கிராமத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆறு,குளம்,பொங்கல், திருவிழா என்று ஓரளவுக்கு பொழுது போய்விடும். சென்னை போன்ற நகரவாசிகளுக்கோ பல பொழுது போக்குகள். சிறு நகர ஆட்கள்தான் பாவம், சினிமாவைத் தவிர வேறு நாதியில்லாமல் இருந்தார்கள் 80களின் மத்திவரை. 1987 ஆம் ஆண்டை தமிழர்களை, குறிப்பாக சிறுநகர தமிழர்களை மிகவும் குஷிப்படுத்திய ஆண்டு எனலாம். சென்னைத் தொலைக்காட்சி மூலம் தமிழ் ஒளிபரப்பு துவங்கப்பட்ட உடன் பலரும் தொலைக்காட்சி பெட்டியை வாங்க ஆரம்பித்தனர். அதற்க்கு முன் சென்னையில் மட்டுமே தமிழ் ஒளிபரப்பு இருந்தது. அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய விமர்சனம் சாவி பத்திரிக்கையில் வரும் போது அதைப் படித்து வயிறு எரிந்ததுண்டு. பின்னர் நிகழ்ச்சிகளைப் பார்த்து வயிறு எரிந்தது இதுக்காடா டிவி வாங்கினோம் என்று.
இந்த ஆண்டில் தான் ரிலையன்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்றது. 1986ல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியும், இங்கு வந்த ஆஸ்திரேலியர்களை ஒரு நாள் தொடரில் வென்றும் எல்லோர் மனதிலும் நம்பிக்கையை வளர்த்திருந்தது இந்திய அணி. ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே அதைப்பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருந்தன. அரை இறுதிப் போட்டியில் நாம் தோற்றாலும் அந்த நேரடி ஒளிபரப்பு பட்டி தொட்டியெல்லாம் கிரிக்கெட்டை விதைத்து விட்டு சென்றது. இதன் பின்னர் சிறு நகரங்களின் தேசிய விளையாட்டாக மாறியது கிரிக்கெட்.
இந்த ஆண்டில் அரசியலிலும் சலசலப்புகள் தோன்றிக் கொண்டே இருந்தன. எம்ஜியார் மறைந்த இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள் ஆகியோரைப் பற்றி செய்திகள் புலனாய்வுப் பத்திக்கைகளில் வந்து கொண்டிருந்தன. ஜூனியர் விகடனின் வெற்றியைத் தொடர்ந்து பல புலனாய்வுப் பத்திக்கைகள் வந்த காலம் அது. ராஜீவ் காந்தி மேலிருந்த ஆரம்ப மோகம் குறைந்து பல குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருந்தன. இது போன்ற செய்திகள் படிக்க சுவராசியமாக இருக்கும். அதற்க்கு முன்னால் அரசியல் பத்திரிக்கை என்றால் அது துக்ளக் மட்டும்தான். ஆனால் ஜூவி,நக்கீரன்,தராசு ஆகியவற்றின் வருகை இளைஞர்களுக்குத் தேவையான அரசியலுடன், கவர்ச்சி, கிசுகிசுக்கள் என கலந்து கொடுக்க அந்த வகையிலும் கொஞ்சம் பொழுது போக ஆரம்பித்தது. இவற்றுக்கெல்லாம் உச்சமாக இந்த ஆண்டில் பல சுவராசியமான தமிழ் படங்கள் வெளிவந்து வாழ்க்கையை கலகலப்பாக்கின.
