February 06, 2009

விஜய் நம்பர்- 1 ஆக முடியுமா?

தொடர்ந்து மூன்று படங்கள் மக்கள்,ரசிகர்கள் மற்றும் திரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் அவரின் அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பிலோ,வணிகத்திலோ எந்த குறையும் இல்லை. இது எல்லாத்தரப்பையும் சென்றடைந்த ஒரு கதாநாயனுக்கே சாத்தியமாகக் கூடியது. எம்ஜியார்,ரஜினிக்கு கிடைத்த அந்த நம்பர்- 1 நாற்காலி அவர்களின் பார்முலாவை உபயோகிக்கும் விஜய்க்கு கிடைக்குமா?

ரஜினி நடிக்க வந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அப்பொதைய நம்பர்- - 1 ஆக இருந்த எம்ஜியார், முதல்வராகி விட்டார். காலியான அந்த நாற்காலிக்கு அவருடைய போட்டியாளரான சிவாஜி கணேசன் வர முயற்சிக்கவில்லை. முயன்றாலும் முடிந்திருக்காது. அப்போது ரஜினி, 77ல் 15, 78ல் 20, 70ல் 13 என அசுர வேகத்தில் நடித்து, பல வித்தியாசங்களைக் காட்டி எல்லாத் தரப்பையும் சென்றடைந்து தன் சமகால போட்டியாளர் கமலை ஓவர்டேக் செய்து அந்த நாற்காலியை கைப்பற்றினார்.

ஒரு வாதத்துக்கு,ரஜினி இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 70 வயதை நெருங்கும் வேளையில் திரைத் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது காலியாகும் அந்த இடத்துக்கு கமல் போட்டி போட போவதில்லை. அப்படியானால் இப்போதிருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் பொடென்ஷியல் கேண்டிடேட் ஆக இருப்பதில் விஜய்யும் ஒருவர்.

அவரால் அதை அடைய முடியுமா?

1. எம்ஜியார், ரஜினி இருவருக்கும் சமகால போட்டியாளர்களாக இருந்த சிவாஜி,கமல் இருவருமே பெரும்பாலும் இவர்களைப் போல ஹீரோயிஸ படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. சாதாரணப் பாத்திரங்களிலும் நடித்து வந்தனர். இதனால் நம்பர்- 1 ஐ நிர்ணயிக்கும் பெரும்பாண்மை ரசிகளிடமிருந்து அன்னியமானார்கள். ஆனால் விஜய்யின் போட்டியாளராக கருதப்படும் அஜீத்தும் ஹீரோயிஸ படங்களிலேயே நடித்து வருகிறார். தொடர்ந்து அந்தப் பாதையில் செல்லும்படியாகவே அவரின் தற்போதைய படத் தேர்வுகளும் உள்ளன. ஏ ஆர் முருகதாஸ் மாதிரி இயக்குனர்கள் இரண்டு அதிரடி படங்களை அஜீத்துக்கு தந்தால் இந்த ரேஸில் அஜீத் முந்த வாய்ப்புகள் அதிகம்.

2. எம்ஜியார்,ரஜினி காலத்தில் நேரடி போட்டியாளர்களைத் தவிர வீரியமான நடிப்பில் மிளிர்ந்த கதாநாயகர்கள் குறைவு. ஆனால் இப்போது விக்ரம்,சூர்யா என விஜய்யை விட நன்றாக நடிக்கக்கூடிய நடிகர்கள் இருக்கிறார்கள். விஷால்,தனுஷ்,சிம்பு என விஜய் செய்வது போலவே செய்து ரசிகர்களை பங்கு போடவும் இன்னோரு தலைமுறை வந்துவிட்டது.

3. விஜய்க்கு பெரும்பலமாக சொல்லப்படுவது பாடல் காட்சிகளில் ஆடும் நடனம். இன்னும் 10 ஆண்டு கழித்து 45 வயதில் அப்போதைய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப ஆட முடியுமா?. முன்னெல்லாம் ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள் என்று சொல்வார்கள். இப்போது 10 ஆண்டுகளிலெயே ரசனையில் பெரும் மாற்றம் வந்து விடுகிறது.

4. நல்ல பாடல்கள், காமெடி, முண்ணனி நாயகிகளின் துணை என்ற பார்முலாவுடன் தற்போதைய விஜய் படங்கள் வெளியாகின்றன. அவரது பங்கு என்பது சண்டைக் காட்சிகள், பஞ்ச் டயலாக்குடன் முடிந்து விடுகிறது. இவரது நடிப்பால் படம் வெற்றி பெற்றது என்று அவரது ரசிகர்கள் கூட சொல்வதில்லை. 45 வயது வரை இதைப் போன்ற கதை அமைப்புள்ள படங்களிலேயே நடித்து நிலைபெறுவது சாத்தியமா?

