முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்களை தமிழ்சினிமாவில் பிரதிபலித்தவர் சுருளிராஜன். கலைவானர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுககப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதைகளையுமே களமாகக் கொண்டிருந்தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்திருந்தன. மதுரை வீரன் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார் என் எஸ் கே. அதைத்தவிர சொல்லிக்கொள்ளும் படியான விளிம்புநிலை வேடங்களில் அவர் நடித்தது குறைவே.
அவருக்கு அடுத்து வந்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சந்திரபாபு. அவரும் இம்மாதிரி கேரக்டர்களில் அதிகம் நடித்ததில்லை. சபாஷ் மீனா படத்தில் ஒரு நாடகத்தில் பார வண்டி இழுக்கும் கூலியாக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். நாகேஷும் பெரும்பாலும் மத்திய தர வர்க்க ஏழை கதாபாத்திரங்களிலேயே நடித்து அதிலேயே வித்தியாசம் காட்டி வந்தார். வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு பெரும்பாலும் பணக்கார கேரக்டர்களிலேயே நடித்து வந்தார்கள். மேலும் அவர்கள் சரீரம் அம்மாதிரி கதாபாத்திரங்களுக்கே மிகப் பொருத்தமாய் இருந்தது.
ஆனால் இவர்கள் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் 1975 வரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு மிகக் குறைவு. சுருளிராஜன் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தில் (ஜெய் சங்கரும் இந்தப் படத்தில் தான் அறிமுகம்) சிறு வேடத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 75 வரை அவரும் மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போன்றே நடித்துக் கொண்டிருந்தார். 70 களின் மத்தியில் துரை, மகேந்திரன், ருத்ரய்யா, பாரதிராஜா போன்றோர் சமகால சமூகத்தை சித்தரிக்கும் படங்களை இயக்கத் தொடங்கினர். 1977ல் பெட்டிக்கடை குருவம்மா, அவரது வேலையாள் என அடித்தட்டு மக்களை சித்தரித்த பதினாறு வயதினிலேவின் வெற்றி எல்லாரையும் சமூக படங்களை இயக்க ஊக்கமளித்தது. அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அந்தப் போக்கு தொடர்ந்தது.
இந்தப் போக்கு அதுவரை முதலிடத்துக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சுருளிராஜனுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது. 1980 ஆம் ஆண்டில் மட்டும் அவர் கிட்டத்தட்ட 50 படங்களில் குணச்சித்திர/நகைச்சுவை நடிகராக நடித்தார். இதில் பெரும்பாலான வேடங்கள் அடித்தட்டு, விளிம்புநிலை கதாபாத்திரங்களே. அரவாணி, கழிவு அகற்றும் தொழிலாளி, பிண ஊர்தி ஓட்டுபவர் போன்ற பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். அவரின் மறைவுக்குப் பின்னால் உச்சத்துக்கு வந்த கவுண்டமணி, பின்னர் வடிவேலு ஆகியோரும் இம்மாதிரி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினர்.
1965 ல் சுருளிராஜன் நடிக்க வந்த போது அவரது வயது 27. ஆனால் அவருக்கு கிடைத்த வேடங்கள் பெரும்பாலும் வயதான வேடங்களே. நான், மூன்றெழுத்து போன்ற படங்களில் அவர் தன் வயதுக்கு மீறிய வேடங்களிலேயே நடித்தார். இந்த காலத்தில் அவருக்கு ஆதரவாய் இருந்தவர் இயக்குனர் டி என் பாலு. அவர் வேலை செய்த எல்லாப் படங்களிலும் இவருக்கு வாய்ப்பளித்தார். சுருளிராஜன் பிரமாதப்படுத்திய சில படங்கள்.
மாந்தோப்பு கிளியே
இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கஞ்சப் பிரபு வேடத்தை அவரின் மாஸ்டர் பீஸ் எனலாம். ஜோடியாக காந்திமதி. பனையோலை விசிறி பிய்ந்துவிடும் என அதை நிலையாக வைத்து உடலை விசிறிக்கொள்வதும், விளக்கு இல்லாத நேரத்தில் உடை அழுக்காகிவிடும் என அவிழ்த்து வைப்பதுமாய் அதகளப் படுத்தியிருப்பார். உச்சமாக ஐந்து கிலோ அரிசிக்காகவும், பணத்துக்காகவும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வார். எம் ஏ காஜா இயக்கிய இந்தப் படத்தில் தான் குடும்ப் கட்டுப்பாடு பற்றிய வசனங்கள் தமிழ்சினிமாவில் முதல் முறையாக பேசப்பட்டன.
