March 12, 2009

திருப்புமுனை ஆண்டு

1931ல் காளிதாஸ் என்ற ஒருபடத்தை மட்டுமே தந்த தமிழ்சினிமா சிறிது சிறிதாக முன்னேறி 37ஆம் ஆண்டு 38 படங்களை தந்தது. இதில் குறிப்பிடத்தக்க படங்களையும், இந்த ஆண்டு நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும் பார்ப்போம்.

முக்கிய நிகழ்வுகள்
சிந்தாமணி, அம்பிகாபதி ஆகிய படங்களின் வெற்றிகாரணமாக எம் கே தியாகராஜா பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தைப் பெற்றார்.

இங்கிலாந்தின் லீட்ஸில் துகிலியல் (டெக்ஸ்டைல் டெக்னாலஜி) படித்திருந்த டி ஆர் சுந்தரம் தனது மார்டன் தியேட்டர்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்தைத் துவங்கினார். முதல் படமாக சதி அகல்யாவை தயாரித்தார். இந்த நிறுவனத்தின் மூலமாக பின்னர் 117 படங்களைத் தயாரித்தார்.


தமிழ் சினிமா இயக்குனர்களின் தந்தை எனப் போற்றப்படும் கே சுப்ரமணியம் குழைந்தகளுக்கான படமான பாலயோகினியை இயக்கினார். இதுவே தமிழின் முதல் குழந்தைகளுக்கான படம் எனலாம்.

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி தவமணிதேவி இந்த ஆண்டு சதி அகல்யா மூலமாக அறிமுகமானார்.

முதன்முறையாக படத் தலைப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது. தஞ்சாவூர் ரவுடி என்னும் படத்தின் தலைப்பு தஞ்சைப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக பக்கா ரவுடி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முதல் இருமொழி திரைப்படம் பக்த புரந்ததாஸ், தமிழிலும் கன்னடத்திலும் தயாரிக்கப் பட்டது.

முதன் முறையாக ஒரு திரைப்படம் 52 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது (சிந்தாமணி).

இனி இந்தப் படங்களைப் பார்ப்போம்.


சிந்தாமணி

சிந்தாமணி என்னும் தாசியின் மீது கொண்ட காதல் காரணமாக செல்வந்த வீட்டு இளைஞன் தன் மனைவியையும் மறந்து அவள் வீட்டிலேயே இருக்கிறான். இளைஞனின் தந்தை நோய் வாய்ப்பட, தன்னை கவனிக்கும் மருகமகளுக்கே அத்தனை சொத்தையும் எழுதிவைத்து விட்டு இறக்கிறார். ஆனால் மனைவியோ கணவனின் காலடியே சரணம் என மீண்டும் அவனிடமே செல்கிறாள். அப்படியும் கணவன் திருந்தவில்லை. மனைவி ஆற்று வெள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். தாசியை தேடிச் செல்லும் கணவணோ இருளில் அவள் உடலையே படகாக வைத்து ஆற்ரைக் கடக்கிறான். உண்மை தெரிந்த பின் அந்த இளைஞனும், தாசி சிந்தாமனியும் மனம் திருந்தி கிருஷ்ண பக்தர்கள் ஆகிறார்கள்.

இளைஞன் பில்வமங்களனாக எம் கே தியாகராஜ பாகவதரும், சிந்தாமணியாக கன்னட நடிகை அஸ்வத்தம்மா நடித்த இந்தப் படம் மதுரை ராயல் பிக்சர்ஸ்சாரின் தயாரிப்பு. இயக்கம் ஒய் வி ராவ். இவர் நடிகை லட்சுமியின் தந்தை. இந்தப் படம் மதுரை நியு சினிமா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடி லாபத்தைக் குவித்தது. ராயல் பிக்சர்ஸார் இந்த லாபத்தைக் கொண்டு ஒரு திரையரங்கை மதுரையில் கட்டி அதற்க்கு சிந்தாமணி என்று பெயர் சூட்டினார்கள். பாடல்கள் இசைத்தட்டுக்களாக வந்து விற்பனையில் சாதனை படைத்தன.