5. அமீர்கான் 2000ஆவது ஆண்டு வரை ஷாருக்கை விட வணிக மதிப்பில் பின் தங்கியிருந்தார். ஆனால் அவர் அதன் பின் நடித்த தில் சத்தா ஹை, லகான், மங்கள் பாண்டே, ரங் தே பசந்தி, தாரே ஜமின் பர் போன்ற படங்கள் எல்லாமே ஆப் பீட் தீம்தான். ஆனால் அப்படங்கள் அவருக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையை கொடுத்துள்ளது. ஷாருக்குக்கு இணையான வணிக மதிப்பை அவரும் பெற்றார். கஜினி படத்திற்க்கு நடந்த வியாபாரமே இதற்க்கு சாட்சி. இதே போல் இங்கும் மக்கள் மனநிலை மாறிவரும் நிலையில் மெத்தட் ஆக்டிங்கில் கலக்குபவர்களுக்கும் அந்த நாற்க்காலிக்கான வாய்ப்பு பிரகாசமாகிறது.

6. ரசிகர்களை தக்க வைக்க இன்னோரு வழி. அரசியல் பூச்சி காட்டுவது. எம்ஜியார்,ரஜினிக்கு இருந்த வெளிமாநில முத்திரை விஜய்க்கு இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஜாதியையும் சாராதவர்கள் என்ற மிகப் பெரிய அட்வாண்டேஜ் இருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் சிறுபான்மை ஜாதியை சேர்ந்தவர்களே நம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் முன்னிலைப் படுத்தப்படுவதை அதற்க்கு இணையான மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் விரும்புவதில்லை. அரசியல் என இறங்கினால் இந்த பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். எனவே அவர் கொடியை காட்டாமல் இருப்பது நல்லது.

முன்பு ரஜினி படத்தை, நன்கு தெரிந்த ஹோட்டலில் கிடைக்கும் உடல்நலத்திற்க்கு கேடு தராத சுவையான சாப்பாடு என்று வர்ணிப்பார்கள். அதுபோல விஜய்யும் எல்லாத் தரப்பும் விரும்பும் வகையிலான டீஸண்டான, மிகை ஹிரோயிஸம் தவிர்த்த ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினால் இப்போதைய ரசிகர்களோடு, பின் கவரும் ரசிகர்களையும் சேர்த்து நம்பர் - 1 இடத்தை அடையலாம்.

42 comments:

சரவணகுமரன் said...

இப்போதைக்கு அந்த ஆசையும் அவருக்குத்தான் அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது.

narsim said...

மிக ஆழமான அலசல்..முரளி..

அமீர்கான் ஒப்பீடு கலக்கல்

//ஆனால் அவர்களுக்கு எந்த ஜாதியையும் சாராதவர்கள் என்ற மிகப் பெரிய அட்வாண்டேஜ் இருந்தது.//

நுட்பமான வாதம்.

கலக்கல்.. யாராவது(கார்க்கி?) அவருக்கு இந்த பதிவ சொல்லுங்கப்பா..

anujanya said...

நல்ல ஆராய்ச்சி. நான் பார்த்தவரையில் குழந்தைகளையும், பதின்மப் பருவத்தினரையும் கவர்ந்தால் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. எம்ஜியார் காலத்தில் சிறுவர்கள் அவ்வளவு சினிமா பார்க்க வாய்ப்புகள் குறைவு. ரஜினி காலத்திலிருந்து, அவர்களே பிடித்த படம், நடிகரின் ரேட்டிங் முதலியவற்றைத் தீர்மானிப்பதாக உணர்கிறேன். அந்த அளவில் விஜய் No.1 ஆகும் வாய்ப்புகள் அதிகம்.

இன்னொரு விஷயம், விஜய் தரப்பு வேண்டுமென்றேதான் அஜித் அவர் போட்டியாளர் என்று காட்டுகிறதோ என்று தோன்றுகிறது. என்றைக்கு வேண்டுமானாலும் அதிக முயற்சியில்லாமல் அஜித்தை விஜய்யால் வெல்ல முடியும். சூர்யாவோ, ஆர்யாவோ (சும்மா ஒரு ரைமிங்குக்கு) போட்டிக்கு வந்தால், தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம். Known devil is always better.

அனுஜன்யா

Vidhya Chandrasekaran said...

விஜய்க்கு குழந்தைகளின் ஆதரவும் அமோகமாக இருந்தது. ஆனால் டிவியில் நான் பார்த்த பாடல் காட்சிகளை குழந்தைகளை பார்க்க அனுமதிக்கலாமா என்ற கேள்வி தோன்றுகிறது. பார்ப்போம். இன்னும் ரெண்டு படம் இதே மாதிரி பண்ணால் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்:)

Anonymous said...

அண்ணே நான் கேட்ட கவுண்டமணி பதிவு எங்கண்ணே?

கணேஷ் said...

