எப்போது இது தொடங்கியது என்று தெரியவில்லை. மூன்றாவதோ நாலாவதோ படிக்கும் போது பக்கத்தில் உள்ள அணைக்கட்டுக்கு பள்ளியில் இருந்து சுற்றுலா அழைத்து சென்றிருந்தார்கள். இரண்டு இரண்டு பேராக கையைப் பிடித்துக் கொண்டு வரிசையில் செல்ல வேண்டும் என்று உத்தரவு. அந்த இரண்டாவது ஆள் கிடைக்காமல் தனியே நான் சென்ற ஞாபகம் இருக்கிறது.
தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது எப்போதும் காமன் தான். போத் சைட் பேட்டிங், பீல்டிங் என்று தள்ளி விட்டு விடுவார்கள். பேட் செய்ய மூன்று நாலு பந்தும், பந்தே வராத இடத்தில் பீல்டிங் வாய்ப்பும் வழங்கப்படும்.வேறொரு தெருவோடு ஆடும் பால் பெட் மேட்சில் கூட பிளேயிங் லெவனில் இடம் கிடைத்த ஞாபகம் இல்லை. திருப்பதி லட்டாக வரும் கேட்சை பழனி பஞ்சாமிர்தமாக கையில் வழிய விடுபவனைக் கூட டீமில் சேர்த்துக் கொண்டார்கள். ஸ்கோரர் பொறுப்பு கூட எனக்கு வழங்கப்பட்டதில்லை. சாமர்த்தியமாக ரன்னை ஏற்றத் தெரிந்தவனுக்கு தானே அந்தப் பதவி.
கல்லூரியிலும் இது தொடர்ந்தது. இரண்டாம் ஆண்டு கேரளா டூரில் தனித்தனி குழுவாக சாப்பிட போனார்கள், ரூமில் தங்கினார்கள், போட்டோ எடுத்துக் கொண்டார்கள். எந்த ஆல்பத்திலும் என் போட்டோ இல்லை. பைனல் இயர் ப்ராஜக்ட்லும் நான் எதிர்பார்த்திருந்த குழுக்களிடமிருந்து கழட்டி விடப்பட, உப்புக்கு சப்பாணியாக ஒரு குரூப்பிடம் ஹெச் ஓ டியால் அடைக்கலம் புகவைக்கப் பட்டேன்.
வேலை தேடி மேன்ஷனில் இருந்த போது, தண்ணியடிக்க, படத்துக்கு என எதற்கும் அழைப்பில்லாமல் இருந்தது. ஒரு நாள் விரக்தியில் ஒருவனிடம் புலம்பிய போது அவன் சொன்னான் "தண்ணியடிக்கப் போன மொதோ மூணு வாந்தில ஒண்ணு உன்னோடதா இருக்கணும், தேட்டர்ல பிரச்சினைனா மொதோ சத்தம் உன்கிட்ட இருந்து வரணும், உன்கிட்ட ஏதாச்சும் இருந்தாத் தாண்டா செட்டு அமையும்"
இப்போது கூட வேலை பார்க்கும் இடத்தில், வீக்கெண்டில திடீரென ஒரு குரூப் மகாபலிபுரம் போகுது, இன்னோரு குரூப் மாயாஜால் போயிட்டு எங்கயாவது மொக்கீட்டு வருது. நான் அந்த நேரத்தில ஐபிஎல் ரிப்பீட்ட பார்த்துக் கிட்டு இருக்கேன்.
எனக்கு சிரிக்க சிரிக்க பேசத் தெரியாது, பிரச்சினைன்னா முன்னாடி நிக்கத் தெரியாது, எக்ஸ்ட்ராவா எந்த குவாலிட்டியும் இல்ல. என்னை மாதிரி செட்டு அமையாம ஒத்தப் பனையா நிக்கிறவங்களா நீங்க இருந்தா இந்த நம்பருக்கு ............... போன் பண்ணுங்க. இந்த வாரம் நாம மகாபலிபுரம் போறோம்.

29 comments:
//அந்த இரண்டாவது ஆள் கிடைக்காமல் தனியே நான் சென்ற ஞாபகம் இருக்கிறது.//
சங்கடப்படுத்தியது. மிக முக்கியமான அகவுலகம் குறித்த பிரச்சினை ஒன்றை நுட்பமாக பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
மகாபலிபுரம் போவோமா?
ஏதேதோ எண்ணங்கள் உங்கள் புனைவை படிக்கையில். எல்லா செட்டிலும் இப்படியான நிகழ்வுகள் ஏதாவது ஒருவருக்கு ஏற்படத்தான் செய்கிறது.. அதையும் மீறி ஏறி மிதித்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
மனதை தொட்ட பதிவு.
போத் சைட் பேட்டிங்.. பழனி பஞ்சாமிர்தம் வழியல் என வார்த்தைகளில் அள்ளுகிறீர்களே முரளி.. கலக்கல்
மாதவராஜ் சார், தங்களின் வருகைக்கு நன்றி. நாம் குற்றாலம் போவோம் சார். அடுத்து நான் உங்கள் ஊருக்கு வரும் போது.