அம்பிகாபதி
கம்பரின் மகனுக்கு இளவரசியின் மேல் காதல். காதல் இல்லாமல் தொடர்ந்து 100 பாடல்களைப் பாடினால் இளவரசியை மணம் முடித்து தருகிறேன் என மன்னர் நிபந்தனை விதிக்கிறார். அம்பிகாபதி பாட ஆரம்பிக்கிறார். முதல் பாடல் கடவுள் வாழ்த்து. ஆனால் இளவரசி அதையும் ஒரு பாடலாக கணக்கெடுத்துக் கொள்கிறாள். 99 பாடல் முடிய இளவரசி அமராவதியோ 100 முடிந்தது என சைகை காண்பிக்கிறார். 100 அடித்த பேட்ஸ்மேன் அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிக்க நினைப்பது போல அம்பிகாபதி காதல் பாடலைப் பாட, மன்னர் மரண தண்டனை விதிக்கிறார். நமக்கும் அழியாக் காதலுக்கு எடுத்துக் காட்டு சொல்ல இன்னொரு ஜோடி கிடைத்தது.

முதலில் இந்த படத்தை இயக்க ஒய் வி ராவை அணுகினார்கள். ஆனால் அவர் கேட்ட சம்பளம் அதிகம் என தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள். எனவே அதற்க்கு முந்தைய ஆண்டு சதிலீலாவதி (எம் ஜி யார், பாலையா அறிமுகமான படம்) படத்தை இயக்கிய எல்லிஸ் ஆர் டங்கனை இயக்க அழைத்தார்கள். படம் நல்ல வெற்றி பெற்றது. எம் கே தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாகவும், எம் எஸ் சந்தான லக்‌ஷ்மி அமராவதியாகவும் நடித்தனர். இசை பாபனாசம் சிவன். இந்தப்படத்தின் வசனங்களை இளங்கோவன் எழுதினார். பின்னர் இதே படம் சிவாஜிகணேசன் அம்பிகாபதியாக நடிக்க ரீமெக் ஆனது.

பாலயோகினி

ஆரம்ப காலத்தில் புராண,பக்திப் படங்களே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தன. சமூக கதைகள் மிகக் குறைவே. அதிலும் சிறுவர்களுக்கான படங்கள் இல்லையென்றே சொல்லலாம். இந்த கால கட்டத்தில் மேலை நாட்டு படங்கள் இங்கே இறக்குமதியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தன. அதில் குழந்தைகளுக்கான படங்களும் அடக்கம். ஷெர்லி டெம்பிள் அப்போது அங்கு பிரபலமான குழந்தை நட்சத்திரம். சமூக கதைகளை இயக்கி புகழடைந்த கே சுப்ரமணியம் குழந்தைகளைக் கவரும் படியான பாலயோகினி படத்தை பேபி சரோஜா என்னும் குழந்தையை வைத்து இயக்கினார்.

மனைவியை இழந்த வேலை இல்லா எம் ஏ பட்டதாரி (அந்தக்காலத்தில்) மகளைப் (சரஸா) படிக்க வைக்க கடன் படுகிறார். அந்தப் பிரச்சினையில் சிறை செல்கிறார். அவரது நண்பர் சப் கலெக்டர் கள்ளத் தொடர்பின் காரணமாக தன் மகள் பேபி சரோஜவை வெறுக்கிறார். இதனால் சப் கலெக்டரின் சகோதரி ஜானகி, சரஸா, பேபி சரோஜா ஆகியோர் முனுசாமி என்னும் தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் அடைக்கலம் ஆகிறார்கள். முனுசாமியும் இறந்துவிட அவரின் குழந்தைகளையும் ஜானகி அண்ட் கோ வளர்க்க ஆரம்பிக்கிறது. இதனை மேல்ஜாதியினர் எதிர்க்க பேபி சரோஜா தன் பேச்சால் எல்லோர் மனதையும் மாற்றுகிறாள்.

