February 13, 2009

கவுண்டமணி பகுதி (4) கதாநாயகர்களுடன் கலக்கல்

1990 ஆம் ஆண்டு வெளியான வேலை கிடைச்சுடுச்சுவில் சத்யராஜும், கவுண்டமணியும் ஆளுக்கொரு பெண்ணைக் காதலிப்பார்கள். அதை இருவரும் பகிர்ந்து கொள்ளும்போது கவுண்டமணி சொல்வார் "இந்த மேட்டர இப்படி பேசக்கூடாது" என்று சொல்லிவிட்டு நீச்சல் அடிப்பது போல் பாவனை செய்வார். உடனே பாடல் ஒலிக்கும் " நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை". படித்தால் மட்டும் போதுமாவில் சிவாஜியும், பாலாஜியும் இதே சிச்சுவேஷனுக்கு நடித்த பாடல். தியேட்டரே அலறியது அந்தக் காட்சிக்கு. அதே ஆண்டு வெளிவந்த நடிகன் படத்தில் நோயாளி தாயை காப்பாற்ற வயதானவராக நடிக்க்கும் வேடம் சத்யராஜுக்கு. அதைத் தெரிந்து கொண்டு பிளாக்மெயில் செய்யும் திருடன் வேடம் கவுண்டமணிக்கு.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியின் வசனம். "நான் மொள்ளமாறி, முடிச்சவுக்கி,கேப்மாறி இவனுங்களையெல்லாம் தனித் தனியாத்தான் பாத்திருக்கேன். மூணு பேரையும் ஒண்ணா ஓன் ரூபத்துல இப்பத்தாண்டா பார்க்கிறேன்". இந்த பட காமெடி பெரிதும் பேசப்பட்டது. இதே ஆண்டு வெளியான வாழ்க்கைச் சக்கரம், இதற்கடுத்த ஆண்டில் வெளியான புதுமனிதன்,பிரம்மா ஆகிய படங்களிலும் இந்த இணை பெரிதும் பேசப்பட்டது. புது மனிதன் படத்தில் சமாதியின் மேல் உட்கார்ந்து கொண்டு சத்யராஜ் தன் காதலைப் பற்றி சொல்வார். அப்போது சமாதியின் மேல் விரலால் கோலம் போடுவார். உடனே கவுண்டமணி சொல்வார் " பார்த்துடா உள்ள படுத்துருக்கவன் எந்தரிச்சு வந்து அப்பீரப் போறான்".

சத்யராஜ் - கவுண்டமணி இணை பெரிதும் பேசப்பட காரணம் இதுவே. அடுத்தவர்கள் செய்யும் அபத்த செயல்களை கிண்டல் செய்வதுதான் கவுண்டரின் பலமே. சத்யராஜ் அதற்க்கு உரிய இடத்தைக் கொடுத்தார். நான் கதாநாயகன் என்னைக் கிண்டல் செய்து காட்சி இருக்கக்கூடாது என்று அவர் சொன்னதே இல்லை.

மேற்குறிப்பிட்ட படங்களைத்தவிர தெற்குத்தெரு மச்சான், திருமதி பழனிச்சாமி, பங்காளி,மகுடம்,தாய்மாமன், மாமன் மகள்,வில்லாதி வில்லன், சேனாதிபதி, வள்ளல், அழகர்சாமி, குங்குமப் பொட்டு கவுண்டர்,தங்கம் ஆகிய படங்களிலும் இவர்கள் இணை கொடி கட்டி பறந்தது.