ஒளி பிறந்தது
அரசாங்க மருத்துவ மனையையும், அங்கு பணி புரிவோர், அதைச் சுற்றி கடை வைத்துள்ளோர், மார்ச்சுவரி, பிண ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோரை களமாகக் கொண்டு துரை இயக்கிய படம். மறைந்த நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன், இதில் பிண ஊர்தி ஓட்டுநராக நடித்திருப்பார். சுருளிராஜனுக்கு குதிரை (ஜட்கா) வண்டி ஓட்டும் வேடம். தொடர்ந்து பிணத்தையே ஏற்றிச் சென்றதால் அந்த குதிரை வெள்ளைத்துணி போர்த்திய பினத்தைப் பார்த்தாலே நின்றுவிடும். பயணிகளை ஏற்றிச் செல்லும் சுருளிராஜன் இதனால் பாதிக்கப்படுவார். இதை அறிந்த ஒரு கூட்டம் அவரை, குதிரையின் வீக்னெஸ்ஸை வைத்து பிளாக்மெயில் செய்யும். ஒருவழியாக குதிரையை மாற்றி தப்பிப்பார்.
மனிதரில் இத்தனை நிறங்களா?
கழிவறை சுத்தப் படுத்தும் தொழிலாளி வேடம் சுருளி ராஜனுக்கு. அந்த ஊர் உயர்ஜாதியினர் தாழ்த்தப் பட்ட மக்களை இழிவாக நடத்துவார்கள். அதனால் பொங்கியெழும் தாழ்த்தப் பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். துணி துவைப்பவரின் தங்கையை சுருளிராஜன் காதலிப்பார். ஆனால் பெண்ணின் அண்ணனோ இவர் நம்மை விட தாழ்ந்த ஜாதி. அதனால் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்பார். உடனே சுருளிராஜன் மத்த ஜாதிக்காரங்கள்ளாம் சேர்ந்து நம்மை தள்ளி வச்சாங்க. இப்போ நமக்குள்ளேயே என்னை தாழ்ந்தவன்கிறீங்க என்பார். 30 ஆண்டுகள் ஆகியும் இந்த பிரச்சினையும் தீராமல் இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் அருந்ததியர்களும், விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் புதிரை வண்ணார்களும் இந்த பிரச்சினைக்கும் உள்ளாகிறார்கள்.
முரட்டுக்காளை
தன் தந்தையைக் கொன்றதற்க்காக பண்னையார் வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கும் கண்க்குப்பிள்ளை வேடம். படத்தை நகர்த்திச் செல்லும் மையப் புள்ளியே கணக்குப்பிள்ளை சுருளிராஜன் தான். ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் நயவஞ்சகமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு தன் காரியத்தை சாத்தித்துக் கொள்வார். ஒரு காட்சியில் ரஜினியின் தம்பிகளின் மேல் திருட்டுக் குற்றம் சாட்டி கட்டி வைப்பார்கள். இதனால் ரஜினி சண்டைக்கு வருவார். அவர் கைகாலை எடுத்து விட வேண்டும் என பேசிக் கொள்வார்கள். சுருளிராஜன் வெளியே வந்து சொல்வார். உடையப் போவது யாருடையது என்பதை நானல்லவா முடிவு செய்யவேண்டும் என்று. கடைசியில் ஜெய்சங்கரை சிறைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்வார்.
ஹிட்லர் உமாநாத்
தன் சுய உழைப்பால் முன்னேறிய வேடம் சிவாஜி கணேசனுக்கு. அதனால் அலுவலகத்தில் கடுமையாக ஹிட்லர் போல நடந்து கொள்வார். அவரை குளிர்விக்க அவரை புகழ்ந்து சுருளிராஜன் பாடும் வில்லுப் பாட்டு மிக பிரபலமான ஒன்று.
பாலாபிசேகம்
ஜெய்ஷங்கர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அரவாணி வேடம் சுருளிராஜனுக்கு.
ரஜினிகாந்துடன் பல படங்களில் தோழனாக, தொழிலாளியாக பல படங்களில் சுருளிராஜன் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்றவற்றில் நல்ல வேடங்கள். ”இப்படி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு சொல்றான் கந்தசாமி” என நான் போட்ட சவால் படத்தில் அவர் ரஜினியிடம் பேசும் வசனம் பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட ஒன்று.
