கவுண்டமணியின் ஆரம்பகால படங்களைப் பார்த்தோமானால் (1976 - 81) அவரது குரலில் ஒரு நெகிழ்வு இருக்கும். வசனம் பேசும் போது குழைந்தே பேசுவார். உடலிலும் ஒரு விறைப்புத்தன்மை இல்லாமல் தளர்வாகவே இருக்கும்.
16 வயதினிலே - ரஜினியின் (பரட்டை) அல்லக்கை
போகும் ரயில் - மனைவியின் தங்கையை ரசிக்கும் தொழிலாளி
சிகப்புரோஜக்கள் - கமல் நிறுவன மானேஜர்
சுவரில்லாதசித்திரங்கள் - டெய்லர்
இந்த படங்களில் எல்லாம் கேரக்டரை மீறி கவுண்டமணி தெரியமாட்டார். சரோஜா, ம்ம் பார்த்து, போம்மா போன்ற வசனங்களை அவர் இப்படங்களில் மிக குழைவான குரலிலேயே உச்சரிப்பார். மேற்கண்ட படங்களை இயக்கியவர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ். இந்த இயக்குனர்களின் ஆளுமை காரணமாக அவர் இப்படி நடித்தாரா?
கலைவானர் - சமூக கருத்துக்கள் + வார்த்தை விளையாட்டு
சந்திர பாபு, நாகேஷ் - வாழ்கைத்துணைக்காகவோ, செல்வத்துக்காகவோ ஏங்கும் வேடங்கள் பெரும்பாலும். டைமிங், ஸ்லாப்ஸ்டிக், வசன உச்சரிப்பு மூலம் அதை மெருகேற்றுவார்கள்.
நாகேஷ் மறைவையொட்டி பல பதிவர்கள் சிறப்பான பதிவுகளை எழுதினார்கள். அதில் பலரும் குறிப்பிட்ட அம்சம், நாகேஷின் குரலை யாரும் அதிகமாக மிமிக்ரி செய்யவில்லை. காரணம் அவர் பாத்திரங்களுக்கேற்ப்ப மாடுலேஷனை மாற்றுவதே என்று. உண்மை. அவர்கள் கேரக்டருக்கேற்ற தொனியிலேயே பேசினார்கள்.
எம் ஆர் ராதாவை காமெடி நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைக்க முடியாது. ஆனால் அவர் செய்த காமெடிகளில் சமுதாய குத்தல்கள் பெரும் பங்கு வகிக்கும். ஆனால் அவரது குரல் அதட்டும் தொனியில் இருக்காது. சாமானியர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அதிகமாக இருக்காது. பாலையாவும் அதட்டும் குரலில் காமெடி செய்ததில்லை.
கே ஏ தங்கவேலுவின் பாணியானது இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட ஆட்களிடையே நடக்கும் சம்பவங்கள், அதை தொடர்ந்த உரையாடல் என வசனங்களின் மூலம் நகைச்சுவை வெளிப்படும். இவர் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். வி கே ராமசாமியின் நகைச்சுவையும் இந்த வகையில் வரும். ஆனால் அவர் இரட்டை அர்த்த வசனங்களை சிறிது கலப்பார்.
இவர்களது பாதிப்பினாலோ அல்லது நாடக அனுபவங்களாலோ கவுண்டமணி தன் ட்ரேட் மார்க் குரலை ஆரம்பத்தில் பயன்படுத்தவில்லை. சாதாரண இடதுகை பந்து வீச்சாளராக, கீழ் வரிசை மட்டையாளராக இருந்த ஜெயசூரியாவை அர்ஜுன ரனதுங்கா ஓப்பனிங் இறக்கியபின் தானே அவருக்குள் இருந்த சிங்கம் வெளியே வந்தது. அதுபோல் கவுண்டமணிக்கு கிடைத்தவர் ஆர் சுந்தர்ராஜன். அவரது முதல் படமான பயணங்கள் முடிவதில்லையில் குரலை உயர்த்திப் பேசும் கவுண்டமணியை மக்களுக்கு அறிமுகம் செய்தார். அது பின் ஒரு பாணியாக மாறி இன்றுவரை வெற்றி நடை போடுகிறது.