ரஜினிகாந்த்

கவுண்டமணி, ரஜினியுடன் பதினாறு வயதினிலே காலத்தில் நடித்திருந்தாலும் பின் அவருடன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை. ரஜினி ஜனகராஜ் மற்றும் செந்திலுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தற்போது விவேக்,வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தருகிறார். மிஸ்டர் பாரத், மன்னன்,எஜமான்,பாபா ஆகிய படங்களில் ரஜினியுடன் வரும் பாத்திரம் கவுண்டமணிக்கு. இதில் மன்னனில் மட்டுமே ரஜினியைக் கலாய்ப்பது போல் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். ரஜினியை அவரது தாயோ அல்லது காதலியோ கூட திட்டி பேசினால் கத்தித் தீர்த்துவிடும் ரசிகர்கள் கவுண்டமணியை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் இயக்குனர்களுக்கு இருந்திருக்கலாமோ?

கமல்ஹாசன்

காமெடி டிராக்கை கமல் எப்பொழுதுமே ஆதரித்ததில்லை. படத்திற்க்கு காமெடி வேண்டுமென்றால் காமெடி படமாகவே எடுத்துவிட சொல்வார். கமலுடன் கவுண்டமணி இணைந்து நடித்த சிங்கார வேலன், இந்தியன் ஆகிய படங்களின் காமெடி பேசப்பட்ட ஒன்று.

விஜயகாந்த்

விஜயகாந்தின் படங்களான வைதேகி காத்திருந்தாள், சின்னகவுண்டர், கோயில் காளை ஆகிய படங்களில் கவுண்டரின் காமெடி டிராக்குகள் புகழ் பெற்றவை.நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்துடன் சில காம்பினேஷன் காட்சிகள் இருக்கும். புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரனுக்கு பின் விஜயகாந்த் நடித்த படங்களில் குறைவான படங்களிலேயே காமெடி இடம் பெற்றிருந்தது. கண்ணுபடப் போகுதய்யா (சார்லி), வானத்தை போல (ரமேஷ் கண்ணா), தவசி,நரசிம்மா (வடிவேலு), தென்னவன் (விவேக்) என அவர் படங்களில் நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் நகைச்சுவை நடிகர்களுடன் அவர் தோன்றியது குறைவே

கார்த்திக்

உள்ளத்தை அள்ளித் தா, மேட்டுக்குடி, மருமகன், பூவரசன், உனக்காக எல்லாம் உனக்காக,கண்ணன் வருவான் ஆகிய படங்களில் இருவரும் நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. இதுதவிர சின்னஜமீன்,சீமான்,கட்டப்பஞ்சாயத்துக்காரன் ஆகிய படங்களின் காம்பினேஷன் காட்சிகளும் சிறப்பானவை. சத்யராஜுக்கு அடுத்தப் படியாக கார்த்திக்குடன் இணைந்து நடித்த காட்சிகள் கவுண்டமணிக்கு சிறப்பாக அமைந்தவை எனலாம். இதற்க்கு கார்த்திக்கின் டைமிங் சென்சும், நடிப்புத் திறமையும் காரணமாய் அமைந்தன.

பிரபு

கார்த்திக்குக்கு அடுத்தது பிரபு. மைடியர் மார்த்தாண்டன், வியட்னாம் காலனி,பரம்பரை, தேடினேன் வந்தது, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற பல படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்கு ஒர்கவுட் ஆனது. வியட்னாம் காலனி படம் இவர்கள் இணையின் உச்சம் எனச் சொல்லலாம்

மோகன் & ராமராஜன்

இவர்களது படங்களில் காமெடி டிராக் பேசப்பட்ட அளவுக்கு நாயகர்களுடன் இணைந்து நடித்த காட்சிகள் பேசப்படவில்லை. கரகாட்டக் காரன், ஊருவிட்டு ஊரு வந்து படங்களில் கூட காமெடிக்கு மூன்றாம் ஆளின் தேவை இருந்தது.

அர்ஜூன்

அர்ஜூன் ஆரம்பகாலத்தில் நடித்த வேஷம் படத்திலேயே இருவருக்கமான டிராக் இருந்தது. பின்னர் ஜெண்டில்மேன், ஆய்தபூஜை, ஜெய்ஹிந்த், கர்ணா என பல படங்களில் இந்த இணை பிரகாசித்தது.

