா...ன் உங்..கள் அடீ..ம.ய்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

இவர் தயாரித்த நேற்று,இன்று,நாளை...அரசியல் காரணங்களால் தோல்வியை தழுவியது.அதில் விழுந்த பொருளாதார அடியிலிருந்து..அவரால் இறுதிவரை மீளமுடியவில்லை.

முரளிகண்ணன் said...

ஜிரா, தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.\\வாழ்துக்கள்.தொடர்ந்து எழுந்துங்கள். என்னை போன்ற வாசகர்களை மகிழ்வியுங்கள்\\

மிகுந்த நன்றி சம்பத்குமார். தங்களைப் போன்றவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரமே மகிழ்வோட இயங்க உதவுகிறது.

முரளிகண்ணன் said...

சுரேஷ் சார் மறக்க முடியுமா? ஆலம்பனாவை....

\\நேற்று,இன்று,நாளை...அரசியல் காரணங்களால் தோல்வியை தழுவியது.அதில் விழுந்த பொருளாதார அடியிலிருந்து..அவரால் இறுதிவரை மீளமுடியவில்லை\\ராதாகிருஷ்ணன் சார், அந்த நிகழ்வினாலேயே அவர் ஜெய்ஷங்கரிடம் நெருக்கமானார் என்று கூறுகிறார்களே? உண்மையா?

அருண்மொழிவர்மன் said...

//துணிவே துணை//

இது தமிழ்வாணன் தயாரித்த படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றும் கேள்வி.

அருமையான தகவல்கள்

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

கடைசிவரை எம்.ஜி.ஆரிடம்..நட்பாய் இருந்தவர் அசோகன். ஜெயசங்கர் முதல் படமான 'இரவும் பகலும்'படத்தில் அசோகனும் நடித்தார்.அவர்கள் நட்பு அப்பவே எற்பட்டுவிட்டது.நேற்று இன்று நாளை தி.மு.க.வினரால் தொல்லை தரபட்ட படம்.அவ்வளவுதான்.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி அருண்மொழிவர்மன் மற்றும் ராதாகிருஷ்ணன் சார்.

narsim said...

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் விஞ்ஞானி எம்ஜியாரும் மஞ்சுளாவும் ஓடி ஓடி தப்பிப்பது போன்ற காட்சியின் முடிவில் மிகவும் சிம்ப்பிளாக அசோகன் "வாங்க முருகன் வண்டில ஏறுங்க" என்று கூறுவார்.. கலக்கல் வில்லன்

அருமையான பதிவு..அடுத்த பதிவ‌ அடிச்சு விடுங்க தல‌

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நர்சிம். நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சி ஆடியன்ஸ்க்கு ஒரு திகைப்பாகவும், சிரிப்பாகவும் இருக்கும்.

விரைவில் அடுத்த பதிவை போடுகிறேன் தலைவரே

குசும்பன் said...

//24 மணி நேரத்தில் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறங்களே//

24 மணி நேரத்தில் எப்படிங்க உங்க கேரட்டரை புரிஞ்சுக்க முடியும்.

அளவிள்ளா டவுட்டோடு
குசும்பன்

முரளிகண்ணன் said...

\\24 மணி நேரத்தில் எப்படிங்க உங்க கேரட்டரை புரிஞ்சுக்க முடியும்.\\

வாங்க குசும்பரே,

உங்களை மாதிரி ஒரு வில்லன் தமிழ் சினிமாவுக்கு தேவை :-)))

தியேட்டரே அதிர்ந்துவிடும்

anujanya said...

சங்கர் சொல்ற மாதிரி பிரமாதமான டேடா பேஸ். ஒரு கால கட்டத்தில் அவர் வில்லத்தனமா இல்லை நகைச்சுவையா என்று புரியாமல் செய்ய ஆரம்பித்தது ஒரு சோகம். எதோ ஒரு படத்தில் "இதையும் சொல்லுவீங்கோ; இதுக்கு மேலயும் சொல்லுவீங்கோ" என்ற பஞ்ச் (?) டயலாக் தமாசாகச் சொல்லிக்கொண்டே இருப்பார்.
'கர்ணன்' படத்தில் துரியோதனனாக 'எடுக்கவா கோர்க்கவா' சொன்னது அசோகன் தானே?

அசோகன் பற்றியும், தமிழ் சினிமா வில்லன்கள் பற்றியும் ராஜநாயகம் அவர்களின் வலைப்பூவில் அரிய தகவல்களும், அவர் மற்றும் நாகார்ஜுன் அவர்களின் கண்ணோட்டங்களும் படிக்கலாம்.