மிக்க நன்றி நர்சிம்.
கண்டிப்பாய் நீங்கள் இல்லை தல் அது.. நீஙக் என்னமாதிரி ஆளு..ஜோக்ஸ் அபார்ட்
மிக மிக நல்ல பதிவு.. நர்சிம் சொன்ன மாதிரி எல்ல செட்டிலும் இந்த் மாதிரி ஒருவர் இருப்பார். ஆண் பெண் என்று இருபாலர்களிலும்.. கொஞ்சம் கவனித்து பார்த்தால் எதிர்காலத்தில் ஏதோ ஒரு விஷய்த்தில் சாதனையாளராகவோ.. அல்லது லோ- செல்ப் எஸ்டீம் உள்ள ஒரு ஆளாகவோ முடிங்கி போயிருப்பார்கள்.
எப்பிடி முரளி என்னைப் பார்க்காமலே இவ்வளவு துல்லியமாக அலசுகிறீர்கள்! Jokes apart, எங்க செட்ல யாராவது அவ்வப்போது புறக்கணிக்கப்படும்போது அதனை கவனித்து அவர்களையும் 'கவனிப்பது' என் பொழுதுபோக்கு. இது நிச்சயம் புனைவு என்றுதான் நினைக்கிறேன். நீங்க செம்ம 'கல கல' பார்ட்டி.
நரசிம் சொன்னது போல் கிரிக்கெட் பற்றி சொன்னது மிக அழகு. பழனி பஞ்சாமிர்தம் - ஹா ஹா இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
பாட்டில்களுடன் மஹாபலிபுரம் போவதைச் சொல்ல இப்படி ஒரு பதிவு. ம்ம், நடத்துங்க தலைவா.
அனுஜன்யா
நன்றி கேபிள் சங்கர், அனுஜன்யா.
\\பாட்டில்களுடன் மஹாபலிபுரம் போவதைச் சொல்ல இப்படி ஒரு பதிவு. ம்ம், நடத்துங்க தலைவா.
\\
தலைவரே நீங்கள்ளாம் இல்லாமலா?
நம்மயொத்த எல்லார்க்கும் நிகழ்ந்திருக்கும் விஷயங்கள் இது. நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். இந்தப் பதிவு குறித்உ மேலதிகவிபரங்களுக்கு அலைபேசியில் அணுகுகிறேன்.
நல்ல நடைங்க உங்களுது!
அருமையான பதிவு. தனிமையின் வலிகளை பதிவு செய்திருக்கிறீர்கள்.
நம்பர் பிளீஸ் :)
//இரண்டு இரண்டு பேராக கையைப் பிடித்துக் கொண்டு வரிசையில் செல்ல வேண்டும் என்று உத்தரவு. அந்த இரண்டாவது ஆள் கிடைக்காமல் தனியே நான் சென்ற ஞாபகம் இருக்கிறது.
//
நிஜமா? இல்லை பதிவிர்க்காகவா?
அட அடுத்த டூரா? நானும் வரேங்க.. நானும் இப்படித்தான் :)))
வருகைக்கு நன்றி பரிசல்,ஜ்யோவ்ராம் சுந்தர்,வித்யா, பூர்ணிமா சரண், கார்கி
மென்சோகம் :)
//திருப்பதி லட்டாக வரும் கேட்சை பழனி பஞ்சாமிர்தமாக கையில் வழிய விடுபவனைக் //
அசத்துறீங்க சார்
--
அடுத்த வலைப்பதிவர் சந்திப்பை மகாபலிபுரத்தில் நடத்தலாம் என்று முன்மொழிகிறேன்
ஐ தின்க் யு ஆர் வெரி ஸ்பெஷல், டோன்ட் வொர்ரி, யு வில் கெட் ரைட் லைப் பார்ட்னர், இப் அகைன் யு பெல்ட் தட் யுவர் பார்ட்னர் ஆல்சோ டிட் நாட் சூட், டூ நாட் வொர்ரி......லைப் ஹாஸ் மேனி மோர் டு லைவ் ஆன் அண்ட் ஆன்......... ,
I think you are very very special human being.......do not worry, you will get the right place at the right time........
வருகைக்கு நன்றி நிலோபர் அன்பரசு சார், புருனோ, ரத்னா பீட்டர்ஸ்.
கலக்கல்!
நல்லாச் சொன்னீங்க.இயல்பான வார்த்தைகளில் ஆழம் காட்டிவிட்டீர்கள்.விளையாட்டு விஷயத்தில் மட்டும் என்னை நினைவுபடுத்தியது.
முரளி,
புறக்ககணிப்பின் வலியும் வேதனையும் வெளிப்படும் பதிவிது.
எல்லோருக்கும் இது ஏதோ ஒரு வயதில் ஏதோ ஒரு வகையில் நடந்தவாறே இருக்கிறது.