அவர் ஏற்று நடித்த வேடங்களுக்கு ஏற்பவே அவரது வசனங்களும் இருக்கும். ஒரு படத்தில் தண்டனையாக அவரை வடைக்கு ஆட்டச் சொல்லும் போது உளுந்த வடைக்கா? மசால் வடைக்கா? என்று கேட்பார். அவருடன் வருபவர் எதற்கா இருந்தா என்ன? என்பார். உடனே இவர் சொல்வார். மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும். உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என்பார். சமையல் தொழிலாளியாக, மெக்கானிக்காக எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றார்போல தன் வசன்ங்களை அமைத்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது.
இதற்க்கு முக்கிய காரணம், அவரின் கூர்ந்த கவனிப்பே. பெரியகுளத்தில் 1938ல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு மனிதர்களும் அவரின் பிற்கால வேடங்களுக்கு கச்சாப் பொருளாய் இருந்தன. தற்போது வடிவேலுவின் முக்கிய பாணியாய் விளங்கும் உதார் விடும் சாமான்யன் வேடம், மதுரையில் அவர் பார்த்த பல உதார் பார்ட்டிகளிடம் இருந்து எடுக்கப்பட்டதே. மதுரையில் தெருவுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.
சுருளிராஜனின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று. அடித் தொண்டையில் உருவாகி கீச்சுக்குரல் போல ஒலிக்கும். எம் ஆர் ராதாவுக்கு பின்னால் வந்த குரல்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் அது. மிமிக்ரி கலைஞர்களால் அதிகம் உபயோகிக்கப்படும் குரலும் கூட. அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு மெருகேற்றியது அவர் குரலே.
1980 ல் அவர் இறந்தார். 82 ஆம் ஆண்டுவரை அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இடைவிடா படப்பிடிப்பும், அவரது குடிப்பழக்கமும் அவர் 42 வயதிலேயெ மறையக் காரணமாய் இருந்தன. 10 ஆண்டுகள் போராடி முதல் இடத்துக்கு வந்தார். தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.
இவர் ஜெய்சங்கருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமை பெரும்பாலும் விஜய் டி வி யிடமும், ராஜ் டி வி யிடமும் உள்ளது. இந்தத் தொலைக்கட்சிக்கான பார்வையாளர்கள் குறைவு என்பதால் புதிய தலைமுறையிடம் சுருளிராஜன் சரியாக சென்று சேரவில்லை. இவர் படங்கள் ராஜ் டிஜிடல் பிளஸ் சேனலில் அகால நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. தற்போது நகைச்சுவைக்கெனவே ஆதித்யா, சிரிப்பொலி போன்ற சேனல்கள் துவக்கப் பட்டுள்ளதால் இவரது காட்சிகள் ஒளிபரப்பப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் சன் மற்றும் கலைஞர் குழுமம் இவருக்குரிய மரியாதையைக் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
சுந்தர் சி நடிக்கும் முரட்டுகாளை ரீமேக்கில் சுருளிராஜன் வேடத்தில் விவேக் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

39 comments:
அதிகமாக இவருடைய படக்காட்சிகளை பார்க்க முடிவதில்லை
கமலின் உல்லாச பறவைகள் திரைப்படம் மூலமாகத்தான் பார்க்க முடிகிறது தொலைகாட்சியில்(இந்த படம் அடிக்கடி ஒளிபரப்பாவதால்)
வழக்கம்போல் கலக்கலான தொகுப்பு:)
தல அருமையான தகவல்கள்....
//இவர் நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமை பெரும்பாலும் விஜய் டி வி யிடமும், ராஜ் டி வி யிடமும் உள்ளது. இந்தத் தொலைக்கட்சிக்கான பார்வையாளர்கள் குறைவு என்பதால் புதிய தலைமுறையிடம் சுருளிராஜன் சரியாக சென்று சேரவில்லை.//
உண்மை
சமீபத்தில் எங்க வீட்டு பிள்ளை படம் பார்த்தேன்.
பத்திர பதிவாளராகவும், எம்.ஜி.ஆர் வீட்டு வேலைக்கரரகவும் - (நான் ஆணையிட்டால் பாடல்போது) அடுத்தடுத்த இரு காட்சிகளில் வருகிறார்.
முரளி.. எனக்கு மிக மிகப் பிடித்த நடிகர் சுருளி..