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கும்போது சினிமாவில் நம்பர் ஒன் ஆசையும், அரசியல் ஆசையும் இருக்கிறது. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால், ஆகமொத்தம் அகலக்கால்.

அரசியல் ஆசையை விட்டு விட்டு, கில்லி மாதிரி பவர்ஃபுல் ஸ்கிரீன்ப்ளே உள்ள ரெண்டு படங்களில் நடித்தால் கண்டிப்பாக முதல் இடம் வரலாம்.

அரசியல் எல்லாம் 50 வயதுக்கு பின் யோசித்தால் அவருக்கும், அவர் ரசிகர்களுக்கும் நலம்.

கார்க்கிபவா said...

அருமையான அலசல். இன்றைய தேதிக்கு ரேசில் முந்துபவர் என்பது மட்டும் உண்மை. நாளை எப்படி வேண்டுமென்றாலும் நடக்கலாம். பின்னாடி வருபவர் இவரை முந்த்கூடும் என்றால் இவரும் இன்னும் வேகமெடுக்க முடியும்.

நந்தாவுக்கு பின்னும் கூட சூர்யா பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஒரு புத்தாண்டு நிகழ்ச்சியில் (நந்தாவுக்கு பின்) ஒரே ஒரு பெண்தான் சூர்யா வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஒரே வருடத்தில் ஒரு பெண் மட்டும்தான் சூர்யா பெயரை சொல்லாமல் விடுமளவுக்கு வளர்ந்தார்.எனவே எதையும் சொல்ல முடியாது. ஆனால் விஜய் அவராக இருப்பதை குழந்தைகள், நடுத்தர வயது பெண்கள் விரும்புகிறார்கள். எனவே மற்றவ்ர்களைப் போல பெரிய இயக்குனர்களையும் கதயையும் அதிகம் நம்பத் தேவையில்லாமல் இருந்தது. ஆனால் அது இனிமேல் ஒர்க் அவுட் ஆகுமா என்பது புதிர். அடுத்த இரண்டு வருடம் மிக முக்கியம். அவர் அப்பா அமிதி காத்து இரண்டு வெற்றி பெற்றுவிட்டாலே அவரை நெருங்குவது சுலபமல்ல. அப்படி அவரி தோறகடிக்க முடியுமென்றால் அந்த சக்தி அஜித்துக்கு மட்டுமே உண்டு. இவர்களில் யார் பெரியவர் என்ற பேச்சு மட்ட்மே சாத்தியம். மற்றவ்ர்கள் சல்சலப்பை மட்டுமே ஏற்படித்த முடியும். நிலைத்து நின்று அடிக்க முடியாது

கிரி said...

விஜய் தன் நடனத்தின் மூலமும் காமெடி மூலமே அதிக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

தற்போதைய குழந்தைகள், விஜய் ரசிகர்கள் தான்.. எடுத்துக்காட்டு டிவி யில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் கூறுவது விஜய் தான்.

அஜித் தன் உடல் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், தொப்பையுடன் வெள்ளை தாடியுடன் இருப்பது பலரை கடுப்படிக்கும் (ஹீரோ வேடத்திற்கு)..இயல்பாக இருப்பது தவறில்லை ஆனால் அந்த வேடத்திற்கு அது பொருந்துமா என்று யோசிக்க வேண்டும்.

தற்போது கடும் போட்டி நிலவுவதால் விஜய் இடத்தை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். இனியும் ஓவர் ஜிம்மிக் வேலைகள் செய்வது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும், தற்போது இப்படி செய்தால் C சென்டர் ரசிகர்களை வேண்டும் என்றால் கவரலாம், கொஞ்ச வருடங்கள் சென்றால் அவர்களுக்கு இது கடுப்பாகி விடும்.

பார்போம்!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சரவண குமரன், நர்சிம், அனுஜன்யா,வித்யா,ராம் சுரேஷ், கிரி


கார்கி, பதிவு ஓகேயா?

கவுண்டமணிப் பிரியரே, வில்லன் பதிவை முடிச்சிட்டு நம்ம தலைவர் தொடர் பதிவை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். உங்க ஆதரவு தேவை.

கார்க்கிபவா said...

//
கார்கி, பதிவு ஓகேயா?//

என்ன் தல? ஏதோ எனக்காக தலைவரை பாராட்டினத நினைக்க போறாங்க? :)

அப்படியே அவர் வளர்ந்த விதம் பற்றியும் அப்புறமா எழுதுங்க :))))

முரளிகண்ணன் said...

\\என்ன் தல? ஏதோ எனக்காக தலைவரை பாராட்டினத நினைக்க போறாங்க? :)\\


ஓ அப்படி ஒரு அர்த்தம் வருதோ?. நான் விஜய் பத்தி பதிவு போட்டிருக்கேங்கிற அர்த்தத்தில கேட்டது இது.


\\அப்படியே அவர் வளர்ந்த விதம் பற்றியும் அப்புறமா எழுதுங்க :))))\\

நிச்சயம் எழுதுறேன் கார்கி.

