மனோகரா காலம் தொட்டு சமீப காலம் வரை தமிழ்சினிமாவில் மகா புனிதமாக கருதப்பட்டு வந்த கதாபாத்திரம் அம்மா கதாபாத்திரம்தான். அதுவும் மக்கள் அபிமானம் பெற்ற கதாநாயகனின் அம்மா என்றால் அது தெய்வத்திற்க்குச் சமமாகவே படைக்கப்பட்டிருக்கும். எம் ஜி யார் தன் படங்களில் மட்டுமில்லாமல் தலைப்பிலும் தாயை கைவிட்டதில்லை. தாய் சொல்லை தட்டாதே, தாய்க்கு தலை வணங்கு, தாயின் மடியில் என அவரது பல படங்களில் தாய் செண்டிமெண்ட் இருந்தது. அடுத்து ரஜினியின் படங்களிலும் தாஇ செண்டிமெண்ட் முக்கிய இடம் பிடித்தது. அன்னை ஓர் ஆலயம், தாய் மீது சத்தியம், தீ, மிஸ்டர் பாரத் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளே. பட்டியலிட்டால் பல ரஜினி படங்களை சேர்க்க வேண்டும்.
ராமராஜன், ராஜ்கிரண் படங்களில் தாய் கிட்டத்தட்ட தெய்வமேதான். ராஜ்கிரண் அரண்மனைக்கிளியில் தாயின் அஸ்தியை முகத்தில் பூசிக் கொண்டு அழுததை யாரும் மறக்க முடியாது. விஜயின் படங்களிலும் தாய் செண்டிமெண்டுக்கு குறைவில்லை. துள்ளாத மனமும் துள்ளுமில் தாயை காட்டாமலேயே ஒரு சென்டிமெண்ட் நன்கு கையாளப் பட்டிருந்தது. சிவகாசி, வில்லு ஆகிய படங்களிலும் தாய் செண்டிமெண்டே படத்தின் அடிநாதமாக இருந்தது. முதலில் நடித்த ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் கூட எம் ஏ என்றால் மதர்ஸ் அப்பெக்ஷன் என்ற அரிய விளக்கத்தைக் கொடுத்திருப்பார். இதுதவிர எல்லா நாயகர்களுமே அம்மா அம்மா என அரற்றி ஒரு பாட்டுப் பாடாமல் இருந்ததில்லை.
இந்த மாஸ் ஹீரோக்களின் படங்களில் தாய் செண்டிமெண்ட் வைப்பதில் ஒரு உளவியல் இருக்கிறது. அந்த ஜனரஞ்சகப் படங்களைப் பார்க்கும் தாய்மார்கள் தன் சிறு வயது மகனிடம் “ பார்த்தியா, அம்மாக்காக என்னெல்லாம் செய்யுறான்” என சொல்லி அவனை ஆற்றுப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நடிகர் நடிக்கும் படங்களில் தாய்க்கு முக்கியத்துவம் தருகிறார். எனவே நல்ல மனிதர் என்னும் பிம்பம் பெண்களின் மனதில் ஏற்படுகிறது. மேலும் இந்த நடிகன் படத்தை மகன் பார்க்கலாம், ரசிகனாக கூட இருக்கலாம் என்னும் எண்ணமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது. மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு குடும்பத்தோடு கூட்டம் வர இதுவும் ஒரு காரணம்.
ஆனால் இதே அம்மாவை, சமூகத்தை யதார்த்தமாக காட்டும் கதையமைப்புள்ள படங்களில் மாமியார் என்ற கோணத்திலேயே காட்டுவார்கள். நாயகிக்கு கொடுமை செய்வதே பிரதானமாக அமைந்திருக்கும். இந்தப் படங்களில் கதாநாயகர்கள் மக்கள் அபிமானம் பெறாதவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். படத்தைப் பார்க்கும் பெண்கள் அந்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் தான் தன்னை பொருத்திப் பார்ப்பார்கள். ஆண்கள் ஒரு பொதுக்கண்ணோட்டத்தில் படத்தைப் பார்ப்பார்கள்.