சரத்குமார்

இவர் சூரியன் திரைப்படத்திற்க்குப் பின் முழு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய புதிதில் சொன்னது. " என்னைப் போன்ற புதிய நடிகர்களுக்கு முழுப் படத்தையும் தோளில் தாங்க முடியாது.அதைச் செய்யவும் எல்லாத் தரப்பினரையும் தியேட்டருக்கு வரவழைக்கவும் கவுண்டமணி போன்றோர் என் படத்திற்க்குத் தேவை.". சேரன் பாண்டியன்.சூரியன்,நாட்டாமை ஆகிய படங்களில் பெரிதாக காம்பினேஷன் ஷாட் இல்லாவிட்டலும் பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,நாடோடி மன்னன், மகாபிரபு ஆகிய படங்களில் காம்பினேஷன் சிறப்பாக அமைந்தது

ரகுமான்

பட்டிக்காட்டான் படத்தில் கிராமத்தான் ரகுமானுக்கு பட்டனத்து முறைப்பெண் ரூபினியை திருமணம் செய்து வைக்கும் டாக்டர் வேடம். ஐயாம் டென் சொங்கப்பா, நேபாள்ல எம் பி பி எஸ் படிச்சவன் என்று கவுண்டர் கலக்கி எடுத்திருப்பார்.

ஜெயராம்

இயல்பிலேயே மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி கொண்ட ஜெயராமுடன் கவுண்டர் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?. சுந்தர் சியின் முதல் படமான முறை மாமன், குரு தனபாலின் பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகிய படங்களில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.


பார்த்திபன்

டாட்டா பிர்லாவில் இணை நாயகர்கள் என்று சொல்லும் அளவுக்கு கொட்டம் அடித்திருப்பார்கள்.

ராம்கி

ஆஹா என்ன பொருத்தம் படத்திலும் இணை நாயகன் என்னும் அளவுக்கு முக்கிய வேடம்.

விஜய்

ரசிகன் படத்தில் குறைவான காம்பினேஷன். பின் வந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் உடன் வரும் தோழன் வேடம்.

அஜீத்

நேசம், ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களில் புல் காம்பினேஷன் வேடம். அவள் வருவாளா படத்திலும் காம்பிஒனேஷன் உண்டு.

அருண்குமார்

கண்ணால் பேச வா படத்தில் தாய்மாமன் வேடம். புல் காம்பினேஷன்.

சிம்பு

மன்மதன் படத்தில் தாய்மாமன் வேடம். பல காட்சிகள் வெட்டப்பட்டதாக கூறுகிறார்கள்.

(தொடரும்)

38 comments:

நசரேயன் said...

அருமை முரளி.
எப்படித்தான் இவ்வளவு தகவல் சேகரிச்சு வைக்கிறீங்களோ!!!!!!!!

வெட்டிப்பயல் said...

Kalakal

வெட்டிப்பயல் said...

JeyaRaam miss panniteenga poala...

muRai maaman
periya idathu maapillai

முரளிகண்ணன் said...

நசரேயன் நன்றி.

ஆஹா மறந்துட்டனே. சேர்த்துடுறேன் பாலாஜி. மிக்க நன்றி.

சின்னப் பையன் said...

அட்டகாசம்... அருமையான பதிவு...

சின்னப் பையன் said...

// வெட்டிப்பயல் said...
JeyaRaam miss panniteenga poala...
//

அவ்வ்வ். நான் இதைத்தான் சொல்ல வந்தேன்!!!

முரளிகண்ணன் said...

சின்னப்பையன் வருகைக்கு நன்றி

அது சரி(18185106603874041862) said...

எப்பிடிங்க முரளி...கவுண்டருக்கே சில படம் மறந்திருக்கும்...ஆனா நீங்க பின்றீங்க!

Unknown said...

கவுண்டர், ரஜினியோட எஜமான விட்டுடீன்ங்க...