Senthil said...

விஜய் தனது படங்களை மாற்ற போவதும் இல்லை, நம்பர்-1 ஆக போவதும் இல்லை. மிகை ஹீரோயிஸம், ஓவர் ஜிம்மிக், பேரரசு மற்றும் அவரது தம்பி முத்துவடுகு(கூடிய விரைவில்) என தனது பணிகளை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். Already he became a great joker for bloggers. Atleast அஜீத் அவ்வப்போது நல்ல கதைகளையும், நல்ல இயக்குனர்களையும் நம்புகிறார். Time will teach vijay good lesson. Prasanth learnt already, just good directors don't prefer him because he has no market.

நீங்கள் விஜயின் பேட்டிகளை பார்த்திருக்க அல்லது படித்திருக்க வேண்டும். எவ்வளவு CONFIDENT about his movie choices. Somebody has to collect those interviews and ask him the same after couple of years.

Anonymous said...

ஆக மொத்தம் நல்ல நடிப்புத்திறன் இருக்கும் எவரும் தமிழ் சினிமாவில் முதல் இடத்திற்கு வர இயலாது என்பது வரலாற்று உண்மை...

விஜ்யின் பாடல்கள் கண்டிப்பாக குழந்தைகள் பார்பதற்கு அல்ல.

கார்க்கிபவா said...

//Atleast அஜீத் அவ்வப்போது நல்ல கதைகளையும், நல்ல இயக்குனர்களையும் நம்புகிறார்//

இங்க பார்றா காமெடிய..

கார்க்கிபவா said...

//நீங்கள் விஜயின் பேட்டிகளை பார்த்திருக்க அல்லது படித்திருக்க வேண்டும். எவ்வளவு CONFIDENT about his movie choices. Somebody has to collect those interviews and ask him the same after couple of years//

அண்ணாத்த இது எல்லோருக்கும்தான்.. ரீமேக் பண்றானு புலம்பின்னிங்க. இப்போ உங்க ஆளே ரிம்மெக் தான் பன்றாரு. சூப்பர்ஸ்டார் ஆவேன்னு பெஞ்சு எல்லாம் உடைச்சாரு ஆஞ்சனேய வந்தப்ப.. இப்ப வேணாம்ன்றாரு.. ஆழ்வாரு மைல்கல்னு சொன்னாரு. அடங்க மாட்டிங்க போலிருக்கு :))

சண்டியர் கரன் said...

///ஒரு வாதத்துக்கு,ரஜினி இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 70 வயதை நெருங்கும் வேளையில் திரைத் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது காலியாகும் அந்த இடத்துக்கு கமல் போட்டி போட போவதில்லை.///

இது வரைக்கும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க போவதில்லை....

/// முயன்றாலும் முடியாது. ///

இது தான் தப்பு...
இவ்வளவு விஷயங்களை அலசிய நீங்கள்...கமலின் குரு, சகலகலா வல்லவன், காக்கி சட்டை, தூங்காதே தம்பி தூங்காதே, வேட்டையாடு விளையாடு (இன்னும் நிறையா இருக்கு...) படங்களை ஒதுக்கி விட்டு ,உங்கள் மனம் போன போக்கிலே எழுதியிருக்கிறீங்க....

வணிக ரீதியாக, கமலால் யாரையும் முந்தமுடியும்...( தசாவதார சாதனை தெரியாதோ....)
ஆனால், யாராலும் கமலின் மற்ற சாதனைகளை நெருங்க கூட முடியாது ( அதுக்கு அப்புறம் தான் முந்துவது எல்லாம்....)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரஜினி,எம்.ஜி.ஆர்., ஆகியோர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை..விஜய்..தந்தை கட்டுப்பாட்டில் இருப்பது ஒரு மைனஸ் பாயிண்ட்..
விஜய் ..இப்போதே தனிக்கொடி என்கிறாரே! அவர்கள் அப்படி இல்லை..
உயரப்பறந்தாலும்...ஊர்க்குருவி.......

முரளிகண்ணன் said...

சண்டியர் கரண் வருகைக்கு நன்றி.

நான் கமலின் தீவிர ரசிகன். ஆனால் நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறது. 65 வயதில் கமலால் அந்த மாதிரி படங்களை செய்ய முடியுமா? அப்போதைய படம் பார்க்கும் இளைஞர்கள் அவரின் ரசிகர்களாக மாறி முதல் இடத்துக்கு உயர்த்துவார்களா? எனவே தான் அவ்வாறு கூறினேன்.

அவரே அதற்க்கு உடன் பட மாட்டார். தசாவதார வெற்றிக்குப் பின்னர் அவர் மர்மயோகியை தான் செய்ய போனார். இப்போது அது தாமதமாகும் (வராது?) என தெரிந்ததும் வெட்னஸ்டே ரீமேக்குக்குத் தான் போகிறார்.