நாயகன்
தெருவிற்க்கு இரண்டோ மூன்றோ தொலைக்காட்சிப் பெட்டி இருந்த ஆண்டு. ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு தெருமுனையில் நின்று அதைப் பற்றி விவாதிப்பது தான் வெள்ளிக்கிழமை அஜெண்டா. தீபாவளிக்கு படம் வெளியானபின் அடுத்து வந்த வெள்ளிக்கிழமையன்று முதலில் மனிதன் படப் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் இப்படத்தின் நான் சிரித்தால் தீபாவளி பாடல் ஒளிபரப்பப்பட்டது. முதல் தடவை பார்க்கும் போது காதில் பாடல் நுழையவே இல்லை. நான் வேறு கமல் ரசிகனாக ஏரியாவில் பார்ம் ஆகி இருந்ததால் அன்று என்னை மக்கள் கலாய்த்து விட்டார்கள். சிரிச்சா தீபாவளி அழுதா பொங்கலாடா? என ஆரம்பித்தவுடன் அப்பீட் ஆனேன். எங்கள் ஊருக்கு எந்தப்படமும் 50 நாள் கழித்தே வரும் என்பதால் தெரு இளவட்டங்கள் திண்டுக்கல்லுக்கு சென்று படம் பார்த்து வந்து மனிதன் தான் சூப்பர் என்று செய்தியைப் பரப்பினர்.
ஆனந்த விகடன் இப்போது விழா நாட்களில் எத்தனைப் படங்கள் வந்தாலும் அடுத்த வாரத்திலேயே விமர்சனங்களை வைத்துவிடுகிறது. ஆனால் அப்போது இரண்டு வாரம் கழித்துத்தான் விமர்சனங்களை ஆரம்பிப்பார்கள். அதுவும் வாரத்துக்கு ஒன்றுதான். நாயகனுக்கு 60 மார்க் கொடுத்ததைப் பார்த்த பின்பு தான் எங்கள் ரசிகர் மன்றத்திற்க்கு மூச்சே வந்தது. அது இப்பொழுது டைம்ஸ் சிறந்த 100 வரை அலைகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வாரத்தில் படமும் எல்லா சென்டர்களிலும் பிக் அப் ஆக ஆரம்பித்திருந்தது.
நாயகன் படம் பல வகைகளில் திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அதற்க்கு முன் மங்கம்மா சபதம், காதல் பரிசு,பேர் சொல்லும் பிள்ளை என மொக்கைகளை வழங்கிய கமல்ஹாசன் இப்படத்திற்க்குப் பின் சாதாரண படங்களில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டார். சிங்கார வேலன், கலைஞன் என அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர. நடிப்புக்காக கமலுக்கும், கலை இயக்கத்துக்காக தோட்டா தரணிக்கும், ஒளிப்பதிவிற்க்காக பி சி ஸ்ரீராமிற்க்கும் இப்படத்தின் மூலம் விருது கிடைத்தது இயக்குனர் மணிரத்னத்துக்கு நட்சத்திர அந்த்ஸ்து இப்படத்தின் மூலமே கிடைத்தது. இதற்கடுத்து இவர் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்திற்க்கு இவர் பெயரை வைத்துத்தான் வியாபாரம் நடந்தது. பட போஸ்டர்களில் மணிரத்னம்,இளையராஜா, பி சி ஸ்ரீராம் என டெக்னீசியன்களின் பெயரும் பெரிய அளவில் இடம்பெற்றது. பாலகுமாரனின் வசனங்களும் பேசப்பட்டன.
எங்க சின்ன ராசா
பாக்யராஜ் இயக்கத்தில் கடைசியாக பெரிய வெற்றி பெற்ற படம் எனலாம். (இதற்கடுத்து வந்து வெற்றி பெற்ற இது நம்ம ஆளுவில் இயக்கம் பாலகுமாரன் என்று இருக்கும்). இதையடுத்து அவர் இயக்கியவற்றில் சுந்தரகாண்டம், ராசுகுட்டி ஆகியவை ஓடியிருந்தாலும் இந்தப் பட அளவுக்கு பெரிய வெற்றி இல்லை. இந்தப்படத்தில் ஆடிமாதம் – காண்டம் என ஒரு கிளுகிளுப்பு மேட்டரை வைத்திருந்தார். ஜோதியில ஐக்கியமாகிறது என்னும் தமிழர்களின் வாழ்வில் அழியா இடம் பெற்ற வசனம் இந்தப் படத்தில்தான் பிரபலமானது. சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் கலக்கல்.
