கவுண்டமணி ஏற்று நடித்த வேடங்களை திரைக்கதையில் அதன் பங்கு என்ற வகையில் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
1. 1976 முதல் 1981 வரை ஏற்று நடித்த கதையை நகர்த்த உதவும் வேடங்கள்.
2. 1982ல் வெளியான பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் படங்களின் மூலம் கிடைத்த பிரபலம், 84ல் வெளியான வைதேகி காத்திருந்தாளில் உச்சத்துக்கு போனது. அதனால் அவருக்கு கிடைத்த தனி காமெடி டிராக்குகள். இதற்க்கும் படத்தின் மையக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
3. 1985 முதல் 87 வரையில் இவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் (பணம் பத்தும் செய்யும், பிறந்தேன் வளர்ந்தேன்)
4. 1990ல் வெளியான பி வாசு இயக்கிய வேலை கிடைச்சுடுச்சு திரைப்படத்தில் கதாநாயகன் சத்யராஜுடன் இணைந்து படம் முழுவதும் வரும் வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றியாலும், இந்த இணைக்கு கிடைத்த வரவேற்பாலும் தொடர்ந்து கதாநாயகர்களுடன் பவனி வர ஆரம்பித்தார். சத்யராஜுடன் 20 படங்கள் வரையிலும் இவ்வாறு நடித்தார். இந்த காலகட்டத்தில் பீல்டில் இருந்த எல்லா நாயகர்களுடனும் அட்டகாச பவனி வந்தார். சில படங்களில் நாயகிகளை விட நாயகனுடன் இவரது காட்சிகள் அதிகம் இருக்கும்.
5. வி சேகர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஏற்று நடித்த நகைச்சுவையுடன் கூடிய குணசித்திர வேடம். (பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் போன்ற படங்கள்)
6. மிக அரிதாக நடித்த வில்லன் வேடங்கள் (ரகசிய போலிஸ் 115(சரத்,நக்மா), ஞானப்பழம், முத்துக் குளிக்க வாரியளா?,சக்கரவர்த்தி)
இது தவிர சில படங்களில் கதாநாயகனுடனான நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கும், தனி டிராக்கும் இருக்கும்.இதில் எந்த காட்சிகள் அதிகம் வருகிறதோ அந்த வகையில் சேர்த்துவிடலாம்.
இந்தப் பதிவில் கவுண்டமணியின் காமெடி டிராக்குகளைப் பார்ப்போம்.
படத்துடன் ஒட்டாத காமெடி டிராக் என்பது கலைவானர் என் எஸ் கிருஷ்ணன் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அப்போதைய தயாரிப்பளார்கள் படத்தில் பெப் குறைவதாக கருதினால் நேரே கலைவானரிடம் வருவார்கள். அவரும் எடுத்த படத்தைப் போட்டுப் பார்த்துவிட்டு அந்த கதைக்கு எந்த மாதிரியான களத்தில் நகைச்சுவை டிராக் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அதன்படி நடித்து தருவார். இந்த டிராக்குகளுக்காவே பல படங்கள் அப்போது ஓடின.
இதேபோல் பல நகைச்சுவை நடிகர்களும் தனி டிராக்கில் காமெடி புரிந்துள்ளார்கள். இப்பொழுது வடிவேல்,விவேக் வரை இது தொடர்ந்து வருகிறது. தங்கவேல் (கல்யாணப் பரிசு), சுருளிராஜன் (மாந்தோப்புக் கிளியே), வடிவேலு (கண்ணாத்தாள், நேசம் புதுசு) என சொல்லிக் கொண்டே போகலாம்.
கவுண்டமணிக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தவை இம்மாதிரியான டிராக்குகளே.