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அதுசரி.

பூங்குன்றன் வருகைக்கும், சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி

அத்திரி said...

தல அருமையான தொகுப்பு... சத்யராஜ்--கவுண்டமணி இணைதான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

SUREஷ்(பழனியிலிருந்து) said...
This comment has been removed by the author.
SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லா நாயகர்களையும் உரிமையும் அழைக்கும் நண்பனாக நடித்தவர்.

Vidhya Chandrasekaran said...

கலக்கல் முரளி. அப்புறம் ஏதோ ஒரு சரத்குமார் படத்தில் கவுண்டர் மில்லுக்கு வேலை செய்ய பெண்களை தேர்வு செய்வார். "சங்கூத போற வயசுல சங்கீதா"ன்னு ஒரு டயலாக் கூட வருமே. அது என்ன படம்?

வெட்டிப்பயல் said...

//வித்யா said...
கலக்கல் முரளி. அப்புறம் ஏதோ ஒரு சரத்குமார் படத்தில் கவுண்டர் மில்லுக்கு வேலை செய்ய பெண்களை தேர்வு செய்வார். "சங்கூத போற வயசுல சங்கீதா"ன்னு ஒரு டயலாக் கூட வருமே. அது என்ன படம்?//

அது கட்டபொம்மன் :)

மாதவராஜ் said...

முரளி கிருஷ்ணன்!

நீங்கள் ரசித்து ரசித்து எழுதியிருக்கீறீர்கள்.
சத்யராஜ், கவுண்டமணி காம்பினேஷன் வரவேற்பு பெற்றதற்கு இன்னொரு காரணம், இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம் தெரியாது என்பதும் இருக்கலாம்.

Rakesh Kumar said...

Wonderful writeup, Mr. Murali.

Additional note: Gounder plays Rajini's (senior)driver who later becomes his "father-in-law" in Nettrikann. That was the first phase, I guess.

Thanks for the writeup.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்கள் ஒரு நடமாடும்..ம்..என்ன சொல்லலாம்...ஆங்..சினிமா டயரி

narsim said...

முரளி.. நடிகன்,வேலை கிடைச்சிடுச்சு இந்த படங்களில் எல்லாம் அவரின் அலும்பு கலக்கலாக இருக்கும்.. முறை மாமன் படத்தில் ஒரு பெரியவர் மிக நீண்ட வசனம் பேசுவார்..உறவுகளை பற்றி.. முடிந்தவுடன் ..கவுண்டரின் கவுன்ட்டர்: சர்ராப்பா..அந்த தேங்காய கீழ வைய்யி..தூக்கிட்டு போய்றாத..

மனுசன்..!!!

வழக் கலக் ஓ கலக்..

கார்க்கிபவா said...

கவுண்டரே பத்தி பேசினா பேசிட்டே இருக்கலாம்.. இல்ல இல்ல பேசிட்டே சிரிக்கலாம்

முரளிகண்ணன் said...

அத்திரி,சுரேஷ்,வித்யா,வெட்டிப்பயல்,மாதவராஜ்,ராகேஷ்குமார்,டிவி ராதாகிருஷ்ணன்,நர்சிம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Divyapriya said...

எப்படி இவ்ளோ தகவல் சேகரிக்கறீங்க? நல்ல தொகுப்பு...

சரவணகுமரன் said...

சூப்பரு முரளிகண்ணன்...

சரவணகுமரன் said...

மகராசன் நல்லா இருக்குமே?

சரவணகுமரன் said...

//ஆஹா என்ன பொருத்தம் படத்திலும் இணை நாயகன் என்னும் அளவுக்கு முக்கிய வேடம்.
//

ராம்கிக்காக?

வெண்பூ said...