கேசட் விற்பனையில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என டி சீரிஸ் குல்ஷன் குமார் (ரூபாய் 20க்கு ஓரளவு தரமான கேசட்) காட்டியிருந்ததால் அவருக்கு இந்தி பட அதிபர்கள் பாடல் கேசட் உரிமை தராமல் டபாய்த்தனர். அதனாலென்ன நாமே படம் தயாரிப்போம் என களத்தில் இறங்கிய அவர் இந்தப் படத்தை ரீமேக் செய்தார். படமும் பாடல்களும் சூப்பர் ஹிட். (இசை அமைப்பாளர் : ஆனந்த் மிலிந்த்). இந்தப் படம் மாதுரி தீக்சித்தை அங்கே நம்பர் 1 ஆக்கியது. இந்தப் படத்தில் இடம் பெற்ற தக் தக் தர்ணே லகா பாடலுக்கு அவர் ஆடிய மூவ்மெண்டுகளின் மூலம் தக் தக் கேர்ள் என்று வட இந்திய பத்திரிக்கைகளால் அழைக்கப் பட்டார். தக் தக் பாடலின் மூலம் இளையராஜா. ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி என்ற சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் இது. (இந்தப்படம் காதல் தேவதை என தமிழிலும் டப்பானது). தற்போதைய சிவாஜி (தெலுங்கு) படத்தில் கூட அதிரடிக்காரன் பாடலுக்கு என் டி ஆர், சிரஞ்சீவி போல ரஜினி ஆடும் போது சிரஞ்சீவி வேடத்துக்கு இந்தப் பாடலைத்தான் பயன்படுத்தி இருந்தார்.
ஒரு தாயின் சபதம்
இந்தக் கால கட்டத்தில் தூர்தர்ஷன் ஒளியும் ஒலியுமில் பட பாடல்களை காட்ட வேண்டுமானால் ரூ 20,000 பணம் தயாரிப்பாளர் கட்ட வேண்டும் என்ற விதி இருந்தது. கஷ்டப்பட்டு படம் எடுத்து, அதை கொடுத்தால் அவர்கள் ஒளிபரப்பி விளம்பர வருவாய் பார்ப்பார்கள். அடிசனலாக இந்தப் பணம் வேறு. ஆனால் பட விளம்பரத்திற்க்காக எல்லா தயாரிப்பாளர்களும் இதற்க்கு உடன்பட்டிருந்தனர். சன் டிவி வந்த பின்னால் தான் இந்த நிலை மாறியது. டி ராஜேந்தர் தன் பாடல்களை முதல் பாடலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார். கிட்டத்தட்ட 10 வாரங்கள் இந்தப் படத்தின் பாடல்கள் முதல் பாடலாக ஒளிபரப்பப்பட்டு நல்ல விளம்பரம் கிடைத்தது. டீ ஆர் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார். நன்கு ஓடிய படம்.
மனதில் உறுதி வேண்டும்
பெண்கள் தின சிறப்பு திரைப்படமாக ஒரு 10 ஆண்டுகள் இந்தப் படம் தொலைக்காட்சி சேனல்களில் கொலுவீற்றிருந்தது. சுஹாசினியின் தம்பியாக விவேக் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். கிட்னி தானம் பற்றிய விழிப்புணர்வு, பெண் செவிலியர்களின் தியாகம் என சிறந்த கருத்துக்களைக் கொண்டிருந்த படம். எஸ் பி பி தலைமை மருத்துவராக அசத்தியிருப்பார்.
பருவராகம்
அப்பொதைய மிஸ் இந்தியா ஜூஹி சாவ்லா அறிமுகமான மியூசிகல் ஹிட் படம். அம்சலேகாவின் இசை அசத்தல். ரவிசந்திரன் (கன்னடம்) நாயகன். இவரின் தந்தை என் வீராச்சாமி தான் ரஜினி நடித்த படிக்காதவன் படத்தின் தயாரிப்பாளர். தமிழிலும் தன் மகனை நிறுத்த இப்படத்தை தயாரித்திருந்தார்.
ரெட்டை வால் குருவி
பாலு மகேந்திராவின் பேவரைட்டான இரண்டு பொண்டாட்டி கதைக் கரு. சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்ற வார்த்தை ஒலித்த முதல் தமிழ் படம். இளையராஜா இசையில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ சோழன் நான் பாடல் 30ஐ கடந்தவர்களின் ஐபாடில் டீபால்ட்.