இந்த சென்னை மாநகரத்திலே என்று கவுண்டமணி ஆரம்பிக்கும் போதே தியேட்டர் சிரிக்க ஆரம்பித்தது. அதற்க்கு முக்கிய காரணம் ரிப்பீட் ஆடியன்ஸ். டேப் ரெக்கார்டர் அதிகமான சென்று அடையாத வேளையில் பாடல்களைக் கேட்பதற்க்காவே அந்த படத்தை திரும்பத் திரும்ப பார்த்தவர்கள் அதிகம். இரண்டு மூன்று முறை அந்த வசனங்களைக் கேட்டவுடன் அந்த பாணியில் பொதுமக்களும் தங்களுக்கிடையே பேசத் தொடங்கினர். இந்த வகையில் வடிவேலு மிகவும் அதிர்ஷ்டகாரர். அவரது காமெடி சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப் படுவதால் மிகப் பெரிய ரீச் அவருக்கு கிடைக்கிறது.
தொடர்ந்து அவருக்கு கிடைத்த ஆர் சுந்தர்ராஜனின் படங்களான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் ஆகியவற்றில் இந்த வகை காமெடி பெரிதும் பேசப்பட எல்லா இயக்குனர்களும் (மணிரத்னம் உட்பட) இந்த பாணிக்கு மறுப்பு சொல்லவில்லை. மணிவண்ணன் இயக்குனரான பின்னும், சத்யராஜ் நாயகனான பின்னும் கவுண்டமணிக்கு விளையாட பெரிய களம் கிடைத்தது எனலாம். ராமராஜன், சரத்குமார் ஆகியோரின் ஆரம்ப காலப் படங்களுக்கும், கார்த்திக்,பிரபு ஆகியோரின் இரண்டாம் கட்டப்படங்களுக்கும் கவுண்டமணியின் தேவை அதிகமாக இருந்தது.
கவுண்டமணியின் குரல் பலரும் சொல்வது போல அதிகாரத்திற்க்கு எதிராகவும், புனிதத்திற்க்கு எதிராகவும், மக்களின் அன்றாட அர்த்தமில்லா செயல்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியது. அவர் குரல் எழுப்பாத ஏரியாவே இல்லை எனலாம். அந்த மாதிரி கேள்விகளை ரசிக்கும்படிக் கேட்க அவரது குரல்வளம் உறுதுணையாக இருந்தது.
அரசியல்வாதிக்கெதிராக (சட்ட மன்றம்)- அக்கா அந்தக் கருமத்துக்கு படிப்பே தேவையில்லை. ஊர்ல நொண்டு நொசுக்கான், பெட்டிக் கடையில கருப்பட்டி திருடிட்டு ஓடினது, துண்டு பீடி குடிச்சது எல்லாம் அங்க தான் இருக்கு. (தாய்மாமன்)
நடிகர்களுக்கெதிராக - இந்த விளம்பரம் நமக்குத் தேவையா?. நடிகருங்க தான் தனக்குத் தானே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்குறாங்க.பொறந்த நாள் கொண்டாடுறாங்க. அதுவும் 33 வயசுக்கு மேல போக மாட்டேங்கிறாங்க (கரகாட்டக்காரன்)
வைதீகர்கள் - காலையில ஒன்னறை குண்டா புளியோதரையை சாப்பிட்டிட்டு வந்து ரிக்சால வந்து உட்கார்ந்து கோவிந்தான்னுச்சு டயர் வெடிச்சுருச்சு (ரிக்சாமாமா)
பிறந்த வீட்டு ஆட்கள் மேல் அதிக பாசம் காட்டும் பெண்கள் - உங்க அக்காவுக்கு ஆட்டுக்கால் சூப்பு வைக்கத்தெரியும்னு எனக்கு இன்னைக்குத் தாண்டா தெரியும் (கன்னிராசி)
கோவிலில் அதிகமாக வேண்டும் பக்தர்கள் - நீ உண்டியல்ல போடுற ஐஞ்சு காசு பத்து காசுக்கு லட்சாதிபதியாக்குன்னுல்லாம் வேண்டக்கூடாது. கைகால் இழுத்துக்காம இருக்கணும்னு வேண்டிக்க (கோட்டை வாசல்)
மூட நம்பிக்கை - ஐயோ ஒத்தப் பிராமணன் எதிர்ல வந்துட்டான்னு வீட்டுக்குள்ளே போறியே நீ என்ன கப்பல் வாங்கவா கிளம்பிப் போற. தெரு முக்கு கடையில ரெண்டு ரூபாய்க்கு சாமான் வாங்கப் போற.(கோட்டை வாசல்)