வைதேகி காத்திருந்தாள் - ஆல் இன் ஆல் அழகுராஜா
உதயகீதம் - சிறு திருட்டு செய்பவரில் இருந்து போலி சாமியார்
பகல்நிலவு - சிறு உணவகம் நடத்தும் ஜார்ஜ் குட்டி
உன்னை நான் சந்தித்தேன் - ஹோட்டல் சப்ளையர்
கீதாஞ்சலி - வாடகை குதிரை நடத்துனர்
இதயகோயில் - சிகை அலங்கார நிபுணரில் இருந்து கர்நாடக சங்கீத பாடகர்
நானே ராஜா நானே மந்திரி - ஒத்தமீசை குப்புசாமி
மண்ணுக்கேத்த பொண்ணு - நாட்டு வைத்தியர்
கரகாட்டக்காரன் - தவில் வித்வான்
தங்கமான ராசா - ஊமையாய் நடிக்கும் பாடகராகும் ஆசை உள்ள திருடன்
நல்லதை நாடு கேட்கும் - சாட்டையால் அடித்து பிட்சை கேட்பவர்
ஊருவிட்டு ஊரு வந்து - பேயோட்டி
புதுப்பாட்டு - பழங்கால நாணயத்துக்கு பணம் கிடைக்கும் என்பதால் அதை வைத்திருப்பவரை தாங்குபவர்
இம்மாதிரி பல படங்களில் அவர் தனி காமெடி டிராக்கில் நடித்தார். இந்தப் படங்களில் ஓரளவு கதை இருக்கும். இளையராஜாவின் அருமையான பாடல்கள் இருக்கும். பெரும்பாலும் மிகை ஹீரோயிசம் இருக்காது. இம்மாதிரிப் படங்களுக்கு அனைத்து தரப்பினரையும் தியேட்டருக்கு அழைத்துவர கவுண்டமனியின் காமெடி உதவியது. இந்தப்படங்களின் வசனக் காட்சிகளை (டாக்கி போர்ஷன்) இரண்டு மூன்று முறைக்கு மேல் இப்போது பார்க்க முடியாது. ஏன் பாடல்காட்சிகளை கூட பார்க்க முடியாது. பாடல்களை சலிக்காமல் கேட்கலாம், நகைச்சுவைக் காட்சிகளை சலிக்காமல் பார்க்க முடியும்.
1990ல் வேலை கிடைச்சுடுச்சுவின் வெற்றிக்குப் பின் அவர் கதாநாயகனுடன் இணைந்து பல படங்களில் தோன்றினாலும், சில படங்களில் தனி டிராக்குகளிலும் வெற்றிநடை போட்டார்.
சின்னதம்பி - மாலைக்கண் நோய் உள்ள சமையல்காரர் பாத்திரம்
சின்னக் கவுண்டர் - சலவைத் தொழிலாளி
சூரியன் - பன்னிக்குட்டி ராமசாமி என்ற உள்ளூர் அரசியல்வாதி
ஆவாரம் பூ - தச்சர்
சின்ன வாத்தியார் - இரண்டு பொண்டாட்டி ஜோசியர்
கோட்டைவாசல் - கோவில் அர்ச்சகர்
தங்கமனசுக்காரன் - கிடாரிஸ்ட்
கிழக்குகரை - நாகரீக ஆசை பிடித்தவர்
ஊர் மரியாதை - கிராமத்து மைனர்
பெரிய கவுண்டர் பொண்ணு - கொல்லர்
ராசாத்தி கோவில் - நாவிதர்
ஜல்லிக்கட்டுகாளை - எண்ணெய் மில் ஊழியர்
பெரியமருது - ஈயம் பூசுபவர்
ரசிகன் - போலிஸ் ஏட்டு
கூலி - மில் கேண்டின்
மாமனிதன் - சுடுகாட்டு பணியாளர்
அவதார புருஷன் - பிக் பாக்கெட் பெரியசாமி
டேவிட் அங்கிள் - லாரி உரிமையாளர்
சூரிய பார்வை - அமெரிக்க ரிட்டர்ன்
எதிரும் புதிரும் - ஜோசியரால் ஏமாறுபவர்
இவையெல்லாம் சில படங்கள் தான். முழுத் தொகுப்பு அல்ல.