எங்க ஊரு பாட்டுக்காரன்
ராமராஜனுக்கு ”டவுசர்” என்ற பெயரை வாங்கித் தந்த கங்கை அமரனின் படம். இந்தப் படத்தின் பல காட்சிகளில் அவர் அணிந்து வந்த கோடு போட்ட டவுசரே அவரது அடையாளங்களில் ஒன்றாகிப் போனது. ஆஷா போன்ஸ்லே பாடிய செண்பகமே செண்பகமே அப்போதைய ஆர்கெஸ்ட்ராக்களில் தவறாத ஒன்று.
தீர்த்தக் கரையினிலே
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நம்பர் 1 நாயகியாக திகழ்ந்த ரூபிணி அறிமுகமான படம். மோகன், சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரங்கள். இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள், ஓரளவு கதை என தப்பித்த படம்.
சங்கர் குரு
இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சந்திர போஸை ஆதரித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வெற்றிப்படம். அர்ஜூனுக்கு நல்ல அந்தஸ்தைக் கொடுத்த படம். இப்பட இயக்குனர் ராஜா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சத்யராஜ்
1986ல் கதாநாயகனாக அரிதாரம் பூசத் தொடங்கிய சத்யராஜ் தன் காலை அழுத்தி ஊண்டியது இந்த ஆண்டில்தான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பூ விழி வாசலிலே, வேதம் புதிது, சின்ன தம்பி பெரியதம்பி, மக்கள் என் பக்கம், ஜல்லிக்கட்டு, முத்துக்கள் மூன்று, ஆளப்பிறந்தவன் என சத்யராஜின் நடிப்புக்கு சான்றாக சொல்லப்படும் படங்கள் எல்லாம் இந்த ஆண்டில் தான் வெளிவந்தன.
ரஜினிகாந்த்
மனிதன், ஊர்க்காவலன், வேலைக்காரன் என குடும்பத்தோடு போய் பார்க்கும் படியான இன்றும் ரீ ரிலிஸ் வேல்யு உள்ள ரஜினியின் படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன.
விஜயகாந்த்
உழவன் மகன், உள்ளம் கவர் கள்வன், வீரபாண்டியன், பூ மழை பொழியுது, நீதிக்கு தண்டனை, நினைவே ஒரு சங்கீதம், கூலிக்காரன், சிறைப் பறவை என கலவையான படங்கள்.
(தொடரும்)
45 comments:
mee the firsttttt
வெளியாகும் முன்பே சூடான இடுகைக்கு வந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏர்படுத்தியிருந்தது
விஜயகாந்த்
உழவன் மகன், உள்ளம் கவர் கள்வன், வீரபாண்டியன், பூ மழை பொழியுது, நீதிக்கு தண்டனை, நினைவே ஒரு சங்கீதம், கூலிக்காரன், சிறைப் பறவை என கலவையான படங்கள்.//
இத்தனை படங்களா...
இந்த ஆண்டில் இருந்துதான் ரஜினி தொடர்ந்து மசாலா படங்கள் என்றும் கமல் கொஞ்சம் சித்தியாசமான படங்கள் என்றும் தம் பாதையை வகுத்துக்கொண்டார்கள்.
இத்தனை படங்களா...
..
87 முதல் 90 வரையான 4 ஆண்டுகளில் மட்டும் விஜயகாந்த் கிட்டதட்ட 30க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார் என்றூ நினைக்கின்றேன்
//ஆனால் ஜூவி,நக்கீரன்,தராசு ஆகியவற்றின் வருகை இளைஞர்களுக்குத் தேவையான அரசியலுடன், கவர்ச்சி, கிசுகிசுக்கள் என கலந்து கொடுக்க அந்த வகையிலும் கொஞ்சம் பொழுது போக ஆரம்பித்தது.//
அப்போதெல்லாம் வரும் அனைத்துப் பத்திரிக்கைகளையும் நாங்கள் படிப்போம்
//ஜெகதீச வீருடு அதிரூப சுந்தரி என்ற சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் இது. (இந்தப்படம் காதல் தேவதை என தமிழிலும் டப்பானது).//
தலைவரே.. அது ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி.. பாடல் “அப்பநீ தீயனி தெப்பா..”