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_09.html
http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3133.html

அனுஜன்யா

பாபு said...

"வீடு வரை உறவு" பாடல் பற்றி ஒன்னும் சொல்லலியே,

முரளிகண்ணன் said...

நன்றி அனுஜன்யா. ராஜநாயகம் சாரின் அந்த பதிவுகளை முன்பு படித்துள்ளேன். துரியோதனனை ஞாபகப் படுத்தியதற்க்கு மிக்க நன்றி.
அருமையான வேடம் அது.

ஆம் பாபு. பாத காணிக்கையில் அவர் நடித்த அந்த பாடலை மறந்து விட்டேன். ஞாபகப் படுத்தியதற்க்கு நன்றி.

இணைத்து விடுகிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//narsim said...
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் விஞ்ஞானி எம்ஜியாரும் மஞ்சுளாவும் ஓடி ஓடி தப்பிப்பது போன்ற காட்சியின் முடிவில் மிகவும் சிம்ப்பிளாக அசோகன் "வாங்க முருகன் வண்டில ஏறுங்க" என்று கூறுவார்.. கலக்கல் வில்லன்

//இயக்கம் எம்.ஜி.ஆர்....

Nilofer Anbarasu said...

ரொம்ப சூப்பரா இருக்கு.... மிக நீண்ட தொடராக வரும் என்று நினைக்கிறேன்.

BTW, profileல் இருக்கும் படம் உங்கள் எழுத்துக்கு ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறது :)

Poornima Saravana kumar said...

நல்ல பதிவு :)

Vidhya Chandrasekaran said...

எனக்கு எப்போதுமே அசோகனுக்கும் மனோகருக்கும் பெரிய குழப்பமே வரும். பதிவு நல்லாருந்தது

Divyapriya said...

நல்லா இருந்தது...
அடுத்து பாலாஜிய பத்தி போடுங்க...

நசரேயன் said...

நல்ல தகவல்

Anonymous said...

"Naan" padathil "Singaarammm...." nu iluthththththththu asaithi irupparaen....

nagoreismail said...

அசோகன் நடித்த இன்னொரு மறக்க முடியாத படம், "நான்".

உயர்ந்த மனிதன் படத்திற்கு பிறகு சிவாஜி இவருடன் நடிக்கவே இல்லையாம், காரணம் ஒரு காட்சியில் (பின்னூட்டத்தில் ஜி.ராகவன் கூறிய காட்சி) சிவாஜியை மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்தியது தானாம்

சட்டம் என் கையில் படத்திலும் சில காட்சிகளில் வந்து அசத்தியிருப்பார்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஆராய்ச்சி குறிப்பை கைப்பற்ற நடத்தும் பேரம் அற்புதம். இந்த காட்சியில் பிற நடிகர்கள் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று கலக்க போவதிலோ அல்லது அசத்த போவதிலோ பார்க்க ஆசை

அசோகன் நினைவுகள் அருமை, எம்.ஜி.ஆரை வைத்து சொந்த படம் எடுத்து நஷ்டமாக போய் விட்டதாகவும் சொல்வார்கள்

Unknown said...

'அசோகன் சிவாஜியுடன் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் அவர் அந்தப் படத்தில் (சிவாஜியை விட) மிகையாக நடித்ததே' என்று பின்னூட்டத்தில் ஒரு நண்பர் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. மன்னிக்கவும்,தவறான தகவல்.
1.ஏ.வி.எம். சரவணன் அவர்கள் தமது சுய சரிதையில் சிவாஜி எப்படியெல்லாம் அசோகனை ட்ரையின் செய்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
2. அசோகன் தான் ஒரு எம்.ஜி.ஆர். குரூப் நடிகர் எனும் முத்திரையை பெற்றிருந்தது சிவாஜிக்கு ஒரு இடைஞ்சலாக இருந்ததால் முதலில் அவரை மறுத்த சிவாஜி, பின்னர் ஏ.வி.எம். சரவணன் அவர்களின் வேண்டுகோளினால் அவ்ரது நடிப்பும் சிறப்பாக வரவேண்டி பயிற்சியளிதாராம். பின்னர் அசோகன் ஏ.வி.எம். சரவணன் அவர்காளிடம், சிவாஜி சொன்னதில் 25% தான் நடிக்க முடிந்ததாக சொன்னாராம்.
3. சிவாஜி தனக்கு வேண்டாத(பிடிக்காத) நடிகருக்கும், நடிக்க சொல்லிகொடுத்ததால்தான் அவர் "நடிகர் திலகம்" என பேசப்பட்டார்.
வேலுமணி / ஈரோடு