இந்தப் படத்தில் பேபி சரோஜாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப் பட்டது. தமிழ்நாட்டின் ஷெர்லி டெம்பிள் என்று பாராட்டப் பட்டார். அந்தக்காலத்தில் பிறந்த பல பெண்குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் சூட்டினார்களாம். இப்போது பிட் படம் பார்த்த எந்த தந்தையும் தன் மகளுக்கு ஷகிலா என்னும் பெயர் வைக்க அனுமதிப்பதில்லை.

மின்னல் கொடி [1]

ரம்னிக்லால், மோகன்லால் ஆகியோர் இந்தக் கால கட்டத்தில் தொடர்ந்து சமூக மற்றும் கமர்சியல் சண்டைப் படங்களை தயாரித்து வந்தனர். இவர்கள் சில நட்சத்திரங்களை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

பி எஸ் சீனிவாசராவ் – கதாநாயகன்
கே டி ருக்மணி, ஆர் பி லட்சுமி தேவி – கதாநாயகிகள்
எஸ் எஸ் கொக்கோ – நகைச்சுவை / ஸ்டண்ட் நடிகர்
சுலைமான் பாஷா – வில்லன்/குணசித்திர நடிகர்

இவர்களின் ஆஸ்தான இயக்குநர் கே அமர்நாத்.

மின்னல்கொடி என்னும் புரட்சியாளன் தான் சாகும் தருவாயில் மோகினி (கே டி ருக்மணி) என்னும் பெண்ணிடம் தன் லட்சியங்களைக் கூறி விட்டு இறக்கிறான். அவள் மின்னல்கொடி போலவே மாறு வேடம் தரித்து அவன் லட்சியங்களை நிறைவேற்றுகிறாள். மோகினியின் காதலனாக பி எஸ் சீனிவாசராவ் காவல்துறை அதிகாரியாகவும், பாஷா வில்லனாகவும், கொக்கோ நாயகனின் நண்பனாகவும் நடித்த இந்தப் படம் நல்ல் வெற்றியைப் பெற்றது.

பக்கா ரவுடி [1]
கே டி ருக்மணி நாயகியாகவும், சீனிவாசராவ் நாயகனாகவும் நடித்த படம். நாயகியின் தந்தை ராபின் ஹூட் போல கொள்ளையடித்து மக்களுக்கு உதவுகிறார். நிறைய செல்வங்களை ஒரு தீவில் புதைத்து, ஒரு படத்தில் குறித்து வைக்கிறார். கொள்ளையனின் ஆசைநாயகியும், அவளது காதலனும் அதை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். பின் எப்படி அவர்களை நாயகனும் நாயகியும் வெற்றி கொள்கிறார்கள் என்பதே கதை. இந்தப் படம் முதலில் தஞ்சாவூர் ரவுடி என்னும் பெயரில் வெளியானது. தஞ்சை மக்களின் எதிர்ப்பின் காரணமாக பக்கா ரவுடி என நீதி மன்றத்தின் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

டேஞ்சர் சிக்னல் [1]

குதிரை, நாய் போன்றவையும் மேற்கூறிய நாயகர்களுடன் நடித்த படம் இது. ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைந்த படம். கொக்கோ நகைச்சுவை காட்சிகள் மட்டுமின்றி, வீர தீர சண்டைக் காட்சிகளில் நடிப்பதிலும் புகழ்பெற்றவர். இதிலும் அவர் தன் கைவண்ணத்தை காட்டியிருந்தார். பின்னட்களில் அவர் இது போன்ற சண்டைக்காட்சியில் நடிக்கும் போது விபத்துக்குள்ளாகி இறந்தார்.

சதி அகல்யா [2]
மார்டன் தியேட்டர்ஸாரின் முதல் படம். பின்னாட்களில் அவர்கள் ஆங்கிலப் படங்களின் இன்ஸ்பிரேசனில் பல படங்கள் தயாரித்தனர். இந்தப் படம் ராமாயான அகலிகை கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்திரன் மேல் ஆசை கொண்டதற்க்காக அகலிகையின் கணவர் அவளை கல்லாக மாறும்படி சபிக்கிறார். பின் ராமன் கால் பட்டதும் சாப விமோசனம் பெறுகிறாள். அகலிகையின் கேரக்டரில் நடித்தவர் தவமணி தேவி. இவர் தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி ஆவார். இந்தப் படத்திற்க்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொடுக்கப்பட்ட தவமணியின் படங்களைப் பார்த்து அனைவரும் மெய்மறந்தனர். நீச்சல் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் தவமணி. இதுவே படத்துக்கு பெரும் விளம்பரமாக அமைந்தது. பட வெற்றிக்கு கேட்க வேண்டுமா?


