March 18, 2009

ரித்தீஸுக்கு எம் பி சீட் & ஜூவியில் விடாது நர்சிம்

அரசியல் & புலனாய்வு பத்திரிகைகளுக்கு பொற்காலம் என்பது தேர்தலும் தேர்தல் சேர்ந்த காலமும் தான். செய்திகளுக்கும் ஹேஸ்யங்களுக்கும், ஹாஸ்யங்களுக்கும் பஞ்சமிருக்காது. விற்பனையிலும் குறைவிருக்காது.

இன்றைய ஜுவியில் நடிகர் ரித்தீஸின் பெயர் எம் பி சீட்டுக்கான பரிசீலனையில் இருப்பதாக ஹேஸ்யம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பதிவுலகிலும் பல குபீர் சிரிப்பு பதிவுகள் வர வாய்ப்புள்ளது.

குறிப்பாக ஜேகேஆர் பேன் கிளப் என்னும் கூட்டுப்பதிவினர் களத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். ராமநாதபுரம் தொகுதி கிடைத்து அவர் வெற்றி பெற்று விட்டால் (ராமராஜன் வெல்லவில்லையா?) பாராளுமன்ற அலுவலர்களுக்கு கொண்டாட்டம் தான். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

இன்றைய ஜூவியிலும்(18-03-2009) பதிவர் நர்சிம்மின் கருத்துக்களுடன் கேலிச்சித்திரம் வந்துள்ளது. இந்த முறை அவரிடம் மாட்டிக் கொண்டவர் சூப்பர் ஸ்டார். ரஜினி வாய்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வலையுலகில் இருந்து எவ்வளவு எதிர் வாய்ஸ் வரப் போகிறது எனத் தெரியவில்லை.
உங்களுக்கு வாழ்த்துக்களும் எதிர் வாய்ஸ்ஸை சமாளிக்க ஊக்கங்களும்.

தொடர்ந்து மூன்று இதழ்களாக தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை கிண்டல் செய்து அதை பிரபல பாடல் மெட்டில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த இதழில் மனோமயன், இதற்க்கு முன் இரண்டு இதழ்களில் தமிழ் வேணு என்பவர்கள் இதை எழுதியிருந்தார்கள். இதில் தமிழ் வேணு ஒரு வலைப்பதிவர். அவருக்கும் வாழ்த்துக்கள். அவர் இதுபோல எல்லாப் பாடல்களின் மெட்டிலும் சமகால சம்பவங்களை இணைத்து எழுதியுள்ளார். (சச்சின் சமீபத்திய சதம் உட்பட).

10 comments:

T.V.Radhakrishnan said...

///உங்களுக்கு வாழ்த்துக்களும் எதிர் வாய்ஸ்ஸை சமாளிக்க ஊக்கங்களும்.///

repeateyyy

முரளிகண்ணன் said...

நன்றி டிவிஆர் சார்

தமிழ் பிரியன் said...

எங்கள் தளபதி எம் பி ஆனால் வறண்ட ராம்நாடு மாவட்டத்தில் பாலாறும், தேனாறும் ஓடும். கேலி செய்பவர்கள் அப்போது தான் உணர்வார்கள்.
இவண்
JKR அதிரடிப் படை

வித்யா said...

வீரத்தளபதியை ராமராஜனோடு ஒப்பிடும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். விரைவில் பொதுக்குழுவை கூட்டி தேர்தல் வேலைகள் மேற்கொள்வது பற்றி கலந்தாலோசிக்கப்படும்.

முரளிகண்ணன் said...

ஆஹா ஜேகேஆர் ரசிகர்கள் வந்துட்டாங்க போலிருக்கே
:-)))

நன்றி தமிழ்பிரியன் & வித்யா

கார்க்கி said...

/ வித்யா said...
வீரத்தளபதியை ராமராஜனோடு ஒப்பிடும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். விரைவில் பொதுக்குழுவை கூட்டி தேர்தல் வேலைகள் மேற்கொள்வது பற்றி கலந்தாலோசிக்கப்படு//

கொ.ப.செ வை வாழ்த்துகிறோம். விரைவில் நீரோடை வற்றப் போகிறது. பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் முரளியாரே.. இல்லையெனில் ஆட்டத்துக்கு தயாராகுங்கள்.. சிங்கங்கள் வருகிறோம்

ILA said...

//இல்லையெனில் ஆட்டத்துக்கு தயாராகுங்கள்//
ஆட்டோவுக்கு தயாராகுங்கள்னுதானே வரனும்..

வேணாம் பெரிய இடத்துல மோதாதீங்க. இன்னொரு படம் எடுத்து உங்கள உக்கார வெச்சு பார்க்க வெப்பாங்க. இது தேவையான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

முரளிகண்ணன் said...

கார்க்கி, விஜய்யை எல்லோரும் வாரிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன இங்கே?

இளா

எவ்வளவோ பார்த்துட்டோம். இன்னொன்ன பார்க்க மாட்டோமா?

narsim said...

நன்றி முரளி

நையாண்டி நைனா said...

Super Boss.

Congrates to our beloved NARSIM.