இந்த டிராக்குகளை கவுண்டமணிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் ஏ வீரப்பன் மற்றும் ராஜகோபால். இந்த எழுத்தாளர்கள் கொடுப்பது வெறும் ஸ்கெலிடன் மட்டுமே. அதற்க்கு உயிர் கொடுத்து திரையில் உலாவ விடுவது கவுண்டமணியின் தனித்திறமை. ஒரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். வெளியாகி 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நம்மை சிரிக்க வைப்பது சூரியனில் வரும் கூப் சீன். கதையில் பார்த்தால், கதாநாயகனை அந்த கூப்பில் வேலைக்கு சேர்ப்பதற்க்காக அழைத்து வரும் காட்சி. இந்த காட்சிக்கு ஸ்க்ரிப்டில் இவ்வளவு துல்லியமாகவா வசனம் இருந்திருக்கும்?. அதற்க்கு உயிர் கொடுத்து அந்த காட்சியில் பேசப்பட்ட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா, ஒரெ குஷ்டமப்பா, எம்மெல்லே நாலயே முடியலயாம் போன்ற வசனங்களை பட்டி தொட்டியெல்லாம் பேசவைக்க கவுண்டமணியால்தான் முடியும்.
அடுத்து இந்த டிராக்குகளின் குறையாக சொல்லப்படுவது செந்திலை எட்டி உதைப்பது. எந்த செட்டிலுமே செந்திலின் கதாபாத்திரத்தைப் போல ஒரு அப்பாவியும், ஊமை குசும்பனும் இருப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி நல்லது கூட நடக்கும். இவனுக்கெல்லாம் இது நடக்குது பாரேன் என்று பலர் அங்கலாய்ப்பார்கள். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை கலாய்ப்பது இந்த டிராக்குகளில் ஒரு அங்கம். டாம் அண்ட் ஜெர்ரியில் டாம், ஜெர்ரியை மரண அடி அடிக்கும். அதை நாம் என்னப்பா சும்மா அடிக்கிறது காமெடியா? எனக் கேட்கிறோமா? ஜெர்ரி நாயிடம் மாட்டிவிட்டோ அல்லது மற்ற வகையிலோ பழி வாங்குவதைப் போல செந்திலும் தானே பழிவாங்குகிறார்.
தற்போதைய மிமிக்ரி நிகழ்ச்ச்சிகளில் கவுண்டமணியை காட்சிப்படுத்த கைகாலை உதைத்து காண்பிக்கிறார்கள். இந்த மேனரிசத்தை அவர் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக நடிக்கும் போது செய்தது கிடையாது. தச்சராகவோ,அரசியல்வாதியாகவோ, வெட்டியானாகவோ நடிக்கும் போது செய்தது கிடையாது. அந்தந்த பாத்திரங்களுக்கு என்ன பாடி லாங்குவேஜோ அதைத் தான் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இயக்குனர்கள் கவுண்டமணியை கவுண்டமணியாகவே நடிக்க வைக்க நினைக்கும்போதுதான் அந்த மாதிரி சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு வேடம் என்றால் அதற்க்கென்று ஒரு குணநலன், தொழில், வயது என்று போன்ற விஷயங்களுடன் அமைக்கப் படவேண்டும். பின்னாளைய இயக்குனர்கள் அவருக்கு கதாநாயனின் மாமன் அல்லது நண்பன் வேடம் கொடுத்தார்கள். அதற்க்கு எந்த வித டெஸ்க்ரிப்ஷனும் கிடையாது. அதில் என்ன பாடி லாங்குவேஜ், மாடுலேஷன் காட்ட முடியும்? கையைக் காலை உதைத்து கத்த வேண்டியதுதான். ஆனாலும் அவர் சிரிக்க வைத்தார்.
ஒருவகையில் இளையராஜாவும்,கவுண்டமணியும் ஒன்று. இருவரிடமும் புதிய இயக்குனர்கள் பயந்து சரியாக வேலை வாங்காமல் விட்டு விட்டார்கள்.
34 comments:
அட்டகாசமான ஆராய்ச்சித் தொகுப்பு...
கலக்கல்ஸ்...
அட்டகாசம்ண்ணா.. :)
செம நடை..
"மன்னன்" செமையா இருக்கும்.. "வேலை செய்ய தெரியாத அளவுக்கு படிச்சிருக்கேன்.."
//ஒருவகையில் இளையராஜாவும்,கவுண்டமணியும் ஒன்று. இருவரிடமும் புதிய இயக்குனர்கள் பயந்து சரியாக வேலை வாங்காமல் விட்டு விட்டார்கள்.//
ஆமாங்க..
ஆனா இப்போது சமீபத்தில் வந்த தங்கம் படத்திலும் கலக்கி இருந்தார்..