இந்தக் கட்டுரைக்கான ஆதாரங்கள்

[1] பிரபல தமிழ் சினிமா ஆராய்ச்சியாளர் மற்றும் இலக்கியவாதியான திரு விட்டல் ராவ் எழுதிய “தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்” என்னும் நூல். 1930களில் தொடங்கி 1950 வரையிலான தமிழ் படங்களைப் பற்றி மிக நுட்பமாக இதில் விவரித்து எழுதியுள்ளார்.

[2] ராண்டார் கை ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. ( சுட்டி கிடைத்தவுடன் இணைக்கிறேன்)


மேலும் சில இணைய தளங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற செய்திகளின் மூலமே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நான் இந்தப் படங்களின் சில காட்சிகளை மட்டுமே பர்த்துள்ளேன்.

31 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

super murali

Ungalranga said...

அப்படியே.. 1930-40களுக்கே போனதுபோல் இருந்தது...
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.

பாலா said...

அட்ரா.. சக்கை... 1937-க்கே போயாச்சா...! டெண்டு கொட்டாய்ல தரைல உட்காந்து பார்க்கும் சொகம்.. இந்த பதிவு.! :-)

கலக்குங்க..! :-)

narsim said...

முரளி.. விபரங்களுக்கு நன்றி.. மிக நுட்பமான, தெரியாமலே போய்விடக்கூடிய செய்திகளை தொகுத்தற்கும் அதன் ஆதாரத்தையும் குறிப்பிட்டதற்கும் நன்றி

தொடருங்கள்

கே.என்.சிவராமன் said...

கைய கொடுங்க முரளி... அருமை.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... கூடிய விரைவில் தமிழ் சினிமா பற்றிய தொட(ர்களை)ரை ஏதேனும் ஒரு இதழில் நீங்கள் எழுதத்தான் போகிறீர்கள்.

எல்லிஸ் ஆர் டங்கனை குறித்து ஒரு செய்தி.

தமிழ் சினிமாவில் முதன்முதலில் டிராலி ஷாட்டை கம்போஸ் பண்ணியது இவர்தான் என்பார்கள்.

தொடருங்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

காளிதாஸ் என்றால் மகா கவி காளிதாஸ் படம் தானே?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க முரளி.

அத்திரி said...

தல இவ்ளோ பின்னாடி போயிட்டீங்க........அருமையான தகவல்கள்

Cable சங்கர் said...

வழக்கம் போல சூப்பர்..

துகிலியல் ந்னு படிச்சதும் இதுக்கெல்லாம் கூட க்ளாஸ் எடுத்திருக்காஙக்ளான்னு சந்தேகமாயிருச்சு.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை முரளி.. எங்க இருந்து தகவல் எல்லாம் பிடிக்கிறீங்க? சூப்பரா இருக்கு.. வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... கூடிய விரைவில் தமிழ் சினிமா பற்றிய தொட(ர்களை)ரை ஏதேனும் ஒரு இதழில் நீங்கள் எழுதத்தான் போகிறீர்கள்.//

வழிமொழிகிறேன்...

முரளிகண்ணன் said...

டி வி ராதாகிருஷ்ணன், ரங்கன், ஹாலிவுட் பாலா வருகைக்கு நன்றி

நர்சிம், பைத்தியக்காரன் தங்கள் அன்புக்கு நன்றி

ஆமாம் விக்னேஷ்வரன்.

முரளிகண்ணன் said...

ஜியோவ்ராம் சுந்தர், அத்திரி, கேபிள் சங்கர், கார்த்திகைப் பாண்டியன்

தங்கள் வருக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி

நையாண்டி நைனா said...