எது எப்படி இருந்தாலும் நாயகனின் அம்மா என்ற கோணத்தில் காட்டப்படும் பாத்திரம் தியாக செம்மலாகவும், குடும்பத்திற்க்கு ஒன்று என்றால் துடித்துப் போய்விடுபவளாகவும், குல விளக்காகவும், கட்ட்டுப்பெட்டியாகவும் இருக்கும். ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் படங்களில் மாற்றம் ஏற்பட்டு அம்மாவை விருப்பு வெறுப்புள்ள சாதாரண மனுஷியாக காட்டும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தித் திரைப்பட அம்மாக்களும் புனிதத்தில் தமிழுக்கு சளைத்தவர்கள் இல்லை. ஆனால் மைனே பியார் கியா படத்துக்குப் பின் இளமையான அம்மாக்கள் இந்தி திரையுலகில் வலம் வரத் தொடங்கினார்கள்.
நாம் நமது ஏரியாவை மட்டும் எடுத்துக் கொள்வோம். கதாநாயகனின் அம்மாவாக இருந்து, புனித பாத்திரம் வகிக்காமல் சராசரியாக கட்டப்பட்ட அம்மாக்களைப் பார்ப்போம்.
வசந்த மாளிகை
சிவாஜியின் வசனங்களுக்காகவும், நடிப்புக்காகவும் இந்த படம் ஞாபகம் கொள்ளப் பட்டாலும், சிவாஜி குடிகாரர் ஆனதற்க்கு காரணம் அவரது தாய் என்னும் வகையிலேயே கதையமைப்பு இருக்கும். வசதி படைத்த அவரது தாய் லேடிஸ் கிளப், மாதர் சங்கம் என சுற்றுவதால் வேலைக்காரியால் வளர்க்கப்படுகிறார் சிவாஜி. புறக்கணிப்பு அவர் மனதில் ஏக்கமாக மாறி அதைமறக்க குடிகாரர் ஆகிறார். பல பெண்களை வீழ்த்துகிறார். பின்னர் காதலி வாணிஸ்ரீ மூலம் நல்வழிப் படுகிறார்.
குணா
நாயகனின் அம்மா கற்புக்கரசியாக இருக்க வேண்டும் என்பதை உடைத்துப் போட்ட படம். மகன் வளர்ந்த பின்னும் தாய் விபச்சார விடுதி தலைவியாகவே இருக்கிறாள். தேவடியா மகன் என்ற ஒரு வார்த்தையையே இங்கே யாராலும் தாங்க முடியாது. வாழ்க்கையே அப்படி என்றால்?. நாயகனின் மனச் சிதைவுக்கு அதுவே காரணமாகிறது.
நந்தா
கள்ள உறவு கொள்ளும் கணவனை கொன்று விடுகிறான் மகன். ஆனால் தாய் மகனை உச்சி முகரவில்லை. தன் வாழ்க்கை மற்றும் தன் இன்னொரு மகள் வாழ்க்கை பாழானதே என்று நினைத்தாளோ என்னவோ?. சீர்திருத்த பள்ளியில் இருந்து மகன் திரும்பி வந்தும் மனம் மாறவில்லை. ஊரார் மகனை கொலைகாரன் என்று தூற்றியதும் சோற்றில் விஷம் வைத்து கொன்றே விடுகிறாள். இந்த வகையில் இந்தப் படமும் தாய் செண்டிமெண்டை அசைத்துப் பார்த்த படம்தான்.
அமர்க்களம்
இதில் அஜீத் ரவுடியாக மாறக் காரணாமாக காட்டப்படுவது அவர் பெற்றோர்க்கிடையே ஏற்படும் ஈகோ மோதல். அதனால் அவர் தாய் வேறொருவனையும், தந்தை வேறொருத்தியையும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அனாதையாகும் அஜீத் ரவுடியாகிறார்.
வில்லன்
தன் மகன் எப்படி இருந்தாலும் தாய் ஏற்றுக் கொள்வாள் என்பதை உடைத்த படம் இது. இரட்டை அஜீத்களில் ஒருவன் ஆட்டிசம் போன்ற நோய்க்கு ஆளானவன். அப்படி ஒரு பிள்ளை தங்களுக்கு இருப்பதை அவமானமாக கருதும் பெற்றோர் தங்கள் சமூகத்திற்க்கு அவனை காட்டாமல் இருக்கிறார்கள். ஆனால் அவனின் உடன்பிறப்பு அவனை சீராட்டி வளர்க்கிறான்.