//பின்னர் நிகழ்ச்சிகளைப் பார்த்து வயிறு எரிந்தது இதுக்காடா டிவி வாங்கினோம் என்று.
//
ஹா..ஹா...
//இந்த ஆண்டில் தான் ரிலையன்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்றது. //
இந்த கப்பை பார்பதற்காக அப்போது ஜாயின் பண்ணியிருந்த வேலையை ரிசைன் பண்ணியவன் நான்..
சுரேஷ்
\\வெளியாகும் முன்பே சூடான இடுகைக்கு வந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏர்படுத்தியிருந்தது\\
இணைப்பதில் ஒரு சிறு பிரச்சினை. அதனால்தான்
அருண்மொழிவர்மன்
\\87 முதல் 90 வரையான 4 ஆண்டுகளில் மட்டும் விஜயகாந்த் கிட்டதட்ட 30க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார் என்றூ நினைக்கின்றேன்\\
ஆமாம். 1989 தீபாவளிக்கு மட்டும் விஜயகாந்த் நடித்து மூன்று படங்கள் வந்தன.
கிரிக்கெட் வெறியர் கேபிளாருக்கு
உடனே மாற்றி விடுகிறேன் பட தலைப்பை. பழைய ஞாபகத்தில் சரிபார்க்காமல் எழுதிவிட்டேன்.
//Cable Sankar said...
//இந்த ஆண்டில் தான் ரிலையன்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்றது. //
இந்த கப்பை பார்பதற்காக அப்போது ஜாயின் பண்ணியிருந்த வேலையை ரிசைன் பண்ணியவன் நான்..
//
இந்த யூத்தோட வயசு இன்னைக்கு ரிலீஸ் ஆயிருச்சு
:))))))
எவ்வளவு படங்கள்...?!
தமிழ், தெலுங்கு, ஹிந்தியென்று எப்படி நினைவில்வைக்கிறீர்கள்...
//இந்த யூத்தோட வயசு இன்னைக்கு ரிலீஸ் ஆயிருச்சு
:))))))//
அலோ.. நான் 84-87 பேட்ச் படிச்சு முடிச்ச அடுத்த நாளே வேலைக்கு சேர்ந்தேன். நான் இன்னமும் யூத்தான்.. யூத்தான்..யூத்தான்ன்ன்ன்ன்ன்
எம் எம் அப்துல்லா - பதிவ பத்தி கருத்து சொல்ல சொன்னா பின்னூட்டத்தப் பத்தி கருத்து சொல்லியிருக்கீங்க
தமிழன் கறுப்பி தொடர் ஆதரவுக்கு நன்றி.
நான் நேத்தே கடைப்பக்கம் வந்தேன், நீங்க பதிவை தூக்கி புட்டீங்க, தகவல் நல்லா இருக்கு
////இந்த ஆண்டில் தான் ரிலையன்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்றது. //
இந்த கப்பை பார்பதற்காக அப்போது ஜாயின் பண்ணியிருந்த வேலையை ரிசைன் பண்ணியவன் நான்..//
அடப்பாவமே
//எம் எம் அப்துல்லா - பதிவ பத்தி கருத்து சொல்ல சொன்னா பின்னூட்டத்தப் பத்தி கருத்து சொல்லியிருக்கீங்க
//
சிவனும்,சக்தியும் வேறவேறயாண்ணே?
:))
நசரேயன், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அது ஏற்பட்டது. மன்னிக்கவும். வருகைக்கு நன்றி.
சுரேஷ் செமையா கலாய்ச்சுட்டார்
\\வெளியாகும் முன்பே சூடான இடுகைக்கு வந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏர்படுத்தியிருந்தது\\
எதிர்பாராதது.