அசத்துறீங்க நண்பரே...

நையாண்டி நைனா said...

நானும் என்னிக்காவது "மீ த பஸ்டு" அப்படின்னு நெனைக்கிறேன். ... ஆனா அதுக்குள்ளே நம்ம புள்ளைங்க பாஞ்சு வந்துர்றாங்க....

முரளிகண்ணன் said...

நன்றி நையாண்டி நைனா

மாதவராஜ் said...

ஆச்சரியமாக இருக்கிறது.
புத்தகங்களைப் படித்து எழுதியிருந்தாலும், இந்த தகவல்கள் இந்தத் தலைமுறையினருக்கு நிச்சயம் புதியவையாக இருக்கும். தங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கல்லூரிக் கால நினைவுகள் அபாரம் தல.. சும்மா பின்னி எடுக்கறீங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நீச்சல் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் தவமணி. இதுவே படத்துக்கு பெரும் விளம்பரமாக அமைந்தது. பட வெற்றிக்கு கேட்க வேண்டுமா?//



பாருங்கப்பா.. அந்தக் காலத்திலேயே நீச்சல் உடையப் போட்டு மார்க்கெட்டிங் பண்ணியிருக்காங்க. நம்ம ஆட்கள் பிரியா மணி படம் போட்டு மார்க்கெட்டிங் பண்றதுக்கு 80 வருஷத்துக்கு முன்னாடியே அப்படித்தானாம்.

நசரேயன் said...

பகிர்வுக்கு நன்றி

அருண்மொழிவர்மன் said...

இதில் எந்த படத்தையும் நான் பார்க்கவில்லை. ஆனால் வரலாற்றின் பக்கங்களாஇ அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்

கிரி said...

//பக்கா ரவுடி//

அப்பவே படம் பேர் எல்லாம் இப்படி வைத்து இருக்காங்க !!!

முரளிகண்ணன் இந்த தகவல்களை திரட்ட மிகவும் சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

புருனோ Bruno said...

அப்ப நீங்க யூத் இல்லையா

chennaivaasi said...

Murali Sir, sooperb post...chumma polandhu katreenga...I remember reading in The Hindu Friday Features that K. Subramanyam shot the movies then in a suburb on Chennai which is now Millers Road :-))...in Kilpauk, Chennai.

Also, devika rani the first star of silver screen never acted in a tamil movie

Once I remember watching a clipping in DD...a non-talkie movie having lip to lip kiss though not that explicit :-))

முரளிகண்ணன் said...

மாதவராஜ், சுரேஷ்,நசரேயன் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

அருண்மொழி வர்மன், கிரி, புருனோ, சென்னைவாசி

தங்கள் வருகைக்கும் கூடுதல் தகவல்களுக்கும் நன்றீ

ராமகுமரன் said...

மீண்டும் ஒரு அசத்தல், தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடித்த கதாநாயகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், எஸ்.எஸ்.ஆர், ஏவிம்.ராஜன் போன்றோரை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன் பிளீஸ்

ராமகுமரன் said...

தின்னையில் இந்த 'பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்' தொடரை படித்தேன், நீரோடை வாசகர்களுக்கும் பிடித்தது இருக்கும் என்று நினைக்கிறேன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=70612212&format=html

முரளிகண்ணன் said...

ராம்குமார் தங்கள் வருகைக்கு நன்றி.

ஏற்கனவே ஜெய்சங்கர் பற்றி சென்ற ஆண்டு ஒரு கட்டுரை எழுதினேன்.

நீங்கள் குறிப்பிடுள்ள மற்ற சாதனையாளர்களைப் பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.

தாங்கள் கொடுத்துள்ள சுட்டியில் இருக்கும் விபரங்கள் மிக சுவையானவை. நன்றி

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு
நன்றி முரளி அண்ணே மிரட்டுறிங்க...

Mahesh said...

அட்டகாசமான தகவல்கள்....

தமிழ் திரை உலகத்துக்கு அடுத்த 'ஃபிலிம் ந்யூஸ் ஆனந்தன்' ரெடி !!