’சங்கே ஒதுங்குது’ ஒரு தண்டவாளத்தையே கொண்டார்றேன்’ போன்ற வாக்கிய மாடுலேஷன்ங்கள் யாராலும் செய்ய முடியாது..அவரைத்தவிர
..கலக்கல் முரளி.. இன்னொரு முறை பதிவை படித்துவிட்டு வருகிறேன்
அடச்சே... நானும் மீ த பஸ்டு போற்றலாம்னு பார்கிறேன், அதுக்குள்ளே யாரவது வந்து விடுகிறார்கள். அதனாலே மீ த ஆறாவது.
சுருளி ஒரு முக்கிய மைல் கல். திருமலை தென்குமரியில் கூட மனோரமாவுடன் நன்றாக நடித்தார். பெரியகுளமா? அதான் இவ்வளவு பிரமாதமான பதிவு முரளி!
அனுஜன்யா
பாபு,வித்யா,அத்திரி,தஞ்சாவூர்காரன்,நர்சிம்,நையாண்டி நைனா,அனுஜன்யா தங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
/சுந்தர் சி நடிக்கும் முரட்டுகாளை ரீமேக்கில் சுருளிராஜன் வேடத்தில் விவேக் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.//
இன்று விவேக் எத்தனையோ படங்களில் இவர் நடிப்பை, காமெடியை ஏற்கனவே ரீ மிக்ஸ் செய்துவிட்டார்.......
என்ன சொன்னாலும் சுருளி சுருளி தான், அது போல நாகேஸ், கவுண்டர், ஜனகராஜும்
\\இன்று விவேக் எத்தனையோ படங்களில் இவர் நடிப்பை, காமெடியை ஏற்கனவே ரீ மிக்ஸ் செய்துவிட்டார்\\
சரியாக சொன்னீர்கள் அருண்மொழிவர்மன்
சுருளி,கல்லாப் பெட்டி,தேங்காய்..இவர்கள் மறைவுக்கு காரணம்..குடிதான் என்பது வேதனை அடைய வேண்டிய விஷயம்
ராதாகிருஷ்ணன் சார் தங்கள் வருகைக்கு நன்றி
நல்ல தகவல்கள்.
ஜானி படம்கூட இவர் நடித்ததில் முக்கியமான படம்.
கல்லா பெட்டி சிங்காரம் பற்றிய தகவல்கள் கிடைத்தால் சொல்லுங்கள்.
அருமையான தகவல்களோடு நல்ல பதிவு
நல்ல அருமையான தகவல்கள்.
என்ன நண்பர்களே இது என்ன மலரும் நினைவுகள் வாரமா...??
இப்பதான் கானபிரபா ரமணனை நினைவு கூர்ந்து மிகச்சிறந்த பதிவை இட்டுள்ளார்.
"பசி" திரைபடப்த்திலும் சுருளி கலக்கல்.
நல்ல அலசல்கள். தொடரட்டும்...
வாழ்த்துகள்.
கவுண்டமணியை திரும்ப, திரும்ப காட்டும் தற்போதைய தொலைக்காட்சிகள், சுருளியின் படக்காட்சிகளை காட்டினால் கண்டிப்பாய் என் போன்ற இளைஞர்களுக்கு அவருடய நகைச்சுவையின் வீச்சை தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்
மற்றபடி.. வழக்கம் போல் சூப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்... முரளி..
தேங்காயப் பத்தி லைட்டா அடிச்சுவிடுண்னே.
செம காமெடியா இருக்கும்.
சுருளி ரொம்ப யதார்தமாக நடிப்பவர் . மாந்தோப்பு கிளியே நான் 7 வது படிக்கும் போது பார்த்தது . அவர் நடித்த படங்களை அழாகாக வரிசை படித்தி பழைய நினைவுகளை தூண்டியது உங்கள் பதிவு .......
//என் போன்ற இளைஞர்களுக்கு அவருடய நகைச்சுவையின் வீச்சை தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்//??????
Cable Sankar மையாலுமா.........?:)
முரளி u are the great.....
"ஒரு கையில பென்சிலோடும் இன்னொரு கையில ரப்பரோடும் அந்த குழந்தை பிறந்தது. ஆனா பிறந்த உடனே அந்த ரப்பர தூக்கி கடாசிடுச்சு... "
"ஏண்ணே...?"
"தப்பா எழுதினாத் தானே அழிக்க அலி ரப்பர் தேவை...."
- இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது அந்த ஹிட்லர் உமாநாத் வில்லுப் பாட்டு. அதை கேட்ட நினைவு இன்னும் இருக்கிறது.
போரடிக்குது..
அதனால் ஸ்மைலியோட போரேன். :)
ஹிட்லர் உமாநாத் பாட்டை யூடியூப்புல வலையேத்தி ஏற்கனவே பதிவும் போட்டிருக்கேன்.
http://gragavan.blogspot.com/2008/03/blog-post.html
சுருளிராஜன் எனக்கும் மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். காசி யாத்திரை படம் ரொம்பப் பிடிக்கும்.