விசேஷத்துக்கு அலங்கரிக்கும் பெண்கள் - யார் வீட்டு கல்யாணத்துக்கோ இவளுக தீபாவளி கொண்டாடுறாள்கயா (தாய்மாமன்)
நடுத்தர வர்க்கம் - ஒரு பிச்சக்காரனுக்கு கூட பொண்ண குடுப்பேன்றிய எங்க எனக்கு கட்டி வை (உடன்பிறப்பு)
கண்ணில் கட்டுடன் வரும் போது சிரிப்பவர்களிடம் - உங்க பொண்டாடியெல்லாம் ஐஸ்வர்யா ராயா - கண்ணு இருக்கேனு நீங்க சந்தோசப்பட்டுக்க. இதுக்கு கண்ணு இல்லாமலேயே இருக்கலாம்டா (வில்லாதி வில்லன்)
தொழிலதிபர் - குண்டூசி விக்கரவனெல்லாம் தொழிலதிபர்ன்னுக்கிறாய்ங்க (மன்னன்)
நடிகை - சரிம்மா அப்படியே ஒரு தொழிலதிபர கட்டீட்டு பாரின் போயிடு
பஞ்சாயத்து - ஒரு ஆலமரம் கிடைச்சுட்டா போதுமே, நாலு தலைமுறையா தொவைக்காத ஜமுக்காளம், நசுங்கிப் போன சொம்போட ஆரம்பிச்சுடுவீங்களே.
பரிவட்டம் - நாலு முழ துணி, இதை தோளல போட்டா துண்டு, இடுப்புக்கு கீழ கட்டுனா கோமனம், இதை தலையில கட்ட இவ்வளோ போட்டி. பரிவட்டம் சொரிவட்டம்னுக்கிட்டு (இரண்டும் ஆஹா என்ன பொருத்தம்)
அதிகாரி - கோழி கிறுக்கின மாதிரி ஒரு கையெழுத்து. இதப் போட இங்க தள்ளனுமாம், அங்க தள்ளணுமாம் (இந்தியன்)
இதுபோல அன்றாட வாழ்வில் நாம் தட்டிக் கேட்க நினைக்கும் பல சங்கதிகளை அவர் தனக்கே உரிய பாணியில் தட்டிக் கேட்டார். அதற்க்கு அவரது குரலும், உபயோகப்படுத்திய வார்த்தைகளும் மிகவும் உதவின.
1999க்குப் பிறகு அவரது உடலிலும், குரலிலும் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. கண்ணன் வருவான், உனக்காக எல்லாம் உனக்காக படங்களில் அது தெளிவாக தெரிந்தது. அவருடைய பாணிக்கு அவரது குரல் முக்கியம். அந்த வளம் குறைந்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
தொடரும்
40 comments:
மீ த ஃப்ர்ஸ்ட்டு
மீ த செகண்டு:))
ஆல் இன் ஆல் அழகுராஜா - சூப்பர் கேரக்டர் அது:)
ம்...... நடக்கட்டும் நடக்கட்டும்
என்னா ஒரு ஆராய்ச்சி தலைவா.. ஆனாலும் இப்படி டுபுக்கு டுபுக்குன்னு பதிவ போடக்கூடாது தல.. இப்பத்தான் சூப்பர்.. நல்லாருக்க்னு போட்டா மாதிரி இருக்கு. உடனே அடுத்த அர அவர்ல மருக்கா..மருக்கா.. அசத்திட்டே இருந்தீங்கன்னா.. என்ன செய்யறது..
அதெல்லாம் இருக்கட்டும்.. சூப்பர்.. தல..
அவரது வசனங்களை படிக்கும் போதே அவரது குரல் கேட்கிறது... சூப்பர்...
கலக்கல் அண்ணே ;))
கார்கி,வித்யா,வைத்யாண்ணா, கேபிள் சங்கர், சரவணகுமரன் மற்ரும் கோபிநாத் வருகைக்கு நன்றி
சரவெடி....கவுண்டரின் காமடியைப் போலவே பதிவும் சர(க்கு)வெடி
Super!!
கவுண்டமணி கருணாஸை பார்க்கும் போதெல்லாம் உலக படங்கள் பாருடா என ஒரு பெரிய சி.டி லிஸ்ட் கொடுப்பாராம் . ஒரு பேட்டியில் கருணாஸ் சொல்லி கேட்டேன்.
வித்தியாசமான நல்ல முயற்சியாக தொடர்கிறது உங்கள் பதிவுகள். கவுண்டமணி நடிச்சதில் வி.சேகர் படங்களும் முக்கியமானவை என நினைக்கிறேன்.