டாக்டர்
\\அடப்பாவமே\\
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்
\\சிவனும்,சக்தியும் வேறவேறயாண்ணே?\\
அண்ணே
முடியல
எனக்குத் தெரிந்து, எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் அவர் நீல வண்ண அரைக்கால் சட்டைக்கும் சிறிய கால்சட்டை அணிந்துவருவார்.
பட்டா பட்டிப் போட்ட கால்சட்டை பார்த்தாக நினைவில்லையே.
சரித்திரம் ரொம்ப முக்கியம் மு.க. :)
சரி பார்த்து சொல்லுவீங்களா...??
\\எனக்குத் தெரிந்து, எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் அவர் நீல வண்ண அரைக்கால் சட்டைக்கும் சிறிய கால்சட்டை அணிந்துவருவார்\\
டிபிசிடி
நீங்கள் சொல்வது சரி. பெரும்பாலான காட்சிகளில் டைட்டான சிறிய கால்சட்டை தான்.
ஆனால் ஒரு காட்சியில் மட்டும் கோடு போட்ட (செந்தில் இந்தப்படத்தில் அணிந்திருப்பார்- ஒரு நகைச்சுவை காட்சியில்) டிராயரில் பார்த்த ஞாபகம். தவறாயிருந்தால் திருத்தி விடுகிறேன்.
சரித்திரம் முக்கியமல்லவா :-)))
வெகு அரிதாகவே பின்னூட்டமிட்டு வந்துள்ளேன். பெரும்பாலும் வேண்டுமென்றே தவிர்த்து வந்துள்ளேன்.
ஆனால் ரொம்ப 'ஃபீல்' பண்ண வச்சிட்டீங்க நண்பரே, அதனால்தான் மறக்காமல் பாராட்டிவிட இதை எழுதுகிறேன்.
திரும்ப அந்த 87-க்காக ஏங்குகிறது மனசு...
தொலையும் தருணத்திலிருக்கும் போதுதான் இளமையின் மகத்துவம், இனிமை... எல்லாமே புரிந்து பாடாய்படுத்தும்!
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
எஸ்.சங்கர்
www.envazhi.com
Murali kannan Sir, I think Paruva Raagam was released in 1984 (Juhi chawla is Miss India 84).Poove unnai Poojithen was a superhit song then.
Cooliekaaran was produced by Dhaanu with Music by T.Rajendar. This was a Silver Jubilee movie. This was one of the very few outside movies for which T.R. scored music (Kilinjalgal, Pookkalai Parikkatheergal among others).
அன்புள்ள சங்கர்,
மிக நெகிழ்ச்சியாக உணருகிறேன். நன்றி.
சென்னைவாசி தங்களின் வருகைக்கு நன்றி.
85 ஆம் ஆண்டு படிக்காதவன் பட தயாரிப்புக்குப் பின்புதான் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. 87ல் வெளியானது. பின்னர் கயாமத் சே கயாமத் தக் (1998) மூலம் அமீர்கான் ஜோடியாக ஜூஹிசாவ்லா இந்தியில் அறிமுகமானார்.
எவ்வளவு அருமையான படங்கள் வந்திருக்கின்றன... நீங்க சொன்ன லிஸ்ட்ல பெரும்பாலும் பார்த்து ரசித்த படங்கள் தான்...
டீ.ஆர் அவருடைய பட ரைட்ஸை இது வரை எந்த டீவிக்கும் கொடுத்ததில்லை.
போன பின்னூட்டத்தில் தவறவிட்டது...
அப்படி கொடுத்திருந்தார்னா இன்னைக்கு அவரை நிறைய பேர் இப்படி ஓட்ட முடியாது. அவ்வளவு திறமையுள்ளவர்கள் திரையுலகில் வெகு சிலரே :(
தொலைக்காட்சியில் அப்பொழுது தான் ராமானந்த சாகரின் இராமாயனம் ஒளிப்பரப்பு ஆகிகொண்டிருந்தது 1986 ல் தொடக்கம் என்று நினைக்கிறேன். அதுவும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நன்றாக இருக்கும், சில நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாகவும் அறிவுபூர்வமான தாகவும் இருந்தன.