நண்பன், கானா பிரபா, வண்ணத்துப் பூச்சியார், கேபிள் சங்கர் தங்களின் வருகைக்கு நன்றி.
ஒரிஜினல் மனிதன் விரைவில் தேங்காய் சீனிவாசன் பற்றிய பதிவை எழுதுகிறேன். தவறாது ஆதரவு தாருங்கள்.
மலர், டாக்டர் சிண்டோக், நவநீதன் தங்களின் பகிர்தலுக்கு நன்றி.
கார்க்கி நன்றி.
ஜிரா தங்களின் வருகைக்கு நன்றி.தங்கள் பதிவின் மூலம் மீண்டும் அந்த வில்லுப் பாட்டை இன்று கேட்டேன்
ஹிட்லர் உமானாத் வில்லுப்பாடு ரெம்பப் பிரபலம்.
கொசுவர்த்தி சுத்த வச்சிட்டீங்க.
யார் மறந்தா என்ன???நீங்களாவது அவர மறக்காம இருக்கீங்களே!!!
அருமையான நடிகர்...பதிவும் கலக்கல் ;)
எனக்கு ஜானி படத்தில் இவரை ரொம்ப பிடிக்கும் ;)
நல்ல தொகுப்பு முரளி
//வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு பெரும்பாலும் பணக்கார கேரக்டர்களிலேயே நடித்து வந்தார்கள். மேலும் அவர்கள் சரீரம் அம்மாதிரி கதாபாத்திரங்களுக்கே மிகப் பொருத்தமாய் இருந்தது//
உண்மை தான்
//மாந்தோப்பு கிளியே//
:-)) இந்த படம் பார்க்க வேண்டும்
முரளிக்கண்ணன் மற்ற பதிவுகளை விட இதில் அதிக விவரங்கள் கூறியது போல இருக்கிறது.. நல்லா இருந்தது
வடகரை வேலன், அப்துல்லா, கோபிநாத், நசரேயன்,கிரி வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
அருமையான பதிவு...
அவர் இவ்வளவு பண்ணிருந்தாலும் மாந்தோப்பு கிளியே தான் எல்லாரும் ஞாபகம் வெச்சிருக்காங்க.
யாராவது கஞ்சமா இருந்தா சுருளிராஜன் தோத்தாண்டா உன்கிட்ட அப்படினு தான் சொல்லுவோம்...
நன்றி வெட்டிப்பயல்.
//மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும். உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என்பார்//
அட! ஜூப்பர். :)
எனக்கும் மிகவும் பிடித்த நடிகர், சுருளிராஜன். அருமையாக அவரைப்பற்றிப் பதிவு செய்திருக்கிறீர்கள். விளிம்புநிலை மனிதர்களை அதிகம் சித்தரித்த நடிகர் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டி இருப்பது கூடுதல் சிறப்பு.
Hi muralikannan ungal katturai arumai.. neengal indiyavil irundhal ungal mobile yennai kodukkavum. naan mobilil pesugiren.
thanks,
arun m.
அற்புதமான கட்டுரை.
ஜானி படத்தை சொல்ல மறந்து விட்டீர்களே?
"ஏய் ஜானி, என்னப்பா, உன்னை தெரியாதா எனக்கு?" என்று சுருளி பார்பர் ரஜினியிடம், அவரை ஜானி என்று நினைத்துக்கொண்டு சொல்லும் வசனம், மிக பிரபலம் ஆயிற்றே?
Suruli is not exactly my favourite comedian, but I do appreciate what he has done. I recall well that when we were kids, we had this cassette which had only comedy scenes of Manthoppu KiLiyee. I lost count how many times we brothers listened to it. Very, very funny. Yes, and he is a unique comedian. He had his own style. A loss indeed.
Again, a great writeup, Mr. Murali. Wonderful posting.
சர்வேசன், தீபா வருகைக்கும் கருத்துக்களுகும் நன்றி.
ஆதவன் நான் சென்னையில்தான் இருக்கிறேன். எண் அனுப்புகிறேன்.
ஜோ, ஜானி அனைவருக்கும் தெரிந்த படம் என்பதால் விட்டுவிட்டேன்.
நன்றி ராகேஷ்குமார்
ஜானி திரைப்படத்தில் கணமான கதாபாத்திரம் சுருளிக்கு
Post a Comment