முரளிகண்ணன் said...

செந்தில். ராதாகிருஷ்ணன் சார் வருகைக்கு நன்றி

நையாண்டி நைனா said...

விஜாய் ஃபீல் டு அவுட் ஆகணும்னா... மெயிநா அவரு அப்பாவ, விஜய் வைத்து படம் எடுக்க சொல்லுங்க. இல்லெ இப்போ இருக்கிற மாதிரியே... வெட்டியா அவருக்கு பின் பாட்டு படிக்க சொல்லுங்க போதும்....
எதுக்கு தேவை இல்லாமெ ஆரியா, சூரியாண்ணுகிட்டு....

நசரேயன் said...

/*மிகை ஹிரோயிஸம் தவிர்த்த ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினால் இப்போதைய ரசிகர்களோடு, பின் கவரும் ரசிகர்களையும் சேர்த்து நம்பர் - 1 இடத்தை அடையலாம்.*/
விஜய் முயற்சி செய்யணும்

சின்னப் பையன் said...

//மிகை ஹிரோயிஸம் தவிர்த்த ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினால் //

இதை இன்னும் நிஜ சூப்பர் ஸ்டாரே பண்ண ஆரம்பிக்கலியே????

Thamira said...

என்னுது.. அமீர்கான் மாதிரி..? நல்ல.? படங்களா..? யாரு.. அஜித்து, விஜய்யா.. பிம்ம்பிலிக்கி பிலாபி.. மாமா பிஸ்கோத்து....

*****

கமர்ஷியல் லைனையும், மக்களை நெருங்கும் கலைப்படங்களையும் கொஞ்சூண்டாவது புரிந்துகொண்டோ அல்லது ஒப்புக்கொண்டோ செய்யமுயற்சிப்பவர்கள் சூர்யா, மற்றும் விக்ரம் மட்டுமே. இவர்களால் மட்டுமே ஓரளுவுக்கேனும் தமிழ்சினிமாவை முன்னெடுத்துச் செல்லமுடியும். ஆனால் அவர்களும் பீக்கில் இருக்கும்போதே வேல், அந்நியன் என மரண மொக்கைபோட்டவர்கள் என்பதை மறக்கக்கூடாது. ஆர்யா, ஜீவா, தனுஷ், ரவி போன்ற மிகச்சிலருக்கும் அந்தத் தகுதி இருக்கலாம், தெரியவில்லை. நல்ல இயக்குனர்களிடம் ஒப்புக்கொடுக்காத எந்த நடிகனாலும் நிலைத்திருக்கும் நேர்மையான வெற்றி என்பதை எக்காலத்திலும் அடையமுடியாது. விஷால், சிம்புவெல்லாம் சினிமாவையும் நடிப்பையும் எந்தக்காலத்திலும் புரிந்துகொள்ளப்போவதில்லை. தேற‌ப்போவதுமில்லை.

களைக்கூத்தாடிகள், சர்க்கஸ் கலைஞர்கள் சாதாரண மக்கள் செய்யமுடியாத காரியங்களைச் செய்கிறார்கள். அதைப்போலவே ஜிம்மிக்ஸ் நடனக்காட்சிகள், தத்தியாக‌ காமிராவைப்பார்த்து 'சுளுக்கு எடுப்பேன், பருப்பு தின்பேன், நா பாத்தாலே பத்திக்கும்'னு சோகையான, கிராமத்து ரசிகர்கள் கூட சிரிக்கத்துவங்கியுள்ள வசனக்காட்சிகள், கொட்டாவி வரவைக்கும் 'டும்மா' சண்டைக்காட்சிகள்.. இவற்றையெல்லாம் செய்பவன்தான் ஹீரோ என நினைத்துக்கொண்டு அதையும் சீரியஸாக செய்துகொண்டிருக்கும் விஜய், அஜித்தைப்பற்றியா நம்பர் 1 ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து ரஜினி, எம்ஜிஆரோடெல்லாம் இவர்களை ஒப்பிடாதீர்கள். அவர்களும் ஓரளவு மொக்கை போட்டிருந்தாலும் அவர்கள் பங்குக்கு ஓரளவுக்கேனும் நியாயம் செய்துள்ளார்கள். உழைக்கும் மக்களின் பொழுதுபோக்குக்கான ஜிம்மிக்ஸ் கதைகளையாவது ரசிக்கும்படி சொன்னார்கள். படிப்பறிவும், கம்யூனிகேஷனும் குறைவான அன்றைய பொழுதில் அவர்களை மனதிற்கு அருகிலும் ஏற்றுக்கொண்டார்கள்.