வெட்டிப்பயல், ராம்குமார் வருகைக்கு நன்றி
//தெருவிற்க்கு இரண்டோ மூன்றோ தொலைக்காட்சிப் பெட்டி இருந்த ஆண்டு. ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு தெருமுனையில் நின்று அதைப் பற்றி விவாதிப்பது தான் வெள்ளிக்கிழமை அஜெண்டா//
கலக்கல்..
நன்றி நர்சிம்
ம்ம் அப்போ நான் ரொம்ப ச்சின்னபொண்ணு (நிஜமாங்க). அதனால நோ கமெண்ட்ஸ். ஆனா தகவல்கள் வழக்கம்போல் கலக்கல்:)
// இளையராஜா இசையில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ சோழன் நான் பாடல் 30ஐ கடந்தவர்களின் ஐபாடில் டீபால்ட்.//
இது எனக்கும் பிடித்த பாடல்...! ஆனா எனக்கு இன்னும் 30 வயசு ஆகலிங்கோ...!
Template super..!
அந்த காதல் தேவதையில் sreedevi வானத்திலிருந்து கீழே இறங்கும்போது பின்னணி இசையில் பின்னியிருப்பார் இளையராஜா..
எனக்கு மறக்க முடியாத காட்சி அது.. அவருடைய பின்னணி இசையில் இந்தப் படமும் ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது..
//Cable Sankar said...
//இந்த யூத்தோட வயசு இன்னைக்கு ரிலீஸ் ஆயிருச்சு
:))))))//
அலோ.. நான் 84-87 பேட்ச் படிச்சு முடிச்ச அடுத்த நாளே வேலைக்கு சேர்ந்தேன். நான் இன்னமும் யூத்தான்.. யூத்தான்..யூத்தான்ன்ன்ன்ன்ன்.//
ஆமா.. இந்தாளு ஏன் போற, வாற இடமெல்லாம் நான் யூத்து.. யூத்து.. யூத்துதான்னு புலம்பிக்கிட்டிருக்காரு..!?
நன்றி வித்யா
நவநீதன் 30 ஆயிருந்தா நிச்சயம் வச்சிருக்கணும். :-)))
உண்மைத்தமிழன் அண்ணா பகிர்தலுக்கு நன்றிகள்
//தக் தக் பாடலின் மூலம் இளையராஜா. ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி என்ற சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் இது. (இந்தப்படம் காதல் தேவதை என தமிழிலும் டப்பானது). //
Even this song has a source in an English pop song. Some time in early 90's Radio Srilanka once played all these three songs.
I think Paruvaragam was first made as a Kannada movie Premaloka and then got dubbed into Tamil. Paruvaragam has super-hit songs from Hamsaleka. An ever-green movie which had numerous re-releases in the theatre in our area. Thanks to Juhi, our classmates usually bunk for morning classes whenever this movie is screened.
Enga Chinna Rasa's 'Konda cheval koovum neram' was used in 'Beta' as 'Koyal si Teri Boli' which was also a hit song in Hindi. Anand Milind proved to be mere copy-cats and later dissappeared from the bollywood scene. What a mighty fall from their 'Qayamat Se Qayamat Tak' stature?
I think 'Tharaasu' was the leading investigating journal at that time. It's editor Shyaam was running a movement (Tharaasu manram?) and trying something like M.S.Udayamurthy's Makkal Sakthi Iyakkam. I'm not sure Gopal started Nakkeeran by then.
Roopini's 'Kaala Kaala' song from Manidhan is unforgettable :)
தல
கலக்கல்...ரெட்டை வால் குருவியில் ராதிகா பாடும் பாடல் மன்னன் வந்தும் கலக்கல் பாடல் ;)
இந்தியன் தங்கள் பகிர்தலுக்கு நன்றி.
கூடுதல் தகவல்கள் சுவராசியம்.
நன்றி கோபிநாத்
தமிழ், தெலுங்கு, ஹிந்தியென்று எப்படி நினைவில் வைக்கிறீர்கள்...
தல அசத்தலான் தொகுப்பு + நினைவுகள்
சின்னப்பையன்,அத்திரி வருகைக்கு நன்றி
Post a Comment