இருப்பினும் பணமோ, படிப்போ, பதவியோ ஏதோ ஒன்றிம் மூலம் முட்டைக் கூட்டின் ஓடுடைத்து முட்டி மோதும் குஞ்சப் போல வெளியே வந்து விடுகிறேம்.
சூப்பர்...
மகாபலிபுரம் போய் மட்டும் என்ன பண்றது??? அங்க எல்லோரும் முக்கியமான வேலையில் ஒத்துமையா இருக்க நீங்க மட்டும் சைட் டிஸ்ச தனியா மெயிண்டைன் பண்ணுவீங்க :)))))
ஜோக் அபார்ட்...உங்க ஊரில் உங்களோடு பள்ளி, கல்லூரியில் படித்தவர்களில் நீங்க மட்டும் தனியா இப்ப ஐ.ஐ.டியில் பி.எச்.டி பண்ணுறீங்க....ஓ.கே. :))
ஆகா என்ன இது எல்லாரும் நானும் வரேன் நானும் வரேன்னு சொல்றாங்க அப்போ எல்லாரும் மகாபலிபுரம் போறிங்களா என்னை தனியாக வுட்டுட்டு...நானும் வருவேன் இல்ல நான் அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ ;)
நீங்கள் சொல்வதை நானும் அனுபவித்துள்ளேன். இதில் கூர்ந்து பார்த்தால் முக்கால்வாசி நம்மிடம்தான் குறைபாடு இருக்கும். அதை உணருவது ரொம்ப முக்கியம். அதே சமயம் மற்றவ்ர்களது அங்கீகாரத்தையே எதிர்நோக்கி நிற்பதும் ஒருவித பலவீனம்தான். சில குரூப்புகளால் சேர்த்து கொள்ளப்படுவதைவிட ஒதுக்கப்படுவதே மேல். உதாரணத்துக்கு குரூப்பாக சேர்ந்து சென்று ஈவ் டீசிங் செய்து துரத்தப்படுவது. நாம் பாட்டுக்கு நம் வேலையை கவனிக்கலாம்.
என்ன, நம்மை பயந்தாங்குள்ளி என சொல்வார்கள். சொன்னால் சொல்லிவிட்டு போகட்டுமே.
இது பற்றி நானே உணர்ந்து போட்ட பதிவுதான் என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.எம்.அப்துல்லா said...
மகாபலிபுரம் போய் மட்டும் என்ன பண்றது??? அங்க எல்லோரும் முக்கியமான வேலையில் ஒத்துமையா இருக்க நீங்க மட்டும் சைட் டிஸ்ச தனியா மெயிண்டைன் பண்ணுவீங்க :) //
ரிப்பீட்டு 1
வடகரை வேலன் said...
எல்லோருக்கும் இது ஏதோ ஒரு வயதில் ஏதோ ஒரு வகையில் நடந்தவாறே இருக்கிறது.
இருப்பினும் பணமோ, படிப்போ, பதவியோ ஏதோ ஒன்றிம் மூலம் முட்டைக் கூட்டின் ஓடுடைத்து முட்டி மோதும் குஞ்சப் போல வெளியே வந்து விடுகிறேம்.//
ரிப்பீட்டு 2
கார்க்கி said...
அட அடுத்த டூரா? நானும் வரேங்க.. //
ரிப்பீட்டு 3
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நம்பர் பிளீஸ் :)//
ரிப்பீட்டு 4
அனுஜன்யா said...
பாட்டில்களுடன் மஹாபலிபுரம் போவதைச் சொல்ல இப்படி ஒரு பதிவு. ம்ம், நடத்துங்க தலைவா.
ரிப்பீட்டு 5
பரிசல்காரன் said...
நம்மயொத்த எல்லார்க்கும் நிகழ்ந்திருக்கும் விஷயங்கள் இது. நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன்//
ரிப்பீட்டு 6
இப்போ நான் :
இரண்டு இரண்டு பேராக கையைப் பிடித்துக் கொண்டு வரிசையில் செல்ல வேண்டும் என்று உத்தரவு. அந்த இரண்டாவது ஆள் கிடைக்காமல் தனியே நான் சென்ற ஞாபகம் இருக்கிறது.// யாருகிட்ட கத உடுற? கலகலப்பான ஆளு நீ.. சான்சே இல்ல.! அப்பிடியே உண்மைன்னு எடுத்துகிட்டா கூட இப்போ இருக்காரே கயைப்புடிச்சிக்கினு கூத்தடிக்க நர்சிம்மு..! யாருகிட்ட.. ம்?
Haiyyaa.. me the 25.!
பாஸ்டன் பாலா, தமிழ் பறவை,சின்னப் பையன், வடகரை வேலன், எம் எம் அப்துல்லா,கப்பி,டோண்டு,தாமிரா,
கோபிநாத் வருகைக்கு நன்றி.
நீங்க இல்லாமல மகாபலிபுரமா? நோ சான்ஸ். நிச்சயம் போறோம்.
ulti..
நன்றி ஜி
//Ulti//
Repe
Post a Comment