முழுமையான அலசல். இந்தப் பதிவுகள் பெரிய பத்திரிகைகளில் வரவேண்டியவை. வாழ்த்துகள் முரளி.
அனுஜன்யா
கோவி கண்ணன், கார்த்திகேயன், மாதவராஜ், அனுஜன்யா
தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள்
ஆல் இன் ஆல் அழகுராஜா ல சொல்லுவாரே..டேய்! நானெல்லாம் சிற்பி மாதிரிடா :-)
ரகுமானை ஒரு படத்தில் ஒட்டுவாரே!
ஏன்டா! அழுவறேன்னு கேட்டதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா!..நான் நேபாள்ள ... :-))))
சத்யராஜ் கவுண்டர் காமெடி சூப்பர்.. சரியான ஜோடி
// Cable Sankar said...
என்னா ஒரு ஆராய்ச்சி தலைவா.. ஆனாலும் இப்படி டுபுக்கு டுபுக்குன்னு பதிவ போடக்கூடாது தல.. இப்பத்தான் சூப்பர்.. நல்லாருக்க்னு போட்டா மாதிரி இருக்கு. உடனே அடுத்த அர அவர்ல மருக்கா..மருக்கா.. அசத்திட்டே இருந்தீங்கன்னா.. என்ன செய்யறது..
அதெல்லாம் இருக்கட்டும்.. சூப்பர்.. தல..
//
repeatttttttttttteeeeeee.....
:-)))))))))))
//
விசேஷத்துக்கு அலங்கரிக்கும் பெண்கள் - யார் வீட்டு கல்யாணத்துக்கோ இவளுக தீபாவளி கொண்டாடுறாள்கயா//
//கண்ணில் கட்டுடன் வரும் போது சிரிப்பவர்களிடம் - உங்க பொண்டாடியெல்லாம் ஐஸ்வர்யா ராயா - கண்ணு இருக்கேனு நீங்க சந்தோசப்பட்டுக்க. இதுக்கு கண்ணு இல்லாமலேயே இருக்கலாம்டா (வில்லாதி வில்லன்)//
//இதுபோல அன்றாட வாழ்வில் நாம் தட்டிக் கேட்க நினைக்கும் பல சங்கதிகளை அவர் தனக்கே உரிய பாணியில் தட்டிக் கேட்டார்//
உங்களுக்கு ஓவர் குசும்பு:):):)
//முழுமையான அலசல். இந்தப் பதிவுகள் பெரிய பத்திரிகைகளில் வரவேண்டியவை. வாழ்த்துகள் முரளி. //
வழிமொழிகிறேன்:):):)
பின்னி படல் எடுக்குறீங்க
First thing First...
Too Good...
mathathellam evening veetla vanthu commentaren...
U didnt disappoint me :)
பெயரை கேட்டவுடனே நான் சிரிக்க ஆரம்பிக்கிற நடிகர் அவர்.. செந்தில் குறித்து நீங்கள் சொன்னது சரி.. பூவோடு சேர்ந்து நாரும் மணக்கிற மாதிரி அவருடன் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக காமெடி செய்திருப்பார்கள்..
கிரி,சின்னப் பையன் வருகைக்கு நன்றி
ராப் குடும்பத்துல குழப்பத்தை உண்டுபண்ணீராதீங்க. :-)) அட்டகாச எடிட்டிங்.
வெட்டிப்பயல் மிக சந்தோஷமாக இருக்கிறது
நசரேயன், வெண்பூ மிக்க நன்றி
//சாதாரண இடதுகை பந்து வீச்சாளராக, கீழ் வரிசை மட்டையாளராக இருந்த ஜெயசூரியாவை அர்ஜுன ரனதுங்கா ஓப்பனிங் இறக்கியபின் தானே அவருக்குள் இருந்த சிங்கம் வெளியே வந்தது. அதுபோல் கவுண்டமணிக்கு கிடைத்தவர் ஆர் சுந்தர்ராஜன்//
அற்புதமான உதாரணம்..