கற்பூர முல்லை
பாடகி தன் இமேஜும் தன் காதலரின் இமேஜும் பாதிக்கப் படுமென தங்களுக்கு பிறந்த குழந்தையை விடுதியில் வளர்க்கிறாள். ஆனால் மகள் கண்டுபிடித்து வந்தவுடன் வழக்கமான அம்மாவாகி விடுகிறாள். இதுபோலவே சிந்துபைரவி முதலான படங்களிலும் காட்சி அமைப்பு உண்டு.
இம்மாதிரி படங்களில் பெரும்பாலும் நாயகனின் நிலைக்கு காரணத்தை சித்தரிக்கவே வழக்கத்துக்கு மாறான தாயைக் காட்டினார்கள். ஆனால் இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு படங்களில் தாயும் ஒரு குடும்ப உறுப்பினர், அவருக்கு விருப்பு வெறுப்பு உண்டு என இயல்பான தாயை காட்டியுள்ளார்கள். அவை சிவா மனசில சக்தி மற்றும் யாவரும் நலம்.
சிவா மனசில சக்தி
நாயகன் ஜீவாவின் தாய் ஊர்வசி இதில் வெகு யதார்த்தமாக காட்ட்ப்பட்டுள்ளார். அவன் காதலியின் வீட்டைப் பார்த்ததும் நல்ல புளியங்கொம்பா பிடிச்சிட்டடா என்னும் போதும், அவளை கர்ப்பமாக்கி விட்டான் என்று தெரிந்ததும் புன்னகை புரிவதும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட சித்தரிப்பு.
யாவரும் நலம்
நாயகன் மாதவனின் தாய் சரண்யா இதி சீரியல் பைத்தியமாக நடித்துள்ளார். மாதவன் சுவற்றில் ஆணி அடிக்கும்போது கை அடிபட்டுவிட அவ்வளாவுதானா என்றபடி போவார். மனைவிதான் பதறி ஓடி வருவார். இதுபோல் பல காட்சிகள் இருக்கும். முன்காலத்திய திரைப்படங்களின் அம்மாக்களோடு ஒப்பிடும்போது இது பெரிய முன்னேற்றம் தான்.
இந்த இரண்டு படங்களையும் எல்லாத் தரப்பினரும் திரையரங்கில் நன்கு ரசித்தார்கள். மக்கள் இந்த மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்றே தெரிகிறது.
இனி வரும் ஆக்ஷன் படங்களில் அம்மா-மகன் அதீத பாசக் காட்சிகள் வந்தால் மக்கள் சிரிக்கக் கூட கூடும்
47 comments:
//ராமராஜன், ராஜ்கிரண் படங்களில் தாய் கிட்டத்தட்ட தெய்வமேதான். ராஜ்கிரண் அரண்மனைக்கிளியில் தாயின் அஸ்தியை முகத்தில் பூசிக் கொண்டு அழுததை யாரும் மறக்க முடியாது.//
அசத்துங்க முரளி..இண்ட்ரோல எதிர்பார்ப்ப கூட்டிட்டீங்க
முழுப்பதிவும் படிச்சுட்டு வர்ரேன்
நல்ல தொகுப்பு முரளி..
//
இனி வரும் ஆக்ஷன் படங்களில் அம்மா-மகன் அதீத பாசக் காட்சிகள் வந்தால் மக்கள் சிரிக்கக் கூட கூடும்
//
கரெக்ட்.. ஏற்கனவே "டாய்.. சென்டுமென்டை ரொம்ப புழியாதீங்கடா"ன்னு நம்ம தியேட்டர்ல சத்தம் போடுவாங்க..
சிவா மனசுல சக்தி படத்துல வர்ற அம்மா கேரக்டர் ஒரு லூசு முரளி என்னை பொறுத்தவரை.. ஆனா இப்படி ஒரு அரை லூசை அம்மா கேரக்டரா வச்சது ஒரு கட்டுடைப்புதான்.
முரளி,
நீங்கள் உதாரணம் காட்டியுள்ள சினிமாக்களில் ஒன்றையும் நான் பார்த்ததில்லை.
ஆனால் அதற்குமுன் நீங்கள் எழுதியிருக்கும் உங்களுடைய அவதானங்கள் பிரமாதம்.
நர்சிம், வெண்பூ, கேபிள் சங்கர், ஜியோவ்ராம் சுந்தர்
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள். :-)
நன்றி மைபிரண்ட்
ஆபூர்வ ராகம் ??
முரளி...ம்...ம்...ம்...