எதை முன்னெடுத்துச்செல்வது என்ற நோக்கில்லாது, கமெர்ஷியலே பண்ணினாலும் அதை சொந்தமான புதிய கற்பனையில் பண்ணாமல், ரஜினி 10 பேரை அடித்தாரா, நான் பார் 100 பேரை அடிக்கிறேன். ரஜினி வாய்க்காலை தாண்டினாரா, நான் பார் ரயிலைத் தாண்டுகிறேன். ரஜினி அடித்த வில்லனில் அடியாள் சுவரில் ஐந்தடிக்கு போய் விழுகிறாரா, இப்போ பார் நான் அடிப்பவன் ஐம்பதடிக்கு டிரான்ஸ்பார்மரில் மோதி, ரிட்டர்னில் பத்துமாடி கட்டிடத்தில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு போய்விழுவான். ரஜினி பூசணிக்காயை உடைத்துக்கொண்டு என்ட்ரி கொடுக்கிறாரா, நான் பார் கூவத்திலிருந்து சாக்கடைக்குழாயை உடைத்துக்கொண்டு என்ட்ரி கொடுக்கிறேன். அவர் ஒரு பிஸ்டலை வைத்துக்கொண்டு தூரத்தில் இருக்கும் வில்லனை சுட்டுவீழ்த்தினாரா, நான் பார் சுத்தி இருவது பேர்.. அத்தனை பேர் கையிலும் மெஷின் கன். என்னிடம் அதே பிஸ்டல். எப்பிடி அத்தனைபேரையும் டுப்பு, டுப்புன்னு சுடுறேன் பார். குழந்தைங்க விளையாட்டுல கூட இப்பிடி நடக்காதேடா.. உஸ்ஸ்ஸ்... ஏன் இப்படி பின்னூட்டத்தை பதிவு ரேஞ்சுக்கு எழுதிக்கிட்டிருக்கேன்னு தெரியலை. அந்தளவுக்கு வருது இவுனுங்களை நெனச்சாலே..

கடைசியா ஒரு சேதி.. ஒருகாலத்தில் தெலுங்குப்படங்களை எப்படிக்கிண்டல் செய்துகொண்டிருந்தோம். அங்கே கமர்ஷியல் என்றாலும் சொந்தமாக சிந்தித்து எப்படிப் படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல கலைப்படங்களை ரீமேக் செய்தால் ஒரு நியாயம் இருக்கிறது. கமர்ஷியல் படத்தை போட்டி போட்டுக்கொண்டு ரீமேக் புக் பண்றீங்களேப்பா.. அதையும் காட்சி பிசகாமல், காஸ்ட்டியூம் பிசகாமல் ஈயடிச்சான் காப்பியடிக்கிறீங்களே, அந்தப்படத்துக்கு இயக்குனர்னு ஒரு டைட்டில் கார்டுல உங்கள் பெயரைப்போடும் போது வெக்கமாயிருக்காது?

இவர்களைப்போயி நம்பர் ஒண்ணு, அப்பிடி இப்பிடின்னு.. நம்பர் முட்டைக்கு கூட லாயக்கில்லாதவுங்க.. ச்சீ.!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நையாண்டி நைனா, நசரேயன், சின்னப்பையன்.

தாமிரா தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் நன்றி.

சண்டியர் கரன் said...

///நான் கமலின் தீவிர ரசிகன்.///

அப்படியென்றால் உங்களால் கமல்ஹாசரை எப்படி அரைத்தமாவு நடிகர்களுடன் ஒப்பிட முடிகிறது????

அவரின் பாதை, மற்ற நடிகர்களை போன்று மெத்தை (மசாலா கதை+வடிவேலு/விவேக் கூட்டணி...) மீது சொகுசாக நடப்பது அல்ல...

அன்று ராஜபார்வை, பேசும் படம், குணா, மகாநதி, தேவர் மகன்.... என்று அவர் தன்னை வருத்தி (வணிக ரீதியாய் சிலவற்றில் தொல்வியடைந்த போதும் ) போட தொடங்கிய

பாதையில் தான், இன்று பருத்திவீர்ன்,சுப்பரமணியபுரம் என்று இளையவர்களால் சாதிக்க முடிகிறது....

அப்படி அவர் தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்த முற்பட்டிருக்காவிட்டால், இன்று எல்லாரும் "எப்ப தான் வித்தியாசமா எடுப்பாங்க" என்று புலம்பிக்கொண்டிருப்போம்....

OK அதை விடுங்க....

"முதல் இடம்" என்று சொல்றீங்களே....யார் கொடுத்தது....மக்களா??? மீடியாவை கவனித்து வாங்கிக்றாங்க...


அப்படி ரஜினி தான் முதல் இடம்னா, குசேலனால் 40 கோடி நஷ்டம் பிரமீடு சாய்மீராவுக்கு ஏன் வந்தது???
Source : http://www.pstl.in/investor_pages/investor/Notes%20on%20Q3%20financials.pdf
சிவாஜியால் 3 விநியோகிஸ்தர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் என்று ஏன்

புலம்பினார்கள்???