//சத்யராஜுடன் 20 படங்கள் வரையிலும் இவ்வாறு நடித்தார்//
ஒரு புதிய படத்தின் துவக்கவிழாவில் அந்தப் படத்தில் நடித்த ஜோடிகளைப் பற்றி பேசும் போது ஒருவர் ’’அவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக உள்ளது’’ என்றார். பின்னர் பேசிய சத்தியராஜ் “இங்கே பேசும் போது அந்த ஜோடிகளுக்கு கெமிஸ்ட்ரி அருமையாக உள்ளதுன்னாங்க. அப்படின்னா என்னன்னு கேட்டேன்?? அது இருவருக்கும் இயல்பாக உள்ள ஈர்ப்பைக் குறிப்பதுன்னாங்க. என் தலையெழுத்தப் பாருங்க எனக்கு கெமிஸ்ட்ரி கவுண்டமணி அண்னனோட தான் ஒர்கவுட் ஆகுது” அப்படின்னார்.
:)))
இவரது நகைச்சுவை தொகுப்புகள் இப்பொது கூட பலத்த வரவேற்பை பெறுபவை..
//தற்போதைய மிமிக்ரி நிகழ்ச்ச்சிகளில் கவுண்டமணியை காட்சிப்படுத்த கைகாலை உதைத்து காண்பிக்கிறார்கள். இந்த மேனரிசத்தை அவர் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக நடிக்கும் போது செய்தது கிடையாது. தச்சராகவோ,அரசியல்வாதியாகவோ, வெட்டியானாகவோ நடிக்கும் போது செய்தது கிடையாது. அந்தந்த பாத்திரங்களுக்கு என்ன பாடி லாங்குவேஜோ அதைத் தான் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இயக்குனர்கள் கவுண்டமணியை கவுண்டமணியாகவே நடிக்க வைக்க நினைக்கும்போதுதான் அந்த மாதிரி சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தார்.//
நிதர்சனமான உண்மை... சூப்ப்பப்ப்ப்ப்ர்ர்ர்ர் முரளி..
சின்னப்பையன், சரவணகுமார் எம் எஸ் கே,அப்துல்லா, அருண்மொழிவர்மன்,கேபிள் சங்கர் தங்கள் வருகைகு நன்றி
நல்ல தொகுப்பு முரளி:)
வழக்கம் போல கலக்கல் பதிவு...
உதயகீதம் படத்துல தலைவர் பேரு பாலாஜி :)
உதயகீதம் :)
http://www.youtube.com/watch?v=kz-8cKkYvpc&feature=related
இன்றும் நகைச்சுவை காட்சிகளில் இவரது காட்சிக்குதான் மவுசு அதிகம்.. சூப்பரா போயிட்டு இருக்குங்க
மலைக்க வைத்து விட்டீர்கள்.
நன்றி.
அன்னெ உங்கலுகு திரைப்பட அரிவு ரொம்ப அதிகம், சமுதாயத்க்கு உதவரமாதிரி ஏதாவது எலுதுங்க.
அண்ணெ உங்களுக்கு திரைப்பட அறிவு ரொம்ப அதிகம், சமுதாயத்துக்கு உதவரமாதிரி ஏதாவது எழுதுங்க,ரொம்ப வெண்டாம் அப்பப்ப கொஞ்சம் எழுதுங்க
சத்யராஜ்-கவுண்டமணி கூட்டணி நகைச்சுவை காட்சிகள் எப்போதுமே எனக்கு விருப்பமானவை.அதுவும் "மாமன் மகள்" மற்றும் "புதிய மனிதன்","பங்காளி" போன்ற படங்கள் இருக்கிறதே...வயிறு வலித்து விடும் போங்கள்..பாட்டு கற்றுக்கொள்ள வாழைப்பூவை காதில் வைத்துக்கொண்டு "நல்லா கேட்டியாப்பா,உங்க அம்மா இந்த பூவதான் சொல்லுச்சா"என்று கேட்பது டாப்.அப்புறம்,அந்த திருவிழாவில் மைக் செட் போடு காணாம போன மனைவியை புருஷனோடு சேர்த்து வைப்பார் அது இதை விடவும் சூப்பரா இருக்கும்.அதுவும் "ராமையா வொஸ்தாவையா" பாட்டை அனுபவித்து மாடுலேசனுடன் பாடுவதாக அவர் விடும் அலப்பறை இருக்கிறதே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
வித்யா, வெட்டிப்பயல்,கார்கி,மாதவராஜ்,இராமதிரு,பட்டாம்பூச்சி தங்கள் வருகைக்கு நன்றி
என்றும் கவுண்டமணிக்கு ஒரு இடம், தனி இடம் உண்டு. டைமிங்க்கு அண்ணனை அடிச்சுக்கவே முடியாது.