நல்ல தொகுப்பு. 'M.குமரன், S/o மகாலட்சுமி' நதியாவை விட்டுட்டீங்களே..
கதாநாயகன் அனாதையாக இருந்தாலொழிய அம்மா சென்டிமென்ட் இல்லாத படங்களே இல்லை என்று கூறலாம் . எம்டன் மகனிலும் எதார்த்தமான அம்மாவாக சரண்யா கலக்கியிருப்பார். தளபதியில் குந்தியை நினைவுப்படுத்தும் ஒரு அம்மா கதாபாத்திரம். ஆஹா படத்தில் மூன்று தலைமுறை அம்மாக்களை காட்டியிருப்பார்கள். நியூவில் பையனின் குறும்பு பொறுக்க முடியாமல் திட்டும் ஆனால் அவன் காணாமல் சென்ற பொழுது அழும் தாயை காட்டியிருப்பார்கள். பாக்கியராஜின் சுவரில்லாத சித்திரங்களில் கணவனை இழந்து குடும்ப செலவை ஏற்க ஒரு வியாபாரியின் ஆசைநாயகியாகும் அம்மா அது பற்றி தெரிந்த பின் அதனை எதிர்க்கும் பெண் என்று ஒரு எதார்த்த சூழலை காட்டியிருப்பார்கள். சின்னதாயி படத்தில் கதாநாயகியின் அம்மா கிராமத்து விபச்சாரி. அலைபாயுதேவிலும் ஜெயசுதா ஒரு எதார்த்தமான அம்மாவாக நடித்திருப்பார்.
சாக்லெட் திரைப்படத்தில் சுகாசினி சைக்கோ அம்மாவாக நடித்திருப்பார். ரோஜா கூட்டத்தில் ரேகாவிற்கும் வில்லத்தனமான அம்மா ரோல்
மாறுபட்ட தலைப்பு. நல்ல அலசல்.
வருகைக்கு நன்றி புருனோ,டி வி ராதாகிருஷ்ணன், நிலாக்காலம்.
ராம்குமார், கூடுதல் தகவல்களுக்கு நன்றி.
நன்றி ரவிஷங்கர்
எனக்கும் அபூர்வராகம் படம்தான் நினைவுக்கு வந்தது..
இந்த சப்ஜெக்டை எழுதணும்னு வந்தது உங்கள் அவதானங்களின் வெளிப்பாடு...
இப்பல்லாம் ஓவரா இருக்கற சென்டிமென்ட்ஸ் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றுதான் நினைக்கிறேன்...
நல்ல அலசல். இதே மாதிரி இன்னொரு படம் வந்தது. என்ன படம்.. என்ன பேரு.... ஆங்.. சாவித்ரி
இந்தப் படத்துல என்ன கதை தெரியுமா? வயசான ஒரு கோயில் குருக்கள்.. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்குவாரு. அந்தப் பொண்ணுக்கு அந்த ஊர்க்காரன் மேல ஒரு ஆவல். அவனே கதாநாயகன். அவனோட அம்மாவின் நடத்தை கேள்விக்கு உட்படுத்தப்பது. அதுனால அவனுடை எண்ணவோட்ட மாறுதல்கள். படமும் பாட்டுகளும் நல்ல பாட்டுகள். ஆனா படம் ஓடலை. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்னு பாட்டு நல்லாருக்கும்.
அம்மா... அம்மா.. அம்மா
super thesis thaan panni irukkeenga :)
ஆம்மம்மாmmammammammammamma !!!!!!!!!!!!!!!
அண்ணா, எங்க சின்ன ராசாவ விட்டு போட்டீங்களே அண்ணா......
ஆத்தாவப் பத்தி ஏதாச்சும் எழுதுங்கண்ணா............
ஆத்தா...
ஆத்தா...உன்னை வந்து பாக்காம போய்டாகளே..
தமிழன் கறுப்பி வருகைக்கு நன்றி
ஜிரா வருகைக்கும் மேலான பகிர்தலுக்கும் நன்றி
சின்னப்பையன், திவ்யப்பிரியா, யுவராஜ், சுரேஷ் தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
//மாதவன் சுவற்றில் ஆணி அடிக்கும்போது கை அடிபட்டுவிட அவ்வளாவுதானா என்றபடி போவார். மனைவிதான் பதறி ஓடி வருவார்.//
ஹா ஹா ஹா செம காமெடி
:)))))
thalaivara kanom.. innum varalayaa?