"முதல் இடம்", படத்தின் வசூலை வைத்து என்றால், ரஜினி ரசிகர்களின் கணக்கு படி, சிவாஜி தான் அதிகமாக 100 கோடி வசூலித்திருக்கிறது...
அதையும், தசாவதாராம் முதல் 10 நாட்களிலேயே முறியடித்து விட்டது (இது ஆஸ்கார் ரவி, THE ECONOMIC TIMES -ல் கூறியது)

ஆக வசூலில் கூட கமல் தான் முதலிடம்....

ஒன்றும் தெரியாதர்கள் எழுதியிருந்தால், நான் இப்பதிவை படித்திருக்கவேமாட்டேன்... நீங்கள் என்பதால் தான் என்னுடைய இந்த இரண்டாம் பதிலும்....

முரளிகண்ணன் said...

அன்பு சண்டியர் கரன்,

முயன்றாலும் முடியாது என்ற வார்த்தையை நீக்கி விடுகிறேன்.

இந்த பதிவின் நோக்கம், அடுத்த கமர்ஷியல் நம்பர்- 1 ஹீரோவாக (எம்ஜியார்,ரஜினி வழியில்) விஜய் வர வாய்ப்பிருக்கிறதா என்று அலசுவதே.

கமல்ஹாசன் அந்த இடம் தனக்குத் தேவையில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்தவர். "நீங்கள் ஓடுவது 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், நான் ஓடுவது மாரத்தான்" என ரஜினியை நோக்கி சொன்னவர்.

எனவே நான் கமல் அதற்க்கு முயற்சிக்க மாட்டார் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

shabi said...

vijay sangahavi enra nadigaiyai nambi nadikka vandha aalu sanghavikku avaru thaniya oru kovil katti thenamum kumbidanum

Anonymous said...

//கார்க்கி said...
அண்ணாத்த இது எல்லோருக்கும்தான்.. ரீமேக் பண்றானு புலம்பின்னிங்க. இப்போ உங்க ஆளே ரிம்மெக் தான் பன்றாரு. சூப்பர்ஸ்டார் ஆவேன்னு பெஞ்சு எல்லாம் உடைச்சாரு ஆஞ்சனேய வந்தப்ப.. இப்ப வேணாம்ன்றாரு.. ஆழ்வாரு மைல்கல்னு சொன்னாரு. அடங்க மாட்டிங்க போலிருக்கு :))


Avaraavathu SuperStarnu sonnaaru...aana namma thalaphi. en vazhi MGR vazhinnu periya kudaiyae potrukkaarae...enna kodumai saravanan ithu...

Etho hatrick hit koduthathunaala parava illai. illainnaa enna aaki irukkum.

எம்.எம்.அப்துல்லா said...

இன்னும் 10 வர்ஷத்துல விஜயும் பெர்சுதான். அப்பாலிக்கா எப்டி ஒன்னா நம்பராவ முட்யும்???
:))

அந்த டைம்ல வித்தியாசம் காட்ற சின்னப் பசங்க யாருக்காவது சூப்பர்ஸ்டார் ஆவுற அடித்தளம் அமையலாம்.

குழப்புறேனோ???
:))))

வெட்டிப்பயல் said...

//தொடர்ந்து மூன்று படங்கள் மக்கள்,ரசிகர்கள் மற்றும் திரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் அவரின் அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பிலோ,வணிகத்திலோ எந்த குறையும் இல்லை. இது எல்லாத்தரப்பையும் சென்றடைந்த ஒரு கதாநாயனுக்கே சாத்தியமாகக் கூடியது//

இதை யாருமே கவனிக்காம பேசறாங்களே. இது அஜித்துக்கும், விஜய்க்கும் மட்டுமே சாத்தியம். விக்ரம் எல்லாம் இப்ப எங்க இருக்காருனே மறந்துட்டாங்க. கந்தசாமியை பத்தி எங்கயும் பேச்சு இல்லை.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான். அதுல சந்தேகமே வேண்டாம். எல்லா சின்ன பசங்களுக்கும் விஜய் தான் பிடிக்குது. அவர் பண்ற மொக்கை காமெடி சீனை எல்லாம் சின்ன பசங்க பார்த்து சிரிக்குதுங்க. நமக்கு தான் காண்டாகுது.

இன்னும் ஒரு ரெண்டு நல்ல படம் பண்ணார்னா போதும்.

தெலுகுல வேற எதுவும் நல்ல படம் வரலையா. அதான் விஜய்க்கு பிரச்சனை. பவன் கல்யானோட ஜல்சா எடுக்கலாம்.

ரீமேக் படத்துல நடிச்சி எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக முடியாதுனு நினைக்கறவங்க, தலைவரோட பட லிஸ்டை பார்த்தா தெரியும். எவ்வளவு ரீ மேக்னு :)

இவர் தமிழ் திரையுலகை காப்பாத்துவாரானு எல்லாம் கேட்க தேவையில்லை. இவுங்க அப்பா இவரை அரசியலுக்கு இழுத்துட்டு போயிட்டா, தமிழ் சினிமா தப்பிச்சிடும் :)

மாதவராஜ் said...