ஆறுமுகம் இப்ப குளுகுளுனு இருக்குமே.. வும் மறக்க முடியாத வசனம்
அப்போ கடைசிக்கட்ட தள்ளுபடி விற்பனைக்குப் போற அவசரத்துல டைப்பினது. இப்போ மறுக்கா சொல்றேன், இன்னைய பதிவு செமயா நல்லாருக்கு:):):) இன்னொரு சரத்குமார் படம், பெரிய வீட்டு பொண்ணோ, இல்ல பெரிய கௌண்டர் பொண்ணோ, (சசிகலா நடிச்சது)ஞாபகம் இல்ல, அதுல செம டாப்பா இருக்கும்:):):)
எதைச்சொல்ல, எதை விட:):):)
99க்கு முன்ன- அது ஒரு அழகிய நிலாக்காலம்:):):)
me the 25th:):):)
நர்சிம் கருத்துக்கும், வசனத்துக்கும் நன்றி.
ராப் மிக்க நன்றி.
கவுண்டமணி முன்னணியில் இருந்த பொழுது எல்லோரும் டப்பிங் பேசி முடித்த பின் கடைசியாகத்தான் அவர் கொடுப்பதாக நிபந்தனை விதிப்பாராம். அவர் குரலும் வசனங்களும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மற்றவர்களை அமுக்கி விடும்படி டப்பிங் தர இது ஒரு யுக்தி என்று சினிமா துறை நண்பர்கள் சொல்வார்கள். அப்படியா?
செம அலசல் முரளிகண்ணன் ! புத்தகமா பதிவேற்றலாம் உங்களோட பதிவுகள.
இந்தக்காலப்பகுதியில் இவர் மஞ்சள் காமாலை மூலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனாலேயே இவரது உடல் நிலை பெருமளவு பாதிகப்பட்டதாகவும் அறிந்திருக்கின்றேன்
murali...super....
நீங்க சொல்லியிருக்கற படத்துல கோட்டை வாசல் எல்லாம் இங்க நிறைய பேர் கேள்வியே பட்டிருக்க மாட்டாங்க. (அருண்பாண்டியன் படம்)
இன்னும் ரெண்டு மூணு பாகம் இருக்கும்னு நினைக்கிறேன்.
அடுத்த பாகத்துக்கு மேலும் ஆவலுடன்
எஸ் ஆர் கே, மணிகண்டன்,அருண்மொழிவர்மன், டி வி ராதா கிருஷ்ணன், வெட்டிப்பயல் வருகைக்கு நன்றி
கவுண்டமணியின் சூப்பர் டயலாக்குகளை எப்டி அண்ணே ஞாபகம் வச்சிருக்கீங்க...
எல்லாத்தையும் நம்ம நண்பர்கள் கிட்ட எடுத்து வூட வேண்டியது தான்....!
நன்றி முரளி...
தமிழன் - என்னையா தமிழன் தமிழன்னு...அவன் என்ன கரண்ட கண்டுபுடுச்சானா இல்லை ரயிலை கண்டுபுடுச்சானா...நல்லா பழைய சோத்தையும் ஊறுகாயையும் தின்னுட்டு...கல் தோன்றி முன் தோன்றானு நல்ல தம் கட்டி பேச கத்துகிட்டான் - பொண்ணுவீட்டுகாரன்
கவுண்டர் ஒரு Genius
உங்கள் பதிவு மிக அருமை :)
and who can forget his comments on the fans of cine superstars
""தலைவா ..நீங்க என்ன சாப்பிட்ரீங்க"
"பரித்திகொட்டையும் புன்னாக்கும்.டேய்...நீ என்ன சாபிட்றயோ அதே இட்லி வடை பொங்கலத்தான் நானும் சாபிட்றேன்....தேவையில்லாம நடிகன்ட்ட கேள்விலாம் கேட்க கூடாது என்ன?"
அருமை அருமை...டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் தேங்காய் சீனிவாசன், வென்னீறாஅடை மூர்த்தி, சுருளிராஜன், எம்.ஆர்.ராதா ஆகியோர் குரலில் தன் குரலை மாற்றி பாடியிருக்கிறார் கவுண்டரின் குரலில் பாடியிருக்கிறாரோ தெரியவில்லை? யாருக்காவது தெரிந்தால் சொல்லலாமே?
யூத் புல் விகடனில் வந்ததர்க்கு வாழ்த்துக்கள் ..ஆனால் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது
நவநீதன்,பிளீச்சிங் பவுடர், விக்னேஷ்வரன் ஷண்முகம், கோவை ரவி, அக்னி பார்வை தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
"அரசியல்ல இதெல்லாம் சாதரனம்ப "
உங்கள் வலைத்தளத்தைக் குறிப்பிட்டு விகடனில் எழுதி இருக்கிறார்கள். படித்திருப்பீர்கள். வாழ்த்துகள்.
Post a Comment