என் மனைவி இந்த விஷயத்தை முதலில் சொன்னபோது எனக்கு அவன் மீது கோபம் வரவில்லை. ஆச்சரியம் தான் ஏற்பட்டது.
அவள் சொன்ன விஷயம் இதுதான் “நம்ம சுகந்தி ஆபிஸுல ஒருத்தன் புதுசா ஜாயின் பண்ணியிருக்கானாம். அவன் தினமும் அவளை தொல்லை பண்ணிக்கிட்டேயிருக்கானாம். அவளுக்கு எப்படி அவங்க வீட்டுக்காரர் கிட்ட இதை சொல்லுறதுன்னு தெரியலையாம்”.
இதில் வீட்டுக்காரர் என்று குறிக்கப்படுபவர் என் நண்பன் சிவா. காரியவாதி என்று பெயரெடுத்தவன். வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கவேண்டும், குடும்பத்தில் ஓரளவுக்கு வசதி இருக்கவேண்டும், அதே வேளையில் பெண் கோபித்துக் கொண்டு வந்தால் அவளை அரவணைக்க முடியாத அளவுக்கு அங்கே பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்று மணல் கயிறை மிஞ்சிய நிபந்தனைகளுடன் பெண் தேடி அதில் வெற்றியும் பெற்றவன்.
இதுதான் போகட்டும் என்றால் பெண்ணுக்கு உரிமை கொடுப்பதில் தாலிபானை மிஞ்சிய பழமைவாதியாக இருந்தான். அவன் மனைவியின் ஜாக்கெட், ஒளி மட்டுமல்ல நீரும் ஊடுருவ முடியாத அடர்த்தியில் இருக்கும். ஜாக்கெட் கையின் நீளம் முழங்கையை தாண்டி இருக்கும். சங்க இலக்கியங்களில் சொல்வார்களே ‘சேல் அகற்றிய விழியாள்”, அதாவது கண்கள் நீண்டு காதுவரை இருக்கும் என. அதுதான் அவள் மனைவியின் ஜாக்கெட்டைப் பார்க்கும் போது நினைவுக்கு வரும்.
ஆமாம் அந்த ஜாக்கெட்டின் மேல்பகுதி கழுத்து வரையும், கீழ் பகுதி பாவாடை வரையும் நீண்டிருக்கும். சூரத் சென்று பிரத்யேகமாக வாங்கிவருவானோ என்று எண்ணும் படி அவள் உடுத்தும் சேலையின் நீளமும் அகலமும் ஆச்சரியப்படுத்தும். அந்த சேலையை சுற்றிக்கொண்டு அவள் வரும்போது எகிப்திய மம்மி ஒன்று எதிரில் வருகிறதோ எனத் தோன்றும். ஆனால் மம்மிகள் முகத்திற்க்கு மஞ்சள் பூசி கேரம் போர்ட் ரெட் காயினை நெற்றியில் ஒட்டிக் கொண்டு வராதே.
இப்படி வருபவளையா ஒருவன் தொல்லை செய்கிறான்?. 29 வயசிலே 49 வயசுக்காரி மாதிரி இருப்பாளேடா? பாலியல் வறட்சி தமிழ்நாட்டில் உண்மையிலேயே அதிகரித்து விட்டது போலிரிக்கிறதே என ஆச்சரியப் பட்டேன்.
இது நடந்த ஒரு வாரத்தில் அலுவலக வேலையாக சுகந்தி இருக்கும் அலுவலகம் வழி செல்ல நேரிட்டது. சரி விசாரிப்போம் என அங்கே நுழைந்தேன். சுகந்தி குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருந்தாள். பரஸ்பர உரையாடலுக்குப் பின் அவள் காட்டிய திசையில் துறு துறு வனெ ஆரம்ப இருபதுகளில் இருந்த ஒரு வாலிபனைப் பார்த்தேன். பின் யோசனையுடன் விடைபெற்றேன்.
அலுவலகம் முடிந்து வீட்டிற்க்கு திரும்பியவுடன் மனைவி கொடுத்த தேனீரை பருகிக் கொண்டே ஆரம்பித்தேன். “ சுகந்தி பொய் சொல்ற மாதிரி தெரியுதே?. ஒரு வேளை இந்த மாதிரி பேச்சு கிளம்புனா, சிவா தன் கிட்டே அன்பா நடந்துக்கிடுவான்னு அவளே கிளப்பி விடுற மாதிரி தெரியுதே என்றேன்.
அவள் பார்த்த பார்வையில் ஆறிக் கொண்டிருந்த தேனீர் சூடானது போல் இருந்தது. கோபத்துடன் சொன்னாள் “ எந்தப் பொண்ணும் தான் கேரக்டர் ஸ்பாயில் ஆகிறத விரும்பவே மாட்டா”.
உங்க லாஜிக்ல ஓட்டை இல்லை பெரிய பள்ளமே இருக்கு என வழக்கம் போல கடுப்படித்துவிட்டு டிவி பார்க்க சென்றாள்.