முரளிக்கண்ணன்!

நேற்று சாயங்காலம் நண்பர் ஒருவர் வந்தார். அப்புறம் நான் கடவுள் படம் பார்க்க போய் விட்டேன். இன்று காலைதான் இங்கே வந்தேன்.

நன்றாக இருந்தது. எனக்கொரு கருத்து இருக்கிறது. வரும், வளரும் குழந்தைகள் இந்தத் தலைமுறை போலவே இருப்பார்களா என்று தெரியவில்லை. இன்று நகர்ப்புற குழந்தைகளிடம் விஜய் பிடிக்குமா... மிஸ்டர் பீன் பிடிக்குமா என்றால், மிஸ்டர் பீன் தான் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன். நானும், மொழி பட இயக்குனர் ராதா மோகனும் பேசிய ஒருக் கூட்டத்தில் இதை நான் சொன்ன் போது, அவர் ரொம்பவே ரசித்தார்.

முரளிகண்ணன் said...

சபி, சுந்தர் தங்கள் வருகைக்கு நன்றி.

அப்துல்லா அண்ணே, கொஞ்சம் விளக்கிடுங்கண்ணே

வெட்டிபயல் தங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி

மாதவராஜ் சார், நன்றி. தங்களின் நான் கடவுள் விமர்சனத்திற்க்காக காத்த்கிருக்கிறேன்

Mahesh said...

வேற ஆள் இல்லாததால வேணா விஜய் வரலாம்னு தோணுது. எம்.ஜி.ஆர் ரஜினி போல ஒரு கரிஸ்மா விஜய்க்கு கண்டிப்பா கிடையாதுங்கறது என் அபிப்ராயம்.

சண்டியர் கரன் said...

முரளிகண்ணன்...

புரிந்து கொண்டு அந்த வாக்கியத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி நண்பரே....

rapp said...

ஏன் இந்தப் பதிவுல விஜய்க்கு சம்பந்தமில்லாத ஒரு வார்த்தை அடிக்கடி பிரயோகப்படுத்தப்பட்டிருக்கு:):):)

rapp said...

//கடந்த 40 ஆண்டுகளில் சிறுபான்மை ஜாதியை சேர்ந்தவர்களே நம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள்//

???????????????????????????????????????????????????????

முரளிகண்ணன் said...

ராப் நடிகர் என்ற வார்த்தையை சொல்லுகிறீர்களா?.

??????????????? எதற்க்கு? விளக்கம் தேவையா?

rapp said...

ஹி ஹி, மொதோ விடையை ரொம்பச் சரியா சொல்லிட்டீங்க:):):)

ரெண்டாவது கேள்வி ஜெயலலிதா சிறுபான்மை ஜாதியில் எப்டி சேருவாங்க? எம்.ஜி.ஆர் சிறுபான்மையில் எப்டி சேருவாங்க? மாநிலம் மற்றும் மொழி அடிப்படையிலா? ஆனா ஜெயலலிதா அவங்களோட பூர்வீகம் ஸ்ரீரங்கம்னு சொல்றாங்களே, அது தவறா?

Anonymous said...

அருமையான பதிவு நண்பரே...வாழ்த்துக்கள்

சம்பத்

Balaji's blog said...

Though i like Vijay,i have to accept your point of view.You were not at all biased in your opinion.As you said,Vetaikaran is still a hot film in trade in spite of Vijay's last three films just doing average business @ Box office.

Vijay should put on some weight,lessen his heroism,concentrate on his stunts and make sure that his films doesn't drag anywhere and is gripping for the entire 2 and half hours.More importantly,majority of the people coming out of the theater should be satisfied with his film.That's the reason behind the success of Tirumalai,Gilli,Tirupachi,Sivakasi and Pokkiri.
His last three movies carried mixed response even among his FIRST DAY FIRST SHOW fans.This should not happen anymore.Hope Vetaikaran entertains people and satisfies them :)

முரளிகண்ணன் said...

சம்பத், பாலாஜி தங்கள் வருகைக்கு நன்றி

Srinivas said...

//"முதல் இடம்", படத்தின் வசூலை வைத்து என்றால், ரஜினி ரசிகர்களின் கணக்கு படி, சிவாஜி தான் அதிகமாக 100 கோடி வசூலித்திருக்கிறது...
அதையும், தசாவதாராம் முதல் 10 நாட்களிலேயே முறியடித்து விட்டது (இது ஆஸ்கார் ரவி, THE ECONOMIC TIMES -ல் கூறியது)
//

SIVAJI collections pathi theriyaama pesaadhenngappa...

Ask AVM/ theatre owners /abirami ramanathan etc...

Dasavatharam has collected a huge amount but not more than SIVAJI Collections !!!