அவரை ஒருசில இயக்குநர்கள் மிகச் சரியாக வேலை வாங்கி இருப்பார்கள்.. சுந்தர் சி (முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி) , ரங்கநாதன் (டாட்டா பிர்லா, ஆஹா என்ன பொருத்தம்‍‍ படங்கள்.... இவர் இப்போது எங்கே இருக்கிறார்?), குருதனபால் (மாமன் மகள்..), பி.வாசு (மன்னன், நடிகன்).. எதையுமே விடாமல் எல்லாவற்றையும் தொகுத்திருக்கிறீர்கள் முரளி.. பாராட்டுகள்..

Anonymous said...

இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் வலைப்பூ பற்றிய செய்தி இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ......

கவுண்டமணி - அற்புதமான பதிவு

ஸ்ரீ.... said...

வணக்கம். இந்த வார விகடனில் தங்களது வலைப்பூ குறித்த நேர்மையான விமர்சனம் வந்துள்ளது. வாழ்த்துக்கள்!

ஸ்ரீ....

Anonymous said...

நன்றிகள் பல முரளி அண்ணே!

எதிர்பார்த்தபடி தலைவர் கவுண்டமணி பற்றி அருமையாக எழுது வருகிறீர்கள்...வாசகர்களின் பின்னூட்டங்களிலும் அது தென்படுகிறது....எனக்கு என்ன ஒரே குறை...தலைவர் நடித்த படங்களில் அனைத்து படத்திலும் ரஜினிக்கு எப்படி பஞ்ச் டயலாக்கோ அதே போல தனது ஸடைலில் தலைவர் பின்னியிருப்பார்!

எடுத்து காட்டு

உதய கீதம்--இதுக்கு தான்டா ஜெயில்ல எந்த நாயிக்கும் அட்ரஸ் குடுக்க கூடாது!
சூரியன் -அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இதையேல்லாம் தொகுத்து தனி பதிவாக வெளியிட வேண்டுகிறேன்!
நன்றி!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி திவ்யப்பிரியா, சரவணகுமரன், வெண்பூ, ஸ்ரீ,வினோத், கவுண்டமணிப் பிரியன்.

RAMASUBRAMANIA SHARMA said...

அற்புதமான விபரங்களூடன் ஒரு பதிவு...சூப்பர் திரு கண்ணன்..."அந்த "நானே ராஜா, நானே மந்திரி"....கவுண்டர் & விஜயகாந்த்...combination....எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கலாம்..."என் பேரு...ICE ...வெள்ளீங்கிரிமலை அப்புசாமி"..."ஆக்கஜீலுஜீலுப்ப்பா"....கவுண்டர், கவுண்டர் தான்....Always Ahead....INFACT ITS A REAL ENTERTAINMENT IN THE SUNDAY....ஆனால் நான் கொஞ்சம் லேட்...

மறத் தமிழன் said...

முழுமையாக படித்தேன்...

இத்தனையும் நீங்கள் சேகரித்திருப்பதைக் காணும்போது வியப்பாக இருக்கின்றது....

உங்கள் இம்முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்...

முரளிகண்ணன் said...

ராமசுப்பிரமணிய சர்மா, மறத்தமிழன் தங்கள் வருகைக்கும் ஊக்கப்படுத்தலுக்கும் நன்றிகள்

Anonymous said...

Hi Muralikannan,

Sathyaraj-udan naditha 'Mathurai veeran Enga sami'padam nakkalin utchakattam.Have u seen that film?

முரளிகண்ணன் said...

மதன் அந்தப் படம் பார்த்துட்டேன். பலூன் கந்தசாமி கேரக்டரில் கவுண்டர் பின்னியிருப்பார். தண்ணி அடிப்பதற்க்காக தன் மனைவி டீக்கடை பாய்லரை அடகு வைக்கும் காட்சியெல்லாம் கலக்கல்.

King... said...

தொகுப்புக்கு நன்றி...

King... said...

ரஜனியோட எஜமான், மன்னன் என்று சில படங்கள் இருக்குமே...

King... said...

தொடருமா....?!