சினிமா பதிவுக்கு உங்களை மிஞ்ச முடியாது.
வழக்கம் போல அடிச்சு ஆடுறீங்க தலைவா...!
முரளி கண்ணனின் வரப்போகும் பதிவு தலைப்புக்கள்....
தமிழ் சினிமாவில் இரண்டாம் காதாநாயகர்கள்
குணச்சித்திரத்தில் கோடி கட்டிய நடிகர்/நடிகைகள்...
தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட இயக்குனர்கள்
தமிழ் சினிமாவில் எடிட்டர்களின் பங்கு.
தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்த கேமரா மேன்கள்.
ஆட்டோகிராப் சேரனின் சமீபத்திய படங்களின் தோல்விக்கு காரணம் என்ன?
இந்த தலைப்புகளில் பாகம் 1, 2, 3, என எழுதுவார் என் எதிர்பார்க்கலாம்....!
தொகுப்பு கலக்கல்..
அர்ஜீனோடும் ; சில படங்களில் கலக்கியிருப்பார்.. ஜென்டில்மென், ஜெய்ஹிந் அப்புறம் இன்னொரு படம் சில்வஸ்டான்னு ஒரு நடிகரா வருவார்..
எழுத்தாளர்கள் கொடுப்பது வெறும் ஸ்கெலிடன் மட்டுமே. அதற்க்கு உயிர் கொடுத்து திரையில் உலாவ விடுவது கவுண்டமணியின் தனித்திறமை. ஒரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். வெளியாகி 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நம்மை சிரிக்க வைப்பது சூரியனில் வரும் கூப் சீன். கதையில் பார்த்தால், கதாநாயகனை அந்த கூப்பில் வேலைக்கு சேர்ப்பதற்க்காக அழைத்து வரும் காட்சி. இந்த காட்சிக்கு ஸ்க்ரிப்டில் இவ்வளவு துல்லியமாகவா வசனம் இருந்திருக்கும்?. அதற்க்கு உயிர் கொடுத்து அந்த காட்சியில் பேசப்பட்ட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா, ஒரெ குஷ்டமப்பா, எம்மெல்லே நாலயே முடியலயாம் போன்ற வசனங்களை பட்டி தொட்டியெல்லாம் பேசவைக்க கவுண்டமணியால்தான் முடியும்.
//
மிகச் சரியான ஆய்வு.. அவரின் டயாலாக் டைமிங் அபாரமாக இருக்கும்..
முரளி கண்ணன்.. மிக அசத்தலான அலசல் என்பதையும் தாண்டி நிறைய முனைப்புடன் எழுதியிருப்பது தெரிகிறது..
விகடன் 43ம் பக்க வரிகளுக்கு ஏற்ப.. மிக அருமையான ப்திவுகளில் இதுவும் ஒன்று..
வாழ்த்துக்கள்..