இந்த டிவிக்கள் பல வழிகளில் நம்மை படுத்தி எடுத்தாலும் சில நேரம் நல்லது செய்வதுமுண்டு. அதில் ஒன்று பெண்கள் தினத்தை முன்னரே அறிவித்து விளம்பரம் செய்வது. சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்த நான், சர்பிரைஸ் கிப்ட் ஒன்றை வாங்க ஸ்பென்சரில் நுழைந்தேன்.
எதை, எவ்வளவுக்கு வாங்கினால் திட்டு விழாமல் இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தபோது ப்ளு கலர் ஜீன்ஸ் ஸ்கர்ட்டும், மஜந்தா கலர் டாப்ஸூம் அணிந்த பெண்ணொருத்தி என்னை கடந்து சென்றாள். வடிவழகும் நடையழகும் பெருமூச்சு விட வைத்தன. என்ன அவள் போட்டிருந்த போனிடெயில் தான் குதிரை வாலின் நீளத்தைத் தாண்டி டைனோசர் வால் அளவுக்கு நீண்டிருந்தது.
அப்போது ஒரு துறு துறு இளைஞன் அவளிடம் ஒரு கைப்பையை கொண்டு வந்து நீட்டினான். இவன எங்கேயோ பார்த்திருக்கமே என்று யோசிக்கையில், அவள் எதேச்சையாக திரும்பினாள். அட சுகந்தி!.
எப்படி ரியாக்ட் செய்வது எனத் தெரியாமல் இலக்கற்று பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை நெருங்கினாள் அவள். என் கண்களைப் பார்த்து சொன்னாள் “ எனக்கும் பொண்ணுக போல இருக்கணும்னு ஆசை இருக்குல்ல”.
43 comments:
துண்டு போட்டுக்கிறேன்:)
புனைவில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் தலைவரே.. மற்றபடி அந்த வர்ணனைகள் அருமை.
நன் உங்க பதிவ படிச்சேன் அருமை வோட்டும் போட்டாச்சு
என்னோட பதிவும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க
http://sureshstories.blogspot.com/
ராஜ நடராஜன் வருகைக்கு நன்றி.
நன்றி கேபிள் சங்கர். நல்ல புனைவெழுதும் முயற்சியை தொடருகிறேன்.
வாங்க சுரேஷ். அப்படியே செய்திடுவோம்.
கதை நல்லாயிருக்கு முரளி.. வர்ணனைகளும் நடுநடுவே சின்ன சின்ன நையாண்டிகளும் // மம்மிகள் முகத்திற்க்கு மஞ்சள் பூசி கேரம் போர்ட் ரெட் காயினை // அருமை..
வெண்பூ வருகைக்கு நன்றி
//“ எனக்கும் பொண்ணுக போல இருக்கணும்னு ஆசை இருக்குல்ல”. //
புரியலயே தல...
நகைச்சுவை சரளமாக வருகிறதே!
கடைசில நீங்க்தான் வில்லன்னு நினைச்சோம். கடைசில பார்வையாளர் ஆகிட்டாங்களே தல..
கடைசில ஒரு கேள்விக்குறி?????/
முரளி, முதல்ல படிச்சப்ப அந்த பொண்ணு மேல பரிதாபம் வந்தது. கொஞ்ச நேரம் கழிச்சி இப்ப அந்த தலைப்பே அந்த பொண்ணைப் பத்திதான்னு தோணுது.. மாத்தி மாத்தியோசிக்க வெச்சிட்டீங்களே தல, பின்னவீனத்துவ வாதி ஆகிட்டீங்களோ.. சூப்பர்..
//தாலிபானை மிஞ்சிய பழமைவாதி//
//ஒளி மட்டுமல்ல நீரும் ஊடுருவ முடியாத அடர்த்தியில் இருக்கும். //
//மம்மிகள் முகத்திற்க்கு மஞ்சள் பூசி கேரம் போர்ட் ரெட் காயினை நெற்றியில் ஒட்டிக் கொண்டு//
//ஆறிக் கொண்டிருந்த தேனீர் சூடானது போல் //
//வடிவழகும்//
கார்க்கி எழுதியிருந்தா பின்னீட்டடா ராஸ்கல்'னு சொல்லியிருப்பேன்.
உங்களுக்கு அப்படிச் சொல்ல முடியல..
பின்னீட்டீங்க சார்!
வெண்பூ சொன்னதை வழிமொழியறேன்.
தலைப்பு அருமை
சுரேஷ், மாதவராஜ் தங்களின் வருகைக்கு நன்றி.
வெண்பூ நீங்கள் நல்ல ரசிகர்.
பரிசல் உங்கள் பின்னூட்டத்திற்க்கு என் பதில்.
கார்க்கி இன்று உங்களுக்கு கொடுத்த அதே பதில்
வர்ணனைகள் அழகா இருக்கு!