செண்டிமெண்ட் அம்மாக்கள் வரும் படங்களை பார்த்து கடுப்படைவதை விட, கட்டுடைப்பு அம்மாக்கள் வரும் படங்கள் பெட்டர்னு தோணுது....
\\இனி வரும் ஆக்ஷன் படங்களில் அம்மா-மகன் அதீத பாசக் காட்சிகள் வந்தால் மக்கள் சிரிக்கக் கூட கூடும்\\
இப்பவே அப்படி தான் சிரிப்பு சரிப்பாக வருதுண்ணே ;)
கிரி,கார்க்கி, கோபிநாத், அறிவிலி தங்கள் வருகைக்கு நன்றி.
முரளி, முதல்வன் படதுல வர்ற அம்மா கூட நல்ல பண்ணிருப்பாங்க.
ஆமாம் ரமி. தங்கள் வருகைக்கு நன்றி
இந்த மாஸ் ஹீரோக்களின் படங்களில் தாய் செண்டிமெண்ட் வைப்பதில் ஒரு உளவியல் இருக்கிறது. அந்த ஜனரஞ்சகப் படங்களைப் பார்க்கும் தாய்மார்கள் தன் சிறு வயது மகனிடம் “ பார்த்தியா, அம்மாக்காக என்னெல்லாம் செய்யுறான்” என சொல்லி அவனை ஆற்றுப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நடிகர் நடிக்கும் படங்களில் தாய்க்கு முக்கியத்துவம் தருகிறார். எனவே நல்ல மனிதர் என்னும் பிம்பம் பெண்களின் மனதில் ஏற்படுகிறது. மேலும் இந்த நடிகன் படத்தை மகன் பார்க்கலாம், ரசிகனாக கூட இருக்கலாம் என்னும் எண்ணமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது. மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு குடும்பத்தோடு கூட்டம் வர இதுவும் ஒரு காரணம்.//
இந்த மேட்டரை வச்சிதான் எம்ஜியார் புரட்சித்தலைவர் ஆனார்,
நல்ல எழுத்து முரளி கலக்குங்க
arumayana padhivu
thanks murali anna
ஜாக்கி சேகர், உங்களோடு நான் மிக்க நன்றி
முரளி இப்ப எல்லாம் இந்த செண்டிமெண்ட் ஒத்து வராது
எல்லாரும் ஓடறாங்க நாமளும் ஓடறோம்.
அந்த காலகட்டத்தில், நீங்கள் கூறி இருக்கும் அத்தனை விஷயங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இன்றிருக்கும் ஓட்டத்தில் இதெல்லாம் யோசிக்க நேரம் இல்லாமல் போனதுதான் மிகவும் சோகம்.
அருமையா எழுதி இருக்கீங்க முரளி!!
அருமையான தொகுப்பும் கூட!!
புதிர் 1 : இந்த வாசகத்தை சொன்னது யார்
கீழ்க்கண்ட வாசகத்தை சொன்னது யார்
பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.
சரியாக சொல்பவர்களுக்கு பிங் பாந்தர் பட்டம் வழங்கப்படும்
மேலோட்டமாக இருப்பதைப்போல ஒரு ஃபீல் முரளி. இருப்பினும் சிறப்பான பதிவு.
ரம்யா தங்களின் வருகைக்கு நன்றி
ஆதிமூலகிருஷ்ணன் தங்கள் வருகைக்கு நன்றி
என்னண்ணே... ரிதம், ஜானி-யை மறந்துட்டீங்களே! ஆனா சூப்பர் பதிவு!
வெங்கிராஜா தங்கள் வருகைக்கு நன்றி
அழுத்தமான கதை இல்லாமல் இந்த மாதிரி வெறும் செண்டிமெண்டுகளால் தான் தமிழ் சினிமா உருப்படாமல் போனது.
நல்ல பதிவு.
நல்லாவே அலசியிரிக்கிங்க... குட்...
-வீணாபோணவன்.
வண்ணத்துப் பூச்சியார், வீணாப் போனவன் தங்கள வருகைக்க்கு நன்றி
உங்களுக்கு உபயோகமான தகவல் பக்கமாக இருக்கலாம்.
http://ebooks.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2009/apr/23/75
முரளி,
அட்டாகாசம் !
மன்னன் படத்தில் 'அம்மாவென்று அழைக்காத....'
Post a Comment