adraa sakka adraa sakka
adraa sakka adraa sakka
அண்ணாச்சி பட்டையை கிளப்புறிங்க...கவுண்டர் தொகுப்பு சூப்பரு ;)
நையாண்டி நைனா, நவநீதன், நர்சிம், தமிழன் கறுப்பி, ரமேஷ் வைத்யா, கோபிநாத் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி
கோயில் காலை படத்தில்.. கவுண்டர், செந்தில், வடிவேலு மூவரும் இளநீர் வியாபாரம் செய்து, பின்னர் செந்தில் பிரிந்து பிச்சைக்காரர் ஆகி கந்து வட்டிக்கு விட்டு சம்பாதிப்பார்..கவுண்டரும் போட்டிக்கு பிச்சை எடுக்கும் பொது, கோயில் வாசலில் நின்று போவோர் வருவோரிடம் வாய் கொடுப்பார்.. அப்போ ஒரு பிச்சைக்காரர் "என்ன வாய் உனக்கு?" என, கவுண்டர் "தோல் வாய்டா நாயே" என்பார்... பின்னர் அந்த பிச்சைக்காரர் " நீ இருக்குற இடத்துல எனக்கு பிச்சை கிடைக்காது" என, அதற்க்கு கவுண்டர் "ஒ.ஓஒ.. இவுரு பெரிய்ய கவருமெண்டு ஆபீசரு, வேலைய ரிசைன் பண்ணிட்டு போறாரு.. சொறி புடிச்ச மொண்ண நாயி, முக்குல பிச்சை எடுக்குறதுக்கு லொள்ள பாரு" ம்ம்பார்.. அந்த படம் அவருக்கு மாஸ்டர் பீஸ்..
Super!!
அடுத்த "கவுண்டமணி - பகுதி (4)" போஸ்ட் முழுவதும் 'சேரன் பாண்டியன்' காமெடி பற்றியா?
//கீ - வென் said...
கோயில் காலை படத்தில்.. கவுண்டர், செந்தில், வடிவேலு மூவரும் இளநீர் வியாபாரம் செய்து, பின்னர் செந்தில் பிரிந்து பிச்சைக்காரர் ஆகி கந்து வட்டிக்கு விட்டு சம்பாதிப்பார்..கவுண்டரும் போட்டிக்கு பிச்சை எடுக்கும் பொது, கோயில் வாசலில் நின்று போவோர் வருவோரிடம் வாய் கொடுப்பார்.. அப்போ ஒரு பிச்சைக்காரர் "என்ன வாய் உனக்கு?" என, கவுண்டர் "தோல் வாய்டா நாயே" என்பார்... பின்னர் அந்த பிச்சைக்காரர் " நீ இருக்குற இடத்துல எனக்கு பிச்சை கிடைக்காது" என, அதற்க்கு கவுண்டர் "ஒ.ஓஒ.. இவுரு பெரிய்ய கவருமெண்டு ஆபீசரு, வேலைய ரிசைன் பண்ணிட்டு போறாரு.. சொறி புடிச்ச மொண்ண நாயி, முக்குல பிச்சை எடுக்குறதுக்கு லொள்ள பாரு" ம்ம்பார்.. அந்த படம் அவருக்கு மாஸ்டர் பீஸ்//
:-)))))
ஏங்க! இளனில தண்ணி இருக்குமா..ம்ம்ம் பின்ன இளனில தண்ணி இல்லாம தயிரா இருக்கும் ..கேட்கறானுக பாரு கேள்வி :-))))
http://www.youtube.com/watch?v=1hyLlKzybmU
இந்த வீடியோ வை பாருங்க...ஸ்பெஷல் ஆ கவுண்டரோட ரெஸ்பான்ஸ் பொண்ண பாக்கும்போது..படம் ராஜகுமாரன்
வாழ்த்துக்கள் முரளிகண்ணன் உங்கள் பதிவைப் பற்றிய அறிமுகம் ஆனந்த விகடனில் வந்துள்ளது.continue your work till and beyond it appears in the times
பட்டாம் பூச்சி, கீவென்,கிரி,கார்த்திகேயன்,ஸ்பைடி தஙகள் வருகைக்கு நன்றி
Mr. Murali, you are spot on on Tom & Jerry. Naan nenechathai appadiyee sonneengga. I shall move on to part 4 now. Excellent writeup.
மற்றவர்களை போல அவரது மாஸ்டர் பீஸ் என்று ஒன்றிரண்டு படங்களை மட்டும் காட்டமுடியாது குறைந்தது ஒரு 50 படங்களாவது வரும், அதுவே அவரது பெரிய சாதனை.. எல்லோரும் விரும்பும் கலைஞனைப் பற்றிய அருமையான தொகுப்பு முரளி..
மிக்க நன்றி ராகேஷ்குமார் & வெண்பூ
சார்
ராமன் எத்தனை ராமனடி திரைபடத்தில் ஒரே ஒரு காட்சியில் ஸ்கூல் பஸ் டிரைவர் ஆக வருவார் கௌண்டன் மணி
Post a Comment