//எகிப்திய மம்மி ஒன்று எதிரில் வருகிறதோ எனத் தோன்றும். ஆனால் மம்மிகள் முகத்திற்க்கு மஞ்சள் பூசி கேரம் போர்ட் ரெட் காயினை நெற்றியில் ஒட்டிக் கொண்டு வராதே.//
கலக்கல்!
அருமை,
லேபிளை படிக்காமல் கதியை படிச்சதுனால நெசமாத்தான் சொல்றீங்களோன்னு நெனச்சேன். அந்த அளவுக்கு தத்ரூபம்,
கலக்கல் தலைவரே.
மிக அற்புதமான வர்ணனைகள் தல.
நடுவில் ஆரம்பித்தவிதமும் முடிவில் தொடங்கிய விதமும் அருமை.
:) :)
//நடுவில் ஆரம்பித்தவிதமும் முடிவில் தொடங்கிய விதமும் அருமை.//
நடுவில் ஆரம்பித்தது புரிகிறது
முடிவில் தொடங்கியது புரியல
ரொம்ப நல்லா இருக்கு முரளி கண்ணன்.
யார் காரியவாதி? உடையை மாற்றிக்கொண்டு நடந்த பெண் காரியவாதி என்று சொல்லுகிரீர்கள? இதில் என்ன காரியம் இருக்கிறது.......".வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று கும்மியடி" என்று பாரதி பாடி இருக்கிறாரே முரளிகண்ணன்?
//அவள் வரும்போது எகிப்திய மம்மி ஒன்று எதிரில் வருகிறதோ எனத் தோன்றும்//
ரசித்தேன் தல.......
//“ எனக்கும் பொண்ணுக போல இருக்கணும்னு ஆசை இருக்குல்ல”.//
அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகளின் எழுச்சி ...
//பாலியல் வறட்சி//
இது புது மேட்டர் ,புது வார்த்தை தலை ...
வர்ணனை அபாரம்
இங்க சுகந்தி தான் காரியவாதியா தெரியறா .அவளோட கணவன் இல்லை
எனக்கு காமன் சென்ஸ் இல்லாதவன்..
உங்க பேரு ’மு’வில் ஆரம்பிப்பதால் மூளை இல்லாத முரளின்னு சொல்லிட போறாங்க.. உஷார் தல.. :)))
//கார்க்கி எழுதியிருந்தா பின்னீட்டடா ராஸ்கல்'னு சொல்லியிருப்பேன்.//
குசும்பன் வந்து, எத பின்னிட்டார்? டைனசர் வால் அளவுக்கு இருந்த ஜடையையான்னு கேட்பாரு..
ஒரு மாதிரி புரியதுண்ணே...!
நிறைய விசயங்கள உள்ளடக்கியிருக்குது. யோசிக்க வைக்குது.
நல்லா ஜாலியான எழுத்து நடை, சுவாரசியம்.
பின்னீட்டீங்க முரளி
தமிழ் பிரியன், குசும்பன், தராசு, நர்சிம், புருனோ, மணிகண்டன் தங்களின் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி
ரத்னா பீட்டர்ஸ் தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.
அத்திரி, மந்திரன் தங்களின் வருகைகு நன்றி
சரவண குமரன், நசரேயன், மிஸஸ் டவுட் மிக்க நன்றி
கார்க்கி கேள்வியும் நானே பதிலும் நானேவா.
கோபிநாத் ஏதோ புரியுதில்லே :-)
ச முத்துவேல், டிவி ராதாகிருஷ்ணன் சார் தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
nallaa irukku...
சபாஷ். பல இடங்களில் இயல்பான நகைச்சுவை தெறிக்கிறது. அவள் ஜீன்ஸ் ஏற்பாடு செய்துகொண்டதால் அல்ல, பின்னாளில் உதவுமே என்று அவன் மேல் முன்கூட்டியே புகார் செய்ததால் காரியவாதி என்று தோன்றியது. கடைசி வாக்கியத்தில் ஒரு கதை தொடங்குவதும் அருமை. கடைசி வார்த்தை 'இருக்கும்ல' என்று இருந்திருக்கலாம்.
என்ன சொல்லலாம்????
தொடருங்கள் :)
:-))))
நன்றி திவ்யப்ப்ரியா
வைத்யாண்ணா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அப்துல்லா என்னைக் குழப்பி விட்டீர்கள்.
தொடருங்கள் என்று சொல்வது கதையையா இல்லை கதை அல்லாத வற்றையா?
நன்றி சென்ஷி
முரளி,
வழக்கமான அசத்தல் நடை. சூப்பர் வர்ணனைகள். In fact நான் நேற்றே படித்துவிட்டேன். என்ன சொல்ல வந்தீங்கன்னு சரியா புரியல முதலில் (வெண்பூ, இப்பதான் உன் கஷ்டம் புரியுது!). பின்னூட்டங்களில் இருந்து ஒரு மாதிரி புரியுது. நிறைய விஷயங்களை வாசகருக்கே யோசிக்க விட்டுட்டீங்க. நல்ல உத்தி.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா.
Shoot.. dint get the ending till i went thru the comments :-(
Post a Comment